Todays news 08.01.2020

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Jan 8, 2020.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பின்னல்வாடி அரசு உயர்நிலை பள்ளியின் அவலம்: போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாததால் மரத்தடியில் கல்வி கற்கும் மாணவர்கள்

    தரம் உயர்த்தப்பட்டும் பயனில்லை
    * கல்வி அதிகாரிகள் நடவடிக்கை தேவை

    உளுந்தூர்பேட்டை: பின்னல்வாடி அரசு உயர்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டும் போதிய வகுப்பறை கட்டிடம் கட்டி தராததால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உளுந்தூர்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கடை கோடி கிராமமாக உள்ளது பின்னல்வாடி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் பல ஆண்டுகாலமாக வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

    தரம் உயர்த்தப்பட்ட இந்த பள்ளியில் பின்னல்வாடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தற்காலிகமாக உயர்நிலைப்பள்ளி நடுநிலைப் பள்ளி வகுப்பறைகளில் நடைபெற்று வருகிறது. நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரையில் மாணவ, மாணவிகளுக்கு போதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டிக்கொடுக்காத காரணத்தினால் மாணவர்கள் அனைவரும் மரத்தடியில் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். மேலும் ஆய்வு கூடங்கள், கழிவறை கட்டிடங்கள் என எந்தவித அடிப்படை வசதிகளும் இதுவரையில் இந்த பள்ளிக்கு செய்துதரப்படவில்லை. மழை காலங்களில் மாணவர்கள் வகுப்பறைகள் இன்றி கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் பாதிக்கப்படும் என பெற்றோர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

    இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகிற கல்வி ஆண்டிலாவது அனைத்து மாணவர்களுக்கும் போதிய வகுப்பறை கட்டிடத்தில் அடிப்படை வசதிகளுடன் கல்வி பயில்வதற்கான ஏற்பாடுகளை செய்துதர உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    அதிமுகவினரால் கடத்தப்பட்ட திமுக ஒன்றிய கவுன்சிலரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள் : தவறும் பட்சத்தில் ராமநாதபுரம் எஸ்.பி. நேரில் ஆஜராக உத்தரவு


    மதுரை : அதிமுகவினரால் கடத்தப்பட்ட முதுகுளத்தூர் 8வது வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தவறும் பட்சத்தில் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கவுன்சிலரை அதிமுகவினர் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஒன்றியத்தின் 8வது வார்டு திருவரங்கம். இந்த ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் சாத்தையா.இந்நிலையில், சேர்மன் பதவியை அடைய நினைத்த அதிமுக தன் தந்தையை (சாத்தையா) கடத்தி விட்டதாக புகாரளித்துள்ளார்.
    அதாவது, முதுகுளத்தூர் அதிமுக ஒன்றியச் செயலாளர் தர்மர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 3 பேர் சேர்ந்து கடத்திச் சென்று விட்டதாக சாத்தையாவின் மகன் மகன் ராஜா, முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இந்த கடத்தல் சம்பவத்துக்கு, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய சாத்தையாவின் மகன் ராஜா, மேலும் ஒருபடி மேலே போய், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிர்வாக நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக ஒன்றிய கவுன்சிலர் சாத்தையாவை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்தனர். தவறும் பட்சத்தில் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., நேரில் ஆஜராக வேண்டும் என்றும் ஆணையிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கலவையில் குப்பைகளை சேகரிக்க வழங்கிய 3 சக்கர பேட்டரி வாகனம் காட்சி பொருளான அவலம்

    கலவை: கலவை பேரூராட்சிக்கு குப்பைகளை சேகரிக்க திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வழங்கப்பட்ட 3 சக்கர பேட்டரி வாகனங்கள் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் சார்பாக 1.80 லட்சம் மதிப்பில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு 3 சக்கர பேட்டரி வாகனம் அனைத்து பேரூராட்சிகளுக்கும் வழங்கப்பட்டது. ஆனால், கலவை பேரூராட்சியில் உள்ள வார்டுகளில் உள்ள குப்பைகளை அள்ள பயன்படுத்தாததால் மூன்று சக்கர பேட்டரி வாகனம் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

