Dhakshavin vazhkkai/ தக்ஷாவின் வாழ்க்கை by Balakarthik.

Discussion in 'Bala karthik balasubramaniam Novels' started by saravanakumari, Aug 3, 2017.

 1. Balakarthik Balasubramani

  Balakarthik Balasubramani Well-Known Member

  Joined:
  Aug 3, 2017
  Messages:
  417
  Likes Received:
  483
  Trophy Points:
  63
  Gender:
  Male
  அவற்றிற்கு பதிலளித்த தீபக், “உன் தந்தைக்கு உன் மீது அளவு கடந்த அன்பு தக்ஷா. அவர் உன் கூட வரவில்லை என்றாலும் நீ சென்னையில் இருந்த ஒவ்வொரு நொடியுமே அவருக்கு நன்றாக தெரியும்." என சொல்ல, “சே நான் என் தந்தையை தப்பா நெனச்சிட்டேன் தீபக். உண்மையிலேயே ரொம்ப பெருமையா இருக்கு அவர நெனச்சு... என கண் கலங்கினாள்.

  "வாழ்த்துக்கள் தக்ஷா..." என்று தீபக் கூற உங்களுக்கும் தான் என்றாள் அவள்.

  பிறகு, மீண்டும் சந்திப்பதாய் கூறி தீபக்கிற்கும் அவன் தாயாருக்கும் நன்றி கூறி புறப்பட்டு வீட்டை நோக்கி அவள் புறப்பட, அவளுடனே கதைகள் பேசியவாறு ராமுவும் சென்றார்.

  இருவரின் வருகையையும் எதிர் நோக்கி காத்து கொண்டு இருந்தாள் கனகம்.

  இருவரும் சிரித்து பேசிக்கொண்டே வீட்டின் கதவை திறந்தனர். அதனை பார்த்த கனகத்திற்கோ ஆச்சரியம்.

  ஆம் இருக்காதா என்ன???

  பாம்பும் கீரியையும் போல் அடித்து கொண்ட இருவரும், ஒற்றுமையாய் வருகிறார்களே என கனகம் ஆச்சரியம் அடைந்தாள்.

  கனகம், உள்ளே நுழைந்தவர்களிடம்... “என்ன அப்பாவும் பொண்ணும் குடுமி புடி சண்டை போட்டுக்கிட்டு இருந்தீங்க. திடீர்னு ஓவர் பாசமா இருக்கு என கேட்க, “அப்பாவுக்கும் பொண்ணுக்கும் ஆயிரம் இருக்கும். நீ போய் சாப்பாடு எடுத்து வைம்மா. பசிக்குது என கனகத்திடம் அவர் கூற சிரித்து கொண்டே கனகம் உள்ளே சென்றாள்.

  தக்ஷா, தன் தந்தையை குறும்பு தனமான பார்வை பார்த்து விட்டு உள்ளே செல்ல, கனகம் தக்ஷாவிற்கு பிடித்த உணவை சமைத்து வைத்திருந்தாள்.

  அதனை பார்த்த தக்ஷா, “என் செல்ல அம்மா என்று கூற கனகமோ... “இதை காலையிலே உனக்காக வாங்கி வந்ததே உன் அப்பாதான் என கூறினாள்.

  தக்ஷா ராமுவை பார்த்து, “ஓஹோ இதுவும் உங்க திருவிளையாடல் தானா...? என்று கேட்க ராமு தனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதவர் போல உட்கார்ந்திருந்தார்.

  பிறகு...

  ராமு, கனகம், தக்ஷா மூவரும் பாசமலர் திரைப்படத்தை பார்த்து கொண்டே சாப்பிட, ராமுவோ... “எனக்கு ரொம்ப பிடித்த திரைப்படம் என்று சொல்லி கொண்டே சாப்பிட, தக்ஷா “எனக்கு நன்றாகவே தெரியும் அப்பா... என்று பதில் கூறினார்.

  திடீரென்று ராமு சின்ன குழந்தை போல அழுக, அதனை பார்த்து தக்ஷாவும் கனகமும் சிரித்தனர்.

  அதனை கண்ட ராமு, “என்ன கிண்டலா ரெண்டு பேருக்கும், என்னமோ தெரியல இந்த படத்த எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு அழுக வந்துருது... என சொல்ல, “அதுவும் தெரியுமே என கனகமும் தக்ஷாவும் ஒரே நேரத்தில் கூறினர். “ஓஹோ அதனால் தான் இந்த படத்தை இப்பொழுது போட்டீர்களா என்று சிரித்து கொண்டே கேட்டார் ராமு.

  தக்ஷா கண்ணிலும் திடீரென்று கண்ணீர் வர, ராமுவோ... “பார்த்தியா! என் கண்ணுல தண்ணீர் வந்ததும் என் பொண்ணு கண் கலங்குது என சொல்ல தக்ஷா சிரித்து கொண்டே கண்ணீரை துடைத்தாள்.

  ஆனால், தக்ஷா அழுததிற்கு அது காரணம் அல்ல. தன் தந்தையை தர குறைவாக முன்பு எண்ணியதாலே. பார்த்திபன் மட்டும் அல்ல எவளோ பேர் வந்தாலும் என் பெற்றோர் அன்பிற்கு ஒரு போதும் ஈடாகாது என மனதில் கர்வத்துடன் நினைத்து கொண்டாள்.

