Navratri Special: Golu Festival | What You Should Know

Discussion in 'Religious & Sprituality' started by webadmin, Oct 10, 2015.

  1. webadmin

    webadmin Administrator Staff Member

    Joined:
    Jan 1, 1970
    Messages:
    2,567
    Likes Received:
    1,103
    Trophy Points:
    113
    Navratri special: Golu festival

    It’s that time of the year when the revered Shakti (feminine power) is recalled and worshipped. Sanatana Dharma (Hinduism) is a way of life and not a religion, per say. Each person belonging to this faith as his/her own way of worshipping and hence the same Navratri too like several other Hindu festivals is celebrated differently across the nation.
    Each geographical zone has its unique tradition, and the festival gracefully fits into any of the regional customs thereby giving it an assorted appeal.

    [​IMG]

    Down south, Navaratri or the nine nights are celebrated with the display of dolls and idols on a stair-like platform. It is popular as Golu.
    This is symbolic of the fact that everything on earth has one creator and that all are one. People celebrating Golu often adopt a theme. They beautify the platform in their own way thereby depicting what they want to convey.
    The Golu is symbolic of the feminine power which is represented with a Kalash on the topmost stair. Idols of other Gods and Goddesses too are placed on the top.
    A Kalash (metal pot either made of silver, brass or copper) is filled with raw rice. Mango leaves are placed on the neck of the pot and a coconut is placed on the top of the leaves in a way that the leaves spill along the outer walls of the pot.
    People mandatorily use the Marapachi Bommai set (made of a special wood with medicinal value). Besides these dolls, a number of other idol sets are displayed, either depicting a Mahabharata or a Ramayana scene. Nowadays, people use modern themes too.
    Married women, unmarried girls and children are invited in the evening and are presented with the beetle leaf, beetle nut, jewellery and other gift items.
    The first three days are meant to worship Goddess Durga, followed by Goddess Lakshmi for the next three days and the remaining for Goddess Saraswati.

    Sundal (made of different grains and pulses) are prepared as 'prasad' besides sweet dishes and are offered to the God. The same is distributed among the guests who visit the homes to see the Golu.
     
  2. webadmin

    webadmin Administrator Staff Member

    Joined:
    Jan 1, 1970
    Messages:
    2,567
    Likes Received:
    1,103
    Trophy Points:
    113
    ஆன்மிக அர்த்தங்களுக்குள் நுழைந்து அதன் ஆதாரங்களைத் தேடாமல், புராணக் கதைகளுடன் அதை முடிச்சுப் போடாமல், வெறும் பொம்மை விளையாட்டாகவே கற்பித்துக் கொண்டாலும் கூடப் பரவாயில்லை.

    நவராத்திரி ஓர் உன்னதமான திருவிழா தான்.

    உங்களுக்குள் ஒளிந்திருக்கும் குழந்தைத்தனமான ஆர்வங்களை வெளியே கொண்டுவரும் ஓர் அற்புதத் தருணம்தான் இந்த நவராத்திரித் திருவிழா என்றால் அது மிகையாகாது.

    பொம்மைகள் குழந்தைகளுக்கு மட்டும்தான் பிடிக்க வேண்டுமென்பதில்லை. பெரியவர்களுக்கும் பிடிக்கும். பிடித்துத்தான் தீர வேண்டும்.

    இன்று திருமலையில் மட்டுமின்றி, தேசம் முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெறுகின்ற ஸ்ரீ ஸ்ரீநிவாஸர் திருக்கல்யாணமும் கூட பக்தர்களின் மனம் கவரும் ஓர் உயர்தர ஆன்மீக பொம்மை விளையாட்டுத்தான்.

    திருக்கோயில்களில் பிரம்மோத்ஸவ காலங்களில் பல்வேறு பெரிய பொம்மைகளாகிய வாகனங்களிலும், பல்லக்குகளிலும், சிவிகைகளிலும், தேர்களிலும் தெய்வங்களின் பஞ்சலோக உருவத்தை அமர்த்தி, அலங்கரித்து, வீதிவலம் செய்வித்து, அத்திருக்காட்சியை பக்தர்கள் வணங்கிப் பரவசம் அடைவதும் கூட ஓர் உன்னதமான பொம்மை விளையாட்டுத்தான்.

    குழந்தைகள் சிறுவயதில் விளையாடும் பொம்மை விளையாட்டுதான், பெரியவர்களான பின்பு, திருக்கோயில்களில் வருடம் முழுவதும் திருவிழாக்களாகவும், வீடுகளில் வருடத்தில் ஒன்பது நாள் நவராத்திரி பொம்மைக் கொலுவாகவும் பரிணமித்திருக்கிறது என்று நம்புவதற்கு எல்லா நியாயமும் இருக்கின்றது.

