Imai Pol Kaappenda/ இமை போல் காப்பேனடா By Farmi

Discussion in 'Serial Stories' started by Farmi, Oct 10, 2017.

 1. Farmi

  Farmi Well-Known Member

  Joined:
  Oct 4, 2017
  Messages:
  157
  Likes Received:
  480
  Trophy Points:
  63
  Gender:
  Female
  (பகுதி 38-1)


  தவிப்பு, வேதனை, போராட்டம், கோபம் மற்றும் ஏமாற்றம் போன்ற சொற்களுக்கும் காதல் என்ற மூன்றெழுத்து சொல்லுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கின்றது போலும்.

  இவற்றையெல்லாம் தாண்டியே பெரும்பாலும் பல காதல் கதைகள் வெற்றியடைகின்றன. இவை இல்லாமல் இருந்தாலும் காதலில் ஒரு விறுவிறுப்பு இல்லாமல் போய் விடும் போலும்.

  இவற்றில் சிலவற்றை தாண்டி நம் நாயகன் நாயகியின் காதலும் இன்று வெற்றியை கண்டுள்ளது.

  அழகான அந்த விடியலில் சக்தியின் நெஞ்சாங்கூட்டில் தஞ்சம் புகுந்து அவனது இதயத்துடிப்பின் ராகத்தை இரசித்தவண்ணம் மஞ்சமாக துயில் கொண்டிருந்தாள் உஷா.

  சக்தியின் தொலைபேசி அலறவே அழைப்பவர் யார் என்பதை அறிந்து கொண்டவின் உதட்டோரத்தில் புன்னகை. மெதுவாக உஷாவை விலக்கி விட்டு எழப்போனவனை எழமுடியாமல் இறுக்கமாக அணைத்துக்கொண்டாள் உஷா.

  அவளை ஒரு கையால் அணைத்து முத்தத்தை பரிசளித்தவன் மற்ற கையால் மெதுவாக போனை எடுத்து காதுக்கு கொடுத்தான்.

  மறுமுனை வேண்டும் என்றே அமைதியை தத்தெடுத்திருக்க, நன்றாக வாங்கிக்கட்டிக்கொள்ள போகின்றோம் என்பதை உணர்ந்த சக்தி அப்பாவியாக,

  "குட் மோர்னிங் அம்மு"
  என்றான்.

  "என்ன சார்? குரல மட்டும் அப்பாவியா வெச்சிட்டு பேசினீங்கன்னா நாங்க உங்கள விட்ருவோமா?
  போ... நா போன வைக்கப்போறேன்..." -அம்மு

  "ஹா ஹா...
  ஓகே வை அம்மு பை... எனக்கும் தூக்க தூக்கமா வருது"
  என்றவன் உஷாவை மேலும் அணைத்துக்கொண்டான்.

  அவனையே பார்த்துக்கொண்டிருந்த உஷா சத்தம் வராமல் சிரித்தாள்.

  நேற்று இரவு அவனது முதல் நெருக்கத்தில் தூக்கம் வராமல் அவனது கை அணைப்பில் நெளிந்து கொண்டு கண்விழித்துக்கொண்டிருந்தவளுக்கு சுருக்கமாக தன்னை அறிமுகப்படுத்தியிருந்தான். முக்கியமாக அம்முவை பற்றி சொல்லியிருந்தான் சக்தி.

  "டேய் டேய்... போன வெச்சன்னு வை... நா வந்ததும் கொலை தான் நடக்கும்." -அம்மு

  "நானா போன வைக்க போனேன். நீ தான் வைக்கபோறதா சொன்ன அம்மு. அதான் நானே வெச்சிடலாம்னு பார்த்தேன்." -சக்தி

  "சரி... சொல்லு, இப்போ வன் மன்த்க்கு மேலா நா பண்ற எந்த காலுக்கு ரெஸ்பான்ஸ் கிடையாது. ஒன்லி டெக்ஸ்ட் மெசேஜ் தான் பண்ற. இப்போ டூ வீக்ஸ்ஸா அதுவும் கிடையாது. நேத்து மதியம் தான் எல்லா மெஸேஜ்சும் டெலிவேர்ட் ஆனது. அங்க என்ன நடக்குது....? சூரிகிட்ட கேட்டா அந்த தடியன், நீ வெளியூர் போயிருக்கான்... வெளியூர் போயிருக்கான்னு சொல்லி என்ன ஏமாத்திட்டு இருக்கான். அத்தய கேட்டா அவவும் சரியா பதில் சொல்ல மாட்டேங்குறாங்க...

  யாருக்குமே என் கஷ்டமோ தவிப்போ புரியவே மாட்டேங்குது."
  என்று சக்தியை பொறுமிக்கொண்டிருந்தவளின் குரல் கடைசியில் அழுகையின் குரலாக கரகரப்புடன் வெளிப்பட்டது.

  "ஏண்ணா....! உனக்கு இங்க ஒரு தங்கச்சி இருக்குறாள்ங்குறதே இத்துன நாள் மறந்துட்டியாணா....?

  எத்துன மெசேஜ். எத்துன கால் ஒண்ணுக்குமே சரியா நீ ரெஸ்பான்ஸ் பண்ணவே இல்ல... ஐ ஹேட் யூ......."
  என்று மேலும் ஏதோ சொல்லப் போன அம்முவை சொல்ல விடாமல்,

  "ஐ லவ் யூ..."
  என்றான் சக்தி.

  "ஐ ஹேட் யூ..." -அம்மு

  "ஐ லவ் யூ..."-சக்தி

  "ஐ ஹேட் யூ...
  ஹேட் யூ... ஹேட் யூ... ஹேட் யூ" -அம்மு

  "ஐ லவ் யூ... லவ் யூ... லவ் யூ..." -சக்தி

  "லூசா நீ"-அம்மு

  "தங்கச்சி லாசா இருந்தா... பொதுவா அந்த தங்கயோட அண்ணனும் லூசாதான் இருப்பான் போல... ஹா ஹா..." -சக்தி

  "சிரிக்காத...." -அம்மு

  "ஹா ஹா..." -சக்தி

  "சிரிக்க வேணாம்னு சொல்றேன் நா.." -அம்மு

  "ஓகே கூல்... நா சிரிக்கல ஓகே...
  நீ சொல்லு எப்போ வரப்போற...?" -சக்தி

  "எங்க...?"- அம்மு

  "உன் ஆயா வீட்டுக்கு..." -சக்தி

  "எனக்கு ஆயான்னு சொல்லிக்க யாரும் இல்ல..." -அம்மு

  "ஹா ஹா... நானே ஒரு ஆயா... எனக்கே ஒரு ஆயாவா இல்ல..." -சக்தி

  "சக்திஈஈஈஈஈ" -அம்மு

  "ஏண்டி இந்த கத்து கத்துற...?" -சக்தி

  "என்ன சொன்ன...? நா ஆயாவா...? சொல்லுடா நா உனக்கு ஆயாவா தெரியுறேனா...?" -அம்மு

  "ஹீ ஹீ... சாரி செல்லம்... நா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்"
  மேலும் இந்த அநாவசிய விளையாட்டை தொடராமல் சரண்டர் ஆனான் சக்தி...

