Gomathy Arun's Enai Konjum Sarale!! / எனை கொஞ்சும் சாரலே!!

Discussion in 'Gomathy Arun Novels' started by Tamilsurabi, Jun 4, 2019.

 1. gomathy.arun

  gomathy.arun Well-Known Member

  Joined:
  Dec 5, 2014
  Messages:
  456
  Likes Received:
  385
  Trophy Points:
  63
  Gender:
  Female
  கொஞ்சல் 14
  [​IMG]
  ஊர்மிளாவிடம் பேசிய சில மணி நேரத்திலேயே சித்தார்த்தன் கிளம்பி வீட்டிற்கு வந்திருந்தான். சுதர்சனமும் சாரதாவும் சாரதாவின் தோழி வீட்டு விசேஷத்திற்கு சென்றிருந்தனர்.

  சித்தார்த்தன் உணவறையில் அமர்ந்து சிற்றூண்டியை உண்டுக் கொண்டிருக்க, ஊர்மிளா எப்பொழுதும் போல் இப்பொழுதும் கண் இமைக்காமல் அவனை ரசித்துக் கொண்டிருந்தாள்.

  அவன், “இப்படி நான் சாப்பிடுறதையே பார்த்துட்டு இருந்தால் எனக்கு வயிறு வலிக்கும்”

  “நான் நீங்க சாப்பிடுறதையா பார்கிறேன்?”

  “ஹ்ம்ம்! சாப்பிடுற உதட்டை பார்க்கிறியோ!”
  என்றவனின் குரல் சாதாரணமாக இருந்தாலும் கண்களோ விஷமத்துடன் புன்னகைத்தது.

  “ஹே! என்ன பேச்சு இது?”

  “ஏன்?”

  அவள் செல்ல முறைப்புடன், “இங்கே வச்சு பேசும் பேச்சா இது?”

  “அப்போ நம்ம ரூமில் பேசலாம் னு சொல்ற!”

  “என்னமோ எதுவுமே பேசாத ஆள் தான் நீங்க!”

  “ஹ்ம்ம்.. உன்னிடம் சரியான பதில் வருவதில்லையே!”

  அவன் சாப்பிட்டு முடித்திருக்க அவள், “மொட்டை மாடிக்கு போகலாமா?” என்றபடி எழுந்தாள்.

  “பேச்சை மாத்தாத”

  “பேச்சைலாம் மாத்தலை.. ஏன் அங்கே போய் பேசாம அமைதியாவா இருக்க போறீங்க?”

  அவன் புன்னகையுடன், “இல்லை தான்.. என்ன திடீர்ன்னு மொட்டை மாடி?”

  “காலையில் சன்ரைஸ் பார்க்கிறது பிடிப்பது போல் இரவின் தொடக்கத்தில் மூன்ரைஸ் பார்க்கிறதும் பிடிக்கும்”

  “காலையில் ரசித்தமாதரியேவா!”
  என்று கேட்டு கண்சிமிட்ட,

  அவள் வெக்கத்துடன் ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டினாள்.

  சட்டென்று எழுந்து அவளை நெருங்கியவன், “வேறு என்னென்ன கற்பனை செஞ்சிருக்க?”

  அவனை தள்ளிவிட்டவள், “நடு கூடத்தில் வைத்து என்ன பண்றீங்க!”

  “கூடத்தில் கூட கூடாதுன்னு யாரு சொன்னது?” என்று சரசமாக அவன் வினவ,

  அவன் வாயில் அடி போட்டவள், “வேலையாட்கள் இன்னும் கிளம்பவில்லை” என்றாள்.

  “அப்போ நாம் மட்டும் வீட்டில் இருந்தால் தப்பில்லை” என்று மென்னகையுடன் புருவம் உயர்த்தினான்.

  கண்களை உருட்டி அவனை மிரட்டியவள், “மொட்டை மாடிக்கு வாங்க” என்றுவிட்டு மொட்டை மாடி நோக்கி சென்றாள்.

  எப்பொழுதும் போல் இப்பொழுதும் அவளது விழிமொழியில் விழுந்தவன் புன்னகையுடன் அவள் பின்னே சென்றான்.

  மொட்டை மாடிக்கு சென்றதும் அவளை பின்னால் இருந்து இறுக்கமாக அணைத்தவன் அவளை போல் நிலாவை பார்த்துபடி, “உன் ரசனை எல்லாம் உன்னை போல் அழகா இருப்பதோடு மனதை குளுமைபடுத்துது”

  அவனது அணைப்பை ரசித்தாலும் அவனது கையை விலக்க பார்க்க, அவனோ பிடியை இறுக்கி, “இந்த இருட்டில் யாரும் நம்மை பார்க்க போறது இல்லை.. அதுவும் இந்த தென்னை ஓலைகளின் மறைவில் இருக்கும் நம்மை யாருக்கும் தெரிய போறதும் இல்லை.. ஸோ அமைதியா மூன்ரைஸை ரசி”

  அவள் மென்னகையுடன் அவன் தோளில் தலை சாய்த்து அவன் கைகளின் மீது தன் கைகளை வைத்தபடி நின்றாள்.

  இருவரும் அந்த ஏகாந்த நிலையை அனுபவித்து ரசித்தனர். அப்பொழுது தென்றல் இதமாக அவர்களை வருடியது.

  “பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
  பக்கத்திலே வேணும் – நல்ல
  முத்துச் சுடர்போலே – நிலாவொளி
  முன்பு வரவேணும், அங்கு
  கத்துங் குயிலோசை – சற்றே வந்து
  காதிற் படவேணும், - என்றன்
  சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
  தென்றல் வரவேணும்.


  பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு
  பத்தினிப் பெண்வேணும்”
  என்ற பாரதியாரின் கவிதையை சொன்னவன் அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு,
  “கன்னத்தில் முத்தமிட்டால் – உள்ளந்தான்
  கள்வெறி கொள்ளுதடீ
  உன்னை தழுவிடிலோ – கண்ணம்மா
  உன்மத்த மாகுதடீ”
  என்று பாடியவன் அவளை திருப்பி இதழில் இதழ் பதித்தான்.


  அவளது கரங்கள் உயர்ந்து அவனது சட்டை காலரை இறுக்கமாக பற்றியது. அவன் அவளது இடையை வளைத்து நெருக்கத்தை கூட்டியபடி அவளது இதழில் கவி பாடினான்.

  சில நொடிகள் கழித்து இதழை பிரித்தவன் அவள் முகத்தை பார்த்தான். அவள் இன்னமும் கண்களை மூடியபடி அவன் இட்டுச்சென்ற மாய உலகினுள்ளேயே இருக்க, அவன் அவளது கழுத்து வளைவில் முகத்தை பதித்தபடி, “கீழே போகலாமா அம்லு” என்றான் கிறங்கிய குரலில்.

  அவளிடம் பதில் இல்லை என்றதும் அவன் மூக்கினால் அவளை உரசியபடி, “அம்லு” என்று அழைத்தான்.

  “ஹ்ம்ம்”

  “கீழே போகலாமா?”
  என்றவனின் கை சற்று முன்னேறவும் சுயம் பெற்றவள் கண்களை திறந்து அவன் கையை பற்றியபடி மெல்லிய குரலில், “நாம இங்கேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசலாமா?” என்றாள்.

  “கீழே போய் பேசலாமே!” என்றவனின் குரல் இன்னமும் கிறக்கத்துடன் தான் ஒலித்தது.

  அவன் கையை சற்று அழுத்தி பிடித்தவள், “சித்” என்று அழைத்தாள்.

  முகத்தை விலக்காமல் அவள் முகத்தை பார்த்தவன் அவள் விழிகளில் தெரிந்த தவிப்பில் சட்டென்று நிமிர்ந்து நின்றான்.

  “சித்” என்று அவளது குரல் மிகுந்த தவிப்புடன் ஒலிக்க, அவள் தோளை சுற்றி கைபோட்டு புன்னகையுடன் அவள் நெற்றியில் முட்டியவன், “என்ன பேசலாம்?” என்றான்.

  “நான்.. உங்களை.. வந்து” என்று அவள் திணற,

  அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவன், “அம்லு.. உன் மனம் எனக்கு புரியுது.. அது தான் சரியும் கூட.. நான் தான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு அவசரப்பட்டுட்டேன்.. ஸோ இதில் நீ பீல் பண்ண ஒன்றுமில்லை”

  “தேங்க்ஸ் சித்” என்றபடி அவன் தோளில் சாய்ந்தாள்.

  பிறகு, “உட்காரலாமா?” என்றாள்.

  “ஹ்ம்ம்” என்றபடி சற்று தள்ளியிறந்த சிமிண்டு பெஞ்ச் நோக்கி அவன் நகர போக, அவன் கையை பற்றி நிறுத்தியவள், “இங்கேயே உட்காரலாம்” என்றாள்.

  ‘இங்கேயா!’ என்பது போல் அவன் பார்க்க,

  அவள், “ஏன் தொரை தரையில் உட்கார மாட்டீங்களோ?”

  அவன் மென்னகையுடன், “மாகாராணியே உட்காரும் போது எனகென்ன?” என்றான்.

  “அது” என்றபடி அவள் சுவற்றில் சாய்ந்தபடி தரையில் அமர, அவனோ அவள் மடியில் தலை வைத்தபடி படுத்து, “இது கூட சூப்பரா இருக்குது” என்றான்.

  அவள் மென்னகைக்கவும் அவன், “இது கூட கற்பனை செய்து இருக்கிறியா?”

  “ஹ்ம்ஹும்” என்று மறுப்பாக தலையாட்டியவள் அவன் முகம் சற்று சுருங்கவும், செல்லமாக அவன் மூக்கை பிடித்து ஆட்டியபடி காதலுடன் நோக்கி, “இதுக்கும் மேல” என்றாள்.

  அவன் கண்கள் ஒளிர, “மேல னா!” என்றான்.

  “இப்படி” என்றவள் அவனது நெற்றியில் மென்மையாக இதழ் பதித்துவிட்டு அவனது சிகையை வருட தொடங்கினாள்.

  அவளது மற்றொரு கையை பற்றி நெஞ்சின் மீது வைத்தபடி கண் மூடினான்.

  சில நிமிடங்கள் கழித்து அவள், “ஒன்னு கேட்கட்டுமா?”

  அவன் கண்களை மூடியபடியே “ஹ்ம்ம்” என்றான்.

  “சித்”

  “ஹ்ம்ம்”

  “விக்னேஷுடன் என்ன பிரச்சனை?”

  கண்களை திறந்தவன் அவள் கண்ணில் தெரிந்த சிறு தவிப்பில், “பிரச்சனை-லாம் இல்லை டா” என்று ஆரம்பித்து மாலையில் நடந்ததை கூறினான்.

  அவள் அவனை முறைக்கவும் அவன் புரியாமல், “என்ன?”

  “உங்களிடம் இதை நான் எதிர்பார்க்கலை?”

  எழுந்து அமர்ந்தவன் சிறு கோபத்துடன், “அவன் நம்மை பற்றி தேவையில்லாமல் பேசுவான்.. என்னை சும்மா விட சொல்றியா?”
   
  Rabina likes this.
 2. gomathy.arun

  gomathy.arun Well-Known Member

  Joined:
  Dec 5, 2014
  Messages:
  456
  Likes Received:
  385
  Trophy Points:
  63
  Gender:
  Female
  அவளும் சிறு கோபத்துடன், “அவனை ஏன் சும்மா விட்டீங்க னு தான் கேட்கிறேன்”

  ஒரு நொடி சிறு அதிர்ச்சியுடன் பார்த்தவன் பின் மென்னகையுடன், “இது போதும் அவனுக்கு.. இனியும் பேசினால் பார்த்துக்கலாம்”

  அவள் இன்னமும் முறைத்துக்கொண்டு இருக்கவும் அவன் அவள் கையை பற்றி, “என்ன டா? எதுக்கு கோபம்?”

  “அவனை ஏன் விட்டீங்க னு கேட்டது அவன் நம்மை பற்றி பெசியதிற்காக இல்லை”

  அவன் புருவசுளிப்புடன், “தென்?”

  “அவனது தயாரிப்பு தரமானது இல்லை னு தெரிந்தும் அவனை தப்பிக்க விட்டுருக்கீங்க”

  “என்ன சொல்ற?”

  “மக்களுக்கு கேடு னு தெரிந்தும் ஏன் இபப்டி செஞ்சீங்க? நீங்க அதை தட்டி கேட்டிருக்க வேணாமா?”

  “ஊர்மி.. நான் ஒன்றும் ஹீரோவோ சீர்திருத்தவாதியோ இல்லை.. எனக்கு என் வேலைகளை பார்க்கவே நேரம் இல்லை.. இதில் அடுத்தவன் செய்யும் தப்பை கவனித்து அவனை எதிர்த்து போராட சொல்றியா?”

  “நான் ஒன்றும் அப்படி சொல்லலை”

  “பின்ன?”

  “நீங்க நினைத்து இருந்தால் உண்மையான அறிக்கை வெளிவந்திருக்கும் தானே! அது மக்களை காத்திருக்கும் தானே!”
  என்று ஆதங்கத்துடன் கூறினாள்.

