Forum For Novel Reviews And Discussions Added

Discussion in 'Novels Review and Discussion' started by webadmin, Jun 9, 2015.

  1. sujivsp

    sujivsp New Member

    Joined:
    Dec 22, 2014
    Messages:
    970
    Likes Received:
    284
    Trophy Points:
    0
    Gender:
    Female
    நிஜமாகவே ரொம்ப அழகான கதை ரம்ஸ் க்கா
     
  2. andavanbaskar

    andavanbaskar New Member

    Joined:
    Aug 1, 2017
    Messages:
    1
    Likes Received:
    1
    Trophy Points:
    1
    Gender:
    Male
  3. Meena Kumari

    Meena Kumari Member

    Joined:
    Feb 1, 2016
    Messages:
    26
    Likes Received:
    33
    Trophy Points:
    13
    Gender:
    Female
    WhatsApp Image 2017-07-06 at 3.31.10 PM.jpeg அவன் நான் பயணம் - நிவேதா

    நாயகன் - மாறன்

    நாயகி - சக்தி

    காதலுடன் கூடிய நகைச்சுவை பயணம்... மாறன் சான்ஸ் இல்லைடா உன்னை மாதிரி ஒருத்தன் இனி வர முடியுமா சந்தேகம் தான்....

    நிவி ரொம்ப அருமையான ஒரு பயணம் இந்த மாறன் கூட குடுத்து இருக்காங்க... மாறன் கூட பயணம் செய்யும் போது நாம ஏதும் பேசவே முடியாது ( ஏன்னு கேக்குறீங்களா எங்க அந்த பய நம்மள பேச விட்டா தானே.... அவன் மட்டும் தான் பேசுவான் பாருங்க ஆனா கேட்டு கிட்டே இருக்கலாம்)

    சக்தி உன்னை பத்தி என்ன சொல்ல மாறன்க்கு ஏத்த ஜோடி நீ தான் டா செல்லம்.... அவன் செய்ற லூட்டி அவன் பேசுறதுக்கு எல்லாம் நீ கொடுக்குற ரியாக்ஷன் நீ சொல்லற பதில் எல்லாம் சான்ஸ் லெஸ் பேபி....

    மாறன் பொண்ணு பார்க்கும் போது பண்ணும் காமெடி இருக்கே செம... உங்க சின்ன வயசு கதை எல்லாம் சூப்பர்... உங்க காதல் கதை அப்புறம் கல்யாண வாழ்க்கை எல்லாம் மாறன் சொல்லுற விதம் அருமை...

    மாறா நீ ஹாஸ்பிட்டல்ல அடிக்குற லூட்டி இருக்கே சிரிச்சு சிரிச்சு முடியலடா செம போ....


    தன் மனைவியை (சக்தி) பார்க்க போகும் மாறனின் பயணம் எப்படி இருக்கும்னு நீங்க படிச்சு பார்த்து சொல்லுங்க மக்களே....

    மொத்ததில் அவன் நான் பயணம் ஒரு இனிமையான சுகமான பயணம்....

    மீண்டும் இப்படி ஒரு பயணத்தை நிவி கொடுக்க வேண்டும்....
     
  4. S.B.Nivetha

    S.B.Nivetha Well-Known Member Staff Member

    Joined:
    Jun 19, 2017
    Messages:
    771
    Likes Received:
    273
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Thank u so much krithi
     
  5. Meena Kumari

    Meena Kumari Member

    Joined:
    Feb 1, 2016
    Messages:
    26
    Likes Received:
    33
    Trophy Points:
    13
    Gender:
    Female

    Machi thanks ellam vendam... Sikiram ma maaran second part ooda vaa
     
    saravanakumari and selvi like this.
  6. Meena Kumari

    Meena Kumari Member

    Joined:
    Feb 1, 2016
    Messages:
    26
    Likes Received:
    33
    Trophy Points:
    13
    Gender:
    Female
    கண்ணனின் சீதை

    நாயகன் : கண்ணன்
    நாயகி : சீதா


    லதா பைஜு அடுத்த ஒரு அருமையான கதை.... கதை டைட்டில கூட ரொம்ப அழகா ட்விஸ்ட் வச்சு இருக்கீங்க.... கதை கருவும் அதை நீங்க சொல்லிய விதம் எல்லாம் சூப்பர்.....

    புரிதல் ரொம்ப அவசியம் அது நட்பாக இருந்தாலும் சரி காதலாக இருந்தாலும் சரி... இதை ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க....

    ராம் கோபத்தால் தான் சொன்ன ஒரு வார்த்தை அந்த வார்த்தை அவனுடைய வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் என்ன என்பதை அழகா சொல்லிருக்கீங்க...

