kadhal..காதல் என்பது ஒரு உன்னதமான உணர்வு.... !

Discussion in 'General' started by Mythili Ramjee, Mar 6, 2019.

  1. Mythili Ramjee

    Mythili Ramjee New Member

    Joined:
    Oct 24, 2018
    Messages:
    21
    Likes Received:
    15
    Trophy Points:
    3
    Gender:
    Female
    [​IMG]


    காதல் என்று சொன்னாலே ஒரு வித சிலிர்ப்பு உண்டாவது என்பதை யாராலும் மறுக்க முடியாது..!ஆனால், அந்த காதல் என்கிற சொல்லிற்கான அர்த்தத்தை நாம் சரியாக புரிந்து கொண்டோமா என்பதில் தான் சந்தேகமே...! சினிமாவில் காட்டுவது போல் ஒரு பார்வையில் காதல் பின்பு டூயட் என்று நினைத்துக் கொண்டால் அது காதல் அல்ல. பல பல போராட்டத்திற்கு பிறகு அவர்கள் கல்யாணம் நடக்கிறது. சுபம் என்று போட்டு படம் முடிந்துவிடும். ஆனால் , கல்யாணத்திற்கு பின் அவர்கள் வாழும் வாழ்க்கையை ஏதோ ஒன்று அல்லது இரண்டு படங்களில்தான் பார்த்திருப்போம். அதுவும் உன்னதமான காதல் இருந்தால் மட்டுமே வாழ்ந்திருப்பர் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மற்றபடி பெற்றோர்களை ஏமாற்றி தங்கள் உடல் சுகமே முக்கியம் என்று நினைத்து தவறாய் முடிவெடுத்து ஓடி செல்பவர்களின் வாழ்க்கை ஒரு கேள்வி குறியே...! நான் இங்கு எவர் மனதையும் புண்படுத்த இந்த பதிவை எழுதவில்லை. ஒரு தாயாய் சில உண்மைகளை உரைக்க விருப்பமே...!

    காதல் என்பது பல உணர்வுகளை குறிக்கும் சொல்லாகும். அன்பு, பாசம், கருணை, ஈர்ப்பு, நேசம், நட்பு இது போல் பல....

    இவற்றை எல்லாம் தவிர்த்து, மறந்து ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டு என்னென்னவோ நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தால் பல சமயங்களில் பயமாகவும் இருக்கிறது. ஒரு ஆணிற்கு பெண்ணின் மேலும் , ஒரு பெண்ணிற்கு ஆணின் மேலும் வரும் உடல் ரீதியான ஈர்ப்பை மட்டுமே இந்தக் காதல் குறிப்பதை தவறாக புரிந்து கொண்டு அதன்பால் தங்கள் வாழ்க்கையையே தொலைத்தவர்கள் பல பேர்.
    இன்றைய காலகட்டத்தில், ஒரு ஆணும், பெண்ணும் உடல் ரீதியான ஈர்ப்பை , சுகத்தை மட்டுமே காதல் என்று நினைத்து அதில் அதிக கவனம் காட்டி தங்கள் வாழ்க்கையையே ஒரு கேலிக் கூத்தாய் மாற்றி வாழ்ந்துக் கொண்டிருக்கும் பலர் தயவு செய்து உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். உடல் உறவு என்பது உன்னதமான ஒன்று. அதற்காக நியமித்ததே கல்யாண பந்தம். உங்களை யாரும் அந்த சுகத்தை அனுபவிக்க வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் அதற்கு ஒரு முறை இருக்கிறது. உங்கள் துணைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு கட்டாயம் உண்டு. அதை மட்டும் செய்யுங்கள். மற்றதை உங்கள் பெற்றோரிடம் விடுங்கள். அவர்களுக்கு தெரியும் உங்களுக்கு எது சரி என்று. தேவை அற்ற எண்ணங்கள் , செயல்கள் நம் வாழ்க்கைக்கு நல்லதல்ல.

    காதலுக்கு மரியாதை கொடுங்கள். உங்களுக்கு பிடித்த துணையை கண்டு கொண்டீர்களானால் மனம் விட்டு பேசுங்கள். இருவரும் பேசிய பின் கட்டாயம் பெற்றோர்களிடம் பேசுங்கள். பின்பு கல்யாணத்தில் முடிந்ததும் இல்லற சுகத்தை அனுபவியுங்கள்.
    தயவு செய்து இந்த காதலை சரியாக புரிந்து கொள்ளுங்கள். 16 முதல் 24 அல்லது 25 வயது வரை உணரப்படும் ஒரு வகை ஈர்ப்பு மட்டுமே காதல் இல்லை.
    ஒரு தாய் மற்றும் தந்தை தன் குழதைகள் மீது வைக்கும் பாசம், குழந்தைகள் அம்மா, அப்பா மீது காட்டும் பரிவு, கணவன் மனைவி இடையிலான அன்பு சலசங்கள், ஊடல்கள், நண்பர்கள் இடையே இருக்கும் உண்மையான நட்பு , உடன் பிறந்தவர்கள் இடையே காணப்படும் அன்பு, ஆசிரியர் மாணவர் இடையிலான மரியாதை மற்றும் கனிவு, இவை எல்லாமே காதல்தான்.

    காதல் என்பது இதையும் தாண்டி என்பதை நம்புவீர்களா? ஆம்... ! நம் தொழில் மீது இருக்கும் பக்தி, குடும்பத்திற்காக நாம் உழைக்கும் உழைப்பு, கணவன், மனைவி இடையிலான நம்பிக்கை, நண்பர்களுக்கு செய்யும் உதவி, ஆதரவற்றோர் மீது காட்டும் கருணை, நம்மை அழகாய் வைத்துக்கொள்ள நாம் எடுக்கும் முயற்சி இவை எல்லாமும் காதல்தான்.
     
    Rabina likes this.

Share This Page