  அவள் கையை பற்றியவன், “ஊர்மி.. அவனது தயாரிப்பு சற்று தரம் குறைந்தவை அவ்ளோ தான்.. அதனால் மக்களுக்கு பதிப்பு கிடையாது.. அப்படியே என் முயற்சியில் உண்மையான அறிக்கை வந்திருந்தாலும் கோர்ட்க்கு போய் அதை பொய் னு போலியான ஆதாரத்துடன் சொல்லுவான்.. மக்களும் அதை நம்புவாங்க”

  “இருந்தாலும் சிலர் யோசிப்பாங்க தானே!”

  அவள் தோளை சுற்றி கைபோட்டு அணைத்தவன், “சரி என்னால் முடிந்ததை செய்கிறேன்” என்றதும்,

  அவள் விரிந்த புன்னகையுடன், “தேங்க்ஸ்சித்.. லவ் யூ ஸோ மச்” என்று கூறி அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் கொடுத்தாள்.

  “சும்மா இருக்கிறவனை நீ தாண்டி உசுப்பி விடுற” என்றபடி அவன் அவள் இதழை நெருங்கவும் அவள் சின்ன சிரிப்புடன் அவன் நெஞ்சில் கைவைத்து தடுத்தபடி, “பேசிட்டு இருக்கலாம் னு தானே சொன்னேன்”

  “இப்போ நீ என்ன பண்ண?”

  “என்ன பண்ணேன்?”
  என்று அவள் கண்ணில் குறும்புடன் வினவினாள்.

  அவன் புன்னகையுடன் அவள் நெற்றியை முட்டியபடி, “நீ இருக்கியே!” என்றான்.

  பின் மறுபடியும் அவள் மடியில் தலை வைத்து படுத்தபடி, “அம்லு உனக்கு எப்படி என் மேல் காதல் வந்தது?”

  “இது என்ன கேள்வி?”

  “சொல்லுடி”
  என்று சற்று சிணுங்கலாக வந்தது அவனது குரல்.

  “எப்படி காதல் வந்தது னா என்ன சொல்ல?”

  அவன் ஒருபக்கமாக படுத்து அவள் முகத்தை பார்த்து, “அக்சுவலி முதல்ல நான் நீ கௌதமை பார்க்கிற னு தான் நினைத்தேன்” என்று கூற, அவளோ அவனை முறைத்தாள்.

  அவன் விரிந்த புன்னகையுடன், “நிஜமா.. நீ என்னை தான் பார்க்கிறங்கிறதை கண்டு பிடிக்கவே எனக்கு ஆறு மாசம் ஆச்சு”

  “நீங்க தான் மக்கு மாணவனாச்சே!”
  என்று அவள் கிண்டலாக கூற,

  அவன், “நீயே சொல்லு காலேஜில் கெளதம் தானே கெத்து”

  “கெத்து ஓகே ஆனா என் கண்ணுக்கு நீங்க தான் தெரிந்தீங்க”

  “அது அப்பறம் புரிந்தது ஆனா முதலில் தெரியலை”

  “ஏன்?”

  “என்ன தான் அவன் பொண்ணுங்க பக்கமே திரும்பாம ‘அக்னி மன்னன்’ னு பெயர் எடுத்தாலும் அவனை நிறைய பொண்ணுங்க சைட் அடிச்சாங்க தானே!”

  அவள் செல்ல முறைப்புடன், “நான் உங்களை சைட்டா அடிச்சேன்?”

  “ஏன் நீ சைட் அடிக்கலையா?”
  என்றபடி அவன் ஆழ்ந்து நோக்கவும்,

  அவள், “நான் அதை சொல்லலை.. நீங்க சொன்ன அர்த்தம் வேறு”

  “என்ன?”

  “நீங்க சொன்னது சாதரணமா பொண்ணுங்க சைட் அடிக்கிறது.. ஆனா நான்..”
  என்று கூறி அவள் நிறுத்த,

  அவன், “ஹ்ம்ம்.. உன் பார்வை சைட் மட்டுமில்லை அதை தாண்டி மனதை சம்பந்தப்பட்டதா தோன்றவும் தான், நீயா வந்து உன் மனதை சொல்லி நான் மறுக்க வேணாமே னு உன்னை கண்டுகொள்ளாமல் விலகினேன்”

  “ஹ்ம்ம்.. புரிந்தது அதான் நான் உங்களிடம் பேச கூட முயற்சிக்கலை”

  “இப்போ யோசித்து பார்த்தால் என்னவோ அப்போவே எனக்கு உன் மனதை காயபடுத்த முடியலை னு தோணுது”

  “அது அப்படி இல்லை.. நீங்க ரொம்ப நல்லவங்க.. யார் என் இடத்தில்.............”

  “நிச்சயம் இல்லை.. உன்னை போல் யாரும் இருக்க முடியாது.. அப்பாவும் சரி இப்பவும் சரி நீ, நீ தான்.. உனக்கு நிகர் யாரும் இல்லை.. உன் அன்பு தூய்மையானது.. அப்போ நம் காலேஜ் டேஸ்ஸிலும் சரி இப்போ வசந்தன் காலேஜ்ஜில் வைத்து பார்த்தப்பவும் சரி உன் கண்ணில் என்னை கண்டதும் மகிழ்ச்சியும் ஆர்வமும் தெரிந்தாலும் நீ உன் கோட்டை தாண்டி வர மாட்ட என்பது தெளிவாக புரிந்தது”

  “நீங்க தான் தாண்டி வர வச்சிட்டீங்களே!”
  என்றாள் காதலுடன்.

  “ஹ்ம்ம்.. அப்போ உன்னை விலக்கியதும் எனக்காக தான்.. இப்போ உன்னை சேர்த்ததும் எனக்காக தான்.. நான் சுயநலவாதி இல்லையாடா!”


  சிகையை வருடிக் கொண்டிருந்த கையை அவன் கன்னத்தில் வைத்து, “அப்போ என்னை விலக்கலை.. நீங்க தான் விலகி போனீங்க.. அதுவும் உங்களுக்காக இல்லை எனக்காக.. உங்களுக்கு அப்போ என் மேல் காதல் இல்லை ஸோ உங்களின் மறுப்பு என்னை காயப்படித்திட கூடாதுன்னு எனக்காக நீங்க விலகி போனீங்க.. இப்போவும் எனக்காக தான் என்னை கல்யாணம் செய்துகிட்டீங்க.. கௌதம் சவிதாவிற்காக கல்யாணம் செய்துக்க முடிவு செய்த நீங்க உங்க ஸ்டேடஸ்க்கு ஏற்ற பெண்ணை கல்யாணம் செய்து கொண்டிருக்கலாம் ஆனால் நீங்க எனக்காக தான் என்னை கல்யாணம் செய்துகிட்டீங்க” என்றவள் அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

  “நீ என்னோட செயல்கள் எல்லாத்தையும் நியாயப்படுத்துற”

  “நியாயப்படுத்தலை.. உங்கள் செயலில் இருக்கும் நியாயத்தை எடுத்து சொல்றேன்.. அப்பறம்”
  என்று இழுத்து கண்ணில் சிரிப்புடன் அவனை பார்த்தவன், “காதலில் சுயநலம் கூட தவறில்லை” என்று கூறி கண்சிமிட்டினாள்.

  “கலக்குறியே அம்லு! இப்போ நீங்க டீச்சரா மாணவியா?”

  “எப்படி காதலில் மனமும் செயலும் ஒன்றோடொன்று பிணைக்கப் பட்டிருக்கிறதோ அதை போல் தான் இதுவும்”

  “செம்மையா பேசுற வாய்க்கு பரிசு தர வேணாமா!”
  என்றவன் அவள் சுதாரிக்கும் முன் அவளை குனிய செய்து இதழ்களை சிறை செய்தான்.

  சில நொடிகளில் இதழ்களை பிரித்தவன், “இப்போ சொல்லு எப்படி என் மேல் காதல் வந்தது?”

  “திரும்ப முதலில் இருந்தா!”

  “சரி.. என்னை எப்போ முதலில் பார்த்த? எப்படி உன் மனதினுள் காதல் நுழைந்தது?”

  “உங்களை முதலில் பார்த்தது ஒரு புக் ஷாப்பில் வைத்து தான்”

  “எப்போ?”

  “நான் காலேஜ் ஜாயின் பண்றதுக்கு ஒரு வாரம் முன்னாடி பார்த்தேன்”
  என்றவள் அந்த சம்பவத்தை நினைத்து வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

  அவன், “எதுக்கு இப்படி சிரிக்கிற?”

  அவள் சிரிப்பை நிறுத்தாமல் அவனை பார்க்கவும் அவன் செல்ல முறைப்புடன், “சொல்லிட்டு சிரி” என்றான்.

  “அண்ணா கூட தான் வந்தேன்.. காலேஜ் புக் வாங்க வந்தான் நான் கதை புக் வாங்க வந்தேன்.. அப்போ ஒரு இடத்தில் ஒரு சின்ன குழந்தை அழுதுட்டு இருந்தது.. அதை சிரிக்க வைக்க நீங்க பல விதமான எக்ஸ்ப்ரஷன் கொடுத்தீங்க.. அதில் அந்த குழந்தை சிரிச்சிருச்சு.. எனக்கும் செம சிரிப்பு.. ஆனா அதுக்கு அப்பறம் நடந்ததை நினைத்து தான் ரொம்ப சிரிச்சேன்.. நான் வீட்டிற்கு போய் அப்பா கிட்ட சொல்லி விழுந்து விழுந்து சிரித்தேன்”

  அவன் அவளை முறைத்தபடி, “நான் கேவலபட்டது உனக்கு சிரிப்பா இருக்குதா?”

  ஊர்மிளா சிரிக்கும் அளவிற்கு நடந்தது என்னனா.. இவனது முகபாவனைகளை கண்டு அந்த குழந்தை இவனை குனிய சொல்லி மகிழ்ச்சியுடன் இவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு ஓடிவிட்டது. ஆனால் அந்த குழந்தை சென்றதும் இவன் எழுந்து திரும்பிய போது இவனுக்கு வெகு அருகில் நின்ற ஒரு இளைஞன் சிறிது காம பார்வையுடன், “நீ ரொம்ப அழகா இருக்கிற” என்று கூறியபடி இவனை அணைக்க வரவும் இவன் அவனை தள்ளி விட்டுவிட்டு வெளியே தெரித்து ஓடினான். அதன் பிறகு இவன் அந்த கடை இருக்கும் தெரு பக்கம் கூட போகவில்லை.

  ஊர்மிளா இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கவும் இவன் தனது பாணியில் அவளது சிரிப்பை நிறுத்தினான்.


  கொஞ்சல் அரும்பும்♥♥♥♥♥♥

  எனை கொஞ்சும் சாரலே!! - Comments
  உங்கள் அன்புத் தோழி,
  கோம்ஸ்.
   
  Rabina and Suganyasomasundaram like this.
 3. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  849
  Likes Received:
  531
  Trophy Points:
  93
  Gender:
  Female
  nice ud...
   
  gomathy.arun likes this.
 4. gomathy.arun

  gomathy.arun Well-Known Member

  Joined:
  Dec 5, 2014
  Messages:
  456
  Likes Received:
  385
  Trophy Points:
  63
  Gender:
  Female
  கொஞ்சல் 15
  [​IMG]

  இரவு பத்து மணிக்கு சுதர்சனமும் சாரதாவும் வீட்டிற்கு வந்த பொழுது தான் சித்தார்த்தனும் ஊர்மிளாவும் இரவு உணவை எடுத்துக் கொண்டிருந்தனர்.

  சாரதா, “இப்போ தான் சாப்பிடுறீங்களா?”

  “சனக்ஸ் சாப்பிட்டதே ஹெவியா இருந்துச்சு மாம்”
  என்றவன் முடிக்கும் போது ஊர்மிளாவின் இதழ்களை பார்த்துவிட்டு கண்ணடிக்கவும் அவளுக்கு புரை ஏறியது.

  சாரதா அவசரமாக வந்து அவள் தலையை தட்டி தண்ணீரை எடுத்து கொடுத்தபடி, “மெதுவா சாப்பிடு” என்றார்.

  நீரை பருகி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் சித்தார்த்தன் பக்கம் பார்வையை திருப்பாமல், “இப்போ ஓகே அத்தை.. தேங்க்ஸ்” என்றாள் மென்னகையுடன்.

  அவர், “தண்ணி கொடுத்ததுகெல்லாமா தேங்க்ஸ் சொல்லுவ”

  அவள் அதே மென்னகையுடன், “பழகிடுச்சு” என்றவள், “பங்க்ஷன் நல்லபடியா முடிந்ததா அத்தை?”

  “ஹ்ம்ம்.. நல்லபடியா முடிந்தது.. என் பிரெண்ட் உன்னை ஏன் கூட்டிட்டு வரலைன்னு கேட்டா”
  என்றார்.

  இருவரும் உணவை முடித்த பிறகு, சுதர்சன், “சித்து ஆபீஸ் ரூம்க்கு வா” என்றபடி வீட்டில் இருக்கும் அலுவலக அறைக்கு சென்றார்.

