1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  காட்டை காக்க மரணம் வரை போராடுவோம்: அமேசான் ஆதிக்குடி பெண்கள் போராட்டம்!

  முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் கடந்த ஆண்டு மிக மோசமாக அமேசான் காடுகள் அழிக்கப்பட்டது. காட்டுத்தீ, வேளாண்மைக்கான காட்டு அழிப்பு, மரங்களுக்காகக் காடுகளை அழிப்பது என பல்வேறு காரணிகள் அமேசான் காடுகள் சுருங்குவதற்குக் காரணம்.


  ஒரு பக்கம் பிரேசில் அரசின் கொள்கை முடிவுகளே அமேசான் காடுகள் அழிவதற்குக் காரணமாக இருக்கிறதென்றால், மற்றொரு பக்கம் காடுகளை காக்க முதல் வரிசையில் நிற்கிறார்கள் அமேசான் பழங்குடிகள். அதுவும் குறிப்பாக பெண்கள்.

  மரிஸ்டெலா எனும் 14 வயது அரரோ கரோ இனக்குழுவைச் சேர்ந்த பெண், "இந்த காடுதான் எங்கள் தாய். அந்த தாய் எங்களைக் கவனித்துக் கொண்டாள். பசித்த போது உணவிட்டால். இப்போது அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டியது எங்கள் கடமை." என்கிறார்.

  சயிரூ பொல்சினாரூ தலைமையிலான பிரேசில் அரசு பழங்குடி மக்களுக்கான நில உரிமைச் சட்டத்தை ரத்து செய்வதில் முனைப்பாக இருக்கிறது. மரிஸ்டெலா, "பொல்சினாரூ அரசு பழங்குடிகளை வெறுக்கிறது. ஆனால், நான் இந்த நிலத்தின் ஆதிக்குடி என்பதில் பெருமையாக உணர்கிறேன். அதுவும் ஒரு பெண்ணாக இந்த நிலத்தை காப்பது எங்கள் கடமை என நான் நம்புகிறேன்," என்கிறார்.

  ஒருபக்கம் அரசு அமேசான் காடுகளை கைப்பற்ற முனைய, இன்னொருபக்கம் பிரேசிலில் அமேசான் காடுகளைக் காக்கும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  சுகாதார அவசர நிலை, ரத்து செய்யப்பட்ட திருவிழா" - கடந்த 24 மணி நேரங்களில் நடந்தவை

  கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சர்வதேச அளவில் 2462 பேர் பலியாகி உள்ளனர். 2003 ஆம் ஆண்டு பரவிய சார்ஸுடன் ஒப்பிடும் போது பலி எண்ணிக்கை மிகவும் அதிகம். சார்ஸ் நோயின் காரணமாக 774 பேர் பலியாகி இருந்தனர்.

  சர்வதேச அளவில் 78,810 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக நடந்த தகவல்களைப் பார்ப்போம்.

  கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உலக புகழ்பெற்ற வெனீஸ் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலேயே இத்தாலியில்தான் அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதுவரை 152 பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் பலியாகி உள்ளனர்.

  கொரோனா வைரஸ் காரணமாக சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்தி உள்ளது சீனா. சீனாவுக்கு அடுத்ததாக தென் கொரியாவில் மிக அதிகளவில் கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது.
  Corona virus 2" class="imgCont" height="417" src="https://media.webdunia.com/_media/ta/img/article/2020-02/24/full/1582523047-2891.jpg" style="border: 1px solid #DDD; margin-right: 0px; float: none; z-index: 0;" title="" width="740" />
  தென் கொரியாவில் இதுவரை ஆறு பேர் பலியாகி உள்ளனர். 600 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இரானில் 43 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு 8 பேர் பலியாகி உள்ளனர்.

  பிலிப்பைன்ஸில் ஒரே இடத்தில் 200 இணையர்களுக்கான திருமணத்தை அரசு ஒருங்கிணைத்து இருந்தது. கொரோனா வைரஸ் அச்சமாக 200 ஜோடிகளும் முகமூடி அணிந்து திருமணம் செய்து கொண்டனர்.

  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பீதியால் கோழி விலை அதிரடியாக சரிந்து வருகிறது. ஒரு கிலோ கோழி (உயிருடன்) ரூ.49-க்கு தற்போது விற்பனை ஆகிறது. இதுகுறித்து சென்னை இறைச்சி சில்லறை வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் எம்.அன்வர் பாஷா, "கொரோனா வைரஸ் பீதியால் கடந்த சில நாட்களாகக் கடைகளில் கோழிக்கறி வாங்குபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து இருக்கிறது, என்றார்.
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  அசைவம் உண்ண விரும்பும் சைவ பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி


  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் உலக அளவில் இப்போது இறைச்சி உணவுப் பழக்கம் ஏறத்தாழ ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.


