Politics NEWS TODAY(24.2.2020)

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Feb 24, 2020.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஜெயலலிதா 72ஆவது பிறந்தநாள் விழா: அதிமுக தலைமையகத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை


    அஇஅதிமுக பொதுச்செயலாளரும், மறைந்த தமிழக முதல்வருமான ஜெயலலிதா 72ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (பிப்.24) கொண்டாடப்படுகிறது.
    இதையடுத்து சென்னை அதிமுக தலைமையகத்தில் மறைந்த முதல்வர் ஜெயல‌லிதா சிலைக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பிறந்தநாள் விழா மலர் வெளியிடப்பட்டது.
    மேலும் லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தலைமைச் செயலகம் அருகே 72 'மகிழம்' மரத்தை நட்டு தொடங்கி வைத்தனர். மறைந்த முதல்வர் ஜெயல‌லிதாவின் பிறந்தநாளான இன்று மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை... அமைச்சர் கடம்பூர் ராஜு!

    அம்மா திரையரங்கத் திட்டம் நடைமுறைப்படுத்த அவசியம் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

    முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 72-வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சிவி சண்முகம், கே.பி. அன்பழகன் மற்றும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக நினைவிடம் ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், 'தமிழக அரசு மூலமாக ஆன்லைன் டிக்கெட் விற்பதற்கான பேச்சுவார்த்தைகள் திரைத்துறையினருடன் மூன்று கட்டமாக நடைபெற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் தமிழக அரசின் மூலம் ஆன்லைன் டிக்கெட் விற்பனை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதனால் டிக்கெட் கட்டணம் முறையாக கண்காணிக்கப்படும்' என்று தெரிவித்தார்.தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளாக மாற்ற திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விரைவில் அதற்கான அரசாணை வெளியிடப்படும். இந்த சூழலில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அம்மா திரையரங்கத் திட்டம் செயல்படுத்தத் தேவையில்லை என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் தனக்கென வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாமல் மக்களுக்காகவே வாழ்ந்தவர் என்றும் அவருடைய வாக்கு இன்று நிறைவேறி அதிமுக ஆட்சி சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. அம்மா எப்போதும் அவரது பிறந்த நாளை ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று கூறுவார். அவ்வாறு தற்போது நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறோம் என்றும் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

    திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பத்திரிகையாளர்கள் குறித்து பேசிய கருத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர், விரைவில் பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் அதன் மூலமாக பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் : எப்படிக் கொண்டாடுகிறார்கள் அதிமுகவினர் ?


    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாள், அதிமுகவினரால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமும் கடைப்பிடிக்கப்படுகிறது.

    சென்னை, பசுமைவழிச் சாலையில், தமது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் படத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

    ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளைக் குறிப்பிடும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம், தலைமைச் செயலகம் எதிரே உள்ள பூங்காவில் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பங்கேற்று மரச்செடிகளை நட்டுவைத்தனர்.அரசு இல்லங்களில் வாழும், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாத 21 வயதை நிறைவு செய்த பெண்களுக்கு தலா இரண்டு லட்சம் வழங்கும் திட்டம், குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் பெற்றோருக்கான மாத பராமரிப்புத் தொகையை உயர்த்தும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து ராயப்பேட்டையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா உருவச் சிலைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், மரியாதை செய்தனர்.

    72 கிலோ எடையில் அதிமுக கொடி வண்ணத்தில் தயாரிக்கப்பட்ட கேக்கை வெட்டி, முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொண்டனர்.

    ராயபுரத்தில் உள்ள அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மருத்துவமனையில் இன்று பிறந்த 7 பெண் குழந்தைகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் தங்க மோதிரம் பரிசளித்தார்.ஜெயலலிதாவின் பிறந்த நாளை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்நாளில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் உறுதிமொழி ஏற்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பள்ளிகளில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை செலுத்தி, கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து அதிமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

    மரக்கன்றுகள் வழங்குதல், அன்னதானம், மாணவர்களுக்கு பாடப்பொருட்கள் வழங்குதல் என மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை


    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், பல அதிமுக தலைவர்கள் ஜெலலிதா அவர்களின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஜெயலலிதாவின் 72-வது பிறந்த தினவிழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது!

