Dhakshavin vazhkkai/ தக்ஷாவின் வாழ்க்கை by Balakarthik.

Discussion in 'Bala karthik balasubramaniam Novels' started by saravanakumari, Aug 3, 2017.

 1. Balakarthik Balasubramani

  Balakarthik Balasubramani Well-Known Member

  Joined:
  Aug 3, 2017
  Messages:
  417
  Likes Received:
  483
  Trophy Points:
  63
  Gender:
  Male
  தக்ஷாவும் அந்த கடைக்கார பெண்ணும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். இருப்பினும், தக்ஷா அந்தக் கடைக்கார பெண்ணை முழுவதுமாக நம்பவில்லை. காரணம், இவ்வாறு பேருந்தில் அந்த பெயர் தெரியாத பெண்ணை நம்பியதாலே அவள் உடைமைகளை இழக்க நேரிட்டது என்று தக்ஷா எண்ணினாள்.

  தக்ஷா மனதிற்குள் முனுமுனுத்து கொண்டாள். “நாம் அந்த திருடனை நெருங்கிவிட்டோம். சே!!! அப்படி சொல்வது தவறு தக்ஷா. ஒரு வேளை அந்த பெண் எடுக்கவில்லை என்றால், ஒரு அப்பாவியை குற்றவாளி ஆக்கிடுவோமே?. இருப்பினும் அந்த பேருந்தில் என் பக்கத்தில் அமர்ந்திருந்தது அவள் தானே?. அதனால் நம் சந்தேகம் தவறு அல்ல இவ்வாறு தனக்குள்ளே பேசி கொண்டாள் தக்ஷா.

  தக்ஷா ஏதோ ஒரு யோசனையில் இருப்பதை தெரிந்து கொண்ட அந்த கடைக்கார பெண் அவளை ஏதும் கேட்கவில்லை.

  அதுவே மக்களின் நாகரிகமும் கூட.

  தக்ஷா நடந்து செல்லும்போது அவள் உடலோ கனக்கவில்லை. அவள் அலைந்து கொண்டு தான் இருக்கிறாலே தவிர... ஓய்வு என்பதே அவளுக்கு இல்லை. தான் மிகவும் மெலிந்து விட்டதாக தக்ஷா எண்ணினாள். தன் கவலைக்கு யார் காரணம் 'நம்மை கண்டுகொள்ளாத தந்தையா? தன்னையே சுற்றிவந்த பார்த்திபனா? இல்லை, அவன் நினைவுகளால் வாடினோமா?' இவ்வாறு எண்ணி புழம்பிகொண்டிருந்தாள் தக்ஷா.

  திடீரென்று, அந்த கடைக்கார பெண் “கொழந்த நாம வந்துட்டோம் டா என்று கூறவே, தக்ஷா அந்த வீட்டை சுற்றும் முற்றும் பார்த்தாள். அது ஒரு கூரை வீடு தான். தன்னுடைய உடைமைகள் எங்காவது சொறுகி இருக்கிறதா? என்று தக்ஷா வீட்டின் கூரைகளை பார்த்தாள்.

  கிராமத்தில் வீடுகளில் ஏதேனும் ஒரு மூலையிலே குடும்ப அட்டை, தொலைபேசி ரசிதுகளை சொருகி வைத்திருப்பர். அதனாலே அவ்வாறு தக்ஷா சுற்றி பார்த்தாள். அந்த வீட்டில் ஒரே சல சலவென்று சத்தம் கேட்டது. இந்த கடைக்கார பெண் அந்த வீட்டின் உள்ளே செல்ல திடீரென்று தங்களுடைய பேச்சை அவர்கள் நிறுத்தி அவளை வரவேற்றனர்.

  தக்ஷாவோ வெளியே நின்றாள். அந்த கடைக்கார பெண் பேச்சை தொடங்கினாள். “ஏன்டி ஆஷ்பத்திரி போனியா? ஏன்டி இப்படி பண்ற! என்று பட்டும் படாமள் பேசினாள். இவள் பேசுவதை புரிந்து கொள்ள முடியாதவளாய் நின்றாள் அவள்.

  தொடரும்...
   
  ramasamy6, Shanthi vairam and Sri B like this.
 2. Balakarthik Balasubramani

  Balakarthik Balasubramani Well-Known Member

  Joined:
  Aug 3, 2017
  Messages:
  417
  Likes Received:
  483
  Trophy Points:
  63
  Gender:
  Male
  "ஏன் இப்படி செய்தாய் வள்ளி?" என்று அந்த கடைக்கார பெண் கேட்கவே, தன்னுடன் பேருந்தில் பயணம் செய்த அந்த பெண்ணின் பெயர் வள்ளி என்பதை வெளியே நின்ற தக்ஷா தெரிந்து கொண்டாள். "நான் என்ன செய்தேன் மாலா?" என்று வள்ளி கேட்க, 'ஓஹோ! இந்த கடைக்கார பெண்ணின் பெயர் மாலாவோ...' என்று தக்ஷா தன் மனதிற்குள்ளே முனுமுனுத்து கொண்டாள்.

  மாலா பேச்சை தொடர்ந்தாள். “நீ பஸ்ல வரும்போது உன்னோட பணப்பையை விட்டு வந்துட்டியாம்லடிஎன்று மாலா கூறவே, வள்ளிக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பத்துடனே இருந்தாள் வள்ளி.

  அவள் குழப்பத்தை கவலை என்று தவராக புரிந்துகொண்ட மாலா, “கவலைப்படாதடி, உன் பை எங்கும் போகவில்லை. உன் பையை எடுத்து கொண்டு உன்னை தேடி ஒரு பெண் வந்திருக்கிறாள்." என்று கூறினாள்.

