Gomathy Arun's Enai Konjum Sarale!! / எனை கொஞ்சும் சாரலே!!

Discussion in 'Gomathy Arun Novels' started by Tamilsurabi, Jun 4, 2019.

 1. gomathy.arun

  gomathy.arun Well-Known Member

  Joined:
  Dec 5, 2014
  Messages:
  456
  Likes Received:
  385
  Trophy Points:
  63
  Gender:
  Female
  ஒருவாறு விருந்தினர்கள் வருகை குறையவும் சித்தார்த்தன் மற்றும் ஊர்மிளாவை சாப்பிட அழைத்தார் சாரதா. அங்கே பல வகை உணவுகள் தானே எடுத்து சாப்பிடும் முறையில்(பஃபே) வைக்கப் பட்டிருந்தது.

  சித்தார்த்தனும் ஊர்மிளாவும் கீழே இறங்கியதும் வசந்தனும் மகிஷாவும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டனர். சின்ன சின்ன கிண்டல்களுடன் உணவை உட்கொள்ள ஆரம்பித்தனர்.

  சித்தார்த்தனும் வசந்தனும் உணவை எடுத்துக் கொண்டிருந்த போது சித்தார்த்தன் இருப்பதை கவனிக்காமல் ஒருவன், “நல்லவேளை தாலி கட்டியதுக்கு முன் விஷயம் தெரிந்தது” என்று கூற,

  சித்தார்த்தனை தொழிலில் ஜெய்க்க முடியாத கடுப்பிலும் கோபத்திலும் இருந்த மற்றவன் சித்தார்த்தன் அங்கே இருப்பதை பார்த்ததும் அவன் காதில் நன்றாக விழும்படி நக்கலும் கிண்டலும் நிறைந்த குரலில், “கொஞ்சம் யோசிச்சு பாரு.. தாலி கட்டி பஸ்ட் நைட் முடிந்த பிறகு உண்மை தெரிந்து இருந்தால்............” என்று கூறி வாய்விட்டு நக்கலாக சிரிக்க, அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் சித்தார்த்தன் இறுக்கத்துடன் அகன்றான்.

  மகிஷாவுடன் பேசியபடி சித்தார்த்தனை பார்த்துக் கொண்டிருந்த ஊர்மிளா அவன் முகம் சரியில்லாததை பார்த்து கையில் இருந்த தட்டை கீழே வைத்துவிட்டு கையை மெல்லிழைத்தாளில் துடைத்தபடி அவன் அருகே விரைந்தாள்.

  சித்தார்த்தனின் முகத்தை பார்த்த மகிஷா நண்பன் அருகே செல்வதா இல்லை கணவன் மனைவிக்கு தனிமை கொடுத்து தள்ளியே நிற்பதா என்று குழம்பினாள். சற்று தள்ளி இருந்த வசந்தனை பார்த்ததும் குழப்பம் நீங்கியவளாக அவன் அருகே சென்றாள்.

  ஊர்மிளா சித்தார்த்தனிடம், “என்னாச்சு?”

  அவன் அடக்கப்பட்ட கோபத்துடனும் இறுக்கத்துடனும், “ஒண்ணுமில்லை”

  அவள் அவன் கையை பற்றியபடி, “என்னாச்சு சொல்லுங்க”

  “ஜஸ்ட் லீவ் மீ அலோன்” என்று குரலை உயர்த்தாமல் கத்தியவன் அவள் கையை உதறிவிட்டு சென்றான்.

  அவனது செயலில் மனம் வருந்தினாலும் சட்டென்று தன்னை மீட்டவள் வசந்தனிடம் சென்றாள்.  ஊர்மிளா, “என்னாச்சு ணா?”

  “அது” என்று அவன் தயங்க,

  ஊர்மிளா, “எதுவா இருந்தாலும் சொல்லுங்க ணா.. என்னனு தெரிந்தால் தான் அவரை சமாதானம் செய்ய முடியும்”

  வசந்தன் நடந்ததை கூறவும் ஊர்மிளா அமைதியான குரலில், “யாரு பேசினது?” என்று வினவினாள்.

  வசந்தன், “எதுக்கு மா?”

  “சொலுங்க ணா”

  அவள் குரலில் இருந்து அவளது மனநிலையை சரியாக கணிக்க முடியவில்லை என்றாலும் அவன், “பிரச்சனை வேணாம் ஊர்மி” என்றான்.

  “யாரு னு கேட்டேன்” என்று அழுத்தத்துடன் கேட்ட ஊர்மிளா புதிதாக தெரிந்தாள் அவனுக்கு.

  அவன் யார் என்று சுட்டி காட்டியதும் அவள் அவர்களை நோக்கி செல்லவும் வசந்தனும் மகிஷவும் சிறு பதற்றத்துடன் அவளை தொடர்ந்தனர்.

  ஊர்மிளா, “எக்ஸ்கியூஸ் மீ” என்றதும் அந்த இருவரும் அவள் பக்கம் திரும்பினர்.

  “நீங்க ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ்ஸா?”

  “ஆமா”

  ஊர்மிளா தவறாக பேசியவன் பக்கம் திரும்பி, “உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா?”

  “ஹ்ம்ம்” என்று யோசனையுடன் தலையை ஆட்டினான்.

  “எப்போ அச்சு?”

  “எதுக்கு கேட்கிறீங்க?”

  “காரணமா தான்”

  “அதான் என்ன காரணம்?” என்றவனின் குரலில் சிறு எரிச்சலும் கோபமும் இருந்தது.

  “எப்போ ஆச்சு சொல்லுங்க காரணத்தை சொல்றேன்”

  “ஆறு மாசம் ஆச்சு”

  “ஓ! இப்போ உங்க மனைவி இவருடைய மனைவி னு தெரிந்தால் என்ன செய்வீங்க?”

  “ஏய்! வார்த்தையை அளந்து பேசு” என்று கோபத்துடன் கத்த விருந்தினர் சிலர் அங்கே கூடினர்.

  ஊர்மிளாவோ அசராமல் கைகளை கட்டிக் கொண்டு நிதானமாக அழுத்தமான குரலில், “அதை நீங்களும் செய்யலாமே!” என்றாள்.

  அப்பொழுது தான் அவனுக்கு அவளது நோக்கம் புரிந்தது. அவன், “நான் இல்லாததை சொல்லலையே!” என்றான் தோள்களை குலுக்கியபடி.

  “எது இல்லாதது? என்ன நடந்தது னு உங்களுக்கு தெரியுமா? சும்மா வாய்க்கு வந்ததை பேசக் கூடாது.. நீங்க ஜஸ்ட் லைக் தட் சில வார்த்தைகளை வீசிட்டு போய்டுவீங்க.. ஆனா அது அந்த நபரை எவ்வளவு பாதிக்கும் என்பதை நீங்க உணர்வது இல்லை.. சில நேரம் நீங்க பேசும் வார்த்தைகள் அவர்களை வாழ்க்கை முழுவதும் கூட துரத்தலாம்.. ஒரு நிமிஷம் நீங்க யோசிக்காமல் பேசும் வார்த்தைகளால் அந்த நபர் சிலுவையை சுமக்க நேரலாம்.. நாவடக்கம் என்பது ரொம்ப முக்கியம்” என்றவள் இருவரின் முகத்தையும் ஆராய்ந்தாள். முதலில் பேசியவனின் முகத்தில் வருத்தம் தெரிந்தது ஆனால் தவறாக பேசியவனின் முகத்தில் நகைப்புடன் கூடிய அலட்சியமும் தெனாவெட்டும் தான் இருந்தது.
   
  Rabina likes this.
 2. gomathy.arun

  gomathy.arun Well-Known Member

  Joined:
  Dec 5, 2014
  Messages:
  456
  Likes Received:
  385
  Trophy Points:
  63
  Gender:
  Female
  முதலில் பேசியவன் உண்மையான வருத்தத்துடன், “சாரி மேடம்.. அங்கே சித்தார்த் சார் இருந்ததை நான் பார்க்கலை”

  “நீங்க பேசியது கூட பரவா இல்லை சார் ஆனால் இவர்!”
  என்றபடி மற்றவனை பார்த்தாள்.

  அப்பொழுதும் அவன் முகத்தில் மாற்றம் இல்லை.

  அவனை தீர்க்கமாக பார்த்தவள், “ஸோ.. நீங்க வேணும்னே அப்படி பேசி இருக்கிறீங்க”

  அவன் பதில் கூறாது இருக்கவும் அவள் அவனை தீர்க்கமாக பார்த்தாள்.

  அவனோ அலட்சியமும் திமிருமாக, “உன்னோட லெவல் என்னனு எனக்கு தெரியும்.. என் ஸ்டேடஸ்க்கு உன்னுடன் பேசுவதே அதிகம்! இதில் நீ கேட்கும் கேள்விக்கு பதில் வேற சொல்லனுமா!”

  “எனக்கும் உங்களை போன்ற ஆளுடன் பேச துளி கூட விருப்பம் இல்லை தான்................”

  “ஏய்! என்ன திமிரா!” என்று அவன் கோபத்துடன் கத்த,

  அவளோ மென்னகையுடன், “அது எனக்கில்லை”

  “அப்போ எனக்கு இருக்குதுன்னு சொல்றியா?”

  “நான் எதையும் சொல்லலையே!”

  அவன் கோபத்துடன் குரலை உயர்த்தி, “ஆமா நான் சித்தார்த்தை பார்த்துட்டு தான் பேசினேன்.. ஆனா நான் ஒன்றும் இல்லாததை சொல்லலையே!” என்று வெகு அலட்சியத்துடன் கூறியவனின் பார்வை ‘அதுக்கு இப்போ என்னங்கிற! உன்னால் ஒன்றும் செய்ய முடியாது’ என்று சொல்லாமல் சொன்னது.

  ஊர்மிளா மகிஷா பக்கம் திரும்பி மெல்லிய குரலில், “உனக்கு இவனை தெரியுமா?”

  மகிஷா எரிச்சலும் கோபமுமாக, “விக்னேஷ்.. சித்து கூட தொழிலில் போட்டிபோட்டு எப்பொழுதும் தோற்பவன்”

  “ஓ” என்றவள் அவன் பக்கம் திரும்பி அவன் காட்டிய அலட்சியத்துடன், “ஸோ தொழிலில் ஜெய்க்க முடியாமல் இப்படி கோழை போல் நடந்துக்கிறீங்க”

  “ஏய் நீ அதிகமா பேசுற” என்று விரலை நீட்டி எச்சரித்தபடி ஒரு அடி முன்னால் வர,

  வசந்தன் ஊர்மிளாவை மறித்தபடி, “மிஸ்டர் நீங்க பேசியதை விட ஊர்மிளா அதிகமா பேசிடலை”

  “நீ யாரு டா!” என்றவன் பின் நக்கலுடன், “ஒருவேளை அந்த கௌதமனை போலா நீயும்! என்ன புரியலையா! இவளோட காதலனோ இல்லை கணவனோ னு கேட்டேன்”

  “ஏய்” என்று கோபத்துடன் வசந்தன் அவனது சட்டையை பிடிக்க, அப்பொழுது சித்தார்த்தன் மகிஷா வசந்தன் மற்றும் ஊர்மிளாவின் பெற்றோர்களும் அசோக்கும் வந்தனர்.

  பெரியவர்கள், “என்னாச்சு?” என்று சிறு பதற்றத்துடன் வினவ,

  அசோக், “என்னாச்சு வசந்த்” என்றபடி அவன் அருகே வந்தான்.

  மகிஷா, “மைன்ட் யுவர் வர்ட்ஸ் விக்னேஷ்.. இவர் என்னை கல்யாணம் செய்துக்க போறவர்”

  விக்னேஷ் வசந்தனின் கையை எடுத்துவிட முயற்சிக்க, வசந்தனும் விழாவில் பிரச்சனை வேண்டாம் என்ற எண்ணத்துடன் கையை விலக்கினான்.

  “ரிலாக்ஸ் மகி” என்ற ஊர்மிளா வசந்தனிடம், “விடுங்க அண்ணா.. இவர் எண்ணம் இவரை போல் கீழ்தனமானதா தானே இருக்கும்..”

  அவன், “ஏய்” என்று மீண்டும் எகிற,

  அப்பொழுது அங்கே வந்த சித்தார்த்தன், “இங்கே என்ன நடக்குது?” என்று வினவினான்.

  விக்னேஷ் நக்கலும் எகத்தாளமும் நிறைந்த குரலில், “உண்மையை சொன்னதிற்கு உன் மிஸ்சஸ்க்கு கோபம் வருது” என்றவன் அடங்காமல், “ஆமா இவளாவது உனக்கு மட்டும் சொந்தமானவளா?”

  ஒரே ஒரு நொடி தான் சித்தார்த்தனின் முகம் கருத்தது. அடுத்த நொடியே நிமிர்ந்து நின்றவன், “மரியாதை கொடுத்து பேசு.. என் மனைவியை அவ இவ னு பேசின பல்லை பேத்திருவேன்” என்றவன், “அண்ட் என்னை பற்றி தெரிந்து நீ என்ன செய்ய போற? என்னை பற்றி பயோகிராபி எழுதப் போறியா!” என்றான் நக்கலும் அலட்சியமும் நிறைந்த குரலில்.

  “நீ ஒன்றும் அந்த அளவிற்கு பெரிய ஆள் இல்லை”

  சித்தார்த்தன் மென்னகையுடன், “தன்க் யூ” என்று கூற,

  கூட்டத்தில் ஒருவர், “சித்தார்த்தே பெரிய ஆள் இல்லை னா அப்போ நீ!” என்று கூற, வேறொருவர், “இவன்லாம் பெரிய மனுஷன் சொன்னால் அந்த வார்த்தைக்கு மதிப்பில்லை” என்றார்.

  சித்தார்த்தன் மென்னகையுடன், “ஓகே பிரெண்ட்ஸ்.. பார்ட்டி கண்டின்யு பண்ணலாமே” என்றான்.

  சித்தார்த்தன் மென்னகையுடன் இருந்தாலும் அவனுள் எரிமலை வெடிக்க தயாராக இருப்பதை அவனை சேர்ந்தவர்களுக்கு புரிந்தது.


