Sadhguru questions and answers

Discussion in 'Celebrity Speech' started by malarmathi, Mar 10, 2018.

 1. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  411
  Likes Received:
  332
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  கேள்வி :
  ஈஷா யோகா வகுப்பின் போது எங்களுக்கு இயற்கை உணவுகளின் செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டது. நான் இயற்கை உணவுமுறைக்கு மாறிவிடுவதற்கு ஆவலாய் இருக்கிறேன். எது சரியான காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என்று நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்….


  சத்குரு:
  சரியான உணவு என்று நீங்கள் சுவையைப் பற்றிச் சொன்னால், நீங்கள் போக வேண்டிய இடம் வேறு…(அனைவரும் சிரிக்கிறார்கள்)


  சத்குரு:
  காலை உணவை சீக்கிரம் தயாரியுங்கள்


  ஓ! இயற்கை உணவா? அப்படியென்றால் சரி. சரியான காலை உணவு என்பது உடலுக்கு மட்டுமல்லாமல், உங்கள் வீட்டுச் சூழ்நிலை, சமுதாயம் ஆகியவற்றுக்கும் ஒத்து வருவதாக இருக்கவேண்டும். அவர்களை உணவை தயாரிப்பதையும், சாப்பிடுவதையும் வேடிக்கையாகவும் சந்தோஷமாகவும் செய்யுங்கள். அதை ஒரு சீரியஸான விஷயமாக ஆக்காதீர்கள். உங்களால் நூறு சதவிகிதம் ஒதுக்கி வைத்துவிட முடியாது. ஏனென்றால் நீங்கள் தனித்து வாழவில்லை, அவர்களுடன்தான் வாழ்கிறீர்கள். காலை உணவு விரைவாக முடிந்ததென்றால், வீட்டில் உள்ள அனைவருக்குமே நல்லதுதான். குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு. காலை உணவை மூன்று அல்லது ஐந்து நிமிடங்களுக்குள் தயாரித்துவிட முடிந்தால், அது அற்புதமானதுதானே? அப்போது காலை வேளைகள் மிகவும் ஆனந்தமாக இருக்கும். ஆனால் பெரும்பாலான வீடுகளில் காலை வேளைகளை மிகவும் டென்ஷனோடு துவக்குவதைப் பார்க்கிறேன். ஏனென்றால் காலை உணவைத் தயாரிப்பதற்கே இரண்டு மணி நேரம் ஆகிறது. கணவர் ஏழு மணிக்கு எழுந்திருக்கிறார். குழந்தை எட்டு மணிக்கு பள்ளிக்கூடம் போக வேண்டும், இந்த நேரக் கணக்கே ஒத்து வருவதில்லை, இல்லையா?

  சத்தான நிலக்கடலை:

  ஒரு வழியாகக் கணவனும், குழந்தைகளும் வெளியே கிளம்பிப் போனவுடன், ‘அப்பாடா! பிசாசுகள் வெளியே கிளம்பிவிட்டன!’ என்று மனைவிகள் பெருமூச்சு விடுகிறார்கள். ஆமாம், அப்படித்தான் ஆகிவிட்டது. நீங்கள் ஒரு வேலை செய்யலாம். முந்திய தினம் இரவே தேவையான அளவிற்கு நிலக்கடலை ஊற வையுங்கள். அடுத்தநாள் அதை எடுத்து, மிக்ஸியில் போட்டுக் கொள்ளுங்கள். ஆஸ்துமா இல்லாதவர்கள் அதனுடன் ஒரு வாழைப் பழத்தையும் போட்டுக் கொள்ளலாம். ஆஸ்துமா இருப்பவர்கள் சப்போட்டா அல்லது மாம்பழம் இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளலாம். விருப்பமிருந்தால் இதில் தேனையும் சேர்த்துக் கொள்ளலாம். தேன் மிகவும் நல்லது. அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். இது அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பால் போல அருந்தலாம் அல்லது கெட்டியாக கஞ்சி போலவும் குடிக்கலாம். இனிப்பு வேண்டாம் என்று நினைப்பவர்கள் இதனுடன் உப்பும், மிளகும் சேர்த்து காரமாகவும் அருந்தலாம்.

