Todays news 08.01.2020

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Jan 8, 2020.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    காளையார்கோவிலில் பூட்டியே கிடக்கும் சிறுவர் பூங்கா: பொருட்கள் சேதமாகி வருவதால் மக்கள் கவலை

    காளையார்கோவில்: காளையார்கோவிலில் பல லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் அங்குள்ள பொருட்கள் சேதமாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அருகில் கடந்த ஜூன் மாதம் (2019) புதிய தாலுகா அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது. அத்துடன் சேர்த்து ரூ.30 லட்சம் மதிப்பில் சிறுவர் விளையாட்டு பூங்கா, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் வகையில் உடற்பயிற்சி கூடம், வாக்கிங் பாதை, கழிப்பறை போன்றவை அமைக்கப்பட்டது.

    இவை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டு இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பூங்காவில் உள்ள உடற்பயிற்சி உபகரணங்கள், கழிப்பறை கதவுகள் உள்பட பல்வேறு பொருட்கள் சேதம் அடைந்து வருகின்றன. தவிர மாலைநேரங்களில் இப்பூங்கா சமூகவிரோதிகளின் கூடாராமாகவும் மாறி வருகிறது. மேலும் பூங்காவை சுற்றி அமைக்கப்பட்ட மின்விளக்குகள் எரியாமல் இருப்பதால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்ல பெண்கள் அச்சப்படுகின்றனர்.

    விடுமுறை நாட்களில் பூங்காவை சுற்றி அமைக்கப்பட்ட கம்பி வேலிகள் மீது ஏறி ஆபத்தான முறையில் உள்ளே குதித்து விளையாடி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பல லட்சம் செலவில் கட்டப்பட்டு வீணாகி வரும் பூங்காவை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கரூர் கமிஷன் மண்டிக்கு ஏலத்திற்கு வந்து குவிந்த மருத்துவ குணம் வாய்ந்த செவ்வாழை தார்கள்

    கரூர்: கரூர் வாழைத்தார் கமிஷன் மண்டிக்கு மருத்துவ குணம் வாய்ந்த செவ்வாழை தார்கள் ஏலத்துக்கு அதிகளவு வந்துள்ளன. கரூர் ரயில் நிலையம் செல்லும் சாலையோரம் வாழைத்தார் கமிஷன் மண்டி கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மண்டிக்கு திருச்சி, நாமக்கல், கரூர், சேலம், திண்டுக்கல் ஆகிய மாவட்ட பகுதிகளில் இருந்து வாழை விவசாயிகளால் கொண்டு வரப்படும் வாழைத்தார்கள் அனைத்தும் இங்கு வைத்து ஏலம் விடப்பட்டு வருகிறது. வியாபாரிகள் தங்களின் தேவைக்கு ஏற்ப இதனை ஏலம் எடுத்துச் சென்று வருகின்றனர். அந்த வகையில் கமிஷன் மண்டிக்கு பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி போன்ற ரகங்கள் நேற்று ஏலத்துக்கு வந்தன. தற்போதைய நிலையில் குறிப்பிடத்தக்க அளவில் தார்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டுள்ளன. ஒரு சில நாட்களில் பொங்கல் பண்டிகைக்கான ஏலம் விடும் சமயத்தில் அதிகளவு காய்கள் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று கமிஷன் மண்டிக்கு திருப்பூர் மாவட்டம் சிவகிரி, திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து அதிகளவு செவ்வாழை ரகங்கள் ஏலத்துக்கு வந்தன.

    மருத்துவ குணம் வாய்ந்த பழங்களில் இந்த செவ்வாழையும் ஒன்று என்பதால் ஏராளமான வியாபாரிகள் இதனை ஏலம் எடுத்துச் சென்றனர். அந்த வகையில் செவ்வாழை ஒரு காய் ரூ.8, 9 மற்றும் 10 என்ற அளவில் வியாபாரிகளால் காய்களின் தரம் மற்றும் அளவுக்கு ஏற்ப ஏலம் எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விவி கமிஷன் மண்டி நிர்வாகி வாங்கல் முருகையன் கூறுகையில், பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி போன்ற வாழைத்தார் ரகங்கள் வழக்கமாக ஏலத்துக்கு வரும். செவ்வாழை ரகங்கள் எப்போதாவது ஏலத்துக்கு வரும். அந்த வகையில், நேற்று இரண்டு மாவட்ட பகுதிகளில் இருந்து செவ்வாழை ரகங்கள் ஏலத்துக்கு வந்தன. வியாபாரிகளும் ஆர்வத்துடன் ஏலம் எடுத்துச் சென்றனர். மேலும், விரைவில் பொங்கல் பண்டிகை வரவுள்ளதால் காய்கள் வரத்தும் அதிகமாக இருக்கும். விலையும் சற்று கூடுதலாகவே இருக்க வாய்ப்புள்ளது என்றார்.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    அழகன்குளத்தில் நடந்த தொல்லியல் ஆய்வின் முடிவுகளை வெளியிடக்கோரிய வழக்கில் தொல்லியல் துறைக்கு நோட்டீஸ்

