TODAYS NEWS(13.11.2018)

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Nov 13, 2018.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு உதவியதாக கரூர் காவல் ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்து உத்தரவு


    மதுரை : சட்ட விரோத மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு உதவியதாக கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக குருநாதன் செயல்பட்டதாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. குவாரி மணலை இருப்பு வைத்தது தொடர்பாக தமிழக காகித ஆலை ஊழியர் சுப்பிரமணியன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. கரூர் தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றில் நடைபெறும் சட்ட விரோத மணல் குவாரி தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    நாகை மாவட்டத்தில் சம்பா பயிர்களை இலைசுருட்டு புழுக்கள் தாக்கி வருவதால் விவசாயிகள் வேதனை


    நாகை: நாகை மாவட்டத்தில் நன்றாக வளர்ந்து சூல் பருவத்தில் உள்ள சம்பா பயிர்களை இலைசுருட்டு புழுக்கள் தாக்கி வருவதால் போட்ட முதலீடாவது தேருமா என்று விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நாகை மாவட்டத்திற்கு காலதாமதமாக காவிரி நீர் வந்தாலும், குறுவையை இழந்த விவசாயிகள் சம்பா சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டனர். இந்த மாவட்டத்தில் 1,87,500 ஏக்கரில் நேரடி விதைப்பும், 25,000 ஏக்கரில் நாற்றாங்கால் சாகுபடியும் நடந்துள்ளது.

    தற்போது, 45 நாட்கள் முதல் 55 நாட்கள் பயிர்கள் நன்றாக வளர்ந்துள்ள நிலையில், பருவமாற்றம் காரணமாக பனிப்பொழிவு அதிகரித்ததால் பயிர்களில் இலைசுருட்டு புழு வேகமாக உற்பத்தியாகி பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கீழையூர் ஒன்றியம் சின்னத்தம்பூர், பெரியத்தம்பூர், கிராமத்துமேடு, சோழவித்தியாபுரம் மற்றும் கீழ்வளூர் ஒன்றிய பகுதிகளில் அதிகளவில் இலைசுருட்டு புழு தாக்குதலால் 5,000க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இலைசுருட்டு புழு பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், இதுபற்றி வேளாண் துறை ஆய்வு செய்யவில்லை என்றும், ஆலோசனையோ, அறிவுறையோ தரவில்லை என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    மதுரை பேருந்து நிலையம் எதிரே உள்ள கடைகளை காலி செய்யுமாறு வழங்கிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை


    மதுரை : மதுரை பேருந்து நிலையம் எதிரே உள்ள பாரதியார் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கடைகளை காலி செய்யுமாறு வழங்கிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி சார்பில் வழங்கிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. மதுரை பாரதியார் வணிக வளாக சங்க தலைவர் ராஜாராம் தொடர்ந்த வழக்கை நவம்பர் 27ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மாற்று இடம் வழங்காமல் மதுரை மாநகராட்சி சார்பில் கொடுக்கப்பட்ட நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பாஜகவுக்கு எதிரான கூட்டணி குறித்து ரஜினிகாந்த் கூறியது சரியே : பொன்.ராதாகிருஷ்ணன்



    சென்னை : இலவசங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறியது 100 சதவிகிதம் சரியே என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். எந்த ஒரு விஷயத்திலும் எடுத்தோம், கவிழ்த்தோம் என ரஜினி கருத்து கூற மாட்டார் என்று அவர் கூறியுள்ளார். மேலும் பாஜகவுக்கு எதிரான கூட்டணி குறித்து ரஜினிகாந்த் கூறியது சரியே என்றும், 10 பேர் அல்ல 20 பேர் வந்தால் மோடி ஒற்றை ஆளாக வெற்று பெறுவார் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    திருச்செந்தூர் அருகே கார்-தனியார் பேருந்து மோதி விபத்து : 8 பேர் காயம்

    தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே தென்திருப்பேரை விலக்கு பகுதியில் கார்-தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    திருவாரூர் தியாகராஜ கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் நாளை 3ம் கட்ட ஆய்வு

    திருவாரூர் : திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் நாளை 3ம் கட்ட ஆய்வு நடைபெறுகிறது. சிலைகள் பாதுகாப்பு மையத்தில் நாளை முதல் வரும் 16ம் தேதி 3ம் கட்ட ஆய்வு நடைபெற உள்ளது.ஐம்பொன் சிலைகளின் தொன்மை, உண்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நாளை முதல் ஆய்வு நடத்துகின்றனர்.
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    நவம்பர் 14ம் தேதி இரவு முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் : இயக்குனர் பாலச்சந்திரன்

    சென்னை : நவம்பர் 14ம் தேதி இரவு முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். நாகையில் இருந்து 790 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயலால் கடலூர், நாகை,காரைக்கால், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 90 கிமீ வேகத்தில் காற்றுடன் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.மேலும் வரும் 15ம் தேதி பிற்பகலில் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே புயல் கரையை கடக்கும் என்றும் சென்னைக்கு நேரடியான பாதிப்பு இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு திரைப்படத்திற்கு மட்டுமே பொருந்தும் : முத்தரசன்

    சென்னை : ரஜினி ஒரு சிறந்த நடிகர், அவருடையே பேச்சு திரைப்படத்திற்கு மட்டுமே பொருந்தும் என்று முத்தரசன் கூறியுள்ளார். மேலும் தவறான கருத்துகளை கூறிவிட்டு ஊடகங்கள் மீது பழிபோடுவது வாடிக்கையாகிவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.
     
  9. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டியின் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு

    பெங்களூரு : ஜாமீனில் விடுவிக்கக் கோரிய முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி மனு மீது நாளை தீர்ப்பு வாசிக்கப்பட உள்ளது. பெங்களூரு கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்ற நீதிபதி தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தார். பல கோடி மோசடி வழக்கில் இருந்து பரீத் என்பவரை காப்பாற்ற ஜனார்த்தனரெட்டி லஞ்சம் வாங்கியதாக புகார் கூறப்படுகிறது. பரீத்தின் ஆம்பிடன்ட் நிறுவனம் பொதுமக்களிடம் ரூ. 600 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக புகார் கூறப்படுகிறது.
     
  10. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    வேகமெடுக்கும் கஜா புயல் : மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது

    சென்னை : கஜா புயல் நகரும் வேகம் மணிக்கு 12 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 8.30 மணி அளவில் மணிக்கு 4 கிலோ மீட்டராக இருந்த வேகம் பிற்பகல் 11.30 மணிக்கு 12 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து 690 கிமீ தொலைவில் கஜா புயல் தற்போது மையம் கொண்டுள்ளது என்றும் நாகையில் இருந்து 790 கிமீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே நாளை மறுநாள் பிற்பகலில் புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை , ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
     

Share This Page