  ஆனால் இந்த அத்தனை விஷயங்களும் வெறும் மூன்றே நிமிடங்களில் முடிந்துவிடும். இதைக் குடிப்பதற்கு கூடுதலாக இரண்டு நிமிடங்கள் ஆகலாம். ஐந்து நிமிடங்களில் காலை உணவே முடிந்துவிடும். மீதமிருக்கும் நேரத்தில் அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து பேசலாம் அல்லது உங்களுக்கு விருப்பப்பட்டதைச் செய்யலாம். இதனால் உங்கள் வாழ்க்கையும் மிக எளிமையாக இருக்கும். இந்த உணவு தாராளமாக நான்கைந்து மணி நேரம் தாக்குப்பிடிக்கும். மேலும் இதனால் உங்கள் வயிறும் மிக லேசாக இருப்பதால், அலுவலகத்தில் தூங்காமல், உற்சாகத்துடனும் அமைதியுடனும் வேலை செய்வீர்கள்.

  ஹோட்டல்களிலும் இயற்கை உணவு அல்லது இது உங்களுக்குப் போதுமானதாக இல்லையென்றால், நீங்கள் விரும்பினால் அதனுடன் கொஞ்சம் பழங்களோ அல்லது சாலட்டோ சாப்பிடலாம். முளை கட்டிய தானியங்கள், பயறு வகைகள், கேரட் போன்றவற்றை நீங்கள் விரும்பிய வகையில் கலந்து சாப்பிடலாம். அது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. எந்த விகிதத்தில் வேண்டுமானாலும் மாற்றி மாற்றிக் கலந்து சாப்பிடலாம். உங்கள் கற்பனைத் திறனைக் கூட்டி, குறைத்து, பல வழிகளில் அதைத் தயாரிக்கலாம். இப்போதெல்லாம் ஹோட்டல்களிலும், மற்றவர்களும் பலவிதமான வழிகளில் இயற்கை உணவைச் சமைக்கிறார்கள், பார்த்திருக்கிறீர்களா? பல ஹோட்டல்களில் முழுமையான இயற்கை மதிய உணவு வழங்கப்படுகிறது, தெரியுமா? உங்களுக்கு வேண்டுமானால் அங்கு சென்று எப்படி செய்கிறார்கள் என்று பார்த்து வாருங்கள். காய்கள், பழங்களை பலவிதமான வடிவங்களில்தயார்படுத்தி வழங்குகிறார்கள். ஏனென்றால் இப்படி பலவிதமான வடிவங்களில் இருந்தால் குழந்தைகள் அதை மிகவும் விரும்புவார்கள்.

  மிக்கி மௌஸ் போல காய்கறிகளை வெட்டி வைத்தால், குழந்தை கண்டிப்பாக சாப்பிடும், இல்லையா? இப்படி பல வழிகளில் உங்களால் இயற்கை உணவை தயார் செய்து கொடுக்க முடியும். இப்படி உணவை தயாரிப்பதையும், சாப்பிடுவதையும் வேடிக்கையாகவும் சந்தோஷமாகவும் செய்யுங்கள். அதை ஒரு சீரியஸான விஷயமாக ஆக்காதீர்கள். நிலக்கடலை என்பது மிகவும் திடமான ஒரு உணவு. மற்ற பழங்களையும், காய்கறிகளையும், இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். வயிறு மிகவும் லேசாக இருந்தால், நீங்களும் விழிப்புடன், சந்தோஷமாக, அமைதியாக இருந்து உங்கள் வேலைகளைப் பார்ப்பீர்கள். பிறகு ஒரு மணியளவில் நீங்கள் மதிய உணவைச் சாப்பிடலாம்.

  சமைத்த உணவை ஒருவேளையாவது சாப்பிட வேண்டும் என்று நீங்கள் நினைப்பவராக இருந்தால், அதை மதிய நேரத்தில் சாப்பிட்டுக் கொள்ளலாம். பச்சைக் காய்கறிகளுடன் சாம்பார், ரசம் என்று வேண்டியதை சாப்பிட்டுக் கொள்ளலாம். பொறியல் என்ற பெயரில் காய்கறிகளையெல்லாம் கொன்றுவிடுகிறீர்கள். அதற்கு பதிலாக பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். சமைத்த உணவுடன் என்ன சேர்த்து சாப்பிடுவது? சமைத்த உணவுடன், நிறைய பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிடுங்கள்.