  “ஒரு நிமிஷம்” என்ற ஊர்மிளா சித்தார்த்தின் கையை பற்றியபடி தீர்க்கமான பார்வையை விக்னேஷிடம் செலுத்தி அழுத்தமான குரலில், “நீங்க கிண்டல் செய்ற அளவுக்கு இங்கே எதுவும் நடக்கவில்லை.. இன்பாக்ட் பாராட்டுற மாதிரியான விஷயம் தான் நடந்து இருக்குது.. சவிதா கௌதம் கல்யாணம் செய்ததும் சுனாமியில் பிரிஞ்சுட்டாங்க.. நண்பனுக்காக அவளை விட்டு செல்லும் முடிவை கௌதம் எடுத்தார்.. ஆனால் சித்தார்த் அம்னிஷியாவில் பாதிக்கப்பட்ட சவிதாவை ஏமாற்றாமல் நண்பனுடன் சேர்த்து வச்சிட்டு அவரை விரும்பும் என்னை பெற்றோரின் சம்மதத்துடன் ஸ்டேடஸ் பார்க்காமல் கல்யாணம் செய்துகிட்டார்.. என் சித்துவின் உயரத்திற்கு பக்கத்தில் கூட நீங்க நெருங்க முடியாது.. நான் சொல்லும் உயரம் குணம்.. நீங்க நினைக்கும் உயரத்தை கருத்தில் கொண்டாலும் என் சித்துவின் உயரம் பெரிது தான்..

  ஒரு ஆண் மகனுக்கு அழகு நேர் வழியில் ஜெய்ப்பது.. முடிந்தால் என் சித்துவை தொழிலில் நேர் வழியிலோ (சிறு நக்கலுடன்)உங்கள் வழியிலோ ஜெய்த்து காட்டுங்க.. நீங்க நினைப்பது போல் உங்கள் பேச்சினால் துவண்டு தொழிலில் தோல்வியை தழுவுபவர் இல்லை என் சித்து..” என்றாள்.

  கூட்டத்தில் ஒருவர், “உங்களுக்கு தான் விக்னேஷ் பற்றி தெரியுமே சித்தார்த்! அப்பறம் எதற்கு உங்கள் எனர்ஜியை வேஸ்ட் பண்ணிட்டு இருக்கிறீங்க?” என்று கூற,

  இன்னொருவர், “மிசஸ் சித்தார்த் இது உங்கள் விழா.. தேவை இல்லாததை விலகிட்டு சந்தோஷமா என்ஜாய் பண்ணுங்க” என்று கூற,

  ஒரு நடுத்தர வயதில் இருக்கும் பெண்மணி, “மிஸ்டர் சித்தார்த் இப்படி உங்களை தாங்கும் அழகான மனைவி பக்கத்தில் இருக்கும் போது தேவை இல்லாத பேச்சுக்கள் உங்கள் காதையே எட்ட கூடாது” என்று புன்னகையுடன் கூற,

  இன்னொரு பெண்மணி, “இப்படி ஒரு மனைவி கிடைக்க யூ ஆர் லக்கி சித்தார்த்” என்று கூறினார்.

  சித்தார்த்தன் ஊர்மிளாவை பார்க்க, அவள் சிறு வெக்கத்துடன் கையை விலக்க எத்தனிக்க அதை அனுமதிக்காத சித்தார்த்தனின் கையோ அவள் கையை இறுக்கமாக பற்றியது.

  அவன் இறுக்கமாக பற்றியதில் இருந்தே அவன் மனதின் அழுத்தம் புரிய அவளும் இறுக்கமாக அவன் கையை பற்றி ‘நான் இருக்கிறேன்’ என்பது போல் கண்களை மூடி திறந்தாள். அந்த ஒற்றை செயலில் அவனது மனம் சற்று லேசாக, பிடியை சற்று தளர்த்தினான்.

  இப்படி பேச்சு திசை மாற கூட்டம் கலைந்து விழா மீண்டும் களைகட்டியது.

  பெரியவர்கள் நிம்மதியடன் சித்தார்த்தன் மற்றும் ஊர்மிளாவுடன் அகன்றனர்.

  அசோக் வசந்தன் மற்றும் மகிஷா விக்னேஷை நன்றாக முறைத்துவிட்டே சென்றனர்.

  விக்னேஷ் கடும் கோபத்துடன் கையில் இருந்த கண்ணாடி குவளையை கீழே எறிந்தான்.

  அவனுடன் இருந்தவன், “நீ பேசியது சரியில்லை விக்கி”

  “மூடிட்டு உன் வேலையை மட்டும் பாரு” என்று கத்தியவன் வேகமாக வெளியேறினான்.
   
  Rabina likes this.
 3. gomathy.arun

  gomathy.arun Well-Known Member

  Joined:
  Dec 5, 2014
  Messages:
  456
  Likes Received:
  385
  Trophy Points:
  63
  Gender:
  Female
  கொஞ்சல் 10
  [​IMG]
  விழா முடிந்து வீட்டிற்கு வந்ததும் ஊர்மிளாவின் அன்னை சாரதாவிடம், “ரெண்டு பேருக்கும் சுத்திப் போட்டுருங்க” என்றதும்,

  மெல்லிய புன்னகையுடன், “கண்டிப்பா” என்ற சாரதா சொன்னது போல் இருவருக்கும் சுற்றி போட்டார்.

  அவர் சுற்றி போட்டதும் சித்தார்த்தன் மேலே சென்றுவிட, அவன் பின்னால் செல்ல துடித்த ஊர்மிளாவினால் செல்ல முடியவில்லை. வீட்டில் அவர்களுடன் வசந்தனும் மகிஷாவும் வந்திருந்ததால் செல்ல முடியவில்லை.

  சாரதா, “சித்துவை விட எல்லார் கண்ணும் உன் மேல் தான்.. அதுவும் நீ பேசிய பேச்சில் அசந்து போய்ட்டாங்க..” என்றவர் கணவரை பார்த்து, “கற்பகம் மதினி என்ன பேச்சு பேசினாங்க!(தன் பெண்ணை கட்டவில்லை என்று குறைபட்டவர்) கிளம்புறதுக்கு முன் அவங்களே ‘நீ சொன்னது சரி தான்.. பொண்ணுக்கு தங்கமான குணம்.. சித்தார்த் மேல் ரொம்ப அன்பா இருக்கிறாள்’ னு சொல்லிட்டு போனாங்க” என்றார் மனநிறைவுடன்.

  சுதர்சன் புன்னகையுடன் தலை அசைத்து அதை அங்கீகரித்தார்.

  சாரதாவின் கூற்றைக் கேட்டு ஊர்மிளாவின் அன்னை மற்றும் அண்ணன் மனமும் குளிர்ந்தது. வசந்தனும் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தான்.


  ஊர்மிளாவின் முகத்தில் மகிழ்ச்சியை மீறி சிறு தவிப்பு தெரியவும் மகிஷா அவள் அருகே சென்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், “என்னாச்சு ஊர்மி! ஏன் ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கிற?”

  “அவர் நடந்ததை நினைத்து வருந்திட்டு இருப்பார்” என்றவளின் குரலில் தவிப்புடன் சிறு கலக்கமும் கலந்திருந்தது.

  மகிஷா வசந்தன் அருகே சென்று, “நாம சித்து கிட்ட சொல்லிட்டு கிளம்பலாம்” என்றாள்.

  ‘வந்ததும் கிளம்பனுமா!’ என்ற கேள்வி வசந்தன் கண்ணில் தெரிய, மகிஷா கண்களை மூடி திறந்து ‘ஆம்’ என்பது போல் கூறினாள்.

  சாரதா, “இன்னைக்கு இங்கே தங்கலாமே மகி” என்றார்.

  அவள் மென்னகையுடன், “டிரஸ் எதுவும் எடுத்துட்டு வரலை ஆன்ட்டி.. இன்னொரு நாள் தங்குறேன்” என்றாள்.

  வசந்தன் அசோக் அருகே சென்று, “சரி டா.. நாங்க சித்து கிட்ட சொல்லிட்டு கிளம்புறோம்” என்றான்.

  “ஹ்ம்ம்.. ரொம்ப தேங்க்ஸ் டா.. ரொம்ப சப்போர்டிவ்வா இருந்த” என்று கூற, வசந்தன் முறைத்தான்.

  அசோக் மென்னகையுடன், “நீ முறைத்தாலும் நான் சொல்வேன் தான்” என்றான்.

  “நடந்தது என் தங்கை மற்றும் நண்பனின் விழா.. அதுக்கு நீ நன்றி சொல்லுவியா?”

  அசோக் புன்னகைக்க வசந்தன் செல்லமாக நண்பனை முறைத்துவிட்டு, “மஹா வா சித்துவை போய் பார்க்கலாம்” என்றான்.

  இருவரும் மேலே ஏறினர்.  வசந்தன், “ரூமுக்கு போகாம எங்கே போற?” என்று வினவ,

  நண்பனை அறிந்தவளாக மகிஷா வசந்தனை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றாள். சித்தார்த்தன் அங்கே தான் இருந்தான். விழாவிற்கு அணிந்திருந்த உடையை மாற்றியிருந்தான்.

  இருளை வெறித்தபடி நின்றிருந்த சித்தார்த்தனை பார்க்க அமைதியாக தெரிந்தாலும் அவன் மனமோ கொந்தளித்துக் கொண்டிருந்தது.

  மகிஷா அவன் அருகே சென்று, “சித்து” என்று அழைத்ததும்,

  அவள் பக்கம் திரும்பாமல், “நீ கிளம்பு மகி.. எதுனாலும் நாளைக்கு பேசலாம்” என்றவனது குரலே ‘என்னை தனியாக விடு’ என்றது.

  மகிஷா வசந்தனை பார்க்கவும் அவன் சித்தார்த்தனின் தோளில் கையை வைத்தான்.

  இப்பொழுது திரும்பி பார்த்த சித்தார்த்தன், “வசந்த் அட்வைஸ் கேட்கும் மூடில் நான் இல்லை.. ப்ளீஸ் லீவ் மீ அலோன்.. எனக்கு இப்போ தனிமை தான் வேணும்” என்றான்.

  மூச்சை இழுத்துவிட்ட வசந்தன் அவன் தோளை தட்டிவிட்டு மகிஷாவை அழைத்துக் கொண்டு கீழே சென்றான்.  அவர்கள் இருவரும் கீழே வந்த வேகத்திலேயே அவர்கள் சென்ற காரியம் தோல்வி என்று புரிந்துக் கொண்ட ஊர்மிளாவின் தவிப்பு கூடியது.

  ஊர்மிளா அருகே சென்ற மகிஷா மெல்லிய குரலில், “நீ பேசு.. சரியாகிடுவான்” என்று கூறி அவள் கையை அழுத்திப் பிடித்தாள்.

  ஊர்மிளா மென்னகையுடன் கண்களை மூடி திறந்து ‘சரி.. நான் பார்த்துக்கிறேன்’ என்று சொல்லாமல் சொன்னாள்.

  சாரதா ‘என்ன’ என்பது போல் இவர்களை பார்க்க ஊர்மிளா,., “நான் மேலே போகட்டுமா அத்தை.. அவர் நடந்ததை பற்றி தான் யோசிச்சிட்டு இருப்பார்” என்றாள்.

  ‘சித்து இப்போ நார்மல் ஆனது போல் இருந்துதே! நாம தான் சரியா கவனிக்கலையா!’ என்று வருந்தியவர் தவிப்புடன் கணவரை பார்க்க, சுதர்சன் ஊர்மிளாவிடம், “நீ போ மா” என்றார்.

  அவள் வசந்தன் மற்றும் மகிஷாவிடம் கண்ணசைவில் விடை பெற்று அன்னை மற்றும் தமையனிடம் சிறு தலை அசைப்புடன் விடை பெற்று மேலே விரைந்தாள்.

  வசந்தன் மற்றும் மகிஷா கிளம்பியதும் சுதர்சன் மனைவியிடம் ஊர்மிளாவின் வீட்டினரை சுட்டிக் காட்ட, சாரதா, “பால் குடிக்கிறீங்களா?” என்று ஊர்மிளாவின் அன்னையிடம் வினவ,

  அவர், “இல்லை.. அங்கே சாப்பிட்டதே ஹெவியா தான் இருக்கிறது” என்றார்.

  சாரதா அசோக்கை பார்க்க அவனும், “எனக்கும் வேணாம் அத்தை” என்றான்.

  சாரதா, “அப்போ படுக்கிறீங்களா? இல்லை கொஞ்ச நேரம் பேசிட்டு..........”

  “நீங்களும் அசதியா தானே இருப்பீங்க.. எல்லாருமே படுக்கலாம்”

  “சரி வாங்க” என்றவர் அவர்களுக்கு அறையை ஏற்பாடு செயத்துவிட்டு தங்கள் அறைக்கு சென்றார்.


  அவர் உள்ளே சென்றதும் சுதர்சன் அவர் தோள் மீது கை போட்டு, “கவலைப் படாதே ஊர்மிளா பார்த்துப்பா” என்று கூறியும் சாரதாவின் முகம் தெளியவில்லை.

  சுதர்சன், “என்ன டா?”

  “இதுவரை சித்து முகத்தை வைத்தே அவன் மனநிலையை கணித்து விடுவேன்.. ஆனா இன்று” என்று நிறுத்தி அவர் வருத்தத்துடன் கணவர் முகத்தை பார்த்தார்.

  மனைவியின் தோளை ஆதரவாக தட்டிக் கொடுத்த சுதர்சன், “அப்படி இல்லை மா.. இன்னைக்கு வந்தவங்களை கவனிக்கும் வேலையில் நீ பிஸியா இருந்த.. ஊர்மிளா தானே சித்து அருகிலேயே இருந்தாள்.. அதான்.. மனசை போட்டு குழப்பிக்காதே.. என்னைக்கும் நீ சிறந்த அம்மா தான்.. இனி சிறந்த மாமியாராவும் இரு.. இன்னைக்கு சித்து மனநிலையை நீ கணித்து இருந்தாலும் கொஞ்சம் விலகி இருந்து ஊர்மிளாவிற்கான இடத்தை கொடுப்பது தான் நல்லது.. அவர்களுக்குள் நெருக்கமும் புரிதலும் வரணும் என்றால் நாம் கொஞ்சம் விலகி தான் இருக்கணும்.. எனக்கு நம்பிக்கை இருக்கிறது.. ஊர்மிளா சித்துவை மாற்றி விடுவாள்.. இன்னைக்கு மட்டுமில்லை கூடிய சீக்கிரம் சித்து வாழ்க்கையை அனுபவித்து வாழ ஆரம்பித்து விடுவான்.. நீ எதையும் பற்றி யோசிக்காமல் நிம்மதியா தூங்கு” என்றார்.

  கணவரின் கூற்றில் தெளிந்த சாரதா உறங்க ஆயித்தமானார்.
  ண்டியில்(காரில்) செல்லும் பொழுது மகிஷா அமைதியாக இருக்கவும் அவள் வீட்டிற்கு சற்று அருகில் சென்றதும் வண்டியை ஓரமாக நிறுத்திய வசந்தன், “என்ன மேடம் ரொம்ப அமைதியா இருக்கிறீங்க?”

