Todays news 08.01.2020

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Jan 8, 2020.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பணிகள் தீவிரம்: வாடி வாசலில் சீறிப்பாய தயாராகும் காளைகள்


    மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. உலக புகழ் பெற்ற ஜல்லிகட்டானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 15, 16, 17 ஆகிய 3 தினங்களில் நடைபெறயிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜல்லிக்கட்டு பணியானது மிகவும் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில் வண்ணங்கள் பூசுவதல் மற்றும் மேடைகள் கட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு தீவிரமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மாடுபிடி வீரர்களும் மாடுகளை அடக்குவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் கால்நடை மருத்துவர்கள் மாடுகளை சோதனையிட்டு எந்த வித நோய்களும் இல்லை என்பதற்கான சான்றிதல்களையும் வழங்கி வருகின்றனர். அதேபோல் மாடுபிடி வீரர்களையும், போட்டிக்கு தகுதியானவர்களா என்று சோதனை நடத்தப்பட்ட பின்னரே வாடிவாசல் மைதானத்திற்குள் அனுப்பப்படுவார்கள். மேலும் இங்கு 20,000க்கும் மேற்பட்டோர் அமர்ந்து ஜல்லிக்கட்டை ரசிப்பதற்காக மேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதிலும் வெளிநாடுகளிலிருந்து வந்து ஜல்லிக்கட்டை ரசிப்போருக்கு தனியாக மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. போட்டியை அனைவரும் பாதுகாப்பாக கண்டுகளிக்க வாடிவாசலின் இரு புறமும் கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.4,204 கோடி நிதி மோசடி: சமூக தணிக்கைக்குழு தகவல்

    நாமக்கல்: தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 4 ஆயிரத்து 204 கோடி ரூபாய் நிதி மோசடி நடந்திருப்பதாக சமூக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக இத்தகவல் பெறப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 2006ம் ஆண்டு மத்திய அரசு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை கொண்டு வந்தது. நீர் ஆதாரங்களை பாதுகாப்பது, மரக்கன்றுகள் நடுவது உள்ளிட்ட பணிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. ஊரக பகுதியில் வயது வந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாட்களுக்கு குறையாமல் வேலை வாய்ப்பினை அளிக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க ஊராட்சிகள் தோறும் சமூக தணிக்கைக்குழு அமைக்கப்பட்டது. அதாவது அரசும், மக்களும் இணைந்து வளர்ச்சி திட்டங்களுக்காக வழங்கும் நிதி முறையாக உரியவர்களுக்கு சென்றடைகிறதா? என்பதை சரிபார்த்து மக்களிடமே அறிக்கை சமர்ப்பிப்பது தான் சமூக தணிக்கையாகும்.

    அந்த வகையில் அந்தந்த கிராம மக்களே தணிக்கை செய்யும் வகையில் 2011ம் ஆண்டில் குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை சமூக தணிக்கை செய்யப்பட்டு அதற்கான சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் எத்தனை பேர் பணியாற்றினர்? அவர்களுக்கு உரிய கூலி வழங்கப்படுகிறதா? இத்திட்டத்தில் முறைகேடுகள் ஏதேனும் நடக்கிறதா? என்பதை இக்குழு ஆய்வு செய்து தவறுகள் இருக்கும் பட்சத்தில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களுக்கு புகார் அளிக்கும். அவ்வாறு நடத்தப்பட்ட தணிக்கையில் 2017ம் ஆண்டு முதல் தற்போது வரை 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழகம் முழுவதும் 4,204 கோடி ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டிருப்பது சமூக தணிக்கை மூலம் தெரியவந்திருக்கிறது. நாமக்கல்லை சேர்ந்த விஸ்வராஜ் என்பவர் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவலை பெற்றுள்ளார். இவர் பெற்ற தகவலின்படி அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 347 கோடி ரூபாய், திருவள்ளூரில் 307 கோடி ரூபாய் மற்றும் கிருஷ்ணகிரியில் 293 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

    எப்படி முறைகேடு நடைபெறுகிறது?