  இவ்வாறு மாலா கூற, வள்ளிக்கோ ஒன்றும் புரியவில்லை. 'எந்த பையை நாம் விட்டோம்? யார் அந்த பெண்?' என ஒரு வித மன குழப்பத்துடன் இருந்த அவள் உள்ளே நுழைந்த தக்ஷாவை இப்பொழுது பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.

  தக்ஷாவை பார்த்த வள்ளியினால் ஏதும் பேசமுடியாமல் திணற, தக்ஷாவோ தனக்கான சந்தர்ப்பத்திற்க்காக காத்திருந்தாள்.

  'இப்பொழுது மாலா அந்த இடத்தை விட்டு செல்வதே சரி. அப்பொழுது தான் வள்ளியிடம் நாம் பேச முடியும்....' என்று தக்ஷா யோசித்து கொண்டிருக்கையில், திடீரென ஒரு குரல்.

  ஆம், அது மாலாவின் குரல் தான். “சரிடி. இந்த பெண்ணோடு நான் வந்து விட்டேன். இவ்வளவு நேரம் ஆகியும் பேர கேட்கல பாரேன் நான் என்று தலையில் தன்னை தட்டிகொண்டு அவள் பெயரை கேட்டாள் மாலா.

  தக்ஷாவும் அவள் கேள்விக்கு பதில் சொல்லிய பிறகு, “நல்லது தக்ஷா, எனக்கு கடைல வேல இருக்கு. நீ வள்ளி கூட பேசிட்டு வரும்போது கடைக்கு வந்துட்டு போம்மா. என சொல்லி அங்கிருந்து விடைப்பெற்றாள் மாலா.

  "வள்ளி ரொம்ப முடியாதவ. அவள் வாழ்க்கையிலே பல கஷ்டங்கள அனுபவிச்சிருக்காம்மா. நீ அவ கூட கொஞ்ச நேரம் பேசிட்டு வா. ஆறுதலா இருக்கும் அவளுக்கு." என மாலா கடைசியாக வார்த்தையை விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

  இவ்வாறு வள்ளியை பற்றி மாலா கூறவே தன் தவறான எண்ணங்களை விட்டு பரிதாபமாக வள்ளியை பார்த்தாள் தக்ஷா.

  அந்த பரிதாப பார்வைக்கு அர்த்தம், அவளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் தான்.

  தொடரும்...
   
 3. Balakarthik Balasubramani

  Balakarthik Balasubramani Well-Known Member

  Joined:
  Aug 3, 2017
  Messages:
  417
  Likes Received:
  483
  Trophy Points:
  63
  Gender:
  Male
  மாலா புறப்பட்டு செல்ல, இப்பொழுது அந்த இடத்தில் மழை பெய்து ஓய்ந்தது போன்ற அமைதி நிலவியது. தக்ஷாவும் வள்ளியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு நிற்க, பக்கத்தில் வள்ளியின் கணவனும் இருந்தார்.

  தக்ஷா இப்போது பேச்சை ஆரம்பித்தாள். 'எப்படி பேசுவது?' என யோசித்த அவள் மெல்ல முனகி, “பஸ்ல என் கூட வரும்போது நீங்க உங்க பையை விட்டு பொய்ட்டீங்க அம்மா. அதை நான் கொண்டு வந்துருக்கேன். இந்தாங்க அம்மாஎன்று அந்த தான் தயாரித்த பணப் பையை நீட்டினாள் தக்ஷா.

  அமைதியாய் இருந்த அந்த இடத்தில் ஒரு துளி மழை விழுந்தது போல் இருந்தது தக்ஷா பேசிய போது.

  அப்பொழுது, இரண்டாம் துளி மழை நீர் விழ தொடங்கியது. ஆம், அது வள்ளியின் குரல் தான். வள்ளி, தக்ஷாவை பார்த்து “இது என்னோட பை இல்லமா... என்று கூறி அதை வாங்க மறுத்தாள்.

  தக்ஷாவிற்கும் அந்த பை வள்ளியுடையது இல்லை என்று தெரியுமே! நமக்கும் தான் தெரியுமல்லவா!!!

  தக்ஷாவிற்க்கு இப்பொழுது 50 சதவிகிதம் புரிந்து விட்டது. அது என்னவென்றால், 'வள்ளி தன் பையை எடுக்கவில்லை என்று...' ஏனென்றால், 'நான் ஒரு பணப்பையை இப்பொழுது கொடுத்தேன் வள்ளியிடம். ஒரு வேளை பணத்திற்க்காக வள்ளி செய்திருந்தால், கண்டிப்பாக இந்த பையையும் அவள் வாங்கி இருப்பாள் அல்லவா? ஆனால் அவ்வாறு வள்ளி செய்யவில்லையே? அதனால் என் உடைமைகளை எடுத்தது கண்டிப்பாக வள்ளி அல்ல...' என்று தக்ஷா மனதிற்குள்ளே நினைத்து கொண்டாள்.

  தக்ஷா ஒரு வித மனகுழப்பத்துடன் வள்ளியை பார்த்து “ஓஹோ, இது உங்க பணம் இல்லையாம்மா. சரி நான் போய் வருகிறேன்..." என்று தலை குனிந்தவாறு கூறினாள் தக்ஷா.

  தன்னுடைய கணிப்பு தவறானதாலும், ஒரு அப்பாவி பெண்ணை தன் மன சிறையில் பூட்டி குற்றவாளி ஆக்கியதாலும் தலைகுனிந்தே நின்றாள் தக்ஷா. ஆம், அந்த மனச் சிறையில் அவள் பூட்டிய குற்றவாளி வள்ளியே. 'தன் சான்றிதழை வேறு யார் எடுத்திருக்க கூடும்?' என்ற குழப்பத்துடன் தக்ஷா மீண்டும் மனதிற்குள்ளே கலங்க தொடங்கினாள்.