  அவன் உள்ளே வந்ததும், அவனை சுதர்சன் ஆழ்ந்து நோக்கவும் அவன் விக்னேஷுடன் நிகழ்ந்த மோதலை பற்றி சுருக்கமாக கூறினான்.

  சுதர்சன், “எதற்கும் கொஞ்சம் கவனத்துடன் இரு”

  “சூர் டாட்.. நம் இடத்தில் இருக்கும் அவன் ஆள் யாருன்னு தெரியும் ஆனால் எனக்கு தெரியும்னு அவன்களுக்கு தெரியாது.. டோன்ட் வொர்ரி டாட்.. ஐ வில் மனேஜ் ஹிம்”

  “ஹ்ம்ம்”
  என்றவர் அடுத்து அவன் மலேசியா செல்லும் பணியை பற்றி பேசிவிட்டு உறங்கச் சென்றார்.


  சித்தார்த்தன் அறையினுள் நுழையவும் இடுப்பில் கைவைத்தபடி அவனை முறைத்தாள் ஊர்மிளா. அவளது முறைப்பிற்கான காரணம் புரிந்தவன் உல்லாமாக சிரித்தான்.

  “ஏன் இப்படி பண்ணீங்க?”

  “எப்படி பண்ணேன்?”

  அவள் முறைக்கவும் அவன் சிரிப்புடன், “இதெல்லாம் சின்ன த்ரில்”

  “உங்களுக்கு த்ரில்லா தான் இருக்கும் எனக்கு தானே கஷ்டம்”

  அவள் கையை மென்மையாக பிடித்தவன், “ரிலாக்ஸ் டா.. அவங்களும்..............”

  “அவங்களும் நம் வயதை தாண்டித் தான் வந்திருப்பாங்கன்னு தானே சொல்லப் போறீங்க!”

  “இதில் எல்லாம் ஷார்ப் தான்”

  “வேறு எதில் இல்லை?”

  “சொல்லவா!”
  என்று கிறக்கத்துடன் சொல்லியவனின் பார்வை அவள் இதழில் பதியவும் அவள், “பேச்சை மாத்தாதீங்க”

  “யாரு நான் பேச்சை மாத்துறேனா!”

  “பின்ன இல்லையா!”

  “டீச்சரம்மா பேச்சை மாத்தியதே இல்லையா?”

  “மாத்தும்படி ஏன் வைக்கிறீங்க?”

  “ஏன் உனக்கு பிடிக்கலையா?”
  என்று அவன் சிறு யோசனையுடன் வினவ,

  அவள் நெற்றியில் லேசாக தட்டியபடி, “மக்கு மாணவா.. நீங்க முதலில் டிஸ்டிங்கஷன் வாங்கினால் உங்கள் மாணவி Phd பண்ண கூட தயார் தான்” என்று கூறி கண் சிமிட்டினாள்.

  விசிலடித்தவன், “நீ Phd பண்ண பிறகு நான் டிஸ்டிங்கஷன் வாங்கினால் என்ன!“

  ஆள்காட்டி விரலை ஆட்டி மிரட்டியவள், “பிச்சு பிச்சு”

  “எதை என் உதட்டையா?”

  “அங்க சுத்தி இங்க சுத்தி இதிலேயே வந்து நில்லுங்க!”

  “புதுசா கல்யாணமானவன் நினைப்பு வேறு எதில் இருக்கும்? வெறும் பேச்சு தானே! அதுக்கும் தடையா!”


  அவள் சிறு வெக்கத்துடன், “எனக்கு தூக்கம் வருது” என்றபடி நகர,

  அவன் அவளது கை பிடித்து உப்பரிகைக்கு அழைத்து சென்றான்.

  அவள், “தூக்கம் வரலையா?”

  “உனக்கு வருதா?”

  “அதை தானே சொன்னேன்?”

  அவன் அவள் கண்களை ஆழ்ந்து நோக்கவும் அவள் பார்வையை தாழ்த்தி, “ப்ளீஸ்” என்றாள்.

  அவன், “பேசிட்டு இருக்க தான் கூப்பிட்டேன்”

  “உங்கள் பேச்சு இன்னைக்கு வேறு எங்கோ இழுத்து செல்லுது”

  அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தவன் அவளை தன் மடியில் அமரவைத்து அணைத்தபடி, “எங்கே இழுத்து செல்லுது?” என்றான்.

  அவள் இன்ப அவஸ்த்தையுடன், “இதை தான் சொன்னேன்”

  “சரி நான் அப்படி பேசலை.. என் மேல் உனக்கு எப்படி காதல் வந்ததுன்னு சொல்லு”

  “இப்படியே உட்கார்ந்தா?”

  “ஹ்ம்ம்”

  “ப்ளீஸ்”

  சிறு பெருமூச்சை வெளியிட்டவன் அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு கையை விலக்கினான். அவன் அருகே இருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்தாள்.

  “ஹ்ம்ம்.. சொல்லு”

  “காதல் எப்படி வந்ததுனா என்ன சொல்ல? எனக்கே தெரியாமல் என் மனசுக்குள் நுழைஞ்சிட்டீங்க”

  அவன் செல்லமாக முறைக்கவும் அவள் சிரிப்புடன், “நிஜமா தான் சொல்றேன்.. அன்னைக்கு அந்த குழந்தையை சிரிக்க வைத்த உங்கள் மனம் எனக்கு பிடித்து இருந்தது.. உங்கள் முகம் என்னையும் அறியாமல் என் ஆழ் மனதில் பதிஞ்சிருச்சு.. உங்களை பார்த்த மூன்று நாட்களிலேயே நீங்க என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணீங்க.. அப்பா கிட்ட போய் சொன்னேன்.. அப்பா ‘இந்த வயத்தில் வருவது தான்.. இதை பாஸிங் கிளௌடாக நினைத்து கடந்து வந்திரணும்’ னு சொன்னாங்க.. ஆனா உங்களை காலேஜ் முதல் நாள் பார்த்ததுமே எனக்கு தெரிஞ்சிருச்சு.. நீங்க பாஸிங் கிளௌட் இல்லை எனது வானம் னு” என்றாள்.

  அவன், “நீ தான் என் வானம்.. அதுவும் அன்பென்ற மழையை பொழியும் வானம்” என்றான்.

  மறுப்பாக தலையை அசைத்தவள், “வேணா இப்படி சொல்லலாம்.. நீங்க என் வானம்.. நான் உங்களை குளிர்விக்கும் நிலவு..” என்றவள் அவன் கண்களை ஆழ்ந்து நோக்கி, “வானம் இல்லையேல் நிலவு இல்லை” என்றாள்.

  அவன் வார்த்தைகளற்ற நெகிழ்ந்த நிலையில் இருந்தான். ‘இவ்வளவு அன்பை வைக்கும் அளவிற்கு நான் என்ன செய்தேன்!’ என்ற கேள்வி அவன் கண்ணில் தெரியவும்,

  வலது கையை அவன் கன்னத்தில் வைத்தவள், “ஏதேனும் காரணம் இருக்கணும் என்றால் அது காதலே இல்லை” என்றாள்.

  அவன் தவிப்புடன் அவளை பார்க்கவும், அவள் கனிவுடன், “என்ன?” என்றாள்.

  தன் மனதில் எழும் எண்ணத்தை சொல்லமுடியாமல் அவன் மறுப்பாக தலையை அசைக்க, அவள், “சொல்லுங்க.. எது உங்களை வதைக்கிறது?”

  “ச்ச்”

  “நீங்க நினைக்கும் விஷயம் என்னை காயப்படுத்திவிடும் னு பயப்படுறீங்களா?”

  அவன் மெளனமாக இருக்கவும் அவள், “முன்பு சொன்னது தான் இப்பவும் சொல்றேன்.. நீங்க இப்படி மனசுக்குள்ளேயே நினைத்து வதைபடுவது தான் எனக்கு கஷ்டமா இருக்கிறது.. ப்ளீஸ் சொல்லுங்க”

  அப்பொழுதும் அவன் தயக்கத்துடன், “என் வாழ்வில் வசந்தத்தை தரும் தென்றலாய்.. மனதை குளிர்விக்கும் நிலவாய்.. எனக்கே எனக்கான சாரலாய் இருக்கிறாய்.. எனக்கும் உன் மேல் காதல் இருக்கிறது னு எனக்கும் புரியுது தான் ஆனால் ஏதோ ஒன்று.. ப்ச்.. எப்படி சொல்ல! என் காதல் முழுமை அடையாத ஒரு தன்மையில் இருப்பது போல் பீல் பண்றேன்..”

  அவனை இதழில் மென்னகையுடனும் விழிகளில் கனிவுடனும் பார்த்தவள், “உங்களுக்கு என் மேல் காதல் இருக்கிறது ஆனால் என் காதல் போல் உங்கள்து ஆழமானதா இல்லையோ னு உங்களுக்கு தோணுது அதான் இப்படி”

  “அது உண்மை தானே!”

  “நீங்க ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ் னு இருக்கிறீங்க..”
  என்று கூறி கையை எடுத்தபடி கண் சிமிட்டியவள் அவன் முகத்தில் மென்னகை உதிக்கவும், “சீக்கிரம் சரியாகும்.. உங்கள் மனம் முழுமையாக காதலை உணர்ந்த நொடியில் இருந்து என்னை விட நீங்க தான் அதிகமா காதலை பொழிவீங்க..”

  அவன் அமைதியாக இருக்கவும் அவள், “உங்களை சமாதானம் செய்ய சொல்லலை.. நிஜமா தான் சொல்றேன்” என்றாள்.
   
  Rabina likes this.
 5. gomathy.arun

  gomathy.arun Well-Known Member

  Joined:
  Dec 5, 2014
  Messages:
  456
  Likes Received:
  385
  Trophy Points:
  63
  Gender:
  Female
  பின் அவள், “உங்கள் மனதை முழுமையா உணர இந்த மலேஷியா ட்ரிப் கூட தோதுவா அமையலாம்”

  அவன் புருவத்தை உயர்த்தவும் அவள், “சில நேரம் தனிமையில் தெளிவு பிறக்கும்” என்றாள்.

  “அதான் வரலை னு சொன்னியா?”

  “இதுவும் ஒரு காரணம்”

  “ஒரு காரணமா முக்கிய காரணமா?”

  “முக்கிய காரணம் தான்.. இன்னொரு காரணம் எனக்கு பிஸ்னஸ் அண்ட் பெர்சனல் மிக்ஸ் பண்ணுவது பிடிக்கலை”

  “இந்த விஷயத்தில் என் மனம் முழுமையாக தெளியும் வரை தான் உன் பேச்சு எடுபடும்.. அப்பறம் எங்கே போனாலும் உன்னையும் கூட்டிட்டு தான் போவேன்”

  அவள் விரிந்த புன்னகையுடன், “பார்க்கலாம்”

  “என்ன பார்க்கலாம்?”

  “எதிர்காலத்தில் சூழ்நிலை எப்படி இருக்குமோ!”

  “ஏன்?”

  அவள் வெக்கத்துடன், “குழைந்தை வந்த பிறகு கஷ்டம்”

  அவளது வெக்கத்தை ரசித்தவன், “அதை அப்போ பார்த்துக்கலாம்” என்றான்.

  பின் அவன், “சரி நான் கேட்டதை சொல்லி முடி.. பேச்சு எங்கெங்கோ போகுது”

  “காலேஜ் முதல் நாள் உங்களை பார்த்தபோது எனக்குள் அபப்டி ஒரு மகிழ்ச்சி.. என்ன தடுத்தும் கேளாமல் என் கண்களும் மனமும் உங்களையே சுற்றவும் தான் என் மனம் உங்களை விரும்புறதை உணர்ந்தேன்”
  என்றவள் காதலுடன் அவனை பார்த்து, “ஐ லவ் யூ ஸோ மச் சித்” என்றாள்.

  எப்பொழுதும் போல் இப்பொழுதும் அவள் விழிகளில் தெரிந்த காதலில் அவன் கட்டுண்டு அமர்ந்திருந்தான்.

  சில நொடிகள் இருவரின் கண்கள் மட்டும் பேசிக்கொள்ள, கோட்டானின் சத்தத்தில் சுயமடைந்தனர்.

  அவள், “வசந்த் அண்ணா காலேஜ்ஜில் வைத்து நீங்க சொன்னது தப்பு”

  “என்ன தப்பு?”
  என்றான் புரியாமல்.

  அவள் மென்னகையுடன், “நீங்க என்னுடன் பேசி இருக்கிறீங்க.. சொல்ல போனால் நீங்க தான் முதலில் பேசினீங்க”

  “அப்படியா?”
  என்று ஆச்சரியத்துடன் கூறியவன், “எப்போ? என்ன பேசினேன்?” என்று ஆர்வத்துடன் வினவினான்.

  அவனது ஆர்வத்தை ரசித்தபடி அவள் அமைதியாக இருக்க, அவன், “சொல்லு அம்லு” என்றான்.

  “நீங்க முதல் முதலில் என்னிடம் பேசியது என்ன தெரியுமா?”

  அவள் ரசித்து வினவிய விதத்தில் அவன் அதிகரித்த ஆர்வத்துடன் மறுப்பாக தலையை அசைத்து, “சொல்லு” என்றான்.