  “சித்து பற்றி யோசிச்சிட்டு இருந்தேன்”

  அவள் தோள்களில் கையை போட்டவன், “சித்துவை ஊர்மி பார்த்துப்பா.. உன் வசியை நீ கொஞ்சம் கவனி” என்றதும்,

  அவள் வெக்கத்துடன் அவன் கையை தட்டிவிட்டபடி, “என்ன வசி இது.. நடு ரோட்டில் வைத்து!” என்றாள்.

  “இப்போ பன்னிரெண்டு மணி.. தெருவே அமைதியா இருக்குது.. கண்ணாடியையும் ஃபுல்லா ஏற்றி வைத்திருக்கிறேன் அப்பறமென்ன!”

  “இருந்தாலும்” என்று அவள் தயங்க,

  “இந்த தருணத்திற்காக தான் உன் அம்மாவை தாஜா பண்ணி உன்னை சித்து வீட்டிற்கு கூட்டிட்டு வந்தேன்” என்றவன் அவளை நெருங்கி இருந்தான்.

  “வசீ..........” என்று அவள் சிணுங்கி முடிக்கும் முன் அவள் இதழ்களை தன் இதழ் கொண்டு மூடினான் அந்த கள்வன்.

  சில நொடிகள் கழித்து விலகியவன், “இன்னைக்கு செம்ம அழகுடி” என்று மயக்கத்துடன் கூறி காதலுடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

  அவனின் அருகாமையிலும் முத்தத்திலும் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தவள் அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளியபடி, “வசீ ப்ளீஸ்.. வண்டியை கிளப்புங்க” என்றாள்.

  “ப்ச்.. என்ன குட்டிமா!” என்று அவன் ஏமாற்றத்துடன் கூற,

  அவள், “நம் பரென்ட்ஸ் நம்பிக்கையை நாம் காப்பாற்ற வேண்டாமா!”

  “இதெல்லாம் சின்ன சின்ன சந்தோசம் டா”

  “ப்ளீஸ் வசீ புரிஞ்சுக்கோங்க.. எனக்கும் ஆசைகள் இருக்கிறது..” என்றவள் பார்வையை தாழ்த்தி, “நீங்கள் தொட்டதும் என் மனம் உருகுது.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க” என்றாள்.

  சட்டென்று தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திய வசந்தன் அவள் முகத்தை நிமிர்த்தி, “சாரி டா” என்றான்.

  அவள் அவசரமாக, “இல்லை.. நான்.............”

  அவள் வாய் மீது கை வைத்து அவளது பேச்சை தடை செய்தவன், “புரியுது டா.. இப்போ உன் கவனம் முழுவதும் படிப்பில் தான் இருக்கணும்.. இன்னும் கொஞ்ச நாள் தானே!”

  அவள், “சாரி.................” என்று ஆரம்பிக்க, அதை முடிக்க விடாமல் அவள் இதழில் மிக மென்மையாக இதழ் பதித்து நொடி பொழுதில் விலகியவன், “நீ பீல் பண்ண ஒன்றுமில்லை.. நானும் மொத்தமாலாம் விலகி இருக்க மாட்டேன்” என்று கூறி கண் சிமிட்டினான்.

  அவள் புன்னகையுடன், “பிராடு” என்று கூறி செல்லமாக அவனை அடித்து அவன் தோளில் தலை சாய்க்க, அவன் புன்னகையுடன் வண்டியை கிளப்பினான்.

  அவளை வீட்டில் விட்டுவிட்டு அவள் பெற்றோருடன் இரண்டு வார்த்தை பேசிவிட்டு கிளம்பிச் சென்றான்.


   
  Rabina likes this.
 4. gomathy.arun

  gomathy.arun Well-Known Member

  Joined:
  Dec 5, 2014
  Messages:
  456
  Likes Received:
  385
  Trophy Points:
  63
  Gender:
  Female
  சந்தன் மற்றும் மகிஷா சென்ற ஐந்து நிமிடத்தில் மெல்லிய கொலுசொலி கேட்கவும் திரும்பி பார்க்காமலேயே வருவது யாரென்று சித்தார்த்தனுக்கு புரிந்தது.

  அவன், “ஊர்மி ப்ளீஸ் லீவ் மீ அலோன்” என்றான்.

  அவள் அமைதியாக அவன் அருகே சென்று தனது வலது கையை அவனது இடது கரத்துடன் கோர்த்து அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

  “ச்ச்” என்ற சத்தம் அவனிடமிருந்து வரவும்,

  அவளும் வானத்தை பார்த்தபடி, “நான் அமைதியா இருக்கிறேன்.. ஆனா தனியாலாம் விட முடியாது” என்றாள்.

  “ஏன்டி படுத்துற!”

  “இப்போ எதுக்கு தனியா வந்து நிற்கிறீங்க?”

  “எனக்கு தனிமை வேணும்”

  “அது தான் ஏன்?”

  “ஏன் னு உனக்கு தெரியாதா?”

  “தெரியாம தானே கேட்கிறேன்”

  “ப்ச்”

  “இப்படி சலிச்சா என்ன அர்த்தம்?”

  “தெரிந்தும் தெரியாத மாதிரி கேட்கிறது பிடிக்கலை னு அர்த்தம்”

  “சரி நேரிடையாவே கேட்கிறேன்.. இப்போ என்ன நடந்து போச்சு னு இப்படி தேவதாஸ் மாதிரி வந்து நிற்கிறீங்க?”

  அவன் சிறிது விலகி, “இது என்ன உதாரணம்?” என்று சிறு கோபத்துடன் வினவினான்.

  அவள் அவன் கையை விடாமல் அவன் கண்களை பார்த்து, “அப்போ நீங்க பண்றதுக்கு என்ன அர்த்தம்?”

  “நீ என்னை புரிந்துக் கொண்டாய் என்று நினைத்தேன்”

  “புரிந்துக்கலை னு நினைக்கிறீங்களா?”

  “சரியாக புரிந்திருந்தால் இப்படி பேச மாட்ட”

  “நீங்க தான் புரியாம நடந்துக்கிறீங்க”

  “என்ன புரிஞ்சுக்கலை?” என்று சற்று காட்டத்துடன் கேட்டான்.

  “உங்கள் மனம் காதல் தோல்வியில் வருந்தலைன்னு எனக்கு தெரியும் ஆனால் அவன் பேசியதை கேட்டு நீங்க இப்படி நடந்துக் கொண்டால் அதற்கு அர்த்தம் நான் சொன்னது தான்.. அது தான் உங்களுக்கு புரியலை”

  “உளறாதே!”

  “மற்றவர்கள் வேற எப்படி நினைப்பாங்க?”

  “மற்றவர்கள் எண்ணம் பற்றி எனக்கு கவலை இல்லை.. நீ................”

  “அப்பறம் ஏன் மற்றவர்கள் பேசியதிற்கு மதிப்பு கொடுக்கிறீங்க?”

  “அவன் பேசியதை கேட்டு என் மனம் குளுகுளு னு இருக்குமா?”

  “அவன் பேசியதை பிடிச்சிட்டு ஏன் தொங்குறீங்க?”

  அவன் முறைக்கவும் அவள், “அவன் ஏதோ உளறினான்னு.......................”

  “எது உளறல்? அவன் சொன்னதில் உண்மையே இல்லையா?”

  “எது உண்மை?” என்றவளது கண்கள் அவனை ஆழ்ந்து நோக்கியது.

  “நான்” என்று வேகமாக ஆரம்பித்தவன் பின் நிறுத்தி, “வேணாம் ஊர்மி.. நான் இப்போ இருக்கும் மனநிலையில் உன்னை காயப்படுத்திவிடுவேனோ னு பயமா இருக்குது.. ப்ளீஸ் நீ கீழே போ”

  “நீங்க சொல்ல வந்ததை சொல்லி முடிங்க”

  அவன் கோபத்துடன் குரலை சற்று உயர்த்தி, “இம்சை பண்ணாம கீழே போடி”

  அவளோ நிதானமாக, “இந்த கோபம் கூட அன்பு தான் தெரியுமா? உங்களை நீங்களே தனிமை படுத்தி வதைபட்டாலும் பரவாயில்லை ஆனால் என்னை காயப்படுத்திவிடக் கூடாது என்ற உங்கள் தவிப்பு காதல் இல்லாமல் வேறு என்ன?”

  அவன் அதிர்ச்சியுடன் அவளை பார்க்க, “இது தான் காதலின் ஆரம்பம்” என்றாள் மென்னகையுடன்.

  பின் அவன் கன்னத்தில் கையை வைத்து, “காதல் என்பது இன்பத்தில் மகிழ்வது மட்டுமில்லை.. நீங்க வருந்தும் போது என்னால் எப்படி சந்தோஷமா இருக்க முடியும்? உங்கள் மனதை வருத்துவதை வெளியே கொட்டுங்க.. நீங்க வருந்துவதை பார்த்து என் மனம் கஷ்டபடுவதை விட உங்கள் வார்த்தைகள் என்னை அதிகமாக கஷ்டப்படுத்தி விடாது..”

  அவளது அன்பில் அவன் மனம் மொத்தமாக அவளிடம் சரணடைந்தது. அவன் வார்த்தைகளின்றி தன் கன்னத்தின் மேல் இருந்த அவளது கையை அழுத்தி பற்றினான்.

  சில நொடிகள் நான்கு கண்கள் மட்டும் பேசியது.

  அவன் கண்கள், ‘உன் அன்பிற்கும் காதலுக்கும் நான் தகுதியானவனா!’ என்று வினவ,

  அவள் கண்களோ, ‘உன்னை விட வேறு யார் எனக்கு இணை!’ என்றது.

  அவளது இரு கன்னத்திலும் கையை வைத்து அவள் முகத்தை பற்றியவன், “தவமின்றி கிடைத்த வரம் நீ” என்றான்.

  அவள் மெல்லிய குரலில், “நீங்கள் தான் எனக்கு கிடைத்த வரம்” என்றாள்.

  அவன் சட்டென்று அவளை தன் நெஞ்சில் சாய்த்து அணைத்துக் கொண்டு அவள் தலையில் கன்னம் பதித்து கண்களை மூடினான். அவள் கைகள் மென்மையாக அவன் முதுகை வளைத்தது.

  சில நொடிகள் கழித்து அவள் மெல்லிய குரலில், “ரூமுக்கு போகலாமா சித்?” என்று வினவினாள்.

  அப்பொழுது தான் இருக்கும் நிலையை உணர்ந்தவன் பிடியை தளர்த்தி, “சாரி” என்றான்.

  அவள் சிறிது தலை சரித்து, “எதுக்கு?” என்றாள்.

  அவன் மென்னகையுடன், “கட்டி பிடிச்சதுக்கு இல்லை”

  “ஓ” என்று ராகம் பாடிய இதழில் கவி பாட தோன்றியது அவனுக்கு இருபினும் தன்னை கட்டுபடுத்திக் கொண்டு, “ரூமுக்கு போகலாம்” என்றவன் வேகமாக கீழே செல்ல அவளும் அவனை தொடர்ந்தாள்.

  அறைக்கு சென்றதும் மெத்தையில் அமர்ந்தபடி அவள், “இப்போ சொல்லுங்க” என்றாள்.

  அவள் அருகில் அமர்ந்தவன், “இப்போ என் மனம் லேசா தான் இருக்குது.. அதை விடு”

  “இல்லை.. இது தற்காலிக தீர்வு தான்.. பின்னாடி என்னைக்காவது பெரிதாக வெளியே வரலாம்.. பேசி முடிச்சிருவோம்.. சொல்லுங்க”

  “கண்டிப்பா பேசணுமா?” என்று அவன் சிறு தயக்கத்துடன் வினவ,

  அவள், “கண்டிப்பா” என்றாள் உறுதியான குரலில்.

  அவன், ”நான் சவிதா கழுத்தில் தாலி கட்டியது உண்மை தானே!”

  அவள் வரவழைத்த ஆச்சரிய குரலில், “யாரோ ‘நீ தான் என் மனைவி.. நீ மட்டும் தான் என் மனைவி’ னு சொன்னாங்க” என்றாள்.

  “நானும் அதை என் மனதில் பதிய வைக்க நினைத்தாலும் உண்மை சுடுதே! ஒருவேளை அவன் சொன்னது போல் நடந்திருந்தால்..................”

  அவனை கடுமையாக முறைத்தவள், “அவன் ஒரு ஆளு னு அவன் பேச்சிற்கு மதிப்பு கொடுப்பதே தப்பு இதில் நடக்காததை கற்பனை செய்து மனதை வருத்திகிறீங்களா?”

  “ச்ச்..”

  “நடக்காததை நினைத்து அப்படி நடந்திருந்தால் இப்படி நடந்திருந்தால் னு கற்பனை பண்ணுவதில் என்ன பிரயோஜனம்? அப்படி கற்பனை செய்து எதற்கு தேவை இல்லாமல் நம் இனிமையை கெடுத்துகனும்? இதை தானே அவனும் விரும்பினான்! என் சித் ஜெய்க்க பிறந்தவர்.. தேவை இல்லாமல் மனசை போட்டு குழப்பிக்காதீங்க”

  அவன் அமைதியாக இருக்கவும், “என்ன?” என்று அவள் மிரட்டும் தொனியில் வினவ,

  அவன் வருந்தும் குரலில், “எப்படி ஆரம்பித்த நாள்! எப்படி இனிமையா கழிக்க நினைத்தேன் தெரியுமா?”

  “ஆமா.. அப்படியே என்னை கட்டி பிடித்து வாழ்க்கை நடத்திட கற்பனை பண்ண மாதிரி தான்” என்று முணுமுணுக்க, அவன் சிறு ஆச்சரியத்துடன் அவளை பார்த்தான்.


  கொஞ்சல் அரும்பும்♥♥♥♥♥♥

  எனை கொஞ்சும் சாரலே!! - Comments
  உங்கள் அன்புத் தோழி,
  கோம்ஸ்.
   
  Suganyasomasundaram and Rabina like this.
 5. gomathy.arun

  gomathy.arun Well-Known Member

  Joined:
  Dec 5, 2014
  Messages:
  456
  Likes Received:
  385
  Trophy Points:
  63
  Gender:
  Female
  கொஞ்சல் 11
  [​IMG]

  சித்தார்த்தனின் ஆச்சரிய பார்வையில் மனதினுள் ‘அச்சோ சத்தமா சொல்லிட்டோம் போலவே!’ என்று சிறிது அலறியவள் பின், “முதல்வன் படத்தில் வரும் டயலாக் தான் ஞாபகத்திற்கு வருது” என்றாள்.


