Men Fashion Tips in Tamil

Discussion in 'Beauty Tips' started by NATHIYAMOHANRAJA, Apr 11, 2019.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    4,843
    Likes Received:
    477
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பெண்களை வசியப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்!


    நம் மீது நல்ல அபிப்பிராயங்களை உண்டாக்குவது என்பது நம்முடைய தோற்றம் தான். நாம் பேசுவதை விட நம்முடைய உடல் மொழி நம்மைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தும். உங்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதேயளவு வெளித்தோற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆண்களுக்கான சில ப்யூட்டி டிப்ஸ்
    பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
    க்ளன்சிங் :

    ஆண்களுக்கு அதிகப்படியாக வியர்வை வரும். சுத்தமாக முகத்தை பராமரிக்கவிட்டால் அதுவே நம் அழகை கெடுக்கும் விதமாக பருக்களை உண்டாக்கிடும். இதனை தவிர்க்க முகத்திற்கு க்ளன்ஸிங் செய்ய வேண்டியது அவசியம். முகத்தில் ஏற்படும் கரும்புள்ளி, பரு,போன்றவற்றை தவிர்க்கும்.
    முடி :

    ஆண்களின் புற அழகில் மிக முக்கிய பங்கு வகிப்பது தலைமுடி. நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவில் அதிகப்படியான விட்டமின் இ இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள் ஏனென்றால் முடியின் வேர்களுக்கு வலுசேர்க்கும். அதிக வாசமுள்ள ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
    ஷேவிங் :

    ஆண்களின் அன்றாட பிரச்சனைகளில் ஒன்றாக இந்த ஷேவிங் மாறிவிட்டிருக்கிறது. ஷேவிங் தொடர்ந்து செய்து கொள்ள வேண்டும் ஆனால் ஷேவிங் செய்த பின்னர் முகத்தில் ஏற்படும் அரிப்பு, நிறம் மாறுதல் போன்றவற்றல் பல சங்கடங்களை சந்தித்திருப்பீர்கள். அப்படியிருப்பவர்கள், முதலில் தாடியை சூடான நீரில் நனைத்துக் கொள்ளுங்க்ள். பின்னர் மாய்ஸ்ரைசர் தடவிடுங்கள் சிறிது நேரம் கழித்து ஷேவிங் க்ரீம் தடவி ஷேவ் செய்யுங்கள்.
    சன்ஸ்க்ரீன் :

    வெயில் படும் இடங்களில் கண்டிப்பாக சன்ஸ்க்ரீன் தடவ வேண்டியது அவசியம். நீங்கள் பயன்படுத்தும் சன்ஸ்கீர்னில் SPF ரேட்டிங் குறைந்த அளவு இருக்க வேண்டும். வெளியில் செல்வதற்கு 15 நிமிடங்கள் முன்னதாகவே சன்ஸ்க்ரீன் தடவிக் கொள்ளுங்கள்.

    காது மற்றும் மூக்கு :

    வாரம் ஒரு முறையாவது காது மற்றும் மூக்குகளில் வளரும் முடிகளை நீக்கிடுங்கள். காதுகளுக்கு வெளியில் வளர்ந்திருக்கும் முடிகளை நீக்க, பியர்ட் ட்ரிம்மரை பயன்படுத்தலாம்.
    ரேசர் ப்ளேட் பயன்படுத்தினால் அது சில நேரங்களில் காயங்களை ஏற்படுத்திடும். மூக்குகளில் உள்ள முடியை நீக்க மெனிக்யூர் சிசரை பயன்படுத்தலாம்.

    கைகள் :

    ஒருவரை சந்திக்கும் போது கை குலுக்கி நட்பு பாராட்டுவது இயல்பு அது ஒரு வகை நாகரீகமும் கூட. கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.கைகளில் அதிக முடி இருப்பவர்கள் ரெகுலராக ட்ரீம் செய்திடுங்கள். ஒரு இன்ச்சுக்கு நீளமாக முடி வைத்திருப்பதை தவிர்த்திடுங்கள்.
    நகங்களையும் சுத்தமாக பராமரியுங்கள்.
    சருமம் :