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த தினவிழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் ஜெயலலிதாவின் உருவ சிலை மலர்களால் அலங்கராம் செய்யப்பட்டு இருந்தது.
    கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்கள். அமைச்சர்களும் மலர் தூவினார்கள்.
    அங்கு திரண்டிருந்த கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். அப்போது தொண்டர்கள் புரட்சித் தலைவி வாழ்க என்று கோ‌ஷம் எழுப்பினார்கள். ஜெயலலிதாவின் சாதனைகளை பறைசாற்றும் புத்தகத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டனர்.
    அதன்பிறகு தலைமைக் கழகத்தில் 72 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக் வெட்டப்பட்டது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் 'கேக்' வெட்டி நிர்வாகிகளுக்கு வழங்கினர். அப்போது கூடி நின்ற நிர்வாகிகள் 'அம்மா வாழ்க', புரட்சித் தலைவி புகழ் ஓங்குக' என்று கோ‌ஷம் எழுப்பினார்கள்.
    அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 109 பேருக்கு நலத்திட்ட உதவிகளும், நலிந்தோருக்கான நிதி உதவி 14 பேருக்கும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஓரங்கட்டப்படுகிறாரா ஓ.பி.எஸ்...? அதிமுக தலைமைக்கழகத்தில் மாஸ் காட்டிய இ.பி.எஸ்.


    சென்னை: ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சி அதிமுக தலைமைக்கழகத்தில் நடைபெற்ற நிலையில் அங்கு அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கியிருந்தது.
    கட்சியை பொறுத்தவரை அதாவது அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்ற தலைமைப் பதவியில் இருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். இவருக்கு அடுத்தபடியாக தான் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் என்ற அடிப்படையில் தான் அவர்கள் இருவர் இணைப்பு வைபவமே நடந்தது. ஆனால், கால ஓட்டத்தில் எல்லாமே மாறத்தொடங்கி இருப்பது ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை கதிகலங்க வைத்துள்ளது.
    ஜெயலலிதா 72-வது பிறந்தநாள் நிகழ்ச்சி அதிமுக தலைமைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியில் முதன்மை பொறுப்பு வகிக்கக்கூடிய ஓ.பி.எஸ். தான் தலைமை தாங்கியிருக்க வேண்டும். ஆனால் அங்கு நடந்தது எல்லாமே தலைகீழாக இருந்தது. அதிமுக சார்பில் ஏழை எளியோருக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அருகருகே நிற்க, அதிமுக தலைமைக்கழக அலுவலர் ராமச்சந்திரன் காசோலையை எடப்பாடி பழனிசாமியிடம் தான் தொடர்ந்து கொடுத்தார். அவர் அதனை வாங்கி பயனாளிகளுக்கு அளித்தார்.
    கட்சி புரோட்டகால் படி அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்திடம் தான் ராமச்சந்திரன் காசோலையை கொடுத்து பயனாளிகளுக்கு கொடுக்க சொல்லியிருக்க வேண்டும். இதனிடையே நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் தர்மசங்கடமான சூழலில் இருந்ததை கண்ட அங்கிருந்த நிர்வாகிகள் அது பற்றி தான் விவாதித்தனர். ஓ.பி.எஸ். அருகே நின்றுகொண்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமிக்கு, அதிமுக தலைமை அலுவலக ஊழியர் மீது அளவுகடந்த கோபம் ஏற்பட்டும் அதனை வெளிக்காட்டாமல் அமைதி காத்தார்.
    அண்மைக்காலமாக ஆட்சிக்கு இணையாக கட்சியிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மாஸ் கூடி வருகிறது. இதனிடையே இதை இப்படியே விட்டால் சரிவராது என ஓ.பி.எஸ்.சை உசுப்பிவிட்டுள்ளனர் அவரது ஆதரவாளர்களான முக்கிய முன்னாள் அமைச்சர்கள் சிலர். இதனால் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு பற்றியுள்ளது.
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஜெ. பிறந்த நாளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வீடியோ..! இணையத்தில் வைரல்..! #அம்மா