  உலகம் முழுவதும் ஆண்டுக்கு 330 மில்லியன் டன் அளவில் இறைச்சி சாப்பிடப்படுகிறது. இந்தநிலையில் இறைச்சிக்கு மாற்றான உணவுப் பொருளைத் தயாரித்து, இறைச்சியின் அடுத்த தலைமுறை உணவை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

  இறைச்சியில் உள்ள தனிமங்களை போலவே செயல்படக் கூடிய சுரப்பிகள், கொழுப்புகள் மற்றும் புரதச் சத்துகளைக் கண்டறியத் தாவர இனங்களில் பியாண்ட் மீட் எனும் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.

  இப்போது வேர்க்கடலை, உருளைக்கிழங்கு ஆகியவற்றில் இருந்து மாற்று இறைச்சியை உருவாக்குகின்றனர். ரத்தத்திற்கு மாற்றாகப் பீட்ரூட்டையும் பயன்படுத்துகின்றனர்.

  இதன் விளைவாக உண்மையான இறைச்சியை கொண்டது போன்றே ஒரு பர்க்கரை உருவாக்கியுள்ளனர்.

  இது இறைச்சி உணவு போலவே காட்சியளிப்பதுடன், வாசனையும் உள்ளதா என்பதைக் கண்டறிய 'இ-நோஸ்' என்ற நுட்பத்தைக் கையாள்கிறார்கள்.
  [​IMG]

  ``எங்களிடம் இருப்பது அமினோ அமிலங்கள், கொழுப்புகள், சிறிதளவு தாதுகள், வைட்டமின்கள், தண்ணீர் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கூட்டுப் பொருள் . இவைதான் விலங்கு புரதம் அல்லது இறைச்சியின் கூட்டுப் பொருள்களாகவும் இருக்கின்றன. எனவே விலங்குகள் இல்லாமல் இறைச்சியை உருவாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். தாவரங்களிலிருந்து நேரடியாக இறைச்சியை உருவாக்குவதுதான் எங்களுடைய பணியாக இருக்கிறது. நாங்கள், 90 சதவீதம் குறைவான நீரை பயன்படுத்துகிறோம். மின்சாரம் பாதியளவுதான் பயன்படுத்துகிறோம். கார்பன் உற்பத்தி 90 சதவீதம் குறைவு. 93 சதவீதம் குறைவான நிலப் பரப்பை பயன்படுத்துகிறோம். எனவே நீங்கள் ஒரு விவசாயி ஆக இருந்து, 100 ஏக்கர் நிலம் இருக்குமானால், அவ்வளவு நிலத்தில் செய்த இறைச்சி உற்பத்தியை எங்களால் 7 ஏக்கரில் செய்துவிட முடியும்.'' என்கிறார் பியாண்ட் மீட் நிறுவனத்தின் நிறுவனர் எத்தான் பிரவுன்

  சராசரியான இறைச்சியை விரும்பும் குடும்பத்துக்கு ஒரு சிக்கல் இதில் இருக்கிறது. நேரடியாக மாட்டிறைச்சியில் தயாரிக்கப்படும் ஒரு பர்கரின் விலையைவிட, பியாண்ட் மீட் பர்கர்களின் விலை ஆறு மடங்கு அதிகம்.

  "இந்த புதிய தொழில் ஆரம்ப நிலையில் இருக்கிறது. எங்களுடைய விநியோகச் சங்கிலியை இப்போதுதான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்தத் தொடர் இன்னும் விரிவாகும் போது, விலங்கு இறைச்சியை விட, குறைவான விலைக்கு எங்களால் வழங்க முடியும்," என்கிறார் எத்தான் பிரவுன்.

  அத்துடன் அலெப் பார்ம்ஸ் என்ற மற்றொரு நிறுவனம் ஆய்வகத்தில் இறைச்சியை உருவாக்குகிறது. விலங்குகளின் உயிரணுக்களைக் கொண்டு இறைச்சி உருவாக்கப் படுகிறது.

