Paniyil Uraintha Sooriyane / பனியில் உறைந்த சூரியனே BY Ezhilanbu

Discussion in 'Serial Stories' started by Ezhilanbu, Apr 18, 2018.

  1. Ezhilanbu

    Ezhilanbu Well-Known Member

    Joined:
    Sep 21, 2017
    Messages:
    507
    Likes Received:
    829
    Trophy Points:
    93
    Gender:
    Female
    ஹாய் பிரண்ட்ஸ்

    எனது நான்காவது கதையின் தலைப்புடன் வந்துவிட்டேன்.

    இது தான் என் இரண்டாவது கதையாக இருந்திருக்க வேண்டியது. சில காரணங்களால் நான்காவதாக மாறிவிட்டது.

    ஓகே பிரண்ட்ஸ் கதையின் தலைப்பு என்னனு சொல்லி விடலாமா?

    தலைப்பு : பனியில் உறைந்த சூரியனே!!


    எப்படி இருக்கு பிரண்ட்ஸ்?

    சூரியனாய் சுட்டெரிப்பான்!!
    குளிர் நிலவாய் ஒளி வீசுவான்!!
    உக்கிரமாய் வேட்டையாடுவான்!!
    கன்னியவளிடம் காதல் கொள்வான்!!
    பெண்களுக்கு காவலன் அவன்!!
    பெண்ணவளுக்கு காவியம் அவன்!!
    எவனோ அவன்!!
    வருவான் அவனே!!
    சிம்மாசனமிட்டு அமர போகும் ஜித்தன்!!

    என் முந்திய கதைகளுக்கு எப்பவும் கதை நாயகன் நாயகி பெயர் சொல்லிவிடுவேன்.

    ஆனால் இந்த கதைக்கு சொல்ல போவதில்லை.

    கதை ஆரம்பிக்கும் போது தெரிந்துக்கொள்ளுங்க.

    அப்போ நீ சொன்ன ஜித்தா யாருன்னு கேட்குறீங்களா? அது மட்டுமே நாயகன் பெயர் இல்லை.

    மீதி பெயர் என்னவாக இருக்கும்னு யோசிச்சிட்டே இருங்க.

    இப்போ ஒரு குட்டி டீசர் மட்டும்...

    மீண்டும் கதையுடன் விரைவில் சந்திக்கின்றேன்.


    இளைஞன் வாங்கிய அறையில் உறைந்து கன்னத்தில் கைவைத்தப் படி நிற்க... பைக்காரன் நிதானமாக தன் பைக்கில் ஸ்டைலாக சாய்ந்து நின்றுக்கொண்டு தன் எதிரே இருந்தவனை முழுமையாக அளவிட்டான். கல்லூரி மாணவன் போல் இருந்தான். அவனின் கண்களில் குடியின் அடையாளம் தெரிந்தது. அந்த இளைஞனின் கை ஒன்று இப்போது பைக்காரன் கையில் அகப்பட்டிருந்தது.

    அவனை அளவிட்டு முடித்து விட்டு "ஹ்ம்ம் சொல்லுங்க. சார் இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்ன என்ன வேலை செய்தீங்க?" என கேட்டவனின் கண்களில் கனல் தெறித்தது. ஆனால் பேச்சில் புயலை உள்ளடக்கிய அமைதி தெரிந்தது.

    ******
    அவன் பேசியதை கண்டுக் கொள்ளவே இல்லை. இப்போது தன் பார்வையை கான்ஸ்டபிள் மேல் வைத்தான்.


    அவர் அதனை புரிந்துக் கொண்டு "அதெல்லாம் ஸ்டேஷன் வந்து பேசிக்கோங்க. நீ கிளம்பும்மா!" என்றார்.

