Todays news 08.01.2020

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Jan 8, 2020.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,501
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    தண்ணீர் பெருகி கிடக்கும் நீர்நிலைகளில் தொடரும் உயிர் பலி சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை

    சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்ட கிராமங்களில் ஊரணி, கண்மாய் போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் பெருகி கிடப்பதால் குளிக்க செல்வோர் சிக்கி பலியாவது தொடர்ந்து வருகிறது. எனவே அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பீட்டில் கண்மாய்கள் புனரமைப்பு மற்றும் மதகுகள் புதுப்பித்தல், தேவையான இடங்களில் புதியதாக மதகு அமைத்தல் பணிகள் நடந்தது. ரூ.13.97 கோடி மதிப்பீட்டில் வைகை பரமக்குடி வடிநில கோட்டத்தின் கீழ் ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்தூர் வட்டங்களில் 41 கண்மாய்களை சீரமைக்க ரூ.23.62 கோடியும், மதுரை குண்டாறு வடிநில கோட்டத்தின் கீழ் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி வட்டங்களில் 28 கண்மாய்கள் சீரமைக்கப்பட்டது.

    11 ஊராட்சி ஒன்றியங்களிலும், யூனியன் பொதுநிதியிலிருந்து பஞ்சாயத்து ஊரணி, கண்மாய் சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஆழப்படுத்தப்பட்டு, கரை பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்தாண்டு, மாவட்டத்தின் பிரதான மழையாக கருதப்படும் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்தது. கடந்தாண்டுகளில் தொடர் வறட்சியால் குடிநீருக்கு பரிதவித்த கிராம மக்கள், தற்போது பெய்த மழைக்கு தன்னார்வத்துடன் ஊரணி, கண்மாயிகளில் மழைநீரை சேமித்தனர். இதனால் கிராமங்களில் உள்ள பெரும்பாலான ஊரணி, கண்மாய்கள் முழுமையாக நிறைந்து காணப்படுகிறது. ஊரணி தண்ணீரை கிராம மக்கள் குளிப்பதற்கு, துணிகளை சலவை செய்வதற்கு, கால்கடைகளுக்கு தண்ணீர் காட்டுதல் போன்றவற்றிக்கு பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஊரணியில் குளித்து வருகின்றனர். இந்நிலையில் தண்ணீர் மூழ்கி இறப்பதும் தொடர்ந்து வருகிறது. இதனால் கிராமமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    கடந்த மாதங்களில் சாயல்குடி அருகே உள்ள மேலக்கிடாரத்தை சேர்ந்த உதயகமலேஷ் என்ற பள்ளி மாணவன், கடுகுசந்தை கிராமத்தைச்சேர்ந்த குருபாலன்(16) என்ற மாணவன், பரமக்குடி அருகே பெருமாள்கோயில் கிராமத்தில் தேசிகா(5), காவியா(8) என்ற இரு மாணவிகள், ராமநாதபுரத்தில் ஒருவரும் ஊரணியில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இந்நிலையில் ஜன. 5ந்தேதி இரவு சிக்கல் பாண்டியன் ஊரணியில் ராமசாமி(65) என்ற முதியவர் உயிரிழந்தார். இது போன்று கால்நடைகளும் தண்ணீர் குடிக்க செல்லும்போது தவறி விழுந்து, சகதியில் மாட்டி இறப்பதும் தொடர்கிறது. எனவே பலிகளை தடுக்க ஊரணிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கவேண்டும். பஞ்சாயத்துகள் சார்பில் அபாயம் குறித்த முன் எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும். காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,501
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கும்பகோணம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்... கைகளில் கருப்புக்கொடி ஏந்தி அரசுக்கு எதிராக முழக்கம்


    கும்பகோணம் : கும்பகோணம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் வயலில் இயங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். கருப்பு கொடிகளை கைகளில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திய விவசயிகள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். நகை கடன் உள்ளிட்ட கடன்களுக்கு வட்டி விகிதம் குறைக்க வேண்டும். மேலும் பயிர்கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தக்கப்பட்டது.

    தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. மேலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாட்களாக உயர்ச்சி வழங்க வேண்டும் என்பது அவர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,501
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பொங்கல் பண்டிகை நெருங்குவதால் அறுவடைக்கு தயாரான மஞ்சள் செடிகள்: விவசாயிகள் மகிழ்ச்சி

    பரமக்குடி: பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி பரமக்குடியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மஞ்சள் செடிகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. தமிழர்களின் அறுவடை திருநாளான பொங்கல் தினத்தன்று மாவிலை தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்து, மஞ்சள் கொத்துகள் கட்டிய பானையில், புதிய அரிசியில் பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் விவசாயிகள் அனைவரும் கரும்பு, மஞ்சள் மற்றும் இஞ்சி சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பரமக்குடி அருகே வைகை ஆற்றின் வடகரையில் உள்ளது மஞ்சள்பட்டினம். இங்குள்ள விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது மஞ்சள் கொத்துக்கள் சாகுபடி செய்வது வழக்கம்.

    மஞ்சள்பட்டினம் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். ஆறு மாத பயிரான மஞ்சள் பயிர் பருவமழையை நம்பி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை நன்றாக கைகொடுத்த நிலையில் நன்கு வளர்ந்து, பூமிக்கு கீழ் கிழங்கு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. பொங்கல் தினத்திற்கு இரு நாட்களுக்கு முன்பு, அறுவடை செய்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்ல விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தாண்டு மஞ்சள் பயிர்கள் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,501
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சிறுகுன்றா எஸ்டேட் பஜாரில் ரேஷன் கடையை உடைத்து யானைகள் அட்டகாசம்: பொதுமக்கள் பீதி

    வால்பாறை: வால்பாறை அடுத்த சிறுகுன்றா எஸ்டேட் பஜாரில் காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தியதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். வால்பாறை வனப்பகுதியில் யானைகள், சிறுத்தை, கரடி, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குள்ள உள்ளன. இவை அவ்வப்ேபாது வனங்களில் இருந்து வெளியேறி இறை உண்பதற்காக குடியிருப்பு, தேயிலைதோட்டம், ரேஷன் கடைளில் உள்ளிட்டவற்றையில் புகுந்து அட்டகாசம் செய்து வருவது தொடர்கதையாக உள்ளது. நேற்று அதிகாலை 4 மணியளவில் வால்பாறை அடுத்துள்ள சிறுகுன்றா எஸ்டேட் பஜாரில் 4க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்தன. பின் அங்கு இருந்த ரேஷன் கடையை உடைத்து உள்ளே இருந்த அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை வாரி இறைத்து சாப்பிட்டும் வீசியும் சேதப்படுத்தி உள்ளன.

    மேலும், அருகில் இருந்த மளிகைக்கடை, டீக்கடைகளையும் உடைத்து சேதப்படுத்தின. இதனால் அப்பகுதியில் மக்கள் பீதியடைந்து குடியிருப்புகளிலேயே தஞ்சமடைந்தனர். இதையறிந்த வனத்துறையினர் யானைகளை விரட்ட அப்பகுதியில் அதிகாலை முதலே முகாமிட்டனர். இருப்பினும் வனத்துறையினருக்கு டிமிக்கி கொடுத்த யானைகள் தொழிலாளர் குடியிருப்புகள் வழியாக புகுந்து அப்பகுதியில் உள்ள வனத்துறை ஆய்வு மாளிகையை முற்றுகையிட்டவாறு நின்றன. இதையடுத்து வனத்துறை ஊழியர்கள், காட்டு யானைகளை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இச்சம்பவத்தால் எஸ்டேட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,501
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    திருப்பத்தூர் அருகே ஏலகிரி மலையில் விதிகளை மீறி இயங்கும் நீச்சல் குளங்கள், சாகச விளையாட்டு பூங்காக்கள்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைக்கு சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை

    திருப்பத்தூர்: ஏலகிரி மலையில் அனுமதியின்றி இயங்கும் நீச்சல் குளங்கள், சாகச விளையாட்டு பூங்காக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரிமலை சுற்றுலாத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டு முழுவதும் சம சீதோஷ்ண நிலை காணப்படுவதாலும், சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் உள்ளதாலும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து ஏலகிரியின் இயற்கை எழிலை ரசித்து செல்கின்றனர். மேலும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் குவிந்து, இங்குள்ள சொகுசு ஓட்டல்கள் மற்றும் பல்வேறு விடுதிகளில் தங்கி செல்கின்றனர்.