  "அத்து...
  அந்த பயம் எப்பவும் நெளச்சிருக்கணும்..." -அம்மு

  "சரீங்க மேடம். இப்பவாச்சும் சொல்றீங்களா நீங்க எப்ப கிளம்பி வரப்போறீங்க...?" -சக்தி

  "நா எப்பவும் வரப்போறதில்ல..." -அம்மு

  "ஷுவர்...?" -சக்தி

  "யெஸ்" -அம்மு

  "ஓகே பைன் செல்லம்... நா சித்ராகிட்ட சூர்யாக்கு வேறயாரவது நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க சொல்றேன் என்ன...?' -சக்தி

  "ஓகே நோ ப்ரொப்ளம்... நீ சொல்லு ஆனா அவன் என் கழுத்துல தவிர வேறு யாரு கழுத்துலயும் தாலி கட்டவே மாட்டான்..." -அம்மு

  "ஓஹோ. அந்த நம்பிக்கையில தான் இந்தளவு பில்டப் கொடுக்குற போல..." -சக்தி

  "ஆமா... எந்த உறவுக்கும் நம்பிக்கை தான் முதல்படின்னு யாரோ ஒரு முற என் கிட்ட சொன்னதா ஞாபகம்..." -அம்மு

  "ஹா ஹா... அதெல்லாம் கெரெக்ட்டா ஞாபகம் வெச்சிக்க என்ன... சரி சொல்லு, பைனல் எக்ஸாம் முடிஞ்சிட்டா...?" -சக்தி

  "அத கொடுமைய ஏன் கேக்குற சக்தி... நெக்ஸ்ட் மன்த் தான்..." -அம்மு
  "ஹேய் நிஜமாவா சொல்றா...?" - சக்தி

  "நானே இன்னொரு மன்த் இங்க இருக்கவேணாமான்னு காண்டுல இருக்கேன். நீ நிஜமா... பைஜாமான்னு கேட்டுட்டு இருக்க...?" -அம்மு

  "ஹா ஹா... அப்போ ஓகே
  நா இன்னும் வன் வீக்கல அங்க இருப்பேன்." -சக்தி

  "சக்தி...! ஆர் யூ சீரியஸ்....?" -அம்மு

  "யெஸ்... நானும் இன்னொரு முக்கியமான ஆளும் அங்க வாறோம்... வன் மன்த் அங்க சுத்திட்டு உனக்கு எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் இங்க வாறோம்..." -சக்தி

  "யாரு சூரிய கூட்டிட்டு வரப்போறியாக்கும்" -அம்மு

  உஷாவை பார்த்து கண்ணடித்தவன்,
  "இல்ல இது வேற ஒருத்தர். உனக்கு ரொம்ப முக்கியமான ஆளும் கூட... ஆனா யாருன்னு இப்போ சொல்ல மாட்டேன்... சாப்ரைஸ்...!
  நெக்ஸ்ட் வீக் நீயே தெரிஞ்சிப்ப..."

  "ஏன் சக்தி படுத்துற....? சாப்ரைஸ்ங்குற வேர்ட கேட்டதும்மே என் மண்ட வெடிக்கும்னு உனக்கு நல்லா தெரியும் இல்ல... இன்னும் வன் வீக்... அய்யோஊஊ...! முடியாது... யாருன்னு ஒரு சின்ன க்ளூ குடேன்... ப்ளீஸ்" -அம்மு

  "நோ நோ... அதெல்லாம் முடியாது. வன் வீக் பொறுத்துக்க அம்மு... வேறென்ன...?" -சக்தி

  "ஹ்ம்ம்ம்ம்... ஓகே பார்க்கலாம்... ஏன் கிட்ட சூரி சொல்லுவான்..." -அம்மு

  "ஆமா ஆமா... கண்டிப்பா சொல்லுவான். கேட்டுப்பாரு..." -சக்தி

  "ஹா ஹா... நா கேட்டு தெரிஞ்சுப்பேன். எனக்கு தூக்கம் வருது சக்தி. நாளேக்கி ப்ராக்டிகள்ஸ் வேற இருக்கு.. பை... குட் நைட்" -அம்மு

  "ஓஹ் ஓகே... குட் நைட் உனக்கு செல்லம். பை"
  என்றவன் போனை சிரித்த வண்ணமே வைத்தான்.

  "அம்மு ரொம்ப வாலு இல்ல..."-உஷா

  அவளது நெற்றியோடு தனது நெற்றியை முட்டியவன்,
  "ம்ம்ம்ம் யெஸ்...
  இப்போ கொஞ்சம் கம்மினே சொல்லலாம். அம்மாப்பா இருக்குறப்போ இதுக்கு மேல..."

  "ஒன்னு கேட்டா தப்பா நெனக்க மாட்டீங்கல்ல"-உஷா

  "நீ என்ன கேக்க வர்றேன்னு எனக்கு தெரியும் ஷானு... ஒன்னு மட்டும் நீ நல்லா புரிஞ்சிக்கடா... என் அம்மாப்பாட இறப்புக்கு காரணம் மாமாவோ ராஜ் மாமாவோ கெடையாது. ராஜ் மாமாவோட ஆளுங்க தான் என் அம்மாப்பா போன கார ஆக்சிடெண்ட் ஆக வெச்சிருக்காங்க... ஆனா அது அவருக்கே தெரியாம தான் நடந்திருக்கு.

  நா மலேசியா போறதுக்கு மொத நாள் மாமா என்ன மீட் பண்ண ஸ்டேஷன் வந்தாரு..."
  என்றவன் நிறுத்தி உஷாவின் முகத்தை பார்த்தாள்.

  அவளோ வேதனையோடு அவனது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

  அவளைப் பார்த்து புன்னகைத்தவன்,
  "எதுக்கு வந்தாருன்னு கேக்க மாட்டியா ஷானு...!"

  "ம்ஹும்"
  என்று மறுப்பாக தலையசைத்தவளின் கண்களில் தேங்கி இருந்த நீர் இதற்கு மேல் நிற்காது என்று வெளியே கொட்டியது.

  "ஹேய்" என்று அவளை இழுத்து கண்ணீரை துடைத்து தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டவன்,
  "நீ இனிமே இதப்பத்தி யோசிச்சு அழக்கூடாதுன்னு தானே நா சொல்லிட்டிருக்கேன்டா... ப்ளீஸ்..."
  என்றவன் அவளது தலையை வருடிக்கொடுத்தான்.

  கொஞ்சநேரம் அவனது அணைப்பில் இருந்த வண்ணமே கண்ணீர் வடித்தவள், எழுந்து...
  "ஓகே, நா இனி அழமாட்டேன்"
  என்றவளின் முகத்தில் கண்ணீர் தடங்கள் அப்படியே இருந்தது.

  "தட்ஸ் மை கேர்ள்" என்று அவளது கண்ணீர் தடங்களை போக்கியவன் முன்பிருந்தது போலவே அவளை அணைத்துக் கொண்டு தான் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான்.

  "மாமா சந்திக்கவந்து ஏன் கிட்ட மன்னிப்பு கேட்டாரு ஷானு... மன்னிப்புங்குற வார்த்தையால மன்னிக்க முடியாத குற்றம் செஞ்சிருக்குறதா வேதனையோட மன்னிப்பு கேட்டாரு... ஆனா நா அத ஒத்துக்கல..."
  என்றவன் நிறுத்தினான்.

  "ஏன் சக்தி...?"
  குரலில் வேதனை மாறாமல் கேட்டாள் உஷா.

  "தப்பு செஞ்சவங்கள தான் மன்னிக்கலாம் ஷானு. தப்பே செய்யாம மன்னிப்பு கேக்குறவங்கள என்ன செய்யலாம்...? அதான் ஒத்துக்கல..." -சக்தி
   
 2. Farmi

  Farmi Well-Known Member

  Joined:
  Oct 4, 2017
  Messages:
  157
  Likes Received:
  480
  Trophy Points:
  63
  Gender:
  Female
  (பகுதி 38-2)

  சக்தியை புரியாமல் பார்த்தாள் உஷா.
  "ரொம்ப குழப்பிக்காத பேபி... நான் ஆரம்பத்துல சொன்னதையே தான் இப்பவும் சொல்றேன். இது உங்க அப்பாவுக்கும் சரி ராஜ் மாமாவுக்கு சரி, என்ன பொருத்தவரையில ரெண்டு பேருக்குமே இதுல எந்த சம்பந்தமும் கிடையாது... அந்த சுப்புச்சாமி தான் ராஜ் மாமாவ ஏமாத்திருக்கான்..."

  "சுப்புச்சாமி யாரு...?" -உஷா

  "அவன நெறைய வகைல உனக்கு இன்ட்ரடூயூஸ் பண்ணி வைக்கலாம்... ம்ம்ம்... என் அம்மாப்பாவ கொன்னவன், நான் உன்ன மீட் பண்ண அந்த நாள்ல அவன் ஆளுங்கள வெச்சு என்ன கொல பண்ண பார்த்தவன்... உன்ன கொல பண்றதா என்ன மெரட்டியவன்... இன்னும் சொல்ல போனா ஒரு காலத்துல நிஷாவோட அப்பா... அதான் ராஜ் மாமாவோட பிரெண்டா இருந்தவன்..."
  சொல்லி முடிக்கும் போதே உஷாவின் அணைப்பு இறுகி சக்தியின் நெஞ்சு ஈரமானது....