  “என்ன?”

  “அர்ஜுன் கடைசியா ‘என்னையும் அரசியல்வாதியா மாத்திட்டீங்களே!’ னு சொல்வார்”

  “அதை எதுக்கு இப்போ சொல்ற!”

  “என்னையும் இப்படி பேச வச்சிட்டீங்களே!”

  “ஏன் பேசினால் என்ன தப்பு?”

  அவள் முறைக்கவும் அவன், “நிஜமா தான் கேட்கிறேன்! என்ன தப்பு?”

  “நீங்க பேசினால் தப்பில்லை”

  “நீ பேசினாலும் தப்பில்லை தான்”

  “பொதுவா ஆண்கள் தான் இப்படி பேசுவாங்க”

  அவன் சிறு நக்கலுடன், “எப்போ அடுத்தவங்க பெட்ரூமை எட்டி பார்த்த?”

  “என்ன!”

  “இல்லை.. ஆண்கள் தான் பேசுவாங்க னு சொன்னியே அதான் எல்லாரோட பெட்ரூமையும் எட்டி பார்த்து சர்வே எடுத்தியோ னு கேட்டேன்”

  அவன் வாய் மீது லேசாக அடி போட்டவள், “என்ன பேச்சு இது?”

  “பின்ன என்ன! பொது இடங்களில் பெண்கள் பேசினால் அது சரி இல்லை ஆனால் தனிமையில் கணவன் மனைவிக்குள் பேசுவதில் என்ன இருக்கிறது? இந்த மாதிரியெல்லாம் கணவன் தான் பேசணும் மனைவி பேசக் கூடாது னு எந்த வரையறையும் கிடையாது.. வள்ளுவரே என்ன சொல்லி இருக்கார் தெரியுமா? மனைவி படுக்கை அறையில் வேசியை போல் நடந்து.............”

  “அவர் ஒரு ஆண் மகன் தானே! அதான் ஆண்களுக்கு சாதகமா எழுதி இருக்கார்”

  “அவர் உங்களுக்கும் சாதகமா தான் எழுதி இருக்கிறார்”

  அவள் முறைக்கவும் அவன், “ஏன் அவர் சொன்னதில் என்ன தப்பு? இதில் மட்டும் ஆண் தான் இப்படி பேசணும் நடந்துக்கணும் னு ஏன் நினைக்கணும்? கணவன் மனைவிக்குள் ஈகோ வரக்கூடாது..................”

  “இது ஈகோ இல்லை.. நாணம் தயக்கம் வெக்கம் னு எப்படி வேணாலும் சொல்லலாம்”

  “அவர் இதை தான் சொல்றார்.. கணவனிடத்தில் மனைவி தனது நாணத்தை விட்டு வெளியே வரணும்.. அவளது ஆசாபாசங்களை தயக்கமின்றி வெளிபடுத்தனும் னு சொல்றார்”

  “அது எப்படி!”

  “அப்போ உங்கள் ஆசைகளை வெளிபடுத்தவே கூடாதா?”

  “அப்படி சொல்லலை..”

  “வேற எப்படி சொல்ற?”

  “எதற்கும் முதல் முறை என்று உண்டு தானே! அதை பெண் ஆரம்பிக்க முடியாது னு சொல்றேன்”

  “அது தான் ஏன் னு கேட்கிறேன்.. இந்த விஷயத்தில் ஆண் பெண் என்ற பாகுபாடு எதற்கு?”

  “அதான் சொன்னேனே! நாணம்.......”

  “சரி மத்தவங்களை விடு.. நாம தான் எதிலும் வித்யாசப்படுவோமே!”
  என்று கூறி கண்சிமிட்ட, அவள் முறைத்தாள்.

  “இப்போ என்ன நான் தான் முதலில் உன்னை கட்டி பிடித்து முத்தம் கொடுத்து................”
  என்றபடி அவன் நெருங்க,

  அவளோ, “இல்லை” என்று சிறு அலறலுடன் சற்று பின்னால் நகர்ந்தாள்.


  அவன் அமைதியாக பார்க்கவும் அவள் தயக்கத்துடன், “மனம் முழுவதுமாக ஒன்றாமல் இது........” என்று அவள் தரையை பார்த்தபடி இழுத்து நிறுத்தவும்,

  “இதனால் தானே நான் விலகி நிற்கிறேன்..” என்றவன், “தேவை இல்லாமல் உசுப்பி விட்டுட்டு” என்று முணுமுணுத்தான்.

  “சாரி”
  என்றவளது பார்வை இப்பொழுதும் நிமிரவில்லை.

  அவளின் இந்த நிலை அவனை என்னவோ செய்ய அவளை சகஜமாக்கும் எண்ணத்துடன் சீண்டினான். “ஹ்ம்ம்.. டீச்சர் சரி இல்லை”

  அவள் செல்ல முறைப்புடன், “நீங்களா கத்துக்கோங்க”

  “நீ உன் காதலை காட்டு நான் கத்துக்கிறேன்”

  இப்பொழுது அவள் நிஜமான முறைப்புடன் எழுந்து நின்று இடுப்பில் கை வைத்தபடி, “சும்மா காட்டு காட்டு னா! இது என்ன பொருளா காட்டுறதுக்கு! காதலை உணர தான் முடியும்”

  “அப்போ உன் காதலை நீ உணர்த்து”

  “என் செயல்கள் அதை உணர்த்தலையா?”

  “இன்னும் ஆழமா உணர்த்து”
  என்றவன் மென்னகையுடன், “எனக்கு ஒரு டவுட்”

  “என்ன?”

  “மாடியில் வைத்து நான் உன்னை காதலிப்பதாக தானே சொன்ன!”
  என்றவன் எழுந்து நின்றான்.

  அவளிடமிருந்து தயக்கமின்றி உடனே பதில் வந்தது.
  “சொன்னேன் தான்.. ஆனால் அதை நீங்க உணரனுமே! உங்கள் மனதில் இருக்கும் என் மீதான காதலையும் அதன் ஆழத்தையும் நீங்க உணர வேண்டாமா?”

  “ஓ”
  என்றபடி பார்த்தவனின் பார்வையின் வித்யாசத்தை உணர்ந்து அவள் எழும்பாத குரலில், “என்ன?” என்றாள்.

  அவன் அவள் அவஸ்த்தையை ரசித்தபடி, “இவ்வளவு நேரம் உன் அக அழகை ரசித்தேன் இப்போ முக அழகை ரசிக்கிறேன்” என்றவன் சற்று நெருங்கி, “ஏன் நான் ரசிக்க கூடாதா?” என்றான் கிசுகிசுப்பான குரலில்.

  அவள் அவனை இமைக்காமல் பார்த்தபடி பேச்சின்றி நின்றாள்.

  இவ்வளவு நேரம் பேசியதில் அவன் தயக்கங்கள் சற்று விலகிட, மாலையில் இருந்த ஒருவித மயக்கம் அவனை தொற்றிக் கொண்டது.

  அவன் கைகள் அவளது இடையை வளைக்கவும் அவள் சிறு அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

  அவன் புருவம் உயர்த்தவும் அவள் கண்கள் மேலும் விரிந்தது.

  அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு முட்டியவன், “மத்தது பிறகு வச்சிக்கலாம்.. இப்போ சின்னதா அஸ் அ டோக்கன் ஆஃப் லவ்” என்றவன் அவளது செவ்விதழில் மென்மையாக முத்தமிட்டான்.

  அவனது முதல் இதழ் தீண்டல் அவளை எங்கோ இழுத்துச் செல்ல அவள் கைகள் அவன் முதுகை சுற்றி அவனது ஆடையை இறுக்கமாக பற்றியது.

  அவளது இதழின் மென்மையில் மயங்கியவனின் உணர்வுகள் சுழலில் சிக்கியது போலானது. அந்த சுழலில் இருந்து வெளியேற சிறிதும் விரும்பாதவனை போல் அவளது இதழ்களை மீண்டும் மீண்டும் நாடினான்.

  அவனது இதழ் ஒற்றலுக்கே சூறாவளியில் சிக்கிய பூ போலானது அவளது நிலை. அவள் துவண்டு சரியவும் தான் மனமின்றி இதழ்களை பிரித்தவன் அவளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்தான்.

  சில நொடிகள் கழிந்தும் அவளிடம் அசைவில்லை என்றதும் அவன் அவள் முகத்தை பார்க்க, அவளோ கண்களை மூடியபடி தான் இருந்தாள்.

  அவன் மென்மையாக, “ஊர்மி” என்று அழைத்தான்.

  அவள் கண்களை திறவாமல், “ஹ்ம்ம்” என்றாள்.

  அவன், “அம்லு என்னை பார்” என்றதும் சட்டென்று அவனை பார்த்தவளின் கண்கள் ஜொலித்தது.

  அதை ரசித்தவன் மென்னகையுடன் அவள் நெற்றியை முட்டி, “பிடிச்சிருக்கா?”


  அவள் வெக்கத்துடன், “ஹ்ம்ம்” என்று கூற,

  அவன் விஷம புன்னகையுடன், “நான் அம்லு னு கூபிட்டதை கேட்டேன்”


  “நானும் அதை தான் சொன்னேன்”
  என்றவளது குரல் சிறு சிணுங்கலுடன் வரவும்,

  அவன் மத்தகாசமான புன்னகையுடன், “அப்போ முத்தம் நல்லா இல்லையா?” என்றான்.

  அவள் வெக்கத்துடன், “சித்” என்று சிணுங்கியபடி அவன் நெஞ்சில் முகத்தை புதைத்தாள்.

  அவன் விரிந்த புன்னகையுடன் இறுக்கமாக அணைத்தான். அவள் இன்னும் அவனுள் புதைந்தாள்.

  சில நொடிகள் கழித்து அவன், “தூங்கலாமா அம்லு?” என்றான்.

  “ஹ்ம்ம்” என்றவளும் விலகவில்லை கேள்வி கேட்டவனும் விலகவில்லை.

  மீண்டும் சில நொடிகள் அதே ஏகாந்த நிலையில் கழிய, சுவர்க் கடிகாரம் இரண்டு முறை ஒலித்து மணி இரண்டு என்று சுட்டிக்காட்டவும் அவள் சட்டென்று விலகினாள்.

  விலகினாலும் அவனது மனநிலை என்ன என்று அறியும் நோக்கத்துடன் அவள் அமைதியாக நிற்கவும், அவன் அவள் கன்னத்தை தட்டி, “டிரஸ் மாத்திட்டு வா.. தூங்கலாம் அம்லு” என்றான்.

  அவள் சிறு தயக்கத்துடன் அவன் முகம் பார்த்து, “உங்களுக்கு.. நான்..” என்று தடுமாற,

  அவன் மென்னகையுடன், “எனக்குமே உன் எண்ணம் தான் டா.. முதலில் காதல் பாடம் படிப்போம் அப்பறம் கலவியல் கற்போம்” என்று கூறி கண்சிமிட்ட,

  அவள் மீண்டும் அவன் வாய் மீது லேசாக அடித்தாள்.

  அவன், “இனி இங்கே அடிக்கும் உரிமை உன் உதட்டிற்கு மட்டும் தான்” என்று கூறி சிறு கிறக்கத்துடன் அவள் உதட்டை பார்க்கவும், அவள், “நான் டிரஸ் மாத்திட்டு வரேன்” என்றுவிட்டு ஆடை மாற்றும் அறைக்கு ஓடினாள்.

  அவன் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் படுக்கையில் படுத்து கண்களை மூடினான்.

   
  Rabina likes this.
 6. gomathy.arun

  gomathy.arun Well-Known Member

  Joined:
  Dec 5, 2014
  Messages:
  456
  Likes Received:
  385
  Trophy Points:
  63
  Gender:
  Female
  ஊர்மிளா உடையை மாற்றிவிட்டு வந்து அறையின் விளக்கை அனைத்து விடிவிளக்கை போட்டுவிட்டு படுத்தாள்.

  அதற்காகவே காத்திருந்தது போல் அவள் படுத்ததும் சித்தார்த்தன் அவளை பார்த்து திரும்பி படுக்கவும் அவளுள் சிறு படபடப்பு.

  அவன், “நமக்கு கல்யாணம் ஆகி பத்து நாள் தான் ஆகுது னு என்னால் நம்ப முடியலை”

  “சில நேரம் நமக்கு கல்யாணம் ஆனதையே என்னால் நம்ப முடியலை”


  அவன் கிசுகிசுப்பான குரலில், “நம்புறதுக்கு ஸ்ட்ரோங்கா ஏதாவது தரவா” என்றபடி சற்று நெருங்கவும்,

  அவள் அவசரமாக, “நம்புறேன் நம்புறேன்” என்றாள்.

  அவன் சிரித்தபடி பழைய இடத்தில் படுத்ததும் தான் அவள் மூச்சு காற்று சீரானது.

  அவன் மெல்லிய குரலில், “எதுக்கு இவ்ளோ பயம் அம்லு?”

  “பயம் னு இல்லை”
  என்று இழுக்க,

  அவன், “அப்பறமென்ன?”

  “சொல்லத் தெரியலை”

  “உன் முக அழகு தான் என்னை ஈர்க்கிறது என்றால் ஐந்து வருடங்களுக்கு முன்பே நான் உன்னை நெருங்கி இருப்பேனே! என்னை ஈர்ப்பது உன் அக அழகும் அன்பும் காதலும்”
  என்றவன் அவள் கையை மென்மையாக பற்றினான்.

  அவள் மெல்லிய குரலில், “நானும் நீங்கள் என்னை நெருங்குவதை பிசிகல் அட்ராக்ஷன் னு சொல்லலை.. முன்பு காலேஜ்ஜில் என்னை பார்த்த உங்கள் கண்ணோட்டம் வேறு இப்பொழுது பார்க்கும் கண்ணோட்டம் வேறு.. அப்போ நான் யாரோ ஒரு ஜூனியர் மாணவி.. இப்போ உங்கள் மனைவி.. அந்த உரிமையில் பார்க்கும் உங்கள் கண்ணோட்டம் வேறு”

  “அது தவறு இல்லையே!”

  “நானும் தவறு னு சொல்லலையே!”

  “அப்பறம் ஏன் பதறுற?”

  “அது பெண்ணிற்கே உள்ள படபடப்பு”

  “ஓ!”
  என்றவன் சற்று நகர்ந்து படுத்தான்.