  “ஐ லவ் யூ னு சொன்னீங்க”

  “வாட்!”
  என்று அவன் பெரிதும் அதிர்ந்தான்.

  அவள் விரிந்த புன்னகையுடன் அவனை பார்க்கவும் அவன், “சும்மா விளையாடுறியா அம்லு?”

  அவள் மறுப்பாக தலையை அசைக்கவும் அவன் மீண்டும், “நிஜமாவா?” என்றான் நம்ப முடியாமல்.

  அவள் அந்த நாளை மனகண்ணில் கொண்டு வந்து ரசித்து கூறினாள்.

  ஊர்மிளா சிறு படபடப்புடன் கல்லூரிக்குள் நுழைந்தாள். சற்று தூரம் சென்ற போது “ஏய்! இங்கே வா” என்ற பெண் குரல் கேட்டு திரும்பி பார்த்தாள்.

  ஒரு மரத்தடியில் 3 மாணவர்களும் 2 மாணவிகளும் நின்றிருந்தனர்.

  இவள் அங்கே சென்றதும் திமிருடன் நின்றிருந்த ஒரு மாணவி, “பெயரென்ன?”

  அவள் சிறு பயத்துடன், “ஊர்மிளா”

  “என்ன டிபார்ட்மென்ட்?”

  “கம்ப்யூட்டர் சைன்ஸ்”

  அப்பொழுது ஒரு மாணவன், “சீனியர்ஸ்க்கு குட் மார்னிங் சொல்ல மாட்டியா?”

  “குட்.. குட் மார்னிங் சீனியர்”

  “தினமும் எனக்கு விஷ் பண்ணிட்டு தான் கிளாஸ் போகணும்”

  “ஹ்ம்ம்”
  என்று சிறு பயத்துடனே தலையை ஆட்டினாள்.

  முதலில் பேசிய மாணவி, “ஏய்! இப்போ என்ன பண்ற.. அங்கே வர ஆரஞ்சு ஷர்ட் போட்டவன் கிட்ட போய் ஐ லவ் யூ சொல்லிட்டு வர” என்று முடித்த பொது அவள் பெரிதும் அதிர,

  அவளைவிட அதை சொன்னவளின் நண்பர்கள் தான் அதிகம் அதிர்ந்தனர்.

  ஊர்மிளாவிடம் பேசியவன், “ஹேமா வீணா வினையை விலை கொடுத்து வாங்காதே” என்று கூற,

  ஹேமாவின் தோழி, “ஆமாம் டி.. வேணாம்..” என்று பதற,

  ஹேமா, “ஏன் இப்படி பயப்படுறீங்க?”

  அந்த மாணவன், “நீ பட்டும் திருந்தலையா! இப்படியே பண்ணிட்டு இருந்த கை கால் உடைந்து ஹாஸ்பிடலில் தான் இருப்ப..”

  மற்றொரு மாணவன், “இவ மட்டுமா இருப்பா! இவ கூட இருக்கும் நாமளும் தான்..” என்றான்.

  முதலில் பேசியவன், “ஏதோ சின்ன த்ரில்லுக்காக ராகிங் பண்ண வந்தா இப்படியா கோர்த்து விடுவ!”

  ஹேமாவின் தோழி அவள் காதில் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், “சீனியர்ஸ்சே அமைதியா தான் இருகிறாங்க.. நாம தர்ட் இயர் தான்.. மறந்திடாத” என்றாள்.

  இவர்கள் பேசியதையெல்லாம் கேட்டு ஊர்மிளா பயத்துடன் அந்த ஆரஞ்சு சட்டைகாரனை திரும்பி பார்க்க அப்பொழுது அவள் கண்களுக்கு தெரிந்து அந்த அரஞ்சு சட்டைக்காரன் அருகில் இருந்த ஆகாய வண்ண நிறத்தில் சட்டை அணிந்திருந்த சித்தார்த்தன் மட்டுமே.

  அந்த அரஞ்சு சட்டைக்காரன் வேறு யாருமில்லை கௌதமன் தான்.. இவர்கள் இப்படி பயப்பட காரணம் இருக்கிறது. இந்த ஹேமா முதலாம் ஆண்டில் இருந்த போது நண்பர்களிடம் ‘அக்னி மன்னன் என்று பெயர் பெற்ற கௌதமனை தன்னிடம் காதல் சொல்ல வைக்கிறேன்’ என்று பந்தயம் கட்டி கௌதமனிடம் போலியாக காதல் நாடகம் நிகழ்த்தினாள். இவளின் திட்டம் அறிந்த கௌதமன் தன்னால் ஒரு பெண்ணின் பெயர் கேட்டுவிட கூடாதே என்ற எண்ணத்தில் பொறுமையாக விலகி தான் சென்றான். ஆனால் ஒரு நாள் இவள் மூன்றாவது மாடியில் நின்றுக் கொண்டு அவன் ‘ஐ லவ் யூ’ சொல்லவில்லை என்றால் கீழே குதித்துவிடுவேன் என்று மிரட்டினாள். அதில் பெரிதும் கோபம் கொண்ட கௌதமன் தனது மற்றொரு நண்பன் அஜய் மூலம் கீழே தரையில் ஸ்போர்ட்ஸ்-மேட் விரித்து வைத்துவிட்டு அசராமல் ஹேமாவை மூன்றாவது மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டுவிட்டு அனைவர் முன்னிலும் அவளது சாயத்தை உரித்துவிட்டே சென்றான். அதன் பிறகு ஹேமா அவன் பக்கம் செல்லவில்லை என்றாலும் அவளுள் கோபம் கனன்று கொண்டே தான் இருக்கிறது.

  நண்பர்கள் பயப்படவும் வேறு வழியில்லாமல் ஹேமா கோபத்துடன் ஊர்மிளா முகத்தின் முன் சொடகிட்டு, “ஏய்” என்று அழைத்தாள்.

  அதில் மாயவலையில் இருந்து விடுபட்ட ஊர்மிளா திருதிருவென்று முழித்தாள்.

  ஹேமா, “ஆரஞ்சு சட்டைகாரன் வேணாம்.. அவன் பக்கத்தில் இருக்கிறவன் கிட்ட சொல்லிட்டு வா” என்றாள்.

  ஊர்மிளா அதிர்ச்சியுடன் பார்க்க ஹேமா கோபத்துடன், “என்ன?”

  ஊர்மிளா தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “பெயர் வேணா கேட்டுட்டு வரேன்”

  “அவன் பெயர் நீ சொல்லி தான் எங்களுக்கு தெரியனுமா?”

  ஹேமாவின் தோழி, “விடு டி ரொம்ப பண்ணாத” என்றுவிட்டு ஊர்மிளா பக்கம் திரும்பி, “சரி.. பெயரை கேட்டுட்டு வா.. ஆனா இந்த ரோசை கொடுத்து கேட்கணும்”

  ஊர்மிளா இப்பொழுதும் சிறு மிரட்சியுடன் பார்க்கவும், ஹேமாவின் தோழி, “நான் சொன்னதை செய்றியா இல்லை இவ சொன்னதை செய்றியா?”

  ஊர்மிளா சட்டென்று அந்த ரோஜா பூவை வாங்கி, “நீங்க சொன்னதையே செய்றேன்” என்றாள்.

  ஊர்மிளா மெதுவாக சித்தார்த்தன் மற்றும் கௌதமனை நெருங்கினாள். கௌதமன் அலட்சியத்துடன் நின்றுக் கொண்டிருக்க, சித்தார்த்தன் புருவம் உயர்த்தி இவளை பார்த்தான். அவள் ஹேமா குழுவினரை சிறு பயத்துடன் திரும்பி பார்த்துவிட்டு இவனை தயக்கத்துடன் பார்த்தாள்.

  கௌதமன் சிறு கோபத்துடன், “சீனியர்ஸ் நாமே அமைதியா இருக்கிறோம்.. இவள் பண்ற அலப்பறையை பார்த்தியா!”

  “விடு டா”
  என்ற சித்தார்த்தன் இவளை பார்த்து, “ஐ லவ் யூ சொல்ல சொன்னாங்களா?” என்று வினவியதும் ஊர்மிளாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.

  சித்தார்த்தன், “யாரிடம்?”

  அவள் இன்னமும் அதிர்ச்சி விலகாமல், “ஹன்” என்றாள்.

  அவன், “யாரிடம்?” என்று அழுத்தத்துடன் கேட்கவும் அவள் ஆள்காட்டி விரலால் அவனை சுட்டி காட்டினாள்.

  “சரி.. அவங்க கிட்ட சொல்லிட்டேன் னு சொல்லிட்டு கிளாஸ்க்கு போ” என்றுவிட்டு நகர,

  அப்பொழுது தான் சுயம் பெற்றவள், “உங்..க நே..ம் என்ன?” என்று வினவினாள் திணறலுடன்.

  “தெரிந்து என்ன செய்ய போற! கிளாஸ்க்கு போ” என்றவன் அவளை திரும்பி பார்க்காமல் கௌதமனுடன் தன் வகுப்பிற்கு சென்றான்.

  கொஞ்சல் அரும்பும்♥♥♥♥♥♥

  எனை கொஞ்சும் சாரலே!! - Comments
  உங்கள் அன்புத் தோழி,
  கோம்ஸ்.
   
  Suganyasomasundaram and Rabina like this.
 6. gomathy.arun

  gomathy.arun Well-Known Member

  Joined:
  Dec 5, 2014
  Messages:
  456
  Likes Received:
  385
  Trophy Points:
  63
  Gender:
  Female
  கொஞ்சல் 16
  [​IMG]
  ஊர்மிளா சொன்னதை கேட்ட சித்தார்த்தன் இன்னமும் ஆச்சரியத்துடன், “எனக்கு நியாபகமே இல்லை” என்றான்.

  “என்னை மாதிரி எத்தனை பேர் வந்தாங்களோ! எல்லோரையும் நியாபகம் வச்சுக்க முடியுமா?” என்று அவள் அவனை சீண்டவும்,

  அவளை முறைத்தவன் பின் கிண்டலான குரலில், “இதுக்கா இவ்ளோ பில்டப்!”

  “ஏன்?”

  “என்னவோ காதலுடன் சொன்னது போல் எபக்ட் கொடுத்த!”

  “எப்படி சொன்னா என்ன! நீங்க தான் என்னிடம் முதலில் சொன்னது”

  “முதலில் னா! வேறு யாரும் சொல்லி இருக்காங்களா?”
  என்றவனது குரலில் சிறு பொறாமை எட்டி பார்த்ததோ!

  அவனது குரலின் பேதத்தை கண்டுக் கொண்டவள், “எங்க!!! என்னோட ஒரு தலை ராகத்தை பத்தி தான் காலேஜ்ஜில் அனேக பேருக்கு தெரியுமே!” என்றாள் போலியான சலிப்பு குரலில்.

  அவளை முறைத்தவன், “ரொம்ப தான் சலிச்சுக்கிற!” என்றான்.

  அவள் தலை சரித்து புன்னகையுடன் கண்சிமிட்டவும் அவனும் புன்னகைத்தான்.

  அவள், “உள்ளே போகலாமா?” என்றாள்.

  “என்னாச்சு?”

  “குளிருது”
  என்றதும் இருவரும் உள்ளே சென்றனர்.

  அவன் மெத்தையில் அமர்ந்தபடி, “காலேஜ்க்குகே தெரிந்தது னு சொல்ற.. அப்பறம் எப்படி உன் அண்ணாவுக்கும் வசந்துக்கும் நீ காதலித்தது என்னை தான் னு தெரியலை?”

  அவளும் மெத்தையில் அமர்ந்தபடி, “எனக்கு க்ளோஸ் பிரெண்ட் னா அனிதா மட்டும் தான்.. அவளும் செகண்ட் இயரில் தான் ஜாயின் பண்ணா.. அதுவும் தர்ட் செம் முடியுற நேரத்தில் தான் க்ளோஸ் ஆனோம்.. மத்தவங்க பேசுறதை வைத்து என் காதல் பற்றி தெரிந்தாலும் உங்க பெயர் அவளுக்கு தெரியாது.. என்னிடம் அவள் கேட்டது இல்லை..”

  “நல்ல தோழி” என்று அவன் உணர்ந்து சொல்ல, அவளும் அதை ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினாள்.

  “நம் கல்யாணத்தை பற்றி சொன்னியா?”

  “ஹ்ம்ம்.. அவளுக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம்.. நான் காதலிக்கிற விஷயம் அவ மூலமா தான் அண்ணன்களுக்கு தெரியும்”

  சில நொடிகள் மௌனத்தில் கழிய, அவள், “உங்களிடம் யாரும் ப்ரொபோஸ் பண்ணி இருக்காங்களா?”

  “இல்லை” என்று அவன் தோளை குலுக்கவும்,

  அவள், “நிஜமாவா?” என்று சிறு ஆச்சரிய குரலில் வினவினாள்.

  “இதில் என்ன ஆச்சரியம்?”

  “இல்லை.. நீங்க ஒரு ஸ்மார்ட்டான திறமையான லீடிங் பிஸ்னஸ் மேன்.. அதான்”
  என்று அவள் இழுக்க,

  அவன் மென்னகையுடன், “எதான்?”

