SPORTS NEWS

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Jan 31, 2019.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    3,850
    Likes Received:
    351
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஸ்பாட் பிக்சிங்: ஸ்ரீசாந்த் நடத்தை சரியாக இல்லையே- உச்ச நீதிமன்றம் கருத்து

    ஸ்பாட் பிக்சிங் செய்ய தன்னை அணுகினால் உடனடியாக பிசிசிஐ-யிடம் ஸ்ரீசாந்த் புகார் தெரிவிக்க வேண்டியதுதானே ஏன் அவர் செய்யவில்லை? அவரது நடத்தை நன்றாக இல்லையே என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தடையை கேரள நீதிமன்றம் ரத்து செய்திருந்தது, இதனை எதிர்த்து பிசிசிஐ வழக்குத் தொடர நீதிமன்றம் தன் ரத்து உத்தரவை நீக்கியது, இதனையடுத்து ஸ்ரீசாந்த் மீதான ஆயுள் தடை மீண்டும் அமலுக்கு வந்தது.
    இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தன் தடையை நீக்க வேண்டும் என்று ஸ்ரீசாந்த் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
    அப்போது ஸ்ரீசாந்த் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சல்மான் குர்ஷித், “2013 ஐபில் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் அணிக்கு இடையிலான போட்டியில் ஸ்பாட் பிக்சிங் நடந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஸ்பாட் பிக்சிங்குக்காக அவர் தொகை பெற்றதாகவும் ஆதாரமில்லை” என்றார்.
    இதனையடுத்து நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அசோக் பூஷன் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, “ஸ்பாட் பிக்சிங்கிற்கு அணுகினார்கள் என்றால் ஏன் ஸ்ரீசாந்த் உடனடியாக பிசிசிஐ-க்கு இதனைத் தெரிவிக்கவில்லை?” என்றார்.
    இதனையடுத்து மூத்த வழக்கறிஞர், ஸ்ரீசாந்த் பிசிசிஐ-யிடம் உடனடியாகத் தெரிவிக்கவில்லை, அப்படி அவர் பிசிசிஐ-யிடம் தெரிவிக்காவிட்டாலும் அதிகபட்சத் தடை 5 ஆண்டுகள் விதிக்க முடியும்.
    இதனையடுத்து நீதிபதிகள் அமர்வு, “இவையெல்லாம் எதைக்காட்டுகிறது என்றால் ஸ்பாட் பிக்சிங்கில் ஸ்ரீசாந்த் நடத்தை சரியல்ல, இதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்பதே” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
    இதற்குப் பிறகு பிறநாடுகளில் விளையாட தனக்கு அழைப்பு இருப்பதாகவும் இந்த வாழ்நாள் தடையினால் தன்னால் கிரிக்கெட் ஆட முடியாமல் போகிறது என்றும் தனக்கு விதிக்கப்பட்ட தடை நிறுவப்படாத ஆதாரங்களினால் அளிக்கப்பட்டுள்ளது எனவே தனது மாண்பைக் காப்பாற்றவாவது தடையை நீக்குமாறு ஸ்ரீசாந்த் தரப்பில் வாதிடப்பட்டது.
    இதனையடுத்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 20ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    3,850
    Likes Received:
    351
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சர்பராஸ் அகமெட் செயலை ஏற்க முடியாது- அக்தர்; என்னை தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்- சர்பராஸ் பதில்

    நிறவெறிக் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டு 4 போட்டிகளுக்குத் தடைவிதிக்கப்பட்ட சர்பராஸ் அகமெட் செய்த காரியம் ஏற்புடையதல்ல என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கூறியதற்கு அவர் தன்னை தனிப்பட்ட முறையில் தாக்குகிறார் என்று பதிலளித்துள்ளார் சர்பராஸ் அகமெட்
    ட்விட்டர் வீடியோவில் அக்தர் கூறியதாவது:
    ஒரு பாகிஸ்தானியராக சர்பராஸ் அகமெட் கருத்தை ஏற்று கொள்ள முடியவில்லை. அவர் அந்தத் தருணத்தின் சூட்டில் அதனைச் செய்திருக்கலாம், அவர் இது குறித்து பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
    இதற்குப் பதில் அளித்த சர்பராஸ் அகமெட், “நான் என் தவற்றை ஒப்புக் கொண்டு தண்டனையையும் ஏற்றுக் கொண்டுள்ளேன். நான் என் ஆட்டத்தையும் நடத்தையையும் இனி மேம்படுத்துவேன். என் ஆதரவாளர்களுக்கு நன்றி. ஷோயப் அக்தர் என்னை தனிப்பட்ட முறையில் தாக்கியுள்ளார். என்னை விமர்சிக்கவில்லை” என்று தெரிவித்தார்.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    3,850
    Likes Received:
    351
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    தனது 200வது ஒருநாள் போட்டியில் கேப்டனாகக் களமிறங்கும் ரோஹித் சர்மா: கோலி இல்லாத இந்தியாவை வீழ்த்தி வெற்றி வழிக்கு திரும்பும் முனைப்பில் நியூஸிலாந்து