  "ஹேய்.... டார்லிங் எதுக்கு இப்போ வாட்டர் டேன்ங்க ஓபன் பண்ணிருக்க"
  சக்தி குறும்பாக கேட்க உஷாவின் அழுகை மேலும் அதிகமானது.

  "ஹேய்... ஷானு... எதுக்குடா அலுற...???
  சொன்னா தானே எனக்கு தெரியும்மா..." -சக்தி

  "எ...ன...க்... கு...."
  என்றவள் சொல்ல வந்ததை சொல்லி முடிக்காமல் அழுகையை தொடர்ந்தாள்.

  "எனக்கு....?...
  உனக்கு என்னடா...?"
  என்றவன் அவளது முகத்தை நிமிர்த்த எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.

  "இவள் என்ன சொல்ல வருகிறாள்" என்றும் புரியாமல், "எப்படி ஆறுதல் சொல்லுவது" என்றும் புரியாமல் அவளது முதுகை வருடிக்கொடுத்தான் சக்தி.

  கொஞ்ச நேரம் அழுதவள், முகத்தை மட்டும் நிமிர்த்தி,
  "எனக்கு...
  எனக்கு பயமா இருக்கு சக்தி....
  அ..ந்.. த ஆள் உங்களுக்கு...."
  என்றவள் கேவி கேவி மீண்டும் அழுதாள்.

  உஷா என்ன சொல்ல வருகிறாள் என்பதை புரிந்தவனுக்கு அவனையும் மீறி சிரிப்பு வந்தாலும் தான் இப்பொழுது சிரிப்பது அவளது உணர்வுகளை உதாசீனம் செய்ததற்கு சமனாகும் என்பதால் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டான்.

  "அந்த ஆள்...?" -சக்தி

  "ஏதாவது செஞ்சிருவானோன்னு..."
  என்றவளின் முகம் வேதனையில் சுருங்கியது.

  பெருமூச்சொன்றை கொஞ்சம் சத்தமாகவே வெளியேற்றியவன்...
  "ஓகே நீயே சொல்லு ஷானு... அதுக்கு என்ன பண்ணலாம்...?"

  "இந்த...." என்று ஏதோ சொல்ல வந்தவள் சொல்லாமல் நிறுத்திக்கொண்டாள்.

  "இந்த....?" -சக்தி

  "இந்த வேலைய விட்டுறலாம் இல்ல..."
  கொஞ்சம் தடுமாறிய வண்ணமே சொன்னாள் உஷா.

  "வேலைய விட்டுட்டாலும் பழைய கோபம் இல்லாமலா போகும் ஷானு..."
  போலியாக வரவழைத்துக்கொண்ட வருத்தத்துடன் சொன்னான் சக்தி.

  உஷாவின் நின்றிருந்த அழுகை மீண்டும் ஆரம்பமானது...

  அவளை சிறிது நேரம் சமாதனப்படுத்தியவன்,
  "சரி வேலைய விட்டுறலாம். அதுக்கப்புறம் பணத்துக்கு... நம்ம வாழ்க்கை செலவுக்கு என்ன பண்றது...?"

  "நான் தான் இன்னும் கொஞ்ச நாள்ல நம்ம ஹாஸ்பிடல ஆரம்பிச்சிடுவோம் இல்ல... ஸோ நா அதெல்லாம் பாத்துக்குறேன்" -உஷா

  "அப்போ நான்....?"
  ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டான் சக்தி.

  "நீங்க கொஞ்சநாள் ரெஸ்ட் பண்ணிக்கோங்க அதுக்கப்புறம் நா அப்பாகிட்ட பேசி இங்கிருக்க ஒரு கம்பெனிய உங்க பெயரில மாத்திடுறேன்..." -உஷா

  உஷாவின் மூக்கோடு மூக்கை உரசியவன் அவளது மூக்கை பிடித்து ஆட்டி... தலையை சுட்டிக்காட்டியவன்,
  "என் டார்லிங்க்கு இங்க கிட்னி ரொம்ப தான் வேல செய்து"
  என்றான்.

  புருவங்கள் இரண்டையும் சுருக்கி அவனை குழப்பத்துடன் பாவமாக பார்த்தாள் உஷா... அவளை அப்படி குழந்தையாட்டமாக பார்க்க சக்திக்கோ உள்ளுக்குள் ஏதோ செய்தது.

  "இப்டி எல்லாம் பார்க்காத டார்லிங்...
  முடியல"- சக்தி

  இதழ் பிதுக்கி,
  "ஓகே நா போறேன்"
  என்று எழப்போனவளை தன் மீதே விழச்செய்தவன்,

  "போலாம்... அதுக்கு முன்னாடி நா சொல்றத கொஞ்சம் கேட்டுட்டு போ...."

  அவன் சொல்வதை கேட்க சம்மதமாக தனது தலையை அவனது நெஞ்சோடு சேர்த்து சாய்த்துக் கொண்டாள் உஷா.

  அவன் அவளிடம் சொல்லப் போவது உஷாவுக்கு குதூகலத்தை தரக்கூடிய விடயங்கள் ஆகும்.

  அதாவது சுப்புச்சாமியின் மரணம் மற்றும் சக்தியின் இராஜினாமா தொடர்பான விடயங்களை ஆகும்.

  சக்தி அங்கு தன் தலைவியிடம் கதை சொல்ல நான் என் வாசகர்களாகிய உங்களிடம் நம் தலைவன் ஆகிய சக்தி எனப்படும் ஸ்வேதானந்தன் யார் என்பதை கூறுகின்றேன்.

  கோயம்புத்தோரை பூர்வீகமாகவும் மதுரையை வசிப்பிடமாகவும் கொண்டவர்கள் தான் வைத்தியநாதன்-வைதேகி தம்பதியினர்.

  இந்த காதல் தம்பதியின் காதலுக்கு சாட்சியாக இந்த தரணியில் முதல் உதித்தவன் தான் சிவானந்தன் எனப்படும் சிவா.

  அதே வைத்தியநாதன்-வைதேகி தம்பதியினரின் காதலின் சாட்சியின் அந்தமாக பிறந்தவள் தான் சித்ரா.

  மதுரையில் இருக்கும் பிரபல ஒரு ஜவுளிக்கடை சங்கிலித்தொடருக்கே உரிமையாளராக இருந்தார் வைத்தியநாதன். சிறிய அளவில் ஆரம்பித்து இருந்தாலும் காலப்போக்கில் பெரும் வெற்றியை குவித்து தன் தொழிலில் ஆழக்கால்பதித்தார்.

  சின்ன வயதில் இருந்தே தப்புக்களை தட்டிக்கேட்கும் பண்புடன் வளர்ந்தவன் தான் சிவா.

  தன் சிறுவயது இலட்சியத்தின் படியே சிவானந்தன் IPS என்ற பட்டத்தோடு தன் சொந்த இடமான கோயபுத்தூரிலே பணியில் இணைந்தான்.
  அங்கு பணிபுரியும் காலத்தில் தான் ஒரு போலீஸ் அதிகாரி அவரது மகளை சிவாவுக்கு திருமணம் செய்து வைக்கும் நோக்கத்தோடு சிவாவின் அப்பாவை சந்தித்து திருமண பேச்சை ஆரம்பித்தார்.

  அனைத்து பொறுத்தங்களும் சிறப்பாக அமைந்து விடவே நல்லதொரு நாளில் சிவா ஷாருமதியை தன்னில் சரிபாதியாக்கிக்கொண்டான்.

  இவர்கள் கோயபுத்தூரிலே சிவாவின் வீட்டிலே தங்களது வாழ்வை ஆரம்பிக்க கொஞ்ச நாளில் வைத்தியநாதன்-வைதேகி தம்பதியினரும் இங்கே வந்து குடியேறினர்.

  அந்த வருடத்திலேயே சித்ராவுக்கும் அவர்களது மாமன் மகன் சிவநேசனை திருமணம் செய்து வைத்தனர்.

  சிவானந்தன்-ஷாருமதி மற்றும் சித்ரா - சிவநேசன் தம்பதியினரின் வாழ்க்கை மிகவும் சீரும் சிறப்புமாக போய்க்கொண்டிருந்தது.

  அடுத்து வந்த ஒரு வருடத்திற்குப் பின் சிவா-ஷாருமதி தம்பதியினருக்கு அந்த வீட்டின் முதல் இளவரசனாக பிறந்தான் அவன்...

