HERO'S BIO-DATA

Discussion in 'Celebrity Speech' started by NATHIYAMOHANRAJA, Jan 27, 2020.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,858
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    விஜய் சேதுபதி


    விஜய் சேதுபதி தமிழ் திரைப்பட நடிகர். இவர் இராஜபாளையத்தில் பிறந்த இவர் தன் வாழ்க்கையை கணக்காளராக தொடங்கினார். கணக்காளர் பணி பிடிக்காததால் நடிப்பு பணியை தேர்ந்தெடுத்தார். 2010ல் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் முன்னனி கதை மாந்தராக நடிக்கும் வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சிறு வேடங்களில் நடித்தார். இவர் பீட்சா (2012), நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (2012) போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    ராஜபாளையத்தில் பிறந்த இவர் தன் படிப்பை விருதுநகர் மாவட்டத்திலும் சென்னையிலும் மேற்கொண்டார். பள்ளியில் தான் சராசரிக்கும் கீழான மாணவன் என்றும் விளையாட்டிலும் பாடத்திட்டம் சாரா நிகழ்வுகளிலும் தனக்கு நாட்டம் இருந்ததில்லை என்று அவர் கூறியுள்ளார். இளநிலை வணிகவியலில் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் துபாயில் கணக்காளராக பணி புரிந்தார். அவ்வேலை பிடிக்காததால் 2003ல் இந்தியாவுக்கு திரும்பிவிட்டார். நிழல்படக்காரர் ஒருவர் இவரின் முகம் நிழல்படங்களில் அழகாக தெரியக்கூடிய ஒன்று என்று சொன்னது இவர் நடிப்புத்துறையை தேர்ந்தெடுக்க உந்துதலாக இருந்தது என்று கூறியுள்ளார்.

    இவர் கூத்துப்பட்டறையில் கணக்காளராக பணியில் சேர்ந்தார். அங்கு நடிகர்களை அருகில் இருந்து அவதானிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார். இவர் பெண் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்தார். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக பல குறும்படங்களில் நடித்துள்ளார். பீட்சா பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து பல குறும்படங்களில் பணியாற்றியுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை நார்வே குறும்பட தமிழ் திரைப்பட விழாவில் பெற்றார்.

    இயக்குநர் செல்வராகவன் புதுப்பேட்டை படத்துக்கு திறன் தேர்வு வைத்ததில் கலந்து கொண்டு தனுசுக்கு நண்பனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதைத்தொடர்ந்து தமிழ்-கன்னட இரு மொழிப்படமான அகண்ட என்பதின் தமிழ் பதிப்பில் முன்னனி கதை மாந்தராக நடித்தார், கன்னட பதிப்பில் எதிர்மாறான கதை மாந்தராக நடித்தார். இப்படம் திரைக்கு வரவில்லை. பின்பு பிரபு சாலமனின் லீ திரைப்படத்திலும் சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக் குழு நான் மகான் அல்ல என்ற திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். இயக்குநர் சுசீந்தினே முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து தன் கனவு மெய்ப்பட காரணமாக இருந்தவர் என்று கூறினார். சுசீந்திரன் இவரை தென்மேற்கு பருக்காற்று இயக்குநர் சீனு ராமசாமியிடம் அறிமுகப்படுத்தினார், பின்பு சீனு ராமசாமி விஜய் சேதுபதிக்கு அப்படத்தில் முன்னனி கதாபாத்திரம் வழங்கினார்.

    2012ல் இவர் நடித்த மூன்று திரைப்படங்களும் வணிகரீதியாக பெருவெற்றி பெற்றன. சுந்தரபாண்டினில் இவர் கதைநாயகனுக்கு எதிரியாக நடித்திருப்பார். கார்த்திக் சுப்புராஜின் பீட்சா படத்திலும் பாலாஜி தரணிதரனின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திலும் முன்னனி கதை மாந்தராக நடித்தார். நளன் குமரசாமியின் சூது கவ்வும் என்ற படத்திலும் முன்னனி கதை மாந்தராக நடித்தார். பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

    2016-ம் ஆண்டில் தொடர்ந்து 6 படங்களை நடித்து, பின்னர் 2017-ம் ஆண்டு 5 படங்களும், 2018-ம் ஆண்டு 7 படங்களில் நடித்துள்ளார்.

    2018-ம் ஆண்டு இறுதியில் தனது 25-ம் படமாக சீதக்காதி திரைப்படத்தில் 75 வயது முதியவர் தோற்றத்தில் நடித்து பல சாதனைகளை புரிந்துள்ளார்.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,858
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    விஜய்


    விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை "இளைய தளபதி" என்று அழைக்கிறார்கள்.

    பிறப்பு / கல்வி

    விஜய், சென்னையில் ஒரு படத் தயாரிப்பாளரும், இயக்குனருமாகிய எஸ்.ஏ.சந்திரசேகரன் என்பவருக்கும், ஷோபா சந்திரசேகருக்கும் (பின்னணி பாடகர்) மகனாக பிறந்தார் .வித்யா சந்திரசேகர் என்ற சகோதரி இருந்தார். அவருக்கு வித்யா சந்திரசேகர் என்ற சகோதரி இருந்தார். அவர் இரண்டு வயதில் இறந்தார். விஜய்
    சென்னையில் லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் பயின்றார்.