    தெருக்களில் உள்ள குப்பைகளை சேகரிக்கும் மகளிர் குழுவினர் கூடையில் சுமந்துகொண்டு லாரியில் கொட்டுகிறார்கள். ஆனால், இந்த மூன்று சக்கர வாகனம் இன்று வரை பேரூராட்சி சாலைகளில் ஓடியது கிடையாது. இங்கு துப்புரவு பணிக்கு லாரி மற்றும் மினி வேன் என இரண்டு வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    அரக்கோணத்தில் வரி செலுத்தாத 20 கடைகளுக்கு சீல்: ஆணையாளர் அதிரடி

    அரக்கோணம்: அரக்கோணத்தில் வரி செலுத்தாத 20 கடைகளுக்கு ஆணையாளர் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டு சீல் வைத்தார். அரக்கோணம் நகராட்சியில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளும், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழாய் இணைப்புகளும் உள்ளது. நகராட்சி சார்பில், வரி வசூல் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரக்கோணம் நகராட்சியில், ₹10 கோடிக்கு மேல் வரி பாக்கி வசூலாக வேண்டியுள்ளது. இதையடுத்து, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராஜவிஜய காமராஜ் தலைமையில், மேலாளர் கோபிநாத், நகர அமைப்பு அலுவலர் தாமோதரன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அதிரடியாக நேற்று அரக்கோணம் நகரில் உள்ள மார்க்கெட் பகுதிகளுக்கு சென்று வரி பாக்கி செலுத்தாதவர்களிடம் உடனே வரியை செலுத்தும்படி கூறினர். இல்லையெனில், கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஒரு சில கடைகாரர்கள் உடனடியாக வரி பாக்கிகளை செலுத்தினர். மேலும், முதல் கட்டமாக வரி பாக்கி செலுத்தாத 20 கடைகளுக்கு அதிரடியாக ஊழியர்கள் சீல் வைத்தனர்.

    இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுக்குறித்து, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராஜவிஜய காமராஜ் கூறுகையில், ‘அரக்கோணம் நகராட்சியில் வரி பாக்கி வசூல் செய்யும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. வரி பாக்கிகளை உடனே செலுத்த வலியுறுத்தி ஏற்கனவே, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மார்க்கெட் பகுதியில் 194 கடைகள் உள்ளன. இங்கு, சுமார் 2 கோடி அளவிற்கு வரி மற்றும் வாடகை பாக்கி வசூலாக வேண்டியுள்ளது. இந்நிலையில், வரி மற்றும் வாடகை பணம் 10 லட்சம் வசூல் செய்யப்பட்டது. மேலும், வரி பாக்கி செலுத்தாதவர்களில் முதல் கட்டமாக 20 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும். எனவே, அனைவரும் வரி மற்றும் வாடகை பாக்கிகளை செலுத்தாவிட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    அழகன்குளத்தில் நடந்த தொல்லியல் ஆய்வின் முடிவுகளை வெளியிடக்கோரிய வழக்கு: தொல்லியல் துறை இயக்குனர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை


    மதுரை: அழகன்குளத்தில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வின் முடிவுகளை வெளியிட கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில தொல்லியல்துறை இயக்குனர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டதில் அழகன்குளம் என்ற இடத்தில் மத்திய அரசின் சார்பாக தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் தீரன் என்ற திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் அழகன்குளம் என்கின்ற பகுதியில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாள சான்றுகள் ஆங்காங்கே தென்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது தொல்லியல்துறை ஆய்வுகளை மேற்கொன்டு வருகிறது. இதுவரை மத்திய, மாநில அரசுகளின் சார்பாக 7 முறை அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றுள்ளது. ஆனால் இதுவரையும் எந்தவித தெளிவான அறிக்கையும் வெளியிடப்படவில்லை. 1992ம் ஆண்டு ஒரே ஒரு முறை அறிக்கை வெளியிடப்பட்டது.