  அவள் செல்லமாக முறைக்கவும் அவன் விரிந்த புன்னகையுடன், “இப்படி ஸ்மார்ட்டானவன் திறமையாவன் னு பொண்டாட்டி சொல்லி கேட்பதில் தனி சுகம் தான்” என்றான்.

  அவள் சிறு வெக்கத்துடன், “உண்மையை தானே சொன்னேன்”

  அவன் மென்னகையுடன், “அதை விடு.. சொல்ல வந்ததை சொல்லி முடி”

  “எதை?”

  “அதான் னு நிறுத்தினியே! அதை”

  “அது.. பிஸ்னஸ் சர்க்கிளில் கூட யாரும் ப்ரொபோஸ் இல்லை மரேஜ் னு பேசியது இல்லையா?”

  “உண்மையை சொல்லனுமா பொய் சொல்லனுமா?”

  அவள் லேசாக தலை சரித்து கண்ணை சுருக்கி பார்க்கவும், அதை ரசித்தவன் உதட்டசைவில் முத்தமொன்றை கொடுத்தான்.

  பின் சின்ன சிரிப்புடன், “ஒரு சில பெண்கள் சொத்தின் மீது மோகம் கொண்டு போலியான காதல் மொழிகள் பேசி இருக்காங்க.. ரெண்டு பேர் மரேஜ் செய்துக்க விருப்பம் இருப்பது போல் பேசி இருக்காங்க.. ஒரு சிலர் அவங்க மகளை மரேஜ் செஞ்சுக்க கேட்டு இருக்காங்க.. ஆனா” என்று நிறுத்தியவன் எழுந்து நின்று கையை நீட்டினான்.

  அவளும் எழுந்து நின்று தன் கையை அவன் கை மீது வைக்கவும் அவள் கையை பற்றியவன் அவள் கண்களை ஆழ்ந்து நோக்கி, “உன்னை போல் யாரும் உணர்வு பூர்வமா காதலை சொன்னது இல்லை.. அண்ட்” என்று அரை நொடி நிறுத்தியவன் அவள் கையை சுண்டி இழுத்து மறு கையால் அவள் இடையை அணைத்தபடி, “உன்னை போல் யாரும் என்னை இப்படி உயிருக்கு உயிராக காதலிக்க முடியாது” என்றபடி அவள் நெற்றியில் முட்டினான்.

  முதல் முறையாக அவள் அவனை இறுக்கமாக அணைத்து அவனது நெஞ்சில் இதழ் பதித்தாள். ‘நீ எனக்கு மட்டுமே சொந்தமானவன்’ என்றதை உணர்த்துவது போல் இருந்தது அவளது செய்கை.

  அவளது நெற்றியில் முத்தமிட்டவன் பின் அவளை இறுக்கமாக அணைத்து அவளது தலையில் கன்னம் பதித்து நின்றான். காமமில்லா அந்த அணைப்பில் இருவரும் கட்டுண்டு நின்றனர்.

  நொடிகள் நிமிடங்களாக சித்தார்த்தன் மெல்ல, “தூங்கலாமா அம்லு?” என்றான்.

  தலையை மட்டும் சற்று விலக்கி பார்வையை அவன் முகத்தை நோக்கி நிமிர்த்தி, “உங்களுக்கு தூக்கம் வருதா?” என்று வினவினாள்.

  ‘சும்மாவே வராது.. இதில், நீ இப்படி நின்னு அரை பார்வையுடன் கேட்டா சுத்தம்!’ என்று மனதினுள் நினைத்தவன் அவளிடம் பதில் கூறாமல், “உனக்கு வரலையா?” என்று கேள்வி கேட்டான்.

  “உங்களிடம் சிலது காமிக்கலாம் நினைத்தேன்”

  “உனக்கு இல்லாத நேரத்தையா நித்திராதேவிக்கு கொடுத்திட போறேன்!”

  அவள் மெல்லிய புன்னகையுடன், “இருங்க வரேன்” என்று கூறி அறையில் இருந்த அவளது அலமாரியை திறந்து சிறு பையை எடுத்து வந்தாள்.

  அவன் மெத்தையில் அமர்ந்திருக்க, அந்த பையினுள் இருந்ததை மெத்தை மீது கொட்டினாள்.

  சில நொடிகள் அவள் கொட்டிய பொருட்களை ஆச்சரியத்துடன் பார்த்திருந்தான் சித்தார்த்தன்.

  அவன், “நான் அப்போவே இந்த கெளதம் கிட்ட சொன்னேன்.. ‘அது எப்படி டா என்னோடது மட்டும் காணாம போகும்!’ னு.. அதுக்கு அவன் ‘ஆமா உன்னோடதெல்லாம் அறிய பொக்கிஷங்கள் காணாம போறதுக்கு! நீ கணவனமின்றி தொலைச்சிட்டு காணாம போகுதுனா சொல்ற!’ னு கிண்டல் பண்ணி என் வாயை அடைச்சிட்டான்”

  “என்னை பொறுத்தவரை இவை பொக்கிஷங்கள் தான்”

  “என் பெருமை உனக்கு தெரியுது அந்த பக்கிக்கு தெரியலையே!”

  அவள் மென்னகையுடன், “உங்களுக்கு என் மனம் பற்றி தெரிவதற்கு முன்னாடி தான் இதை எல்லாம் எடுத்தேன்.. அப்பறம் கண்டு பிடிச்சுட்டீங்க னா! அதான்”

  “அறிவு டி” என்று கிண்டலான குரலில் கொஞ்சினான்.

  அவள் சிறிது அசடு வழிய, மென்னகையுடன் அவள் தலையில் லேசாக இடித்தான்.

  பின் கை-கடிகாரத்தை கையில் எடுத்தவன், “இது மகி கொடுத்தது.. இதை தொலைச்சிட்டு அவ கிட்ட எவ்ளோ திட்டும் அடியும் வாங்கினேன் தெரியுமா?” என்றான் செல்ல முறைப்புடன்.

  அவள் சிரிக்கவும் அவன் அவளை இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.

  அவள், “ஏய்!” என்று சிணுங்கியபடி எழ முயற்சிக்க, இரு கரம் கொண்டு அவளது இடையை அணைத்தவன் அவள் கன்னத்தோடு கன்னம் தேய்த்தபடி, “எனக்கு திட்டும் அடியும் வாங்கி தந்த உனக்கு இது தான் பனிஷ்மென்ட்.. இப்படியே உட்கார்ந்து ஒவ்வொன்றையும் எப்படி சுட்ட னு சொல்லு” என்றான்.
   
  Rabina likes this.
 7. gomathy.arun

  gomathy.arun Well-Known Member

  Joined:
  Dec 5, 2014
  Messages:
  456
  Likes Received:
  385
  Trophy Points:
  63
  Gender:
  Female
  அவனது தண்டனையை உள்ளுக்குள் ரசித்தாலும் வெளியே, “ப்ளீஸ் சித்” என்று கெஞ்சினாள்.

  “கேர்ள்ஸ் சைகாலஜியில் வேணாம் னா வேணும் னு தானே அர்த்தம்!”

  “அது என்ன கேர்ள்ஸ் சைகாலஜி! காதலில் ஆண் பெண் எல்லாரோட ஜியும் ஒன்னு தான்”

  அவள் சொன்ன விதத்தில் சிரித்தவன், “ஓகே ஓகே.. இப்போ இந்த வாச்சை எப்படி சுட்ட னு சொல்லு”

  “கால் வலிக்க போகுது”

  “அது என் பிரச்சனை.. நீ சொல்லு”

  “நேரம் ஆனால் நிஜமாவே கால் வலிக்குங்க”

  “அவ்ளோ பெரிய கதையா!!!”

  “என் லவ் உங்களுக்கு கதையா?”

  “சரி அவ்ளோ பெரிய விளக்கமா?”

  “எல்லாத்துக்கும் சொன்னா பெருசு தான்”

  “பரவா இல்லை சொல்லு.. ஒருவேளை நிஜமாவே கால் வலி வந்தா நான் உன் மடியில் உட்கார்ந்துக்கிறேன்”

  “ஹன்.. எனக்கு கால் வலிக்காதா?”

  “இதுக்கே இப்படி சொன்னா எப்படி!”
  என்றவன் அவள் காதில் ரகசியம் பேச, அவள் வெக்கத்துடன், “சீ” என்றபடி அவன் கையை கிள்ளினாள்.

  உல்லாசமாக வாய்விட்டு சிரித்தவன், “சரி சரி.. சொல்லு” என்றான்.

  அவன் தன்னை விட போறதில்லை என்பதை உணர்ந்து அவன் மடியில் அமர்ந்தபடியே சொல்லத் தொடங்கினாள்.

  “இது கௌதம் பரத்டே அன்னைக்கு உங்க கிளாஸ்ஸில் வைத்து பசங்க கேக் கட் பண்ணி கிரீமை பூசி தண்ணியை கொட்டி விளையாடிட்டு இருந்தீங்களே அப்போ எடுத்தேன்.. வாட்ச்சை பத்திரமா வைக்கிறதா நினைத்து நீங்க ஜன்னலில் வச்சீங்க.. நான் அதை எடுத்துட்டேன்” என்றாள் சிரிப்புடன்.

  “சுட்டுட்டேன் னு சொல்லு”

  “அது அப்போ”

  “இப்போ மட்டும் என்ன?”

  “எனக்கு சொந்தமானது ஸோ நான் எடுத்துட்டேன் னு தான் சொல்லுவேன்”

  “நானே உனக்கு சொந்தமானவன் தானே!”
  என்றபடி அவள் கன்னத்தில் இதழ் கொண்டு கோலம் வரைய,

  அவள், “டராக் மாத்தாதீங்க” என்றாள் சிறிது தீவிர குரலில்.

  பழையபடி கன்னத்தோடு கன்னத்தை வைத்தபடி, “ஹ்ம்ம்.. அடுத்து” என்றான்.

  அவள் அடுத்து எடுத்தது அவனது கல்லூரி குறிப்புப் புத்தகம்(NoteBook).

  “இதை ஏன் எடுத்த? எக்ஸாம் முன்னாடி காணும் னு தேடினேன் தெரியுமா?” என்றான்.

  “ரொம்ப ஸீன் போடாதீங்க.. நான் கூட முதல்ல யோசிச்சேன்.. அப்பறம் உள்ளே திறந்து பார்த்ததும் தானே தெரிந்தது!”

  அவன் மென்னகையுடன், “என்ன தெரிந்தது?”

  “ஹ்ம்ம்.. நீங்க ஒரு வெட்டி ஆபீசர் னு”

  “ஹா.. ஹா.. ஹா.. கிளாஸ் கவனிப்பேன் ஆனா நோட்ஸ் எடுக்க பிடிக்காது.. ஸோ ஏதாவது ரொம்ப முக்கியமானதுனா மட்டும் எழுதுவேன்..”

  “அப்போ நிஜமாவே இது இல்லாம கஷ்டபட்டீங்களா?”

  “அப்படிலாம் இல்லை.. நான் எக்ஸாம்க்கு புக் வச்சு தான் படிப்பேன்..”

  “ஹ்ம்ம்”
  என்றவள் அடுத்து அவனது அடையாள அட்டையை எடுத்தாள்.

  அவள், “இது.. ஒரு நாள் கேன்டீனில் உட்கார்ந்து நீங்க இதை கலட்டி கையில் சுத்தியபடி பேசிட்டு இருந்தீங்க.. பேச்சின் நடுவில் டேபிள் மேல வச்சீங்களா நான் அந்த பக்கமா வந்து யாருக்கும் தெரியாமல் எடுத்துட்டேன்”

  “ஹ்ம்ம்.. நான் பைன் கட்டி வேற வாங்கினேன்”

  “அடுத்து”
  என்றபடி அவள் எடுத்தது அவனது கல்லூரி நூலகத்தின் அட்டை.

  அவன், “இதுக்கும் பைன் கட்டினேன்” என்றான்.

  “சாரிங்க.. ஆனா இவையெல்லாம் தான் என்னை கொஞ்சமாவது உயிர்ப்புடன் வைத்திருந்தது” என்று சற்று கரகரத்த குரலில் கூறினாள்.

  அவன், “ஹே! நான் சும்மா தான் டா சொன்னேன்.. உன்னை விட எனக்கு காசா பெருசு!” என்றான்.

  அவள் மென்னகையுடன் அவன் கன்னத்தில் முத்தம் கொடுக்க,

  “நீ மட்டும் ட்ராக் மாத்தலாமா?” என்று வினவியவனின் இதழ்கள் அவள் கன்னத்தில் அழுத்தமாக பதிந்தது.

  அவள், “அது அபப்டி தான்”

  “இது கல்லாட்டம்”

  “நீங்க இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்கும் ஆள்”
  என்று கூற,

  “சரியா சொன்ன” என்று கிறக்கமான குரலில் அவள் காதில் இதழ்கள் உரசியபடி கூறவும் அவள் உடல் மீண்டும் சிலிர்த்தது.

  ‘எனக்கு சொல்ல வேற பழமொழியே கிடைக்கலையா!’ என்று மனதினுள் நொந்துக் கொண்டவள் கஷ்டப்பட்டு தன்னை இயல்பாக காட்டி, “லைப்ரேரி கார்ட் எப்படி எடுத்தேன் னு தெரிய வேணாமா?”

