1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    4,843
    Likes Received:
    477
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    மோடி உடன் வந்த கறுப்பு பெட்டியில் இருந்தது என்ன?

    டில்லி: கடந்த ஏப்.12ம் தேதி கர்நாடகா மாநிலம் சித்ரதுர்க்காவுக்கு மோடி சென்றபோது ஹெலிகாப்டரில் உடன் கொண்டு செல்லப்பட்ட கறுப்பு பெட்டியில் இருந்தது என்ன என்று தெரிய வந்துள்ளது.
    இந்த பெட்டியில் ஏராளமாக பணம் கொண்டு செல்லப்படுகிறது என்று சந்தேகித்த இது குறித்து விசாரிக்குமாறு காங்., தேர்தல் ஆணையத்திலும் புகார் செய்தது. நாடு முழுவதும் இந்த வீடியோ வைரலாக பகிரப்பட்டது. வாத, பிரதிவாதங்களும் நடந்தன. சித்ரதுர்க்கா பகுதி பா.ஜ., தலைவர் நவீன், ‛‛காங்., ஆட்சியில் இருந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, பிரதமருக்கு கொடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு விஷயங்கள் பற்றி அவர்கள் மறந்து விட்டனர். கறுப்பு பெட்டியில் டெலிபிராம்பரும் மற்றும் சில கருவிகளும் மட்டுமே இருந்தன'' என்று டுவீட் செய்திருந்தார்.

    இருந்தது என்ன

    உண்மையில் இந்த பெட்டியில் சில எலக்ட்ரானிக் பொருட்கள், வயர்கள், பிரதமர் பேசும் மேடையில் வைப்பதற்கான சில கட்சி சின்னங்களும் இருந்ததாக தெரிகிறது.மோடி பேசும்போது, டெலிபிராம்டர் என்ற கருவியை பயன்படுத்துவார். அவர் பேசும் தொகுதிகள், மாநிலங்கள் பற்றிய விபரங்கள் அதில் ஏற்கனவே பதியப்பட்டு, பேசும்போது அதில் தெரியும். அதை வைத்து தான் அவர் பேசுவார். இதனால் அவர் பேப்பர் எதையும் பார்த்து பேச வேண்டிய அவசியம் இருக்காது.ஆனால் பார்ப்பவர்களுக்கு எதையும் படிக்காமல், மக்களைப் பார்த்து மோடி பேசுவது போல் தெரியும்.



    நவீன் மேலும் கூறும்போது, ‛‛பிரதமர் மேடைக்கு செல்வதற்கு முன்பு 10 நிமிடங்களுக்குள் இந்த கருவிகள் கொண்டு செல்லப்பட வேண்டும். பிரதமரை அங்கிருப்பவர்கள் வரவேற்று முடிப்பதற்குள் இந்த வேலையை செய்தாக வேண்டும். காரில் கொண்டு செல்லப்பட்டால், பிரதமர் பேசுவதற்குள் இந்த பெட்டியை மேடைக்கு கொண்டு சென்று, கருவிகளை தயார் செய்ய முடியாது. பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி.,) தான் இவற்றை கையாள்கிறது. பிரதமரின் கான்வாயில் வரும் அனைத்து வாகனங்கள் மத்திய ஐ.ஜ., மேற்பார்வையில் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். பிரதமருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டை கூறுவதற்கு முன், காங்., கட்சியினர் பொது அறிவை பயன்படுத்த வேண்டும் '' என்றார்.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    4,843
    Likes Received:
    477
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஒரு ஓட்டு கூட பதிவாகாத அந்தமான் தொகுதி


    புதுடில்லி : அந்தமான் - நிகோபார் தீவுகளின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு லோக்சபா தொகுதி ஓட்டுச்சாவடியில் ஒரு ஓட்டுக் கூட பதிவாகவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

    நிகோபார் தீவுகளில் உள்ள சோம்பன் ஹட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில் தான் ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை. அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஊரில் வசிப்பவர்கள் இன்னும் கற்கால வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர். 2014 ம் ஆண்டு தேர்தலின் போது 2 பேர் மட்டுமே ஓட்டளித்தனர். நிகோபர் தீவில் வசிப்பவர்கள் முதன் முறையாக ஓட்டளித்தது அப்போது தான்.