    அந்த அறிக்கையும் விரிவான அறிக்கையாக இல்லை. எனவே இங்கு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டதற்கான அறிக்கையை விரைவாகவும், தெளிவாகவும் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடும் பட்சத்தில் கீழடியை போன்று பல்வேறு வரலாற்று உண்மைகள் அங்கு கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். அதேபோல அங்கு கிடைக்கப்பெற்ற அரியவகை பொருட்களை பாதுகாக்க அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் துரைசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுவரை அகழ்வாராய்ச்சியின் அறிக்கைகள் ஏன் வெளியிடப்படவில்லை? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அறிக்கை தயாரிப்பது மற்றும் அருங்காட்சியகம் அமைப்பது குறித்து மத்திய, மாநில அரசுகளின் கீழ் செயல்படும் தொல்லியல் துறை ஒரு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கண்துடைப்பாய் போன அரசு உத்தரவு: தடை பிளாஸ்டிக் பொருட்கள் மீண்டும் தாராளமாக புழக்கம்

    சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீண்டும் தாராளமாக புழக்கத்தில் உள்ளதால் தடை கண்துடைப்பாய் போனது. தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு ஜன.1முதல் பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் டீ கப், பிளாஸ்டிக் கொடி உள்பட 14 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவற்றை பயன்படுத்தும் கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் நடந்தன. சிவகங்கை மாவட்டத்திலும் கடந்த ஆண்டில் பிளாஸ்டிக் பைகள், டம்ளர் வகையிலான சிறிய, பெரிய கப்புகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் சில நாட்கள் எடுக்கப்பட்டன. உணவு பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நகரங்களில் உள்ள நிறுவனங்கள், கடைகள் ஆகிய இடங்களில் சோதனை செய்து அனைத்து வகையான பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோல் வாரச்சந்தை, தினசரி சந்தைகளில் காய்கறிகள், பொருட்கள் வழங்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு வாரம் மட்டும் மாவட்டம் முழுவதும் சுமார் 5 டன் அளவிலான பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், நீர் குடிக்கும் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் அதன்பிறகு பறிமுதல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது. இதனால் தற்போது மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் வழக்கம்போல் பயன்பாட்டில் உள்ளன. பெரிய வர்த்தக நிறுவனங்களில் மட்டும் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யவில்லை.

    இவைகள் தவிர கடைகள், சந்தைகள், டீக்கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மீண்டும் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. டீக்கடைகளில் சில நாட்கள் பயன்படுத்தப்படாமல் இருந்த பேப்பர் கப்புகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. டாஸ்மாக் பார்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகளும் சில நாட்கள் மட்டும் நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் புழக்கத்தில் வந்துள்ளன. எனவே பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, ‘பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் முன்பு போல் புழக்கத்தில் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகளை பொதுமக்கள் உணர்ந்து வேறு பொருட்களுக்கு மாற தொடங்கினர். ஆனால் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்களை புழக்கத்தில் விட்டுள்ளனர். இதனால் அரசின் தடை உத்தரவு சிவகங்கை மாவட்டத்தில் பெயரளவிற்கு மட்டுமே உள்ளது. முற்றிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    மதுரை ஆதீன வளாகத்தில் இருந்த விநாயகர் சிலை திருடப்பட்டதாக போலீசில் புகார்


    மதுரை: மதுரை ஆதீன வளாகத்தில் இருந்த விநாயகர் சிலை திருடப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆதீனத்துக்கு அருகில் விடுதி நடத்தி வரும் இளவரசன் என்பவர் அடியாட்கள்களுடன் வந்து சிலையை திருடி சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிலையை எடுத்து செல்ல தன்னிடம் நீதிமன்ற உத்தரவு இருப்பதாக கூறி இளவரசன் மிரட்டியதாக ஆதீன ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர்.
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    நெல்லையில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.... ஜேஎன்யு மாணவர்கள் மீது தாக்குதலுக்கு கண்டனம்


    நெல்லை: டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகம் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து நெல்லையில் தனியார் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து மாணவர்கள் கண்டன முழுக்கங்களை எழுப்பினர்.

    இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகம் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்.

