Happy summer

Discussion in 'Health care' started by saravanakumari, Mar 13, 2018.

  1. saravanakumari

    saravanakumari Administrator Staff Member Manager Manager Manager

    Joined:
    Nov 12, 2014
    Messages:
    2,243
    Likes Received:
    1,018
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    home maker
    Location:
    villupuram
    வெயில் வாக்கிங் போற நேரம்... வெளியே தலை காட்டினால் உச்சி முடி கருகிடும். குழந்தைகளுக்கு வெயில் ஒரு பொருட்டாவே தெரியாது. அவங்க ரசிச்சு விளையாடுவாங்க. விளையாட விடுங்க. எலும்பு வலு பெற சூரிய வெளிச்சம் அவசியம்.

    குழந்தைகளைை குறி வச்சே குச்சி ஐஸ், பாக்கெட் ஐஸ் கடைகளும் சுற்றும். அதில் இருக்கிற ஐஸ் கட்டிகள் பாக்டீரியாக்களின் பிறப்பிடம். அதை புரிய வைத்து நல்ல, பதப்படுத்தபட்ட ஐஸ்க்ரீம்களை மட்டும் சாப்பிட கொடுங்கள். எதுவுமே குடுக்காமல் இருந்தால் உங்களுக்கு தெரியாமல் குச்சி ஐஸ் சாப்பிட தான் செய்வாங்க.

    விளையாட செல்லும் போது எலுமிச்சை பிழிந்த நீரில் தேன் கலந்து குடுத்து விடலாம். அல்லது ரொம்ப எளிது க்ளுக்கோஸ் கலந்த நீர். பாட்டில் பானங்களை முடிந்த வரையில் தவிர்க்க சொல்லலாம். வீட்டில் மோரை கடைந்து பாத்திரத்தில் வைப்பது எல்லோருக்கும் குடிக்க வசதியா இருக்கும். நல்ல குளிர்ச்சி.

    குளித்து முடித்ததும் குழந்தைகளின் ஆசன வாயில் தேங்காய் எண்ணை வைத்து விடுங்க்ள். உடலில் சூடு ஏறாது.

    அம்மை, படர் தாமரை, மெட்ராஸ் ஐ, வயிற்று போக்கு, டைபாய்ட் போன்ற நோய்கள் தாக்கும் காலம் இது. தண்ணீரை சுத்தமாக பருகினாலே பல நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

    மண் பானை தண்ணீரில் நன்னாரி வேரை போட்டு வைத்து குடிக்கலாம். உடல் குளிர்ச்சியாகும். கிட்னியில் கல் உருவாவது தவிர்க்கப்படும்

    Have a Great Summer...
     
    Athvika likes this.
  2. Athvika

    Athvika Member

    Joined:
    Feb 14, 2018
    Messages:
    61
    Likes Received:
    26
    Trophy Points:
    8
    Gender:
    Female
    useful .. ipo intha tips childsku kantipa thevai
    thanks
     

Share This Page