  அவள் அமைதியாக இருக்கவும் அவன் அவள் கையை சற்று இறுக்கமாக பற்றியபடி, “உன்னிடம் ஏதோ மஜிக் இருக்கிறது அம்லு” என்றான்.

  அவள் மென்னகையுடன், “எனக்கு அப்படி எதுவும் இருப்பதா தெரியலையே!”

  “உன்னுடன் இருக்கிற எனக்கு தெரியுதே”

  “ஹ்ம்ஹும்”

  அவன் நிமிர்ந்து படுத்தபடி இறுக்கமாக பற்றிய அவளது கையை தன் நெஞ்சின் மீது வைத்து, “உன்னுடன் இருக்கும் பொழுது என் மனம் நிம்மதியா சந்தோஷமா இருக்குது.. என் கோபம் வருத்தம் எல்லாத்தையும் உன் அருகாமை சட்டுன்னு மாற்றிவிடுது.. உன்னிடம் இருக்கும் மஜிக் உன் அன்பும் காதலும் தான்.. அது என்னை மீறி என்னை வசியம் செய்கிறது”

  அவள் சொல்வதறியாது மௌனம் காக்க, அவன், “அம்லு” என்று மென்மையாக அழைத்தான்.

  “ஹ்ம்ம்”

  “என்ன அமைதியாகிட்ட?”

  சற்று புரண்டு அவன் தோளின் மீது தலையை வைத்து படுத்தவள், “என்ன சொல்லணும்?” என்றாள்.

  அவளது வார்த்தைகள் சொல்லாததை அவளது நெருக்கம் சொல்ல, அவன் வலது கரம் கொண்டு மென்மையாக அவளை அணைத்தான்.

  சில நொடிகள் காமம் இல்லா அந்த மென்மையான அணைப்பில் இருவரும் கட்டுண்டு இருக்க, அவள் மெல்ல, “சித்” என்று அழைத்தாள்.

  அவன், “ஹ்ம்ம்”

  தலையை மட்டும் தூக்கி நாடியை அவன் தோளில் பதித்து அவனை பார்த்தாள்.

  ‘என்ன” என்பது போல் அவன் புருவம் உயர்த்த,

  அவள், “என்ன னு புருவம் உயர்த்தி கேட்கிறீங்களா? இந்த லைட் வெளிச்சத்தில் எனக்கு சரியா தெரியலை” என்று கூற,

  அவன் மென்னகையுடன் மறு கரத்தையும் சேர்த்து அவளை மென்மையாக அணைத்து, “என்ன?” என்றான்.

  சற்று எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “ஐ லவ் யூ சித்” என்று கூறி அவன் நெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல் கண்களை மூடினாள்.

  அவன் பதில் கூறவில்லை என்றாலும் அவனது இறுகிய அணைப்பு அவளுக்கு அவனது மனதை எடுத்துக் கூறியது.

  சில நொடிகள் கழித்து அவன் மெல்லிய குரலில், “நீ சொன்னது சரி தான்.. எனக்கு உன்னை பிடித்திருக்கிறது.. நீ என் மேல் கொண்ட காதலை எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கிறது.. ஆனாலும் என் மனம் உன் மீதான காதலை இன்னும் முழுமையாக உணரலை னு தான் எனக்கும் தோணுது.. அது ஏன்?”

  “என்னை கேட்டால்?”

  “நீ தானே என் டீச்சர்”

  “நீங்க ஒரு பெரிய பிஸினஸ் மேக்னெட்!!”
  என்று அவள் கிண்டலுடன் கூற,

  அவனோ மென்னகையுடன், “அதனால் என்ன! இந்த விஷயத்தில் உன்னிடம் மாணவனா இருக்க தான் எனக்கு பிடித்திருக்கிறது”

  “சரியான மக்கு மாணவன்”

  “அப்படியா!”
  என்றவன் அவளை தன் மேல் படுக்க வைத்து சற்று அணைப்பை இறுக்கினான்.

  அவள் வெக்கத்துடனும் தயக்கத்துடனும், “நாம மனசை பற்றி பேசிட்டு இருக்கிறோம்”

  “அதனால் என்ன?”

  “சித்”

  “டீச்சர் தானே மனதை பற்றி பேசும் போது இதை ஆரம்பித்து வைச்சீங்க”

  “இது போங்கு.. நீங்க தானே முதலில் என் கையை பிடிச்சு நெஞ்சில் வச்சீங்க”

  “ஸோ உன் விருப்பம் போல் முதல் அடி நான் எடுத்து வைச்சிட்டேன்..”
  என்று கூறி அவன் சிரிக்க,

  அவள், “நீங்க என்னை கெட்ட பொண்ணா மாத்திருவீங்க போல” என்றபடி சரிந்து பழையபடி படுத்தாள்.

  அவன் வாய்விட்டு சிரித்தபடி, “ஏன் இந்த விஷயத்தில் கணவன் தான் ஆசானா இருக்கனுமா?”

  “ச்ச்.. இபப்டியே பேசாதீங்க..”

  “சரி விடு.. இன்னொரு நாள் பேசிக்கலாம்”

  “இன்னொரு நாளா?”
  என்று தலையை லேசாக சரித்து பார்வையை மட்டும் அவன் முகத்தில் பதித்தாள்.

  “ஹ்ம்ம்.. உன் தயக்கம் எல்லாம் போன பிறகு”
  என்று கிறக்கத்துடன் அவன் கூற, அவள் சட்டென்று பார்வையை தாழ்த்தி முகத்தை அவன் நெஞ்சில் மறைத்தாள்.

  அவன், “சரி நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”

  சில நொடிகள் மௌனத்தில் கழிய அவன், “அம்லு” என்றான்.

  “ஹ்ம்ம்”

  “என்ன திடீர் மௌனம்?”

  “மௌனமாகலை.. எப்படி சொல்ல னு யோசித்தேன்”
  என்றவள் சற்று எழுந்து, “தலையை தூக்குங்க” என்றாள்.

  அவன் யோசனையுடன் தலையை மட்டும் லேசாக தூக்க, தனது இடது கையை அவனது தலைக்கு அடியில் கொடுத்தவள், “இப்போ படுங்க” என்றாள்.

  படுத்த பிறகே அவள் கையை வைத்திருப்பதை உணர்ந்து மென்னகை புரிந்தான்.

  அவள் அவனை சற்று நெருங்கி தனது தலையை அவன் நெஞ்சில் வைத்து இடது கையை அவள் தோளில் போட்டு அணைத்தார் போல் படுத்தாள்.

  அவன் இரு கைகளை கொண்டு அவள் இடையை மென்மையாக அணைத்தான்.

  அவள் மெல்லிய குரலில், “இதை நாம் முதலும் கடைசியுமா பேசி முடிச்சிரலாம்.. என் மீதான காதலை உணர முடியாமல் தடுப்பது உங்கள் மனதில் இருக்கும் குழப்பம்.. சவிதாவை காதலித்த மனம் எப்படி சட்டென்று என்னை ஏற்று காதலிக்க தொடங்கியது? இது எப்படி சாத்தியம்? என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கிறது.. சரியா?”

  அவனது அமைதியே ‘ஆம்’ என்று சொல்லாமல் சொல்லியது.

  அவனது பதிலை எதிர்பார்க்காமல் அவள் தொடர்ந்தாள்.
  “அதற்கான பதிலை கொஞ்ச நேரத்திற்கு முன் நீங்களே சொல்லிடீங்க.. என் மீதான காதல் என் அகத்தை பார்த்து வந்தது அதாவது என் அன்பை காதலை பார்த்து வந்தது.. ஆனால் முன்பு உங்கள் மனதில் தோன்றியது ஈர்ப்பு.. சவிதாவின் முக அழகோ, அவளது எதோ ஒரு செய்கையோ உங்களை கவர்ந்து இருக்கலாம்.. காதலின் முதல் படி ஈர்ப்பு தான் என்றாலும் அது மட்டுமே இருந்தால் அது காதல் ஆகாது.. ஆனால் என் மீது உங்களுக்கு இருக்கும் உணர்வு ஈர்ப்பையும் தாண்டிய உணர்வாக வளர்ந்துள்ளது.. அதை சீக்கிரம் நீங்களே மனப்பூர்வமா உணர்வீங்க”

  மீண்டும் சில நொடிகள் மௌனத்தில் கழிய அணைப்பை சற்று இறுக்கியவன் அவள் தலையில் இதழ் பதித்து, “தேங்க்ஸ் டா” என்றான்.

  அவள் பதில் கூறவில்லை.

  அவன், “நீ சொன்னது போல் சீக்கிரமே என் காதலை உன்னிடம் சொல்வேன்” என்றான் உணர்ச்சிவசப்பட்டு.

  பின் மென்னகையுடன், “என்ன டீச்சர் இந்த மக்கு மாணவன் தேறுவேனா!” என்றான்.

  “நீங்க தான் மக்கு மாணவன் நான் சூப்பர் டீச்சராக்கும்”

  “அது உண்மை தான்”

  “ஹ்ம்ம்.. இப்போ தூங்குங்க.. குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்”
  என்றாள்.

  தலையை தூக்கி, “கையை எடுத்துக்கோ.. வலிக்கும்” என்றவன் அவள் கையை எடுத்ததும் அவள் கன்னத்தில் முத்தமிட்டு, “குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் மை ஸ்வீட் அம்லு” என்று கூறி மென்மையாக அவளை அணைத்தபடி கண்களை மூடினான்.

  இருவரும் இதழில் உறைந்த மென்னகையுடன் கண்ணயர்ந்தார்கள்.

  கொஞ்சல் அரும்பும்♥♥♥♥♥♥
  எனை கொஞ்சும் சாரலே!! - Comments
  உங்கள் அன்புத் தோழி,
  கோம்ஸ்.
   
 7. gomathy.arun

  gomathy.arun Well-Known Member

  Joined:
  Dec 5, 2014
  Messages:
  456
  Likes Received:
  385
  Trophy Points:
  63
  Gender:
  Female
  கொஞ்சல் 12
  [​IMG]

  சித்தார்த்தன் தன் அறையில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க ஊர்மிளா அவன் அருகே சென்று, “இப்போ எதுக்கு இப்படி உட்கார்ந்து இருக்கிறீங்க?”

  அவன் முறைப்புடன், “உனக்கு தெரியாதா?”

  “ச்ச்” என்றபடி அவன் அருகே அமர்ந்தவள், “சின்ன குழந்தை போல் ஏன் பிடிவாதம் பிடிக்கிறீங்க?”

  “நீ தான் தேவை இல்லாம பிடிவாதம் பிடிக்கிற”

  “நீங்க போறது அபிஷியல் ட்ரிப்.. நான் எதற்கு அதற்கு?”

  “அபிஷியல் ட்ரிப் னா வைஃப்-யை கூட்டிட்டு போக கூடாதா?”

  “பாஸ்போர்ட் கூட எனக்கு இல்லை.. பாஸ்போர்ட் வந்து விசா வரது னு...............”

  “அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் னு சொல்றேனே! பாஸ்போர்ட் ஏஜன்ட் மூலம் சீக்கிரம் வாங்கிடலாம்..”

  அவள் மெளனமாக இருக்கவும் அவன் எரிச்சலுடன், “முன்னாடி இப்படி தான் பிளான் பண்ணி இருந்தேன்.. கல்யாணத்தை கூட இதனால் தான் சீக்கிரம்..............” என்று சொல்லிக் கொண்டே வந்தவன் சட்டென்று நிறுத்தி அவள் முகத்தை பார்த்தான்.

  அவள் புரியாமல், “என்ன?”


  “இதனால் தான் நீ வரலைன்னு சொல்றியா?”

  அவள் இப்பொழுதும் புரியாமல், “எதனால்?”

  அவன் அவள் முகத்தையே பார்க்கவும் அவள், “நிஜமாவே எனக்கு புரியலைங்க.. என்ன சொல்ல வரீங்க?”

  அவன் மனதினுள் நொந்தபடி தவிப்புடன் அவளை பார்க்க, அவள் யோசனையுடன் அவனை பார்த்தாள்.

  அவன் கடைசியாக கூறியதை நினைத்துப் பார்த்தவளுக்கு சில நொடிகளில் அவனது தவிப்பிற்கான காரணம் புரிந்தது.

  அவன் கையை பற்றியபடி, “சவிதாவோட அம்மா ஹெல்த் அண்ட் இந்த மலேசியா ட்ரிப்பை ஹனிமூனாவும் யோசித்து தான் கல்யாணத்தை சீக்கிரம் வச்சீங்களா?”

  சவிதா பற்றிய பேச்சு வரவும் அவன் பெரும் தவிப்புடன் பாவம் போல் ‘ஆம்’ என்று தலையை ஆட்டினான்.

  அவள் மென்னகையுடன், “எதுக்கு இப்படி தவிக்கிறீங்க? அது முடிந்து போன ஒன்று.. அதை பற்றி வருந்தவோ தவிக்கவோ எதுவும் இல்லை.. இப்போ நீங்க சொல்லி தானே இந்த மலேசியா ட்ரிப்பிற்காகவும் தான் கல்யாணம் சீக்கிரம் வச்சீங்கனு எனக்கு தெரிந்தது! ஸோ.. நான் வேண்டாம் சொல்றதுக்கு உங்களது பழைய எண்ணம் காரணம் இல்லை”

  அவளது பதிலில் அவன் மனம் நிம்மதி அடைந்தாலும் அவனது தவிப்பு முற்றிலுமாக விலகவில்லை.

  அதை உணர்த்தது போல் அவள், “இன்னும் என்ன?”

  “ச்ச்.. தெரியலை.. என்னவோ ஒருமாதிரி இருக்குது..” என்று கூறியவன், “நான் ஏன் அதை பற்றி பேசினேன்!” என்று கோபத்துடன் முடித்தான்.

  அவளோ மாறாத மென்னகையுடன் அவன் கையை அழுத்தி பற்றி, “இந்த கோபமும் தவிப்பும் துளி கூட தேவை இல்லை..”


  அவன் இயலாமையுடன் அவளை பார்க்க, அவள், “இப்போ உங்கள் மனதில் நான் தானே இருக்கிறேன்?”

  “ஹ்ம்ம்” என்று அவன் வேகமாக தலையை ஆட்டினான்.

  அவன் ஆட்டிய வேகத்தில் அவளது புன்னகை விரிந்தது. அவள், “அப்பறம் என்ன?”


  அவன் முகம் சற்று தெளிந்தார் போல் இருக்கவும் அவள், “சவிதா கெளதமோட வைஃப் ஸோ அவளை பற்றி பேசாமலேயே நம்மால் இருக்க முடியாது.. ஸோ அவளை பற்றிய பேச்சு என்றாலும் இயல்பாவே பேசுங்க.. முதலில் உங்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.......................”