  தாத்தாவும் பாட்டியும் இளவரசனுக்கு பெயர் வைக்க போட்டிபோட இரண்டு பெயர்களில் எந்த பெயரை வைப்பது என்று தெரியாமல் விழித்தனர் பெற்றவர்கள்.

  தாத்தா ஸ்வேதானந்தன் என்ற பெயரை பரிந்துரைக்க பாட்டியோ சக்தி என்ற பெயரை பரிந்துரை செய்தார். இவர்களின் வீண் மோதலை தாங்காமல் இளவரசனின் அத்தையான சித்ரா சீட்டு குலுக்கி சிவாவுக்கு எடுக்க சொல்லவே அத்துண்டை எடுத்து சித்ரா வாசிக்கவே பாட்டியின் முகம் அஷ்டகோணலாகியது.

  வைதேகியின் முகத்தை பார்த்து அங்கு பாரிய சிரிப்பொலியொன்று வெளியாகவே அந்த இளவரசனுக்கு ஸ்வேதானந்தன் என்று பெயர் சூட்டப்பட்டது. என்னதான் ஸ்வேதானந்தன் என்று பெயர் அவனுக்கு வைக்கப்பட்டாலும் தாத்தாவை தவிர வீட்டில் உள்ள அனைவரும் அவனை சக்தி என்றே அழைத்தனர். அப்பொழுதெல்லாம் தாத்தாவை ஓரக்கண்ணால் பார்க்கும் பாட்டி வைதேகி, இல்லாத கொலரை தூக்கி விடுவதை காண்பது ஏனைய இளசுகளின் வாடிக்கையாகிப்போனது.

  சக்தி பிறந்து ஆறு மாதங்களின் பின்னர் பிறந்தவன் தான் அவர்கள் வீட்டு அடுத்த இளவரசன் சூர்யா. அவனுக்கு பெயர் வைத்தது சித்ரா தான். அவள் அந்த உரிமையை யாருக்கும் கொடுத்து வம்பை விலைக்கு வாங்க விரும்பவில்லை போலும்...

  குழந்தைகளின் ஒலியில் அவ்வீடே குதூகலத்திற்கு எந்த பஞ்சமும் இல்லாமல் இராஜமாளிகையாகவே இருந்தது.

  அதன் பின்னர் ஆறு வருடங்கள் கழித்து சக்திக்கு தங்கையாக, சூர்யாவிற்கு முறைப்பெண்ணாக பிறந்தாள் அந்த இராஜமாளிகையின் இளவரசி. அம்மு எனப்படும் ஸ்வேதா.

  காலம் அதன் சுழற்சியில் சுத்திக்கொண்டு இருந்தது. பிள்ளைகளும் காலத்திற்கு ஏற்ப வளர்ந்துகொண்டு வந்தனர். சக்தி பாடசாலை செல்ல ஆரம்பித்திருந்தான். அங்கு முதல் நாளே அவனுக்கு கிடைத்த நண்பன் தான் அரவிந்த். பாடசாலை முதல் நாளில் கிடைத்த நட்பு.... அப்பிணைப்பு சற்றும் மாறாமல் இன்றும் அதே அளவில் அவர்கள் இருவரிடமும் காணப்படுகிறது.

  படிப்பில் மிகவும் கெட்டிக்காரனாக இருந்தான் சக்தி. சூர்யாவும் அதற்கு அடுத்து வந்த வருடம் பாடசாலையில் இணைந்தான். அவர்களது கல்வி வாழ்க்கை மிகவும் சுவாரஷ்யமாக சென்று கொண்டிருந்தது.

  சிவா தன் உயிரிலும் மேலாக தன் தொழிலை மதித்தான். அதற்கு நேர்மாறாக இருந்தான் அவனது மைந்தன் சக்தி. போலீஸ் தொழிலையே அடியோடு வெறுத்தான் அவன். அதற்கு சிவா ஒரு வகையில் காரணம் என்றால் மற்றைய வகைப் பங்கு ஷாருமதியையே சேரும்.

  ஷாருமதி வீட்டுக்கு ஒரே பெண் பிள்ளை ஆவாள். அவளுக்கு ஒரே ஒரு தம்பி. இருவருமே மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டவர்கள். ஷாருமதி மிகவும் மென்மையான சுபாவம் கொண்டவள். அனைத்திற்கும் அழுகை என்பது அவளது பலவீனம் ஆகும். அவளாக நினைத்து அலாவிட்டாலும் அவளது மென்மையின் காரணமாக கண்ணீர் அவளையும் மீறி வெளியே கொட்டிவிடும்...

  இப்படித்தான், சிவா ஒவ்வொரு முறையும் இரவில் வீட்டிற்கு வந்துசேர தாமதமாகும் போதும் அழுது அழுது ஓய்ந்து போகும் தன் தாயைப் பார்த்தும், தந்தை வேலைக்கு செல்லும் ஒவ்வொரு விடியலிலும் தவிப்போடே வழியனுப்பி வைக்கும் தாயை பார்த்தும் அவனுக்கு சிறுவயதில் இருந்தே போலீஸ் தொழில் மீது ஒரு அதீத வெறுப்பு.

  ஒவ்வொரு இரவிலும் சிறுவனாக இருந்தாலும் கூட தந்தை வரும்வரை தாயோடே விழித்திருப்பான் சக்தி. ஷாருமதி எவ்வளவு சொன்னாலும் உறங்கச்செல்லாமல் விழித்திருந்து தந்தையின் வண்டி வரும் சத்தம் கேட்டதன் பின்னர் தான் தன் அறைக்கு சென்றுவிடுவான்.

  தாய் தந்தை மீதும் தன் ஒரே தங்கை மீதும் அதீத அன்பு கொண்டவன் சக்தி. பெற்றோரின் பெயரை ஒரு நாளும் தட்டாதவன். ஒழுக்கத்திலும் பண்பிலும் சிறப்பானவனாக வளர்ந்தான். ஆனால் ஒரே ஒரு கெட்ட பழக்கம் அவனிடம் ஒட்டிக்கொண்டே இருந்து... அவ்வளவு பெரிய கெட்டபழக்கமாக அது இல்லாவிட்டாலும் அப்பழக்கத்தை விதியே மாற்றிவிடும் என்று அவன் நினைத்துப்பார்க்கவே இல்லை.

  அந்த கெட்டபழக்கம் நம்மில் பலரிடம் இருப்பது வழக்கம் தான். அதாவது அவன் வீட்டில் இல்லாத நேரம் தவிர்த்து ஏனைய நேரத்தில் ஷாருமதி ஊட்டிவிடாமல் ஒரு பருக்கு கூட மறந்தும் சக்தியின் வாயிற்க்குள் செல்லவே செல்லாது.
  இவ்வாறு தாயின் அன்பில் திளைத்து இருந்தவன் ஒரு நாளும் சிந்திக்கவே இல்லை....,
  தானே தனியாக சமைத்து சாப்பிட வேண்டிய நிலை வரும் என்பதை....

  சுப்புச்சாமி போதைப் பொருள் வியாபாரத்தில் தவழ்ந்து கொண்டிருந்த காலம் அது. அவனின் வியாபாரம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்த வண்ணம் இருக்க கமிஷ்னரினால் அந்த கேஸ் சிவாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்து. சிவாவும் அவனை ஆதாரத்துடன் கைது செய்ய வேண்டும் என்ற முனைப்பில் அனைத்தையும் கண்காணித்து செவ்வனே திட்டங்களை வகுத்து செய்து கொண்டிருந்தான்.

  சுப்புச்சாமி அப்போது சாதாரனமாக வெளியில் நடமாடிக்கொண்டிருந்தான். பயந்து ஒழியும் அளவுக்கு அவன் மீதான போலீஸாரின் தேடல் தீவிரமடைந்திருக்கவில்லை. ஆனால் போலீஸாரின் கண்காணிப்பு அவனை தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

  அந்த நேரத்தில் தான் அசிஸ்டன் கமிஷ்னராக இருந்த சிவா இன்னும் ஒரு வாரத்தில் டெபுயூட்டி கமிஷ்னராக பதவிப் பிரமாணம் செய்ய இருந்தார்.

  அந்த காலை அழகாக விடிந்திருந்தாலும் அன்றைய நாள் இரவு சக்தியின் வீட்டாரை தேடி வந்த செய்தி அவர்களுக்கு பேரிடியாகவே இருந்தது.

