Halwa Recipes

Discussion in 'Diwali Sweets' started by NATHIYAMOHANRAJA, Oct 30, 2018.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,150
    Likes Received:
    512
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    How to make Karachi Halwa

    • 2 cup corn flour
    • 1 tablespoon chopped cashews
    • 2 litre Water
    • 5 cup sugar
    • 2 tablespoon ghee
    • 1/2 teaspoon edible food color
    • Step 1For making Karachi Halwa, add 2 cups (500 ml) of water to the corn flour and mix well. Add the food colour and mix without any lumps.
    • Step 2Heat the remaining water in a pan over medium flame. Add sugar and stir until fully dissolved.
    • Step 3Bring to boil and add the corn flour mixture. Stir well continuously. When it starts to stick to the pan, add ghee and stir again.
    • Step 4When it has reached a halwa consistency and leaves the sides of the vessel, transfer to a greased tray. Sprinkle the fried cashew nuts and allow it to set.
    • Step 5Just before it sets completely, cut it into desired pieces. Serve.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,150
    Likes Received:
    512
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பிரெட் அல்வா


    தேவையான பொருட்கள்:

    பிரெட் துண்டுகள் - 10
    சர்க்கரை - 2 கப்
    முந்திரி - 20
    பாதாம் - 10
    உலர்ந்த திராட்சை - 10
    நெய் - 1 கப்
    பால் - 500 லிட்டர்
    டால்டா - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    பிரெட்டை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி அரைத்துக் கொள்ளவும். மிகவும் பொடியாகிவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பாலை நன்கு சுண்ட காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும், இரண்டாக உடைத்த முந்திரிப் பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் பொடித்து வைத்துள்ள பிரெட்டை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    பிறகு வாணலியில் 11/2 கப் தண்ணீர் விட்டு சர்க்கரையை போட்டு 5 நிமிடம் கிளறி பிரெட் துண்டுகள் சேர்த்து வேக விடவும். பிரெட் துண்டுகள் சற்று வெந்தவுடன் அதில் நெய் மற்றும் டால்டா சேர்த்து அதனுடன் வறுத்த முந்திரி, திராட்சை, துறுவிய பாதாம் சேர்த்து கிளறி விடவும். சுவையான பிரெட் அல்வா தயார்.

    குறிப்பு: இதில் தேவைப்பட்டால் கன்டன்ஸ்ட் மில்க் சேர்க்கலாம்.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,150
    Likes Received:
    512
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கேரட் அல்வா செய்ய...!

    தேவையான பொருட்கள்:

    துருவிய கேரட் - 4 கப்
    பால் - 2 கப்
    தண்ணீர் - 1.5 கப்
    கண்டென்ஸ்ட் மில்க் - 1/3 கப்
    நெய் - 1 டேபிள் ஸ்பூன்
    முந்திரி - 12
    உலர் திராட்சை - 10
    ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

    செய்முறை:

    முதலில் பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கேரட், பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்க வேண்டும். அதே சமயம், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை நன்கு பொன்னிறமாக வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு பிரஷர் குக்கரை திறந்து, அதனை அப்படியே அடுப்பில் வைத்து, 10-15 நிமிடம் தீயை குறைவில் வைத்து கொதிக்க விட வேண்டும். அடுத்து அதில் கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து நன்கு 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும். பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கிளறி, அத்துடன் அந்த நெய்யையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

    இறுதியில் அதன் மேல் ஏலக்காய் பொடியைத் தூவி, நன்கு கலந்து விடவேண்டும். கலவையானது நன்கு அல்வா பதத்திற்கு வந்த பின்னரே, அதனை அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். இப்போது சுவையான கேரட் அல்வா தயார்.

    [​IMG]
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,150
    Likes Received:
    512
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    காசி பூசணி அல்வா

    சமைக்க தேவையானவை

    • துருவிய வெள்ளைப் பூசணி - ஒரு கப்
    • சர்க்கரை, பால் - தலா 2 கப்
    • நெய் - 50 கிராம்,
    • கலர் – சிறிதளவு
    • முந்திரிப்பருப்பு - 10.
    • Step 1.

      முதலில் பூசணித் துருவலை தண்ணீர் இல்லாமல் பிழிந்து கொள்ளவும்.
    • Step 2.

      அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை விட்டு, பூசணி துருவலை சேர்த்தும், நன்றாக வேக விடவும்.
    • Step 3.

      வெந்ததும் மசித்து சர்க்கரை சேர்க்கவும்.
    • Step 4.

      அதன் பின் பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும் நெய் விட்டு, கலர், முந்திரிப்பருப்பு சேர்த்து இறக்கவும்.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,150
    Likes Received:
    512
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சுரைக்காய் அல்வா

    சமைக்க தேவையானவை

    • சுரைக்காய் - 2 பெரிய காய்
    • சர்க்கரை சேர்க்காத கோவா - 1 கப்
    • ரெட் கலர் - 1/4 தேக்கரண்டி
    • சர்க்கரை - 2 கப்
    • நெய் - 1/2 கப்
    • Step 1.

      முதலில் சுரைக்காயை தோல் சீவி நடுவில் இருக்கும் விதை பகுதியை நீக்கி விடவும்.
    • Step 2.

      பின்னர் சுரைக்காயினை காரட் துருவுவது போல துருவி கொள்ளவும். சுரைக்காயில் நிறைய தண்ணீர் இருக்கும்.
    • Step 3.

      அதனால் தண்ணீரை பிழிந்து எடுத்து விடவும். (அல்லது ஒரு துணியில் கட்டி பிழியவும்.) ஒரு நாண் ஸ்டிக் கடாயில் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி இந்த துருவிய சுரைக்காயை போட்டு மிதமான தீயில் நன்றாக வதக்கவும்.
    • Step 4.

      இப்படியே சுமார் 20 -30 நிமிடம் காய் வேகும் வரை 4 -5 நிமிடத்திற்கு ஒரு முறை சிறிது சிறிதாக நெய் சேர்த்து வதக்கவும்.
    • Step 5.

      அதன் பின் கோவாவை சேர்த்து 2 நிமிடம் கிளறவும். பின்னர் சர்க்கரை மற்றும் ரெட் கலர் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். கடைசியில் வறுத்த முந்திரி சேர்க்கவும்.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,150
    Likes Received:
    512
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    அன்னாச்சிப்பழ அல்வா

    சமைக்க தேவையானவை

    • அன்னாச்சிப் பழத்துண்டுகள் - 1 கப்
    • பால் - 1 கப்
    • சர்க்கரை - 1 கப்
    • ஏலப்பொடி - 1/2 தே‌க்கர‌ண்டி
    • உப்பு - 1 சிட்டிகை
    • நெய் - 3/4 கப்
    • கேசரிப்பவுடர் - 1/4 தே‌க்கர‌ண்டி
    • தண்ணீர் - 1/4 டம்ளர்
    • Step 1.

      முதலில் அன்னாசிப்பழத் துண்டுகளை ஆவியில் வேகவைக்கவும். ஆறியபின் பால் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து கம்பிப்பதம் வரும்வரை காய்ச்சுங்கள். இதில், அரைத்து வைத்துள்ள விழுது,
    • Step 2.

      ஒரு சிட்டிகை உப்பு, நெய், ஏலப்பொடி, கேசரிபவுடர், நெய்யில் வறுத்த திராட்டை ஆகியவை சேர்த்து அல்வாப்பதம் வரும் வரை கிளறி இறக்கவும். அன்னாச்சிப்பழ ஜூஸ் எடுத்து தண்ணீருக்குப் பதில் ஜூஸை ஊற்றி, இதே முறையில் அல்வா தயார் செய்யலாம்.
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,150
    Likes Received:
    512
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பீட்ரூட் அல்வா


    சமைக்க தேவையானவை

    • பீட்ரூட் - 2
    • சர்க்கரை - 1 1/2 கோப்பை
    • கண்டென்ஸ்டுமில்க் - 2 மேஜைக் கரண்டி
    • பால் - 2 மேஜைக் கரண்டி
    • நெய் - 1/2 கோப்பை
    • ஏலக்காய் - 4
    • உலர்ந்த திராட்சை - 5
    • வறுத்த முந்திரி - 10
    • Step 1.

      முதலில் பீட்ரூட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும்.துருவிய பீட்ரூட்டை பாலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்
    • Step 2.