    சென்னை: புரட்சித் தலைவி அம்மா பிறந்த நாளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியேற்பு வீடியோ வைரலாகி இருக்கிறது.
    ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கும் நடைமுறையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
    அதிமுக தலைமைக்கழக விழாவில் ஜெயலலிதா பிறந்தநாள் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. மாநிலம் முழுதும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் தலைவியின் பிறந்தநாளை அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர்.
    பட்ஜெட் தொடரின் போது ஜெயலலிதா பிறந்தநாள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இது தொடர்பாக ஒரு வீடியோவை அஇஅதிமுக இணையபக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    [​IMG]
    AIADMK

    @AIADMKOfficial


    தமிழக மக்களே என் மக்கள் என வாழ்ந்த மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களது பிறந்தநாளை "மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக" கொண்டாட ஆணையிடப்பட்டுள்ளது - மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பேட்டி. #HBDAmma

    [​IMG]





    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொண்டர்களுக்கு உரையாற்றி இருக்கிறார்கள். எதிரிகளின் சூழ்ச்சியை முறியடித்து, அம்மா வழியில் தொண்டர்கள் வழிநடத்த வேண்டும் பேசி இருக்கிறார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் இந்த வீடியோ வைரலாகி உள்ளது.
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: தொண்டர்கள் உற்சாகம்

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டப்பட்டது.
    தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி டூவிபுரம் 7-வது தெரு மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் அதிமுகவினர் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
    அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாளை கொண்டாடினர்.
    இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முன்னாள் மாவட்டச் செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன் பி.ஏ.ஆறுமுகநயினார், மாநில அமைப்புசாரா ஓட்டுனரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் முள்ளக்காடு செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    மேலும், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் நடராஜன், மாவட்ட மகளிரணி செயலாளர் குருத்தாய் விவசாய சங்க தலைவர் சிவத்தையாபுரம் குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் அழகேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைசெயலாளர் சத்யா இலட்சுமணன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் வீரபாகு உட்பட திரளான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
     
  9. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    இதுவும் ஜெயலலிதா போல் இல்லையே: 'தலைவி' செகண்ட்லுக்கை கிண்டலடித்த நெட்டிசன்கள்


    இதுவும் ஜெயலலிதா போல் இல்லையே
    பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் 'தலைவி' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். மேலும் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமி நடித்து வரும் இந்த படம் வரும் ஜூன் 26-ம் தேதி ரிலீசாக உள்ளது
    இந்த நிலையில் இந்த படத்தின் ஜெயலலிதா குறித்த போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி நெட்டிசன்கள் கிண்டலுக்கு ஆளானது. ஜெயலலிதாவிற்கும் இந்த போஸ்டருக்கு சம்பந்தமே இல்லாமல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்தனர். இதனை அடுத்து இந்த படத்தின் அடுத்த போஸ்டர் அசத்தும் வகையில் இருக்க வேண்டும் என படக்குழுவினர் பணிசெய்து வந்தனர்
    இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'தலைவி' படத்தின் அடுத்த போஸ்டர் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த போஸ்டரிலும் கங்கனா ரனாவத் ஜெயலலிதா போல் இல்லை என்றும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். ஜெயலலிதாவுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும் இந்த போஸ்டரை எப்படி டிசைன் செய்தார்கள் என்று தெரியவில்லை என்ற ஆச்சரியத்தில் அனைவரும் மூழ்கி உள்ளனர்
    ஆனால் அதே நேரத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் நடித்த அரவிந்தசாமி கேரக்டர் அச்சுஅசலாக எம்ஜிஆர் போலவே இருந்தது என்பதும், அதனை நெட்டிசன்கள் பாராட்டவும் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
     
  10. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    வரலாற்றில் இன்று(24.02.2020)...தமிழகத்தின் அதிசயம் செல்வி.ஜெ. ஜெயலலிதா பிறந்த தினம் இன்று....