  அவன் அவசரமாக, “இப்போ அவளை பற்றிய நினைப்பு எனக்கு இல்லவே இல்லை.. ஆனா............”

  “புரியுதுங்க... தேவை இல்லாத அந்த சம்பவம் தான் உங்களை வருத்துதுன்னு புரியுது”

  ‘திருமணம்’ என்ற வார்த்தையை தவிர்த்து சம்பவம் என்று அழகாக கூறினாள்.

  அவளது புரிதலில் அவன் அவள் கையை இறுக்கமாக பற்றினான்.

  அவள், “சவிதா பற்றி பேசும் போது கௌதமையும் சேர்த்து நினைச்சுக்கோங்க.. கொஞ்ச நாளில் தேவை இல்லாதது மறைந்து அவள் கெளதம் வைஃப் என்பது மட்டும் நினைவில் இருக்கும்.. அவளை பற்றி இயல்பா பேசுவீங்க”


  “ஹ்ம்ம்” என்றவன் சில நொடிகள் அமைதியாக இருந்தான். பின், “சரி நீ ஏன் பிடிவாதம் பிடிக்கிற?” என்று பழைய கேள்வியை கேட்டான்.

  “ஏன் அபிஷியல் ட்ரிப்-பை பெர்சனலோடு கம்பைன் பண்றீங்க?”

  “பண்ணால் என்ன?”


  அவள், “சொன்னா கேளுங்களேன்” என்று சிறு இறைஞ்சலுடன் கேட்டாள்.

  அவனோ பிடிவாதத்துடன், “காரணத்தை சொல்” என்றான்.


  காரணத்தை சொல்லமால் அவன் விடமாட்டான் என்பதை புரிந்து அவள், “நீங்க உங்கள் மனதை முழுமையாக உணர்ந்து (அவள் பார்வையை தரையில் பதித்து) நாம் மனம் ஒன்றி வாழ தயாரான பின் சந்தோஷமா ஹனிமூனுக்காக மட்டும் போகலாம்” என்றாள்.

  அவளது வெக்கத்தை மையலுடன் ரசித்தவன் அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான். அவள் விரிந்த விழிகளுடன் சட்டென்று அவனை பார்த்தாள்.

  அதில் மேலும் கவரப்பட்டவன் அவளது கண்களில் மென்மையாக இதழ் பதித்தான்.

  விழிகளை மூடி இதழ்கள் துடிக்க அமர்ந்திருந்தவளின் அழகில் தன்னை மொத்தமாக தொலைக்க தொடங்கியவன் அவளது செவ்விதழை தன் இதழ் கொண்டு மூடினான்.

  சில நொடிகள் நீடித்த அந்த முத்தம் அவள் மூச்சு காற்றுக்கு சற்று திணறவும் தான் முடிவிற்கு வந்தது.

  அவன் மீண்டும் நெருங்கவும் அவள் மென்னகையுடன் அவன் தோளில் கைவைத்து தள்ளியபடி, “ஆபீஸ் கிளம்புற ஐடியா இல்லையா?”


  “ஆபீசில் உற்சாகமா வேலை செய்ய எனர்ஜி வேணுமே! அதான் எனர்ஜி ட்ரின்க் குடிக்கிறேன்” என்று கண்சிமிட்டி கூறியவன் அவள் சுதாரிக்கும் முன் மீண்டும் அவள் இதழ்களை சிறை செய்திருந்தான்.

  அப்பொழுது அவனது கைபேசி அலறவும் அவள் அவனை விலக்கினாள்.

  கைபேசியை எடுத்து பார்த்தவன் அழைத்தது அவனது செயலாளர் என்றதும்,
  பேசாமல் இவன் பெயரை கரடி னு மாத்தி வச்சிரலாம்” என்றான் கடுப்புடன்.

  அவள் வாய்விட்டு சிரிக்க, சிரிக்கும் அவள் இதழில் முத்தமிட்டுவிட்டே அழைப்பை எடுத்தான்.

  அவன், “சொல்லுங்க கிரி”

  “சாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ் சார்.. மிஸ்டர் ஜெயக்குமார் நாலு மணிக்கு இருக்கும் மீட்டிங்-கை காலை பதினோரு மணிக்கு வச்சிக்கலாமா னு கேட்கிறார் சார்.. அதான் போன் பண்ணேன்” என்று சிறு தயக்கத்துடன் முடித்தான்.

  “ஏன்?”

  “அது வந்து சார்”
  என்று அவன் தயங்கவும்,

  அடுத்த கேள்வி கூர்மையுடன் வந்தது, “என்ன பிரச்சனை?”

  “அந்த விக்னேஷ் ஏதோ சொல்லியிருப்பான் போல சார்”

  “அவன் பேச்சை கேட்டு இவர் யோசிக்கிறாரா?”
  என்று அவன் கோபத்துடன் வினவவும்,

  கிரி அவசரமாக, “அப்படி இல்லை சார்.. அவன் பேசியதை நம்பவில்லை என்று தான் சொல்கிறார்.. ஆனால் அவர் பார்ட்னர் கொஞ்சம் யோசிப்பதால் விக்னேஷ் மேலும் குழப்பும் முன் சீக்கிரம் மீட்டிங் வைத்து சைன் பண்ணிடலாம் னு நினைக்கிறார்”

  “லெவனோ க்ளாக் மீட்டிங்கு சரி சொல்லிடுங்க ஆனா மீட்டிங்கு அவர் பார்ட்னரும் வரணும் னு சொல்லுங்க”

  “சார்!”

  “அவர் பார்ட்னர் கண்டிப்பா வரணும்.. வந்தால் மட்டுமே இந்த மீட்டிங் நடக்கும்.. அப்பறம் இன்னொன்றை தெளிவா சொல்லுங்க.. அவர்கள் என் மேல் முழு நம்பிக்கை வைத்தால் மட்டுமே இந்த டீலர்ஷிப் நடக்கும் இல்லை இதுமட்டுமில்லை அவருடன் இருக்கும் மற்ற டீலர்ஷிப்சையும் கேன்சல் பண்ணிடுவேன்னு என்றும் அவர்களுக்கு சம்மதம் என்றால் இன்றே அந்த ஒப்பந்தம் சைன் பண்ணனும் என்பதையும் தெளிவா சொல்லிடுங்க.. ”

  “சார்”
  என்று அவன் அதிர,

  இவனோ கடுமையான குரலில், “சொன்னதை செய்யுங்க” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.

   
  Rabina likes this.
 8. gomathy.arun

  gomathy.arun Well-Known Member

  Joined:
  Dec 5, 2014
  Messages:
  456
  Likes Received:
  385
  Trophy Points:
  63
  Gender:
  Female
  அவன் அழைப்பை துண்டித்ததும் அவன் தோள் மீது கை வைத்த ஊர்மிளா, “எதுக்கு இவ்ளோ கோபம்?”

  சட்டென்று அவனது கோபம் வடிந்திட மென்னகையுடன் தன்னவளின் இடையை வளைத்து பிடித்து அவள் நெற்றியில் செல்லமாக முட்டினான்.

  அவள் கண்ணில் அபிநயத்துடன், “சார் இன்னைக்கு செம்ம மூடில் இருக்கிறீங்க போல!”

  அவன் வசீகர புன்னகையுடன், “ஹ்ம்ம்.. இப்படியே எங்கேயாவது ஓடி போய்டலாமா?”

  அவளும் விரிந்த புன்னகையுடன், “அப்பறம்?”

  “நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கிறேன்?”

  “இல்லையா?”

  அவன் செல்ல கோபத்துடன் முறைக்கவும் அவள் கலகலத்து சிரித்தபடி அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு அவன் கையை விலக்கி, “இப்போ சமத்தா ஆபீஸ் கிளம்புங்க”

  “இப்போ டீச்சர் தான் மக்கா இருக்கிறீங்க!”
  என்று அவன் சிணுங்கலாக கூற,

  அவள் ரசித்து சிரித்தபடி, “டீச்சருக்கு எப்போ எதை செய்யணும் னு தெரியும்.. இப்போ கிளம்புங்க”

  “ஏன்டி என்னை துரத்துறதிலேயே குறியா இருக்கிற?”
  என்று சிறு கோபத்துடன் வினவியவனின் கை மீண்டும் அவள் இடையை வளைத்திருந்தது.

  அவள் மாறா புன்னகையுடன், “ஏன்னா ஸ்டுடென்ட் மக்கு ஸ்டேடஸ்ஸில் இருந்து சுமார் ஸ்டேடஸ்க்கு வந்துட்டாரே!” என்று கூறி கண்ணடித்தாள்.

  பிடியை இறுக்கியவன் மென்னகையுடன், “இது சுமார் ஸ்டேடஸ்ஸா!” என்றான்.

  “செயல் மனம் எல்லாம் சேர்த்தால் சுமார் தான்”

  “அப்போ செயல் அடுத்த ஸ்டேப் போகலாம்?”

  “ஓ! போகலாமே! மனம் அடுத்த ஸ்டேப் போனதும்”
  என்றாள் தலை சரித்து மயக்கும் புன்னகையுடன்.

  அவன் கிறக்கத்துடன், “சந்தோசம் மட்டுமே தரும் அழகான ராட்சசிடி நீ” என்றவன் அவள் இதழில் முத்தமிட்டு விலகினான்.

  அவளது புன்னகையில் மனம் குளிர்ந்தவன் அவள் கன்னத்தில் தட்டி, “ஆபீஸ் போயிட்டு வரேன்.. பை” என்று கூறி கிளம்பினான்.  பதினோரு மணி சந்திப்பிற்கு சித்தார்த்தன் சொன்னது போல் ஜெயக்குமார் தனது பங்குதாரரை அழைத்து வந்திருந்தார்.

  அவர்களை இன் முகத்துடன் வரவேற்ற சித்தார்த்தன், “குட் மார்னிங் மிஸ்டர் ஜெயக்குமார் அண்ட் மிஸ்டர் வேணுகோபால்” என்றபடி இருவருடனும் கை குலுக்கினான்.

  “குட் மார்னிங் மிஸ்டர் சித்தார்த்” என்று ஜெயகுமாரும், “குட் மார்னிங் மிஸ்டர் சித்தார்த்தன்” என்று வேணுகோபாலும் கை குலுக்கினர்.

  சித்தார்த்தன் வேணுகோபாலை பார்த்து, “உங்கள் சந்தேகம் என்ன சார்? சொல்லுங்க” என்றபோது அவன் குரலில் ஆளுமை வந்திருந்தது.

  அவனது நேர்கொண்ட பார்வையும் ஆளுமை நிறைந்த குரலும் அவனிடம் தவறில்லை என்பதை சொல்லாமல் சொல்ல வேணுகோபாலும் நேர்கொண்ட பார்வையுடன், “உங்களிடம் தவறு இருப்பதாக நான் சொல்லவில்லை.. எனக்கு கிடைத்த தகவலை என் நண்பனிடம் பகிர்ந்துக் கொண்டேன்”

  “உங்கள் என்ன தகவல் கிடைத்தது?”

  “SV நிறுவனத்திற்கு நீங்கள் கொடுத்த சரக்கு கலப்படமடைந்ததாக தகவல் கிடைத்தது”

  “அதை அப்படியே நம்பிட்டீங்க?”

  “நான் தான் முதலிலேயே..................”

  “லுக் மிஸ்டர் வேணுகோபால்.. என்னிடம் தவறு இல்லை என்று நீங்கள் நினைத்து இருந்தால் இந்த தகவலை புறம் தள்ளியிருப்பீங்க.. உங்கள் நண்பரிடம் பகிர்ந்திருக்க மாட்டீங்க.. ஸோ உங்களுக்கு என் நேர்மையில் சந்தேகம் வந்துவிட்டது தான் நிஜம்”

  ஜெயக்குமார் அவசரமாக, “அப்படி இல்லை சித்தார்த்...............” என்று ஆரம்பிக்க,

  சித்தார்த்தன், “அதை உங்கள் நண்பர் சொல்லட்டும்” என்றவனின் பார்வை வேணுகோபாலிடம் நிலைத்தது.

  அவரும் அசராமல், “நீங்கள் சொல்வது சரி தான்.. எனக்கு சிறு சந்தேகம் வந்தது தான்.. அதற்கு கரணம் இருக்கிறது” என்று நிறுத்தி அவனை பார்த்தார்.

  அவனோ தீர்க்கமான பார்வையுடன் ‘சொல்லி முடிங்க’ என்பது போல் அமர்ந்திருந்தான்.

  அவர் தொடர்ந்தார், “SV நிறுவனத்துடன் உங்களுக்கு இருக்கும் ஒப்பந்தத்தையும் அது ரத்தான ஒப்பந்தத்தையும் பார்த்தேன்.. கூடவே SV நிறுவத்தின் உரிமையாளர் வினீத்துடன் பேசினேன்”

  சித்தார்த்தன் அமைதியான குரலில், “அந்த ஒப்பந்தங்களை கொண்டு வந்து காட்டியது BEST நிறுவனத்தின் உரிமையாளர் விக்னேஷின் செயலார் சரியா?”

  அவர் சிறு ஆச்சரியத்துடன், “எஸ்” என்றார்.

  இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்தவன், “ஆல்ரைட்.. நீங்கள் சொன்ன ஆதாரங்கள் போலி என்று என்னால் நிரூபிக்க முடியும்.. அதை செய்து தான் என் நேர்மையை உங்களுக்கு புரியவைக்கணும் என்று எனக்கு அவசியம் இல்லை.. என் நேர்மையில் நம்பிக்கை வைத்து என்னுடன் வியாபாரம் செய்யும் வாடிக்கையாளர் எனக்கு போதும்”

  ஜெயக்குமார் பதற்றத்துடன் அவனை பார்க்க வேணுகோபாலோ அமைதியான குரலில், “உங்களை பார்த்ததும்.. நீங்கள் பேச ஆரம்பித்ததுமே உங்களிடம் தவறு இருக்க வாய்ப்பில்லை னு நான் தெளிவாக புரிந்துக் கொண்டேன் மிஸ்டர் சித்தார்த்.. உங்களுக்கு என் மேல் நம்பிக்கை இருந்தால் நாம் சொன்னபடி ஒப்பந்தம் செய்துக் கொள்ளலாம்” என்றார்.