    இது குறித்து அந்தமான் - நிகோபர் தீவுகளுக்கான தலைமை தேர்தல் அதிகாரி கே.ஆர்.மீனா கூறுகையில், நாங்கள் 66 தேர்தல் பணியாளர்களை கொண்ட 2 ஓட்டுச்சாவடிகளை அமைத்திருந்தோம். சோம்பன் ஹட் பகுதியில் 22 வாக்காளர்கள் உள்ளனர். மிகுந்த சிரமத்திற்கு இடையில் ஓட்டளிப்பதற்கான அனைத்து வசதிகளையும் நாங்கள் செய்திருந்தோம். இருந்தும் இந்த ஆண்டு ஒருவர் கூட ஓட்டளிக்கவில்லை. இப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் காட்டின் உட்பகுதியில் வசிப்பதால் வாரத்திற்கு ஒருமுறை அல்லது எப்போதாவது தான் ரேசன் பொருட்களை வாங்க வெளியே வருகிறார்கள்.

    இந்த மக்களை தேடிச் சென்று, தேர்தல் நடைபெற உள்ள தகவலை தெரிவித்தோம். ஏப்.,11 அன்று தேர்தல் நடைபெறுவதையும் அவர்களுக்கு புரியும் வகையில் சைகை மொழியில் தெரிவித்தோம். இருந்தும் யாரும் வரவில்லை. உள்ளூர் வாசிகளை தொடர்பு கொண்டு பேசியும், பல நடவடிக்கைகள் எடுத்தும் யாரும் வர விரும்பவில்லை. அந்த மக்கள் இருக்கும் பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அரசு அறிவித்துள்ளதால் அரசியல் கட்சிகள் யாரும் அங்கு செல்லவில்லை. அதனால் அவர்களை எங்களால் கட்டாயபடுத்த முடியவில்லை என்றார்.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    4,843
    Likes Received:
    477
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    மாயாவதியின் பணக்கார கட்சி

    புதுடில்லி : அதிகாரப்பூர்வ அரசு ஆவணங்களின் அடிப்படையில் நாட்டிலேயே மிக அதிக அளவில் வங்கியில் இருப்பு பணம் வைத்துள்ள கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜ் என தெரிய வந்துள்ளது.

    பிப்.,25 ம் தேதி மாநில தேர்தல் கமிஷனிடம் பகுஜன் சமாஜ் கட்சி சமர்பித்த செலவு கணக்கு விபரத்தில், அக்கட்சிக்கு பொதுத்துறை வங்கிகளின் 8 கிளைகளில் ரூ.669 கோடி இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 லோக்சபா தேர்தலின் போது வங்கி கணக்கில் பணம் இல்லை எனவும், கையில் ரூ.95.54 லட்சம் உள்ளதாகவும் இக்கட்சி குறிப்பிட்டிருந்தது.
    வங்கிக் கணக்கில் அதிகமாக ரூ.471 கோடி பணம் வைத்து 2 வது இடத்தில் சமாஜ்வாதி கட்சி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ம.பி., சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டதன் மூலம் இக்கட்சியின் வங்கி சேமிப்பு ரூ.11 கோடி குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.