    மதுரை: அழகன்குளத்தில் நடந்த தொல்லியல் ஆய்வின் முடிவுகளை வெளியிடக்கோரிய வழக்கில் தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய மாநில தொல்லியல்துறை இயக்குனர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அழகன்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட கலைப் பொருட்களை பாதுகாக்க அருங்காட்சியகம் அமைக்கக்கோரி ராமநாதபுரம் வழக்கறிஞர் தீரன் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கிளை நோட்டீஸ் அளித்துள்ளது.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    நகராட்சி பகுதியில் குப்பைகளை அகற்றாததால் மலை போல் குவிந்து சீர்கேடு

    கரூர்: கரூர் நகராட்சி பகுதியில் குப்பைகளை அவ்வப்போது அகற்றாததால் குவிந்து சுகாதார கேடு ஏற்படுகிறது. கரூர் நகராட்சி பகுதியில் கரும்புச்சாறு கடைகள் 15க்கும் மேல் செயல்படுகின்றன. இப்பகுதியில் சேகரமாகும் கரும்பு சக்கைகளை அந்தந்த பகுதியில் அருகாமையில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்ட குப்பை தொட்டிகளில் கொட்டி வந்தனர். குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டிருந்த இடங்களில் அவை அகற்றப்பட்டு விட்டன. இதனால் நகராட்சிபணியாளர்கள் வந்து குப்பைகளை பெற்றுச்செல்கின்றனர். இவர்கள் 4 நாளைக்கு ஒரு முறை அல்லது 3 நாளைக்கு ஒருமுறையே வருகின்றனர். இதனால் மூட்டைகளில் வைக்கப்பட்டுள்ள கரும்புசக்கைகள் மக்க ஆரம்பித்து கெட்டவாடை வீசி சுகாதார கேடு ஏற்படுகிறது.

    அவ்வப்போது குப்பைகளை அகற்ற வேண்டும். தொட்டிகளை அகற்றி விட்டதால் எங்கு போய் கொட்டுவது என தெரியவில்லை. இதற்கு நகராட்சி நிர்வாகம் தீர்வுகாண வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கரூர் வெங்கமேடு திட்டச்சாலை பகுதியில் குப்பைகள் அகற்றப்படாததால் மலைபோல குவிந்து விட்டது. இதனால் சுகாதாரகேடு ஏற்பட்டது. மேலும் குப்பை கொட்ட இடமின்றி அதன்மீதே பொதுமக்கள் கொட்டினர். மேலும் வெங்கமேடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கீழ்புறம் குப்பை மூட்டை மூட்டையாக வைக்கப்பட்டிருந்தன. சுகாதாரகேடு கண்டித்து பொதுமக்கள் போராட்டம் அறிவித்ததையடுத்து இந்த குப்பைகள் தற்போது அள்ளப்பட்டு வருகின்றன,

    ஈசுவரன் கோயில் பகுதியில் குப்பைகளால் சுகாதாரகேடு

    கரூர் ஈசுவரன்கோயில் பக்கவாட்டில் ஒரு குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. கோயில் அன்னதானம், பிரசாதம் வழங்குதல் போன்ற இலைகள் இங்கு கொட்டப்படுகின்றன. அருகில் உள்ள கட்டிடங்களிலும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இவை முறையாக அகற்றப்படவில்லை. இதனால் குப்பை தொட்டி வழிகிறது. மேலும் வேறு பகுதியில்உள்ள குப்பைகளையும் இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இதனால் கோயில் புனிதம் கெட்டு துர்நாற்றம் சுகாதாரகேடு ஏற்படுகிறது. குப்பை தொட்டிகளை அகற்றியதால் ஆங்காங்கே குப்பைகள் கொட்டி எரிக்கப்படும் நிலைஉருவாகியுள்ளது என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    எள் சாகுபடியில் நாமக்கல் பெண் விவசாயி அபாரம்... 1 ஏக்கரில் 484 கிலோ எள் மகசூல் செய்து சாதனை

    நாமக்கல்: 1 ஏக்கரில் 484 கிலோ என எள் மகசூல் செய்து சாதனை படைத்த பெண் விவசாயிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள குஞ்சம் பாளையத்தை சேர்ந்த பாப்பாத்தி என்ற பெண் விவசாயிதான் அவர். பொதுவாக ஒரு ஏக்கரில் 300 கிலோ எள் மகசூல் கிடைப்பதே சாதனை என்று கூறப்படும் நிலையில் பெண் விவசாயின் அபார சாதனையை ஒட்டுமொத்த விவசாயிகளும் பாராட்டி வருகின்றனர்.