    இவர்களுக்காக ஏலகிரி மலையில் 80க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த ஓட்டல்கள், விடுதிகளில் 1800 பேர் வரை தங்கலாம். இங்குள்ள 10க்கும் மேற்பட்ட சொகுசு ஓட்டல்களில் நீச்சல் குளங்களும் உள்ளன. இந்த நீச்சல் குளங்கள் ஒரு சில ஓட்டல்களில் உரிமம் பெறாமலும், அரசு விதியின்படி கட்டப்படாமல் அதிக ஆழம் கொண்டவையாக உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள், குழந்தைகள் நீச்சல் குளங்களில் தவறி விழுந்து இறக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அத்தனாவூரில் உள்ள சாகச விளையாட்டு பூங்கா ஒன்றில் ரோஷன் என்ற 6 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் விழுந்து நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏலகிரி மலையில் அனுமதியின்றி கொட்டையூர், அத்தனாவூர், மங்கலம், பள்ளகணியூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சாகச விளையாட்டு பூங்காக்கள் இயங்கி வருகின்றன.

    இப்பூங்காக்களில் சுற்றுலா பயணிகளிடம் அதிக கட்டணத்தை வசூலித்துக் கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், செயல்படுவதாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த சாகச பூங்காக்கள் மற்றும் சொகுசு ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளங்கள் அரசின் விதிப்படி 4 அடி அளவில்தான் இருக்க வேண்டும். ஆனால் ஒரு சில ஓட்டல்களில் 12 அடிக்கும் மேல் ஆழமான நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது முற்றிலும் அரசு அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளங்கள் ஆகும். எனவே கலெக்டர் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு மக்கள் மற்றும் குழந்தைகளின் உயிர்களை பலி வாங்கும் நீச்சல் குளங்களை கண்காணித்து அந்த விடுதிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சீல் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

    இதுகுறித்து ஓய்வு பெற்ற தாசில்தார் ஒருவர் கூறியதாவது: ஏலகிரி மலையில் அதிகளவில் சொகுசு விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் யாரும் முறையாக அரசிடம் அனுமதி வாங்காமல் நீச்சல் குளங்கள் கட்டியுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். குறிப்பாக நீச்சல் குளம் அமைக்க வேண்டும் என்றாலும், சாகச பூங்காக்கள் அமைக்க வேண்டும் என்றாலும், முதலில் தாசில்தாரிடம் அனுமதி பெற்று, அதன்பிறகு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பேரிடர் மேலாண்மை, தீயணைப்புத்துறை, விளையாட்டு ஆணையத்திடம் பயிற்சி பெற்ற நீச்சல் பயிற்சியாளர் மூலம்தான் அந்த நீச்சல் குளத்தை அமைக்க வேண்டும் என்பது அரசின் விதி. ஆனால் இதுவரை ஏலகிரி மலையில் யாரும் அதை பின்பற்றியதாக தெரியவில்லை.