    2018 டிச., 13 நிலவரப்படி கட்சிகளில் வங்கி இருப்பு நிலவரம்,
    பகுஜன்சமாஜ் - 670 கோடிசமாஜ்வாதி - 471 கோடிகாங்கிரஸ் - 196 கோடிதெலுங்குதேசம் கட்சி - 107 கோடிபா.ஜ., - 83 கோடிசிபிஎம் - 3 கோடிஆம்ஆத்மி - 3 கோடி
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    4,843
    Likes Received:
    477
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த பெண்


    புதுடில்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சல் பாதிப்புக்குள்ளான மாவட்டத்தைச் சேர்ந்த, நம்ரதா ஜெயின், 25, என்ற இளம்பெண், யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீஸ் தேர்வில், 12ம் இடம் பெற்று, சாதனை படைத்துள்ளார்.


    பயிற்சி:
    யு.பி.எஸ்.சி., தேர்வில், மூன்று நிலைகளில், தேர்வு நடத்தப்படுகிறது. இவற்றில் வெற்றி பெறுவோர், ஐ.ஏ.எஸ்., - ஐ.எப்.எஸ்., - ஐ.பி.எஸ்., - அதிகாரிகளாக நியமிக்கப்படுவர். இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சல் பாதிப்புக்குள்ளான தண்டேவாடா மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளான, நம்ரதா ஜெயின், 2018ல் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில், 12ம் இடத்தை பெற்றுள்ளார்.

    ஏற்கனவே, 2016ல் நடந்த யு.பி.எஸ்.சி., தேர்வில், 99வது இடத்தை பெற்ற நம்ரதா, தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில் உள்ள, சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.


    அடிப்படை கல்வி:
    இது குறித்து, நம்ரதா கூறியதாவது: நக்சல் ஆதிக்கத்தில் உள்ள, தண்டேவாடா மாவட்ட கலெக்டராகி, அங்குள்ள ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை கல்வி வசதியை ஏற்படுத்தவும் விரும்புகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    4,843
    Likes Received:
    477
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    உலக கோப்பை.., இந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு


    மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. தமிழத்தின் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கருக்கு வாய்ப்பு கிடைத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷாப் பன்டுக்கு இடம் கிடைக்கவில்லை.

    இங்கிலாந்தில் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30ல் துவங்குகிறது. 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் 'ரவுண்டு ராபின்' முறையில் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் 'டாப்-4' இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதில் பங்கேற்கும் அணிகள் விவரம் வரும் 23ம் தேதிக்குள் அறிவிக்கப்பட உள்ளன. இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

    தமிழகத்தின் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர்

    இதற்கான இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) சார்பில் தேர்வுக்குழு கூட்டம் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் மும்பையில் நடந்தது. முடிவில் அணி விவரம் வெளியானது. இந்திய அணிக்கு கோஹ்லி கேப்டனாக தொடர்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷாப் பன்டுக்கு இடம் கிடைக்கவில்லை. தமிழகத்தின் சார்பில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ஆல் ரவுண்டர் விஜய் சங்கருக்கு இடம் கிடைத்தது.

    அணி விவரம்
    : கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், தோனி, தினேஷ் கார்த்திக், ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, விஜய் சங்கர், குல்தீப், சகால், பும்ரா, புவனேஷ்வர், ஷமி.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    4,843
    Likes Received:
    477
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    வேறு நிறுவனங்களுக்கு தாவும், 'ஜெட்' விமானிகள்


    புதுடில்லி : கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள, 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனத்தை சேர்ந்த விமானிகள், குறைந்த சம்பளத்தில், வேறு விமான நிறுவனங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.விமான போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க, கட்டண சலுகை உள்ளிட்ட, பல சலுகைகளை அறிவித்தன. நிதி நெருக்கடிதொழில் போட்டி மற்றும் அதிக சலுகை காரணமாக, பல விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள, ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின், 90 சதவீத சேவைகள் ரத்து செய்யப்பட்டு விட்டன.

