Today's news(11.6.2019)

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Jun 11, 2019.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,805
    Likes Received:
    489
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    வத்திராயிருப்பு அருகே அரசுப் பள்ளியில் தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு

    வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே, அரசுப் பள்ளியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு அருகே, தம்பிபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். 15க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர்.

    பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்லில் போதிய தண்ணீர் வருவதில்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவ, மாணவியரின் புழக்கத்திற்கு தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. மேலும், போர்வெல்லில் போதிய தண்ணீர் உள்ளதா என்பதை ஆய்வு செய்து, இல்லாவிடில் மாற்று இடத்தில் போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளியில் ஊராட்சி நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்டுள்ள குழாயில் வரும் நீரை மேலேற்றி, மாணவர்களின் பயன்பாட்டிற்கு விநியோகம் செய்ய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தொட்டி காட்சிப் பொருளாக சாப்பிட்டவுடன் மாணவர்கள் கை கழுவ தண்ணீரின்றி அவதிப்படுகின்றனர். எனவே, வத்திராயிருப்பு ஒன்றியத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் குடிநீர் பிரச்னையை தீர்க்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,805
    Likes Received:
    489
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு: ஜாமின் கேட்டு இடைத்தரகர் லீலா 5வது முறையாக மனு தாக்கல்

    ராசிபுரம்: ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் சிறையில் உள்ள இடைத்தரகர் லீலா ஜாமின் கேட்டு 5வது முறையாக மனுதாக்கல் செய்துள்ளார். நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லீலா தாக்கல் செய்த ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வருகிறது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பேரம் பேசி குழந்தைகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பான ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், நந்தகுமார், ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி செவிலியர் பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உதவியாளர் சாந்தி, பெங்களூரு அழகுகலை நிபுணர் ரேகா மற்றும் இடைத்தரகர்கள் லீலா, ஹசீனா, அருள்சாமி, செல்வி என 11 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, இவர்களின் நீதிமன்ற காவல் கடந்த 6ம் தேதியோடு முடிவடைந்த நிலையில், 11 பேரையும் நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி அமுதவள்ளி உள்பட 11 பேரின் நீதிமன்ற காவலை வருகிற 20-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், இடைத்தரகர் லீலா ஜாமின் கேட்டு 5-வது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த மே மாதம் இடைத்தரகர்கள் அருள்சாமி, லீலா, செல்வி ஆகியோர் ஜாமின் கோரி நாமக்கல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை மே15ம் தேதி விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,805
    Likes Received:
    489
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    வாலாஜா சாலை - முகுந்தராயபுரம் இடையே பராமரிப்பு பணிகள் நடப்பதால் சில ரயில்கள் தாமதமாக செல்லும்: ரயில்வே

    சென்னை: வாலாஜா சாலை - முகுந்தராயபுரம் இடையே பராமரிப்பு பணிகள் நடப்பதால் சில ரயில்கள் தாமதமாக செல்லும் என ரயில்வே அறிவித்துள்ளது. ஜூன் 13-ம் தேதி ஜெயப்பூர்-கோவை வாராந்திர அதிவிரைவு ரயில் வாலாஜா ரோடு நிலைத்தில் 110 நிமிடங்கள் நின்று செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஜூன் 13-ம் தேதி ஹவுரா-யஷ்வந்த்ப்பூர் துரந்தோ விரைவு ரயில் தலங்கை நிலையத்தில் 105 நிமிடங்கள் நின்று செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 14-ம் தேதி காமக்யா - யஷ்வந்த்பூர் வாராந்திர குளிர்சாதன விரைவு ரயில் வாலாஜா ரோடு நிலையத்தில் 25 நிமிடங்கள் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,805
    Likes Received:
    489
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஸ்டெர்லைட் ஆலை வழக்கை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய புதிய அமர்வு விசாரிக்கும்: ஐகோர்ட் உத்தரவு

    சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை நீதிபதி சிவஞானம் மற்றும் நீதிபதி பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய புதிய அமர்வு விசாரிக்கும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். முன்னதாக வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சசிதரன் விலகி கொண்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்யக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.

    விசாரணையின் போது, ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தாவின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதும், நீதிபதி சசிதரன் விசாரிக்க மறுத்துவிட்டார். ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இருந்தபோது, சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி சசிதரன், தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.