  காய்கறிக்கான மாற்றுப் பொருட்களால் இறைச்சியின் தன்மையைத் தர முடியாமல் போனால், இறைச்சியை ஆய்வகத்திலே உருவாக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
  இந்தவகை இறைச்சியைத் தயாரிக்க விவசாய நிலத்தில் கார்பனை உற்பத்தி செய்யும் கால்நடைகளை வளர்க்க வேண்டாம், கால்நடைகளை வெட்டவும் வேண்டாம்.
  [​IMG]

  "நாங்கள் குறைவான ஆதார வளங்களை பயன்படுத்துகிறோம், கால்நடைகளுக்கு கொடுப்பதைவிட இந்த செல்களுக்குக் குறைவான சத்துப் பொருட்களைத்தான் தருகிறோம். ஆனால் விலங்குகள் நலன் குறித்த விஷயங்கள், ஆண்டிபயாட்டிக் பயன்பாடு ஆகிய பிரச்சனைகளை நாங்கள் எளிதாக்குகிறோம்," என்கிறார் அலெப் பார்ம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிடியர் டவ்பியா.

  உலகில் உள்ளவர்களுக்கு தொடர்ந்து உணவளிக்க, அதிக நீடித்த தன்மையுள்ள வாய்ப்பை உருவாக்குவது பெரிய விஷயம். ஆனால் இந்த வகை உணவுக்கான விலை, வழக்கமான குடும்ப செலவை மிஞ்சியதாக இருக்கிறது. இதை விற்பதற்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் அங்கீகாரத்தை பெறுவது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. அதற்கு பல ஆண்டுகள் தேவைப்படலாம்.
  [​IMG]

  ''உண்மையில், உங்களை வந்தடையும் வழியில் அந்த உணவில் என்னவெல்லாம் செய்யப்படுகிறது என்று, எவ்வளவு சக்தி சேர்க்கப்படுகிறது என்றும், பதப்படுத்தல் நடப்பது பற்றியும் கவனியுங்கள். அது ஒரு முக்கியமான விஷயம்,'' என்கிறார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர் ரே பியர்ரெஹம்பர்ட்.

  ருசியானதாகவும், கட்டுபடியான விலை உள்ளதாகவும் இறைச்சிக்கு மாற்றான உணவைத் தயாரிப்பதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகலாம். ஆனால் இறைச்சிக்கு சரியான மாற்று உணவைத் தயாரிக்கும் தொழில் அதிக முதலீட்டை ஈர்க்கும் சந்தையாக மாறி வருகிறது.
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  சீனாவுடன் தொடர்பே இல்லாத நாடுகளுக்கு கொரோனா பரவுவது எப்படி?


  சீனாவுடன் எந்த தொடர்பும் இல்லாது இருக்கும் நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.  இரானில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் இரண்டு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ், வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த எடுக்கும் முயற்சிகள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

  "இரானில் பல நகரங்களில்" ஏற்கனவே வைரஸ் தொற்று பாதிப்பு பரவி இருக்கலாம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். இதுவரை இரானில் கோவிட்-19 என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றால் 4 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

  இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ், சீனாவிற்கு வெளியே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம்தான் கவலையளிக்கிறது என்றார்.

  "கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்படவருன் நேரடி தொடர்பு இல்லை. சீனாவிற்கு பயணம் மேற்கொண்ட எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படி சில நாடுகளுக்கு இத்தொற்று பரவுகிறது என்பது புரியவில்லை. முக்கியமாக இரானில் தற்போது அதிகமாகும் உயிரிழப்புகள் மற்றும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கவலை அளிக்கும் விதமாக இருக்கிறது," என்று டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.
   
 5. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கம்போடியாவில் 47 ஆண்டுகளுக்கு பின் ஒன்று சேர்ந்த சகோதரிகள்


  கம்போடியாவில் 1970களில் 'க்மெய்ர் ரூஷ்' சர்வாதிகார ஆட்சியின்போது இறந்துவிட்டதாக நினைத்து வாழ்ந்து வந்த இரு சகோதரிகள் 47 ஆண்டுகளுக்கு பின் தற்போது இணைந்துள்ளனர். 'க்மெய்ர் ரூஷ்' என்பது போல் பாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு வழங்கப்படும் பெயராகும்.

  இதில் ஒருவருக்கு (பன் சென்) 98 வயதும் மற்றொருவருக்கு (பன் சியா) 101 வயதும் ஆகிறது.

  அதே போல 98 வயதாகும் மூதாட்டி பன் சென், இறந்துவிட்டதாக நினைத்திருந்த 92 வயதாகும் தனது இளைய சகோதரருடனும் ஒன்று சேர்ந்துள்ளார்.

  1979இல் தனது கணவரை இழந்தபின், கம்போடிய தலைநகரில் குப்பைகளை சேகரித்து வாழ்ந்து வந்த பன் சென் கம்போடியா சில்ட்ரன்ஸ் ஃபண்ட் எனும் தொண்டு நிறுவனம் மூலம் அவரது சொந்த கிராமத்தில் உள்ள அந்த மூதாட்டியின் சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளார்.

