Exclusive Novel - Nazhuvum Ithayangal | நழுவும் இதயங்கள் - சாரா தியா

Discussion in 'SaraDhiya Stories' started by sara dhiya, Sep 16, 2015.

  1. sara dhiya

    sara dhiya New Member

    Joined:
    Aug 1, 2015
    Messages:
    101
    Likes Received:
    132
    Trophy Points:
    0
    Gender:
    Female
    ஹாய் frnds.......

    sorry ithana naala ud podaama vittathuku....

    enaku fever frnds... athaan one weeka vara mudila... and ippo thaan enaku ud poda time kidachuchu... kandipa next ud seekiramae perusaa vanthidum... enakaka porumaiya wait pana pri dear, ranya dear, hasu dearku biggggggg bigggg thanks....

    padichitu vanthu solunga frnds... ungalukaka am wting....

    naluvum idayangal comments
     
    3 people like this.
  2. sara dhiya

    sara dhiya New Member

    Joined:
    Aug 1, 2015
    Messages:
    101
    Likes Received:
    132
    Trophy Points:
    0
    Gender:
    Female
    இதயம் 6

    ஹர்ஷாவை வர வேண்டாம் என கூறியும், அவன் வந்தது, யாழினியை முகம் சுண்ட வைக்க செய்தது. மேலும், ஒரு சங்கடமும், ஒரு பயமும் அவளை சூழ்ந்தது. தன் கல்யாண பத்திரிக்கையை ப்ரியாவிற்கு வைக்கும் போதே, அவள் ஹர்ஷாவை அழைக்கவும் இல்லை, மேலும் அவனை வர வேண்டாம் என கூறும் படி கூறினாள். ஆனால், ப்ரியா எப்படி இதை நேரிடையாக ஹர்ஷாவிடமோ அல்லது கார்த்தி, பாருவிடம் தான் எப்படி கூற முடியும்.


    எப்படியோ என்ன ப்ரியா மூலம், பாருவிடமும், அவளிடம் இருந்து கார்த்தியிடம் சென்று அப்படியே ஹர்ஷாவுக்கு செல்ல, அவன் காதல் தோல்வியால் வன்மம் கொண்டு என்ன செய்யலாம் என யோசிக்கலானான். அதன் விடையாய், தன் அத்தைப் பெண்ணை மணமுடிக்க திடீரென முடிவு செய்து, அதை செயல் படுத்த ஆரம்பித்தான்.


    அதன் விளைவாய், இதோ இப்போது யாழினியின் திருமணத்திற்கு, அவளை... தன் அத்தை மகள் ரத்தினத்தை... தன் வருங்கால மனைவியை... காவேரியை அழைத்து வந்திருந்தான்.


    இவன் வந்ததைப் பார்த்து, அவனிடம் பாரு விரைய, பாருவுடன் அமர்ந்திருந்த ப்ரியாவும் உடன் சென்றாள். எதிரே வந்த பாருவிடமும், ப்ரியாவிடமும் புன்னகைத்தப்படி, எந்த வித சங்கடமும் இல்லாமல், "காவேரி இதான் பாரு, அவங்க ப்ரியா" என தன்னுடன் வந்த தன்னவளுக்கு அறிமுகப் படுத்தினான்.


    பின் தன் தோழிகளிடம், "இவ... காவேரி... என் பியான்சி" என அறிமுகப்படுத்தினான். அனிதாவோ அவர்கள் ஊரில் பள்ளிப் படிப்பை மட்டும் முடித்து விட்டு, வீட்டோடு தன் அம்மாவுடன் இருந்தாள். அப்படி உலகம் அறியா பெண்ணாய், தன் ஊரில் மட்டுமே குண்டு சட்டி ஓட்டியிருந்தாள்.


    ப்ரியாவிற்கும், பாருவிற்கும் அவன் வந்ததே சங்கடம் என்றால், அதில் இவன் தன் மனைவி என ஒரு பெண்ணை அழைத்து வருவான் என சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.


    ப்ரியாவோ "ஏன் இங்கு வந்தாய்?" என உரிமையாய் கேட்க அவள் அவனுடன் பழகிய தோழியும் இல்லை. "ஏன் இப்படி செய்தாய் ஹர்ஷா?" என அடிப்பட்ட உணர்வோடு கேட்க, அவன் இவளுக்கு உரிமைப் பட்டவனும் இல்லை. அவன் அழைத்து வந்து, அறிமுகப் படுத்தவுமே ப்ரியா நொறுங்கி தான் போனாள்.
    ஆம், ப்ரியா யாழிக்கு முன்பே ஹர்ஷாவை விரும்ப தொடங்கியிருந்தாள். காதல் கொண்ட மனம், அந்த காதலை சொல்ல வழி தெரியாமல், திணறிக் கொண்டிருந்த சமயம் தான் யாழி இவள் காதலுக்கு நடுவே புகுந்து, குழப்பி விட்டும் சென்று விட்டாள்.