  நண்பன் ஒருவரின் தங்கையின் திருமணத்திற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த வேளையில் சிவா மற்றும் ஷாருமதி வந்த கார் கனரக வாகனமொன்றுடன் மோதி இருவரும் அவ்விடத்திலேயே இறந்ததாக வந்ததே அந்த செய்தி ஆகும்.

  வீடே அந்த செய்தியை கேட்டு ஒரு நிமிடம் ஆடிப்போனது. பதினாறே வயதான சக்தி ஒரு பக்கம் இடிந்து போக பத்து வயதான அம்மு இன்னொரு பக்கம் இடிந்து போனாள்.

  யார் யாரை தேற்றுவது என்று ஒன்றுமே புரியாமல் அனைவரும் அவரவர் கவலையில் முடங்கிப்போயிருக்க சிவாவின் நண்பனான தேவராஜ் தான் அனைத்தையும் முன்னின்று செய்ய விளைந்தார்.

  ஷாருமதியின் தம்பியும் லண்டனில் இருந்து இறுதி சடங்கிற்காக வந்துவிடவே அவரும் சிவநேசனும் தேவராஜோடு இணைந்து அனைத்தையும் செய்து முடித்தனர்.

  ஆனால் தேவராஜை தவிர வேறு யாருக்குமே இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றவே இல்லை. தேவராஜ் இன்னொரு புறம் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்திருந்தார்.
   
 3. Farmi

  Farmi Well-Known Member

  Joined:
  Oct 4, 2017
  Messages:
  157
  Likes Received:
  480
  Trophy Points:
  63
  Gender:
  Female
  (பகுதி 38-3)

  தேவராஜ் மேற்கொண்ட விசாரணைகளின் விளைவாக இரண்டு வாரத்தில் இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்று கண்டுபிடிக்கப்பது. ஆனால் யார் செய்தார்கள்...? எதனால் செய்தார்கள் என்ற எந்த தகவலையும் அந்நேரத்தில் கண்டு பிடிக்க முடியவில்லை...

  திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்று தெரிய வந்ததுமே அனைவரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனார்கள். அனைவருக்கும் உள்ளுக்குள் ஒரு பயம் உருவானது. அது சிவாவின் வாரிசுகளான சக்தி மற்றும் அம்மு தொடர்பாகவே ஆகும். பெற்றோரை கொலை செய்தவர்கள் பகைநீக்க பிள்ளைகளை கொலை செய்யமாட்டார்கள் என்ற எந்தவொரு உத்தரவாதமும் கிடையாது அல்லவா...

  எனவே அனைவரும் இது தொடர்பான யோசனைகளில் மூழ்கியிருக்க லண்டனில் இருந்து வந்திருந்த ஷாருமதியின் தம்பி மீண்டும் திரும்பிச்செல்ல மூன்று வாரங்களே இருக்க அவர் சக்தியையும் அம்முவையும் அங்கு அழைத்துச்செல்வதாக கூறினார்.

  ஆரம்பத்தில் சித்ரா இதற்கு உடன்படாமல் இருந்தாலும் சிவநேசன் எடுத்துக்கூறி புரியவைக்கவே சக்தியும் அம்முவுக்கு ஷாருமதியின் தம்பி ஷாருமதனோடு லண்டனுக்கு சென்றனர். அவர்களது செலவுகள் அனைத்தையும் ஷாருமதனே பொறுப்பேற்பதாக கூறியிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளாத வைத்தியநாதன் அதை அவரே பொறுப்பேற்றுக்கொண்டார்.

  வைத்தியநாதன் தனது சொத்துக்களில் மூன்றில் ஒரு பங்கை சிவாவுக்கு அளித்திருந்தார். அதை சிவா தனது நண்பன் ஒருவரோடு அவரது வியாபாரத்தில் முதலிட்டிருந்தார். அதன் இலாபம் அனைத்தும் காலாகாலத்தில் சக்தியினதும் அம்முவினதும் வங்கிக்கணக்குகளில் வந்து சேர்ந்த வண்ணமே இருந்தன. ஆனால் வைத்தியநாதன் அப்பணத்தை உபயோகிக்காமல் தனது பணத்திலே பேரப்பிள்ளைகள் இருவருக்கும் செலவுக்கான பணத்தை அனுப்பிவந்தார்.

  ஷாருமதன் பல தடவைகள் அவரை தொடர்புகொண்டு தான் அவர்களது பொறுப்புக்களை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினாலும் அவர் அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. தான் உயிரோடு இருக்கும் வரை தனது பேரக்குழந்தைகளுக்கான முழுப்பொறுப்பையும் தானே செய்ய வேண்டும் என்று கூறி, ஷாருமதனின் கோரிக்கைக்கு மென்மையாக மறுப்பு தெரிவித்தார்.

  இவ்வாறு சக்தி பதினாறு வயதாகவும் அம்மு பத்து வயதாகவும் இருக்கும் போது லண்டன் சென்றனர். இலக்கே இல்லாமல் லண்டன் நோக்கிய தங்களது பயணத்தை தொடர்ந்த அண்ணனும் தங்கையும் அங்கு உள்ள சூழலுக்கு பழகவே மாதங்கள் எடுத்தன. மாதங்கள் செல்ல இருவரும் ஓரளவு தங்களது பழைய நிலையை அடைந்திருந்தனர்.

  இவர்கள் இருவரையும் நினைத்து இந்தியாவில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் ஒருபுறம் வாடியிருக்க மறுபுறம் அரவிந்த் சக்தி இல்லாமல் மிகவும் உடைந்து போயிருந்தான். என்றும் ஒன்றாகவே இருப்பவர்கள் ஒருநாளும் இப்படியான திடீர் பிரிவை நினைத்துக்கூட பார்த்ததில்லை. சக்தி இல்லாமல் அரவிந்தின் வீட்டில் அவனது புலம்பல்கள் அதிகமாயின.

  அம்மு லண்டன் பாடத்திட்டத்தின் படி அங்கு அவளது கல்வியை தொடர்ந்தாள். சக்தி லண்டனில் உள்ள பிரபலமான கல்லூரிகளில் ஒன்றான இம்பீரியல் காலேஜில் உலகத்தரம் பெற்ற நான்கு வருட பாடநெறியான BSc In Electrical And Electronic Engineering பாடநெறியை ஆரம்பித்தான். இந்தியாவின் கல்வித்திட்டத்தின் அடிப்படையில் இப்பாடநெறி BE என குறிப்பிடப்பட்டாலும் லண்டனில் இந்த பாடநெறியானது மிகவும் பரந்துபட்ட அடிப்படையில் விரிவாக கற்பிக்கப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற பாடநெறியாகும்.

  சுமார் ஆறு மாதங்கள் அந்த பாடநெறியை கற்றவன் மீண்டும் இந்தியா திரும்பினான். இந்தியா திரும்பியவன் இங்கிருக்கும் ஒரு பிரபல காலேஜில் B.E பாடநெறியை அரவிந்தோடு சேர்ந்து ஆரம்பித்தாலும் அம்முவின் பிரிவு அவனையும் சக்தியின் பிரிவு அம்முவையும் அதிகம் பாதித்தமையினால் மூன்று மாதங்களில் மீண்டும் லண்டன் சென்றவன் திரும்பவும் அதே பாடநெறியை தொடர்ந்தான்.

  சக்தியின் இப்பாடநெறி முடிய ஒன்றரை வருடங்கள் இருக்கும் போதே அக்ஷ்ராவின் திடீர் இழப்பு ஏற்பட்டு அதனால் மிகவும் பாதிக்கப்பட்டான் அரவிந்த். அர்ஜூன் கோபாலிடம் பேசிய சக்தி அரவிந்தை தன்னோடு கொண்டு வந்து சேர்த்து விடுமாறு கேட்கவே அவருக்கும் அதுவே சரியாகப்பட அரவிந்தும் சக்தியோடு அங்கு இணைந்து கொண்டான்.

  காலப்போக்கில் சக்தியின் அருகாமை தந்த அரவணைப்பில் அரவிந்த் சற்றே மாறினான். கல்வியில் அவனது ஈடுபாடும் அதிகரிக்கவே இருவரும் கல்வியில் தங்களது கவனத்தை செலுத்தலாயினர்.