    பொதுவாக ஒரே குடும்பத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வேலை அட்டைகளை வழங்கி நிதியாண்டில் 100 நாட்களை விட கூடுதலாக பணி செய்ய அனுமதித்தல். இறந்த நபர்கள் பணி புரிவதாக பதிவு செய்து ஊதியம் வழங்குதல். ஊராட்சியில் வசிக்காத நபர்களுக்கு ஊதியம் வழங்குதல். தவறான வங்கி கணக்கில் ஊதியத்தை வரவு வைத்தல். வேலை செய்யாத நபர்களின் பெயர்களை போலியாக பதிவு செய்து ஊதியம் வழங்குதல். குளம், ஏரிகளில் பணி நடைபெறுவதாக பதிவு செய்து செலவினம் மேற்கொள்வது. இயந்திரங்களை கொண்டு வேலை செய்து விட்டு மனிதர்கள் செய்ததாக கூறி கணக்கு காட்டுவது. இல்லாத நிறுவனங்களின் பெயரில் பொருட்களை வாங்கியதாக போலி ரசீது தயாரித்தல் உள்ளிட்ட வழிகளில் இந்த முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சிகளிடம் சமூக தணிக்கைக்குழு புகார் அளித்தும் அந்த தொகையை வசூலிக்கவோ, அவர்கள் மீது வழக்குபதிவோ செய்யவில்லை என்பதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் தெரியவந்திருக்கிறது. இத்தகவலை பெற்றுள்ள நாமக்கல்லை சேர்ந்த விஸ்வராஜ் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அதற்கு புகார் தொடர்பாக முழுமையாக விசாரிக்கப்பட்டு தவறுகள் நடைபெற்றிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகள் இல்லை. தற்போது தான் தேர்தல் முடிந்து உறுப்பினர்கள் பொறுப்பேற்றுள்ளனர். இந்த சூழலில் நிதி மோசடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஜன.10-ம் தேதி பசுபதி பாண்டியன் நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு

    தூத்துக்குடி: ஜன.10-ம் தேதி பசுபதி பாண்டியன் நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜன.9-ம் தேதி மாலை 6 மணி முதல் ஜன.11-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் சந்தூரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    காட்டூர் பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளால் நோய் பரவும் அபாயம்: நடவடிக்கை எடுக்க விசிக கோரிக்கை

    திருவாரூர்: திருவாரூர் அருகே காட்டூர் பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளால் நோய் பரவும் அபாயம் இருப்பதால் அதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்திட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் வடக்கு மாவட்ட செயலாளர் வடிவழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருவாரூர் அருகே காட்டூர் மற்றும் அகரத்திருநல்லூர் பகுதிகளில் ஒருசிலர் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்ட பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து நாசம் செய்வதுடன் இந்த பன்றி களுக்காக கோழி கழிவுகள் மற்றும் ஓட்டல் கழிவுகள் போன்றவை உணவாக கொண்டு வந்து கொட்டப்படுகிறது.

    இந்த கழிவுகளை பன்றிகள் மட்டுமின்றி நாய்களும் சேர்ந்து தின்பதால் இந்த பகுதியில் 50க்கும் மேற்பட்ட தெரு நாய்களும் சுற்றித்திரிந்து வருகின்றன. இதன்காரணமாக இந்த பகுதியில் இருந்துவரும் ஆடு,மாடுகளை இந்த நாய்கள் விரட்டி பிடித்து கடித்து கொன்று தின்று வருகின்றன. இதுமட்டுமன்றி இந்த பகுதியில் உள்ள சுடுகாடுகளில் இறந்தவர் உடலை அடக்கம் செய்யும்போது இரவு நேரங்களில் இந்த உடல்களை பன்றிகளும்,நாய்களும் சேர்ந்து மண்ணை தோண்டி தின்று வரும் நிலை இருந்து வருகிறது.

    மேலும் இந்த பன்றிகளில் நோய்வாய்ப்பட்ட பன்றிகள் இறக்கும் பட்சத்தில் அவைகள் முறையாக புதைக்கப்படாமல் அருகில் இருந்து வரும் ஓடம் போக்கி ஆற்றங்கரைப் பகுதியில் வீசப்படும் நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது. எனவே காட்டூர் மற்றும் அகரத்திருநல்லூர் பகுதியில் பன்றிகள் மற்றும் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கோவையில் விறுவிறுப்பாக நடக்கும் ஸ்மார்ட் சிட்டி பணிகள்: முதன் முதலாக மிதவை நடைப்பாதை அமைப்பு