  ஆனால், புறப்பட கிளம்பிய தக்ஷாவை வள்ளி தடுத்து அவள் காலை பிடிக்க முற்பட்டாள். கீழே குனிந்த வாறு, 'என்னை மன்னித்து விடு மகளே. நான் தவறு செய்து விட்டேன்... உன் பையை எடுத்தது நான் தான்..." என்று வள்ளி அழ, மனமகிழ்ந்த தக்ஷா, அதன் பின் கூறிய வார்த்தை அவளை சிலிர்க்க வைத்தது. அது என்ன? பொருத்திருந்து பார்ப்போம்.
   
 4. Balakarthik Balasubramani

  Balakarthik Balasubramani Well-Known Member

  Joined:
  Aug 3, 2017
  Messages:
  417
  Likes Received:
  483
  Trophy Points:
  63
  Gender:
  Male
  காலில் விழ வந்த வள்ளியை தடுத்த தக்ஷா, நீங்கள் தவறே செய்திருந்தாலும் பரவாயில்லை அம்மா! தயவு செய்து என் கால்களை பிடித்து என்னை கலங்க வைக்காதீர் என்று கூறியவுடன் வள்ளிக்கு தக்ஷா கூறியது புரியாதவாறே நின்றாள்.

  மேலும் அவள், தவறு செய்வது மனிதனின் இயல்பு... அதை மன்னிப்பதே மற்றவர்களின் மரபு. நீங்கள் வயது வித்தியாசம் பார்க்காமல் எப்பொழுது என் காலை பிடிக்க முன் வந்தீர்களோ, அப்பொழுதே என் மனம் உங்களை மன்னித்து விட்டது தாயே! என்று கூறி ஒரு சில நொடிகள் யோசித்த அவள், இல்லை இல்லை! உங்களை மன்னிக்க நான் யார்! ஒரு வகையில் நீங்கள் எனக்கு நல்லதே செய்து உள்ளீர்கள்! என தக்ஷா கூற ஒரு வித குழப்பத்துடனும் ஆச்சரியத்துடனும் வள்ளி அவளை பார்த்தாள். இந்த வயதில் இப்படி ஒரு பெண்ணா! என்று வள்ளி ஆச்சரியத்துடன் அவளை நோக்க, வள்ளியின் கணவனும் அதே பார்வையை அவள் மீது வீசினார்.

  இருப்பினும், 'அவள் தனக்கு நல்லது செய்ததாக ஏன் கூறினாள்?' என்று புரியாதவாளாய் வள்ளி நிற்க, அப்பொழுது தக்ஷா தொடர்ந்தாள்.

  நீங்கள் இவ்வாறு செய்ததில் எனக்கு நல்லதே... காரணம், என் தந்தை என்னை எங்கும் வெளியில் அனுப்பியதே இல்லை. நான் வெளியூர் பயணம் வருவது இதுவே முதல் முறை. இருப்பினும், எனக்கு இந்த முறை பல அனுபவங்கள் கிட்டியது. தன்னம்பிக்கை மேலும் அதிகமாகியது. இனிமேல், எனக்கு எவ்வளவு துயரம் நேர்ந்தாலும் அதை சமாளித்து விட முடியும் என்ற எண்ணம் பிறந்துள்ளது என் மனதில்!" என அவள் வார்த்தைகளை உதிர்த்து ஒரு புள்ளியை வைத்தாள் வாயின் மூலமாக.

  இதை கேட்டவுடன் கண் கலங்கிய வள்ளி, தக்ஷாவை பார்த்து... உன் பெற்றோர் உன்னை போன்ற ஒரு பெண்னை பெற்றதற்க்கு பெருமை பட வேண்டும். நீ இப்பொழுது கூறிய வார்த்தை எனக்கும் ஒரு விதத்தில் தன்னம்பிக்கை அளித்துள்ளது மகளே... என்று பெருமிதத்துடன் வள்ளி கூற, இதை கேட்ட தக்ஷாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

  "என்ன சொல்கிறீர்? எனக்கு புரியவில்லை, நான் தன்னம்பிக்கை அளித்துள்ளேனா?" என ஆச்சரியத்துடன் அவள் கேட்கவே, "ஆம்..." என்றாள் வள்ளி.

  "மனதிற்கு சந்தோஷமாக உள்ளது. அது என்னவென்று நான் தெரிந்துகொள்ளலாமா? என்று தக்ஷா ஆவலுடன் கேட்க, அதற்கு சிரித்துகொண்டே, நீ கேட்டதற்கு காலம் பதில் கூறும் மகளே! நீ சென்று வா மீண்டும் சந்திப்போம் என்று கூறினாள். அவள் கூறியதின் அர்த்தம் புரியாதவாளாய் தக்ஷாவும், சரி அம்மா நான் உங்களை வற்புறுத்தவில்லை. பதிலுக்காக காத்திருக்கிறேன் என்று கூறி விடைபெற்றாள்.

  யார் இந்த வள்ளி? அவள் கூரிய புதிருக்கான விடை என்ன?

  தொடரும்...
   
 5. Balakarthik Balasubramani

  Balakarthik Balasubramani Well-Known Member

  Joined:
  Aug 3, 2017
  Messages:
  417
  Likes Received:
  483
  Trophy Points:
  63
  Gender:
  Male
  தன் சான்றிதழ்கள் கிடைத்த மகிழ்ச்சியிலும் தன் நோக்கம் வெற்றி பெற்றதிலும் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தாள் தக்ஷா.

  சாலையில் செல்லும் போதே துள்ளி குதித்து கொண்டு சென்றாள். அந்த பேருந்தில் அவள் கண்ட குழந்தையை போன்று!