    ஆண்களுக்கு அதிகப்படியாக சருமம் வறண்டு காணப்படும். சருமத்தில் வறட்சி அதிகமானால் அது பல்வேறு சரும பாதிப்புகளை உண்டாக்கும். இதனால் சருமத்திற்கு வறட்சி ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

    சத்தான ஆகாரம் :

    புறத்தோற்றத்திற்கு மிக அத்தியாவசியமானது உணவு, காலை உணவை தவிர்ப்பது வெறும் சிகரெட்டையும் டீயையும் மட்டும் குடித்துவிட்டு பசியை மந்தப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல உங்கள் தோற்றத்தையும் கெடுத்திடும். அடிக்கடி டீ குடித்தால் வாய் துர்நாற்றம் ஏற்படும் என்பதால் அடிக்கடி டீ குடிப்பதை தவிர்த்திட வேண்டும்.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    4,843
    Likes Received:
    477
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஆண்களுக்கு ஏற்படும் கரும்புள்ளி மற்றும் கருமையை போக்க ஒரு அற்புத கைவைத்தியம்!

    அழகு என்று நினைத்தவுடன் பெண்களும் அவர்களுக்கான ப்யூட்டி ப்ராடெக்ட்களும் தான் நினைவுக்கு வரும். அழகை பராமரிப்பது என்பது எதோ தேவையற்ற விஷயம் போல சிலர் நினைக்கிறார்கள் இது மிகவும் தவறான போக்கு, அழகு என்பது நம் சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பது என்பது தான் நிதர்சனம். ஆண்கள் ஆடைகளுக்கு கேட்ஜெட்ஸ்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் முகத்திற்கு கொடுப்பதில்லை தான். அழகு பெண்களுக்கானது மட்டுமா என்ன? இதோ ஆண்களுக்கான சில ப்யூட்டி டிப்ஸ்... அதுவும் எளிதாக வீட்டிலேயே செய்யலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் வெள்ளரிக்காய் : பெரும்பாலும் ஆண்கள் வெயில் சுற்றித் திரிபவர்களாகத் தான் இருப்பார்கள் அவர்களுக்காக இந்த வெள்ளரிக்காய் மாஸ்க். வெள்ளிரிக்காயை நன்றாக அரைத்து அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள் 10 நிமிடம் கழித்து கழுவி விடலாம். வாரத்திற்கு இரண்டு முறை இப்படி செய்யலாம். இதனால் வெயிலானல் முகம் கருக்காது, அத்துடன் இறந்து போன செல்களை நீக்கவும், முகத்திற்கு தேவையான எண்ணெய் பசையை தக்க வைக்கவும் உதவிடும். குறிப்பு : தேனுக்கு பதிலாக தயிரையும் பயன்படுத்தலாம். மிருதுவாக : முகம் உலர்ந்து சொர சொரப்பாக இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவுடன், பாலாடை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும் பின்னர் இளஞ்சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து இதை செய்து வந்தால் தோல் மிருதுவாக மாறும். கரும்புள்ளி : முகத்தில் அதிகமாக கரும்புள்ளி இருந்தால் எலுமிச்சம் பழச்சாறுடன், தயிரை கலந்து தேய்த்து வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம். சிகரெட் : சிலர் புகைப்புடிப்பதால் அவர்களின் உதடு கறுப்பாக இருக்கும். அவர்கள் பீட்ரூட் சாறு, மாதுளம்பழச்சாறு அல்லது புதினா சாறு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை உதடுகளில் தடவி வந்தால் உதடுகளில் உள்ள கறுப்பு நிறம் மறைந்திடும். புத்துணர்ச்சி : சிலருக்கு முகம் எப்போதும் முகம் சோர்வாகவே காணப்படும். அவர்கள் ஒரு ஸ்பூன் தேனுடன் அரைத்த ஆப்பிள், முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள் பின்னர் அதனை முகத்தில் தடவி இருபது நிமிடங்களில் முகத்தை கழுவினால் முகம் புத்துணர்சியாக இருக்கும். தக்காளி : முகத்தில் அதிக எண்ணெய்ப் பசை இருப்பவர்கள் தக்களிப்பழத்தை மசித்து அதனை முகத்தில் தடவி பத்து நிமிடத்தில் கழுவினால் அதீத எண்ணெய் பசையை கட்டுப்படுத்தலாம்.
     

Share This Page