    கோவை: கோவையில் ஸ்மாட் சிட்டி திட்டத்தின் ஒருபகுதியாக வாலாங்குளத்தில் மிதவை நடைப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியில் உள்ள குளங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக உக்கடம் பைப்பாஸ் சாலை அருகே உள்ள வாலாங்குளம், 23 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மேம்பாட்டின் ஒரு பகுதியாக குளத்தை சுற்றிலும் உள்ள குளக்கரை கான்கிரீட் கொண்டு பலப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து குளத்தை சுற்றிலும் பொதுமக்கள் அமர்ந்து குளத்தின் அழகை கண்டு ரசிக்கும் வண்ணம் இருக்கைகள், உணவு வழங்க மற்றும் உண்ண இடங்கள், குழந்தைகள் விளையாட தனி இடம் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கரையில் இருந்து 50 மீட்டர் நீளத்திற்கு குளத்திற்குள் சென்று குளத்தின் அழகை ரசிக்கும் விதமாக இந்த நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் குளத்தினுள் செல்ல 12அடி அகலத்தில் மிதவை நடைப்பாதையின் பக்கவாட்டு பகுதிகளில் பாதுகாப்பு அம்சத்திற்காக கைப்பிடிகள் அமைக்கப்படுகின்றன. மிதவை நடைப்பாதை காற்றடைத்த கேன்களால் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். மழைக்காலம் வந்தால் நடப்பவர்கள் வலுக்கிவிழாத நிலையில் கேன்கள் மீது ரப்பர் அட்டை பொருத்தப்பட்டுள்ளது.

    பிப்ரவரி மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஆதலால் மிதவைப்பாதை அமைக்கும் பணி மிகவும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதனால் கோவையில் சுற்றுலாத்தலங்கள் குறைவாக இருக்கிறது என்று புலம்பித்தவித்த சுற்றுலா பிரியர்களுக்கு நிச்சயம் இந்த குளக்கரைகள் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    மதுரை ஆதீன வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை கொள்ளை: விடுதி உரிமையாளரிடம் போலீசார் விசாரணை


    மதுரை: மதுரை ஆதின வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனம் கிட்டத்தட்ட 1700 ஆண்டுகளுக்கு முற்பட்டது. மதுரை ஆதீனம் மீனாட்சியம்மன் கோவில் இருக்கின்ற முக்கியமான மடமாகும். இந்த வளாகத்தின் முன்பக்கத்தில் உள்ள தனியார் விடுதிக்கு மதுரை ஆதினம் ஏற்கனவே குத்தகைக்காக விடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் அந்த இடம் குத்தகைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது பக்தர்களிடையே பல்வேறு அதிருப்தி ஏற்படுத்தியதை தொடர்ந்து, அவர்களை காலி செய்வதற்காக இது தொடர்பான வழக்குகள் மதுரை மாவட்ட நீதிமன்றங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி காலை சுமார் 7 மணியளவில் விடுதி உரிமையாளர் இளவரசன் என்பவர் 8 அடியாட்களுடன் வந்து தங்களுக்கு சாதகமாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்திருக்கிறது.

    எனவே அந்த பகுதி தங்களுக்கு சொந்தமான பகுதியாகும் என கூறி அப்பகுதியில் இருந்த விநாயகர் சிலையை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆதினம் ஊழியர்கள் அதனை தடுக்க முற்பட்ட போது அவர்களை மிரட்டி விநாயர் சிலையை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக ஆதீனத்தின் வழக்கறிஞர் முத்து பிரகாசம் என்பவர் மதுரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே மதுரை ஆதீனத்துக்கும், தனியார் விடுதிகளுக்கும் சட்ட பிரச்சனைகள் இருந்து வருகின்ற நிலையில், தனியார் விடுதியை சேர்ந்த நிர்வாகிகள் தற்போது மிரட்டி, விநாயகர் சிலையை எடுத்து சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வழக்கின் பின்னணி தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பின்னர் இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    திருக்காரவாசலில் பதவியேற்ற ஒரே நாளில் சாலை சீரமைக்கும் பணி: ஊராட்சி தலைவருக்கு கிராம மக்கள் பாராட்டு


    திருவாரூர்: திருவாரூர் அருகே திருக்காரவாசலில் பதவி ஏற்ற ஒரே நாளில் ஊராட்சி மன்ற தலைவர் சாலையை சீரமைக்கும் பணியினை மேற்கொண்டதால் கிராம மக்கள் அவரை பாராட்டினர். தமிழகத்தில் கடந்த 2016 ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் உள்ளாட்சி பதவிகளுக்கான காலம் முடிவடைந்த நிலையில் அதன் பின்னர் 3 ஆண்டு காலமாக இந்த தேர்தல் நடத்தப்படாதன் காரணமாக மாநிலம் முழுவதும் கிராமப்புறங்களில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப தமிழக அரசு கடந்த மாதம் இந்த உள்ளாட்சித் தேர்தலை ஊரக பகுதிகளுக்கு மட்டும் நடத்தி முடித்தது.