  ஆம், அவள் ஒரு விசித்திரமான விளையாட்டில் பல தடைகளையும் தோல்விகளையும் அடைந்து வெற்றி கண்டதுபோல தன் உணர்ச்சியை வெளிப்படுத்தி கொண்டே சென்றாள் தக்ஷா.

  சோகத்துடன் தொடங்கிய அவள் பயணம், மகிழ்ச்சியுடன் முடிவடைந்தது. தக்ஷா தன் வீட்டை அடைந்தாள்.

  அப்பொழுது, சாயும் காலம் (மாலை) 6.30 மணி ஆக, தக்ஷாவின் தாய் ஒரு வித பதட்டத்துடன் அவளை வரவேற்றாள். 'என்ன இருந்தாளும் பெற்ற மனம் பித்து அல்லவா!' பத்து நிமிடம் தாமதமாக தன் பிள்ளை வந்தாலே தாங்காது அவள் மனம். தக்ஷாவோ பத்து மணி நேரம் தாமதமாகவே வீட்டை அடைந்து இருக்கிறாள். எப்படி இருக்கும் ஒரு தாய்க்கு. அவள் தன் குழந்தையை பெற்றெடுத்த போது அடைந்த வலியைவிட அதிகமாகவே அடைந்திருப்பாள் கண்டிப்பாக. அதுவே உண்மை! சரி தானே...

  தக்ஷாவின் தந்தையோ... வீட்டின் நடுவில் ஒரு நாற்காலியில் அமர்ந்து ஏதோ யோசனையில் இருந்தார். அவரை ஒரு குற்றவாளியை பார்ப்பதை போல் பார்த்த தக்ஷா, திடீரென நின்றாள்.

  தக்ஷா, தன் தந்தையை பார்க்காதவாறு கீழே குனிந்தபடி, “என் வாழ்க்கையை நான் தேடி கொண்டேன். இனிமேல் உங்களுக்கு பாரமாக ஒருபோதும் இருக்க மாட்டேன். என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள்.

  இதைக் கேட்ட கனகம் கண்ணில் கண்ணீர் பொங்கி வழிந்தது. ராமுவோ ஏதுமே பேசவில்லை.

  இரண்டு நாட்கள் சென்றது.

  தக்ஷாவிற்கோ நரக வேதனை. தன் தந்தையை நாக்கை பிடிங்கி கொள்வது போல் கேட்டு விட வேண்டுமென்று முடிவு செய்தாள். காரணம், 'கிராமத்தில் உள்ளவர்கள் மற்றவர்கள் பேச்சை கேட்பதாலே இந்த மாதிரி முடிவு எடுக்கிறார்கள். தன் தந்தையும் இவ்வாறே செய்திருப்பார்...' என்று எண்ணி அவள் கோபம் கொண்டாள்.

  இன்னும் இருதினங்கள் சென்றது.

  அன்று ராமு தன் மனைவியிடம், “கனகம்! நான் போய் ராஜாவை பார்த்து வருகிறேன் என்றார்.

  இதனை காதில் போட்டுக்கொண்ட தக்ஷா, சொல்லிக்கொள்ளாமல் தன் தந்தையை பின்தொடர்ந்தாள். ஆம், ராஜா... ராமுவின் தோழன் அவர் சொல்படியே தன் தந்தை அவ்வாறு நடந்து கொண்டிருப்பார் என முடிவு செய்த தக்ஷா, அவருக்கே தெரியாமல் அவர் பின்னே செல்லத் தொடங்கினாள். தன் தந்தையை ஒரு வழி பண்ண வேண்டும் என்ற நோக்கத்துடனும் கோபத்துடனும் தக்ஷா சென்றுகொண்டிருக்கிறாள் இப்பொழுது.

  தொடரும்...
   
  ramasamy6, Shanthi vairam and Sri B like this.
 6. Balakarthik Balasubramani

  Balakarthik Balasubramani Well-Known Member

  Joined:
  Aug 3, 2017
  Messages:
  417
  Likes Received:
  483
  Trophy Points:
  63
  Gender:
  Male
  ராமு, ராஜாவின் வீட்டை அடைந்தார். ராஜாவோ அவரை ராஜ மரியாதையோடு வரவேற்றார்.

  என்ன இருந்தாலும் தன் தோழன் அல்லவா! இதனை கண்ட தக்ஷா, மிகவும் ஆத்திரம் அடைந்தாள். தன் தந்தை ராமு, ராஜா விரித்த வலையில் விழுந்ததையும் அதனால் தன் தந்தையின் மனதில் ஏற்பட்ட மாற்றத்தை நினைத்து வெட்கமும் வேதனையும் கொண்டவளாய் மறைந்து இருந்து அங்கு நடப்பதை கவனித்தாள் தக்ஷா.

  ராமுவும், ராஜாவும் ஒருவரை ஒருவர் சில நிமிடங்கள் பார்த்து கொண்டே இருந்தனர். தக்ஷாவோ எப்பொழுது இவர்கள் நம்மை பற்றி பேசுவார்கள். அவர்களை கையும் களவுமாக பிடிக்கலாம். தன் தந்தையை வசை பாடலாம் என்று காத்து கொண்டிருந்தாள்.

  திடீரென்று, இருவரும் சத்தமாக சிரித்தனர். அதனை கண்ட தக்ஷா, மிகவும் கோபம் கொண்டாள். 'என் வாழ்க்கையை அழிப்பதில் இவனுக்கு என்ன அவ்வளவு சந்தோசம்?' என்று ராஜாவை மனதிற்குள்ளே திட்டி கொண்டாள் தக்ஷா. 'இந்த சதிகாரனின் செயல் தெரியாமல் என் தந்தையும் சிரிக்கிறாரே...' என்று அவள் ஆத்திரம் அடைந்தாள்.

  ராஜா அப்பொழுது பேச தொடங்கினார்.