    எள் சாகுபடியில் அதிக மகசூல் படைத்ததுக்காக விவசாயி பாப்பாத்தியை பாராட்டி முன்னோடி விவசாயி என்ற விருதை பிரதமர் மோடி அண்மையில் வழங்கினார். 30 ஆண்டுகளுக்கு முன் கணவர் காலமானதால் விவசாயத்தை மேற்கொள்ள தொடங்கிய பாப்பாத்திக்கு தற்போது 61 வயது ஆகியது. குடும்பத்தை காப்பாற்ற வயலுக்கு சென்ற அவருக்கு எள் மகசூல் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தி இருக்கிறது.

    நாட்டின் முதுகு எலும்பான விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்பதே விவசாயி பாப்பாத்தியின் கோரிக்கையாகும்.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    செங்கம் ஒன்றியம் 26-வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில்குமார் வெற்றி

    செங்கம்: செங்கம் ஒன்றியம் 26-வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில்குமார் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் செந்தில்குமரனை விட 1,380 வாக்குகள் அதிகம் பெற்று செந்தில்குமார் வெற்றி பெற்றுள்ளார்.
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு கடை பொக்லைன் உதவியுடன் அகற்றம்: அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு

    கரூர்: கரூர் நகராட்சி ஆக்கிரமிப்பு கடை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. கோர்ட்டு உத்தரவைக்கேட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அண்ணாசிலை அருகேயும் பத்திரப்பதிவு அலுவலகம் எதிர்புறமும் நகராட்சி அனுமதியுடன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நகரமைப்பு அலுவலர் அன்பு, டவுன் போலீசாருடன் நேற்று வந்தனர். ஆஸ்பத்திரி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஒருகடையை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்தனர். நகராட்சி நிர்வாகத்தினால் கொடுக்கப்பட்ட பெட்டி மட்டுமே இருக்க வேண்டும். மற்ற கட்டுமானங்கள் இடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதில் ஒரு கடை திமுக மாவட்ட துணை செயலாளர் மகேஸ்வரி நடத்துவது என்பதால் அங்கு கட்சியினர் குவிந்தனர். வக்கீல்களும் வந்தனர். நகராட்சி அதிகாரிகளிடம் கோர்ட்டு உத்தரவைக் காண்பிக்குமாறு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் ஒரு கடை நகராட்சியால் அனுமதிக்கப்பட்ட இடம் அளவுக்கே கட்டப்பட்டிருக்கிறது என அலுவலர்கள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பிரச்சனையால் அப்பகுதியில ஒருமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    வாடகை பாக்கி செலுத்தாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும்

    இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கரூர் நகராட்சிக்கு பாத்தியப்பட்ட குத்தகை இனங்களில் வாடகை பாக்கி உள்ள கடைகளை பூட்டி சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலான கடைஉரிமையாளர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையினை உரிய காலத்தில் செலுத்தாததால் நகராட்சிக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி கடைகளின் உரிமதாரர்கள் அவரவர் கடைகளுக்கான நாளது தேதி வரையிலான வாடகை நிலுவைத்தொகையினை உடனடியாக செலுத்தி, சட்டப்படியான மேல்நடவடிக்கைகளை தவிர்த்து, ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனர்.
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    மாவட்டத்தில் பனியால் பசுந்தேயிலை வரத்து குறைந்தது: தொழிற்சாலைகளில் உற்பத்தி சரிவு


    மஞ்சூர்: பனி தாக்குதலால் பசுந்தேயிலை உற்பத்தி குறைந்ததை தொடர்ந்து தொழிற்சாலைகளில் தேயிலைதுாள் உற்பத்தியும் சரிந்தது. நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் தேயிலை விவசாயம் முக்கியத்தொழிலாக உள்ளது. இதை முன்னிட்டு மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்தலார், மேற்குநாடு, நஞ்சநாடு உள்பட மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு ஆலைகள் இயங்கி வருகிறது. இது தவிர நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் மற்றும் எஸ்டேட்களுக்கு சொந்தமான தொழிற்சாலைகளும் உள்ளன. இந்நிலையில், கடந்த ஆகஸ்டில் துவங்கி தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக குந்தா பகுதியில் பரவலாக நல்ல மழை பெய்தது.

