Metanoia / உளவியல் வித்தை

Discussion in 'Health care' started by saravanakumari, Nov 8, 2017.

  1. saravanakumari

    saravanakumari Administrator Staff Member Manager Manager Manager

    Joined:
    Nov 12, 2014
    Messages:
    2,271
    Likes Received:
    1,033
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    home maker
    Location:
    villupuram
    Metanoia (உளவியல் வித்தை)

    உங்களுக்கே தெரியாம உங்க மனசை மாத்துற உளவியல் வித்தை ஒன்று இருக்கு….!!
    எந்த விதமான வற்புறுத்தலும் இல்லாமல், எந்த விதத்திலும் உங்களை துன்புறுத்தாமல், அவ்வளவு ஏன், இதை செய்து கொடுங்க’ன்னு கூட கேக்காமல் உங்களை செய்ய வைப்பது..! அது ஒரு கலை. இந்த கலைக்கு பெயர் Metanoia.


    இந்த கலை நம்மில் சிலருக்கு இயற்கையாவே இருக்கும். குறிப்பா பெண்களுக்கு. அவங்க நினைக்கிற ஒரு காரியத்தை அதை பற்றி பேசாமலேயே நம்மை செய்ய வைப்பாங்க.. என்ன ஒன்னு, கலையை மேலும் வளர்க்காமல் தன்னடக்கத்தோட கணவனிடம் மட்டும் பயன்படுத்துவாங்க. குடும்பத்தோட துணிகடைக்கு போவோம், நமக்கு பிடிச்ச ஒரு கலர் இருக்கும். ஆனால் ஏன்னே தெரியாமல் இன்னோன்னு எடுத்துட்டு வருவோம். விற்பனை பையன் செய்த Metanoia வேலையா இருக்கும் இல்லேன்னா மனைவி செய்ததா இருக்கும்.
    விளம்பரங்கள் எல்லாம் Metanoia வகை தான். நம் எல்லோரையும் மோடிக்கு ஓட்டு போட வைத்த பிரச்சார உத்தி கூட Metanoia வகையில் சேர்ந்தது தான்.


    வியட்னாம் போரையே நிறுத்த வைத்த புகழ் பெற்ற ‘Phan Thi Kim Phuc’ நிர்வானமாக ஓடி வரும் புகைப்படம் பல பேரின் மனதை மாற்றிய ஒரு நல்ல Metanoia. அதே போல பல Metanoia வகை டாக்குமன்ட்ரிகள் உலகளவில் எடுக்கபடுகிறது. இயற்கை சீற்றம், கரெப்ஷன், புலிகளை காப்பது, கண் தானம் போன்ற விசயங்களில் மனதை மாற்றும் Metanoia வகை டாகுமன்ட்ரிகள் அத்தியாவசியமாகிறது. சில நேரம் ஆட்சியை குறை சொல்லவும் பயன்படுகிறது.

    ஒரு சில தனி நபர்களுக்கு இயற்கையாக வாய்க்கும் இந்த கலை, மிரட்டலா இருக்கும். ஹிட்லரால அவ்வளவு பேரை வசியப்படுத்தி தான் நினைத்ததை செய்ய வைத்தது எல்லாம் மிராக்கிள்.

    இந்த கலையை இப்போது மருத்துவத்தில் நோயை தீர்க்கவும் பயன்படுத்துகிறார்கள். ஒரு சில மன நோயாளிகள், குடி நோயாளிகள் தங்களுக்கு உள்ள நோயை எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தன்னுடைய மனதில் கோளாறு என்பதை ஏற்றுக்கொள்வதே பலருக்கு பெரும் பிரச்சனை. அப்படி பட்ட நோயாளிகளிடம் அவருக்கு நோய் இருப்பதை தெரிவிக்காமலேயே அவர் மனதை மாற்ற இந்த கலையை பயன்படுத்துகிறார்கள்.
    பல மன நோயாளிகளுக்கு ‘இசை’ ஒரு Metanoia’வாக (மனதை மாற்றும் கலையாக) செயல்படுவதாக ஆராய்ச்சி சொல்கிறது.


    தனிமை அதிகரித்து கொண்டே போவதால், சமூக விலங்கான மனிதன், மனம் விட்டு பேச கூட துணைக்கு ஆள் இல்லாமல், தன் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ள சக உயிர் இல்லாமல், தற்கொலைக்கு முயற்சி செய்வது தற்போது அதிகரித்து வருகிறது. பல இளைஞர்கள் சமூக வலதளங்களில் தாங்கள் தற்கொலை செய்து கொள்ள போவதை எழுதி வைத்துவிட்டு செல்கிறார்கள். இவர்களின் தற்கொலையை தடுக்க Metanoia என்ற வலதளம் முயற்சிக்கிறது. “தற்கொலைக்கு முயற்சி செய்பவர்கள் 5 நிமிடம் எங்களுடைய Metanoia.org வலை தளத்திற்கு வாருங்கள்” என்று அழைத்து ஒரு சிறு கட்டுரையை அளித்து அவர்கள் மனதினை மாற்ற முயற்சி செய்கிறார்கள். இது எல்லாம் பாசிட்டிவ் metanoia.