  கேரட் ஜூஸ் போன்றவையெல்லாம் உங்களுக்கு மிகவும் நன்மை தரக் கூடியவை. குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு அவை மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். உங்கள் குழந்தை மிகவும் புத்திசாலியாக, மிகவும் விழிப்புள்ளவனாக இருப்பான். நீங்கள் அவனுக்குத் தயிர் சாதத்தைப் போட்டுவிட்டு, ‘ஏன் 90 மார்க் வாங்கவில்லை?’ என்று அடித்தால், என்ன செய்வது, சொல்லுங்கள்? அவனால் எப்படி முடியும்? தயிர் சாதம் சாப்பிட்டும் அவன் 90 மார்க் வாங்குகிறான் என்றால் அவன் மிகவும் புத்திசாலிதான்! உங்கள் குழந்தைகளுக்கு சரியான உணவுகளைக் கொடுத்துப் பாருங்கள், பல பிரச்சனைகள் சரியாகிவிடும். சரியான உணவுமுறையைக் கொண்டு வந்தாலே வீட்டிலிருக்கும் பல பிரச்சனைகள் தாமாகவே சரியாகிவிடும். வீட்டிற்குள் வேண்டாம் உணவுப் புரட்சி! அதேநேரம், வீட்டுக்குள் ஒரு உணவுப் புரட்சியை ஏற்படுத்திவிட முயற்சிக்காதீர்கள்.

  அது நீடித்து நிலைக்காது. படிப்படியாக, மெதுமெதுவாக அதைப் பழக்குங்கள். வீட்டிலிருப்பவர்கள் விரும்ப ஆரம்பித்தவுடன், இயற்கை உணவை உள்ளே நுழையுங்கள். அனைவரும் அதைத்தான் சாப்பிடவேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், அவர்கள் அதை வெறுப்பார்கள். அந்த சூழ்நிலையை சரியாகக் கையாள வேண்டும். எப்போதுமே இரவில் பழங்களும், காய்கறிகளும் சாப்பிட்டுவிட்டு படுப்பது நல்லது. ஆனால் அது உங்களுக்குப் போதாது என்று நினைத்தால், நீங்கள் உடலளவில் அதிகப்பணி செய்யும் மனிதராக இருந்தால், அதனுடன் முளை கட்டிய தானியங்கள், பச்சைக் காய்கறிகளுடன் கொஞ்சம் தேன், இரண்டு, மூன்று எண்ணையில்லாத சப்பாத்தி இவற்றைச் சாப்பிடலாம். சாப்பாத்தியின் மேல் கொஞ்சம் எண்ணையோ அல்லது நெய்யோ ஊற்றிக் கொள்ளலாம். சப்பாத்திகளை கடையில் வாங்காமல் தயாரித்து சாப்பிடுங்கள்.

  ஒரு நாளில் ஒரு வேளை அரிசி சாதம் சாப்பிட்டால் இன்னொரு வேளை நார்சத்து மிகுந்த வேறெதாவது தானியங்களைச் சாப்பிடுங்கள், இதுதான் சாப்பிடுவதற்கு சிறந்த வழி. மேலும் கோதுமையை எப்போதும் மாவாக வாங்காதீர்கள். முழு கோதுமையாக வாங்கி மாவு மில்லில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் சப்பாத்தி, கொஞ்சம் அரிசி, நிறைய காய்கறிகள், பழங்கள், ஊற வைத்த கடலை, முளை கட்டிய தானியம் என்று சாப்பிடுங்கள். முளை கட்டிய தானியங்களை தினம்தோறும் உணவில் சேர்த்து வந்தால், அது மிகச் சிறந்த பலன்களைக் கொடுக்கும். இதுதான் சரியான உணவுமுறை என்று பெரும்பாலும் நம்மால் சொல்ல முடியும்.
   
  kani _mozhi likes this.
 2. kani _mozhi

  kani _mozhi Active Member

  Joined:
  Feb 12, 2018
  Messages:
  274
  Likes Received:
  169
  Trophy Points:
  43
  Gender:
  Female
  மரணத்தைப் பற்றி குழந்தைகளுக்குச் சொல்லலாமா?