    31-1-19, வியாழன்) ஹாமில்டன் செடான் பார்க்கில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் 4வது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் களமிறங்குகின்றன. கோலி இல்லாத இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக தனது 200வது ஒருநாள் போட்டியில் களமிறங்குகிறார்.
    ஏற்கெனவே தொடரை இழந்த நிலையில் நியூஸிலாந்து வெற்றியுடன் முடிக்கப் போராட வேண்டும், மாறாக இந்திய அணி தன் அணிச்சேர்க்கையை ஸ்திரப்படுத்த புதிய முயற்சிகளில் இறங்கும்.
    கடந்த போட்டியில் ஆடாத தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். எனவே நாளைய போட்டியில் இவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணி இவ்வாறு இருக்க வாய்ப்புள்ளது: 1.ரோஹித் சர்மா, 2.ஷிகர் தவன், 3.ராயுடு, 4.ஷுப்மான் கில், 5.தோனி, 6.தினேஷ் கார்த்திக், 7.பாண்டியா, 8.கேதார் ஜாதவ், 9.சாஹல், 10.புவனேஷ்வர் குமார், 11.ஷமி.

    ஒருநாள் தொடரில் 2013க்குப் பிறகு 3 போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோல்வி கண்ட நியூஸிலாந்து தன் மானத்தைக் காப்பாற்றி கொள்ளவாவது இந்த 2 போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தோல்வி பிரச்சினையல்ல தோல்வி அடைந்த விதம், முழுக்க முழுக்க இந்திய அணியின் ஆதிக்கமே தெரிந்தது.
    நியூஸிலாந்து அணியின் பிரச்சினை மிடில் ஆர்டர்தான், கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், டாம் லேதம் வரிசையில் ராஸ் டெய்லர் மட்டுமே 93 ரன்களை எடுத்துள்ளார், கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்த விதமும் துரதிர்ஷ்டமும், கவலையளிக்கும் விதத்தையும் சேர்ந்து நியூஸிலாந்துக்கு அளித்துள்ளது.
    வெறும் ஸ்பின் மட்டும் பிரச்சினையல்ல, பாண்டியா அன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார், மொகமது ஷமி தொடக்கத்தில் விக்கெட்டுகளை சாய்த்து வருகிறார், ஆகவே ஒட்டுமொத்தமாக நியூஸிலாந்து அணியின் அணுகுமுறையில் சட்டக மாற்றம் (Paradigm Shift) நடந்ததால்தான் வெற்றி சாத்தியம்.
    தொடக்க வீரர்களான மார்டின் கப்தில் 3 ஆட்டங்களில் 33 ரன்களையும், கொலின் மன்ரோ 46 ரன்களையும் எடுத்து சொதப்பி வருகின்றனர். பின் நடுவரிசையான ஹென்றி நிகோல்ஸ், சாண்ட்னர், கொலின் டி கிராண்ட் ஹோம் நன்றாகத் தொடங்குகின்றனர், ஆனால் விரைவில் மடிந்து விடுகின்றனர். அணிக்கு ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் வந்துள்ளார்.
    மேலும் வலுவான இந்திய பேட்டிங்கை காலி செய்யும் பிட்ச்களும் இல்லை பந்து வீச்சும் நியூஸிலாந்தில் இல்லை என்பதே உண்மை. ஆகவே நாளைய போட்டியிலும் இந்தியாதான் வெற்றி பெறும் அணியாக தொடங்குகிறது.
    இந்திய அணியில் விராட் கோலி இல்லாத நிலையில் ஷுப்மான் கில் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது, 36 லிஸ்ட் ஏ போட்டியில் கில் சராசரி 47.78 ஆகும்.
    பந்து வீச்சில் வேண்டுமானால் இந்தியா புவனேஷ்வர் குமாருக்கோ, ஷமிக்கோ ஓய்வு அளித்து சிராஜ் அல்லது கலீலை முயற்சி செய்ய முடிவெடுக்கலாம், ஆனால் எதுவும் முடிந்த முடிவாகக் கூற முடியவில்லை. ரோஹித் சர்மா இன்னமும் நியூசிலாந்து மண்ணில் சதம் அடிக்கவில்லை.
    இதே மைதானத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 285 ரன்களை நியூஸிலாந்து வெற்றிகரமாக விரட்டியது. எனவே இதுவும் அத்தகைய ஸ்கொர் போட்டியாக அமைய வாய்ப்புள்ளது.
    போட்டி வழக்கம் போல் பகலிரவு போட்டி. இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்குத் தொடங்குகிறது.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    3,850
    Likes Received:
    351
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    2024 ஒலிம்பிக்கில் தடகளத்தில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தரப்போகும் வீரர் யார்? - பி.டி.உஷா பேட்டி