  கம்போடியாவில் போல் பாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை பிடிக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1973ல் இரு சகோதரிகளும் கடைசியாக பார்த்துக் கொண்டனர். பிறகு இப்போதுதான் சந்தித்துக் கொள்கிறார்கள்.

  க்மெய்ர் ரூஷ் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின்போது சுமார் 20 லட்சம் மக்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

  1975 முதல் 1979 வரையிலான 'க்மெய்ர் ரூஷ்' ஆட்சியில் குடும்பங்கள் பிரிக்கப்பட்டு மக்கள் நகரங்களிலும், வேளாண் பண்ணைகளிலும் பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்டனர்.


  குடும்பத்தை பிரிந்த சில ஆண்டுகளில், தனது கணவரை இழந்த பன் சென், கம்போடிய தலைநகரமான ப்னோம் பென்னில் உள்ள பெரும் குப்பை கழிவுகளுக்கு அருகே உள்ள ஒரு சிறு பகுதிக்கு இடம்பெயர்ந்தார்.

  குப்பைகள் பொறுக்குவது, கிடைக்கும் பிளாஸ்டிக்கை விற்பது, அப்பகுதியில் இருக்கும் குழந்தைகளை பார்த்துக் கொள்வது என தன் வாழ்க்கையை கழித்தார் பென் சென்.

  தலைநகரத்தில் இருந்து 90 மைல்கள் தொலைவில் இருக்கும் தனது சொந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்று நீண்ட காலமாக நினைத்து வந்தார். ஆனால், முதுமை, நடக்க முடியாமல் இருப்பது போன்ற காரணங்களால் அவர் அங்கு செல்ல நீண்ட காலம் ஆனது.
   
 6. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  காமன் டின்சில்: தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை பட்டாம்பூச்சி


  காமன் டின்சில் (common tinsel) என்ற அரியவகை பட்டாம்பூச்சி முதல்முறையாக தமிழகத்தின் கிழக்கு தொடர்ச்சி மலையில் கண்டறியப்பட்டுள்ளது.  யானை, புலி உள்ளிட்ட பெரிய விலங்குகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தைப் போலவே, பட்டாம்பூச்சிகளுக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக புதிதாக கண்டறியப்பட்ட பட்டாம்பூச்சி குறித்த விழிப்புணர்வை சேலம் மாவட்ட வனத்துறையோடு சேர்ந்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஏற்படுத்திவருகின்றனர்.

  இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகள் மீது செலுத்தப்படும் கவனத்தில் பாதியளவு கூட கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மீது செலுத்தப்படுவதில்லை என்கிறார்கள் சூழலியல் செயற்பாட்டாளர்கள்.

  ஒடிஷாவில் தொடங்கி, ஆந்திர பிரதேசம், தமிழகத்தில் சேலம், பழனி வரை நீண்டுள்ளது கிழக்கு தொடர்ச்சி மலை. இங்குள்ள வனப்பகுதிகளில் காணப்படும் புதிய பூச்சிகள், பறவைகள், விலங்குகள் பற்றிய விழிப்புணர்வை கடந்த மூன்று ஆண்டுகளாக ஏற்படுத்திவருகிறார்கள் சூழலியல் செயற்பாட்டாளர்கள்.

  சேலம் மாவட்ட வனத்துறை மற்றும் சேலம் இயற்கை கழகம் இணைந்து பிப்ரவரி மாதம் மூன்று நாட்கள் நடத்திய ஆய்வில், கிழக்குத் தொடர்ச்சி மலையின் தமிழக பகுதியில், டின்சில் பட்டாம்பூச்சி இருப்பது முதல்முறையாக புகைப்பட ஆதாரத்தோடு பதிவுசெய்யப்பட்டுள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

  [​IMG]

  மிகவும் அரிதானதாக கருதப்படும் டின்சில் பட்டாம்பூச்சி ஏற்காடு மலையில் சுமார் 1400 மீட்டர் உயரத்தில் கண்டறியப்பட்டது என்கிறார்கள்.

  பிபிசி தமிழிடம் பேசிய சேலம் இயற்கை கழகத்தின் தலைவர் வ.கோகுல், மாணவர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட 17 குழுக்கள் சேலம் வனப்பகுதியை ஆய்வு செய்தபோது டின்சில் பட்டாம்பூச்சி இருப்பதை கண்டறிந்ததாகக் கூறுகிறார்.

