TODAYS NEWS(13.11.2018)

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Nov 13, 2018.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,600
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளையும் தொடர்ந்து கண்காணிக்க நீர்வள ஆணையம் கடிதம்

    சென்னை : கஜா புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையை அடுத்து மத்திய நீர்வள ஆணையம் தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. மழை அதிகமாக பெய்ய உள்ளதால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வேகமாக நிரம்ப வாய்ப்பு உள்ளது என்று மத்திய நீர்வள ஆணையம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அணைகளின் நீர்வரத்து மற்றும் வெளியேற்றத்தை அவ்வப்போது கண்காணிக்கவும் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர அணைகளை 24 மணி நேரம் தொடர்ச்சியாக கண்காணிக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,600
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கஜா புயல் தாக்கத்திற்கு ஏற்றவாறு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் : முதல்வர் நாராயணசாமி

    புதுச்சேரி: கஜா புயல் மற்றும் மழையின் தாக்கத்திற்கு ஏற்றவாறு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அமைச்சர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு பேட்டி அளித்துள்ளார். இதனிடையே தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்த அவர், தேவையான உணவுப் பொருட்கள், மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,600
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஏடிபி உலக டூர் பைனல்ஸ் ரோஜர் பெடரரை வீழ்த்தினார் நிஷிகோரி

    லண்டன்: ஏடிபி உலக டூர் பைனல்ஸ் தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில் சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்தார். லண்டன் O2 அரங்கில் நடைபெறும் இந்த தொடரில், ஆண்டு இறுதி ஏடிபி தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள் மற்றும் ஜோடிகள் பங்கேற்கின்றன.

    ஹெவிட் பிரிவில் இடம் பெற்றுள்ள பெடரர் தனது முதல் போட்டியில் ஜப்பானின் கெய் நிஷிகோரியுடன் மோதினார். விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் நிஷிகோரி 7-6 (7-4), 6-3 என்ற நேர் செட்களில் வென்றார். பெடரர் தனது 2வது லீக் ஆட்டத்தில் டொமினிக் தீமுடன் (ஆஸ்திரியா) இன்று மோதுகிறார்.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,600
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஆஸி. தொடருக்கு முன்பாக தவான் பார்முக்கு வந்தது முக்கியமானது... ரோகித் ஷர்மா உற்சாகம்

    சென்னை: இந்திய அணி அடுத்து கடினமான ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் நிலையில், தொடக்க வீரர் ஷிகர் தவான் பார்முக்கு வந்தது மிக முக்கியமானது என்று ரோகித் ஷர்மா கூறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றிய இந்தியா ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. முன்னதாக நடந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களிலும் இந்திய அணியே வெற்றியை வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த பரபரப்பான 3வது டி20 போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் - ரிஷப் பன்ட் ஜோடி 3வது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி 130 ரன் சேர்த்தது. தவான் 92 ரன் (62 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), பன்ட் 58 ரன் (38 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன் எடுத்தது. மணிஷ் (4), கார்த்திக் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஷிகர் தவான் ஆட்ட நாயகன் விருதும், குல்தீப் யாதவ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

    இந்த வெற்றி குறித்து கேப்டன் ரோகித் ஷர்மா கூறியதாவது: கடினமான ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக தவான் மீண்டும் சிறப்பாக விளையாடி பார்முக்கு திரும்பியிருப்பது மிக முக்கியமானது. ஒருநாள் போட்டித் தொடரிலும் கூட அவர் நல்ல தொடக்கத்தை பெற்றாலும், துரதிர்ஷ்டவசமாக பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறினார். சென்னையில் தவான் அபாரமாக ரன் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது மகிழ்ச்சி அளிக்கிறது.
    ரிஷப் பன்ட்டின் ஆட்டமும் மிகச் சிறப்பாக இருந்தது. தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட் சரிந்த நிலையில், தவான் - பன்ட் இணைந்து நெருக்கடியை நன்கு சமாளித்தனர். அவர்களின் பார்ட்னர்ஷிப்பே வெற்றிக்கு முக்கிய காரணம். இருவரும் கணிசமாக ரன் குவித்தது அணிக்கு உற்சாகம் அளித்துள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் எப்போதும் கடினமான ஒன்றாகவே இருக்கும். ஒவ்வொரு முறை அங்கு செல்லும்போதும் வீரராக, அணியாக பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்த தொடர் முற்றிலும் வேறானது.

    வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பெற்ற வெற்றி நமது வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதே உத்வேகத்துடன் ஆஸ்திரேலியாவிலும் அசத்துவோம் என நம்புகிறேன். டெஸ்ட் தொடருக்கு முன் டி20 போட்டிகளில் விளையாட உள்ளதால் முதல் டெஸ்ட் பற்றி எதுவும் நினைக்கவில்லை. சில நாள் ஓய்வுக்குப் பிறகு ஆஸி. டி20 தொடருக்கு தயாராவதில் கவனம் செலுத்துவேன். டி20 அணியில் டோனி இடம் பெறாதது பெரிய இழப்புதான். அவரது அனுபவம் எனக்கு மட்டுமல்ல, இளம் வீரர்களுக்கும் ஊக்கசக்தியாக இருக்கும். இவ்வாறு ரோகித் ஷர்மா கூறியுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் டி20 போட்டி வரும் 21ம் தேதி பிரிஸ்பேனில் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து 2வது போட்டி மெல்போர்னிலும் (நவ. 23), 3வது போட்டி சிட்னியிலும் (நவ. 25) நடைபெறுகின்றன. முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,600
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பிரேசில் கிராண்ட் பிரீ ஹாமில்டன் சாம்பியன்


    சா பாலோ: பிரேசில் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், ஹாமில்டன் 1 மணி, 27 நிமிடம், 9.066 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். நடப்பு சீசனின் உலக சாம்பியன் பட்டத்தை அவர் ஏற்கனவே கைப்பற்றிவிட்டது குறிப்பிடத்தக்கது. ரெட் புல் ரேசிங் வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 2வது இடமும் (+1.469 விநாடி), பெராரி வீரர் கிமி ரெய்கோனன் (+4.764 விநாடி) 3வது இடமும் பிடித்தனர். பெராரி அணி நட்சத்திர வீரர் செபாஸ்டியன் வெட்டல் 6வதாக வந்தார்.

    இந்த போட்டியின்போது வெர்ஸ்டாப்பன் ஓட்டிய கார் மீது போர்ஸ் இந்தியா மெர்சிடிஸ் வீரர் எஸ்டபென் ஓகான் ஓட்டிய கார் மோதியதால், வெர்ஸ்டாப்பனின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், போட்டி முடிந்ததும் ஓகானிடம் சென்று கடுமையான வாக்குவாதம் செய்ததுடன் தாக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 20 பந்தயங்களின் முடிவில் ஹாமில்டன் (383 புள்ளி), வெட்டல் (302), ரெய்கோனன் (251) முதல் 3 இடங்களில் உள்ளனர். நடப்பு சீசனின் கடைசி பந்தயமாக அபு தாபி கிராண்ட் பிரீ 23ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,600
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    நவ. 17ல் நட்பு கால்பந்து போட்டி இந்தியா-ஜோர்டான் மோதல்: ஐஎஸ்எல் ஆட்டங்களுக்கு விடுமுறை

    சென்னை: இந்திய கால்பந்து அணி சர்வதேச போட்டியில் விளையாட உள்ளதால் ஐஎஸ்எல் 5வது சீசன் தொடரில் 2வது முறையாக மீண்டும் இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய கால்பந்து தொடராக மாறியுள்ளது ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக். முந்தைய சீசன்கள் பெரிய இடைவெளி இன்றி 5, 6 மாதங்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட நிலையில், நடப்பு 5வது சீசனுக்கு முழுமையாக போட்டி அட்டவணை வெளியிடப்படவில்லை. அதுமட்டுமின்றி அறிவிக்கப்பட்ட அட்டவணையிலும் 2 பெரிய இடைவெளி உள்ளது. காரணம் ஐஎஸ்எல் அணிகளில் இடம் பிடித்துள்ள பல வீரர்கள் இந்திய அணியிலும் இடம் பெற்றிருப்பதுதான். இந்திய அணி சர்வதேச போட்டிகளில் விளையாட வசதியாக இந்த இடைவெளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சீசனின் முதல் போட்டி செப். 29ம் தேதி கொல்கத்தாவில் நடந்தது. தொடர்ந்து 9 லீக் ஆட்டங்கள் நடந்த நிலையில் அக். 8-16 வரை 9 நாட்களுக்கு இடைவெளி விடப்பட்டது. இந்திய அணி சீனாவுடன் நட்பு ரீதியிலானபோட்டியில் விளையாடியதே இதற்கு காரணம்.

    இந்நிலையில் 2வது முறையாக 34வது லீக் போட்டி முடிந்ததும் மீண்டும் 9 நாட்களுக்கு (நவ. 12-20) போட்டி கிடையாது. இந்தியா - ஜோர்டான் அணிகள் நவ.17ல் நட்பு ரீதியிலான போட்டியில் மோதுவதால் இந்த இடைவெளி.
    அடுத்து ஆசிய கோப்பை தொடரில் (ஜன 5- பிப்.1, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்), இந்திய அணி ஜன. 6ம் தேதி தாய்லாந்துடனும், ஜன. 10ம் தேதி ஐக்கிய அரசு எமிரேட்சுடனும், ஜன. 14ம் தேதி பக்ரைனுடனும் மோத உள்ளது. இதையொட்டி டிச. 16 வரை மட்டுமே போட்டிகள் நடைபெற உள்ளன. ஆசிய தொடரில் லீக் சுற்றுடன் இந்திய அணி விடை பெற நேர்ந்தால் ஐஎஸ்எல் போட்டி உடனே தொடங்கலாம். ஜன.20-22 வரை நடைபெறும் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றால் ஐஎஸ்எல் போட்டி தள்ளிப்போகும். இந்த முடிவுகளைப் பொறுத்தே ஐஎஸ்எல் அடுத்த கட்ட போட்டி அட்டவணை தயாராகும்.
     

Share This Page