    சீதா அழகான அமைதியானா (அப்பா அம்மா மாமியார் முன்னிலையில் மட்டும்) கண்ணனிடம் குறும்புகார பெண்... சீதா பாடும் போது நம்ம கண்ணன் என்ட்ரி குடுத்தது செம....

    சீதா கண்ணனோட கல்யானம் பெரியவர்கள் பார்த்து நடத்தி வைத்தது... கண்ணன் தன் தாயின் ஆசைக்காக சீதாவை மணக்க சம்மதம் சொல்லுகிறான்... சீதா அவனை பிடிச்சு கல்யாணத்திற்கு ஓகே சொல்றா...

    கண்ணன் என்ற பெயரில் சீதா குடும்பத்துக்கு அறிமுகம் ஆகி கல்யாண ஏற்பாடு ஆகும் போது ராம் கிருஷ்ணா அது தான் உண்மையான பெயர்னு தெரியவருவது செம....

    நண்பர்களாக தங்கள் வாழ்கையை ஆரம்பிக்கும் கண்ணன் சீதா வாழ்வில் மானசா வருகிறாள்... யார் இந்த மானசா கண்ணனிற்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்... மானு பத்தி சீதாக்கு தெரிஞ்சதுக்கு அப்புறம் சீதாவோட நிலை என்னனு நீங்க சொல்றது சூப்பர்...

    எதனால் கண்ணன் திருமணம் செய்யாமல் இருந்தான்... சீதாக்கு அந்த உண்மை தெரியவரும் போது என்ன முடிவு எடுத்தா அப்படின்னு ரெம்ப அருமையா சொல்லிருக்கீங்க...

    படிக்கும் வயதில் வரும் காதல் அதை ஏற்காத பெண்ணை பழி வாங்க ராம் குமார் செய்யும் தவறு அதனால மானசா எடுத்த முடிவு அது எப்படி ராம் கிருஷ்ணா வாழ்க்கையை பாதிச்சுருக்குனு கதைல போய் படிங்க மக்களே.....

    கண்ணனின் சீதையா ? ராமனின் சீதையா ? படிச்சு பார்த்து தெரிஞ்சிக்கோங்க நட்பூஸ்....
     
    saravanakumari, selvi and S.B.Nivetha like this.
  7. selvi

    selvi Well-Known Member Manager

    Joined:
    Dec 5, 2014
    Messages:
    6,502
    Likes Received:
    2,493
    Trophy Points:
    113
    Gender:
    Female
    இவள் ஒரு புதுக்கவிதை

    ரமணிசந்திரன்

    பெரியவர்கள் சேர்ந்து நிச்சயத்த திருமணத்தை திருமணத்தின் முந்தைய நாள் மணப் பெண்ணான மாதங்கியை நிறுத்த சொல்கிறான் மணமகன் யுகேந்திரன்... காரணம் யுகேந்திரனின் காதல்....

    பெற்றோரின் நலனுக்காக யுகேந்திரனின் கோரிக்கையை மறுக்கும் மாதங்கியும் தந்தையின் உயிர் மிரட்டலுக்கு பணிந்த யுகேந்திரனும் மணம் முடிக்கின்றனர் ...

    இருமணமும் இணையாத திருமண வாழ்வில் காதலியை கைபிடிக்க முடியாததற்கு மனைவியையே குற்றவாளி ஆக்கி வார்த்தையால் (கையாலும்) காயப்படுத்தும் யுகேந்திரன்.....

    எந்த தவறும் செய்யாமல் கணவனிடமும் காயப்பட்டு .... மகனுக்கு பிடிக்காத மனைவி என தொட்டதெற்கெல்லாம் குறைச் சொல்லும் மாமியார் நாத்தனார் பேச்சுக்களையும் கேட்டு அவ் வீட்டில் தனி தீவாய் வாழும் மாதங்கிக்கு தோழனாகிறான் மைத்துனன் யோகேந்திரன்...

    தன் மணவாழ்க்கை பற்றி தெரிந்தால் பெற்றோர் மனம் வருந்தும் என்றும் பிறந்த வீட்டிற்கு சென்றால் இரு தங்கைகளுக்கும் திருமணம் செய்வதில் சிக்கல் வரும் என்றும் கணவன் வீட்டில் இருக்கும் மாதங்கி ....

    நாத்தனார் ஊர்வசியின் திருமணம் முடிந்து அவள் வாழ்க்கையில் பிரச்சனை வரும் போது தன் வீட்டிற்க்கு வந்த பெண்ணிற்கு செய்த பாவம் தான் காரணம் என்று வருந்தி பரிகாரம் செய்ய மாதங்கியின் விருப்பத்தை கேட்கும் கணவன் குடும்பத்திற்கு தன் கணவன் தன் கண்ணில் படாமல் இருப்பதே பரிகாரம் என்கிறாள்....