    வெளிநாட்டு சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு விட்டது. விமானிகள், பொறியாளர்கள் மற்றும் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்களுக்கு, மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. மற்ற ஊழியர்களுக்கு, மார்ச் சம்பளம் தரப்படவில்லை.மாதத்திற்கு, 4 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்ற விமானிகள் மற்றும் பொறியாளர்கள், தற்போது, குடும்பம் நடத்தவும், கடன்களை செலுத்த முடியாமலும் சிரமப்படுகின்றனர்.வேலை வாய்ப்புஇந்த நிலையை பயன்படுத்தி, ஜெட் நிறுவன விமானிகளுக்கு, 30 - 50 சதவீதம் வரை, குறைவான சம்பளம் தருவதாகக் கூறி, பல விமான நிறுவனங்கள், வேலை வாய்ப்பு அளிக்க முன் வந்துள்ளன.

    மாதம், 4 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய விமானிகள், தற்போது, 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவான சம்பளத்தில், 'ஸ்பைஸ் ஜெட்' உள்ளிட்ட, விமான நிறுவனங்களில் பணிக்கு சேர்ந்து வருகின்றனர்.ஐந்து ஆண்டுகள் வரை பணி அனுபவம் உள்ள விமானிகள் மற்றும் பொறியாளர்கள், குறைவான சம்பளத்தில் வேலை கிடைத்தாலும், தங்கள் முன் அனுபவம் மற்றும் சம்பள விகிதம் பாதிக்கப்படும் என்பதால், இந்த சலுகையை ஏற்க மறுத்துள்ளனர்.

    விரைவில் நிலைமை சீராகும் என்ற நம்பிக்கையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் உள்ளனர்.இதற்கிடையே, இன்று முதல், 1,100 விமானிகள், தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக, ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவன விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    4,843
    Likes Received:
    477
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சிலுவை பாதை ஊர்வலம்


    புதுச்சேரி:தட்டாஞ்சாவடி பாத்திமா தேவாலயத்தில் சிலுவை பாதையை யொட்டி, கிறிஸ்துவர்கள் சிலுவையை சுமந்து கொண்டு, பவனியாக சென்றனர்.புதுச்சேரி பாத்திமா தேவாலயத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் நேற்று மாலை 5.00 மணிக்கு முருகா தியேட்டர் அருகில் இருந்து சிலுவையை சுமந்து கொண்டு தேவாலயம் வரை ஊர்வலம் வந்தனர். இயேசு சிலுவையை சுமந்து கொண்டு சென்றதை வலியுறுத்தியும், அவர் சிலுவையை வைத்து சென்ற இடங்களை கணக்கில் கொண்டு, அந்த இடங்களில் ஆண்கள், பெண்கள் சிலுவையை மாற்றிக்கொண்டு, பைபிள் வாசகங்களை கூறி கொண்டு சென்றனர். இதையடுத்து பங்குத்தந்தை பொன் அருள்தாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    4,843
    Likes Received:
    477
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    அம்பேத்கர் பிறந்த நாள் விழா அரசியல் கட்சியினர் மரியாதை


    புதுச்சேரி:அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.புதுச்சேரி சட்டசபை எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு முதல்வர் நாராயணசாமி, காங்., மாநிலத் தலைவர் நமச்சிவாயம், லோக்சபா தொகுதி வேட்பாளர் வைத்திலிங்கம், அமைச்சர் கந்தசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காங்., மாநில துணைத் தலைவர் தேவதாஸ், பொதுச் செயலர் தேவதாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.அதே போல், என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி, வேட்பாளர்கள் லோக்சபா தொகுதி கே.நாராயணசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி நெடுஞ்செழியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். தி.மு.க., சார்பில் தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., வடக்கு மாநில அமைப்பாளர் சிவக்குமார், தேர்தல் பொறுப்பாளர் சபாபதிமோகன், தட்டாஞ்சாவடி வேட்பாளர் வெங்கடேசன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் மரியாதை செலுத்தினர்.அ.தி.மு.க., சட்டசபை தலைவர் அன்பழகன், மக்கள் நீதி மைய எம்.ஏ.எஸ்., சுப்ரமணியன், அ.ம.மு.க., வேட்பாளர்கள் லோக்சபா தொகுதி தமிழ்மாறன், தட்டாஞ்சாவடி தொகுதி முருக சாமி; இந்திய கம்யூ., முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மா.கம்யூ., ராஜாங்கம், வி.சி., செயலர் தேவபொழிலன் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர்அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
     
