Kanave Kalaiyathe / கனவே கலையாதே

Discussion in 'Lashmi Ravi Novels' started by lashmiravi, Jul 1, 2017.

 1. lashmiravi

  lashmiravi Well-Known Member

  Joined:
  Aug 16, 2014
  Messages:
  195
  Likes Received:
  256
  Trophy Points:
  63
  Gender:
  Female
  கனவே கலையாதே!
  [​IMG]


  மக்களின் மூச்சுகாற்றே முழுவதுமாக வியாபித்திருக்கும் ஜனநெருக்கடி மிகுந்த அந்த சாலையில் இன்று ஏனோ அவளுக்காகவே கூட்டம் குறைவாக, அங்கும் இங்குமாக ஒரு சிலர் நடந்து செல்வது போலவும் , சாலை ஓர மரங்கள் எல்லாம் இவளை கண்டு மரியாதை நிமித்தமாக அசையாமல் நிற்பது போல , அனலையும் புகையையும் கக்கியபடி காற்றை கிழித்து கொண்டு செல்லும் வாகனங்கள் இன்று ஏனோ ஊர்ந்து செல்வது போலவும் தோன்ற இவை எல்லாம் எனக்காக என பெருமிதத்தோடு ஒவ்வொரு பாத அடியையும் ரசித்து அனுபவித்து எடுத்து வைத்து நடந்தாள் . மனதின் மகிழ்ச்சி பார்க்கும் நிகழ்வுகளை எல்லாம் பரவசமாக்கி கொண்டிருந்தது.

  .இந்த இடத்திற்கோ அந்த சாலைக்கோ அவள் ஒன்றும் புதிதில்லை. அவளது இத்தனை வருட வாழ்க்கை பயணத்தில் அவளுடனே இருந்த பயனாளி தான் இந்த சாலை.
  விபரம் அறிந்த வயதில் இருந்து இந்த நடைபாதையிண் ஓரம் தான் அவளது இருப்பிடம். தவழ்ந்து, நடந்து, ஓடி, இதோ இன்று இவளின் இந்த வீர நடையும் இந்த சாலயோர நடைபாதை அறியும்.

  பள்ளி செல்லும் வயதில் சாலை ஓரத்தில் படம் வரைந்து பிழைத்ததும்,பட்டாம்பூச்சியாக சிறகடித்து பறக்கும் பருவ வயதில் தார்சாலை போடும் வேலைக்கு செல்வதும் , வட்டமிடும் காம கழுகுகளின் பார்வையில் இருந்து தப்பிக்க பாதை ஓரத்தில் இருக்கும் மரங்களை மறைவிடமாக கொண்டு வாழ்வதும் என நடைபாதை சாலைகளும் அவளது வாழக்கையும் பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது.. ,


  நொடி நேரத்தில் நூற்றுகணக்கான வாகனங்கள் தன்னை கடந்து செல்ல தனது துன்பமும் இனி இது போல் கடந்து இல்லை கரைந்து போய்விடும் என்ற மனதின் நம்பிக்கையோடு, கண்களில் கனவுகளோடு நடைகளை எட்டிபோட்டாள் வான்மதி.
  தனது இருப்பிடத்தை அடைந்தவள் பசி வயிற்றை கிள்ள வெட்டவெளியில் இரவு மின்கம்ப வெளிச்சத்தில் வட்டசட்டியில் காலையில் உண்டு மீதம் இருந்த சோற்றில் சிறிது தண்ணீர் விட்டு கரைத்தவள் ….அதில் கொஞ்சம் தான் குடித்து விட்டு மிச்சத்தை அருகில் இருக்கும் சிறு சட்டியில் ஊற்றியவள் “


  இன்னும் இந்த மணிய எங்க காணோம் என சொன்னவள் ம்ம்ம்ம் நாளைக்கு அவனுக்கு யாரு சோறு போடுவா” என நினைக்கும்போதே அவள் மனம் சுருங்கிப்போனது.