    பி.டி.உஷா தன் கடைசி ஓட்டப்பந்தயத்தில் 1999-ம் ஆண்டு கலந்து கொண்டிருக்கலாம், ஆனால் இந்தியாவின் சிறந்த தடகள வீராங்கனை என்றால் அது பி.டி.உஷாவாகவே அறியப்படுகிறார். 1985 ஆசியப் போட்டிகளில் 5 தங்கப்பதக்கம் வென்றார், 1984 ஒலிம்பிக்கில் நூலிழையில் ஒலிம்பிக் பதக்கத்தைத் தவறவிட்டார். தன் ஓய்வுக்குப் பிறகு விளையாட்டை விட்டுவிடவில்லை உஷா. பயிற்சியாளராகச் செயல்பட்டு வருகிறார். கேரளாவில் உஷா தடகளப் பள்ளியை நடத்தி வருகிறார்.
    கேள்வி: லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டிகளில் நீங்கள் மகளிர் 400மீ தடை ஓட்டத்தில் மிக நெருக்கமான 4ம் இடத்திற்கு வந்தீர்கள். அதன் பிறகு தடகளத்தில் பதக்கத்துக்கு அருக்கில் எந்த ஒரு வீரரும் வரவில்லை. இது எப்போது நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
    பி.டி.உஷா: 2024 ஒலிம்பிக் போட்டியில் நடக்கும். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நீரஜ் சோப்ராதான் இப்போதைக்கு நம்மிடையே உள்ள திறமைவாய்ந்த தடகள வீரர் அவர் நன்றாக முன்னேறி வருகிறார், அவருக்கு மிக அருமையான பயிற்சியாளர் உவே ஹான் இருக்கிறார். 21 வயதுதான் நீரஜ் சோப்ராவுக்கு ஆகிறது. மிகத்திறமை வாய்ந்த இளம் வீரர் நீரஜ் சோப்ரா.
    கேள்வி: உலக யு-20 தடகளப் போட்டிகளில் முதன் முதலில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனையான ஹிமா தாஸ் பற்றி உங்கள் கருத்து என்ன?
    பி.டி.உஷா: இவரிடம் நல்ல எதிர்காலத்துக்கான திறமை பளிச்சிடுகிறது. அவர் தன் டைமிங்கை மிக பெரிய அளவில் மேம்படுத்தியுள்ளார், அடுத்த ஓராண்டில் அவர் எப்படி வருகிறார் என்பதைப் பார்ப்போம்.
    கேள்வி: எந்தெந்த மாநிலங்கள் விளையாட்டுத்துறையை வளர்த்தெடுப்பதில் நன்றாகச் செயல்படுகிறது?
    பி.டி.உஷா: ஹரியாணா மாநிலம் தற்போது பெரிய ஆர்வம் காட்டி வருகிறது. ஆந்திரா, தெலங்கானா, தமிழகம் ஆகிய மாநிலங்களும் தடகள வீரர்களுக்கு ஊக்கமளிக்கிறது. மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் பலவிதமான விளையாட்டுகளுக்கும் அருமையான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
    இன்னொன்றையும் கூறி விடுகிறேன், சர்வதேச விளையாட்டுத் தொடர்களில் பதக்கம் வெல்பவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை பரிசுத் தொகையாக அறிவிக்க மாநில அரசுகள் போட்டாபோட்டி போடுவது என்னை மகிழ்விக்கவில்லை. எங்கள் காலத்தில் பதக்கம் வெல்லவே ஓடுவோம், அரசு அளிக்கும் கோடி ரூபாய்களுக்காக அல்ல. அமைச்சர் ஒருவர் பதக்கம் வெல்பவருக்கு ரூ.4 கோடி பரிசு என்று அறிவித்தால், எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையே ஏற்படும், இதுதான் ஊக்கமருந்து பயன்பாட்டுக்கு இட்டுச் செல்கிறது. பதக்கம் வெல்பவருக்கு இன்னும் சிறப்புப் பயிற்சியும் சர்வதேச அரங்கில் மேலும் நன்றாக ஆடக்கூடிய விதமாகவும் செய்யலாமே.
    கேள்வி: இந்தியாவில் பெரும்பாலும் விளையாட்டு என்பது அரசு வேலை பெறவே என்பதாக உள்ளது..
    பி.டி.உஷா: இதுதான் வருத்தம் தரும் உண்மை நிலை. திறமையுடைய விளையாட்டு வீரர்கள் பலர் வேலை கிடைத்தவுடன் விளையாட்டைக் கைவிட்டு விடுவதை நான் பார்த்திருக்கிறேன். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு போட்டித் தொடர்களில் கலந்து கொள்ளும்வரை அவரது வேலைக்காலத்தை உறுதி செய்தல் கூடாது, இப்படி ஒருவிதிமுறை கொண்டு வர வேண்டும். ஆனால் மேலதிகாரிகள் விளையாட்டில் கவனம் செலுத்தவும் வீரர்களை அனுமதிப்பதில்லை என்ற நிலையும் உள்ளது. எனக்குத் தெரிந்த வீராங்கனை ஒருவர் அலுவலகப்பணிகளை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார், இதனால் விளையாட்டில் அவரால் கவனம் செலுத்த முடியாமல் போனது...
    கேள்வி: உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் பெரிய அளவில் மோசடி செய்யும் நாடுகளில் இந்தியா டாப் இடத்தில் இருக்கிறதே..
    பி.டி.உஷா: இது வெட்கக்கேடான விஷயம். ரஷ்யாவிடமிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். ஏனெனில் நிறைய ரஷ்ய வீரர்கள்தான் தடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் நம் பயிற்சியாளர்கள் பெரும்பாலும் ரஷ்யர்களாக இருப்பது ஏமாற்றமளிக்கிறது. யூரி ஓகோரோட்னிக் என்பவரை பயிற்சியாளராக நியமிப்பதை நான் எதிர்த்தேன், ஏனெனில் அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் பலர் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்து தடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர் இங்கு வரவேற்கப்படுகிறார். ஊக்க மருந்து விவகாரமற்ற பயிற்சியாளர்கள் பிற நாடுகளில் இருக்கவே செய்கிறார்கள். மேலும் குளிர்காலத்தில் நம் தடகள வீரர்கள் ஏன் ஐரோப்பாவுக்கு பயிற்சிக்காக அனுப்பப்படுகின்றனர்?
    இந்திய தடகளம் முன்னேற வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும்?
    மக்களிடம் விளையாட்டை எடுத்துச் செல்ல வேண்டும். நல்ல தரமான தொலைக்காட்சி ஒளிபரப்புகள் அவசியம். விளம்பரம் அதிகம் தேவைப்படுகிறது. ஐரோப்பாவில் ஒரு தடகளப் போட்டியில் கலந்து கொண்டால் ஸ்டேடியம் நிரம்பி வழிகிறது, ஆனால் இந்தியாவில் பெரும்பாலும் காலி ஸ்டேடியங்களே வீரர்களை வரவேற்கின்றன.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    3,850
    Likes Received:
    351
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    திருமணத்துக்கு இடையே கால்பந்து விளையாடிய கேரள இளைஞர்; மணப்பெண் கேட்ட கேள்வி