  ''பொதுவாக டின்சில் பட்டாம்பூச்சி, மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில்தான் தென்படும். சேலம் வனப்பகுதியில் இந்த பட்டாம்பூச்சி இருப்பதால், இங்குள்ள வனப்பகுதி வளமுடன் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. நீலன்கள்(Blue family) குடும்பத்தைச் சேர்ந்த இந்த டின்சில் பட்டாம்பூச்சியின் மேல்புறம் நீலவண்ணமும், அடிப்பகுதி சாம்பல் நிறத்திலும் காணப்படும்,''என்றார்.

  டின்சில் உள்ளிட்ட 136 பட்டாம்பூச்சிகள் சேலம் வனப்பகுதியில் இருப்பதாகவும், 214 பறவை இனங்கள் இருப்பதாகவும் கூறுகிறார் கோகுல்.


  ''மூன்று நாட்கள் நடத்திய ஆய்வில், பட்டாம்பூச்சிகள் மற்றும் பறவைகளுக்கு சிறப்பு கவனம் கொடுத்து படங்கள் பதிவு செய்தோம். உள்ளூர்களில் உள்ள பூச்சிகள், பறவைகள் பற்றிய புத்தகங்களை அரசுப்பள்ளி மாணவர்களுக்குக் கொடுத்துவருகிறோம். இதுபோன்ற ஆய்வில் வெளியாகும் கண்டுபிடிப்புகள் பற்றி மாணவர்கள் தெரிந்துகொண்டதால், ஞாயிற்றுக் கிழமைகளில் பறவைகளை உண்டிவில் கொண்டு அடிப்பதை நிறுத்திவிட்டு, பல குழந்தைகள் இந்த உயிரிகளை அடையாளம் கண்டுசொல்கிறார்கள் என்பது இந்த ஆய்வின் வெற்றியாகப் பார்க்கிறோம்,''என்கிறார் .
  [​IMG]

  சேலம் மாவட்ட வனத்துறை அதிகாரியான பெரியசாமி பிபிசி தமிழிடம் பேசும்போது, சேலம் வனப்பகுதியில் விதவிதமான உயிரிகள் உள்ளன என்பதற்கு ஆதாரமாக டின்சில் உள்ளிட்ட பட்டாம்பூச்சிகள் உள்ளன என்றார்.

  ''வனத்தில் உயிர் பன்முகத்தன்மை (Biodiversity) தேவை. பலவிதமான விலங்குகள், பூச்சிகள் இருந்ததால்தான் அந்த வனப்பகுதி வளமுடன் இருப்பதாக கருதப்படும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சந்தன மரங்களுக்காக கிழக்கு தொடர்ச்சி மலை பாதுகாக்கப்பட்டது. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு, மரங்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் வனவிலங்குகளுக்கு மாற்றப்பட்டது. புலி, யானை என பெரிய விலங்குகள் அதிகம் காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அதிக கவனம் கிடைத்தது. தற்போது கிழக்கு தொடர்ச்சி மலையில் உயிர் பன்முகத்தன்மை இருப்பதால், இங்குள்ள வனப்பகுதிகளும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்கு ஆய்வுகள் மிகவும் பயன்தரும்,''என்கிறார்.

  காமன் டின்சில் சேலத்தில் காணப்பட்டதற்கு வேறு காரணங்கள் உள்ளனவா என கேட்டபோது, ''இதுநாள் வரை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகமாகக் காணப்பட்ட ஓர் உயிரி முதல்முறையாக தமிழகத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையில் தென்படுகிறது என்பதால், இங்குள்ள வனப்பகுதி ஆரோக்கியமாக உள்ளது என்பதை உணர்த்தும் அடையாளமாக இந்த பட்டாம்பூச்சியை கருதலாம்.


  சேலம் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்(protected areas) இல்லை. ஆனாலும் இதுபேன்ற புதிய உயிரிகள், பலவிதமான உயிரிகள் இருப்பதை தொடர்ந்து ஆதாரங்களுடன் பதிவு செய்தால், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை சேலம் வனப்பகுதிகளுக்கும் கிடைக்கும். பாதுகாப்பிற்காக புதிய திட்டங்களை கொண்டுவர இந்த ஆய்வு உதவும்,'' என்றார் பெரியசாமி.
   
 7. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ஜாடிக்குள் அடைக்கப்பட்ட மனித மூளை: வாகன சோதனையில் பகீர்!!