    பொம்மைக் கொலு வைக்கும் வழக்கம் உள்ள வீடுகளைப் பொறுத்தவரையில், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளைக் காட்டிலும் நீண்ட நாட்கள் கொண்டாடப் படுவதும், அந்தக் கொண்டாட்டத்திற்கென அதிகமான முன் தயாரிப்புகள் செய்யப்படுவதும் இந்த நவராத்திரிக்கு மட்டும்தான்.

    பொம்மைக் கொலு வைப்பதற்குச் சில நாட்கள் முன்பாகவே வீடுகளின் மூலை முடுக்குகளிலெல்லாம் ஒட்டடை அடிக்கப்படுவதும், பரணிலிருக்கும் பெட்டிகளிலிருந்து பொம்மைகள் வெளியே எடுத்துத் துடைத்துச் சுத்தம் செய்யப்படுவதும், கொலுப்படிகள் நிறுவுவதற்கான திட்டமிடுதலும் ஏற்பாடுகளும் நடைபெறுவதும், வண்ணக் காகிதங்களால் தோரணங்கள் அமைத்து வீடு முழுவதும் அலங்கரிக்கப் படுவதும், வசதியிருந்தால் மின்விளக்குகள் கொண்டு அலங்கரிப்பதும் என, பொம்மைக்கொலு வைப்பது ஒரு திருமணத்துக்கு நிகரான உற்சாகச் செயல் பாடல்லவா ?

    குடும்பத்தின் வயதான உறுப்பினர்கள் அறிவுரை கூற, அடுத்தநிலை பெரியவர்கள் ஆலோசனை வழங்க, இளைய தலைமுறையினர் அதை நிறைவேற்றப் பாடுபடுவதுமாக, முன்னேற்பாடுகள் பரபரக்கும். விழா தொடங்கிய பின்பு, அந்த ஒன்பது நாட்களும், உறவினர்களும், தெரிந்தவர்களும் சாரி சாரியாய் வந்து நம் வீட்டுக் கொலுவைப் பார்த்துவிட்டுப் பாராட்டுவதும், கொலு இன்னும் சிறப்பாக மிளிர்ந்திட ஆலோசனைகள் பலவும் சொல்வதுமாக, ஒவ்வொரு நாளும் சுவாரசியமாக நகரும்.

    வித்தியாசமான கருத்தோட்டங்களைப் பிரதிபலிக்கும் புதிய பொம்மைகளை விலை கொடுத்து வாங்கிக் கொலுவில் வைப்பதும், வருபவர்களுக்கு அதைப் பற்றி விளக்குவதும் கூட ஓர் அற்புத அனுபவம்தான்.

    கொலுவைப்பார்க்க வரும் வரும் குழந்தைகள் தங்களது விழிகள் விரிய வியப்பதும், அவர்களில் சிலர், பொம்மைகளைக் கையில் எடுத்துப் பர்க்கத் துடிப்பதும், பெரியவர்கள் அவர்களைத் தடுத்துச் சமாதானம் செய்வதும் பொம்மைக் கொலு வைத்துள்ள வீட்டில் அன்றாடம் அரங்கேறும் அழகிய காவியமாகும். கொலுவுடன் இசையும் சேருமானால் அவ்விடம் கந்தர்வலோகம் ஆகிவிடும்.

    அவரவர் வசதிக்கேற்ப, கொலுவைக் காண வருபவர்களுக்குத் தாம்பூலத்துடன் ஏதாவது சிறு பரிசுப்பொருளை வழங்குவதும், குழந்தைகளுக்கு சுண்டல் அல்லது இனிப்புகளை வழங்கி அவர்களை முகம் மலர வைப்பதும், திருமணங்களைத் தவிர்த்து, நவராத்திரி நாட்களில் மட்டுமே சாத்தியம்.

    இதையெல்லாம் விடுங்கள்.

    பொம்மைக் கொலுவுக்கென பரணிலிருந்து இறக்கி வைக்கப்படும் பொம்மைகளைப் பார்க்கும் போதே, பள்ளி விட்டவுடன் வீடு திரும்ப ஆவலாகக் குதித்தோடத் தயாராகும் குழந்தைகளைப் பார்ப்பது போல் இருக்கும்.

    இது மட்டுமா.

    நவராத்திரி முடிந்தவுடன் பழையபடி பொம்மைகளைப் பரணில் ஏற்றும் போது, நெருங்கிய உறவினர்களை வழியனுப்ப இரயிலடியில் நிற்பது போன்ற ஓர் உணர்வு நமக்குள் பீறிடுவதைத் தவிர்க்கவே முடியாது.

    அடுத்த நவராத்திரி எப்போது வரும் என்று அந்த பொம்மைகள் நம்மைக் கேட்பது போலவே இருக்கும். ஆம்.பொம்மைகள் நம்முடன் பேசும். நம்பினால் நம்புங்கள். நமக்கும் அவற்றுடன் பேசவேண்டும் போல் இருக்கும். இதுதான் நவராத்திரி பொம்மைக்கொலுவின் சிறப்பு.
     

Share This Page