    சரி, நம் தோழி தானே, அவள் நல்லவள் தானே. நாம் விரும்பிய ஒருவன் நமக்கு கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை, அவனுக்கு நல்ல வாழ்வு அமைந்தால் சரி என மனதை தேற்றினாள். ஆனால், என்ன தான் தேறினாலும், உண்மை காதல் கொண்ட மனமும், உறவை இழந்த நெஞ்சமும் தேறி மாளாது, அழுது கரைந்து தான் ஓயும் என்பது போல், தினம் இரவு அழுது கரைந்தாள்.


    ஆனால், அந்த அவளின் நல்லெண்ணமும் ஈடேறாமல், யாழினி ஹர்ஷாவை இப்படி, கேவலம் ஒரு காரணத்திற்காக இவ்வாறு நட்டாற்றில் விட்டு செல்வாள் என எதிர்பார்க்க வில்லை. இவளை போல், இராணுவத்தில் இருக்கும் இளைஞர்களை மணந்த பெண்கள் எல்லாம் எண்ணினால்? நம் நாடு தான் பாதுக்காப்பாக இருக்குமா? இல்லை நாம் தான் நிம்மதியாய் வாழ முடியுமா? ஆனால், இதை எதையும் உணராமல் இப்படி செய்து விட்டாளே என கவலை ஒரு புறம் இருந்தாலும், அவள் பக்கம் இருக்கும் எண்ணமும்... ஒரு பெண்ணாய் இருந்த ப்ரியாவிற்கும் புரிய தான் செய்தது.


    எல்லா பெண்களும், திருமணம் முடிந்தால் கணவன் தன்னுடன், தன் கூடவே, தன் அருகே தான் இருக்க வேண்டும் என எண்ணுவாள் தான். ஆனால், அதை இவள் பொறுமையாய் சொல்லி பார்த்திருக்கலாம் எனவும் தோன்றியது. ஆயினும், யாழினி விட்டதும், தான் ஹர்ஷாவிடம் காதலை சொல்லலாம் என அவள் நினைக்கவும் இல்லை. ஆனால், அவனைக் காதலிக்காமல்... இல்லை இல்லை... அவன் மீது அன்பு வைக்காமல், நேசிக்காமல் இருக்க முடியவில்லை.


    ஆனால், தற்பொழுது அவனிடம் காதலை சொன்னால், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட சுயநலவாதியாய்... சூழ்நிலைக்கு இயங்கும் பாவையாய் போய் விடுவோமோ? இல்லை தன்னைப் பற்றி ஹர்ஷா என்ன நினைப்பான்? தன் காதலை உண்மை என நம்புவானா? என எண்ணி, தன் காதலை சொல்ல தக்க சமயத்தை எதிர்நோக்கி, தன் காதலை ஆறப் போட்டுக் கொண்டிருந்தாள்.


    அவளுக்கு தெரியவில்லை, அப்படி ஆறப்போடும் சமயம், தன் காதல் காய்ந்த சருகாய் மாறி, பறந்து போய் விடும் என தெரியாமல் போனது விதியின் முடிவா? இல்லை ப்ரியாவின் நேரமோ?


    இப்படி திடுதிடுப்பென்று காவேரியை அழைத்து வந்து தன் வருங்கால மனைவி என அறிமுகப் படுத்துவான் என முற்றிலும் எதிர்பாராமல், மீண்டும் தன் காதலை மனதில் மறைத்து வைக்கவில்லை, முழுதாய்... நிரந்தரமாய்...பூட்டி தன் மன ஆற்றின் ஆழத்தில் புதைத்து விட்டாள்.


    திருமணத்திற்கு வந்த ஹர்ஷா, காவேரியுடன் மணமேடை ஏறி, யாழினியின் கணவனிடம் நெருங்கி, யாழினியின் ரத்த அழுத்தத்தை ஏற்றினான். அவள் முகம் சுண்ட, பதற்றத்தோடு இருக்க, ஹர்ஷாவோ அவள் கணவனிடம் வாழ்த்து சொல்லி, கை குலுக்கி, தன்னை யாழினியின் நண்பன் என அறிமுகப் படுத்திக் கொண்டான். மேலும், காவேரியையும் அறிமுகப்படுத்தி விட்டு, ஞாபகமாய் புகைப்படத்திற்கும் நின்று விட்டு தான் இறங்கினான்.