    திருமணம் முடிந்த கையோடு சிலர் தேர்வெழுதச் செல்வர். இன்னும் சிலர் தேர்தலில் வாக்களிப்பர். ஆனால் இதுவேறு விதம்.
    கால்பந்து ஆட்டத்தில் கலந்துகொள்வதற்காக கேரள இளைஞர் ஒருவர், தன்னுடைய திருமணம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சில நிமிடங்கள் பிரேக் எடுத்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
    கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்தவர் ரித்வான். இவர் ஃபிபா மஞ்சேரி அணியில் கால்பந்து ஆடி வருகிறார். தடுப்பாட்டக்காரரான ரித்வானுக்கு கால்பந்து மீது அலாதியான ஆர்வம். அவருக்குத் திருமணத் தேதி குறித்த அதே தினத்தில் இவரின் அணியும் மலப்புரம் 7எஸ் போட்டியில் கலந்துகொள்ளத் தேர்வானது. 11 பேருக்குப் பதிலாக 7 பேர் மட்டுமே ஆடும் 7எஸ் போட்டி கேரளாவில் மிகப் பிரபலம்.
    திருமண ஏற்பாடுகள் ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில், திருமண தினத்தை மாற்ற முடியாத நிலை. என்ன செய்யலாம் என்று யோசித்தார் ரித்வான். மனைவியாகப் போகிற பெண்ணிடம் 5 நிமிடங்கள் பிரேக் வேண்டும் என்று கேட்டு, ஆட்டத்தில் கலந்துகொண்டார்.அவரின் அணியும் வெற்றிபெற்றது.
    மீண்டும் திருமணத்தில் கலந்துகொண்ட ரித்வான், திருமணச் சடங்குகளைச் செய்தார். ஆனால் மனைவியான மணப்பெண், ''ஒருவேளை கால்பந்துப் போட்டிகள் மதியத்தில் நடைபெற்றிருந்தால், திருமணத்தை நிறுத்தி இருப்பீர்களா?'' என்று ரித்வானிடம் கேள்வி எழுப்பினார். மனைவி கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் விழித்தார் ரித்வான்.
    இதற்கிடையே திருமணத்துக்கு இடையில் சென்று கால்பந்து விளையாடிய ரித்வானுக்கு, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் பாராட்டு தெரிவித்துள்ளார். ரித்வானைச் சந்திக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    3,850
    Likes Received:
    351
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    டி20 தொடர்; நியூசி அணி அறிவிப்பு: வலிமையான இந்திய அணியைச் சமாளிக்க இரு புதிய வீரர்கள் அறிமுகம்