  "சபாஷ் நண்பா... சபாஷ்! நீ நினைத்ததை சாதித்து விட்டாய்..." என்று தன் தோழனை கட்டி தழுவினார்.

  ராஜாவின் மனைவி சுட சுட தேனீர் கொண்டு வந்து ராமுவிற்கு கொடுக்க, அப்பொழுது, தக்ஷா கண்ட அந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

  ஆம், தக்ஷாவால் அது கனவா? இல்லை அது நினைவா? என்று கூட உணர முடியவில்லை.

  அப்படி என்ன தக்ஷா கண்டாள்.

  வள்ளி அங்கு வந்து நிற்பதை போன்று தக்ஷா காண, 'தான் காணும் அந்த சம்பவம் கனவு தானா?' என்று அவளையே ஒரு முறை கிள்ளி பார்த்து கொண்டாள். அவளுக்கோ வலித்தது. ஆம், அது கனவு இல்லை நிஜம் தான். அங்கு வந்து நின்றது வள்ளியே தான். 'இவள் ஏன் இங்கு வந்தாள்?' என்று தக்ஷாவுக்கோ குழப்பம்.

  தக்ஷா தன் மண்டையை பிய்த்து கொள்வது போல் குழம்பித்தான் நின்றாள்.

  வள்ளி வந்ததும்... ராமு, அவள் கையை குலுக்கி வரவேற்றார். இதற்கு மேல் இங்கு நின்று வேடிக்கை பார்ப்பது தவறு என்று நினைத்த தக்ஷா, அவர்கள் முன்னே சென்று அதிர்ச்சி தரும் விதமாக நின்றாள்.

  அவளை சற்றும் எதிர்பாராத அவர்கள், வாயடைத்து போய் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்தவாறு வார்த்தையற்று நின்றனர்.

  தொடரும்...
   
 7. Balakarthik Balasubramani

  Balakarthik Balasubramani Well-Known Member

  Joined:
  Aug 3, 2017
  Messages:
  417
  Likes Received:
  483
  Trophy Points:
  63
  Gender:
  Male
  தக்ஷா ஆக்ரோஷத்துடன் பேச்சை தொடங்கினாள்.

  “என்ன நடக்கிறது இங்கே... தயவு செய்து கூறுங்கள். என் தலையே வெடித்து விடும் போல! இந்த வள்ளி யார்? இவள் ஏன் என் சான்றிதழ்களை எடுக்க வேண்டும்? இவளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? உங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்பொழுது சொல்ல போகீறீர்களா இல்லையா?" என்று கோபத்துடன் அலற, அங்கே நின்ற அனைவரும் அமைதியாக இருந்தனர்.

  அப்பொழுது, ராஜா பேச தொடங்க... தக்ஷாவோ, குறுக்கிட்டு., “நீங்கள் பேசாதிர்கள். நீங்கள் தான் என் வாழ்க்கையை திசை திருப்பியது. நீ ஏதும் சொல்லாமல் இருந்திருந்தால்... என் தந்தை என்னுடன் சென்னை வந்திருப்பார் தெரியுமா!!! நானும் பல இன்னல்களை அடைந்து இருக்கமாட்டேன். எல்லாம் உன்னால் தான்..." என்று கூறியவள், திடீரென்று., 'என்ன இருந்தாலும் நம்மை விட அவர் பெரியவர்...' என்று எண்ணி பேச்சை நிறுத்தினாள்.


  அப்பொழுது ஒரு அமைதியானது அங்கே நிலவ,

  "நான் பேசலாமா?" என்று ஒரு ஓசை கேட்டது. அது வேறு யாரும் அல்ல... வள்ளி தான். ஆம் வள்ளியே தான்.

  “தக்ஷா! நான் சொல்வதை பொறுமையாக கேள். என் மகன் சிறு நீரகம் கோளாரால் அவதி பட்டு வருகிறான். அவனை நான் ஆஸ்பத்திரியில் பார்த்து விட்டு வருகையிலே என்னை நீ பார்த்தாய். அப்பொழுது தான் உன் பையை நான் எடுத்தேன்..." என அவள் சொல்ல, தக்ஷா அவளை ஒரு மாதிரி பார்த்தாள்.

  "இவை அனைத்தையும் நான் ஏன் செய்தேன் என்று யோசிக்கிறாயோ...?" என சிரித்து கொண்டே வினவினாள் வள்ளி.

  'என்ன பதில் கூற போகிறாள் இவள்...' என தக்ஷா காத்திருக்க,

  "இதை செய்ய சொல்லியதே உன் தந்தை தான் என்று அவள் நொடிப்பொழுதில் கூற, இதை கேட்ட தக்ஷா அதிர்ச்சி என்னும் அலையில் மூழ்கி தத்தளிக்க தொடங்கினாள்.

  தொடரும்...
   
 8. Balakarthik Balasubramani

  Balakarthik Balasubramani Well-Known Member

  Joined:
  Aug 3, 2017
  Messages:
  417
  Likes Received:
  483
  Trophy Points:
  63
  Gender:
  Male
  "ஆம் தக்ஷா... இதை செய்ய சொன்னதே உன் தந்தைதான்." என்று வள்ளி சொல்ல, தன்னை சாந்தபடுத்தி கொண்ட தக்ஷா, “புரியவில்லை! தயவுசெய்து தெளிவாக கூறுங்கள்..." என சொல்ல வள்ளி தன் வாயை மெல்ல திறந்தாள்.

  தக்ஷாவோ, "தயவுசெய்து நீங்கள் நிறுத்துங்கள். ராஜா நீங்கள் கூறுங்கள். முதலில் என்னை மன்னித்து விடுங்கள். நான் உங்களை தர குறைவாக பேசி இருந்தால்... என்னை மன்னித்து விடுங்கள். இப்பொழுது சொல்லுங்கள். என்னை ஏன் அழைகளித்தீர்கள்?" என ராஜாவை மன்றாடி கேட்டுக்கொண்டாள்.