    என்ன தான் கணவனோடு நின்றாலும், ஹர்ஷாவுடன் நின்றிருந்த காவேரியை, ஓரக்கண்ணால் அளவெடுக்க தவறவில்லை யாழினி!


    வந்தது தான் வந்து விட்டாய், ஆனால், மேடைக்கு எல்லாம் சென்று கலவரம் செய்ய வேண்டாம், ஏன் யாழியை கூட சங்கடப்படுத்த வேண்டாம் என எவ்வளவோ பாரு சொல்லியும் கேட்காமல், அவன் செல்லவும், பாருவிற்கும், ப்ரியாவிற்கும் இங்கு நிலைக் கொள்ளவில்லை. தவித்து தான் போயினர். ஏன் பாரு ஒரு படி மேலே போய், கார்த்திக்கு அழைத்து, அவனை வர சொன்னாள். ப்ரியாவோ மூச்சை கையில் பிடித்து காத்திருந்தாள்.


    பின் அவன் எதுவும் பிரச்சனை செய்யாமல் வரவும் தான், இருவருக்கும் "அப்பாடா!" என பெருமூச்சு விட்டு, ஆசுவாசப்படுத்திக் கொண்டனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த கார்த்தியும், ஹர்ஷாவை தனியே வெளியே அழைத்து வந்து "இங்க ஏன் டா வந்த? உனக்குலா புத்தியே இல்ல டா" என திட்டி தீர்த்தான்.


    "ஏண்டா அவ என்ன காதலிப்பா? தெனாவட்டா மாட்டேன் சொல்லி விட்டுட்டு போவா? நான் என்ன கேனையா எல்லாத்தையும் வேடிக்கை பார்க்க..." என ஆத்திரமாய் பொரிந்தான்.


    "சரி டா... உனக்கு கோபமே இருக்கட்டும். அதுக்கு ஏண்டா அந்த புள்ளைய கூட்டிட்டு வந்த? தங்கச்சி மனசு கஷ்டப்படாத?" என காவேரியை குறிப்பிட்டு கார்த்தி கேட்க, "இல்லடா... அவளுக்கு எல்லாம் தெரியும். அவ ஒன்னும் சொல்ல மாட்டா. ஏன் இவள விட்டா எனக்கு வாழ்க்கைல ஒன்னும் இல்லையா? எனக்கும் ஒருத்தி இருக்கா, வந்திருக்கான்னு தான் காவேரிய கூட்டி வந்தேன். நல்லா மனசுக்குள்ள எரியட்டும்" என யாழினியை திட்டும் சாக்கில், காதல் கொண்ட அவன் மனம் தான் எரிந்தது என நன்றாகவே தெரிந்தது.

     
  3. sara dhiya

    sara dhiya New Member

    Joined:
    Aug 1, 2015
    Messages:
    101
    Likes Received:
    132
    Trophy Points:
    0
    Gender:
    Female
    hai frnds....

    konjam health pbm pa athaan varala... sry... romba naal appuram ud podrathuku...

    inimae regulara potiduven... and intha udyoda continuation tmr podren frnds.......

    konjama shock kodukalamnu nalla ennam avlo thaan frnds... meeedi tmr podren...

    padithu vittu tangal karuthukalai ingae padiyavum dears....

    naluvum idayangal comments...........
     
    3 people like this.
  4. sara dhiya

    sara dhiya New Member

    Joined:
    Aug 1, 2015
    Messages:
    101
    Likes Received:
    132
    Trophy Points:
    0
    Gender:
    Female

    எரிந்திருந்த அவன் மனதை, குளிர்விக்க, புகை விட்டு ஆற்றினான் ஹர்ஷா. மேலும் கார்த்தி ஏதோ வினவ, கடுப்போடு சிகரெட்டை கீழே போட்டு, தன் ஆத்திரத்தை எல்லாம் அதில் காட்டி நசுக்கியவன், அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல், "சரி டா நான் கிளம்புறேன். காவேரி என்ன காணாம தேடிட்டு இருப்பா" என பாரு மற்றும் ப்ரியாவுடன் அமர்ந்திருந்த காவேரியை நாடிச் சென்றான்.