  “ஹ்ம்ம்.. சொல்லு” என்றான் இயல்பான குரலில்.

  “ஒரு நாள் நீங்க மொத்தமா மூணு புக்ஸ் ரிடர்ன் பண்ணிட்டு கார்ட்ஸ் எல்லாத்தையும் பேன்ட் பாக்கெட்டில் வச்சீங்க.. அப்போ இந்த கார்ட் கீழே விழுந்துருச்சு.....”

  “நீ எடுத்துக்கிட்ட”

  “எஸ்”

  “ஹ்ம்ம்.. அடுத்து”
  என்றபடி அவன் அங்கிருந்த பேனாவை எடுத்தான்.

  அவள், “இதில் ஏதும் செண்டிமெண்ட் இருக்குதா?”

  “புரியலை”

  “சிலருக்கு செண்டிமெண்ட் பென் இருக்கும்.. இல்லை நெருக்கமானவங்க ப்ரெசென்ட் பண்ணி இருப்பாங்க.. அபப்டி ஏதும்?”

  “அப்படிலாம் இல்லை ஆனா ரொம்ப நாளா இதை வச்சிருந்தேன்.. மிஸ் ஆனப்ப கொஞ்சம் பீல் பண்ணேன் அப்பறம் சரியாகிட்டேன்”

  “இதை எடுத்த பிறகு மட்டும் கொஞ்சம் பீல் பண்ணேன்.. ஒருவேளை உங்களுக்கு இதில் ஏதும் செண்டிமெண்ட் இருந்தால் நீங்க பீல் பண்ணுவீங்களே னு ஆனா அப்படி செண்டிமெண்ட்டா பீல் பண்ற பென்னை வேறு யாருக்கும் கொடுக்க மாட்டோமே! ஸோ அப்படி ஏதும் இருக்காது னு என்னை நானே தேத்திக்கிட்டேன்”

  “இதை நான் உன்னிடம் தந்தேனா?”

  “ஹ்ம்ம்..”

  “பார் டா! எனக்கே தெரியாம எவ்ளோ நடந்து இருக்குது!”

  அவள் ஒரு காகிதத்தை கையில் எடுத்து, “இந்த பென்னிற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்குது” என்றாள்.

  ‘என்ன!’ என்ற எண்ணத்துடன் அந்த காகிதத்தை பிரித்தவன், “இது...” என்று இழுக்க,

  அவள், “லைப்ரேரி ஸ்டுடென்ட்ஸ் என்ட்ரி ரெஜிஸ்டரில் உள்ள பேப்பர்..”

  “இதை எப்படி சுட்ட?”

  “உங்களோட பொருட்களை உங்களுக்கே தெரியாமல் எடுத்த எனக்கு இதை சுடுவதா கஷ்டம்?”

  “அது சரி..”
  என்றவன், “இது இல்லாம லைப்ரேரியன் எப்படி திண்டாடினாரோ?” என்றான்.

  “அதெல்லாம் ஒன்னும் திண்டாடியிருக்க மாட்டார்.. இதில் அப்படி என்ன பெருசா டிடேல்ஸ் இருக்குது? லைப்ரேரி வந்த ஸ்டுடென்ட்ஸ் நேம், டிப்பார்ட்மென்ட், இயர், டைம் இன் டைம் அவுட்.. அவ்ளோ தானே!”

  “சரி.. இதை எதுக்கு எடுத்த?”

  அவள் அமைதியாக பார்க்கவும் அவன் அந்த காகிதத்தில் பார்வையை ஓட்டினான். அவனது பார்வை ஓர் இடத்தில் நிலைத்தது. அதில் சித்தார்த்தனின் கையெழுத்துக்கு கீழ் ஊர்மிளாவின் கையெழுத்து இருந்தது. அவள் அந்த காகிதத்தை எடுத்ததின் காரணம் புரிந்து அவன் வார்த்தைகளின்றி மௌனமானான்.

  அவள் காதலுடன் இருவரின் கையெழுத்தையும் ஒற்றை விரலால் வருடியபடி பேசத் தொடங்கினாள்.

  “ஒரு நாள் நான் ப்ரீ பிரியடில் லைப்ரேரி போய் செமினாருக்கு நோட்ஸ் எடுத்துட்டு இருந்தேன்.. அப்போ நீங்க வந்தீங்க.. ஏதோ புக் எடுத்துட்டு உடனே கிளம்பினீங்க.. நான் நோட்ஸ் எடுத்து முடிக்கலை.. இருந்தாலும் நானும் கிளம்பிட்டேன்.. உங்களுக்கு அடுத்து ரெஜிஸ்டரில் நான் சைன் பண்ணனும் னு அவசர அவசரமா எடுத்த புக்கை வச்சிட்டு ஓடி வந்தேன்.. மரேஜ் ரெஜிஸ்டரில் தான் உங்க சைன் பக்கத்தில் என் சைன்னை போட முடியாது இதிலாவது போடுவோம் னு ஓடி வந்தேன்.. நான் வேகமா வந்து நின்னதில் நீங்க திரும்பி பார்த்தீங்க.. அந்த நொடி எனக்கு எப்படி இருந்தது தெரியுமா! அவ்ளோ சந்தோசம்.. வானில் பறப்பது போல்.. ப்ச்.. அதை முழுமையா வார்த்தையால் வர்ணிக்கவே முடியாதுங்க.. காலேஜ் முதல் நாள் பார்த்து பேசினதுக்கு அப்பறம் பல நாட்கள் கழித்து அன்னைக்கு தான் உங்களை அவ்ளோ நெருக்கத்தில் பார்த்தேன்.. அதுவும் நீங்க என்னை பார்க்கவும்..........” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கவும் அவனது பிடி இறுகியது.

  அவள் பேச்சை நிறுத்தி, “என்னாச்சு?” என்றாள்.

  அவன் சற்று கரகரத்த குரலில், “நான் என்னடி செய்தேன் உனக்கு! இப்படி உருகி உருகி லவ் பண்றதுக்கு!!”

  “நடுவில் பேசினா எனக்கு ப்ளோ கட்டாகிரும்.. அமைதியா கேளுங்க”
  என்று அவள் கட்டளையிடுவது போல் பேச்சை மாற்ற,

  அவன் அமைதியான குரலில், “சரி சொல்லு” என்றான்.

  “அப்போ உங்களுக்கு என்னை யாருனே தெரியாது தான் இருந்தாலும் அது எனக்கு எதிர் பார்க்காத இன்ப அதிர்ச்சி.. ஒரு நொடி நான் ப்ரீஸ் ஆகி நின்னுட்டேன்.. நீங்க ‘என்ன?’ னு கேட்டது போல் இருந்தது.. அப்பறம் தான் தெளிஞ்சு ‘பென்’ னு சொல்லி சமாளிச்சேன்.. நீங்க ஒருமாதிரி பார்த்துட்டு பென்னை கொடுத்தீங்க.. நான் செம்ம ஹப்பியா ரெஜிஸ்டரில் எழுதிட்டு இருக்கும் போது லைப்ரேரியன் உங்களை எதுக்கோ கூப்பிட்டார்.. நீங்க அவர் கிட்ட போய் பேசிட்டு இருந்தீங்களா நான் நைஸ்ஸா உங்க பென்னோட எஸ் ஆகிட்டேன்” என்று கூறி அவள் கண்சிமிட்ட அவனோ இப்பொழுதும் அமைதியாக தான் இருந்தான்.

  அவனது உணர்ச்சியற்ற முகத்தை பார்த்து அவள், “என்னாச்சு? ஏன் அமைதியா இருக்கிறீங்க?”

  “நாம தூங்கலாமா?”

  ‘என்னாச்சு இவருக்கு?’
  என்ற யோசனையுடன் அவள் இறங்கிய குரலில், “ரொம்ப போர் அடிச்சிட்டேனா?”

  சட்டென்று அவளை தனக்கு நேர்எதிரில் அமர செய்தவன் அவளது கைகளை பற்றி கண்களை மூடியபடி அவள் நெற்றியில் முட்டி தன்னை ஆசுவாசப்படுத்த முயற்சித்தான். அது முடியாமல் போகணும் அவளை இறுக்கமாக அணைத்தவன் அவளது இதழில் முத்தமிட்டான்.

  முத்தம் கொடுத்த வேகத்திலேயே இதழை பிரித்தவன் அவளது கன்னத்தை பற்றி, “என்னால முடியலைடி.. நீ அசால்ட்டா சொல்ற ஆனா ஒவ்வொரு வார்த்தைகளிலும் உன்னோட முகத்திலும் குரலிலும் தெரியும் உணர்வுகளில் வெளிப்படும் உன் காதலின் ஆழம் என்னை திக்குமுக்காட செய்யுது.. என் நெஞ்சை அடைக்குதுடி” என்று மனதின் உணர்ச்சிகளின் போராட்டத்தோடு பேசியவன் முதல் முறையாக ஒரு வன்மையான இதழ் முத்தத்தைக் கொடுத்தான்.

  கொஞ்சல் அரும்பும்♥♥♥♥♥♥


  எனை கொஞ்சும் சாரலே!! - Comments
  உங்கள் அன்புத் தோழி,
  கோம்ஸ்.
   
  Rabina likes this.
 8. gomathy.arun

  gomathy.arun Well-Known Member

  Joined:
  Dec 5, 2014
  Messages:
  456
  Likes Received:
  385
  Trophy Points:
  63
  Gender:
  Female
  கொஞ்சல் 17
  [​IMG]
  எதிர்பாராத அவனது வேகத்தில் அவள் சிறு மிரட்ச்சியுடனும் அதிர்ச்சியுடனும் கண்களை இறுக்கமாக மூடினாள்.

  அவளது மிரட்ச்சியையோ அதிர்வையோ உணரும் நிலையில் சித்தார்த்தன் இல்லை. மூச்சு காற்றுக்கு சற்று திணறவும் அவள் அவனது நெஞ்சில் கைவைத்து சிறிது தள்ளவும் முத்த யுத்தத்தை நிறுத்தியவன் அந்த நொடியில் தான் தனது செயலை உணர்ந்தான். தனக்குள் இப்படி ஒரு வேகமா என்று சிறிது அதிர்ந்தான்.

  சில நொடிகள் மௌனத்தில் கழிய, சித்தார்த்தன் குற்றஉணர்ச்சியில் தவிக்க, ஊர்மிளா மிரட்சியில் இருந்து வெளிவந்து இயல்பாகியிருந்தாள்.

  அவன் அவள் முகத்தை பார்க்காமல், “சாரி” என்றான்.

  அவன் எதற்கு மன்னிப்பு கேட்கிறான் என்பதை அறிந்தும் அறியாதவள் போல், “எதற்கு?” என்றாள்.

  அவன், “நான் வேணும் னு செய்யலை.. எனக்கே தெரியலை.. ஏன்! எப்படி! இப்படி நடந்துக்கிட்டேன் னு”

  அவள் அமைதியாக இருக்கவும் அவன் தவிப்புடன் அவள் முகத்தை பார்த்தான்.

  அவனது தவிப்பை பார்க்க முடியாமல் அவள் மென்னகையுடன் அவன் கன்னத்தில் கையை வைத்து, “நீங்க ரொம்ப மென்மையானவங்க” என்று கூறி அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

  இரண்டு நொடிகள் கழித்தே அவனது கைகள் அவளை மென்மையாக அணைத்தது. இப்பொழுதும் ‘நானா இப்படி!’ என்ற கேள்வி அவனுள் இருந்தாலும் தன்னவளின் செய்கையில் குற்றஉணர்ச்சி நீங்கியது.

  ‘எதனால் இப்படி நடந்துக் கொண்டேன்? அவளை போல் நான் அவளை காதலிக்கவில்லை என்ற குற்ற உணர்ச்சி இபப்டி செயல் பட வைத்ததா? இல்லை என் மனதில் இருக்கும் காதலை சொல்லாமல் பொத்தி வைப்பது இப்படி வெளி வருதா? ஆனால் என் மனதில் முழுமையா காதல் வந்து விட்டதா? அவள் காதலை பார்த்து தான் என்னுள் காதல் மலர்ந்தது.. ஆனால் இது சரியா? அவளை அவளுக்காக இயல்பா தானே நான் காதலிக்கணும்! அது தானே அவளுக்கும் அவள் என் மேல் கொண்ட காதலுக்கும் மரியாதை..’ என்று குழம்பியவன், ‘காதல் எதனால் எப்படி வரும்? ஒருவரது குணம் நமக்கு பிடித்து இவருடன் நம் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும் என்ற எண்ணம் தான் காதலோ? அப்படி என்றால் அம்லு காதலை பார்த்து மலரும் என் காதல் சரியே’ என்று தனக்கு தானே சமாதானம் செய்தவன் பின், ‘ஆனா இன்னும் எதை என் மனம் எதிர் பார்க்கிறது? ஒருவேளை அவள் அளவிற்கு காதலிக்க தொடங்கிய பிறகு என் மனம் திருப்தி பெறுமோ? அம்லு அளவிற்கு என்னால் காதலிக்க முடியுமா?’ என்று யோசித்தவன் அடுத்த நொடியே, ‘ஏன் முடியாது? முடியும்.. முடியனும்!’ என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.