  ராஜா பேச ஆரம்பித்தார்.

  “தக்ஷா! நீ உன் தந்தையிடம் கல்லூரியில் சேருவதற்கு அனுமதி கேட்டாய் அல்லவா!! உன் தந்தை... உன் உறவினர்கள் பேச்சை 50 சதவிகிதமே நம்பினார். அதன் பிறகு குழப்பத்துடன் வந்து என்னை பார்த்தார்."

  ராஜா-ராமு உரையாடல் (அன்று ஒரு நாள்)

  ராஜா வீட்டை ராமு அடைந்தார்.

  ராஜா: வா ராமு! வா! எப்படி இருக்க? எவ்வளவு நாள் ஆகுது உன்னை பார்த்து...

  (ராமுவின் முகம் ஒரு வித குழப்பத்துடன் இருக்க)

  ராஜா: என்ன ஆச்சு ராமு? ஏன் ரொம்ப சோகமா இருக்க!

  ராமு: என் மகள் பள்ளியில் நல்ல மதிப்பெண் பெற்று இருக்கிறாள்டா!

  ராஜா: ஹேய்!!! சந்தோஷமான விசயம் தானே! அதற்கு ஏன் முகத்தை சோகமாய் வைத்துள்ளாய் தோழா???

  ராமு: என் உறவினர்கள் அவள் படிப்பை நிறுத்த சொல்கிறார்கள் நண்பா. ஒன்றுமே எனக்கு புரியவில்லை...

  (கவலையுடன்)

  ராஜா: அவர்கள் கிடக்கிறார்கள்! உன் அபிப்ராயம் என்னடா?

  ராமு: எனக்கு அவள் மேல் முழு நம்பிக்கை உள்ளது. அவள் தைரியசாலி...

  ராஜா: அப்புறம் என்னடா யோசனை? அவளோடு சென்று வா கவுன்சிலிங்கிற்கு...

  (சிறிது யோசித்த ராமு)

  ராமு: இல்லைடா! நான் செல்ல போவதில்லை. என் உறவினர்கள் கூறிய வார்த்தை பொய் என்று நிருபிக்க வேண்டும். அவர்கள் மூக்கை உடைக்க வேண்டும்.

  ராஜா: அதற்கு என்ன செய்ய போகிறாய்?

  ராமு: புரியவில்லை எனக்கும். எந்த யோசனையும் இல்லை எனக்கு. நான் சென்று வருகிறேன்...

  (கவலையுடன் புறப்பட்டார்)

  இரண்டு நாட்கள் கழித்து...

  ராமு: ராஜா! ராஜா! (வேகமாக வீட்டை அடைந்தார்)

  ராஜா: என்னடா? இவளோ பதட்டமாய் வருகிறாய்...

  ராமு: எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது....

  ராஜா: என்னடா? (ஆர்வமுடன்)

  ராமு: என் மகள் தனியாக சென்னை செல்ல வேண்டும். அவள் பணத்தை யாராவது திருட வேண்டும். அவள் தவிக்க வேண்டும்.

  ராஜா: என்னடா! உனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா! என்ன உளறுகிறாய்?

  ராமு; ஆம், என் மகளின் மேல் எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. எப்படி அவர்கள் என் மகளை பற்றி தவறாக பேசினார்கள். அவர்களுக்கு நான் நிருபிக்கிறேன் என் மகள் புத்திசாலி என்று!

  ராஜா: (குழப்பத்துடன்) புரியவில்லை எனக்கு!

  ராமு: புரியும்படி சொல்கிறேன் கேள்! என் மகள் அவள் உடைமைகளை இழந்த பிறகு அதனை தேடி செல்வாள் பார். கண்டிப்பாக, ஒரு கோழையாக வீட்டிற்கு வர மாட்டாள். அவள் அவளுடைய புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி என் உறவினர்களை மட்டும் அல்ல! வாழ்க்கையையே ஜெயிப்பாள் பார்!

  (பெருமிதம் கொண்ட ராஜா...)

  ராஜா; உன்னை நினைத்து பெருமை கொள்கிறேன் நண்பா! உன் உறவினர்களை நம்பி நீயும் மற்ற பெற்றோர் போல் நடந்து கொள்வாயென நான் நினைத்தேன். என்னை வியக்க வைத்து விட்டாயடா நண்பா!

  (சிறிது நேரத்திற்கு பிறகு)

  ராஜா: என்ன செய்ய போகிறாய்? உன் மகளின் உடைமைகளை எடுக்க யார் முன் வருவர். அது குற்றமல்லவா! கண்டிப்பாக பயப்புடுவார்கள் அல்லவா???

  தொடரும்...
   
 9. Balakarthik Balasubramani

  Balakarthik Balasubramani Well-Known Member

  Joined:
  Aug 3, 2017
  Messages:
  417
  Likes Received:
  483
  Trophy Points:
  63
  Gender:
  Male
  ராஜாவின் சொல்லை கேட்ட ராமு, "வள்ளி..." என கூப்பிட அவள் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு அவர்கள் முன்னே வந்து நின்றாள்.

  ராமு தொடர்ந்தார்.

  "இவர் பெயர் வள்ளி. இவர் மகன் சிறு நீரக கோளாரால் அவதி படுகிறான். அவனை இந்த பெண் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளாள். இருப்பினும் அவன் செலவுக்கு வள்ளியால் பணம் திரட்ட முடியவில்லை. அதனால், நான் வள்ளிக்கு உதவி செய்ய முடிவு எடுத்து உள்ளேன்." என சொல்லியவர், பின் முனகியபடி, "உதவி அல்ல சன்மானம்." என்றார்.