    பின் அங்கு சென்றவன், மூவரிடமும் விடைப் பெற்று சென்றான். ஆனால், ப்ரியா அவர்கள் செல்வதையே, வைத்த கண் வாங்காமல், தளும்பிய கண்களுடன் பார்த்து கொண்டிருந்தாள்.


    அன்று தான் அவனைக் கடைசியாய் கண்டது. அதன் பின் இப்போது சென்னையில் சந்தித்தது தான். அவ்வப்போது அவன் திருமணம் முடிந்ததையும், பின் ஒரு வருடத்தில் இரட்டை ஆண் குழந்தை ஆரோக்கியமாய் பிறந்ததையும் பாரு தான் ப்ரியாவிடம் கூறினாள். அதனால் தான் அவள் அவனிடம் குழந்தையைப் பற்றி விசாரித்தது.


    பின் இரண்டரை வருடம் நன்றாக தான் சென்றிருக்கிறது போல, பின்னர் சிறிது சிறிதாக, சின்னச் சின்ன சண்டை ஆரம்பித்து பெருகிற்று போல... அதன் பின் என்ன பிரச்சனை என தெரியவில்லை? அவள்... அது தான்... அந்த காவேரி தற்கொலை செய்து கொண்டாளாம். இதையும், இப்போது பாரு தான் கூறினாள்.


    "அப்படி என்ன தான் சண்டைச் சச்சரவோ? உயிரை விடும் அளவு என்ன ஆங்காரம் ஒரு பெண்ணுக்கு? அதுவும் இல்லாமல், ஒன்றுக்கு இரண்டு குழந்தைகள், அதை நினைத்துக் கூடவா பார்க்காமல்... இப்படி செய்வது. ச்சை! குழந்தையை விட இவளின் கோபமும், கணவனிடம் கொண்ட பிரச்சனையும் பெரிதாக போயிற்று" என நண்பனின் வாழ்க்கை இப்படி ஆனதில் பாரு, ப்ரியாவிடம் தன் ஆதங்கத்தைக் கொட்டினாள்.


    "ஏன் கோபம் என்றால், ஒரு சில மாதங்கள் தாய் வீட்டில் கூட பிள்ளைகளோடு இருந்திருக்கலாமே?" என கூட ப்ரியாவிற்கு தோன்றியது. "ச்ச... கேட்குற எனக்கே கஷ்டமா இருக்கே பாரு. ஹர்ஷா எப்படி?..." என்ன சொல்வது? எப்படி கேட்பது? என தெரியாமல், பாதியிலேயே நிறுத்தி, அவளுக்கு பதில் தந்தாள்.


    "அத ஏன் கேட்குற ப்ரியா... இவனும் இவன் வாட்ல திரியுறான். குழந்தைங்கள அந்த பொண்ணு வீட்டுலயும், அவங்க அக்காவும் பார்த்துக்குறாங்க போல" என கூறினாள்.


    என்ன தான் மற்றவர்கள், சொந்தங்களே வளர்த்தாலும், அம்மாவிடம் வளர்வது போல் ஆகுமா? என பல எண்ணங்கள் நிமிடங்களில் உதித்தது இருவருக்கும். ஆனால், இவர்களுக்கு புரிந்து என்ன ஆகப் போகிறது? அவர்களின் அன்னை என்பவளுக்கு தெரியவில்லையே!


    ஹர்ஷாவிடம் எதுவும் பிரச்சனையோ? இல்லை அவன் எதுவும் கொடுமை செய்தானோ? இல்லை இவள் எதுவும் பிடிவாதம் செய்தாளோ? யார் மீது தவறோ? என்ன நடந்ததோ? ஆனால் தண்டனை மட்டும் பிள்ளைகளுக்கு வந்து தான் விடிந்தது என மனதுள்ளே உளைச்சல் ஏற்பட்டது.


    அதனால் தான் கண்களும் கலங்கின, மேலும், அவளின் ஹர்ஷாவை எண்ணியும் மனமே கலங்கியது. அவன் விரும்பிய பெண்ணும் கிடைக்கவில்லை... இப்போது மணமுடித்த மனைவியும் இல்லை... கடவுளே! என் ஹர்ஷா எவ்வளவு வேதனையை சுமந்தானோ? காதல் தோல்வியால் எவ்வளவு மனம் உடைந்திருப்பான்... அதன் பின்னாவது அவன் வாழ்க்கை செழித்திருக்க கூடாதா? அதுவும் முளையிலேயே கருகி தான் போக வேண்டுமா?