    ஒரு தனிப்பட்ட நபர் அல்லது ஒரு இயக்கம் சம்பாரிக்க இதை பயன்படுத்தும் போது நெகடிவ் metanoia வாக மாறுகிறது. “இருட்டில் இருப்பவர்களே வாருங்கள், உங்களை வெளிச்சத்துக்கு அழைத்து செல்கிறேன் என்று சாமியார்கள் கூறுவது எல்லாம் நெகடிவ் metanoia.

    சந்தை பெருமளவில் வளர்ந்து விட்ட சூழலில் ஒவ்வொருத்தரும் தங்கள் பொருட்களை உங்களிடம் விற்க முயற்சிக்கிறார்கள். நமக்கு தேவையே இல்லாத பல விசயங்கள் அன்றாடம் நம்மை ஈர்த்துகொண்டே இருக்கின்றன. கண்ணுக்கு தெரியாத செல் போன் சிக்னல் போல நம்ம சுற்றி நம் மனதை மாற்றும் வித்தை நடந்துகொண்டே இருக்கிறது. பாசிடிவ் / நெகடிவ் இரண்டில் நாம் எதை நோக்கி ஈர்க்கப்படுகிறோம் என்பதில் தான் நமக்கான வெற்றி தோல்வி இருக்கிறது.

    பலர் Metanoiaக்கு பலியாகி அடங்கி போகிறோம். சிலர் அதை பயன்படுத்தி வெற்றியடைகிறோம். நம்மில் பலருக்கு எவ்வளவு முயற்சித்தாலும் இந்த கலை வரவே வராது. அவங்க எல்லாம் தத்தி மாதிரி கடைசி வரை யாருக்காவது தலையாட்ட வேண்டியது தான்… ம்ம்ம்ம் அதிலும் ஒரு சுகம் இருக்கு தானே… !!

    Dr.Saravanakumar.B.H.M.S.,M.D.
     
    Last edited: Oct 20, 2018
    King Arthur, jayalashmi and anitha09 like this.
  2. King Arthur

    King Arthur New Member

    Joined:
    Oct 15, 2018
    Messages:
    6
    Likes Received:
    5
    Trophy Points:
    3
    வணக்கம் சகோதரி, தகவலுக்கு நன்றி.... எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம்.... நமக்கு பிடித்த பாடலை நம்மை அறியாமலேயே நாம் முணுமுணுக்கும் சமயங்களில் திடீரென அந்த பாடல் நம் அருகில் வானொலியிலோ, அல்லது திருமணம் காது குத்து விழாக்களிலோ அல்லது வேறு விதமான வகையிலோ நான் கேட்டிருக்கிறேன்..... இது எப்படி சாத்தியம்...... இது தற்செயலா? அல்லது அறிவியல் ரீதியாக காரணங்கள் ஏதேனும் உண்டா?.... இது மட்டுமல்லாமல் சில சம்பவங்கள் ஏற்கனவே நடந்தவை போல அல்லது புதிதாக ஒரு சில இடங்களுக்கு செல்லும் போது அங்கு ஏற்கனவே நான் சென்றிருப்பது போல தோன்றுகிறதே.... அது ஏன்?? புதிதாக ஒருவரை பார்க்கும் போது இவரை எங்கோ பார்த்தது போல உள்ளதே என தோன்றுவது ஏன் ??? இது பற்றி நண்பர்களுடன் விவாதித்த போது அவர்களுக்கும் அவ்வாறு நடந்திருப்பதாக கூறினார்கள்....... இதற்கு விளக்கம் தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்........(ஏன்டா நாட்ல எவ்வளவு பிரச்சனை இருக்கு, இதெல்லாம் தேவையா? இது அர்த்தமற்ற அவசியம் இல்லாத ஒரு கேள்வி என ஒதுக்கினாலும் பரவாயில்லை......) KING ARTHUR images.jpeg


    [​IMG][​IMG]
     
    saravanakumari likes this.
  3. saravanakumari

    saravanakumari Administrator Staff Member Manager Manager Manager

    Joined:
    Nov 12, 2014
    Messages:
    2,271
    Likes Received:
    1,033
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    home maker
    Location:
    villupuram

    vanakkam ..
    hhahaa..kelvi keppathil thavare illai . ana intha kelvi neraya perukku vanthurukku. enakkume thonirukku . sila sambavangalala namma moolai sila tricks kattum .erkanave nadanthathau pola athe pola engayo ketta padal nama padum pothu nu . ana ithellam iyalbana oruvisaayame ..intha article oru Doctor Saravanakumar odathu ..nan sonna badil kuda avarudaiyathe ...
     
    King Arthur likes this.
  4. King Arthur

    King Arthur New Member

    Joined:
    Oct 15, 2018
    Messages:
    6
    Likes Received:
    5
    Trophy Points:
    3
    Thank you for your information ma'am.... So namma brain payapulla than ivlo velaiyum parkkuthaa.... நான் kooda payanthuden......thanks again ma'am
     
    saravanakumari likes this.

Share This Page