  9. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    4,843
    Likes Received:
    477
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஏப்.,15: பெட்ரோல் ரூ.75.75; டீசல் ரூ.69.96

    சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.75 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.96 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஏப்.,15) காலை முதல் அமலுக்கு வந்தது.

    விலை விபரம்:

    எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 7 காசு அதிகரித்து லிட்டருக்கு ரூ.75.75 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.96 காசுகளாகவும் உள்ளது.
     
  10. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    4,843
    Likes Received:
    477
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    டிக் டாக்' தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

    புதுடில்லி : 'டிக் டாக்' செயலிக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கவேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

    சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சில நாட்கள் முன்னர் 'டாக் டாக்' செயலிக்கு தடை விதித்திருந்தது. இதனை பதிவிறக்கம் செய்வதையும் தடைசெய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்குமாறு சீன நிறுவனமான 'டிக் டாக்' உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
    இந்த வழக்கில், 'டிக் டாக்' செயலிக்கு உயர்நீதிமன்றக் கிளை விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்ற நீதிபகள் மறுத்துவிட்டனர். நாளை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தடையை நீக்க முடியாது என்று மறுத்தனர்.மேலும், இந்த வழக்கை வரும் ஏப்ரல் 22 க்கு ஒத்து வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    முன்னதாக, மதுரையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் முத்துகுமார் டிக்டாக் செயலி ஆபாசம், கலாசார சீரழிவு, குழந்தைகளை தவறாக பயன்படுத்துதல், தற்கொலை ஆகியவற்றை ஊக்குவிப்பதாக கூறி அதைத் தடை செய்ய வலியுறுத்தினார்.

    இதனை ஏற்று உயர் நீதிமன்றம் பிரபலமான சீன வீடியோ ஆப்பான டிக்டாக் “ஆபாசத்தை ஊக்குவிப்பதாக” கூறி அதை தடை செய்ய அரசாங்கத்திற்கு உத்தரவிட்ட நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான அபிஷேக் மன் சிங்வி ஆஜரானார்.

    முன்னதாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை டிக் டாக் இன் பதிவிறக்கத்தை மத்தியில் தடை செய்யக் கேட்டிருந்தது. இந்த ஆணை டிக்டாக் ஆப்பை பயன்படுத்தி வீடியோ வெளியிடுவது ஒளிபரப்புவதையும் தடை செய்யும் விதத்தில் இருந்தது.
    டிக்டாக் ஆப் இந்தியாவில் 54 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ளது.டிக்டாக் ஆப் 2019 ஆம் ஆண்டு சமூக வலைதள வீடியோ ஆப்பாக தொடங்கப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் இதன் தரவிறக்கம் ஒரு பில்லியனை எட்டியது.
    “நாங்கள் தகவல் தொழில் நுட்ப விதிகள், 2011ஐ முழுமையாகக் கடைப்பிடித்து வருகிறோம்… சட்ட அமலாக்கம் மூலம் சிறந்த ஒருங்கிணைப்பைப் பெற இந்தியா சார்பாக தலைமை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக” டிக்டாக் ஆப் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

    உயர் நீதிமன்றம் ஏப்ரல் 16க்குள் தடை செய்ய மத்திய அரசினை கேட்டுக் கொண்டது. நீதிமன்றம் டிக்டாக் “ஆபத்தான அம்சம்” மற்றும் “பொருத்தமற்ற உள்ளடக்கத்தை” கொண்டுள்ளதாக கூறியிருந்தது.
     

Share This Page