  சாலையின் ஓரத்தில் அவளைபோலவே அனாதையாக கிடந்த ஒரு நாய்க்குட்டியை எடுத்து வந்து மணி என்று பெயர் சூட்டி வளர்த்துவருகிறாள் வான்மதி. அவளின் ஒரே உறவு…..இவள் வேலை முடித்து வருவதற்கு தாமதமானால் உடனே இவள் இருக்கும் இடத்தை தேடி வந்திடும். சில நேரங்களில் ஆறறிவு மனிதர்களை விட இந்த ஐந்தறிவு வாயில்லா ஜீவன்கள் பாசத்தில்,பாதுகாப்பிலும் நம்மை ஈர்த்து விடுகின்றன என மனதில் நினைத்தபடி கையை கழுவி நீரை வெளியே ஊற்ற


  அப்போது “ஏன்புள்ள ஆளுங்க வரதுகூட தெரியாம தண்ணிய எங்க ஊத்தரவ” என்ற சத்தத்தில் நினைவுகள் தடைபட நிமிர்ந்தவள் எதிரில் நின்று இருப்பவரை பார்த்ததும் உடல் ஒருமுறை குலுக்கி போட

  “அது வந்து….. வந்து…..” என இழுத்தாள்.

  “என்ன வந்து போய்னு இழுத்துகிட்டு இருக்கிரவ…..இன்னைக்கு ஏன் வேளைக்கு வரலை….ஒழுங்கா வரணும்னு சொல்லிதானே வேலைக்கு சேர்த்தேன்…..ஏதோ வயசுபிள்ளை கூட யாருமில்லைனு இரக்கப்பட்டு சேர்த்தா இப்படிதான் பண்ணுவியா….ஏன் வரலை …ஏதாவது முக்கியமான சோலியோ….அந்த சோலிய என்கிட்ட சொன்னா நானே முடிச்சுடுவென்ல” என்றவனின் குரலில் இருந்த கேலியும் பார்வையில் இருந்த விரசமும் அவளை கூனிகுருக செய்தது.

  சம்பளம் தரும் முதலாளியாகி போனதால் அவனது பேச்சில் கோபம் வந்தாலும் எதிர்த்து பேசமுடியாது… சரியான ஊதியமும் ,வேலையும் இவனிடம் எப்போதும் இருக்கும். எனவே இவனிடம் யாரும் பகைத்து கொள்ளமாட்டார்கள்.

  வேலையில் சரியாக இருப்பவன் தனிப்பட்ட குணத்தில் மிகவும் மோசமானவன். அங்கு இருக்கும் பெண்களின் இயலாமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி காரியத்தை சாதித்து கொள்பவன். ஆனால் வான்மதியிடம் அவனது எந்த சித்துவிளையாட்டும் பலிக்கவில்லை. அவனும் அவளிடம் பலவகையில் முயற்சிசெய்தும் எதுவும் நடக்கவில்லை. அதனால் நேரம் கிடைக்கும்போது அவளை வார்த்தைகளால் இம்சிப்பதில் அவனுக்கு மகிழ்ச்சி.
   
  Last edited: Jul 1, 2017
  Divya s, saravanakumari and ramasamy6 like this.
 2. lashmiravi

  lashmiravi Well-Known Member

  Joined:
  Aug 16, 2014
  Messages:
  195
  Likes Received:
  256
  Trophy Points:
  63
  Gender:
  Female
  பல நேரங்களில் துணிந்து நின்றாலும் சிலநேரங்களில் மனதின் வெறுமை சாலையில் அவள் ஊற்றும் தாரோடு கண்ணீரும் சேர்ந்து ஓடுவதுண்டு..


  “சரி சரி வெறிக்க பார்த்திட்டு நிக்காம விடியால நேரமே வேலைக்கு வர பாரு…..இனியும் உன்னை விட முடியாது” என அழுத்தமாக சொல்லிவிட்டு அவன் செல்ல சில நொடிகள் அமைதியாக நின்றவள் எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான் என தனக்குள் சொல்லியபடி கையில் இருக்கும் சட்டியை ஓரமாக வைத்துவிட்டு அந்த இரவு நேரத்திலும் காற்றை போல் கடந்து செல்லும் வாகனத்தை வேடிக்கை பார்த்தவரே அமர்ந்தாள்.