    திருமணம்

    விஜய், இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்த சங்கீதா சொர்னலிங்கம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

    பிரபலம்

    விஜய், குழந்தை பருவம் முதலே ஒரு சில படங்களில் அவரது இயக்கத்தில் நடித்தார். கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. பின்பு தமிழகத்தில் ஒரு மிகச்சிறந்த நடிகராக உள்ளார்.

    இவர் விளம்பர‌ப் படங்களிலும் நடிக்கிறார். 2002ல் கொக்கக் கோலா நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் இவர் கேட்ரீனா கய்ஃப் உடன் தோன்றினார்.ஆகஸ்ட் 2010 முதல் ஜோஸ் அலுக்காஸ் நகைக் கடையின் விளம்பரப் படங்களில் தோன்றி வருகின்றார்.2011 ல் டாடா டோகோமா நகர்பேசி விளம்பரப்படத்தில் நடித்தார்.

    2009ம் ஆண்டு விஜய் தனது ரசிகர்/நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார். இவ்வமைப்பு 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது. அவரது உறவினர் விக்ராந்த் ஒரு நடிகர். அவரது மாமா எஸ்என் சுரேந்தர் ஒரு பின்னணிப் பாடகர் மற்றும் டப்பிங் கலைஞர்ஆவார்.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,858
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சேரன்


    சேரன் இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் இயக்கிய திரைப்படங்களுக்கு இயக்குனராக நான்கு முறை தேசிய விருது பெற்றுள்ளார். பின்னர் நான்கு தமிழ் நாடு பிலிம்ஸ் விருதுகளும், ஐந்து தென்னிந்திய பிலிம் பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.

    பிறப்பு

    இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள கொழிஞ்சிப்பட்டி என்ற கிராமத்தில் பாண்டியன் மற்றும் கமலா தம்பதியருக்கு பிறந்துள்ளார். இவரது தந்தை வெள்ளலூர் தியேட்டர் ஒன்றில் ப்ரொஜெக்டர் ஆப்ரேட்டராக பணியாற்றியுள்ளார். இவரது தாய் ஆரம்பகால பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.இவர் தனது சிறுவயது காலம் முதலே நடிப்பில் ஆர்வம் கொண்டு நாடங்களில் நடித்துள்ளார்.

    திரையுலக அறிமுகம் / தொடக்கம்

    திரையுலக கனவுகளுடன் சென்னைக்கு வந்த இவர் ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதன் தொடர்பு கொண்டே இவர் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் புரியாத புதிர் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இத்
    திரைப்படத்தினை தொடர்ந்து சேரன் பாண்டியன், நாட்டாமை படங்களுக்கும் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

    இவர் பாரதி கண்ணம்மா என்ற திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.

    பிரபலம்

    இவர் இயக்கிய முதல் திரைப்படமான பாரதி கண்ணம்மா திரைப்படமானது சர்ச்சைகளுடன் மாபெரும் வெற்றியடைந்தது. இத்தி
    ரைப்படத்தினை தொடர்ந்து இவர் இயக்கிய பாண்டவர் பூமி, போர்க்களம், வெற்றி கோடி கட்டு திரைப்படங்களானது மாபெரும் வெற்றியை சந்தித்தது. இப்படங்களின் வெற்றியி மூலம் பிரபலமான இவர், தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக கண்டறியப்பட்டார்.

    இயக்குனராக இவர் அடைந்த பிரபலத்தை தொடர்ந்து, நடிகராகவும் இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கிய சொல்ல மறந்த கதை என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து நடிகையாகவும் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இவர் இயக்கத்தில் இவரே நடித்து வெளியான ஆட்டோகிராப் திரைப்படமானது மாபெரும் வெற்றியை சந்தித்தது. இப்படத்திற்கு நடிகராகவும், இயக்குனராகவும் பல விருதுகளை வென்றுள்ளார்.

    அங்கீகாரம்

    இவர் இந்திய அரசின் தேசிய விருதினை 2000-ஆம் ஆண்டின் "வெற்றி கொடி கட்டு" திரைப்படத்திற்கும், 2004-ஆம் ஆண்டு "ஆட்டோக்ராப்" திரைப்படத்திற்கும், 2005-ஆம் ஆண்டு "தவமாய் தவமிருந்து" படத்திற்கும், 2005-ம் ஆண்டு "ஆடும் கூத்து" என நான்கு திரைப்படத்திற்கு இயக்குனராக தேசிய விருது பெற்றுள்ளுர்.

    இவர் தமிழக அரசின் திரைப்பட விருதினை 8 முறை சிறந்த திரைப்படம், சிறந்த வசனம் மற்றும் எழுத்தாளர், சிறந்த இயக்குனர் என்ற பல துறைகளில் விருதுகளை வென்றுள்ளார். பின்னர் பிலிம் பேர் விருதுகளை ஐந்து முறை வென்றுள்ள இவர், திரைப்படங்களை சார்ந்த பல தரப்புகளில் உள்ள பலர் விருதுகளை வென்றுள்ளார்.

    பிக் பாஸ்

    இவர் 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக பங்குபெற்றுள்ளார்.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,858
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    மிஸ்கின்

    மிஷ்கின், தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். எளிய கதைகள், காட்சி அமைப்புகளுக்காக அறியப்படுகிறார். ரசிய கதையொன்றில் வரும் கதாப்பாத்திரமான மிஷ்கின் என்ற பெயரை தனக்கு சூட்டிக் கொண்டார்.
     

Share This Page