Gowry Mohan Poems | எண்ணத்துளிகள்...கௌரிமோகன்

Discussion in 'Poetry' started by gowrymohan, Feb 11, 2015.

  1. raray

    raray New Member

    Joined:
    May 22, 2019
    Messages:
    12
    Likes Received:
    3
    Trophy Points:
    3
    miga nandru
     
    gowrymohan likes this.
  2. gowrymohan

    gowrymohan Well-Known Member

    Joined:
    Aug 13, 2014
    Messages:
    179
    Likes Received:
    323
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Location:
    Sri Lanka
    நன்றி :smile1:.
     
  3. gowrymohan

    gowrymohan Well-Known Member

    Joined:
    Aug 13, 2014
    Messages:
    179
    Likes Received:
    323
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Location:
    Sri Lanka
    அன்பு செலுத்துவோம்

    கழிவுகளை உரங்களாக மாற்றும்
    இந்த பூமியில்
    மனிதா!
    ஏன் இன்னும் சுமந்துகொண்டிருகின்றாய்
    மனதில் கழிவுகளை
    மாற்றம் தானாக வருவதில்லை ...
    தீயவற்றை அழி
    நல்லவற்றை ஏற்று
    உன்னைச் சுற்றியிருக்கும் உயிர்களிடத்து
    அன்பைக் கொட்டிப்பார்
    உன் மனம்
    பூஞ்சோலையாக மாறும் விந்தையை
    நீ உணர்வாய்
    ஆதலினால்
    அன்பு செலுத்துவோம் வாரீர் ...
     
    Rabina likes this.
  4. gowrymohan

    gowrymohan Well-Known Member

    Joined:
    Aug 13, 2014
    Messages:
    179
    Likes Received:
    323
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Location:
    Sri Lanka
    காதல்

    என்னுள் உன்னை புதைத்ததும்
    உன் விழிகளில் என்னை பதித்ததும்
    நானா...
    நீயா...
    காதலா...
    ஒன்று மட்டும் புரிந்தது
    நாம் மூவரும்
    ஓருயிராகிவிட்டோம்!!!
     
    Rabina likes this.
  5. gowrymohan

    gowrymohan Well-Known Member

    Joined:
    Aug 13, 2014
    Messages:
    179
    Likes Received:
    323
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Location:
    Sri Lanka
    மழை

    நிலமங்கை காத்திருக்கிறாள்...
    பருவகாலத்தில் வரும்
    ஆருயிர் கணவன் வரவில்லை
    பசியாற்ற வழியேது...

    இருந்த உணவும் முடிகிறது
    குழந்தைகளோ
    வாடி, வதங்கி, பசியுடன், தலைகுனிந்து
    தாயைப் பார்க்கின்றன...

    வேதனையில் மேனி வெடித்து
    நிறம் மாறி ஏக்கத்துடன்
    வானத்தைப் பார்த்திருக்கிறாள்
    நிலமங்கை...

    திடீரென வந்தது மின் அஞ்சல்
    "வந்து கொண்டிருக்கின்றேன் கண்ணே
    கவலை வேண்டாம்"
    ஆவலுடன் பார்த்தபோது
    இடியென கதவைத் திறந்து
    வந்துவிட்டான் மழைக் கணவன்...

    நாணத்தில் கண்மூடி இருந்தவளை
    அணைத்துக்கொண்டான் நறுமணத்துடன்
    பசியாறிய குழந்தைகள்
    ஆடிப்பாடின மகிழ்வுடன்...
     
  6. gowrymohan

    gowrymohan Well-Known Member

    Joined:
    Aug 13, 2014
    Messages:
    179
    Likes Received:
    323
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Location:
    Sri Lanka
    மிருகம்

    அழகிய பூஞ்சோலை
    காடாக மாறுகிறது
    மரங்கள் அடர்த்தியாக வளர்கின்றனவா
    இல்லை இல்லை
    வன விலங்குகள் உட்புகுகின்றனவா
    இல்லை இல்லை
    மனிதன்தான் மிருகமாக மாறுகிறான்
    பணத்தை வேட்டையாடுகிறான்
    நிலத்தை வேட்டையாடுகிறான்
    மங்கையரை வேட்டையாடுகிறான்
    இன்று
    சிறுமிகளையும் விட்டுவைக்கவில்லை
    இந்த மனித மிருகங்களை
    யார்தான் வேட்டையாடுவது
    தானாக திருந்தினால்தான் முடியும்
    முடியாவிட்டால்
    கடவுள்தான் வரவேண்டும்
    களை எடுக்க!!!
     
    Rabina likes this.
  7. gowrymohan

    gowrymohan Well-Known Member

    Joined:
    Aug 13, 2014
    Messages:
    179
    Likes Received:
    323
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Location:
    Sri Lanka
    தமிழால் இணைவோம்

    தொன்மையான மொழியாம்
    வீரமான மொழியாம்
    அன்பைப் பொழியும் மொழியாம்
    அறிவைக் கொண்ட மொழியாம்
    இனிமை கொஞ்சும் மொழியாம்
    பெருமை மிக்க மொழியாம்
    கலை பண்பாடு கலாச்சாரம்
    மூன்றிலுமே உச்சம் தொட்டு
    கட்டுக்கோப்பாய் வாழ வைத்து
    மிளிர்கின்ற மொழியாம்
    தமிழ்…

    எம் அன்னை தமிழ் என
    பெருமையுடன் கூவிடுவோம்
    எம் வழிகாட்டி தமிழ் என
    தலைநிமிர்ந்து வாழ்ந்திடுவோம்…

    வேறு வேறு தேசத்திலே
    பிறந்தாலும் வளர்ந்தாலும்
    வேறு வேறு மொழிகளிலே
    கல்வி கற்றாலும் கடமை புரிந்தாலும்
    தாய்மொழியாம் தமிழ் தன்னை
    இரசித்து ருசித்து மகிழ்ந்திருப்போம்…

    இனம் வேறு என்றாலும்
    மதம் வேறு என்றாலும்
    தமிழால் இணைந்திருப்போம்
    தமிழுக்காக குரல் கொடுப்போம்
    உயிருக்கு நிகரான தமிழ் தன்னை
    போற்றி காத்திடுவோம்
    உயர்த்தி வளர்த்திடுவோம்…
     

Share This Page