  இன்னும் இரண்டு மூன்று நாள் தான் இப்படி பார்க்க முடியும். அதற்கு பிறகு இந்த நேரத்தில் இந்த நிலவின் வெளிச்சத்தில் இந்த சாலையை என்றபடி தான் அமர்ந்திருக்கும் இடத்தை கைகளால் தடவியவள் அந்த தரையின் ஈரம் கையில் ஜில்லிட அது தானே அவளுக்கு தாய் மடி சுகத்தை கொடுத்தது. அதே நேரத்தில் காய்ச்சல் வந்த போதும் இந்த தரையோடு அவள் சுருண்டு படுத்துபோது, அந்த சாலை அவளுக்கு வெதுவெதுப்பை கொடுத்து உறங்க வைத்தது என எல்லாம் நியாபகம் வர ஏனோ அவளுக்கு துக்கம் தொண்டை அடைத்தது.


  இவை எல்லாம் விட்டு பிரிய வேண்டுமா என நினைக்கும்போதே கண்களில் இருந்து கண்ணீர் முட்டி கொண்டு நிற்க “இன்னும் தூங்காம என்ன பண்ற வான்மதி…..பனி கொட்டுது….உடம்புக்கு ஏதாவது வந்திட போகுது ..படுத்து தூங்கு” என்ற அக்கறையான ஒரு குரல் கேட்க

  “இதோ பாக்கியமக்கா படுக்கிறேன்” என்றவள் “ம்ம்ம் இது போன்ற மனுஷங்க இருக்கிறதாலதான் என்னை மாதிரி ஆனாதைங்க உசிரோட இருக்காங்க” என இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை ஆசைப்பட்டபடி படுத்தாள்.

  “ஏண்டி வான்மதி நேத்து நைட்டு எங்க ஆள காணோம்……உனக்காக எவ்ளோ நேரம் பார்த்திட்டு அப்புறம் தான் கண்ணசந்தேன்…எங்க வூட்லையும் எங்க இந்த பொண்ணா இன்னும் காணோம்னு புலம்பிகின்னு இருந்திச்சு…என்கனாவது போறதுனா சொல்லிகினு போமாட்டியா…..வயசு புள்ள…நேரத்தில கானாமுனா மனசு என்னமோ ஏதோனு அடிச்சுகுதுல….அப்படி என்ன சோலி வந்திச்சு” என அவள் உடனே சாலையில் தார் ஊற்றியபடி வந்த பாக்கியம் கேட்டார்.

  இந்த பாக்கியமும் இந்த ரோடு வேலையின் போது அறிமுகம் ஆனவள் தான். இந்த வேளையில் நிரந்தரமான இடமோ மனிதர்களோ கிடையாது. எந்த இடத்திற்கு செல்கிறோமோ அந்த இடத்தில் அந்த மனிதர்களுடன் சேர்ந்து கொள்ளவேண்டும். இந்த ரோடு வேலை ஒரு வருடமாக நடப்பதால் வான்மதி இங்கு இருபவர்களிடம் ஓரளவு பழகி கொண்டாள்.

  “என்னத்தக்கா சொல்றது…..பொழுதோட வேலைய முடிச்சு கிளம்பிற நேரத்தில இந்த காவாலிபய தங்கராசு வம்பு பேச நானும் எதிர்த்து பேச கொஞ்சம் பிரச்சனைஆயிடுச்சு. அப்புறம் எல்லாம் பஞ்சயாத்து பண்ணி முடிச்சுட்டு கிளம்ப நேரமாகிடுச்சு. அப்போ நம்ம ராசாமணி அக்காதான் இந்நேரத்துகு மேல எங்க தனிய போரவ…பேசாம இங்கனே என்கூட படுத்திருந்திட்டு காலையில போலாம்னு சொன்னாங்க….எனக்கும் அவன் பின்னாடியே வந்தா என்ன பண்றதுன்னு பயம் அதான் அங்கே இருந்திட்டேன். மணியும் என்னை தேடி அங்க வந்திட்டான். ஆனா புது இடம் இரவைக்கு எல்லாம் தூக்கமே இல்லை” என்றாள்.