      .அகன்ற பாத்திரத்தில் நெய், அரைத்த பீட்ரூட் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை போட்டு வேக விடவும். வேகும் போது நன்கு கிளறி விடவும்.நன்கு பதமாக வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும்.
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,150
    Likes Received:
    512
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கோதுமை பீட்ரூட் அல்வா

    சமைக்க தேவையானவை

    • கோதுமை மாவு - 1 கப்
    • ஜீனி - 2 1/2 கப்
    • நெய் - 3/4 கப்
    • முந்திரி பருப்பு - 12
    • பீட்ரூட் - 1 (சிறியது)
    • கேரட் - 1 (சிறியது)
    • Step 1.

      முதலில் கேரட், பீட்ரூட்டை தோல் சீவி வெட்டி மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து 1 கப் சாறு எடுத்து கொள்ளவும். ஜீனி மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். ஜீனி கரைந்ததும் பீட்ரூட் சாறை சேர்க்கவும். மாவை தோசை மாவு போல் நீர்க்க கரைத்து கொள்ளவும். தண்ணீர் கொதித்ததும் கரைத்த மாவை சேர்க்கவும்.
    • Step 2.

      கட்டி பட்டு விடாமல் இருக்க கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். அடுத்து சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும். அல்வா நன்றாக கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் நெய் வெளியே வரும். இப்பொழுது இன்னொரு அடுப்பில் நெய்யில் முந்திரியை வறுக்கவும். வறுத்த முந்திரியை அல்வாவுடன் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். சுவையான கோதுமை பீட்ரூட் அல்வா ரெடி
     
  9. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,150
    Likes Received:
    512
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஸ்பெஷல் அல்வா

    • கெட்டி அவல் – 1/2 கிலோ
    • சர்க்கரை – 200 கிராம்
    • நெய் – 100 கிராம்
    • ஏலம், முந்திரி – தேவையான அளவு
    Step 1.

    முதலில் நெய்யில் வறுத்து பொடித்த அவலை நெய்யுடன் சர்க்கரைப்பாகில் போட்டுக் கிளறி முந்திரி ஏலம் தூவி இறக்கவும். இது தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்டாக அமைந்து விடும்.
     
  10. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,150
    Likes Received:
    512
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    தக்காளி ஓட்ஸ் அல்வா

    சமைக்க தேவையானவை

    • தக்காளி விழுது - ஒரு கப்
    • ஓட்ஸ் - ஒரு கப்
    • சர்க்கரை - ஒன்றரை கப்
    • பால் பவுடர் - ஒரு மேசைக்கரண்டி
    • ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை
    • பிஸ்தா துருவல் - அரை கப்
    • உப்பு - சிட்டிகை
    • நெய் - 2 மேசைக்கரண்டி
    • Step 1.

      முதலில் தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு தோல் வெடிக்கும் வரை வைத்திருக்கவும். சூடு ஆறியதும் எடுத்து தோல் உரித்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் ஊறிய ஓட்ஸை எடுத்து வடிகட்டியில் பிழிந்து பால் எடுக்கவும் மிக்ஸியில் சர்க்கரையை போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
    • Step 2.

      பிஸ்தாவை தோல் உரித்து துருவி கொள்ளவும். தக்காளி விழுது, ஓட்ஸ் பால், ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்த்து 5 நிமிடம் மைக்ரோவேவ் ஹையில் வைக்கவும். இடையில் ஒரு முறை எடுத்து கிளறி விடவும் பின்னர் அதனுடன் பால் பவுடர் சேர்த்து கலந்து மீண்டும் 5 நிமிடம் மைக்ரோவேவ் ஹையில் வைக்கவும்.
    • Step 3.

      அதன் பிறகு வெளியில் எடுத்து கிளறி பொடித்த சர்க்கரை, உப்பு, ஏலக்காய்த் தூள் மீதமுள்ள நெய், பிஸ்தா துருவல் சேர்த்து கிளறி மீண்டும் 5 நிமிடம் மைக்ரோவேவ் மீடியமில் வைக்கவும். ஒவ்வொருமுறை வைக்கும் போதும் இடையில் எடுத்து கிளறி வைக்கவும் கடைசியாக வெளியில் எடுத்து நன்கு கிளறி நெய் தடவிய கிண்ணத்தில் கொட்டவும். சுவையான தக்காளி ஓட்ஸ் அல்வா தயார்.
     

Share This Page