    பரிகாரம் செய்யும் பொருட்டு தொழிலை காரணம் வைத்து பிரிந்து செல்கிறான் யுகேந்திரன்....

    கணவன் பிரிந்து சென்ற பிறகு அவனின் மீதான தன் காதலை உணரும் மாதங்கி .....

    எதற்கும் தயாராய் இருக்கும் காதலிக்கும் நன்மனம் கொண்ட மனைவிக்கும் உள்ள வித்தியாசம் உணர்ந்து மனைவியின் விருப்பத்திற்காக பிரிந்து செல்லும் யுகேந்திரனும் தங்கள் வாழ்வில் எப்படி இணைகிறார்கள் என்பதே இவள் ஒரு புதுக்கவிதை...

    குட்ட குட்ட குனியாமல் புகுந்த வீட்டினரின் ஒவ்வொரு செய்கைக்கும் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து புதுக்கவிதையாய் மிளிர்கிறாள் மாதங்கி .....
     
    Sangee26 and saravanakumari like this.
  8. selvi

    selvi Well-Known Member Manager

    Joined:
    Dec 5, 2014
    Messages:
    6,502
    Likes Received:
    2,493
    Trophy Points:
    113
    Gender:
    Female
    நல்ல விமர்சனம்...
     
    Meena Kumari and saravanakumari like this.
  9. selvi

    selvi Well-Known Member Manager

    Joined:
    Dec 5, 2014
    Messages:
    6,502
    Likes Received:
    2,493
    Trophy Points:
    113
    Gender:
    Female
    படிக்க தூண்டும் விமர்சனம்
     
    Meena Kumari and saravanakumari like this.
  10. பார்த்திபன்

    பார்த்திபன் New Member

    Joined:
    Aug 16, 2017
    Messages:
    1
    Likes Received:
    1
    Trophy Points:
    3
    Gender:
    Male
    என்பார்வையில் பொன்னியின் செல்வர்

    பொன்னியின் செல்வன் இது புதினம் மட்டும் அல்ல பொக்கிஷம், அடுத்த தலைமுறையை ஈர்க்குமா என்ற கேள்வியை சந்திக்காத எழுத்தாளர் இருக்க இயலாது ஒரு வேளை கல்கி ஐயனும் இந்த கேள்வியை சந்தித்து இருக்கலாம் அதற்கு அவர் தன் எழுத்தால் அல்ல உணர்வால் வடித்த காவியமே பொன்னியின் செல்வனாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை,
    அடுத்த தலைமுறை அல்ல பல தலைமுறை பேசி சோழத்தின் மீது காதல் கொள்ள ஈர்க்கப்பட அடிப்படையாக அமைய போகிறது என்று சொல்லாம நடைமுறை படுத்திட்டார் பொன்னியின் செல்வன் வாயிலாக,
    அருள்மொழி வர்மர், குந்தவை தேவி, வந்தியர், பழுவேட்டையர், அவர்கள் வாழ்ந்த சூழலை நாம் நேரில் காணவில்லை, எழுத்து வசீகரித்தின் வழியாக அக்காலத்தின் ஒரு பகுதிக்கு நம்மை கை பிடித்து அழைத்து சென்றவர் கல்கி ஐயன், அவர்கள் காதல், கோபம், மன திறன், வியூகம், இதை நாம் நேரில் காணவில்லை ஆனால் அதை உணர்த்தினார் எழுத்தில், பொன்னியின் செல்வர் வானதி அம்மையாரை காதலிக்கையில் உண்மையில் இப்படி பேசி இருப்பாறா என தெரியவில்லை ( உதாரணமாக குளக்கறையில் இருவரும் பேசுவது) வந்தியர் குந்தவை தேவியாரை இவ்வளவு நேசித்தாரா விளங்கவில்லை ஆனால் அந்த காதலை அன்னத்தின் இறகையும் அன்னிச்சத்தின் மென்னையை போலவும், புனிதமாக நம் பார்வைக்கு தந்தவர் கல்கி ஐயன், காதலின் மீதே ஒரு பக்தியை ஏற்படுத்திய எழுத்து நடை அது, பொதுவாக ஒரு புக்க படிச்சு முடிக்கும்போது ஒரு விசயத்த தெரிஞ்சுகிட்டோம்னு மூடுவோம் ஆனா பொன்னியின் செல்வன் தான் மூடிய பின் தேடலை உருவாக்கியது, பொன்னியின் செல்வன் முடிவு அல்ல சோழ தேடலின் ஆரம்ப புள்ளி, ,,​
     
    S.B.Nivetha likes this.

Share This Page