    தமிழக வரலாற்றில் சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஆண்கள் மட்டுமே களம் கண்ட தமிழக அரசியலில் தனிப்பெரும் சக்தியாய்.... வாழ்க்கையின் இறுதி நிமிடம் வரை போராடி வாழ்ந்து மறைந்தவர் செல்வி.ஜெ. ஜெயலலிதா. இத்தகைய இரும்பு பெண்மணியாய் திகழ்ந்த இவரை அம்மா... என்ற லட்சக்கணக்கணக்கான தொண்டர்களின் அன்புக்குரிய அழைப்பால் அழைக்கப்பட்டவர்.
    [​IMG]
    அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் அதுவரை தமிழகத்தில் கோலோச்சி இருந்த திமுகவையும், அதன் தலைவர் கருணாநிதியையும்.. ஒன்றல்ல.. இரண்டல்ல.. 13 ஆண்டுகள் அரசியல் வனவாசம் அனுப்பியவர் எம்ஜிஆர். அதேபோல் ஜெயலலிதாவும் கருணாநிதிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

    இத்தகைய ஆளுமையில் அவதாரமான முன்னால் தமிழக முதல்வர் செல்வி.ஜெ. ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் குறித்த சிறப்பு தொகுப்பு. பிறப்பு: ஜெ.ஜெயலலிதா பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி 1948 கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகாவில் உள்ள மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம்-வேதவல்லி இணையரின் மகளாக பிறந்தார். இவரது பெற்றோர்கள் தந்தை ஜெயராம்-தாய் வேதவள்ளி ஆவர், ஜெயலலிதாவின் மூதாதையர்கள் தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர்கள்.

    [​IMG]
    ஜெயலலிதாவுக்கு இரண்டு வயது ஆன பொழுதே அவர் தந்தை ஜெயராம் காலமானார். ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி. ஜெயலலிதாவின் தாத்தா அவ்வூரில் உள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தார். எனினும் அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த தாயார் வேதவல்லி தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார்.அவர் பெங்களூரில் இருந்தபோது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.

    திரைத்துறையில் ஜெயலலிதா:
    • 1964-ம் ஆண்டில் தமிழில் வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகமான பின்னர், அடுத்த ஓராண்டுக்குள் 23 படங்களில் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது அந்தக் காலத்தில் யாரும் நினைத்துப்பார்க்க முடியாத சாதனை அது.
    • அப்படியாக ஒப்புக் கொண்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் அவர் வெற்றிவிழா நாயகியாகக் கொண்டாடப்பட்டார். இதனால் இந்தியத் திரைத்துறையிலேயே மிக அதிக சம்பளம் பெறும் நடிகை என்ற சாதனையும் அவருக்கு சொந்தமானது.
    • அம்மா அவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் 28 படங்களிலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் 17 படங்களிலும் நடித்தார். இப்படியாக தமிழகத் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களின் படங்களை மொத்தமாக குத்தகை எடுத்துக் கொண்டார்.
    • தெலுங்கிலும் என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ் ஆகிய உச்ச நட்சத்திரங்களின் படங்களில் பெரும்பங்காற்றினார்.

      தெலுங்கில் நடித்த மொத்தப் படங்கள் 29, அதில் வெற்றிபடங்கள் 28, அவற்றில் என்.டி.ராமராவுடன் நடித்த படங்கள் மொத்தம் 12.
    • 1966-ம் ஆண்டில் 16 படங்கள், 1968-ம் ஆண்டில் மட்டும் 21 படங்கள் என அவர் திரைத்துறையில் அசுர உழைப்பைச் செலுத்தினார். அம்மா அவர்கள் நடித்தவற்றில் 77 திரைப்படங்கள் 100 நாள்களுக்கும் மேல் ஓடியவை. 18 திரைப்படங்கள் தொடர்ந்து 25 வாரங்களுக்கும் மேல் ஓடிய சாதனைக்கு உரியவை.
    • அதிலும் தமிழ்த் திரையுலகில் அவரது சாதனை மிகப் பெரியது, கதாநாயகியாக நடித்த 89 தமிழ்த் திரைப்படங்களில் 85 திரைப்படங்கள் வெள்ளி விழாக் கொண்டாடிய வெற்றிப்படங்களாக அமைந்தன. இதனால் இன்றைக்கும் தமிழ்த் திரையுலகின் மிக வெற்றிகரமான கதாநாயகி என்றால் அது ஜெயலலிதா மட்டும்தான்.
    அரசியல் அவதாரம்:
    • முதன்முதலில் கடந்த 1983 ஆம் வருடம் ஜெயலலிதாவை அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக்கி அழகு பார்த்தார் அதிமுகவின் தலைவர் எம்ஜிஆர்.