  இவ்வளவையும் சில நொடிகளில் அலசி ஆராய்ந்த பிறகே அவனுள் சிறு தெளிவு பிறந்தது. இந்த வன்மையான முத்தத்தை பற்றிய வினா இப்பொழுதும் அவன் நெஞ்சின் ஓரத்தில் இருக்கிறது தான்.

  அவனது மௌனத்தை கலைக்கும் விதமாக அவள் மெல்ல விலகி, “உங்களுக்கு பென்னை என்னிடம் கொடுத்தது நியாபகம் இல்லையா?”

  ‘இல்லை’ என்பது போல் உதட்டை பிதுக்கியவன், “நான் மினி ப்ராஜெக்ட் லைப்ரேரி வைத்து தான் செய்திருந்தேன்.. லைப்ரேரியன் அதையே இன்னும் டெவெலப் பண்ணி தர முடியுமா னு கேட்டார்.. நான் சரி சொன்னதும், அவருக்கு தேவையானதை பற்றி சொல்லிட்டு இருந்தார்.. அவரிடம் பேசிட்டு கிளம்பும் பொது பென் நியாபகமே இல்லை.. அப்பறம் பென்னை தேடும் போதும் உன்னிடம் கொடுத்தது சுத்தமா நியாபகம் இல்லை”

  “ஓ!” என்று அவள் சாதாரணமாக தான் சொன்னாள் ஆனால் அவனுக்கு அவள் உள்ளுக்குள் வருந்துகிறாளோ என்று தோன்றியது.

  அவன், “சாரி.. எனக்கு என்ன சொல்லனே தெரியலை...............” என்று வருந்தும் குரலில் பேசிக் கொண்டிருக்க,

  அவள், “நீங்க எதுக்கு பீல் பண்றீங்க? இதில் உங்க தவறு எதுவுமே இல்லை.. சொல்லப்படாத காதலின் நிலை இது தான்.. பழசை விடுங்க.. இப்போ நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன்..” என்றவள் அவனை சகஜமாக்கும் எண்ணத்துடன் தலை சரித்து மென்னகையுடன், “எல்லாத்துக்கும் சேர்த்து இப்போ காதல் மழை பொழிய மாட்டீங்க!” என்று வினவவும்,

  “நிச்சயமா” என்றவன் அவள் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டான்.

  “சரி தூங்கலாம்” என்றாள்.

  அவன், “அவ்ளோ தானா நீ சுட்ட பொருட்கள்?”

  அவள் செல்லமாக முறைக்கவும் அவன் மென்னகையுடன், “சரி.. அவ்ளோ தானா நீ எடுத்த பொருட்கள்?”

  “ஹ்ம்ம்.. அவ்ளோ தான்.. நீங்க என் மனதை கெஸ் பண்ணிட்டீங்க அதனால் எடுக்கிறதை விட்டுட்டேன்.. இல்லைனா உங்களோட சன்-க்ளாஸ், லேப்(lab) கோட், வண்டி கீ செயின், கேப்(CAP) எடுத்து இருப்பேன்”

  “அட பாவி” என்றவன் பின் கிண்டலான குரலில், “நான் சாப்பிட்ட சாக்லெட் பேப்பர்-லாம் எடுத்துக்கலையா!”

  “எதுக்கு என் பையை எறும்பு மொய்க்கவா?”

  “வெவரம் தான்”
  என்று கிண்டலாக சொன்னவன் பொருட்களை பையினுள் வைக்க ஆரம்பித்தான். அவளும் அவனுடன் சேர்ந்து எடுத்து வைத்தாள்.

  அவள் கடைசியாக எடுத்த பொருளை பார்த்தவன், “ஹே! அது என்னது! நான் பார்க்கவே இல்லையே! என் போட்டோ வா?” என்று ஆச்சரிய குரலில் வினவியபடி அதை அவளிடமிருந்து வாங்க கையை நீட்டினான்.

  சட்டென்று அதை உள்ளே வைத்து பையை மூடியவள் அவன் முகம் பார்க்காமல், “அது ஒன்றுமில்லை” என்றபடி பையுடன் நகர பார்த்தாள்.

  ஆனால் அவளை நகர விடாமல் அவள் கையை பற்றியவள், “அதை காட்டு” என்றான்.

  அந்த பொருளை மட்டும் அவள் தனியாக தான் வைத்திருப்பாள்.. அன்று அவர்கள் திருமணம் நிகழ்ந்த அன்று அவள் அதை பார்த்து அழுது கொண்டிருந்த பொழுது தான் சித்தார்த்தன் கதவை தட்டினான்.. அந்த நேரத்தில் அவசரமாக இந்த பையினுள் வைத்தவள் அதன் பிறகு அதை எடுக்கவே இல்லை.

  தற்போது அவன் இருக்கும் மனநிலையில் அதை காட்டி அவனை வருத்த வேண்டாம் என்ற எண்ணத்துடனும் தன்னாலும் அதை பார்த்தால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது என்ற எண்ணத்துடனும் தான் அவள் மறுத்தாள்.

  ஆனால் அவன் விடாமல் கேட்கவும் வேறு வழி இல்லாமல் அதை எடுத்து கொடுத்தாள்.

  அதை பார்த்தவன் சிறு அதிர்வுடன் அவளை திரும்பி பார்த்தான்.

  அது ஒரு சிறிய காகிதம்.. அதை மென்தகடாக்கு(Laminate) செய்து வைத்திருந்தாள். அவள் அதை பையினுள் வைக்கும் முன் அதன் பின் புரத்தை மட்டும் பார்த்ததால் தான் அவன் அது புகைப்படமாக இருக்கும் என்று நினைத்தான்.

  அவன், “இதை நான் உனக்கு எழுதி கொடுத்தேனா?” என்று அதிர்ச்சி விலகாமல் கேட்டான்.

  ‘எனக்கு நியாபகமே இல்லையே! இதை எப்படி மறந்தேன்?’ என்பதே அவனது அதிர்ச்சிக்கு காரணம்.

  அந்த காகிதத்தில் “ALL THE BEST” என்ற வாக்கியமும் அதன் கீழே அவனது கையெழுத்து தேதியுடன் இருந்தது. அந்த தேதி அவனது கல்லூரி இறுதி நாள்.

  அவனது கேள்விக்கு அவள் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் தலையை ஆட்டினாள்.

  அவன், “என்ன சொல்ற அம்லு?”

  அதை அவனிடமிருந்து வாங்கியவள் அதை கலங்கிய விழிகளுடன் வருடியபடி, “இதை நீங்க தான் எழுதினீங்க ஆனா எனக்கு இல்லை” என்றவளது பார்வை அந்த காகிதத்தில் தான் இருந்தது.

  அவன் புரியாமல், “வேற யாருக்கும் எழுதி கொடுத்ததை சுட்டுட்டியா?”

  ‘இல்லை’ என்பது போல் தலையை ஆட்டியவள், “இது நான் கேட்டு தான் எழுதினீங்க ஆனா எனக்காக எழுதலை”

  “குழப்பாம சொல்லு”

  “என் கிளாஸ்மேட் ஒருத்தி கௌதம் ஆர்கிஷ்டட்ரா ட்ரூப்பில் இருந்தாள்.. அவளை கெஞ்சி கேட்டதால் எனக்காக உங்களிடம் எழுதி வாங்கினாள்.. அதுவும் நேரிடையா உங்களிடம் வந்து கேட்கலை..
  உங்க காலேஜ் லாஸ்ட் டே அன்னைக்கு நீங்களும் கௌதமும் தனியா இருந்தப்ப அவ என்னோட ஆட்டோகிராஃப் புக்கை எடுத்துட்டு வந்து முதலில் கௌதம் கிட்ட கேட்டா.. அவன் M.E அங்கேயே படிக்க போவதால் தேவை இல்லைன்னு சொல்லி எழுதலை.. அப்பறம் அவள் உங்களிடம் கேட்டாள்.. கொஞ்சம் யோசிச்ச நீங்க அப்பறம் தோளை குலுக்கிட்டு இதை எழுதி கொடுத்தீங்க..
  அன்னைக்கு தான் உங்களை நான் கடைசியா பார்த்தது.. அப்பறம் இங்கே வசந்த் அண்ணா காலேஜ்ஜில் தான் பார்த்தேன்..
  தினமும் இதில் தான் கண் விழிப்பேன்.. அதுவும் எனக்கு மனசு கஷ்டமா இருக்கும் போதெல்லாம் இதை நெஞ்சோடு அணைச்சிட்டு கண்ணை மூடி உட்கார்ந்திருவேன்”
  என்றவள் கண்களில் இருந்து கண்ணீர் வடியத் தொடங்கியது.

  அவனும் கலங்கிய கண்களுடன் அவளை இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

  சில நொடிகளில் அவளது அழுகை கூடவும் அவன் பதறியபடி அவளை விலக்கி தோளை சுற்றி கை போட்டு அரவணைத்தபடி, “அதையெல்லாம் மறந்திரு டா.. இப்போ தான் நான் உன் கூடவே இருக்கிறேனே! உன் ஆசை படி நாம் ரொம்ப சந்தோஷமா வாழ்வோம்.. நீயே சொன்னது போல் எல்லாத்துக்கும் சேர்த்து நான் என்னோட காதல் மழையில் உன்னை நனைய வைப்பேன்” என்று முடித்தபோது அவனது கையில் அழுத்தம் கூடியது.

  அவள் ‘இல்லை’ என்று மறுப்பாக தலையை ஆட்டவும்,

  அவன், “நிஜமா தான் டா சொல்றேன்.. நாம நிச்சயமா வாழ்க்கையை அனுபவித்து ரசித்து காதலுடன் இனிதாக வாழ்வோம்” என்றான்.

  அவளோ அவன் தோளில் சாய்ந்து அழுதாள்.

  ‘சரி இத்தனை நாட்கள் பூட்டி வைத்த வேதனைகளை அழுகையில் வெளியேறட்டும்’ என்று நினைத்து அவன் அவளை அழ விட்டான்.

  ஆனால் அவள் அழுகையை நிறுத்துவதாக தெரியவில்லை. அவள் அவனை இறுக்கமாக அணைத்து நெஞ்சில் முகத்தை புதைத்தபடி அதிகமாக அழுதாள்.
   
  Rabina likes this.
 9. gomathy.arun

  gomathy.arun Well-Known Member

  Joined:
  Dec 5, 2014
  Messages:
  456
  Likes Received:
  385
  Trophy Points:
  63
  Gender:
  Female
  அவளது அழுகையை பார்த்தவனுக்கு அவள் மனதில் வேறு எதுவும் வருத்தம் இருக்கிறதோ என்ற சந்தேகம் வந்தது.

  அவன் அவள் தலையை வருடி, “என்னாச்சு அம்லு? உன் மனசை எது வருத்துது?” என்று பரிவுடன் கேட்டான்.

  அவள் இருக்கும் நிலையில் மாற்றம் இல்லை என்றதும் அவளது நாடியை பிடித்து அவள் முகத்தை நிமிர்த்தியவன், “என்னாச்சு டா? சொன்னா தானே தெரியும்” என்றான்.

  அவனை பார்த்தவளின் விழிகளில் தவிப்பும் பெரும் துயரும் தெரியவும் அவன் மெல்லிய குரலில், “அப்பா நியாபகம் வந்திருச்சா டா?” என்றான்.

  அவள் சற்று சத்தமாக அழுதபடி அவனை இன்னும் இறுக்கமாக அணைத்தாள்.

  அவன் மெல்ல நகர்ந்து மெத்தையில் அமர்ந்து ஒரு குழந்தையை தாங்குவது போல் அவளை தன் மடியில் தாங்கினான். இத்தனை நாட்கள் தனக்கு அன்பு மற்றும் காதல் மழை பொழிந்த தன் மனைவிக்கு அவன் தாயாக மாறினான்.

  அவள் முதுகை மெல்ல வருடியபடி, “உன் அப்பாவுக்கு நீ அழுதா பிடிக்குமா? மாமா உன்னோடவே தான் இருக்காங்க.. இப்போ கூட நீ அழுறதை பார்த்து வருத்தப்பட்டுட்டு தான் இருப்பாங்க” என்றதும் அவள் அழுகை மெல்ல குறைந்தது.

  அவள் தோளைத் தட்டி கொடுத்தபடி, “மாமா தான் தெய்வமா இருந்து உன் ஆசையை நிறைவேற்றி, எனக்கு இந்த தேவதையை கொடுத்து இருக்காங்க” என்றவன் அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.

  மெல்ல கண்களை துடைத்துக் கொண்டவள், “சாரி” என்றாள்.

  அவன், “எதுக்கு?”

  அவள் மெளனமாக இருக்கவும் அவன், “உன் சுகம் துக்கம் எல்லாத்தையும் என்னிடம் பகிர்ந்துக்காம வேறு யாரிடம் பகிர்ந்துக்க போற!” என்றவன் சிறு கண்டிப்பு குரலில், “நீ இப்படி சாரி சொல்லாத” என்றான்.