    "ஐயோ! மனதில் இவ்வளவு வேதனையோடு தான் என்னைக் கண்டானா? லேசாய் தாடியோடு இருந்தானோ?" என அன்று அவனைக் கண்ட காட்சியை நினைவடுக்கில் தேட தொடங்கினாள். முன்பு கல்லூரி நாட்களில் அவ்வளவு உயரமாய், நெடு நெடு என்று இருந்தான். பின் லேசாய் பூசினார் போன்று, கம்பீரமாய், ராணுவத்திற்கு ஏற்ற உடற்கட்டோடு இருந்தவன், இப்போது லேசாய் தேய்ந்து, கருத்து, களையிழந்திருப்பது போல் தோன்றினானோ?


    அவன் உடல் வடிவை நினைவு கூர்ந்தவள், அவனின் சொற்களையும் நினைவு கூறுகையில், தான் அவன் மனைவியைப் பற்றி கேட்டதும், அதற்கு அவன் சுருக்கமாய் ம்ம் என பதில் சொன்னதும் நினைவிலாடியது. "கடவுளே! நான் வேறு அவன் மனைவியைக் கேட்டு, மேலும் அவன் ரணத்தைக் கீறி விட்டேனே?" என ஹர்ஷாவை எண்ணி எண்ணி உருகினாள்.


    மேலும் அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? இவன் என்ன செய்கிறான்? கார்த்தி எங்கு இருக்கிறான்? என்ன வேலை செய்கிறான்? என கேட்கும் மனநிலையும் இல்லாமல், பாருவை மட்டும், அவளின் திருமணத்திற்காக மனமார வாழ்த்தி விட்டு வைத்தாள்.


    இரவு பத்து மணி இருக்கும், மீண்டும் அவளை அலைபேசி கலைத்தது, யார் என சலிப்போடு பார்த்தால், சூர்யா தான் அழைத்திருந்தாள். "என்ன சூர்யா?" என சலிப்போடு கேட்டாள்.


    "ம்ம்... மேடம் எப்போ தான் ப்ரீயா இருப்பீங்க? மதியம் போட்டா ஆபிஸ் டென்ஷன். இப்போ போட்டாலும் டென்ஷன்னா? ப்ரி நீ வர வர ஓவரா தான் டி பண்ணுற. இரு உன் அண்ணனையும் கூப்பிட்டு கான்பரன்ஸ் கால் போடுறேன்" என விடாமல் பேச, ஏற்கனவே மன உளைச்சலில் இருந்தவள், "ஏய்... சூரி சும்மா இரு... நான்ல இப்ப அண்ணன்ட்ட பேசுற மூட்ல இல்ல" என எரிந்து விழுந்தாள்.


    "ஹேய்... ப்ரி... என்ன ஆச்சு? வாட் ஹாப்பண்ட்? ஏன் இப்படி பாக் அடிக்குற?" என அவளின் மனக் கசப்பை உணர்ந்து, அதைக் கேட்டாள் சூர்யா.


    ஆனால், ப்ரியாவோ "ஒண்ணுமில்லை சூரி... நான் உனக்கு அப்புறமா... நாளைக்கு பேசவா? எனக்கு கொஞ்சம் தல வலிக்குது" என சாக்கு சொல்லி தப்பித்தாள்.


    சூர்யாவும் அவள் சொன்னதை உண்மை என நம்பி அலைபேசியை அணைக்கவில்லை. ஏதோ உளைச்சலில் இருப்பவளை மேலும், மேலும் துருவி தானும், அவளைக் கோபப்படுத்த வேண்டாம் என தான் வைத்தாள். ஆனால் வைத்த அடுத்த நிமிடம், உதயாவிற்கு அழைத்து சொன்னாள். ஏனெனில், ப்ரியாவிடம் எப்படி பேசினால், உண்மையை வரவழைக்க முடியும் என்ற நுட்பம் உதயாவிற்கு மட்டுமே கை வந்த கலை.


    அவளும் விஷயத்தைக் கேட்டு, "விடு சூரி, அவளுக்கு ஏதாவது ஆபீஸ் டென்ஷன்னா இருக்கும். நான் நாளைக்கு கேட்குறேன். நீ டென்ஷன் ஆகாத" என ஆறுதல் கூறியவளிடம், "க்கும்... உங்க அண்ணன்ன விடவா என்ன யாரும் டென்ஷன் பண்ணப் போறாங்க? நல்ல குடும்பத்தப் பார்த்து, நல்லா லவ் பண்ணேன்டி..." என பெருமூச்சு விட்டு, சூர்யா அலுத்துக் கொண்டாள்.