  இடையில் பாட்டியின் மரணம் நிகழவே ஒரு முறை சக்தி மட்டும் தாயகம் வந்து சென்றிருந்தான்.

  இவ்வாறாக லண்டன் இம்பீரியல் காலேஜில் தனது நான்கு வருட பாடநெறியை பூர்த்திசெய்த சக்தி UCL எனப்படும் University College London என்ற இன்னொரு கல்லூரியில் இந்தியாவில் M.E என்ற பெயரில் அறிமுகத்தில் உள்ள பாடநெறியான, லண்டன் கல்வித்திட்டத்தின் அடிப்படையில் MSc In Electrical and Electronic Engineering என்ற பெயரில் உள்ள ஒரு வருட பாடநெறியை செய்து முடித்தான்.

  தனது ஐந்து வருட படிப்பையும் எந்தவித சிக்கலும் இன்றி வெற்றிகரமாக பூர்த்திசெய்த சக்தி ஒரு இலட்சியத்தோடு அரவிந்திடமும் அம்முவிடமும் இருந்து விடைபெற்று தனது இருபத்திரெண்டாம் வயதின் ஆரம்பத்தில் தாயகம் திரும்பினான்.

  தாயகம் திரும்பியவன் முதல் செய்தது தேவராஜால் போடப்பட்டிருந்த தனது தந்தையின் கொலை வழக்கை வாபஸ் பெற்றதாகும்.

  ஒன்றும் புரியாமல் அனைவரும் அவன் மேல் கேள்விக்கனைகளை தொடுக்கவே அவனிடம் இருந்து அமைதி மாத்திரமே பதிலாக கிடைத்தது.

  அதன் பின் தனது வங்கிக்கணக்கில் இருந்த பணத்தின் உதவியோடு எஸ். எஸ் எகோ பவர் க்ரூப் ஒப் கம்பெனி என்ற பெயரில் சோலார் பேனல்ஸ் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தான்.

  மூலதனம் முழுவதையும் தானே இட்டிருந்தாலும் ஸ்வேதாவின் பெயரிலும் டொக்குயூமண்ட்ஸ்களை தயாரித்தவன் அம்முவையும் ஒரு பங்குதாரராக ஆக்கினான்.

  இரவு,பகல் பாராமல் அந்த முந்நூற்றி அறுபத்தைந்து நாட்களையும் தன்னை முழுமையாக அதில் ஈடுபடுத்தினான் சக்தி. அவன் எதிர்பார்த்த வெற்றியும் அவனுக்கு கிடைத்தது.

  தன் பேரனின் வெற்றியை பிரமிப்பாகவும் கண்குளிர்ச்சியாகவும் கண்டுகளித்த வைத்தியநாதனும் தன் இவ்வுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து அவரது தலைவியோடு சேர்ந்து கொண்டார்.

  சூர்யாவும் தன் படிப்பை முடித்து தந்தையோடு கம்பெனியின் பொறுப்புக்களை கவனித்துக்கொண்டிருந்தான்.

  வைத்தியநாதனும் அவர்கள் வீட்டில் இருக்கவே சக்தி வந்ததும் அவனையும் அவர்களோடு இருத்திக்கொண்டாள் சித்ரா.

  அடிக்கடி தன் வீட்டுக்கு சென்றுவந்து கொண்டிருந்த சக்தி தாத்தாவின் மறைவின் பின் அந்த வீட்ட அநாதைகளை ஆதரிக்கும் இல்லமொன்றிற்கு அன்பளிப்பாக வழங்கினான். அது அவர்களின் சேவை விஸ்தரிப்புக்கு மிகவும் பிரயோசனமாக அமைந்தது.

  தன் குடும்பத்தினருக்கு அடுத்த இடியாக தான் காவல் துறையில் இணைந்து கொள்ளப்போவதாக கூறிய சக்தி யாரின் யோசனைகளையும் கேட்கக்கூடிய நிலையில் இருக்கவே இல்லை.

  சித்ரா எவ்வளவு அழுது கெஞ்சியும் தான் எடுத்திருக்கும் முடிவில் இருந்து சக்தி சிறிதளவேனும் பிசகவேயில்லை. இந்த விடயம் அம்முவிற்கு தெரியக்கூடாது என்றும் கண்டிப்புடன் சொல்லி வைத்திருந்தான் சக்தி.

  இன்றைய நாள் வரை சக்தி போலீஸாக இருந்தது தொடர்பாக எதுவுமே அம்முவுக்கு தெரியாது. சக்தி அவனது தொழிலை கவனிப்பதாகவே அம்மு இன்றுவரை நினைத்துக்கொண்டிருக்கிறாள்.

  தன் நிறுவனத்தின் பொறுப்பை சூர்யாவிடமும் சிவநேசனிடமும் ஒப்படைத்தான் சக்தி. அதே போல் தான் சம்பாதித்த பணத்தை கொண்டு நிலம் ஒன்றை அவர்களது இடத்திலே வாங்கியவன், அடுத்து தான் செய்யப்போகும் திட்டத்திற்கு அமைவாகவும் தன் தனிமைக்கு இலகுவாகவும் இருக்கும் வகையில் அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட அமைப்பில் மூன்று மாடி வீடொன்றை கட்டுவதற்கான பொறுப்பை கட்டுமான நிறுவனமொன்றிடம் ஒப்படைத்து விட்டு தேவராஜின் உதவியோடு தன் அடுத்த கட்ட இலக்கு நோக்கி சென்றான்.

  தேவராஜ் சக்தியை தடுக்க எடுத்த அனைத்து முயற்சிகளும் கூட தோல்வியிலேயே முடிந்தன.

  தந்தையை போல் விரும்பி இந்த துறையை சக்தி தெரிவுசெய்யவே இல்லை என்பதே உண்மையாகும். என்றாலும் அவனுக்குள் புதிதாக முளைத்திருந்த இருந்த இலட்சியம் அவனது இலக்கை நோக்கி அவனை இலகுவாக கொண்டுசென்றது.

  பயிற்சியை சிறப்பாக முடித்துக்கொண்டவன் அவர்களது பெட்ச் (Batch) டொப்பராகவும் தெரிவுசெய்யப்பட்டு, சக்தி IPS ஆக வெளியேறினான்.

  வெளியேறியவன் சித்ரா எவ்வளவு கூப்பிட்டு அவர்களது வீட்டிற்கு செல்லாமல் தனது வீட்டிலே தனியாக இருக்க பழகிக்கொண்டான். சமையல் வேலைகளை கூட தானே செய்ய கற்றுக்கொண்டான் சக்தி.

  ஆனால் சித்ரா அவனை அப்படியே விட்டு விடவில்லை. ஒரு மாதத்தில் ஒரு வாரம் அவர் இங்கு வந்து தங்குவதை அன்றில் இருந்து வழக்கமாக்கிக் கொண்டார்.

  சக்தியின் வீரமும் அவனது நுணுக்கங்களுடன் கூடிய ஆற்றலும் அவனை மிகக் குறுகிய காலத்திலே டெபுட்டி கமிஷனராக மாற்றியது.

  பல பிரச்சினைகளை மிகவும் புத்திசாதூர்யமான முறையில் அணுகி தொடர் வெற்றிகளை குவித்துக்கொண்டு வந்த சக்தியின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒரே நோக்கமாக இருந்தது சுப்புச்சாமி தான்.

  அந்த நோக்கத்தை இன்று அடைந்தும் விட்டான்.....

  தான் வெறுத்த அந்த தொழிலின் உடை இனி ஒருபோதும் சக்தி எனும் ஸ்வேதாநந்தனின் உடம்பில் ஏறாது என்பது நிச்சியமான உண்மை ஆகும்.

  தன் அம்மா கோவிலில் கூறிய தகவலின் பூரண நிலையையும் இந்த உண்மையையும் அறிந்த உஷா சக்தியை கட்டியணைத்து கன்னத்தில் முத்தம் ஒன்றை பதித்து "ஐ லவ் யூ" என்றாள்.

  கண்மூடி அவளது முத்தத்தை ரசித்து பதிலுக்கு அவளது நெற்றியில் முத்தம் பதித்து "ஐ லவ் யூ டூ டா" என்றவன் "எனக்கு ரொம்ப பசிக்குது ஷானு... நைட் சாப்பிட கூட இல்ல..." என்றான்.