    அவரின் அதிகார குரலில் அந்த குடும்பமே மிரண்டது. அசையாமல் உட்கார்ந்திருந்தவனின் அருகில் ஓடி வந்த அந்த இளைஞன், "சார், சார் பிளீஸ் சார். எங்க அம்மாவை விட்டுருங்க சார். இனி எந்த பொண்ணுக்கிட்டேயும் தப்பா நடந்துக்க மாட்டேன் சார். எங்க அம்மா பாவம் சார். நான் தான் சார் கெட்ட உபதேசம் செய்த நண்பர்கள் கூட சேர்ந்து அப்படி செய்துட்டேன். அவனுங்க என்னை கேலி பண்ணவும் ஏதோ வேகத்தில் அந்த பொண்ணுக்கிட்ட அப்படி நடந்துக்கிட்டேன். தப்பு தான் சார். எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க. எங்க அம்மாவை இதில் இழுக்காதீங்க சார்" என்று தொடர்ந்து கெஞ்சினான்.

    ******
    அந்த நால்வரும் இவர்கள் அருகில் வந்து மூச்சு வாங்க நின்று "என்ன உனக்கு ஹீரோனு நினைப்பா தெனாவட்டா நிக்கிற?" என ஒருவன் கேட்க...


    இன்னும் ஒருவன் அந்த பெண் நின்றிருந்த பக்கம் போய்க் கொண்டே, "என்னமா உன்னை எவ்வளவு தூரம் துரத்துறது? இவன் பின்னாடி போய் நின்னுட்டா அப்படியே உன்னை பயந்து போய் விட்டுட்டு போயிருவோமாக்கும்?" என நக்கலாக சொல்லிக் கொண்டே அவனை தாண்டிப் போக போனான்.

    அவன் அவசரமே பட வில்லை. நான்கு பேரையும் கூர்ந்து பார்த்தான்.

    தன்னை தாண்டிப் போனவனை போக விடாமல் அவன் பக்கம் சட்டென திரும்பியவன் அவனின் கையை பிடித்து பின்னால் திருகி ஒரு சுழற்று சுழற்றினான்.
     
    Last edited by a moderator: May 29, 2018
  2. saravanakumari

    saravanakumari Administrator Staff Member Manager Manager Manager

    Joined:
    Nov 12, 2014
    Messages:
    2,261
    Likes Received:
    1,030
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    home maker
    Location:
    villupuram
    All the best for ur new story


    [​IMG]
     
    Ezhilanbu likes this.
  3. Ezhilanbu

    Ezhilanbu Well-Known Member

    Joined:
    Sep 21, 2017
    Messages:
    507
    Likes Received:
    829
    Trophy Points:
    93
    Gender:
    Female
    thank you:)
     
  4. malarmathi

    malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

    Joined:
    Feb 6, 2018
    Messages:
    392
    Likes Received:
    325
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Occupation:
    இல்லத்தரசி
    Location:
    கோவை
    வாழ்த்துக்கள் எழில்
     
    Ezhilanbu likes this.
  5. nimmi

    nimmi New Member

    Joined:
    Mar 10, 2018
    Messages:
    5
    Likes Received:
    4
    Trophy Points:
    3
    Gender:
    Female
    All the best for your new story waitingggggg
     
    Ezhilanbu likes this.
  6. Tamilvanitha

    Tamilvanitha Active Member

    Joined:
    Dec 26, 2017
    Messages:
    208
    Likes Received:
    158
    Trophy Points:
    43
    Gender:
    Female
    vazhthukkal ezil .
    super teaser . enaku pidicha hero prithvi , story hero name sollaliye. sekiram solidunga.
    eppo updates start seiveenga
     
    Ezhilanbu likes this.
  7. ramasamy6

    ramasamy6 New Member

    Joined:
    Aug 5, 2017
    Messages:
    6
    Likes Received:
    5
    Trophy Points:
    3
    Gender:
    Male
    welcome
     
    Ezhilanbu likes this.
  8. Ezhilanbu

    Ezhilanbu Well-Known Member

    Joined:
    Sep 21, 2017
    Messages:
    507
    Likes Received:
    829
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Thank you
     
  9. Ezhilanbu

    Ezhilanbu Well-Known Member

    Joined:
    Sep 21, 2017
    Messages:
    507
    Likes Received:
    829
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Thank you
     
  10. Ezhilanbu

    Ezhilanbu Well-Known Member

    Joined:
    Sep 21, 2017
    Messages:
    507
    Likes Received:
    829
    Trophy Points:
    93
    Gender:
    Female
    May month start pa
    Appo hero per theriyum
    Thank you
     

Share This Page