    இந்த போராட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் அரசு தொடர்ந்து ஈடுப்பட்டு வருவதகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
     
  9. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    நிலக்கடலை பயிர் சாகுபடிக்கு தூறல் மழை கைகொடுக்குமா?...டெல்டா விவசாயிகள் கவலை


    டெல்டா மாவட்டத்தில் தூறல் மழை பெய்து வருவதால் மார்கழி பட்டம் நிலக்கடலை சாகுபடி கைகொடுக்குமா என்ற அச்சத்தில் விவசாயிகள் கவலையில் உள்ளனர். டெல்டா மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கம்போல் நடைபெறும் ஒருபோகம் சம்பா சாகுபடி நடக்கவில்லை. இதனால் பெரும்பாலான மணல் மற்றும் மேடான பகுதிகளில் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்து வந்தனர். நெல் சாகுபடிக்கு மட்டுமின்றி பூச்சி மற்றும் நோய் தாக்குதலின்றி அதிக மகசூல் கிடைக்கக்கூடிய ஆடிப்பட்டம் உகந்தது போல் நிலக்கடலை சாகுபடிக்கு மார்கழி பட்டம் உகந்ததாகும். எனவே நிலக்கடலை சாகுபடியை கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் செய்து வருகின்றனர். இந்தாண்டு நெல் சாகுபடி அதிகளவில் நடந்து இருந்தாலும்.கடலை சாகுபடி செய்யும் இடங்களை நெல் சாகுபடி செய்யாமல் கடலை சாகுபடிக்காக ஒதுக்கி போட்டு வைத்துள்ளனர். நெல் சாகுபடி காலதாமதமாக நடந்துள்ளதால் மார்கழி மாதத்துக்குள் அறுவடைக்கு வராது என்பதால் ஏற்கனவே கடலை சாகுபடி உள்ள இடங்களை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படி ஒதுக்கிய இடங்களிலும் தொடர்ந்து பெய்து வந்த மழையால் மார்கழி பட்டம் நிலக்கடலை சாகுபடிக்கு கைகொடுக்குமா என்ற அச்சத்தில் விவசாயிகள் இருந்து வந்தனர்.

    ஆனால் கடந்த 10 நாட்களாக மழையின்றி வெயில் அடித்து வந்ததால் கடைமடை விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக ஆங்காங்கே திடீர் திடீரென தூறல் மழை பெய்ய துவங்கியுள்ளது. கனமழை பெய்தால் விதைப்பு செய்த நிலக்கடலை அனைத்தும் சேதமடைய வாய்ப்புள்ளது. அதற்கேற்றாற்போல் வானிலை ஆய்வு மையமும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு செய்திருந்த நெல் சாகுபடி ஆணைக்கொம்பன் நோயால் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. நிலக்கடலை சாகுபடியாவது கை கொடுக்கும் என எண்ணி மார்கழி பட்டம் கடலை சாகுபடியை துவங்கியுள்ளோம். கடலை விதைப்பு செய்த 15 நாட்களுக்கு மழை பெய்யக்கூடாது. அதற்குள் மழை பெய்தால் மெல்லிய தோல் உடைய கடலைவிதை பருப்புகள் தோல் அழுகி முளைப்பு திறனை இழந்து விடும். கடந்த 10 நாட்களாக நல்ல வெயில் அடித்து வந்தது. ஆனால் வானிலை மையம் அறிவித்ததுபோல் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக தூறல் மழை பெய்ய துவங்கியுள்ளது. கனமழை பெய்தால் கடலை சாகுபடி சேதமடைந்து விடுமோ என அச்சமாக உள்ளது என்றனர்.
     
  10. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    வெங்கமேடு அம்மன் நகர் முதல் தெருவில் ஜல்லி கற்கள் கொட்டியும் சாலை அமைக்காததால் மக்கள் அவதி

    கரூர்: கரூர் வெங்கமேடு அம்மன் நகர் முதல் தெருவில் விரைவில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு அம்மன் நகர் முதல் தெரு பகுதியில் பழுதடைந்த சாலையை தார்ச்சாலையாக்கும் வகையில் பெயர்க்கப்பட்டு புதிதாக ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டன. தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், சில காரணங்களால் பணிகள் பாதியில் நிற்கிறது. இதன் காரணமாக இந்த சாலையின் வழியாக நடந்தோ, வாகனங்களில் செல்வதற்கோ பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மேலும் திட்டச்சாலை முதல் பல்வேறு பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக இந்த சாலை உள்ளதால் அதிக வாகன போக்குவரத்து இதில் நடைபெற்று வருகிறது. எனவே அனைத்து தரப்பு மக்களின் வேண்டுகோளை ஏற்று அம்மன் நகர் பகுதியில் தார்ச்சாலை அமைக்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
     

Share This Page