      அதையடுத்த ஒரு மாதத்தில் திருச்செந்தூர் இடைத்தேர்தல் பிரச்சாரப் பொறுப்பு ஜெயலலிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சூறாவளிப் பிரச்சாரம் செய்து அந்தத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமானார் ஜெயலலிதா.
    • அதனால், அதற்கு அவருக்கு அளிக்கப்பட்ட பரிசு ஜெயலலிதாவை ராஜ்யசபா உறுப்பினராக்கி டெல்லி பாராளுமன்றத்துக்கு அனுப்பினார் எம்ஜிஆர். 1989 ல் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினராகும் வரை ஜெயலலிதா அப்பதவியில் தொடர்ந்தார்.
    • 1984 ல் எம்ஜிஆர் தொடர்ச்சியான சிறுநீரகக் கோளாறு மற்றும் நீரழிவு நோயால் அவதியுற்று வந்தார். அவரால் அந்த உபாதைகளிலிருந்து முழுவதுமாக விடுபட முடியாமல் தொடர்ந்து மருத்துவமனையிலேயே இருக்க வேண்டியதானது.

      ஆனால் மக்கள் எம்ஜிஆரின் மீதும் அதிமுகவின் மீதும் இரட்டை இலையின் மீதும் கொண்ட நம்பிக்கை மற்றும் அபிமானத்தால் மீண்டும் தங்களது அபிரிமிதமான வாக்குகளை எம்ஜிஆருக்கே அளித்து அவரை முதல்வராக்கி அழகு பார்த்தார்கள்.
    • எம்.ஜி,ஆர். பதிவியேற்ற மூன்றே மாதங்களில் எம்ஜிஆர் மீண்டும் மருத்துவமனை சிகிச்சையில் ஆழ்ந்து போனார். நியூயார்க் புரூக்ளின் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்ட போதும் இந்தியா திரும்பிய பின் 1987 டிசம்பர் 24 ஆம் நாள் உடல்நலக் குறைபாடு காரணமாக இவ்வுலகை விட்டு மறைந்தார்.
    • அவரது மறைவையொட்டி தமிழகமெங்கும் கலவரம் வெடித்தது. இறுதி ஊர்வலத்தில் சுமார் 10 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.

      30க்கும் மேற்பட்ட எம்ஜிஆரின் தீவிர ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இறுதி ஊர்வலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் பலியாகினர்.
    • ராஜாஜி மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக கிடத்தப்பட்டிருந்த எம்ஜிஆர் உடலுக்கு அருகே தலைமாட்டில் தொடர்ந்து 21 மணி நேரங்கள் நின்று கொண்டே இருந்த ஜெயலலிதாவுக்கு அங்கிருந்த ஜானகி ஆதரவாளர்களால் சொல்லவொண்ணாத அவமானங்கள் நேர்ந்தன.
    • ஆனாலும் மனமுடையாது தனது அரசியல் குருவின் சடலத்தின் அருகே அசையாச் சிலையென நின்றிருந்தார் ஜெயலலிதா. எம்ஜிஆர் உடல் இறுதிப் பயணத்துக்காக ராணுவ வாகனத்தில் ஏற்றப்படுகையில் ஜெயலலிதாவும் உடன் செல்ல விரும்பி வாகனத்தில் ஏற முயற்சித்தார். அப்போது ஜானகியின் உறவினர் ஒருவர் ஜெயலலிதாவை நோக்கி காலால் உதைத்து மிக மோசமான வசைச் சொல் ஒன்றை அவரை நோக்கி உதிர்த்தார்.

