80 ஆண்டுகளாக தமிழக அரசியலில் கோலோச்சிய கலைஞர் கருணாநிதி

Discussion in 'Magazines' started by NATHIYAMOHANRAJA, Aug 8, 2018.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  5,219
  Likes Received:
  486
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 50 ஆண்டுகள், 5 முறை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் மு.கருணாநிதி. இவர் 1969-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பதவியேற்ற அவர் இன்று வரை தலைவராக தொடர்கிறார். கருணாநிதி போட்டியிட்ட அனைத்துத் தேர்தலிலும் வெற்றி பெற்ற பெருமை இவருக்கு உண்டு.

  * கருணாநிதி தன்னுடைய 14 வது வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபட்டார்

  * 1957-ம் வருடம் தன்னுடைய 33 வயதிலேயே சட்டமன்றத்தில் நுழைந்தவர். 2018 ஆம் ஆண்டிலும் சட்டமன்றத்தில் இருப்பவர்.

  * 1962-ம் வருடம் அண்ணா உள்ளிட்ட திமுக தலைவர்கள் தோல்வி அடைந்தாலும், கருணாநிதி வெற்றி பெற்றார்.

  * 1967-ம் சட்டப்பேரவை தேர்தலில் சைதாபேட்டையில் வெற்றி பெற்று, பொதுப்பணித்துறைக்கு அமைச்சரானார் கருணாநிதி.

  * 1969-ம் ஆண்டு திமுக என்னும் மாபெரும் இயக்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற கருணாநிதி.

  * கருப்பு கண்ணாடியை 1971 ஆம் ஆண்டு முதல் கருணாநிதி பயன்படுத்துகின்றார்.

  * 1971-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகம் இதுவரை காணாத வரலாற்று வெற்றியாக 184 தொகுதியை கைப்பற்ற காரணமாக கருணாநிதி இருந்தார். அது இதுவரை யாராலும் முறியடிக்க முடியாத சாதனையாக உள்ளது.

  * 1975, ஜூன் 25 நள்ளிரவில் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. 1976, ஜனவரி 31-ம் தேதி தமிழகத்தை ஆட்சி செய்த கருணாநிதி தலைமையிலான திமுக அரசைக் கலைத்துக் குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனம் செய்தது மத்திய அரசு.

  * 1983-ம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் கருணாநிதி.

  * 1991-ஆம் ஆண்டு காரணமே கூறாமல் மீண்டும் 356 பாய்ச்சப்பட்ட போதும் சிறிதும் அஞ்சாதவன். எதற்கும் அசராதவன். அடுத்து தேர்தலில் ஆட்சியை பிடித்தவன்.

  * 2001 சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியடைந்தாலும், 2004 பொதுத்தேர்தலில் அனைத்து தொகுதியைிலும் வெற்றிபெற்று சாதனை நாயகன் ஆனார்.

  * 2006-ம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 96 இடங்களை பெற்றாலும் 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தவர் கருணாநிதி.

  90 வயதுகளைக் கடந்தபிறகும், சிறிதும் உற்சாகம் குறையாமல் தன் அன்றாட அலுவல்களில் தீவிரமாக இருந்தார் கருணாநிதி. அரசியல் சார்ந்த கூட்டங்கள், முடிவுகள், பிரசாரம் என அவரது உழைப்பு இளம் தலைமுறைக்கு பாடமாக அமைந்தது. 2016, அக்டோபரில் கருணாநிதியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. நுரையீரல் மற்றும் தொண்டை தொற்று காரணமாக, சுவாசக் கோளாறு ஏற்பட்டதால், ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு நலம் பெற்று ஓய்வில் இருந்த கருணாநிதி கடந்த மாதம் 27-ம் தேதி மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து 11 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உயிர் மண்ணை விட்டு பிரிந்தது.
   

Share This Page