  “இப்படியே எத்தனை நாளைக்குதான் பயந்து இருக்கபோறவ….பேசாம ஒரு கண்ணாலத்த பண்ணிக்லாம்ல”….என்றார்.

  “ம்க்கும் ஆயி அப்பன் இருக்கிற பொம்பளைக்கே கண்ணாலம் நடக்க மாட்டேன்குது. இதில ஒட்டுஉறவு இல்லாத அடுத்த வேல சோத்துக்கு நிலை இல்லாத இந்த அனாதைக்கு கல்யாணம் எல்லாம் ஒரு கேடா போக்கா ….ஏதோபொறந்திட்டேன்…முடிஞ்சவரை இருந்து பார்க்கிறேன்…இல்லை உசிர முடிச்சுட்டு போகவேண்டியது தான்………. மானம் கெட்டு எல்லாம் வாழ முடியாதுக்கா” என வெறுப்பும் சலிப்புமாக பதில் சொன்னாள் வான்மதி.

  வாய் அப்படி சொன்னாலும் மனம் ஏனோ அதை பொய் என்றே சொன்னது. வாழ்க்கை அவளை வஞ்சித்தாலும் அவள் மனதில் சராசரி பொண்ணுகான ஆசை நிறைந்தே இருந்தது. ஆனால் உறவுகள் இல்லாத அனாதைகள் எந்த உரிமையை முறையாக பெற முடியும்….. மேலும் அவளிடம் வந்து பேசும் ஆண்கள் யாரும் திருமணம் என்ற எண்ணத்தில் வருவதில்லையே …..கடவுளே உறவுகள் இல்லாமல் படைத்த என்னை உணர்வுகள் இல்லாமல் படைத்திருந்தால் எவளவ்வு நன்றாக இருந்திருக்கும் என்று அவள் நினைக்காத நாளில்லை..

  அதுவரை அமைதியாக இருந்த கடவுளுக்கு இப்போது காது கேட்டதாலோ என்னமோ பாக்கியம் மூலம் அவளது வாழ்வில் ஒரு விடியலை கொண்டுவந்தார். “எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் இருக்கார்…முதல் பொண்டாட்டி இறந்திட்டா ……இப்போ தனியா இருக்காரு….நம்ம தொழில் தான் ..ஆனா சூப்பர்வைசெர்…..காசு பணம் இருக்கு ……தினமும் நல்ல சாப்பாடு, துணிமணி உடுதிக்லாம்…இவனுக கிட்ட இந்த மாதிரி அசிங்கப்பட வேண்டாம் ….சொந்த வீடு ….ஆனா வயசு கொஞ்சம் அதிகம் உனக்கு சம்மதமா”? என கேட்டார். வான்மதியும் கொஞ்சம் யோசித்தவள் பின்னர் ஒத்துகொண்டாள். இதைவிட்டாலும் அவளுக்கு வேறு வழி இல்லை. எடுத்து செய்வதற்கும் ஆள் இல்லை. பின்னர் எல்லாம் பேசி முடித்து அடுத்த வாரம் திருமணம் என்று முடிவானது.

  அந்த நினைவில் வந்தவள் கண்ட்ராக்ட்டர் பேச்சில் மனம் வாட ஆனால் அதையும் தாண்டி தனக்கு திருமணம், எல்லா பெண்களை போல நானும் வாழ்வேன் என் நினைக்கும்போதே அவள் மனம் சந்தோஷத்தில் திளைத்து கொண்டிருந்தது.
  இனி இந்த காம பார்வையும் , கேவலமான பேச்சுகளும் இருக்காது என்றபடி அங்கு தன்னோட பொருட்களை எல்லாம் எடுத்தவள் “இத நம்ம சுந்தரி அக்காவுக்கு கொடுத்திடலாம்…பாவம் ரொம்ப கஷ்டபடறாங்க” என நினைத்தவள் “இந்த இடத்தில் கல்பனாவை வந்து தங்கிக்க சொல்லிகளாம்.பாதுகாப்பானது”… என உறவே இல்லாதவள் உடன் இருப்பவர்களை உறவாக நினைத்து தன்னுடையதை அவர்களுக்கு பாகம் பிரித்து விட்டு உறங்க ஆரம்பித்தாள்.

