Gowry Mohan Poems | எண்ணத்துளிகள்...கௌரிமோகன்

Discussion in 'Poetry' started by gowrymohan, Feb 11, 2015.

  1. gowrymohan

    gowrymohan Well-Known Member

    Joined:
    Aug 13, 2014
    Messages:
    173
    Likes Received:
    269
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Location:
    Sri Lanka
    பேரழகு

    அழகிய ஆடை
    நெற்றியில் திலகம்
    கூந்தலில் மலர்
    மேனியில் ஆபரணங்கள்
    தருவது
    அழகு...
    பேரழகு தருவது
    இதழ்களில் சூடும்
    புன்னகையே!!!
     
    Suganyasomasundaram likes this.
  2. Suganyasomasundaram

    Suganyasomasundaram Active Member

    Joined:
    Nov 23, 2017
    Messages:
    215
    Likes Received:
    126
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    Chennai
    Location:
    Chidambarm
    Nice.......☺☺
     
    gowrymohan likes this.
  3. gowrymohan

    gowrymohan Well-Known Member

    Joined:
    Aug 13, 2014
    Messages:
    173
    Likes Received:
    269
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Location:
    Sri Lanka
    Thank you so much Suganya.
     
  4. gowrymohan

    gowrymohan Well-Known Member

    Joined:
    Aug 13, 2014
    Messages:
    173
    Likes Received:
    269
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Location:
    Sri Lanka
    தனித்துவமான காதல்

    பார்வைகள் புன்னகைகள்
    மோதி உறவாட
    வார்த்தைகள்
    மடிந்து வீழ
    தளிர் நடை போட்டு
    வளரும்
    நம் காதல்
    தனித்துவமானதோ!!!
     
  5. gowrymohan

    gowrymohan Well-Known Member

    Joined:
    Aug 13, 2014
    Messages:
    173
    Likes Received:
    269
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Location:
    Sri Lanka
    மின்னலே...

    பெண்ணே!
    மின்னலாய் தோன்றி
    மாயமாய் மறைந்தாலும்
    அக்கணத்தில்
    கவர்ந்துவிட்டாய்
    என் மனதை...!!!
    விட்டுச் சென்றாய்
    என்னுள் உன்னை!!!
     
  6. gowrymohan

    gowrymohan Well-Known Member

    Joined:
    Aug 13, 2014
    Messages:
    173
    Likes Received:
    269
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Location:
    Sri Lanka
    காதல்

    தழுவிச் சென்ற
    அவளது பார்வையில்
    நழுவிச் சென்றதே
    இதயம்...

    இழுத்துச் செல்லும்
    அவளது பாதத் தடங்கள்
    அழுத்திச் சொல்கின்றன
    காதல்!!!
     
  7. gowrymohan

    gowrymohan Well-Known Member

    Joined:
    Aug 13, 2014
    Messages:
    173
    Likes Received:
    269
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Location:
    Sri Lanka
    பிரிவு

    நீ அருகில் இருக்கும்போது
    புரியவில்லை உனது அருமை
    குறை கண்டேன் குற்றம் படித்தேன்
    அலட்சியப்படுத்தினேன்
    அவமானம் செய்தேன் ...

    நீ விலகிச் சென்றபோது
    தீயிலிட்ட புழுவைப் போல
    துடிகின்றேன் என் அன்பே
    சுற்றிப் பல உறவுகள் இருந்தாலும்
    தனிமையாய் உணர்கின்றேன்
    பசியின்றி உறக்கமின்றி
    உயிர்ப்பின்றித் திரிகின்றேன் ...

    புரிந்துவிட்டது எனக்கு
    நீதான்
    எனது சக்தி எனது பலம்
    எனது வழிகாட்டி எனது மகிழ்ச்சி
    நீயின்றி நானில்லை
    அகங்காரம் துறந்து அழைக்கின்றேன்
    விரைந்து வா சகியே !!!
     
    Rabina and Suganyasomasundaram like this.
  8. Suganyasomasundaram

    Suganyasomasundaram Active Member

    Joined:
    Nov 23, 2017
    Messages:
    215
    Likes Received:
    126
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    Chennai
    Location:
    Chidambarm
    Nice.....
     
  9. gowrymohan

    gowrymohan Well-Known Member

    Joined:
    Aug 13, 2014
    Messages:
    173
    Likes Received:
    269
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Location:
    Sri Lanka
    நன்றி சுகன்யா :smile1:.
     
  10. gowrymohan

    gowrymohan Well-Known Member

    Joined:
    Aug 13, 2014
    Messages:
    173
    Likes Received:
    269
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Location:
    Sri Lanka
    வரவேற்பு

    இசை பாடும் பறவைகள்
    நறுமணம் வீசி மலரும் மொட்டுகள்
    ஆலயமணி ஓசை
    வாசலில் நீர் தெளித்து கோலமிடும் பெண்கள்
    ஆம்
    பூமியிலுள்ள உயிரினங்கள்
    ஆயத்தமாகின்றன
    கதிரவனை வரவேற்க ...
     

Share This Page