  சித்தார்த்தன் மென்னகையுடன் அவருடன் கை குலுக்கி, “உங்களின் வெளிப்படையான பேச்சு எனக்கு பிடித்து இருக்கிறது.. சொன்னது போல் நாம் ஒப்பந்தம் செய்துக் கொள்ளலாம்” என்றதும் தான் ஜெயக்குமார் நிம்மதியாக மூச்சு விட்டார்.

  மூவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும் சித்தார்த்தன், “இப்பொழுது உங்கள் சந்தேகத்திற்கான விளக்கத்தை சொல்கிறேன்............” என்று ஆரம்பிக்க,

  வேணுகோபால் மென்னகையுடன், “இனி அவசியமில்லை”

  அவனும் மென்னகையுடன், “அது உங்கள் பெருந்தன்மை ஆனால் விளக்குவது என் கடமை” என்றவன் சற்று இறுகிய குரலில், “SV நிறுவனத்துடன் நான் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை.. அவை போலியான பத்திரங்கள்.. BEST நிறுவனத்தின் உரிமையாளர் விக்னேஷிற்கு என்னை எப்படியாவது அதாவது எந்த வழியிலாவது வென்றுவிடும் வெறியே இருக்கிறது.. அதன் வெளிபாடு இது.. SV நிறுவனத்தின் உரிமையாளர் வினீத்தும் விக்னேஷும் நண்பர்கள்”

  வேணுகோபால், “இப்போ புரியுது.. நான் இந்த தொழிலுக்கு புதிது.. ரியல் எஸ்டேட் தான் என் முக்கிய தொழில்.. நான் அந்த பத்திரங்களை முழுமையாக நம்பவில்லை.. மிஸ்டர் வினீத்துடன் பேசிய போதும் எனக்கு முழு நம்பிக்கை வரவில்லை.. வெளியே விசாரித்த போது எல்லோரும் உங்கள் நேர்மையை பாராட்டினார்கள். கூடவே வேறு எந்த நிறுவணும் ஒப்பந்தம் ரத்து செய்ததா தகவல் இல்லை.. இருந்தாலும் கோடி கணக்கில் வியாபாரம் செய்யும் போது சுதாரிப்பாக இருப்பது தப்பில்லையே! அதனால் தான் எனக்கு கிடைத்த தகவலை ஜெயிடம் சொன்னேன்.. அவன் அவசரப்பட்டு உங்களிடம் விஷயத்தை கொண்டு வருவான் என்று நான் நினைக்கவில்லை”

  “உங்கள் நிலை புரிகிறது.. இதை நாம் மறந்து விடுவோம்”

  “சூர்.. எதற்கும் மிஸ்டர் விக்னேஷ் மற்றும் மிஸ்டர் வினீத்திடம் ஜாக்கிரதையாக இருங்க”

  சித்தார்த்தன் மென்னகையுடன், “தேங்க்ஸ்.. நான் பார்த்துக்கிறேன்” என்றான்.

  சில நிமிடங்கள் வியாபாரம் பற்றி பேசிவிட்டு அவர்கள் இருவரும் கிளம்பினர்.

  அவர்கள் கிளம்பியதும் சில தொலைபேசி அழைப்புகளை செய்தவன் விரிந்த புன்னகையுடன் இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்தான்.
  கொஞ்சல் அரும்பும்♥♥♥♥♥♥
  எனை கொஞ்சும் சாரலே!! - Comments
  உங்கள் அன்புத் தோழி,
  கோம்ஸ்.
   
  Rabina likes this.
 9. gomathy.arun

  gomathy.arun Well-Known Member

  Joined:
  Dec 5, 2014
  Messages:
  456
  Likes Received:
  385
  Trophy Points:
  63
  Gender:
  Female
  கொஞ்சல் 13
  [​IMG]
  சித்தார்த்தனின் புன்னகைக்கான காரணம் மதிய வேளையில் தெரியவந்தது. மதிய வேளையில் அணைத்து ஊடகங்களின் புதிய மற்றும் தலைப்பு செய்தியாக இடம்பெற்றது ‘BEST’ நிறுவனம்.

  ஆம்.. BEST நிறுவனத்தின் அனைத்து தொழில் இடங்கள் மற்றும் அதன் உரிமையாளரான விக்னேஷ் வீட்டில் வருமானத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும் ‘உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தின்’ அதிகாரிகள் BEST தொழிற்சாலையில் சோதனையை மேற்கொண்டனர்.  மாலையில் ஊர்மிளா காப்பி அருந்தும் போது காலையில் நடந்தது நினைவில் வரவும் அவள் முகத்தில் வெக்கப்பூக்கள் அரும்பியது. காலையில் கணவன் செய்த சேட்டைகளை நினைத்தபடி மெல்ல சொட்டு சொட்டாக காப்பியையும் ரசித்துக் குடித்தாள்.

  காலையில் அறையின் உப்பரிகையில் நின்று சூர்யோதயத்தை ரசித்து பார்த்தபடி காப்பியை ருசித்துக் கொண்டிருந்தாள்.

  அப்பொழுது பின்னால் இருந்து அவளை அணைத்த சித்தார்த்தன் அவள் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு அவள் காதில், “ஸ்வீட் மார்னிங் அம்லு” என்றான்.

  அவள் புன்னகையுடன், “ஸ்வீட் அண்ட் லவ்லி மார்னிங் சித்” என்றாள்.

  “ஸ்வீட் வார்த்தையில் மட்டும் தான் இருக்கிறது”

  “இந்த ஸ்வீட்டை பப்ளிக்கா சாப்பிடக் கூடாது”

  “இப்போ நீ சாப்பிடலையா!”
  என்றவன் நாடியை அவள் தோளில் பதித்தபடி நின்றான்.

  “நீங்க தான் பிரேக் தி ரூல்ஸ் சொல்ற ஆளாச்சே!”

  அவன் பிடியை சற்று இறுக்கியபடி புன்னகையுடன், “அப்போ நான் சாப்பிடலாம் தானே!”

  அதற்கு பதில் சொல்லாதவள் மென்னகையுடன் சூர்யோதயத்தை பார்த்தபடி, “எனக்கு சன்ரைஸ் பார்க்க ரொம்ப பிடிக்கும்.. அதுவும் இப்படி பால்கனியில் காஃபி குடிச்சிட்டே பார்ப்பது போல் முன்னாடி கற்பனை செய்திருக்கிறேன்”

  இப்பொழுது அவனும் சூர்யோதயத்தை பார்த்தபடி, “அவ்ளோ தானா!”

  அவள் விரிந்த புன்னகையுடன், “ஹ்ம்ம்.. இப்படி உங்கள் அணைப்பில் இதை ரசிக்க ஏங்கி இருக்கிறேன்..”

  அவன் மேலும் பிடியை இறுக்கியபடி, “இப்போ ஹப்பியா?” என்றான்.

  “இந்த நொடியில் உலகத்தில் ரொம்ப ரொம்ப சந்தோஷமானவள் நான் தான்.. மனம் நிறைவா இருக்கிறது” என்றவள் கண்களில் காதலுடன் அவனை நோக்கினாள்.

  அவன் அவள் முகத்தை பார்த்ததும் காதலுடன், “லவ் யூ சித்” என்றாள்.

  சில நொடிகள் காதல் மின்னிய அவள் விழிகளை பார்த்தவன் பின் மெல்லிய குரலில், “நான் சொல்லணும் னு எதிர்பார்க்க மாட்டியா?”

  அவள் அவனது கையை விலக்க முயற்சித்தபடி புன்னகைத்தாள்.

  அவள் விருப்பப்படி கைகளை அவள் இடையில் இருந்து எடுத்தவன் அவளை சிறை செய்வது போல் அவளுக்கு இருபக்கமும் கையை கொண்டு சென்று உப்பரிகையின் கம்பியை பற்றியபடி, “பதில் சொல்லு” என்றான்.

  அவள், “சிலது சொல்லாமலேயே புரியும் ஆனால் அந்த சிலது சொல்லி கேட்கும் போது கிடைக்கும் இன்பத்திற்கு ஈடு இணையில்லை” என்றாள்.

  அவன் அவளையே இமைக்காமல் பார்க்கவும் அவள் வெக்கத்துடன், “உள்ளே போகலாம்” என்றாள்.

  அவன் பார்வையை மாற்றாமல் அவளை கைகளில் ஏந்தவும் அவள் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்.

  அவன் புருவம் உயர்த்த, அவள் விரிந்த புன்னகையுடன் கைகளை அவன் கழுத்தில் மாலையாக்கியபடி, “காஃபி அபிஷேகத்தில் இருந்து தப்பிச்சிட்டீங்க”

  “மிஸ் ஆகிருச்சே!”

  “ரொம்ப வருத்தப்படுவது போல் தெரியுது!”

  “பின்ன! நீ காஃபியை என் மேல் கொட்டி இருந்தால் உன்னையே கிளீன் பண்ண சொல்லியிருப்பேன்”

  “இதில் என்ன இருக்கிறது?”

  அவளது நெற்றியில் முட்டியவன், “உன் உதட்டால் கிளீன் பண்ண சொல்லியிருப்பேன்”

  “ஹே!”
  என்று அவள் சிறு வெக்கத்துடன் அவன் நெஞ்சில் முகத்தை புதைத்தாள்.

  வாய்விட்டு சிரித்தவன் அவள் காதில், “இப்போ ஸ்வீட் தரலாமே!” என்று அவள் காதில் கிசுகிசுத்தான்.

  “ஓ தரலாமே!” என்றவள் அவன் கன்னத்தில் இதழ் பதிக்க போக அவன் சிறிது தலையை பின்னால் நகர்த்தி அவளை மெல்ல இறக்கியபடி, “கேட்டதும் கொடுத்திருந்தால் தான் அங்கே.. இப்போ.......” என்று இழுத்தவன் தனது உதட்டை சுட்டிக் காட்டினான்.

  அவள் வெக்கத்துடன் மறுப்பாக தலையை அசைக்க, அவளை நெருங்கி அவள் இடையை வளைத்தவன், “நீ தானே ஸ்வீட் அண்ட் லவ்லி மார்னிங் னு சொன்ன!”

  “அது..”
  என்று அவள் திணற,

  அவன் அவளது தவிப்பையும் வெக்கத்தையும் ரசித்தபடி, “ஹ்ம்ம்.. கொடு” என்றான்.

  “நீங்க இன்னும் பிரஷ் பண்ணலை” அன்று அவள் கூற,

  அவனோ நெருக்கத்தை அதிகரித்தபடி, “டர்ட்டி கிஸ் கேட்டது இல்லை” என்று கூறி கண் சிமிட்டினான்.

  “இதில் கேள்வி ஞானம் அதிகம் போல!”

  “ஏன் நீ கேள்வி பட்டது இல்லையா?”

  ‘இல்லை’ என்பது போல் உதட்டை பிதுக்கியவள், “இவ்ளோ கேள்வி ஞானம் இருந்துமா அசமந்த மாணவனா இருக்கிறீங்க!”

  “அது வேற டிபார்ட்மென்ட் இது வேற டிப்பார்ட்மென்ட்.. நான் மாணவனா இருப்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் தான்.. இதில் உனக்கு நான் தான் ஆசான்”
  என்றவன் மீண்டும் கண்சிமிட்டினான்.

  அவனது பேச்சு, வயிற்றுக்குள் பல பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்றதொரு உணர்வை அவளுக்கு தந்தாலும் அதை மறைத்து அவனிடம், “டீச்சர் எப்படி?” என்றாள்.

  “காதலை சொல்றதுக்கு முன்னாடியே இப்படி என்றால் காதல் சொன்ன பிறகு எப்படி எப்படிலாம் சொல்லிக் கொடுப்பேன்? நீயே சொல்லேன்!”

  அதற்குமேல் தாக்குபிடிக்க முடியாமல் அவள், “நான் கீழே போறேன்.. கிச்சனில் வேலை இருக்கிறது” என்றபடி விலக பார்க்க,

  “டர்ட்டி கிஸ் எப்படி கொடுக்கிறதுன்னு கத்துகிட்டு போ” என்றபடி அவள் இதழ்களை சிறை செய்தவன் சில நிமிடங்கள் கழித்தே அவளை அறையை விட்டு வெளியேற அனுமதித்தான்.

  அதன் பிறகு அவளையும் மலேசியா வரச் சொல்லி அடம்பிடித்தது என்று அனைத்ததையும் நினைத்தபடி காப்பி அருந்தி முடித்தவள் கோப்பையை உள்ளே இருந்த மேஜையில் வைத்துவிட்டு மீண்டும் உப்பரிகைக்கு வந்து நின்றாள். அவளது எண்ணம் முழுவதையும் இனிமையான முறையில் அவளது மன்னவனே ஆக்கிரமித்திருந்தான்.
  அதே நேரத்தில் புயலின் வேகத்துடன் தனது அறையினுள் நுழைந்த விக்னேஷை சித்தார்த்தன் புன்னகையுடன் வரவேற்றான்.

  விக்னேஷ் கொதிப்புடன், “உன் மனசில் என்ன டா நினைச்சிட்டு இருக்கிற? நீ என்ன பெரிய பருப்பா? நீயெல்லாம் பெரிய ஆளுன்னு எல்லோரும் உன்னை தூக்கி வச்சு கொண்டாடிட்டு இருக்கிறாங்க! அதை கூடிய சீக்கிரம் மாத்துறேன்..........”

  சித்தார்த்தன் விரிந்த புன்னகையுடன், “ஆல் தி பெஸ்ட்” என்றான்.

  அதில் மேலும் கொதிப்படைந்தவன், “டேய்.. வேணாம் உனக்கு என்னை பத்தி தெரியாது.....................”

  சித்தார்த்தன் அலட்சியத்துடன், “எனக்கு தேவை இல்லாதாதை பற்றி நான் தெரிந்துகொள்வதில்லை”

  “ஆனா இனி தெரிஞ்சுக்குவ”

  “அப்படியா?”
  என்று அவன் நக்கலுடன் புருவத்தை ஏற்றி இறக்கினான்.

  “டேய்!!!!!!!” என்று அவன் குரலை உயர்த்தி கத்த,

  “ஓவரா சவுண்ட் விடாத.. இது என் ஆபீஸ்.....................”

  “உன் ஆபீஸ்னா என்ன! நான் நினைத்தால்.....................”

  “ஒன்னும் பண்ண முடியாது”
  என்று அமைதியான குரலில் வெகு அலட்சியத்துடன் கூறினான்.

  “டேய்!”
  என்று ஆவேசத்துடன் கத்தியவன் சித்தார்த்தன் மேஜை மீது இருந்த பொருட்களை கீழே தள்ளினான்.