  ‘மரணம்’ என்ற வார்த்தையைக் கூடப் பலரும் கேட்கத் தயாராக இல்லாத நிலையில், மரணத்தைப் பற்றி குழந்தைகளுக்கும் சொல்லித்தர வேண்டும் என்று சத்குரு சொல்வது சற்று அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், இந்த கட்டுரையின் இறுதியில் அதிர்ச்சி நீங்கி, மரணம் குறித்த தெளிவான பார்வை கிடைப்பது நிச்சயம்! கேள்வி எனது மகனால் அவனது தாத்தாவின் மரணத்தை ஜீரணிக்க முடியவில்லை. இதை நான் எப்படிக் கையாள்வது? சத்குரு: மரணம் ஒரு ஆச்சரியம் அல்ல. நீங்கள் இறப்பீர்களா, இல்லையா என்று தெரிந்துகொள்ள அபாரமான புத்திசாலித்தனமோ, ஆராய்ச்சியோ அல்லது ஆழ்ந்த படிப்போ தேவையில்லை.

  ஒவ்வொரு மனிதனும் பிறந்த அதே கணத்தில் மரணமும் பிறந்துவிட்டது. உங்களுக்கு நான்கு அல்லது ஐந்து வயதாக இருக்கும்போதாவது, நீங்கள் மரணமடைவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா? இது தெரிந்திருந்தாலும், நீங்கள் எதுவும் செய்யவில்லை. இறுதி சடங்குகள் முடிந்த பின்னர்தான் நீங்கள் ஏதாவது செய்ய நினைக்கிறீர்கள். மரணத்தை இதைப் போல திடீரென்று கையாள்வது என்பது முடியாத காரியம். உங்கள் மரணத்தைப் பற்றி உங்கள் குழந்தைகளிடம் பேசுவது நல்லதுதான் இது அந்த நொடியில் கையாளக் கூடிய விஷயம் இல்லை. யாரோ ஒருவர் அவருக்கு மிக நெருக்கமான ஒருவரை இழந்துவிட்டால், நீங்கள் அதை தத்துவப்பூர்வமாக அணுகி, உடல் மட்டும்தான் இறக்கிறது, ஆத்மா இறப்பதில்லை, அதனால் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று உபதேசித்தால், அது அவரை இன்னும் காயப்படுத்தும். இதையெல்லாம் அவர்களுக்கு அந்த நேரத்தில் சொல்லக் கூடாது. இவற்றையெல்லாம், ஒரு மனிதனின் வாழ்வின் ஆரம்ப நிலையிலேயே எடுத்துச் சொல்ல வேண்டும், மரணம் நிகழ்ந்த பிறகு கூறக் கூடாது.

  மக்கள் மரணம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்குத் தெரியாது என்றில்லை, ஆனால் அவர்கள் இதைக் குறித்து பேசினாலே கண்களை மூடிக் கொள்வார்கள். மரணத்தை திறந்த கண்களுடன் பார்ப்பதுதான் நல்லது. அதை உங்கள் வாழ்விலும், உங்கள் குழந்தைகளின் வாழ்விலும் முன்னதாகவே அறிமுகப்படுத்திவிட வேண்டும். “மரணம் என்பது ஒரு இயற்கைச் செயல், அது கண்டிப்பாக நடந்தேதான் தீரும். அது அழிவு அல்ல; இயற்கையின் ஒரு செயல்பாடு” என்பதை குழந்தைகளுக்கு நினைவுபடுத்துங்கள். உங்கள் மரணத்தைப் பற்றி உங்கள் குழந்தைகளிடம் பேசுவது நல்லதுதான்; அவர்களது பெற்றோர் ஒரு நாள் இறந்துவிடுவார்கள் என்று அவர்களுக்குத் தெரிவது மிகவும் நல்லது. 25 வருடங்கள் கழித்து இறப்பதற்குப் பதிலாக, நாளையே நீங்கள் இறந்துவிட்டால், குழந்தைகளால் தங்கள் வாழ்க்கையை தாங்களே சமாளித்துக் கொள்ளமுடியும். நாளை நீங்கள் மறைந்துவிட்டாலும், உங்கள் குழந்தைகள் தன்மையான, சமநிலையான வாழ்க்கையை வாழ்வதை நீங்கள் விரும்பவில்லையா? இல்லை நீங்கள் மறைந்துவிட்டால், அவர்களும் அழிந்து விடவேண்டுமா? எந்த வழியில் நீங்கள் குழந்தைகளை வளர்க்க விரும்புகிறீர்கள்? நாளை நீங்கள் காணாமல் போனாலும், அவர்கள் தங்கள் வாழ்க்கையை நல்ல முறையில் தொடர வேண்டும், இல்லையா? அவர்களை மரணத்துடன் பரிட்சயப்படுத்தாவிட்டால், அவர்களால் உங்களுக்குப் பின் ஏதும் செய்ய இயலாது. மரணம் உங்கள் குடும்பத்தில்தான் நடக்க வேண்டும் என்றில்லை. அது ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவருக்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