  பல வருடங்களாக பெற்ற அன்னைபோல அவளை தாலாட்டி தூங்க அல்லவா அது. அவளது சந்தோசம் ,சுகம்,துக்கம் எல்லாமே இந்த சாலை அறியுமே…. வாகன சத்தமே அவளுக்கு தாலாட்டு….இனி இந்த இடத்திற்கு அவள் வரபோவது இல்லை.தாயின் தாலாட்டு இனி அவளுக்கு கிடைக்க போவதில்லை என நினைப்பே அவள் நெஞ்சை அடைக்க படுக்கை விரிப்பை எடுத்துவிட்டு நிலத்தோடு சேர்ந்து படுத்தாள்.

  எப்போதும் படுக்கும் இடம் தான் என்றாலும் இன்று அந்த இடம் அவளுக்கு ஒரு புது உணர்வை கொடுத்தது ….அப்போது “என்னை மறந்து விடுவாயா….இனி நீ வரமாட்டாயா” என அந்த மண் அவளை பார்த்து கேட்பது போல தோன்ற

  ஒரு நிமிடம் அவளின் இதய துடிப்பு நின்று பின் துடிக்க “அய்யோ அப்படி எல்லாம் இல்லை……நான் உன்னை விட்டு செல்ல மாட்டேன் …..எனக்கு கல்யாணம் வேண்டாம்…நான் உன்னுடனே இருக்கேன். எனக்கு யாரும் வேண்டாம்…நான் உன்னோட மகளாவே உன்னுடனே இருந்துகிறேன் ” என்றவள் யாரோ தன் கையை பிடித்து இழுப்பது போல் இருக்க அவளோ “இல்லை இல்லை நான் என் அம்மாவை விட்டு வரமாட்டேன்…..இது என் தாயின் மடி …இதை விட்டு வரமாட்டேன்…எனக்கு எதுவும் வேண்டாம்…..என் அம்மா மடி தான் வேணும் ….நான் உன்னை விட்டு போகமாட்டேன்”…… என்றபடி மேலும் மேலும் நிலத்தோடு ஒன்றினாள்.

  மறுநாள் செய்திதாளில் ஒரு பிரபல தொழில்அதிபரின் மகன் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி சாலையோர நடைபாதையில் இடித்ததால் அங்கு உறங்கி கொண்டிருந்த பெண் பலி என்றிருந்தது.
   
 3. lashmiravi

  lashmiravi Well-Known Member

  Joined:
  Aug 16, 2014
  Messages:
  195
  Likes Received:
  256
  Trophy Points:
  63
  Gender:
  Female
  கன்னி முயற்சி

  காத்திருக்கிறேன் கருத்துகளை அறிய.:)
   
 4. ramasamy6

  ramasamy6 New Member

  Joined:
  Aug 5, 2017
  Messages:
  6
  Likes Received:
  5
  Trophy Points:
  3
  Gender:
  Male
  Supper
   
  lashmiravi likes this.
 5. lashmiravi

  lashmiravi Well-Known Member

  Joined:
  Aug 16, 2014
  Messages:
  195
  Likes Received:
  256
  Trophy Points:
  63
  Gender:
  Female
  thank u......
   
 6. dharshini

  dharshini Well-Known Member

  Joined:
  Oct 10, 2017
  Messages:
  382
  Likes Received:
  293
  Trophy Points:
  63
  Gender:
  Female
  ethirpara mudivu :(
   
  lashmiravi likes this.
 7. lashmiravi

  lashmiravi Well-Known Member

  Joined:
  Aug 16, 2014
  Messages:
  195
  Likes Received:
  256
  Trophy Points:
  63
  Gender:
  Female
  aamamapa....nandri
   

Share This Page