  அவள் ‘சரி’ என்பது போல் தலையை ஆட்டினாள்.

  அவன், “என்னாச்சு? ஏன் திடீர்ன்னு இப்படி அழுத?”

  “அது”

  “சொல்லிரு டா..”
  என்று அவன் கனிவுடன் கூறவும்,

  அவள் அவன் தோளில் தலை சாய்த்து அந்த காகிதத்தை கையில் பிடித்தபடி, “நீங்க எழுதி கொடுத்த அன்னைக்கே இதை லமினேட் பண்ணிட்டேன்.. டெய்லி காலையில் எழுந்திச்சதும் முதலில் இதை தான் பார்ப்பேன்.. அப்பறம் எக்ஸாம் டேஸ் கிளம்புறதுக்கு முன்னாடி பார்ப்பேன்.. அப்படி தான் என்னோட பஸ்ட் இயர் லாஸ்ட் எக்ஸாம் அன்னைக்கு பார்த்துட்டு இருந்தப்ப அப்பா என் ரூமுக்கு வந்தாங்க.. அப்பா வந்ததை கூட கவனிக்காமல் நான் இதை பார்த்துட்டு இருந்தேன்.. அப்பா ‘என்னது’ னு கேட்டதும் நான் பதறி எழுந்து முழிச்சேன்.. அப்பா அதை வாங்கி பார்த்துட்டு ‘யாரு கொடுத்தா?’ னு கேட்டதும் நான் அந்த ஒரு வருஷம் நடந்ததை சொன்னேன்.. அப்பா என் தலையை வருடி, ‘இது இந்த வயசில் வரது தான்’ னு ஆரம்பிக்கவும் நான் இது அப்படி இல்லை என் மனதில் இருப்பது காதல் தான் னு உறுதியா சொன்னதும் அப்பா ‘சரி.. நான் சித்தார்த்தனை பற்றி விசாரிக்கிறேன்.. கண் பார்க்காதது கருத்திலிருந்து மறையும் னு சொல்லுவாங்க.. உனக்கு ஒரு வருஷம் டைம் தரேன்.. ஒரு வருஷம் கழிச்சு உன் மனதில் இதே அளவு காதல் இருந்தால் நான் அவனிடம் பேசுறேன்.. அவனுக்கும் விருப்பம் இருந்தால் அவங்க வீட்டில் பேசி உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வைக்கிறேன்’ னு சொன்னாங்க.. எனக்கு ரொம்ப சந்தோசம்.. அப்பாவை கட்டி பிடிச்சு கன்னத்தில் முத்தம் கொடுத்து ‘லவ் யூ ஸோ மச் அப்பா’ னு சொன்னேன்.. ஆனா..” என்று சிறு தேம்பலுடன் நிறுத்தியவள், கண்ணில் கண்ணீருடன், “ஆனா அது தான் அப்பா என்னிடம் கடைசியா பேசியது.. அன்னைக்கு சாயுங்காலம் அப்பா..” என்று அதற்கு மேல் கூற முடியாமல் கண்ணீருடன் அவன் சட்டையை இறுக்கமாக பற்றினாள்.

  [அன்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த அவள் தந்தை லாரி இடித்து அந்த இடத்திலேயே மரணித்தார்.]

  சட்டென்று அழுகையை நிறுத்தியவள், “கடவுள் ஏன் என் அப்பாவை என்னிடம் இருந்து பிரிச்சான்?” என்று சிறிது ஆக்ரோஷமாக வினவினாள்.

  அவன், “உன் அப்பா தான் நமக்கு மகனா வந்து பிறப்பாங்க டா” என்றதும்,

  கண்கள் ஒளிர, “நிஜமாவ சித்! அப்பா நமக்கு மகனா வந்து பிறப்பாங்களா?” என்று மகிழ்ச்சியுடன் வினவினாள்.

  அவன் மென்னகையுடன், “நிச்சயமா டா”

  “நான் என் அப்பாவுக்கு தாய்.. நினைக்கவே எவ்ளோ நல்லா இருக்குது!”
  என்று கண்ணில் கனவுடன் கூறினாள்.

  பின், “என் அப்பா எவ்ளோ மென்மையானவர் தெரியுமா? அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை.. எனக்கு என் அப்பா தான் முதல் தோழன் ஹீரோ எல்லாம்.. அப்பா இல்லைங்கிறதை என்னால கொஞ்ச நாள் ஏத்துக்கவே முடியலை.. அப்பா இல்லாம நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? என் அப்பாவோட என் பேச்சு சந்தோசம் எல்லாம் போச்சு”

  அவளை சகஜமாக்கும் எண்ணத்துடன் அவன், “என்னது பேச்சு போச்சா! இந்த பேச்சையே என்னால் சமாளிக்க முடியலை” என்று போலியாக அலறினான்.

  அவள், “ஹன்.. அதான் அப்பா உங்களை எனக்கு தந்துட்டான்களே! அதனால் என்னோட பழைய பேச்சு திரும்பிடுச்சு”


  மணியை பார்த்தவன் அவளை முழுமையாக இயல்பாக்கும் எண்ணத்துடன், “ஹ்ம்ம்.. விடிய விடிய கதை பேசினோம் னு சொன்னா சிரிக்க போறாங்க”

  “ஏன்?”

  அவள் நெற்றியை முட்டியவன், “புதுசா கல்யாணம் ஆனவங்க விடிய விடிய செய்ற வேலையே வேறு” என்று கூற,

  அவள் வெக்கத்துடன், “ஏய்” என்றாள்.

  அவளது வெக்கத்தில் அவனது மனநிலை அவனையும் அறியாமல் மாறத் தொடங்கியது.

  “ஆனா இப்போ நம்மை யாரும் பார்த்தா நாம் கதை தான் பேசினோம் னு சொன்னா நம்பவே மாட்டாங்க” என்றவனது கை மெல்ல அவள் இடையில் பதிந்தது.

  அப்பொழுது தான் இருக்கும் நிலை உணர்ந்து அவள் துள்ளி குதித்து இறங்கினாள்.

  அவன் செல்ல முறைப்புடன் அவளை அணைக்க வர, அவள், “முதலில் டிஸ்டிங்கஷன் அப்பறம் தான் டீச்சர் நீங்க”

  “ரொம்ப ஸ்ட்ரிக்ட் டீச்சர் டி நீ”
  என்று செல்லமாக அலுத்துக் கொண்டான்.

  “நான் ஸ்ட்ரிக்ட் டீச்சரா?”

  “பின்ன இல்லையா?”

  “நாம உட்கார்ந்து இருந்த நிலை என்ன?”

  “ஆனா ஸ்ட்ரிக்ட் டீச்சருக்கு ஏத்த மாணவனா நான் எவ்ளோ சமத்தா இருக்கிறேன்”

  “உங்களுக்கு இது ஓவரா தெரியலை!”
  என்று அவள் கண்ணை உருட்டி வினவ,

  அவனோ, “நிச்சயமா இல்லை.. சமத்தா உன்னை மடியில் மட்டும் தான் உட்கார வைத்திருந்தேன்”

  “அப்போப்போ உங்க கையும் கன்னமும் உதடும் செய்த வேலை என்ன?”

  “என்ன செய்தது?”

  அவள் செல்லமாக முறைக்க அவனோ புன்னகையுடன் அவளை பின்னால் இருந்து அணைத்து கன்னத்தில் மென்மையாக் இதழ் பதித்து கன்னத்தோடு கன்னம் தேய்த்தபடி, “உதடும் கன்னமும் இப்படி லைட்டா உரசிக்கும்.. அதை கண்டுக்க கூடாது”

  “கை!”

  “அது ரொம்பவே சமத்தா தான் இருக்குது”

  அவள் மீண்டும் செல்லமாக முறைக்க, அவன், “ரொம்ப பண்ணாதடி.. என் கை சும்மா தானே இருக்குது.. இல்லை இப்படியா சேட்டை செய்யுது!” என்று வினவியபோது அவனது இடது கை அவளது வெற்று இடையை பட்டும் படாமல் மயிலிறகை போல் வருடவும் அவள் உடல் சிலிர்த்தது.

  உணர்வின் பிடியில் சிக்கிக் கொண்டு தவித்தவள் பின்னந்தலையை அவன் தோளில் அழுத்தமாக சாய்த்தாள்.

  அவன் வருடலில் சிறு அழுத்தம் கொடுக்கவும் அவளது உதடு, “சித்” என்று கிறக்கத்துடன் முணுமுணுத்தது.

  “ஹ்ம்ம்” என்று கிறக்கத்துடன் கூறியவனின் கரம் வருடலை தொடர உதடுகள் அவளது தோள்பட்டையை வருடியது.

  இருவரும் வேறு உலகில் பயணிக்க ஆரம்பிக்க அப்பொழுது சுவர் கடிகாரம் தனது இருப்பை காட்டிக்கொள்ள ஆறு முறை ஒலி எழுப்ப, முதலில் சுயமடைந்தது சித்தார்த்தன் தான். இப்பொழுது ஊர்மிளா அவனுக்கு தடை சொல்லபோவது இல்லை தான் என்றாலும் முழு மனதுடன் தன் காதலை தன்னவளிடம் சொல்லும் முன் தன்னவளை தனதாக்கிக் கொள்ள விரும்பாதவனாக உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டு வந்து இயல்பாக நின்றான்.

  பின் அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் கொடுத்து, “அம்லு” என்றான்.

  கடிகார சத்தத்தில் சிறிது தெளிய தொடங்கியிருந்தவள் அவனது இயல்பான குரலில் முழுமையாக தெளிந்தாள்.

  அவன் முகத்தை பார்க்க முடியாமல் அவள் நாணத்துடன் தலையை கவிழ்த்த/தாழ்த்த, அதை புரிந்துக் கொண்டவன் அவளை சங்கடப்படுத்த விரும்பாமல் இயல்பான குரலில், “ஒரு பைக் ரைட் போகலாமா?”

  “இப்பவா?”

  “ஹ்ம்ம்.. உனக்கு பிடித்த உன் சித்துடன் உனக்கு பிடித்த சன்ரைஸ் பார்க்கலாம்”

  அவள் மென்னகையுடன், “சரி போகலாம்” என்றாள்.

  அவன், “சுடிதார் மாத்திக்கோ” என்றதும் அவள் ‘ஏன்?’ என்பது போல் பார்க்க,

  “அப்போ தான் டபிள் சைட் கால் போட்டு மாமாவை இறுக்கி அணைச்சிட்டு ரவுண்டு போகலாம்” என்று கூறி அவன் கண் சிமிட்ட,

  அவள் மென்னகையுடன் ஆள்காட்டி விரலை ஆட்டி செல்லமாக மிரட்டினாள்.

  அவன் கண்களால் கெஞ்சவும் அவள் சுடிதார் மாற்றி வந்தாள்.

  இருவரும் சத்தம் எழுப்பாமல் வீட்டை விட்டு வெளியே சென்றனர்.

  அவன் தனது ‘ராயல் என்பீல்ட்’ வண்டியில் அமர்ந்து அதை கிளப்பியபடி, “ஹ்ம்ம் உட்காரு” என்றான்.

  அவனது விருப்பத்திற்காக அவள் முதல் முறையாக இரு பக்கம் கால் போட்டு அமர்ந்தாள் ஆனால் நாணத்துடன் மெல்லிய இடைவெளி விட்டு தான் அமர்ந்திருந்தாள்.

  அவளது கைகளை பற்றி தனது இடுப்பை சுற்றி விட்டவன் உற்சாகத்துடன் வண்டியை வேகத்துடன் கிளப்பினான்.

  கூச்சத்துடன் கையை எடுக்க போனவள் அவனது வேகத்தை கண்டு கையை எடுக்கவில்லை.

  அந்த காலை வேளை அழகாக புலன்றுக் கொண்டிருந்தது. சூரியன் மெல்ல மெல்ல தனது தங்க கதிர்களை வீசி இருளை விரட்டிக் கொண்டிருக்க, சில்லென்ற தென்றல் வீசிக் கொண்டிருந்தது. தன் மனதிற்கு பிடித்தவருடன் இயற்கையுடன் ஒன்றிய அந்த பயணம் இருவருக்கும் மிகவும் பிடித்தது. இருவர் மனதிலும் அப்படி ஒரு நிறைவை தந்தது.

  அவள் தன்னையும் அறியாமல் மெல்ல அவனுடன் ஒன்றினாள். அவன் தோளில் சாய்ந்து கண்களை மூடி இதழில் மென்னகையுடன் அந்த பயணத்தை அனுபவிக்கத் தொடங்கினாள்.

  அவளது செய்கையில் அவன் உதட்டிலும் அழகான நிறைவான புன்னகை பூத்தது.


  கொஞ்சல் அரும்பும்♥♥♥♥♥♥


  எனை கொஞ்சும் சாரலே!! - Comments
  உங்கள் அன்புத் தோழி,
  கோம்ஸ்.
   
  Rabina and Suganyasomasundaram like this.
 10. gomathy.arun

  gomathy.arun Well-Known Member

  Joined:
  Dec 5, 2014
  Messages:
  456
  Likes Received:
  385
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Suganyasomasundaram and Rabina like this.

Share This Page