  அவனை விட்டு வேகமாக விலகியவள்,
  "என்னது...? நைட் சாப்பிடலயா...?"

  பதிலுக்கு இடமும் வலமுமாக தலையசைத்து "இல்லை" என்பதை கூறினான் சக்தி.

  "அச்சோ" என்று தன் தலையையே தட்டிக்கொண்டவள் "குயிக்கா தயார் பண்ணிட்றேன்" என்றவள் குளித்துவிட்டு வேகமாக கீழே சென்றாள்.

  சக்தி தனது உடற்பயிற்சிகளை முடித்துகுளித்துவிட்டு வெளியே வரும்போது மேசையின் மேல் காபி இருந்தது. அதை அருந்திய வண்ணமே லெப்டோப்பில் மூழ்கியவன் உஷாவின் குரல் கேட்டே திரும்பினான்.

  "ஆ காட்டுங்க" என்ற குரலோடு உணவுத்தட்டு சகிதம் மேலே வந்திருந்தாள் உஷா.

  "ஹேய் டார்லிங்...! கூப்பிட்டிருந்தா நானே கீழே வந்திருப்பேன்ல" -சக்தி

  "கூப்பிடலாம்னு தான் வந்தேன்... சேர பார்த்ததும் நானே ஊட்டிவிடலாம்னு முடிவுபண்ணி எடுத்துட்டே வந்துட்டேன்... ம்ம்ம் ஆ காட்ட சொன்னேன்ல"
  புன்னகைத்த வண்ணமே அவனுக்கு பதிலளித்து ஊட்டிவிட்டாள் உஷா.
   
 4. Farmi

  Farmi Well-Known Member

  Joined:
  Oct 4, 2017
  Messages:
  157
  Likes Received:
  480
  Trophy Points:
  63
  Gender:
  Female
  (பகுதி 38-4)


  "எப்டின்னு தெரியல ஷானு... எங்கம்மா சமைக்கிற மாதிரியே தான் நீயும் சமைக்கிற... அதே மாதிரி இன்னேக்கி ஊட்டி வேற விட்ர...

  அம்மா இருக்குற வர அவங்க ஊட்டி விடாம நா சாப்பிடவே மாட்டேன். கடைசியா அம்மா கையால எனக்கு ஊட்டி விட்டது அதுக்கப்புறம் இன்னேக்கி தான் நீ ஊட்டி விட்டு சாப்பிட்றேன்..."
  என்றவனின் கண்கள் கலங்கியிருந்தது.

  அவனது கையை ஆதரவாக அழுத்திக்கொடுத்தவள்,
  "அதுக்கென்ன இனி டெய்லி நானே ஊட்டி விட்றேன்... ஓகே"

  பதிலுக்கு புன்னகைத்தவன், நிலமையை இலகுவாக்க,
  "கைய கடிச்சு வெச்சேன்னா என்ன பண்ணுவ..."

  "ஹீ ஹீ. வெரி சிம்பிள். நா கன்னத்த கடிச்சு வெச்சிருவேனே"
  என்றவள் அவனுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் வேலையை ஆரம்பித்தாள்.

  "ஹா ஹா... நல்ல ஐடியாவாத்தான் இருக்கு டார்லிங். உன்னால முடியாதுனு நினைக்குறேன்... ட்ரை பண்ணி பாரு என்ன"
  என்றவன் அவளது கன்னத்தை கிள்ளி வைத்தான்.

  சாப்பாட்டை முடித்து இருவரும் கோவிலுக்கு சென்றனர். அங்கு சக்தியே உஷாவுக்கு மல்லிகை சூடி குங்குமம் வைத்து விட உஷாவின் மனது சந்தோஷத்தில் நிறைந்தது. ஏதோ ஒரு இனம்புரியாத பரவசநிலையை உணர்ந்தாள் உஷா.

  "இப்போ நாம எங்க போரும் சக்தி"
  கோவிலில் இருந்து எங்கே போகிறோம் என்று எதுவும் கூறாமல் ஏனைய கதைகளை பேசிக்கொண்டு செல்லும் சக்தியை பார்த்து கேட்டாள் உஷா.

  "அத்தை வீட்டுக்கு" -சக்தி

  "சித்தி வீட்டுக்கா...?"
  என்றவளும் அவன் பதில் சொல்லவில்லை என்பதை கவனிக்காமல் வேறு கதையில் இறங்கினாள்.

  கதையின் சுவாரஷ்யத்தில் எங்கு வந்திருக்கிறோம் என்பதையே கவனிக்க தவறினாள் நம் நாயகி.

  உஷாவை பார்த்து சிரித்து அவளின் தோளை சுற்றி கைபோட்டு தனக்கு அருகில் இழுத்துக்கொண்டவன்
  "ஏன் மேடம்... இப்டியே உட்கார்ந்து கதச்சிட்டே இருக்கலாம்னு யோசனையா...?

  வீடு வந்திருச்சு ... நா மட்டும் உள்ள போகவா இல்லாட்டி நீயும் வரியா டார்லிங்"
  கண்களை சிம்மிட்டி கேட்டான் சக்தி.

  கார் நிறுத்தப்பட்டிருப்பதையே உணராமல் எவ்வளவு நேரம் கதைத்துள்ளோம் என்பதை நினைத்து சக்தியை பார்த்து அசடுவழிந்து சிரித்தவள்...

  "ஹீ ஹீ... நா கவனிக்கல அதான்..."
  என்று வாயை மூடாமல் இழித்தாள்.

  அவளது வாயை தனது கையால் மேலும் நீட்டிவிட்டவன்,
  "இந்த இழிப்புக்கு ஒன்னும் குறைச்சல் கிடையாது... வா போலாம்"
  என்று அவளை விடுவித்து இறங்கினான்.

  காரின் கதவை திறந்து இறங்கியவள் தன் வீட்டின் முன்னால் தான் இருப்பதை அப்போது தான் உணர்ந்தாள்.

  "போலாமா...?"
  என்று அவளை நோக்கி வந்த சக்தியை குதூகலத்தோடு கட்டியணைத்து முத்தம் கொடுத்தவள் அவனை கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தாள்.

  "ஹேய்...!"
  என்றவன் அவளை தன்னிடம் இருந்து பிரிக்க முயல அவளோ இன்னும் அவனோடு ஒட்டிக்கொண்டாள்...

  "ஷானு..."

  "....."

  "ஹேய் ஷானு..."

  "....."

  அவளது காதுக்கு அருகில் குனிந்தவன்,
  "ஷானு... நம்ம வீட்ல உனக்கு எவ்ளோ நேரம் வேணுமோ நீ என்ன கட்டிப்பிடுச்சுக்க டார்லிங்... இப்போ மாமா அத்த, நிஷா, ஆதி அண்ட் அவங்க அம்மா அப்பா எல்லாரும் நம்மள பார்த்துட்டு இருக்காங்க..... எனக்கே வெக்கம் வெக்கமா வருது டார்லிங்... மாமாவோட மானத்த இப்டி பப்ளிக்ல வாங்கிறாத செல்லம்... அவங்க எல்லாரும் நம்மள பார்த்து நெளியுறாங்க..."
  கேலியுடன் கூடிய பொய் வருத்தத்துடன் கூறினான் சக்தி.

  அவனை விட்டு வேகமாக விலகிய உஷா. குங்கும நிறத்தை எடுத்துக்கொண்டிருந்த தன் முகத்தை வேகமாக துடைத்துக்கொண்டு வெக்கத்தினால் இப்பொழுது சக்தியின் முதுகை தன் இடமாக மாற்றிக்கொண்டாள்.

  சக்தி சிரித்த படி முன்னால் நடக்க அவனுக்கு பின்னால் அவனை ஒட்டியபடி சென்றாள் உஷா.

  வாசலை அடைந்ததும் நிஷாவுக்கு ப்ரியா கண்காட்டவே நிஷா வந்து உஷாவின் கையை பிடித்து சக்திக்கு பக்கத்தில் அவளை நிறுத்தினாள்.

  ஆதியும் நிஷாவும் உஷாவை கிண்டலடிக்க, ஆரத்தி எடுத்து மலர்ந்த முகத்துடன் அனைவரும் இவர்கள் இருவரையும் உள்ளே அழைத்துச்சென்றனர்.