  கனடாவில் ஜாடி ஒன்றிற்குள் அடைக்கப்பட்டிருந்த மனித மூளை கிடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் தபால்களுடன் நுழைந்த சரக்கு வாகனத்தை சுங்க அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியபோது, ஜாடி ஒன்றிற்குள் அடைக்கப்பட்டிருந்த மனித மூளை கிடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  அமெரிக்காவின் மிச்சிகன் மற்றும் கனடாவின் ஒண்டாரியோ மாகாணங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் கடந்த வாரம் அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனை நடத்தியபோதே இது தெரியவந்தது. பழமையான கற்பித்தல் மாதிரி" என்று குறிப்பிடப்பட்ட பெட்டகம் ஒன்றினுள் இந்த மனித மூளை கண்டெடுக்கப்பட்டது.

  "இதுபோன்ற மாதிரிகளை அமெரிக்காவிற்குள் சட்டப்பூர்வமாக எடுத்து வருவதற்கு தேவையான எவ்வித ஆவணமும் இல்லாமல், அந்த ஜாடிக்குள் மனித மூளை சர்வ சாதாரணமாக அடைக்கப்பட்டிருந்தது," என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

  அமெரிக்காவிற்குள் இதுபோன்ற வினோதமான விடயங்கள் கொண்டுவரப்படுவதும் அவை கண்டுபிடிக்கப்படுவதும் இது முதல் முறையல்ல.
   
 8. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மாஃபியா - 1: சினிமா விமர்சனம்


  திரைப்படம் மாஃபியா - 1
  நடிகர்கள் அருண் விஜய், பிரியா பவானிசங்கர், பிரசன்னா
  ஒளிப்பதிவு கோகுல் பினோய்
  இசை ஜேக்ஸ் பினோய்
  இயக்கம் கார்த்திக் நரேன்


  துருவங்கள் 16 படத்தின் மூலம் கவனத்தைக் கவர்ந்த கார்த்திக் நரேன் இயக்கிய 'நரகாசுரன்' படம் இதுவரை வெளியாகாத நிலையில், 'மாஃபியா' மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. படத்தின் 'ஸ்டைலிஷான' புகைப்படங்களும் ட்ரைலரும் இந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்தது.

  போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றுகிறார் நாயகன் ஆர்யா (அருண் விஜய்). அவருக்கு துணையாக சத்யாவும் (பிரியா பவானிசங்கர்) வருணும் இருக்கிறார்கள்.

  போதைப் பொருளைக் கட்டுப்படுத்தும் பணியில் சின்னச் சின்ன ஆட்கள் சிக்கினாலும் உச்சத்தில் இருக்கும் நபரைப் பிடிக்க முடியவில்லை. இதற்கிடையில் போதைப் பொருள் பிரிவின் உயரதிகாரியும் சமூக ஆர்வலர் (தலைவாசல் விஜய்) ஒருவரும் கொல்லப்படுகிறார்கள்.

  இதையடுத்து, திட்டம்போட்டு உச்சத்திலிருக்கும் நபரான திவாகரை (பிரசன்னா) நெருங்குகிறார் ஆர்யா. ஆனால், திவாகர் ஆர்யாவின் குடும்பத்தினரைக் கடத்திவிடுகிறார். குடும்பத்தினரை மீட்க முடிந்ததா, போதைப் பொருள் கும்பலின் பின்னணியில் யார் இருப்பது என்பதுதான் மீதிக் கதை.

  போதைப் பொருள் கும்பலைப் பின்னணியாகக் கொண்ட த்ரில்லர் என்றால் சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமே இருக்காது. போதைப் பொருள் கும்பல்களுக்கிடையிலான மோதல், காவல்துறையின் தேடல், கறுப்பு ஆடுகள் என இந்தக் கதைகளுக்கென்றே விறுவிறுப்பான அம்சங்கள் நிறையவே இருக்கும்.

  ஆனால், இந்தப் படத்தில் அப்படி ஏதுமில்லை. முதல் பாதி பொறுமையை வெகுவாகவே சோதித்துவிடுகிறது. மிகச் சாதாரணமான சம்பவங்கள், சாதாரணமான காட்சிகள், எந்தத் திருப்பமும் இல்லாத திரைக்கதை என ஒரு 'கிக்'கும் இல்லாமல் நகர்கிறது படம். போதைப் பொருள் தடுப்புத் துறையாலேயே கண்டுபிடிக்க முடியாத கும்பல் தலைவனை சமூக ஆர்வலர் ஒருவர் (அவர் பெயர் முகிலன்!) just like that கண்டுபிடித்துவிடுகிறார்.

  போதைப் பொருள் கும்பல் சாவகாசமாக வந்து, போதைப் பொருள் தடுப்பிப் பிரிவின் தலைவரை கொன்றுவிட்டுப் போகிறது. இப்படி தாங்கமுடியாத காட்சிகள் முதல் பாதியில்.