      அதை கண்டு ஜெயலலிதா திகைத்து நிற்க, கலவரமான சூழலை சமாளிக்க ஜெயலலிதாவை அங்கிருந்து அப்புறப்படுத்தி வீட்டுக்கன்னுப்ப வீடு வரை துணை வந்தனர் காவலர்கள்.
    முதல்வராக அமர்ந்த கதை: எம்ஜிஆர் மறைவின் பின் திருமதி. ஜானகி எம்.ஜி.ஆர் இடைக்கால முதல்வரானார். ஆனால் ஜானகி அரசை எதிர்த்து 'ஜனநாயகப் படுகொலை' என ஜெயலலிதா ஆளுநரிடம் மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட நிலவரம் கலவரமாகி ஜானகி அரசு கலைக்கப்பட்டது. அதன் காரணமாகவே ஜெயலலிதாவின் தேர்ந்த அரசியல் காய்நகர்த்தல்களின் முன் அவர் தோற்றுப் போனார்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிளவுபட்டது. 'ஜெ' தலைமையில் ஓரணியும், 'ஜா' தலைமையில் ஓரணியுமாக இரு அணியினரும் கட்டிப் புரண்டு சண்டையிடாத குறையாக இருந்தனர். இம்முறை ஜா அணியை பின்னுக்குத்தள்ளி மக்களது ஏகோபித்த ஆதரவைப் பெற்றது ஜெ அணி. போடிநாயக்கனூர் தொகுதியில் வென்று எதிர்க்கட்சித் தலைவியாக முதன்முதலில் சட்ட சபைக்குள் நுழைந்தார் ஜெயலலிதா.

    தமிழக அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சித் தலைவராக ஒரு பெண் அமர்வது இதுவே முதல்முறை. அந்த வெற்றி மட்டுமல்ல, ஒரே மாதத்தில் தனக்கு எதிராக இருந்த ஜானகி அணியையும் சாம, பேத, தான, தண்ட முறைகளில் ஒன்றிணைத்து தனது தலைமையின் கீழ் ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்கினார் ஜெயலலிதா. பிரிவினையின் போது முடக்கப்பட்ட கட்சியின் இரட்டை இலைச் சின்னமும் திரும்பப் பெறப்பட்டது. பின் தனது தொடர்ச்சியான அயாரத உழைப்பாள் பல வெற்றிகளை பெற்று பலகோடி தொண்டர்களைக் கட்டி ஆண்டார்.

    இவர் இதுவரை,
    • 24-06-1991 - 12-05-1996 வரை முதல்முறையாக முதல்வராகப் பதவி வகித்தார்.
    • 14-05-2001 - 21-09-2001 (இரண்டாம் முறை முதல்வரான போது டான்ஸி வழக்கில் பதவியிழக்க அவருக்குப் பதிலாக ஓ.பன்னீர் செல்வம் 21-09-2001 - 01-03-2002 வரையிலுமான காலகட்டத்தில் முதல்முறை முதல்வரானார்)
    • 02-03-2002 - 12.05-2006 மூன்றாவது முறை முதல்வரானார்.
    • 16-05-2011 - 27-09-2014 நான்காவது முறை முதல்வரானார் ( சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறை செல்ல நேர்ந்ததால் மீண்டும் ஓ.பன்னீர் செல்வம் 29-09-2014 - 22-05-2015 வரை இரண்டாம் முறை தமிழக முதல்வரானார்.
    • 23.-05-2015 - 23-05-2016 வரை ஐந்தாம் முறை தமிழக முதல்வரானார்
    • 23-05-2016 - 05-12-2016 வரையிலான காலகட்டத்துக்கு மீண்டும் ஆறாவது முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    அவரது மரணச் செய்து கேட்டு அவர்கள் வெளிப்படுத்திய கட்டுக்கடங்காத அழுகையொலி உறுதிப்படுத்தியது. இவருக்கு, காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைபாடு என்ற காரணங்களுக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்பு 2016 டிசம்பர் 5-ஆம் தேதி அன்று இரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் என்று அறிவிக்கப்பட்டது.
    [​IMG]
    தன்னைச் சுற்றி எப்போதும் பகைமை இருந்தபோதிலும் தனி ஒரு நபராய் அவற்றைக் கண்டு அஞ்சாமல் தான் வாழ்ந்த காலம் முழுதும் துணிச்சலான சாதனைப் பெண்ணாக, நிகரற்ற அரசியல் தலைவியாக, பெண்களுக்கு முன் மாதிரியாக வாழ்ந்து மறைந்தவர் ஜெயலலிதா. இன்று ஜெயலலிதா மறைந்திருக்கலாம் ஆனால் அவர் என்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்!
     

Share This Page