    இதை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது தோட்டங்களுக்கு உரமிடுதல் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டார்கள். இதனால் தேயிலை மகசூல் பெருமளவு அதிகரித்தது. கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் தினசரி 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் கிலோ வரை பசுந்தேயிலை வரத்து காணப்பட்டது. தினசரி உற்பத்தி திறனுக்கும் மேலாக பசுந்தேயிலை வரத்து பலமடங்கு உயர்ந்ததால் தொழிற்சாலைகள் திணறின. மஞ்சூர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான கூட்டுறவு, தனியார் தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை கொள்முதலில் ‘கோட்டா’ முறை அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் பனி விழத்துவங்கியது.

    ஆரம்பம் முதலே பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும், பகல் நேரங்களில் பெரும்பாலும் பனி மூட்டமான காலநிலை காணப்படுகிறது. இதனால் பசுந்தேயிலை மகசூல் பாதித்துள்ளது. பனியின் தாக்கத்தால் பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் கொப்புளநோய் தாக்குதலும் ஏற்பட்டுள்ளது. பசுந்தேயிலை வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. பசுந் தேயிலை வரத்து குறைந்ததால் கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் தேயிலைதுாள் உற்பத்தியும் சரிந்துள்ளது.
     
  9. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பழநி கோயிலில் சிறப்பு தரிசனம்: அமைச்சர்கள் பரிந்துரை கடிதங்களால் கலங்கும் அதிகாரிகள்

    பழநி: பழநி கோயிலில் சிறப்பு தரிசனம் செய்வதற்கு அமைச்சர்கள் வழங்கும் அதிகளவிலான பரிந்துரை கடிதங்களால் அதிகாரிகள் கலங்கி போய் உள்ளனர். அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கார்த்திகை மற்றும் வார விடுமுறை நாட்களிலும், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழா காலங்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மலைக்கோயில் இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசைகளில் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதுபோல் முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் போன்றோருக்கு சிறப்பு அனுமதி கடிதம் வழங்கப்படும். இதன்மூலம் விரைவில் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில வருடங்களாக முக்கிய பிரமுகர்களுக்கு கோயில் நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அனுமதி கடிதத்தை பலர் முறைகேடாக பெற்று தரிசனத்திற்கு அழைத்து சென்று பணம் பார்த்து வந்தனர். கடந்த ஆங்கில புத்தாண்டு தினத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வரும் வழியில் ஏராளமானோர் உள்ளே புகுந்து விட்டதால் அங்கு களேபரமான சூழல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து கோயில் நிர்வாகம் சிறப்பு அனுமதி கடிதம் வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. இதன் காரணமாக தற்போது பெரிய அளவில் முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன. ஆனால், கோயில் நிர்வாகத்திற்கு அமைச்சர்கள் தரும் பரிந்துரை கடிதங்கள் நாள்தோறும் மலைபோல் குவிந்து விடுவதால் கோயில் அதிகாரிகள் செய்வதியாது திகைத்து போய் உள்ளனர்.

    இதுகுறித்து கோயில் ஊழியர்கள் சிலர் கூறியதாவது, ‘பழநி கோயில் நிர்வாகத்தால் சிறப்பு அனுமதி கடிதம் வழங்குவது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வழங்கும் பரிந்துரை கடிதங்கள் குறைவில்லாமல் நாள்தோறும் மலைபோல் குவிந்து கிடக்கிறது. நாளொன்றிற்கு 300 சிறப்பு அனுமதி மட்டுமே வழங்கப்பட வேண்டுமென உயர் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அமைச்சர்களின் பரிந்துரை கடிதங்கள் அளவில்லாமல் வருகிறது. அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பரிந்துரை கடிதங்கள் வழங்குவதை முறைபடுத்தி கொண்டாலே பக்தர்கள் இடையூறின்றி சாமி தரிசனம் செய்யலாம்’ என்றனர்.
     
  10. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கடத்தப்பட்டதாக கூறப்படும் முதுகுளத்தூர் திமுக ஒன்றிய கவுன்சிலரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு

    மதுரை: கடத்தப்பட்டதாக கூறப்படும் முதுகுளத்தூர் திமுக ஒன்றிய கவுன்சிலரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் தந்தையான சாத்தையாவை நாளை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தவறும் பட்சத்தில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
     

Share This Page