    மேலும், "எங்க அண்ணன்ன பாரு, உன்ன லவ் பண்ணார், அவர் தங்கச்சி இருந்தாலும், பரவாயில்லன்னு உன்ன கட்டிக்கிட்டார். உங்க அண்ணனும் தான் இருக்கானே..." என மீண்டும் பாட்டு பாடினாள்.
    "ஹும்... அதான உனக்கு எங்க அண்ணன்னப் பற்றி குறை சொல்லலேன்னா... தூக்கம் வராதே! சரி சரி போய் தூங்கு டி, அத்த கூப்பிடுறாங்க" என அலைபேசியை வைக்க போனவளை, "ஏய்... அத்தையா? உங்க அத்தான்னா...? பொய் சொல்றியா கள்ளி? போ டி போ... நீயாவது வாழ்க்கைய வாழு" என பெருமூச்சு விட்டவளிடம், மேற்கொண்டு பேசி நேரத்தை செலவழிக்காமல், பேசியை அணைத்து விட்டு, தன் கணவன் ரத்தினத்திடம் சென்றாள்.



    அவனும் "என்ன முப்பெரும் தேவில ஒன்னு, உனக்கு சாபம் கொடுக்குதா?" என கேட்டான். அவளும் சூர்யா தன் அண்ணனைப் பற்றி சொன்னதை, முக்கியமாய் அவன் தன் கணவனிடம் விஷயத்தை கூற, "ஆமா, எல்லோரும் என்ன மாதிரி நல்லவங்களா இருப்பாங்களா? இப்பவாது இந்த மாமன்ன பற்றி தெரிஞ்சுக்கோ" என புருவத்தை தூக்கி கூறியவனின் தலையில் கொட்டினாள் உதயா.


    அதன் பின்னர் அங்கே பேச்சு சத்தம் இருந்தது என நாம் எதிர்பார்ப்பது தவறு தான்.


    இதயம் நழுவும்............
     
  5. sara dhiya

    sara dhiya New Member

    Joined:
    Aug 1, 2015
    Messages:
    101
    Likes Received:
    132
    Trophy Points:
    0
    Gender:
    Female
    hai frnds......

    next half potuten frnds...

    seekirame next ud vanthirum....

    so athu varai neenga itha padichitu cmnts podanum... ena kettu kolkiren...

     
  6. k@ni

    k@ni New Member

    Joined:
    Jan 11, 2016
    Messages:
    4
    Likes Received:
    6
    Trophy Points:
    0
    Gender:
    Female
    Occupation:
    preparing for govt exams
    Location:
    chennai
    Eagerly waiting to read the next ud....plzzz upload fast :)
     
    2 people like this.
  7. sarithrapriya

    sarithrapriya New Member

    Joined:
    Jan 17, 2016
    Messages:
    3
    Likes Received:
    3
    Trophy Points:
    3
    Gender:
    Female
    next ud sikiram podunga plsss
     
    2 people like this.
  8. sara dhiya

    sara dhiya New Member

    Joined:
    Aug 1, 2015
    Messages:
    101
    Likes Received:
    132
    Trophy Points:
    0
    Gender:
    Female
    Thanks kani en lap service kodytiruken. Athan late oru 4 days kula potiduren pa
     
    2 people like this.
  9. sara dhiya

    sara dhiya New Member

    Joined:
    Aug 1, 2015
    Messages:
    101
    Likes Received:
    132
    Trophy Points:
    0
    Gender:
    Female
    frnds....

    am so depressed with my personal pbms... and my grandma was expired... itha eluda kooda ennala mudiala... avangaloda last minutesa pakkathula irunthu parthathala... ennala athula irunthu velila vara mudila...

    so ippodaiku ennala ethulayum concenterate panna mudila frnds.... etha pathiyum yosikka mudila... so sorry.... itha thavira unga kita enna solanu enaku therila


    sorry romba delay panrathuku.... enakaka wt pannuvenganu inform pana vanthen frnds... eppadiyum stry mudichitu fulla kooda potiduren frnds... ana delay aakum sorry frnds...
     
    2 people like this.
  10. naga ganesan

    naga ganesan New Member

    Joined:
    Feb 19, 2016
    Messages:
    9
    Likes Received:
    8
    Trophy Points:
    3
    Gender:
    Female
    take care dhiya. we can wait dont worry.
     

Share This Page