  "நான் வள்ளியிடம் அனைத்தையும் சொல்லிவிட்டேன். வள்ளி இந்த உதவியை எனக்கு செய்வதால் வள்ளி மகன் சிகிச்சை செலவு அனைத்தையும் நான் ஏற்று கொள்ள தயாராகவுள்ளேன்." என ராமு சொல்ல, ராஜாவால் ஏதுமே பேச முடியவில்லை.

  வள்ளி: எனக்கு உதவி செய்ய முன் வந்த நீங்கள் என்றுமே என்னை விட பெரியவர் தான். கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், ஒரு விதத்தில் உதவி செய்யும் ஒவ்வொருவரும் கடவுள் தான் மற்றவர்களுக்கு. காவல் தெய்வம் என்பது கூட அந்த ஊரில் உள்ள ஒருவர் ஏதோ ஒரு வகையில் அந்த ஊர் மக்களுக்கு நன்மை செய்வதனாலே அவர்களை கடவுள் என்று
  அழைக்கின்றனர். அதில் ஒன்றும் தவறு இல்லையே! கடவுளுக்கு உருவம் இல்லை உண்மை. உருவம் உள்ள பல உயிர்கள் இங்கு கடவுளாகவே மற்றவர்களுக்கு தெரிகின்றனர். அப்துல் கலாமை போன்று!!!


  வள்ளி இவ்வாறு சொல்ல ராமு கண் கலங்கி விட்டார். ராமு வள்ளியிடம், “என்னம்மா! பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு. எனக்காக நீங்க ஒரு குற்றவாளியா என் மகள் முன்னாடி நிற்க முடிவு செய்து உள்ளீர்களே! உண்மையிலே நீங்கள் தான் கடவுள் எனக்கு... என கூறி அவள் முடிக்க, தக்ஷா கண்களில் கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

  தக்ஷாவிற்கு பேச்சே வரவில்லை.

  அவள் வெட்கி போய் கூனி குறுகி நின்றாள். அவள் தந்தை முன்னாடி தக்ஷா ஒரு குற்றவாளியாக நிற்க, அவள் தந்தையை பற்றின அவளது தப்பான எண்ணங்கள் அனைத்தும், வானத்தில் தோன்றும் மின்னலை போல் ஒரு நொடியில் தோன்றி மறைந்தது.

  வள்ளி மீண்டும் தொடங்கினாள்.

  “உன் தந்தையை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் தக்ஷா என்று வள்ளி கூறவே தக்ஷா நிலையற்று தன் தந்தை ராமுவை கட்டிபிடித்து அழுதாள்.

  “என்னை மன்னித்து விடுங்கள் அப்பா! என்று அழுது புலம்பினாள் அவள். ராஜாவிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க, வள்ளி இவை அனைத்தையும் கண்டு கண் கலங்கினாள்.

  ஆம், தக்ஷா-தந்தை அன்பை கண்டு.


  'தக்ஷா நீ எனக்கு நம்பிக்கை அளித்து உள்ளாய்...' என்று அன்று நான் கூறியதன் அர்த்தம் உனக்கு புரிகிறதா? என வள்ளி கேட்கவே
  "புரிகிறது அம்மா..." என்று கண் கலங்கியவாறு தக்ஷா சொல்ல, "நான் உங்கள் மகனுக்காக கடவுடளிடம் வேண்டி கொள்கிறேன்!!! அவருக்கு சீக்கிரம் குணமாகும்..." என்றும் வார்த்தைகளால் வள்ளிக்கு ஆறுதல் கூறினாள்.


  தக்ஷாவும், ராமுவும்... அவர்கள் இருவருக்கும் (வள்ளி, ராஜா) தன் கண்ணீரால் நன்றி சொல்லி புறப்பட்டு சென்றனர்.

  இருவரும் வழியில் செல்லும் போதே மனம் விட்டு பேசியும் சென்றனர்.

  ராமு: என்னம்மா! நீ நினைச்சபடி நல்ல காலேஜ் கிடைச்சுடுச்சு போல...?

  தக்ஷா: பஸ்ல ஒரு பையன் என்ன கிண்டல் பன்னினான், என்னோட அப்பாவி தனத்த பார்த்து...

  ராமு: ஐய்யோ அப்புறம் என்னா ஆச்சு? நீ கோபப்பட்டு இருப்பியே?

  தக்ஷா: கோபம் பயங்கரமா வந்துச்சு, அவன் மேல இல்ல உங்க மேல...

  ராமு: அய்யோ! என் மேல என்னம்மா கோபம் உனக்கு?

  தக்ஷா: பின்ன என்னப்பா! என்ன மட்டும் தனியா அனுப்பி விட்டீங்க சென்னைக்கு. நீங்க இருந்தா இப்படி நடந்து இருக்குமா!

  (பிறகு சிறு புன்னகையுடன்)

  தக்ஷா: நீங்க வந்து இருந்தா கண்டிப்பா பயப்புட்டு இருப்பான் அந்த பையன். ஆனால் நீங்க வராததும் எனக்கு நல்லது தான். நல்ல அனுபவம் கிடைச்சது எனக்கு.

  தொடரும்...
   
  ramasamy6, Shanthi vairam and Sri B like this.
 10. Balakarthik Balasubramani

  Balakarthik Balasubramani Well-Known Member

  Joined:
  Aug 3, 2017
  Messages:
  417
  Likes Received:
  483
  Trophy Points:
  63
  Gender:
  Male
  (சிறிது தூரம் இருவரும் சென்ற பிறகு)

  தக்ஷா: அப்பா! பேசிக்கிட்டே வேற பாதையில வந்துட்டோம் நாம!