    3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வலிமையான இந்திய அணியைச் சமாளிக்கும் வகையில் நியூசிலாந்து அணி 2 புதிய வீரர்களை அறிமுகம் செய்துள்ளது.
    ஆல்ரவுண்டர் டேர்ல் மிட்ஷெல், வேகப்பந்துவீச்சாளர் பிளையர் டிக்னர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 3 போட்டிகளை வென்று, ஏற்கெனவே இந்திய அணி தொடரைக் கைப்பற்றிவிட்டது. இன்னும் 2 போட்டிகள் மட்டும் இருக்கின்றன.
    இந்நிலையில் பிப்ரவரி 6-ம் தேதி முதல் 10-ம் தேதிவரை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர் பெர்குஷனுக்கு பதிலாக டிக்னரும், வீரர் நீஷம்க்கு பதிலாக பிரேஸ்வெல்லும் சேர்க்கப்பட்டுள்ளனர்.மேலும், ஆல்ரவுண்டர் டேர்ல் மிட்ஷெல் என்பவர் புதிதாக அறிமுகமாகிறார்.
    நியூசிலாந்தில் நடந்துவரும் சூப்பர் ஸ்மாஷ் கேம்பெய்ன் போட்டியில் மிட்ஷெல் சிறப்பாக விளையாடி 281 ரன்கள் குவித்துள்ளார். வேகப்பந்துவீச்சாளர் டிக்னர் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆதலால் இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

    இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வில் இருந்த கேப்டன் வில்லியம்ஸன் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். ஜிம்மி நீஷத்துக்கு பதிலாக ஆல்ரவுண்டர் டக் பிரேஸ்வெல் அழைக்கப்பட்டுள்ளார்.
    நியூசிலாந்து டி20 அணி தேர்வு குறித்து தேர்வுக் குழுதலைவர் கவின் லார்ஸன் கூறுகையில், " டேர்ல் மிட்ஷெல் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர். அணி நெருக்கடியான கட்டங்களில் நிதானமாக பேட் செய்யக்கூடியவர், வெற்றிபெற வைக்கும் திறமையான பேட்ஸ்மேன். அதேபோல, டிக்னர் நல்ல வேகப்பந்துவீச்சாளர், துல்லியமாகவும், எதிரணிகளை திணறடிக்கக் கூடியவர் " எனத் தெரிவித்தார்.
    முதல் டி20 போட்டி வெல்லிங்டன் நகரில் பிப்ரவரி 6-ம் தேதியும், 2-வது போட்டி 8-ம் தேதி ஆக்லாந்திலும், 3-வது போட்டி 10-ம் தேதி ஹேமில்டனும் நடக்கிறது.
    நியூசிலாந்து அணி விவரம்:
    கேன் வில்லியம்ஸன்(கேப்டன்), டக் பிரேஸ்வெல், கோலின் டி கிராண்ட்ஹோமே, லாக்கி பெர்குஷன் (முதல் இரு போட்டிகளுக்கு மட்டும்), மார்டின் கப்தில், ஸ்காட் குக்கலேஜின், டேர்ல் மிட்ஷெல், கோலின் முன்ரோ, மிட்ஷெல் சான்ட்னர், டிம் ஷீபர், இஷ் சோதி, டிம் சவுதி, ராஸ் டெய்லர், பிளையர் டிக்னர் (3-வது போட்டிக்கு மட்டும்)
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    3,850
    Likes Received:
    351
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    உலகம் முழுதும் உள்ள பாகிஸ்தானியர்கள் சர்பராஸ் அகமெட் பேச்சை ஊதிப்பெருக்கி விட்டனர்: வாசிம் அக்ரம் ஆதரவு

    நிறவெறி குற்றச்சாட்டில் சிக்கி 4 போட்டிகள் தடைசெய்யப்பட்ட பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமெடை தடையைக் காரணம் காட்டி திரும்ப பாகிஸ்தானுக்கு அழைத்தது பெரும் தவறு என்று முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைச் சாடியுள்ளார்.
    தென் ஆப்பிரிக்காவின் பெலுக்வயோ என்ற வீரரை நோக்கி பாகிஸ்தான் கேப்டன் சமீப ஒருநாள் போட்டியில், “ஏய் கருப்புப் பயலே” என்று விளித்தது சிக்கலாகி ஐசிசி நிறவெறித்தடை விதிமுறையின் கீழ் 4 போட்டிகளுக்குத் தடை செய்யப்பட்டார் சர்பராஸ். இதனையடுத்து அவரை பாக். கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் திரும்புமாறு கூறிவிட்டது.
    “சர்பராஸ் அகமெடை திரும்ப அழைத்தது தவறான முடிவு. பிப்ரவரி 6ம் தேதி அவர் கடைசி டி20 போட்டியில் ஆடியிருக்கலாமே.
    சர்பராஸ் அவ்வாறு நிறவெறி வசைபாடியது தாறுதான், ஆனாலும் உலகம் முழுதும் உள்ள பாகிஸ்தானியர்கள் இதனை ஊதிப்பெருக்கி விவகாரமாக்கி விட்டனர் என்பதும் உண்மையே.
    உலகக்கோப்பைக்கு முன்பு கேப்டனை மாற்ற வேண்டிய அவசியமில்லை. நீண்ட கால கேப்டன் நமக்குத் தேவை, குறுகிய கால கேப்டன் அல்ல. ஷோயப் மாலிக் தற்போது அணியை வழிநடத்துகிறார், அவரும் நன்றாகவே பணியாற்றுகிறார், ஆனால் அவரும் உலகக்கோப்பைக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
    நான் சர்பராஸ் அகமெடை ஆதரிக்கக் காரணம் அவர் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறார், இனி அவர் முதிர்ச்சியுடன் நடந்து கொள்வார், அவர் அனைத்து வடிவங்களிலும் பாகிஸ்தான் அணியை ஒரு அச்சமற்ற அணியாக வழிநடத்தி வருகிறார். அதனால் அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து அகற்றுவது தவறு.
    இவ்வாறு கூறினார் வாசிம் அக்ரம்
     

Share This Page