  அதில் பீங்கான் பூ ஜாடி கீழே விழுந்து உடைந்தது. அதை சுட்டிக் காட்டிய விக்னேஷ், “ஒரு நிமிஷத்தில் உன் மண்டையையும் இப்படி சிதறடிக்க என்னால் முடியும்” என்றான்.

  கால் மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்த சித்தார்த்தன், “என் அனுமதி இல்லாமல் என் ஆபீஸ் பில்டிங் உள்ளேயே நீ வர முடியாது இதில் எப்படி என் அறை வரை வர முடிந்தது னு யோசிக்க மாட்டியா?
  நீ இப்போ சொன்னதை நினைத்து முடிக்கும் முன் அதை நான் செயல் படுத்தி முடித்திருப்பேன்.. அண்ட் உனக்கு தான் என்னை பற்றி தெரியலை.. நான் நினைத்தால் உன்னை ஒண்ணுமில்லாத ஆளா மாற்ற முடியும்..
  உன் ‘BEST’ நிறுவனம் தரத்தில் best இல்லை என்றாலும் உன் மனைவி ஆடிட்டிங் செய்வதால் டாக்ஸ்(tax) ஒழுங்கா கட்டுறனு எனக்கு தெரியும்.. இருந்தாலும் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் ரைடு-க்கு ஏற்பாடு பண்ணது ஹாட் அண்ட் டாப் நியூஸா பேசப்படுவதற்காக தான்.. இது ட்ரைலர் கூட இல்லை.. ட்ரைலருக்கான டீசர் மாதிரி தான்.. மெயின் பிக்சர் காட்டினேன் உருதெரியாம போய்டுவ.. ஜாக்கிரதை”


  “சும்மா வசனம் பேசி ஸீன் போடாத.. உன்னால எதையும் கிழிக்க முடியாது”

  வாய்விட்டு சிரித்த சித்தார்த்தன், “வசனம் பேசியது நீ.. நான் அதற்கு பதில் சொன்னேன்..”
   
  Rabina likes this.
 10. gomathy.arun

  gomathy.arun Well-Known Member

  Joined:
  Dec 5, 2014
  Messages:
  456
  Likes Received:
  385
  Trophy Points:
  63
  Gender:
  Female
  விக்னேஷ் அவனை முறைத்துக் கொண்டு நிற்க, சித்தார்த்தன், “கொடுக்க வேண்டியதை கொடுத்து தரத்தில் தவறு இல்லை னு நீ சொல்ல வச்சிருப்பனு எனக்கு தெரியும்.. ஆனால் நான் நினைத்து இருந்தால் உன்னை அதை செய்ய விடாமால் செய்திருப்பேன்.. FSSAI(Food Safety and Standards of India - உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம்) மற்றும் IT டிபார்ட்மென்ட்டில் நீ வைத்திருக்கும் உன் ஆட்களின் காதிற்கு எட்டாமல் இவ்வளவையும் செய்த என்னால் அதை செய்ய முடியாதுன்னா நினைக்கிற?”

  முதல் முறையாக விக்னேஷின் மனதினுள் சின்னதாக பயம் எழுந்தாலும் அதை புறம்தள்ளியவன் சித்தார்த்தனை கடுமையாக முறைத்துக் கொண்டு நின்றான்.

  சித்தார்த்தன், “இது நீ எனக்கு எதிரா வேணுகோபாலிடம் செயல் பட்டத்திற்கானது இல்லை.. என் நேர்மை உன் திட்டங்களை தவிடுப்பொடி ஆக்கிடும்.. அதனால் அவற்றை பற்றி எனக்கு கவலை இல்லை.. இவ்வளவு நாள் உன் ஆட்டத்தையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்த நான் இன்று இப்படி செய்தற்கான காரணம் அன்று என் வீட்டில் என் மனைவியை நீ பேசிய பேச்சிற்கும் நேற்று மிஸ்டர் குப்தா கொடுத்த விருந்தில் தேவை இல்லாமல் என் பெர்சனல் விஷயத்தை தவறாக பரப்ப முயற்சித்ததிற்காகவும் தான்.. விருந்துக்கு வரலைனாலும் என்னை பற்றிய விஷயம் என் காதிற்கு எட்டிவிடும்”

  அலட்சியமாக தோளை குலுக்கிய விக்னேஷ், “அது எனக்கும் தெரியும்.. அண்ட் நான் ஒன்றும் இல்லாததை சொல்லலையே!”

  “ஓ!”
  என்று இருக்கையில் சாய்ந்தபடி பார்த்த சித்தார்த்தன், “உன் காதல் மனைவி நேர்மைக்கு பெயர் போன நீதிபதியின் மகள் என்றும் அவங்களும் நேர்மையை கடை பிடிப்பவர் என்றும் எனக்கு தெரியும்.. உனது இந்த தரம்கெட்ட செயலை உன் மனைவியிடம் சொன்னால்......” என்று இழுத்து நிறுத்த விக்னேஷின் முகம் சற்று வெளுத்தது.

  சித்தார்த்தன் ஆளுமை நிறைந்த குரலில், “இனி என் பெர்சனல் விஷயத்தில் நீ தலையிடாமல் இருப்பதே உனக்கு நல்லது.. இல்லை என்றால் இழப்பு உனக்கு தான்.. பர்சனல் பிஸினெஸ் இரண்டிலும் இழப்பு நேரிடும்.. என்ன பார்க்கிற! உன் தரம்கெட்ட பேச்சு மற்றும் தரம்கெட்ட பொருட்களின் தயாரிப்பு பற்றி தெரிந்தால் உன் மனைவி உன்னை விட்டு செல்வது உறுதி..
  மீண்டும் FSSAI உன் தொழிற்சாலைக்கு வருவாங்க.. உண்மையான அறிக்கையை வெளியிடுவாங்க.. அத்தோடு அன்றே உன் ரிசார்ட்டில் முன்பு என் ரிசார்ட்டிற்கு நீ செய்ய நினைத்திற்கு மேலாக நடக்கும்.. அதாவது உன் ரிசார்ட்டில் கள்ளக் கடத்தல் மற்றும் விபச்சாரம் நடப்பதாக காட்டப்படும்.. அத்தோடு இப்போ என் அறையில் நீ வெறித்தனமாக நடந்துகொண்ட விடியோ வெளியிடப்படும்.. இப்படி உன் ஷேர் மார்கெட் வேல்யூவும் இறங்கி ஒரே நாளில் நீ செல்லாக் காசாக மாறி ஜெயிலில் இருப்ப”
  என்று முடித்தபோது விக்னேஷ் உள்ளுக்குள் பெரிதும் ஆடித் தான் போனான்.

  குரலை உயர்த்தாமலும் மிரட்ட முடியும் என்பதை தனது ஆளுமையின் மூலம் சித்தார்த்தன் நிரூபித்தான்.

  சிறு பயத்துடனும் இயலாமை தந்த கோபத்துடனும் பதில் பேச முடியாமல் விக்னேஷ் நிற்க,

  கைபேசியில் செயலாளரை அழைத்த சித்தார்த்தன் அழைப்பு எடுக்கப்பட்டதும், “கம் டு மை ரூம்” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.

  அவன் அழைப்பை துண்டித்த அடுத்த நிமிடம் உள்ளே வந்த கிரி விக்னேஷ் கையை பற்றி, “வாங்க சார்” என்றபடி இழுத்தான்.

  அவனது கையை கோபத்துடன் உதறிய விக்னேஷ் சித்தார்த்தனை முறைத்துவிட்டு வேகமாக வெளியேறினான்.

  சித்தார்த்தன் செயலாளரிடம், “இனி அவனோ அவன் ஆட்களோ நம் இடத்தினுள் கால் வைக்க கூடாது”

  “சூர் சார்” என்றவன் சித்தார்த்தனின் கண் அசைவில் வெளியேறினான்.


  சில நொடிகள் எரிச்சலுடன் அமர்ந்திருந்த சித்தார்த்தனின் கை தானாக மனைவியின் கைபேசிக்கு அழைப்பு விடுத்தது.

  அவள் அழைப்பை எடுத்ததும், “அம்லு” என்றான்.

  அவனது ஒன்றை வார்த்தையில் அவள், “என்னாச்சு சித்?” என்றாள்.

  அவளது குரலை கேட்டதும் அவனுள் சிறு அமைதி பிறக்க, “ஒண்ணுமில்லை டா.. சின்ன ஆபீஸ் டென்ஷன்.. அதான் எனர்ஜி ட்ரின்க் குடிக்க போன் பண்ணேன்” என்று முடித்தபோது அவன் குரலில் சிறு விஷமம் கலந்திருந்தது.

  அவன் இயல்பிற்கு திரும்பிக் கொண்டிருப்பதை புரிந்துக் கொண்டவள், “போன் வழியா எனர்ஜி ட்ரின்க் எப்படி குடிப்பீங்க?”

  “நினைத்தால் முடியும்”

  “..”

  “உடனே அமைதியாகிடுவியே! சரி ஏதாவது பேசு”
  .

  “நியூஸ் பார்த்தேன்.. விக்னேஷ் ஆபீஸ் வந்து பிரச்சனை பண்ணாரா?”

  “டீச்சர் செம்ம ஷார்ப்”

  அவன் பேச்சை மாற்றுவது புரிந்து அவளும் அவனை ஒட்டியே பேசினாள்.

  அவள், “காலையில் என்னவோ சொன்னீங்க?”

  “என்ன சொன்னேன்?”

  “சொன்ன உங்களுக்கு தெரியாதா?”

  “நான் தான் மக்கு மாணவனாச்சே! மறந்துட்டேன்”

  “காலையில் யாரோ மக்கு மாணவன் இல்லை டீச்சர் னு சொன்னாங்க”

  அவன் சிரிப்புடன், “அது அப்போ இது இப்போ”

  “ஹ்ம்ஹும்”

  “ஹ்ம்ம்..”
  என்றவன், “இப்போ உன் மாணவனா தான் போன் பண்ணியிருக்கிறேன்” என்றான்.

  “என்னாச்சு சித்? ரொம்ப டென்ஷன் பண்ணிட்டானா?”
  என்று அவளது குரலில் அவன் மனதை நினைத்து சிறு கவலை தெரியவும்,

  அவன், “பிரச்சனை-லாம் இல்லை.. அவனை சமாளிக்கிறது எனக்கு பெரிய விஷயமே இல்லை.. நீ வருந்தும் அளவிற்கு அவன் நம்மை பற்றி பேசவும் இல்லை.. நம்மை பற்றி நினைக்கும் நிலையிலும் அவன் இல்லை.. அவன் போன பிறகு சின்னதா ஒரு மாதிரி எரிச்சலா இருந்தது.. இப்போ உன் குரலை கேட்டதுமே அம் ஓகே”

  “எனர்ஜி ட்ரின்க் வேணுமா சித்?”

  மெலிதாக விசிலடித்தவன் சிரிப்புடன், “இது என்ன கேள்வி!” என்றான்.

  அவள் கைபேசி மூலம் அழுத்தமான முத்தம் ஒன்றை கொடுத்தாள்.

  அதை கண் மூடி அனுபவித்து ரசித்தவன், “தேங்க்ஸ் அம்லு” என்றான்.

  “இதுகெல்லாமா தேங்க்ஸ் சொல்லுவாங்க!”

  “வேற என்ன செய்யணும்?”

  “டீச்சருக்கே தெரியலைனா ஸ்டுடென்ட்க்கு எப்படி தெரியும்?”

  “மை ஸ்வீட் அம்லு”
  என்று கிறக்கத்துடன் கூறியவன் பல முத்தங்களை கொடுத்தான்.

  அவன் நேரில் கொடுத்தது போல் அவளுள் வண்ணத்துப்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தது.

  அவன், “உன் அழகான வெக்கத்தை பார்க்க முடியலையே!”

  “சித்”
  என்று அவள் சிணுங்க, வாய்விட்டு சிரித்தவன், “ஸோ ஸ்டுடென்ட்க்கு மட்டும் தான் முத்தம் கொடுப்ப.. டீச்சருக்கு இல்லை”

  “நான் இதுக்கு முன்னாடி முத்தம் கொடுத்ததே இல்லையா?”

  “அப்பாவும் நான் ஸ்டுடென்ட் மட்டும் தானே!”

  “அது.. நீங்க கன்னத்தில் கேட்டு இருந்தால் காலையிலும் கொடுத்து இருப்பேன்”

  “ஸ்டுடென்ட் அடுத்த கிளாஸ் போக வேணாமா?”

  “அது..”

  “எது?”
  என்று அவளை போலவே சொல்லி காட்டினான்.

  அவள், “இந்த விஷயத்தில் நான் மக்கு ஸ்டுடென்ட்”

  “இந்த விஷயத்தில் நான் சூப்பர் டீச்சராக்கும்.. உன்னை பாஸ் என்ன! சென்டம் வாங்க வைக்கிறேன்”

  “போதும் போதும் போய் வேலையை பாருங்க”

  “உடனே துரத்திருவியே! நீ என்ன பண்ணிட்டு இருந்த?”

  “உங்களை நினைச்சிட்டே காஃபி குடிச்சிட்டு இருந்தேன்”

  “பால்கனியில் இருந்தா?”

  “ஹ்ம்ம்”

  “அப்போ காலையில் கொடுத்ததை நினைச்சிட்டே ரசிச்சு குடிச்ச னு சொல்லு”

  “..”

  “என்ன?”
  என்று அவன் சிரிப்புடன் வினவ,

  அவள் வெக்கத்துடன், “ஆமா” என்றாள்.

  அவன் சற்று கிறங்கிய குரலில், “டேஸ்ட் நல்லா இருந்ததா?”

  “ஹ்ம்ம்”

  “நான் காஃபியை கேட்கலை”


  “நானும் அதை சொல்லலை” என்றவள் அழைப்பை துண்டித்தாள்.

  அவன் புன்னகையுடன் மீண்டும் அழைக்க, அவளோ அழைப்பை எடுக்காமல், ‘ஒழுங்கா வேலையை பாருங்க பாஸ்” என்று குறுஞ்செய்தி அனுப்பினாள்.

  அகமும் முகமும் மலர்ந்தபடி அவன் வேலையை உற்சாகத்துடன் தொடர்ந்தான்.

  அவள் புன்னகையுடன் கைபேசியில் இருந்த அவனது புகைப்படத்திற்கு முத்தம் கொடுத்தாள்.

  கொஞ்சல் அரும்பும்♥♥♥♥♥♥

  எனை கொஞ்சும் சாரலே!! - Comments
  உங்கள் அன்புத் தோழி,
  கோம்ஸ்.
   
  Suganyasomasundaram and Rabina like this.

Share This Page