  பெற்றோர்கள் தன் பிள்ளைகளை பேணி காக்க செய்யும் ஒவ்வொரு செயல்களும் ஏதோ ஒரு விதத்தில் என்றாவது ஒரு நாள் நன்மை அளிக்கும்.

  ராமுவை போல!!!

  தொடரும்...
   
  Shanthi vairam and Sri B like this.
 2. Balakarthik Balasubramani

  Balakarthik Balasubramani Well-Known Member

  Joined:
  Aug 3, 2017
  Messages:
  417
  Likes Received:
  483
  Trophy Points:
  63
  Gender:
  Male
  உம் பெற்றோர் செயல்களை இழிவாய் எண்ணி திட்டும் ஒவ்வொருவரும் ஒரு நாள் தன்னையே திட்டி கொள்வார்கள். அன்று உன் பெற்றோர் உன்னோடு இல்லாமல் கூட போகலாம். இருக்கும் பொழுது அவர்களை உன்னால் சந்தோசமாக வைத்து கொள்ள முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, அவர்களை எந்த ஒரு விதத்திலும் காயபடுத்திவிடாதே. நீ அவர்களை கண்டுகொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை, தொந்தரவு தந்துவிடாதே. அவர்களை, அவர்களாலே பார்த்து கொள்ள முடியும். ஆம், உன்னையே வளர்த்து ஆளாக்க அவர்களால் முடியும் பொழுது அவர்களை அவர்களாளே பார்த்து கொள்ள முடியாதா என்ன!!!

  அவர்கள் உன்னிடம் எதிர்ப்பார்ப்பது பணத்தை அல்ல! பாசத்தை...

  கொடுப்பாயா தோழனே! நீ சின்னதாக ஒரு பொய் சொல்லி பார், உன் தாயிடம் பாசமாக இருப்பதாக.

  நீ பூசிய பொய் என்னும் வர்ணத்தில் அவள் கண்ணீர் பட்டு அதுவும் மெய்யாக மாறும்.

  காதலிக்கும் பெண்ணிடம் நாம் காட்டும் பாசத்தை... ஏன் ஒரு நாளும் நம் தாயிடம் காட்டுவது இல்லை? என்றாவது சிந்தித்து இருக்கிறோமா?

  இல்லை...

  ஆம், ஒரு போதும் இல்லை. உன் தாயின் அன்பு அவ்வளவு சிரிதாய் போய் விட்டதா என்ன! நீ காதலை வீட்டில் சொன்னவுடன் அவர்கள் முகத்தை சுலிக்கிறார்கள் என்று நினைக்கிறாயே. நீ காதலை அந்த பெண்ணிடம் சொன்னவுடன் உனக்கு சம்மதம் தெரிவித்து விடுகிறாளா என்ன..? அந்த சம்மதித்திற்காக காத்திருக்கும் நீ, ஏன் உன் பெற்றோரிடம் மட்டும் உடனே பதிலை எதிர்பார்க்கிறாய்?

  நீ கேட்ட கேள்வி ஒன்றும் ஒரு மதிப்பெண் கேள்வி அல்ல. இரு வரியில் விடை கூற. நீ கேட்ட கேள்விக்கு மதிப்பெண்களே கிடையாது!

  ஆம், நீ கேட்ட கேள்விக்கு பதிலை உன் பெற்றோர் ஆயிரம் வரிகளில் பதிலாக தருவார்.

  அதில் பாசம் இருக்கும், கோபம் இருக்கும், அனுதாபம் இருக்கும், ஒரு அப்பாவி தனம் இருக்கும் இவ்வளவு இருக்கும் போது உன் கர்வத்திற்காக அவர்களை கஷ்டபடுத்திவிடாதே ஒரு போதும். காதலிப்பதும் குற்றமில்லை அதனை வீட்டில் கூறுவதும் குற்றமல்ல!

  உன்னை பல வருடங்களாக பார்த்து கொண்ட உன் பெற்றோரிடமே இதை கூற நீ யோசித்தால்....உன்னை நம்பி வரும் பெண்ணவளை குறுகிய காலத்திலே நீ பார்த்து, அவளுடன் அழகிய வாழ்க்கையை எப்படி வாழ்வாய்?

  யோசித்து பார். நானும் உன்னை போல் ஒருவன் தான்.

  கதை முற்றும்...

  பெற்றோர்களுக்கும், பெற்றோர்களை நேசிக்கும் பிள்ளைகளுக்கும், இக்கதை சமர்ப்பணம்...

  தக்ஷாவின் கல்லூரி வாழ்க்கை (பேய்க்கதை விரைவில்)
   
  Shanthi vairam and Sri B like this.
 3. Balakarthik Balasubramani

  Balakarthik Balasubramani Well-Known Member

  Joined:
  Aug 3, 2017
  Messages:
  417
  Likes Received:
  483
  Trophy Points:
  63
  Gender:
  Male
  வணக்கம் நண்பர்களே,

  என்னுடைய 'தக்ஷாவின் வாழ்க்கை' கதை எப்படி? உங்களுக்கு பிடித்திருந்ததா? கதையின் நிறை/குறைகளை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.

  வாசகர்களாகிய உங்கள் கருத்துக்கள், எழுத்தாளராகிய எங்களை மேலும் உற்சாகப்படுத்தும்.

  உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை தயவு செய்து ஒளிவு மறைவின்றி என்னிடம் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

  - பாலகார்த்திக் பாலசுப்பிரமணியன்
   
  ramasamy6 and Sri B like this.

Share This Page