  அது உங்களுக்கும், எனக்கும் நடக்காது என்பது என்ன நிச்சயம்? அதை நாம் விரும்பாவிட்டாலும், அதை நாம் அழைக்காவிட்டாலும், கண்டிப்பாக அது நடக்கும், ஆனால் அது நடந்தாலும், நாம் சுகமாக முன்னேறிச் செல்லலாம். இதனால் வாழ்வில் நீங்கள் மரணத்தை எதிர்கொள்ளும்போது உங்களுக்கு அன்பானவர்களை பிரிந்து வருந்தமாட்டீர்கள் என்றோ அல்லது சாதாரண மனித உணர்ச்சிகள் உங்களுக்கு இருக்காது என்றோ அர்த்தமில்லை. உங்களுக்கு இதெல்லாம் இருந்தாலும், அது உங்களுக்குள் பேரழிவை ஏற்படுத்தாது. அதை நீங்கள் விழிப்புணர்வோடு கையாள முடிந்தால், உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எல்லாமும் உங்களை இன்னும் வளப்படுத்தும். நீங்கள் விழிப்புணர்வில்லாமல் இருந்தால், எல்லாமே எப்போதுமே பிரச்சனைதான். அவர்கள் உயிரோடிருந்தாலும், இறந்தாலும் பிரச்சனைதான், இல்லையா? எனவே, நெருக்கமானவர்கள் இறந்தால், நீங்கள் உங்கள் எல்லைகளைத் தாண்டி பிரம்மாண்டமாக வளர்வதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால் அதை நீங்கள் உங்களை அழித்துக்கொள்ளப் பயன்படுத்துகிறீர்கள். உங்களுக்கு மிக நெருக்கமானவர் இறக்கும்போது, – நீங்கள் பெரிய விலை கொடுக்கிறீர்கள், ஆனால் அதை உங்கள் நன்மைக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா? கண்டிப்பாக வேண்டும். நீங்கள் விழிப்புணர்வோடு இருந்தால், அதிலிருந்து நீங்கள் வெகுவாக பயன்பெறுவீர்கள்.

  ------சத்குரு
   
 3. kani _mozhi

  kani _mozhi Active Member

  Joined:
  Feb 12, 2018
  Messages:
  274
  Likes Received:
  169
  Trophy Points:
  43
  Gender:
  Female
  உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று சத்குரு கூறுவதன் அர்த்தம் என்ன?

  உங்களை முழுமையாக கொடுப்பது என்றால், நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் இருப்பது, அல்லது குறிப்பிட்ட செயல்களைச் செய்வது என்று அர்த்தமல்ல. நீங்கள் எங்கிருந்தாலும் உங்களை முழுமையாகக் கொடுக்க முடியும்.எங்கிருந்தாலும் நீங்கள் ஈஷாவை உணர முடியும். ஈஷா என்றால் எல்லையில்லாத இறைத்தன்மை என்றுதான் அர்த்தம். நீங்கள் குடும்ப சூழ்நிலையில் இருந்தாலும் அதையும் நீங்கள் உங்கள் இறைத்தன்மையை உணர்வதற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். அல்லது வியாபாரத்தில் இருக்கிறீர்கள் என்றால், அந்த சூழ்நிலையையும் நீங்கள் உங்கள் இறைத்தன்மையை உணர்வதற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

  இப்படி உங்கள் வாழ்வில் ஒவ்வொன்றும், உங்கள் குடும்பம், உங்கள் வேலை, உங்கள் வாழ்க்கை போன்ற எல்லாமும் உங்கள் உணர்தலை நோக்கியே இருக்கும் என்றால், பிறகு நீங்கள் உங்களை ஈஷாவிற்கு அர்ப்பணித்ததாகக் கொள்ளலாம். இன்று ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள், நாளை வேறு மாதிரி இருப்பீர்கள் என்றால், பிறகு வாழ்க்கை என்பது என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றே பொருள்.

  -சத்குரு
   

Share This Page