  இரண்டாவது பாதி சற்று பரவாயில்லை. ஆனாலும், திரைக்கதையில் எந்தப் புதுமையும் கிடையாது. வழக்கம்போல, கதாநாயகன் வில்லனுடைய இடத்தில் புகுந்து போதைப் பொருள்களை அள்ளிவந்துவிட, வில்லன் கதாநாயகன் பெற்றோரைக் கடத்திவிட, பெரிய சண்டையைப் போட்டு அவர்கள் மீட்கப்படுகிறார்கள்.

  படத்தின் முடிவில் இரண்டாம் பாகத்திற்கு கதையை எடுத்துச் செல்வதைப்போல ஒரு திருப்பம் வருகிறது. அது மட்டுமே ரசிக்க வைக்கிறது. ஆனால், முதல் பாகத்தை அப்போதுதான் பார்த்து முடித்திருக்கிறோம் என்பதால், பெரிதாக எந்த ஆர்வமும் ஏற்படுவதில்லை.

  படத்தின் மற்றொரு பெரிய பிரச்சனை, ஸ்லோமோஷன் காட்சிகள். படத்தின் முக்கால்வாசிப் பகுதி இப்படி ஸ்லோமோஷனிலேயே நிகழ்வது தாங்க முடியாததாக இருக்கிறது.

  இந்தப் படத்திற்கென ஒரு themeஐ உருவாக்கி, அதற்கேற்றபடி டைட்டில் கார்டுகளை வடிவமைத்திருப்பது அட்டகாசம். படத்தில் பாராட்ட வேண்டிய மற்றொரு அம்சம், ஒளிப்பதிவு. முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சிவரை அட்டகாசம் செய்திருக்கிறார் கோகுல் பினோய். பின்னணி இசையைப் பொறுத்தவரை துவக்கத்தில் சற்று புதுமையாக இருப்பதாகத் தோன்றினாலும், சிறிது நேரத்திலேயே எந்தக் காட்சிக்கு எந்த இசைத் துணுக்கைப் பயன்படுத்துவார் என்பது பழகிவிடுகிறது.

  எல்லாப் படங்களைப் போலவும் இந்தப் படத்திலும் அருண் விஜய் மெனக்கெட்டிருக்கிறார். படத்தில் நடித்த பிற நடிகர்களையும் குறை சொல்ல முடியாது. ஆனால், திரைக்கதையில் கோட்டிவிட்டிருப்பதால் சுவாரஸ்யமில்லை.
   
 9. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  coronavirus news: கொரோனா வைரஸ் கோழிக் கறி மூலம் பரவுகிறதா?


  கோழி இறைச்சி உண்பதால் கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற ஒரு வதந்தி ஆந்திர பிரதேச மாநிலத்தில் பரவி வருகிறது. இது அங்கே கோழிக்கறி விற்பனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  கோழிக்கறி முகவர்கள் மற்றும் உள்ளூர் கறி விற்பனையாளர்கள் இதன் விளைவை அனுபவித்து வருகின்றனர். எனவே உள்ளூர் இறைச்சி விற்பனையாளர்கள் இலவச பொருட்களை கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.

  ஆந்திர பிரதேசத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் ஆட்டு இறைச்சி விற்பனையாளர் ஒருவர் ஐந்து கிலோ இறைச்சி வாங்குபவர்களுக்கு ஹெல்மட் இலவசமாக வழங்கி வருகிறார்.

  ஆந்திராவில் பல கோழிப் பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் வேகமாக உயிரிழந்து வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது. எனவே இறைச்சி விற்பனை மற்றும் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

  ஜனவரி மாத இறுதியில் ஒரு கிலோ பிராய்லர் கோழியின் சில்லறை விலை 200 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது அது ரூ.150ஆக குறைந்துள்ளது.

  [​IMG]

  ஆந்திராவின் கால்நடை வளர்ச்சி முகமையின் துணை இயக்குநர் சாய் பட்சாராவ், இந்த கோழிகள் உயிரிழந்ததற்கு மோசமான ஒரு கால்நடை நோயே காரணம் என பிபிசியிடம் தெரிவித்தார்.

  இது பிராய்லர் கோழிகளுக்கு முறையான தடுப்பூசி வழங்காததால் ஏற்பட்டுள்ளது. இந்த பறவைகளுக்கு முறையான தடுப்பூசி சரியான நேரத்தில் வழங்கவில்லை என்றால், அவைகளுக்கு நோய்த் தொற்று வேகமாக பற்றி அது வேகமாக பரவத் தொடங்கும்.