    இந்நிலையில் இடைப்பட்ட 3 ஆண்டு காலத்தில் அனைத்து கிராமங்களிலும் கோரிக்கைகள் என்பது அதிகமாக இருந்ததன் காரணமாக இந்த கோரிக்கைகளில் முதலில் எதை நிறைவேற்றுவது என்று பல்வேறு குழப்பங்கள் வேட்பாளர்கள் மத்தியில் இருந்து வந்தது. இருப்பினும் தங்களால் முடிந்த காரியங்களை செய்து முடிப்பதாக வேட்பாளர்கள் அளித்த வாக்குறுதியின் பேரில் பொதுமக்கள் அவர்களை தேர்வு செய்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் ஊராட்சி மன்ற தலைவர்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் பதவியேற்ற நாளிலேயே தங்களது கிராமங்களில் குளங்களை சுத்தம் செய்வது, குப்பைகளை அகற்றுவது,

    தெருவிளக்குகளை எரிய விடுவது என கிராமங்களின் முக்கிய பணிகளை மேற்கொள்ள தொடங்கினர். அதன்படி திருவாரூர் அருகே திருக்காரவாசல் ஊராட்சியில் அக்கரை கோமல் பகுதியில் இருந்து வரும் சாலை மிகவும் சேறும், சகதியுமாக இருந்துவந்தது. இந்நிலையில் அந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள திமுகவை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் உடனடியாக அந்த சாலையில் உள்ள சேறுகளை பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டார்.இதற்கு அவருக்கு கிராம மக்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சாத்தூரில் சமூகவிரோதிகளின் புகலிடமான ஆங்கிலேயர் காலத்து பாலம்: இரவு நேரங்களில் மது அருந்தி அட்டகாசம்



    சாத்தூர்: சாத்தூரில் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட பாலம் சமூகவிரோதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. இதை கட்டுப்படுத்தி பொதுமக்களின் நடைபாதையாக பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் வைப்பாற்றை கடப்பதற்காக கடந்த 1863ல் ஆங்கிலேயர் ஆட்சியில் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக பதநீர், கடுக்காய், சாதிக்காய், கருப்பட்டி பாகு, சுண்ணாம்பை ஆகியவற்றை கலந்து பலமாக கட்டினர். 1867ல் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. 840 அடி நீளமும் 14 அடி அகலமும் உள்ள இந்த பாலம் வழியாக ஆங்கிலேயர்களின் குதிரை பூட்டபட்ட ஜட்கா வண்டிகள் மட்டும் சென்று வந்தன. சுதந்திரம் அடைந்த பின்னர் இந்த பாலம் வழியாக கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் சென்று வந்தன. குதிரை வண்டிகள் மட்டுமே சென்று வந்த 14 அடி அகல பாலத்தில் எதிரெதிரே வாகனங்கள் வரும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 156 ஆண்டுகளை கடந்தாலும் பாலம் கம்பீரமாகவும் உறுதியாகவும் இருப்பதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர். சாத்தூர் நகரின் பிரதான சாலையில் உள்ள இந்த பாலம் வழியாக கோவில்பட்டியைக் கடந்து, கன்னியாகுமரி மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர்.

