Politics NEWS TODAY(24.2.2020)

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Feb 24, 2020.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஜெயலலிதாவின் 'தலைவி' படத்தில் இணைந்த 'காப்பான்' நடிகை


    பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்து வரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற உள்ளது என்றும் வரும் மார்ச் இறுதிக்குள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது
    இந்த நிலையில் இந்த படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமியும் சோபன்பாபு கேரக்டரில் வங்காள மொழி நடிகர் ஒருவரும் நடித்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே இதனை அடுத்து தற்போது புதியதாக இந்த படத்தில் பிரபல நடிகை பூர்ணா இணைந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு வெளியான சூர்யா, ஆர்யா, நடித்த 'காப்பான்' திரைப்படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பல தமிழ் திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
    [​IMG]
    'தலைவி' திரைப்படத்தில் யாருடைய கேரக்டரில் பூர்ணா நடித்து வருகிறார் என்பது குறித்து ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தாலும் இவர் வெண்ணிற ஆடை நிர்மலா கேரக்டரில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா ஆகிய இருவரும் 'வெண்ணிற ஆடை' என்ற படத்தில் ஒரே நேரத்தில் அறிமுகம் ஆனார்கள் என்பதும் பின்னாளில் வெண்ணிற ஆடை நிர்மலாவும் அரசியல்வாதியாக ஜெயலலிதாவுக்கு எதிராக அரசியல் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சிஏஏ விவகாரத்தில் நாடகமாடும் அதிமுக. ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு!


    குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முதல்வரும், துணை முதல்வரும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை, யாரை ஏமாற்றுவதற்கான நாடக ஒத்திகை என்று, திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
    இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து, இன்று நாட்டையே கிளர்ச்சிக்களமாக்கி, ஒற்றுமைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறார். இப்போது சிறுபான்மையினருக்கு எதிரான எந்த ஒரு செயலையும் அதிமுக அரசு செய்யாது என்று ஒபிஎஸ்- இபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். இது, குதிரை கீழே தள்ளியது மட்டுமின்றி குழியும் பறித்த கதையாக இருக்கிறது.
    குடியுரிமை திருத்த சட்டத்தின் பாதகங்களை வாக்களிக்கும் முன்பு முதல்வர் படிக்கவில்லை. கண்ணை மூடிக்கொண்டு பாஜகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற செயல்பட்டுள்ளார்.
    என்பிஆர் விவரங்கள் ஆவணங்கள் ஏதுமின்றி பதிவு செய்யப்படுவதாக, அமைச்சர் உதயகுமார் சட்டசபையில் கூறினார். ஆனால், இப்போது , தாய்மொழி, தந்தை, தாயார் பெயர், பிறந்த இடம், பிறந்த தேதி ஆகியவற்றைத் தவிர்க்கலாம் என்பதோடு மட்டுமின்றி, ஆதார், கைபேசி எண், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகிய ஆவணங்களைக் கேட்க வேண்டாம் என்று கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாக கூட்டறிக்கையில் கூறியிருக்கிறார்கள்.
    என்பிஆர் விவகாரத்தில் முதல்வருக்கும் அமைச்சர் உதயகுமாருக்குமே கருத்தொற்றுமை இல்லை, புரிதலும் இல்லை என்று இதன்மூலம் தெரிகிறது.
    குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை விவாதம் நடத்தாமலேயே நிராகரித்து, என்பிஆர்-ஐ அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கையையும் ஏற்க மறுத்து, இப்போது மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம் என்பது யாரை ஏமாற்றுவதற்கான நாடக ஒத்திகை?
    இப்போதாவது என்பிஆரை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்து, இன்றே அமைச்சரவையை கூட்டி குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
     

Share This Page