  இதுதான் ஆந்திரப் பிரதேசத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதுவே இந்தப் பறவைகளின் இறப்புக்குக் காரணம். இந்த இறந்துபோன பறவைகள் முறையாக புதைக்கப்பட வேண்டும். ஆனால் சில கோழிப் பண்ணை உரிமையாளர்கள் ஆயிரக்கணக்கான பறவைகளை சாலையில் வீசுகின்றனர்.

  அதைக் காணும் மக்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. அதைப் பார்த்த அவர்கள் கோழிப் பண்னைக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைத்துக் கொள்கின்றனர். இதனால் இயல்பாக இறைச்சி விற்பனை குறைந்துள்ளது.
  இறைச்சி விற்பனைக்கு தடை
  பாதுகாப்பு காரணமாக ஆந்திராவின் பல நகரங்களில் இறைச்சி விற்பனைக்கு தடை விதித்துள்ளனர் அதிகாரிகள். மேலும் பல மாநிலங்களுக்கு கோழி ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் கோழிப் பண்ணைகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன.


  ஆந்திரப் பிரதேசத்தில் மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
  தமிழகத்தில் நிலை என்ன?
  "கோழி இறைச்சி உண்பதால்தான் கொரோனா வைரஸ் பரவுகிறது என்று ஆந்திரப் பிரதேசத்தில் சமூக ஊடகங்கள் மூலம் வதந்தி பரவியது. அந்த வதந்தி தமிழகத்திலும் பரவியுள்ளதால், கோழி இறைச்சி வாங்கவே மக்கள் பயப்படுகிறார்கள்," என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சின்ராஜ்.

  "சமூக ஊடகங்களில் தேவையில்லாமல் தவறான செய்திகள் பரவுகின்றன. அந்த செய்திகளை கண்டு மக்கள் கோழிக்கறி வாங்க அஞ்சுகின்றனர். எனவே கோழி இறைச்சி விற்பனை சமீபத்தில் குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் கோழிக் கறியின் விலை கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது," என்றும் அவர் கூறினார்.
  [​IMG]

  இந்தியாவில் கோழிக் கறியிலிருந்து கொரோனா வைரஸ் பரவுகிறது என சமூக ஊடகத்தில் பரவும் செய்திகளால் கோழிக்கறியின் விலை பாதியாகக் குறைந்துள்ளது என துறைச்சார்ந்தவர்கள் தெரிவிப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

  ஆனால் கோழி அல்லது ஆட்டு இறைச்சி உண்பதால் கொரோனா பரவாது என மருத்துவர்கள் தெளிவு படுத்தியுள்ளனர்.
  ’முறையாக சமைத்தால் ஆபத்தில்லை’
  "இது வெறும் வதந்தியே. கோழிகளில் கொரோனா வைரஸ் கிடையாது. ஆனால் இந்த கோழிகளின் இறப்பு கோரோனா வைரஸுடன் தொடர்பு படுத்தப்பட்டு தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. முறையாக சமைக்கப்பட்ட எந்த உணவும் உடல்நலத்தில் பிரச்சனையை ஏற்படுத்தாது," என்று கிழக்கு கோதாவரி மாவட்ட மருத்துவமனைகளின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரமேஷ் கிஷோர் தெரிவிக்கிறார்.
   
 10. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கொரோனா எதிரொலி: சொகுசு கப்பலில் மரணங்கள்!!


  கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றால், டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் இருந்த இரு பயணிகள் உயிரிழந்துள்ளனர்.  ஜப்பான் குடிமக்களான இவர்கள் இருவரும் 80 வயதைக் கடந்தவர்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதே சூழ்நிலையில், புதன்கிழமை மட்டும் சீனாவில் கொரோனா பாதிப்பினால் 108 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், சீனாவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,121ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 74,600க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  "சீனாவிலும், மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால், டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இதன் தாக்கம் வேறு வகையில் உள்ளது" என்று இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

  தற்போது டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 621 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உள்ளது. சீன பெருநிலப் பரப்புக்கு வெளியே ஒரே இடத்தில் அதிகம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது இங்குதான்.

  இந்நிலையில், கொரோனா வைரஸ் பரிசோதனையில் நோய்த்தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பயணிகள் மற்றும் ஊழியர்கள் முதல் முறையாக அந்த கப்பலை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  எனினும், இந்த கப்பல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள விவகாரத்தை ஜப்பான் சரிவர கையாளவில்லை என்ற குற்றச்சாட்டை பல்வேறு தரப்பினரும் முன்வைத்து வருகின்றனர்.
   

Share This Page