    சாத்தூரில் உள்ள பிரசித்திபெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயில் திருவிழா காலங்களில் பக்தர்களின் வருகையால் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து புதிய பாலம் அமைத்து, பழைய பாலத்தை இடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று, பழைய பாலம் அருகில் இரண்டு வாகனங்கள் சென்று வரும் வகையில் புதிய பாலம் கட்டப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளது. ஆனால், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் தற்போது சமூக விரோதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. இரவு நேரங்களில் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால், அருகில் உள்ள புதிய பாலம் வழியாக பெண்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, பழைய பாலத்தில் சமூகவிரோதிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்தி, அதை சீரமைத்து அமீர்பாளையம், புதுப்பாளையம் பகுதி பொதுமக்களின் நடைபாதையாக பயன்படுத்தலாம் என சமூக ஆர்வலரக்ள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     
  9. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கன்னியாகுமரி மாவட்டம் மேல கருப்புக்கோட்டையில் ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு


    கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மேல கருப்புக்கோட்டையில் ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்தனர். பழையாற்றில் குளித்த நகைக்கடை அதிபர் பிரவீன் குமார் மற்றும் அவரது நண்பர் லலித் மோடி நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
     
  10. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    வேலை வாய்ப்பை உருவாக்க கோரிக்கை: காஸ் சிலிண்டர் விலை உயர்வால் விறகு அடுப்புக்கு மாறும் பெண்கள்

    மரக்காணம்: விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் பகுதி கடைசி எல்லையில் உள்ளது. இப்பகுதியில் பொது மக்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கக் கூடிய எந்த ஒரு தொழிற்சாலையும் இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர்கள் விவசாயத்தை சார்ந்த தொழிலையும், மீன்பிடி தொழில் மற்றும் உப்பள அளதொழிலை மட்டுமே நம்பி உள்ளனர். ஆனால் இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் இயற்கை மாற்றம் மற்றும் பருவ மழை பொய்த்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த தொழில்கள் கூட ஆண்டுதோறும் நலிவடைந்துகொண்டே வருகிறது. இதனால் இங்குள்ள பலர் வேலை தேடி சென்னை, ஆந்திரா, மும்பை போன்ற பெருநகரங்களுக்கு செல்லும் அவல நிலை உள்ளது. இதனால் பல கிராமங்கள் பொது மக்கள் அதிகம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது.

    இப்பகுதியில் உள்ளவர்கள் காலந்தொட்டு மரவிறகுகளை பயன்படுத்தியே சமையல் உள்ளிட்ட அனைத்து வீட்டு வேலைகளையும் செய்து வந்தனர். ஆனால் சில ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்தல், நாகரீக வளர்ச்சி ஆகிய காரணங்களால் பாரம்பரிய விறகு அடுப்பு சமையல்களை மறந்து எளிதில் சமையல் செய்யக்கூடிய காஸ்சிலிண்டருக்கு மாறிவிட்டனர். இந்த சிலிண்டரின் விலையும் ஆண்டுதோறும் படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ. 750 முதல் சில சமயங்களில் ரூ. 900 வரையிலும் விற்பனையாகிறது. அதுவும் இந்த சிலிண்டரை முன்பெல்லாம் நம்மிடம் இருக்கும் சிலிண்டர் தீர்ந்துவிட்டால் பணம் எடுத்துக்கொண்டு காஸ் ஏஜென்சிகளிடம் சென்றால் அவர்கள் அப்போதே சிலிண்டரை கொடுத்துவிடுவார்கள். ஆனால் இப்போது சிலிண்டர் ஆகிவிட்டால் நாம் செல்போன் மூலம் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட ஏஜெண்டுகளுக்கு குறுந்தகவல் மூலம் முன் பதிவு செய்யவேண்டும்.

    இப்படி முன்பதிவு செய்தபிறகு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் கழித்ததால் நமக்கு சிலிண்டர் கிடைக்கும். இதுபோல் முன் பதிவு செய்வதற்கு பலருக்கு தெரிவதும் இல்லை. இதனால் அவர்கள் சிலிண்டர் வாங்க பல நாட்கள் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் கடந்த ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் பொது மக்களுக்கு போதிய வருமானம் இல்லை. இதனால் பெரும்பாலான குடும்பங்கள் காஸ் சிலிண்டர்களை வாங்கி சமையல் செய்யமுடியாமல் பல தூரம் சென்று காடுகள் மற்றும் வயல் வெளிகளில் கிடக்கும் விறகுகளை எடுத்து வந்து சமையல் செய்யும் நிலைக்கு வந்துவிட்டனர். எனவே பொது மக்களின் நலன் கருதி மத்திய அரசு காஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும்.

    மேலும் விவசாய நிலங்களில் சாலைகள், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அமைப்பதை தவிர்த்து பொது மக்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கக் கூடிய விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
     

Share This Page