  அவர்கள் அனைவருக்கும் மத்தியில் எந்தவொரு இறுக்கமோ சலனமோ இருக்கவேயில்லை அனைவரும் சகஜமாகவும் சுவாரஷ்யமாகவும் அந்த பொழுதை களித்து இன்புற்றனர்.

  அனைவர் மனதிலும் சந்தோஷமே குடிக்கொண்டிருந்தது. அந்த நிமிடம், அந்த நொடி அவர்களுக்கு புதிய ஒரு வாழ்வை உருவாக்கியுள்ளதாகவே தோன்றியது.

  உஷாவுக்கு இதுவொரு பலநாள் கழித்த சந்தோஷமான தருணம் என்றால் சக்திக்கு இது பல வருடங்கள் கழித்த சந்தோஷமான தருணம் ஆகும்...

  சக்தியைப்பற்றி அவனுடன் பேசித்தெரிந்து கொண்ட விடயங்கள் ஏனைய மூவருக்குமே உண்மையிலேயே வியப்பாக இருந்தது. உஷாவின் தந்தைக்கும் சரி, பவித்ரன் மற்றும் ஆதிக்கு சரி அவனது உழைப்பு, அவனது விவேகம் மற்றும் அவனது வீரம் என்பன பெரும் வியப்புக்குரிய விடயமாகவே இருந்தன.

  வேலு குமார் இந்த இளவயதிலே அவனது துணிச்சலையும் ஆற்றலையும் வியந்து பார்த்து வெளிப்படையாகவே பாராட்டவும் செய்தார்.

  இரவு உணவையும் அங்கேயே முடித்துக்கொண்டவர்கள் அதன் பிறகே வீடு திரும்பினர். வேலு குமார் அங்கேயே தங்கும்படி கோரினாலும் இன்னொருநாள் வருவதாக கூறியவர்கள் அவர்களிடமிருந்து விடைபெற்று திரும்பினர்.

  வேலு குமாரின் மனதும் சரி, கவிதாவின் மனதும் சரி... உண்மையிலே இருவரின் மனதும் நிறைந்திருந்தது. பல நாள் கழித்து இருவரும் நிம்மதியாக உறங்கினார்கள்.

  சக்தியும் உஷாவும் இருவரும் ஒன்றாகவே தங்களது வீட்டிற்குள் நுழைந்தனர்.

  சமையல் அறைபக்கம் செல்லும் உஷாவை பார்த்த சக்தி...
  "தூங்காம சமைக்க போறியா ஷானு"
  என்றான்.

  "ஹா ஹா... மில்க்"
  என்று ஒரு வார்த்தையில் பதிலளித்து விட்டு திரும்பப்போனவள் சக்தியின் குரலில் நின்றாள்.

  "எனக்கு வேணாம் ஷானு. ரொம்ப டயர்டா இருக்கு. தூக்கம் தூக்கமா வேற வருது..."
  என்று கூறியவன் உஷாவின் முகத்தில் ஏற்படும் மாற்றங்களை மிகக்கச்சிதமாக தன்னுள் பொறித்துக்கொண்டான்.

  "நிஜமாவே வேணாமா...?"-உஷா

  "எனக்கு வேணாம்... பட் நீ குடி... ஓகே..." -சக்தி

  அவனைப் பார்த்து உதட்டை பிதுக்கியவள்,
  "ஓகே" என்று அவனுக்கு கேட்கும் குரலில் கூறிவிட்டு.

  "இந்த கரிசனைக்கு மட்டும் ஒன்னும் குறைச்சல் இல்ல" என்று அவனுக்கு கேட்காத குரலில் முணுமுணுத்து விட்டு சென்றாலும் அதை நன்றாக கேட்டு விட்டு சிரித்துக்கொண்டே மாடி ஏறினான் சக்தி.

  தனக்கு பாலை கலக்கும் போது சக்தி விழித்திருக்கக்கூடும் என்ற நப்பாசையில் அவனுக்கும் சேர்த்து பாலைக் கலந்தவள் விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு மாடியேறினாள்.

  தங்களது அறைக்கதவை திறந்து உள்ளே சென்றவள் உறங்கும் சக்தியை எழுப்ப மனமின்றி மேசைமீது சக்தியின் பாலை வைத்தவள் ஒரு கப் பாலை தான் அருந்தினாள்.

  மீண்டும் சக்தியை எழுபோவோமா வேண்டாமா என்று யோசனை செய்து பார்த்தவள் எழுப்புவோம் என்ற முடிவோடு அவனின் தோளை தொட்டு எழுப்பாட்டினாள்.

  அவ்வளவு நேரம் போலியாக கண்களை மூடி படுத்திருந்தவன் எழுந்து அவள் முகத்தை ஆராய்ச்சிப்பார்வையோடு பார்த்தான். அவளும் அவனது முகத்தைத் தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

  எதுவும் கேட்காமல் அவள் நீட்டிய பாலை குடித்தவன் கப்பை வாங்க அவள் கை நீட்டிக்கொண்டிருக்க, அதை கண்டுகொள்ளாமல் தானே மேசை மீது வைத்து விட்டு திரும்பினான்.

  உஷாவோ இவனது செய்கை புரியாமல் புதிராக பார்த்துக்கொண்டிருக்க அவளை பார்த்து மந்தகாசமாக சிரித்தவன் அவளது வெற்றிடைப் பற்றி தனக்கருகில் இழுத்தான்.

  அவனது நீளமான கை தன் வெற்றிடையில் பரவவும் அவனது அந்த உணர்வுபூர்வமான முதல் தீண்டலில் சிலிர்த்து கண்களை இறுகமூடிக்கொண்டாள் உஷா.

  அதை ரசித்த சக்தி அவளது இதழ் நோக்கி குனிந்தான். வினாடிகள் கடந்தனவே தவிர குனிந்தவன் எதுவும் செய்யவில்லை. யோசனையோடு மெதுவாக இமை திறந்து பார்த்தாள் உஷா.

  அவனது பார்வை அவளிடம் நிலைத்து அனுமதிகேட்டு நிற்கவே அனுமதியளிக்கிறேன் என்ற அடிப்படையில் கண்களை மூடிக்கொண்டாள் உஷா.

  இருவரின் இதழ்களும் முதல் முறையாக மொழி பேச ஆரம்பித்திருக்க சக்தியின் விரல்கள் உஷாவின் மேனியில் கதை பேச ஆரம்பத்திருந்தது.

  நம் நாயகனும் நாயகியும் அவர்களது இல்லறத்தில் காலடி எடுத்து வைத்து தோற்காமல் தோற்கும் போட்டியில் இறங்கியிருந்தனர்.

  அவர்கள் இல்லறம் சிறக்க நாமும் கடவுளை வேண்டுவோம்.....!
   
 5. anitha09

  anitha09 Active Member

  Joined:
  Oct 10, 2017
  Messages:
  286
  Likes Received:
  226
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Wowww....bigggg update. Super story. Neraya characters ellaraium maintain pannirukkeenga. Equal importance . Nice
   
  Farmi likes this.
 6. Nithyalakshmi

  Nithyalakshmi Member

  Joined:
  Nov 17, 2017
  Messages:
  86
  Likes Received:
  65
  Trophy Points:
  18
  Gender:
  Female
  Long ud koduthirkanga super
   
  Farmi likes this.
 7. kannamma 20

  kannamma 20 Active Member

  Joined:
  May 14, 2017
  Messages:
  269
  Likes Received:
  210
  Trophy Points:
  43
  Gender:
  Female
  super. periya update . sakthi and usha oru vazhiya rasi agittanga.
   
  Farmi likes this.
 8. Tamilvanitha

  Tamilvanitha Active Member

  Joined:
  Dec 26, 2017
  Messages:
  170
  Likes Received:
  127
  Trophy Points:
  43
  Gender:
  Female
  அவர்கள் இல்லறம் சிறக்க நாமும் கடவுளை வேண்டுவோம்///// story finished a ?
   
  Farmi likes this.
 9. Tamilvanitha

  Tamilvanitha Active Member

  Joined:
  Dec 26, 2017
  Messages:
  170
  Likes Received:
  127
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Or to be continued .
   
 10. Farmi

  Farmi Well-Known Member

  Joined:
  Oct 4, 2017
  Messages:
  157
  Likes Received:
  480
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Thank You So Much Dear ❤❤❤
   

Share This Page