    மேலும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நீச்சல் குளத்தில் நீச்சலுக்கு அனுமதிக்கும் போது அவர்களுக்கு உண்டான தற்காப்பு மற்றும் பாதுகாப்பு கவசங்களையும் கொடுத்து தான் நீச்சல் குளத்தில் அனுமதிக்க வேண்டும். இதுபோன்ற விதிமுறைகளை கையாளாமல் விட்டதால்தான் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகிறது. இதனை தடுக்க வேண்டிய ஊரக வளர்ச்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாதம்தோறும் ஆய்வு மேற்கொண்டு கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையில் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் கலெக்டர் மூலம் அந்த விடுதிகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கலாம். அதன்படி கலெக்டர் தீவிர ஆய்வு மேற்கொண்டு சாகச விளையாட்டுப் பூங்கா மற்றும் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள நீச்சல் குளங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து கலெக்டர் சிவன்அருள் கூறியதாவது: கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாகச பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் ரோஷன் என்ற சிறுவன் நீரில் மூழ்கி இறந்தான். இந்த இழப்பு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இதுகுறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிமம் இல்லாமலும், அனுமதி இல்லாமலும் கட்டப்பட்டுள்ள நீச்சல் குளங்கள் மற்றும் பொழுதுபோக்கு சாகசங்களை ஆய்வு செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் மற்றும் விடுதிகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    அரசு சார்பில் நீச்சல் குளம் அமைக்க வேண்டும்
    ஏலகிரி மலையில் அனுமதியின்றி பல இடங்களில் நீச்சல் குளங்கள் உள்ளன. ஆனால் அரசு விளையாட்டுத்துறை சார்பில் நீச்சல் குளம் இங்கு அமைக்கப்படவில்லை. அனைத்து விதிகளின் கீழ் அரசின் சார்பில் ஏலகிரி மலையில் நீச்சல் குளம் அமைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேபோல் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் எந்த விதமான பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு இல்லை. ஆகையால் அரசு சார்ந்த சாகச விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களை நடத்த அரசு முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,501
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சுற்றுவட்டார கிராமங்களில் இளநீர் உற்பத்தி அதிகரிப்பு: விலை சரிவு

    பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் இளநீர் உற்பத்தி அதிகரிப்பால் விலை சரிந்துள்ளது. இதனால் வெளியூர்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது. பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் தென்னை விவசாயமே அதிகளவில் உள்ளது. இங்குள்ள தென்னைகளில் உற்பத்தியாகும் பச்சைநிற இளநீர் மற்றும் செவ்விளநீருக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இங்கிருந்து வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அதிகளவில், இளநீர் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் கடந்த 2017ம் ஆண்டு துவக்க முதல் 2018ம் ஆண்டு மே மாதம் வரை, போதிய மழையின்றி வறட்சி ஏற்பட்டதால் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தென்னைகளில் இளநீர் உற்பத்தி மிகவும் குறைந்தது. இதனால், வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் இளநீர் எண்ணிக்கை மிகவும் குறைந்தது.

    இதனால் இளநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு ஒரு இளநீர், தோட்டத்தில் ரூ.24வரை கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பின் கடந்த 2019ம் ஆண்டு கோடை மழைக்கு பிறகு ஜூலை இறுதி முதல் தொடர்ந்து பல மாதமாக மழை பெய்துள்ளது. இதனால் தென்னை விவசாயம் செழித்தோங்க ஆரம்பித்தது. மேலும், தென்னையில் இளநீர் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்தது. இதன்காரணமாக கடந்த இரண்டு மாதத்திலிருந்து இளநீர் விலை சரிய துவங்கியது. கடந்த சில வாரமாக போதிய மழையில்லாமல் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியதால் பச்சை ரக இளநீர், செவ்விளநீரின் தேவை அதிகமானது. தற்போது இளநீர் உற்பத்தி அதிகமாக இருப்பதுடன் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும். ஐதரபாத், பெங்களூர், மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு லாரி, வேன் உள்ளிட்ட கனரக வாங்கனங்களில் கடந்த இரண்டு வாரமாக அனுப்பும் பணி தீவிரமடைந்துள்ளது. பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள தோட்டங்களில் தற்போது ரூ.19 அல்லது ரூ.20க்கு என மிகவும் குறைவான விலைக்கு வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். இளநீர் உற்பத்தி அதிகமாக இருந்தாலும், விலை சரிவால் உரிய விலை கிடைப்பதில்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர். இருப்பினும், வரும் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது, அதன்விலை உயர வாய்ப்புள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,501
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பொங்கல் பண்டிகை நெருங்குவதால் சுண்ணாம்பு கல் உற்பத்தி தீவிரம்: விலை கிடைக்காததால் உற்பத்தியாளர்கள் வேதனை

    பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் உள்ள சுண்ணாம்பு காளவாய்களில் பொங்கல் பண்டிகை நெருங்குவதால் சுண்ணாம்பு கல் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளான கண்ணப்பன்நகர், மோதிராபுரம், அம்பராம்பாளையம், கோமங்கலம், கோட்டூர், சேரிபாளையம், ஆண்டிபாளையம், அங்கலக்குறிச்சி உள்ளிட்ட பல இடங்களில் 75க்கும் மேற்பட்ட சுண்ணாம்பு காளவாய்கள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் சுண்ணாம்பு கல் கட்டிடம் கட்டுவதற்கும், வீட்டு கூரையின் மேல்பகுதியில் சுருக்கிபோடவும், வர்ணம் பூசுவதற்காகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி உள்ளூர், வெளியூரை சேர்ந்தவர்கள் வாங்கி சென்றனர். இதனால் அந்நேரத்தில் சுண்ணாம்பு கல் விற்பனை அதிகமாக இருந்ததுடன், அதன் உற்பத்தியாளர்களுக்கு ஓரளவு லாபம் கிடைத்து. நாளடைவில் கான்கிரீட் கட்டிடங்கள் அதிகரித்து வந்ததால் சுண்ணாம்பு தேவை குறைந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்களுக்கு சொற்ப லாபமே கிடைந்தது.

    இந்நிலையில், தற்போது வரும் 15ம் தேதி பொங்கல் பண்டிகை, நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்ாக வீடுகளில் வெள்ளை அடிக்க சுண்ணாம்பு கற்களை வாங்கி செல்வதை கிராம பகுதியினர் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சுண்ணாம்பு கல்லுக்குண்டான உரிய விலை கிடைப்பதில்லை என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சுண்ணாம்பு கல் உற்பத்தியாளர்கள் கூறுகையில்,
    ‘‘பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் குறிப்பிட்ட கிராமங்களில் மட்டுமே சுண்ணாம்பு கல் கிடைக்கிறது. அதை காளவாயில் வேகவைத்து விற்பனை செய்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது விற்பனை அதிகமாக இருக்கும். பொங்கல் பண்டிகை முடியும் வரை தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை இருக்கும். இந்த தொழிலில் 75 சதவீதம் பெண்களே ஈடுபடுகின்றனர். பொங்கல் பண்டிகை மட்டுமின்றி பிற பண்டிகை நாட்களிலும் தங்கள் வீடுகளில் வர்ணம் பூச கிராமம் மற்றும் வெளியூர்களில் இருந்து நேரடியாக வாங்கி சென்றனர். தற்போது பெரும்பலான வீடுகளுக்கு வண்ண வண்ண கலரில் வர்ணம் பூசுவதால், கடந்த சில ஆண்டுகளாக காளவாய்களில் சுண்ணாம்பு விற்பனை குறைந்துள்ளது.

    மேலும், வெளியூர்களில் இருந்து ஆர்டர் இந்த முறை மிகவும் குறைவாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு 25 கிலோ எடை கொண்ட ஒரு சுண்ணாம்பு பை ரூ.80முதல் ரூ.100வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போதும், அதே விலை நீடித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், வாகனங்களில் ஓடைக்கல் எடுத்துவர அதற்குறிய வாடகை கட்டணம் கூடுதலாகிறது. தொழிலாளர்களின் கூலித்தொகை போக லாபம் என்பது மிக, மிக குறைவாக உள்ளது. இருப்பினும், காலங்காலமாக செய்து வந்த இந்த தொழிலை கைவிடாமல் தொடர்ந்து நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். வருங்காலங்களில் இந்த தொழில் நலிவடையாமல் இருக்க அரசு மானியம் வழங்க வேண்டும்’ என்றார்.
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,501
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முருகனை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதிகோரி போலீஸ் மனுதாக்கல்

    திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முருகனை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதிகோரி போலீஸ் மனுதாக்கல் செய்துள்ளது. ஸ்ரீரங்கம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முருகனை ஆஜர்படுத்தி போலீசார் மனு அளித்துள்ளனர்.
     

Share This Page