    மேலும், வேறு அமர்வு அமைக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, உடனடியாக வேறு அமர்வை அமைக்க வேண்டும் என ஆலை தரப்பில் தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வில் முறையிடப்பட்டது. இந்த நிலையில், இதுசம்பந்தமாக பிற்பகலில் நிர்வாக உத்தரவு பிறப்பிப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கு, நாளை அல்லது நாளை மறுநாள் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,805
    Likes Received:
    489
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ரஜினி, கமல் அதிகாரப்பூர்வமாக யாருக்கு ஆதரவு என்று சொல்லும் வரை வதந்தி எதுவும் பரப்ப வேண்டாம்: நடிகர் விஷால்

    சென்னை: ரஜினி, கமல் அதிகாரப்பூர்வமாக யாருக்கு ஆதரவு என்று சொல்லும் வரை வதந்தி எதுவும் பரப்ப வேண்டாம் என நடிகர் விஷால் கூறினார். நிச்சயமாக இந்த வருடம் நடிகர் சங்க கட்டடம் திறப்பு விழா நடைபெறும் எனவும் தெரிவித்தார். மேலும் அனைத்து துறைகள் போலவே சினிமாவிலும் வெற்றி, தோல்வி என்பது உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,805
    Likes Received:
    489
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    நாடக நடிகர்களை அவமதிக்கும் வகையில் பேசிய பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கருணாஸ்

    சென்னை: நாடக நடிகர்களை அவமதிக்கும் வகையில் பேசிய பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ. கருணாஸ் கூறினார். மேலும் நடிகர் சங்க தேர்தல் நடத்தும் அதிகாரி ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனிடம் கருணாஸ் புகார் அளித்தார்.
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,805
    Likes Received:
    489
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஸ்டெர்லைட் ஆலை வழக்கை விசாரிக்க நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் புதிய அமர்வு அறிவிப்பு

    சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கை விசாரிக்க நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் புதிய அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி சசிதரன் விலகியதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,805
    Likes Received:
    489
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    நடிகர் சங்க தேர்தல்: 5 ஆண்டுகளாக சந்தா செலுத்தாத காரணத்தால் ரமேஷ்கண்ணா உட்பட 3 பேரின் மனுக்கள் நிராகரிப்பு


    சென்னை: நடிகர் சங்க தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் ரமேஷ்கண்ணா உள்ளிட்ட 3 பேர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு எதிர் வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் மேற்பார்வையில் சென்னை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடத்தப்படயுள்ளது. நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு இம்முறையும் நாசர் போட்டியிடுகிறார். மேலும் பொதுச் செயலாளர் பதவிக்கு நடிகர் விஷால் மனுதாக்கல் செய்துள்ளார்.

    இவர்களுக்கு போட்டியாக சங்கரதாஸ் அணி என்ற பெயரில் நடிகர் பாக்யராஜ் தலைமையில் புதிய அணி உருவாகியுள்ளது. நாசரை எதிர்த்து பாக்யராஜும், விஷாலை எதிர்த்து நடிகர் ஐசரி கணேஷும் களம் காண்கின்றனர். இந்நிலையில் நடிகர்கள் ரமேஷ்கண்ணா, விமல், மற்றும் நடிகை ஆர்த்தி கணேஷ் ஆகியோரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளாக சந்தா செலுத்தாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
     
  9. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,805
    Likes Received:
    489
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    12-ம் வகுப்பு தாவரவியல் பாட புத்தகத்தில் நெல் ஜெயராமன் குறித்து இடம்பெற்றதற்கு தமிழக அரசுக்கு அவரது குடும்பத்தினர் நன்றி

    சென்னை: 12-ம் வகுப்பு தாவரவியல் பாட புத்தகத்தில் நெல் ஜெயராமன் குறித்த பகுதி இடம்பெற்றதற்காக தமிழக அரசுக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நெல் ஜெயராமன் குறித்து தாவரவியல் பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
     
  10. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,805
    Likes Received:
    489
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    நடிகர் சங்க தேர்தலில் 3 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி

    சென்னை: நடிகர் சங்க தேர்தலில் 3 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் நடிகர்கள் ரமேஷ்கண்ணா, விமல், நடிகை ஆர்த்தி கணேஷ் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தா கட்டாததால் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

Share This Page