  ராமு: அட ஆமா! சரி பரவாயில்லை தக்ஷா. என் தோழன் ஒருத்தன் இருக்கான். அவன பார்த்துட்டு போயிடுவோம். அவன் உனக்கு வாழ்த்து சொல்லனும் சொன்னான்.

  தக்ஷா: வாழ்த்து சொல்லனுமா! எனக்கா! எதுக்கு?

  ராமு: பின்ன... என் பொண்ணுக்கு ஒரு நல்ல காலேஜ் கிடைச்சுருக்கு. அத எல்லாருக்கிட்டையும் சொல்ல வேண்டாமா! அவங்கிட்டயும் சொன்னேன். அதான் உனக்கு நேர்ல வாழ்த்து சொல்லனும் சொன்னான் தக்ஷா.

  (தக்ஷா தன் கண்களை மூடிக்கொண்டு, வெட்கத்துடன்)

  தக்ஷா: அப்பா! ஊரு முழுக்க சொல்லிட்டீங்களா. (தன்னடக்கத்துடன்). போங்கப்பா!!!

  தக்ஷாவும் ராமுவும் பேசி சிரித்து கொண்டு சென்றனர்.

  அப்பொழுது,

  ராமு, “தக்ஷா!!! என் நண்பன் வீடு வந்து விட்டது என்று கூறியவுடன் தக்ஷா "எங்கே?" என்று எதிர்பார்ப்புடன் பார்த்தாள்.

  ராமுவின் அந்த நண்பன் பெயர் தீபக்.

  தீபக்கின் அம்மா வீட்டின் வெளியே உட்கார்ந்து வேலை செய்து கொண்டு இருந்தார். ராமுவை கண்டவுடன் “வாங்க..." என்று வரவேற்றார்.

  ராமு சிரித்து கொண்டே “தீபக் இல்லையா என்று கேட்க, தக்ஷா முகம் மாறியது. ஆம் அந்த நண்பனை காண ஆவலுடன் இருந்த தக்ஷா இந்த கேள்வியை கேட்டதும் 'தவறான நேரத்தில் வந்து விட்டோமோ...' என்று யோசித்தாள்.

  தீபக்கின் அம்மாவோ, "உள்ளதான் இருக்கான்..." என்று சொல்லியவுடன் தக்ஷா திருப்தி அடைந்தாள்.

  "தீபக்... தீபக்..." என்று அவன் அம்மா கூப்பிட, ராமுவோ "வேண்டாம் அம்மா. நாங்க போய் பார்த்து கொள்கிறோம்..." என்று சொல்லி மடமடவென இருவரும் கொள்ளையை நோக்கி சென்றனர்.

  தீபக் கொள்ளையில் குனிந்து கொண்டு மரக்கன்றுக்கு வாய்க்கால் வெட்டி கொண்டு இருந்தான்.

  அதனால், தக்ஷாவிற்கு அவனின் முகம் சரியாக தெரியவில்லை.

  ராமுவோ, “தீபக், யார் வந்து இருக்க பாரு.... என்று கூறவே தீபக் சட்டென்று திரும்பினான்.

  தக்ஷா பேரதிர்ச்சி அடைந்தாள்.

  ஆம், அவள் கண்ட அந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த தீபக் வேறு யாரும் அல்ல. பேருந்தில் அவளை கிண்டல் செய்த, காலேஜில் அவளை கிண்டல் செய்த அவனே! ஆம், அவன் தான் அந்த தீபக்.

  இதுவும் தன் தந்தையின் திருவிளையாடலே என்று தெரிந்ததும் ஒரு சிறிய புன்னகையை தீபக்கிற்கு பரிசாக அளித்தாள் தக்ஷா.

  'தன் மேல் தவறு இல்லை...' என்பதை தக்ஷா புரிந்து கொண்டு விட்டதையும் புரிந்து கொண்ட அவன், பதில் புன்னகையை தக்ஷாவிற்கு ஒரு நண்பனாக பரிசளித்தான்.

  இப்பொழுது தன் தந்தையை ஒருவித புன்னகை கலந்த கோபத்துடன் பார்த்தாள் தக்ஷா.

  ராமுவோ... கீழே குனிந்து கொண்டு சிரித்தார்.

  திடீரென்று தக்ஷா, "ஓஹோ, அந்த பார்த்திபனை அனுப்பியதும் நீங்கள் தானா? என்று தன் தந்தையை பார்த்து கேட்க, அவர் சட்டென்று அவளை பார்த்து, “பார்த்திபனா? இல்லையே... யார் தக்ஷா அந்த பார்த்திபன்? என்று சிரித்து கொண்டே கேட்டார்.

  தக்ஷா தன் பல்லை கடித்து கொண்டு “அப்போ அந்த ஸ்கிரிப்டு நீங்க எழுதலையா? என்று மாட்டிகொண்டவள் போல் முழித்தாள்.

  உடனே தீபக், “ஆம் நாங்கள் பல வித எதிர்பாரா திருப்பங்களை உனக்கு தந்தோம். ஆனால் பார்த்திபன் எங்களுக்கே செம டிவிஸ்ட்... என்று சிரித்து கொண்டே கூறினான்.

  ராமுவோ, “என்னம்மா புடிச்சிருக்கா அவன?என்று கேலி செய்ய, தக்ஷாவோ... “அப்பா என்று அடிக்க சென்றாள்.

  "சரி சரி..." என்று கூறிய ராமு விலகி நின்றிட...

  தக்ஷா, தீபக்கை பார்த்து... “எந்த காலேஜ் எடுத்தீங்க? உங்களை நான் ஏதேனும் கஷ்டபடுத்தி இருந்தாள் மன்னிச்சுங்க!" என்று மனம் விட்டு பேச தொடங்கினாள்.


  தொடரும்...
   
  ramasamy6, Shanthi vairam and Sri B like this.

Share This Page