The Post Office Offers Savings Accounts at ₹50 & ATM Services Without Transaction Fees

Discussion in 'Banking & finance' started by webadmin, Mar 27, 2017.

  1. webadmin

    webadmin Administrator Staff Member

    Joined:
    Jan 1, 1970
    Messages:
    2,574
    Likes Received:
    1,103
    Trophy Points:
    113
    Between serpentine queues at banks and perennial cash crunch at ATMs, having cash at hand has become something of a luxury in India. There’s also the question of spiking minimum balance at banks and transaction fees, making it difficult for rural communities and working classes to access reliable banking services. While banks grapple to offer the best rates, the humble post office is quietly offering a substitute.
    With ATMs being set up around the country and lower saving schemes, India Post is emerging as a cost-effective alternative to conventional banks.


    [​IMG]

    In addition to delivering snail mails and money orders, India Post has been running a number of small savings schemes since 1882, including savings and recurring accounts as well as time deposits. Opening a bank account in the post office takes a mere ₹20 and the minimum balance to be maintained is ₹50


    “We want to serve everyone,” says KVLN Murthy, senior superintendent of post offices for Visakhapatnam division, adding that there are thousands of postal savings account holders in his district alone.
    While these cost-effective saving schemes have existed for a while, 2016 witnessed a sustained effort towards digitalising and consolidating India Post operations.
    Its most recent development is a series of India Post ATMs, that are being opened around the country, from Jammu & Kashmir to Kerala.


    Presently, India Post has over 1,50,000 branches and offers postal access to some of the most remote locations around the country. The department has a long way to go, but there’s certainly hope for a department which is often considered obsolete in the technological age.
    Follow India Post on Twitter for updates and complaints redressal or call the ATM helpline on 1800 425 2440.
     
  2. webadmin

    webadmin Administrator Staff Member

    Joined:
    Jan 1, 1970
    Messages:
    2,574
    Likes Received:
    1,103
    Trophy Points:
    113
    இன்றைய சூழலில் அஞ்சலக சேமிப்பு கணக்கு ஒரு வரப்பிரசாதமாகும். அஞ்சலக சேமிப்புக் கணக்கில் குறைந்தப்பட்ச வைப்பு தொகை ரூ. 50 மட்டுமே. காசோலை வசதியுடன் கூடிய சேமிப்பு கணக்குக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ. 500 ஆகும். அனைத்து அஞ்சலகங்களும் இணையம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது என்பதால் அஞ்சலக ஏடிஎம் அட்டை மூலம் நாட்டில் உள்ள எந்தவொரு அஞ்சலக ஏடிஎம் மையங்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். ஏடிஎம் கார்டு இலவசமாக வழங்கப்படுகிறது. சேவை வரி கிடையாது.
    புதிய அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்க 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களும், ஆதார் அட்டை நகலும் போதுமானது. எனவே, பொதுமக்கள் அனைவரும் அஞ்சலகங்களை அணுகி புதிய சேமிப்பு கணக்கை தொடங்கி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
  3. webadmin

    webadmin Administrator Staff Member

    Joined:
    Jan 1, 1970
    Messages:
    2,574
    Likes Received:
    1,103
    Trophy Points:
    113
    வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சமாக, 5,000 ரூபாய் இருக்க வேண்டும் என, எஸ்.பி.ஐ., வங்கி ெவளியிட்டுள்ள அறிவிப்பால், அஞ்சலகங்களில், சேமிப்பு கணக்குகள் துவங்கும் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர். மேலும், அஞ்சலக சேமிப்பு கணக்கிலிருந்து, எந்த வங்கி, ஏ.டி.எம்., இயந்திரங்களிலும் பணம் எடுக்கலாம் என்ற சலுகை அறிவிப்பால், கிராமவாசிகள் ஆர்வத்துடன் அஞ்சலக சேமிப்பு கணக்குகளை துவக்குகின்றனர்.காஞ்சிபுரம் அஞ்சலக கோட்டத்தின் கீழ், இரண்டு தலைமை தபால் நிலையம், 52 துணை அஞ்சலகம், 271 கிளை தபால் நிலையங்கள் உள்ளன. இங்கு, 'செல்வ மகள்' சேமிப்பு திட்டம், தொடர் வைப்பு கணக்கு, முதியோர் சேமிப்பு திட்டம், பொன்மகள் வைப்பு நிதி, காலவைப்பு கணக்கு, மாதாந்திர வருமான திட்டம், அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், கிஸான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.அஞ்சல் துறை சேமிப்பு திட்டங்களுக்கு, 4 சதவீதம் வட்டியில் இருந்து வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கும் திட்டங்களுக்கு ஏற்றவாறு, 8.5 சதவீதம் வட்டி தொகையை, அஞ்சல் துறை வழங்கி, சேமிப்பை ஊக்குவித்து வருகிறது.கடந்த ஆண்டு இறுதியில், புழக்கத்திலிருந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்த பிறகு வாடிக்கையாளர் பல இன்னல்களை சந்தித்தனர்.மேலும், வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சமாக, 5,000 ரூபாய் இருக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி தற்போது அறிவித்துள்ளதால், வங்கி வாடிக்கையாளர்களுக்கு இடையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இச்செயல், பல தரப்பு வாடிக்கையாளர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.இந்த சமயத்தில், 50 ரூபாய்க்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு துவக்கலாம் என, அஞ்சல் துறை அறிவிப்பால், கிராமப்புற வாடிக்கையாளர்கள் புதிய சேமிப்பு கணக்கு துவக்குவதற்கு, அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் படி, நேற்று வரையில், காஞ்சிபுரம் அஞ்சலக கோட்டத்தின் கீழ், 8,400 புதிய அஞ்சலக சேமிப்பு கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன என, அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வசதிகள்* சேமிப்பு மற்றும் கூட்டு சேமிப்பு கணக்கு துவக்கலாம்* இந்தியா முழுவதும் அஞ்சலகங்களில் பணம் போடுவதற்கும், எடுப்பதற்கும் வசதி* 500 ரூபாய்க்கு, காசோலை புத்தகம்* அஞ்சலக சேமிப்பு கணக்கில், 50 ரூபாய் இருந்தால் போதும்* சேவை வரி கட்டணமில்லாத, ஏ.டி.எம்., கார்டு* சேமிப்பு கணக்கில் இருந்து பிற கணக்கிற்கு பணம் அனுப்பும் வசதி.
    தளர்வுஒருவர் அஞ்சலக சேமிப்பு கணக்கு துவக்கி இருந்தால், அவர் அஞ்சல, ஏ.டி.எம்., கார்டில், தலைமை அஞ்சலகத்தில் இயங்கும், ஏ.டி.எம்., மையத்தில் மட்டுமே, பணம் எடுக்கும் வசதி இருந்தது. தற்போது, மார்ச் மாதத்தில் இருந்து, அனைத்து வங்கி, ஏ.டி.எம்., மையங்களிலும் பணம் எடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
     

Share This Page