todays news(13.11.2019)

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Nov 13, 2019.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பிரதமரின் புகைப்படத்தை பயன்படுத்தினால் 5 லட்சம் அபராதம்!


    பிரதமர், குடியரசு தலைவரின் புகைப்படங்களை முறையற்ற ரீதியில் பயன்படுத்தினால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.


    தேசிய கொடி, அசோக சக்கரம், அரசு முத்திரை போன்றவற்றை தவறாக பயன்படுத்தினால் 500 ரூபாய் அபராதம் என்ற நடைமுறை தற்போது இருந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மற்றும் குடியரசு தலைவரின் புகைப்படங்களை வர்த்தக விளம்பரங்களுக்கு பயன்படுத்தினால் 1 லட்சம் அபராதமும், மீண்டும் அதே தவறை செய்தால் 5 லட்சம் அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனையும் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    பலர் பிரதமரின் படங்களை வணிக ரீதியான விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பேராசிரியர்களின் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை... கேரள முதல்வர் இ.பி.எஸ்க்கு கடிதம் !


    சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாணவி ஃபாத்திமா லத்திப், வளாக விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில், ஃபாத்திமாவின் தந்தை, கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில்,பேராசிரியரின் துன்புறுத்தலின் பேரில் மாணவி தற்கொலை செய்துகொண்டதாகப் புகார் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், மாணவியின் தந்தை எழுதிய கடிதத்தைம் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு அனுப்பி வைத்தார் பினராயி விஜயன்.

    இதையடுத்து சென்னை கோட்டூர்புரம் போலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.தற்போது மாணவியின் செல்போனை கைப்பற்றிய போலீஸார் தடவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும்,மாணவி தற்கொலை தொடர்பாக 4 பேராசிரியர்கள் உள்பட 11 பேரிடம் கோட்டூர்புரம் போலீஸர் விசாரித்துவருகின்றனர்.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஒரு தலை.. இரண்டு முகங்கள்.. உயிருக்கு போராடும் பூனை ...! வைரல் வீடியோ

    உலகில் எத்தனையோ விச்சித்திரங்கள் நிகழ்ந்து வருகின்றன. அவற்றில் சில ஆச்சர்யப்பட வைக்கலாம், சில சோகத்தை ஏற்படுத்தலாம். அந்த வகையில் அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் பூனை ,ஒரு உடல் மற்றும் இரண்டு முகங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றது.

    இந்த இரண்டு முகப் பூனையை, கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவர்.டிரான் என்பவர் தத்தெடுத்து அதை வளர்த்து வருகிறார்.

    இந்த பூனையின் இரண்டு முகத்திலும் இரண்டு வாய்கள் இருப்பதால், ஒரு முகம் பசி எடுக்கும்போது, மற்றொன்றும் உணவு சாப்பிட முயல்கிறது.

    தற்போது, இதன் பார்வைக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இருந்தாலும் இந்த இரண்டு முகம் கொண்ட பூனை இன்னும் சில காலம்தான் உயிர்வாழும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த பூனையில் விடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    நாம் அனைவரும் வெட்கி தலைகுனிய வேண்டும்”.. ஸ்டாலின் வருத்தம்

    விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதற்காக நாம் வெட்கி தலைகுனிய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.


    சென்னையிலுள்ள பிரபல ஷாப்பிங் மாலில் கழிவு நீர் தொட்டியில் அடைப்பு எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, ஷாப்பிங் மால் உரிமையாளர்கள், நிர்வாகிகள், ஒப்பந்தகாரர் ஆகியோர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இச்சம்பவம் குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “விஷவாயு தாக்கி கடந்த 1993 முதல் இன்று வரை 206 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. நம் அனைவருக்கும் இது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது” என கூறியுள்ளார்.

    மேலும் ”மனிதர்களை இத்தகைய தொழிலில் ஈடுபடுத்தக் கூடாது என்பதே திராவிட இயக்கக் கொள்கை” எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    யாரும் இல்லாத போது சண்டைக்கு வருவது வீரம் இல்லை – ரஜினியின் அரசியல் வருகை பற்றி சீமான் !

    தமிழகத்தில் அரசியலில் வெற்றிடம் இருப்பதானாலேயே ரஜினியும் கமலும் அரசியலுக்கு வந்துள்ளனர் என சீமான் தெரிவித்துள்ளார்.


    முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பின் கமல் அரசியல் கட்சி தொடங்கிய்டுள்ளார். ரஜினி விரைவில் தொடங்க இருக்கிறார்.இந்நிலையில் ரஜினி தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவருக்கான வெற்றிடம் உள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து அவரை பலரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர். இது சம்மந்தமாகப் பேசிய ‘வயதானதால் படங்கள் இல்லாததால் நடிகர்கள் அரசியலுக்கு வருகின்றனர்.’ எனக் கூறினார். இதையடுத்து இதுகுறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

    அதில் ‘கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும்போதே அரசியலில் தான் ஒரு மாற்றாக வருவேன் என விஜயகாந்த் சொன்னார். அதற்குத் துணிவு வேண்டும். நாம் தமிழர் கட்சி, இரு ஆளுமைகளும் இருக்கும்போதே எதிர்த்து அரசியல் செய்தது. இப்போது யாரும் இல்லாத இடத்தில் சண்டைக்கு அழைப்பது எப்படி வீரமா? வெற்றிடம் இல்லையென்றால் ரஜினி அரசியலுக்கு வந்திருக்க மாட்டார்.’ எனத் தெரிவித்துள்ளார்.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கார்ப்ரேட்களிடம் இருந்து ரூ.741 கோடி: பாஜக அமோக வசூல்!

    தேர்தல் நிதியாக பாஜக கார்ப்ரேட் நிறுவனங்களிடம் இருந்து ரூ.741 கோடி வாங்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.


    தேர்தல் வரவு செலவு கணக்குகளை பாஜக தேர்தல் ஆணையத்தில் சமர்பித்துள்ளது. இதில் கடந்த நிதி ஆண்டில் கார்ப்ரேட் நிறுவனங்களிடம் இருந்து ஆன்லைன் மற்றும் காசோலைகள் மூலம் ரூ.741 கோடியை நிதியாக பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

    அதில், ரூ.356 கோடி டாடா நிறுவனத்திடமிருந்தும், ரூ.55 கோடி புரூடெண்ட் அறக்கட்டளையிடமிருந்தும் பெற்றுள்ளது என கணக்கு காட்டியுள்ளது. 75% பாஜக தேர்தல் நிதி கார்ப்ரேட் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அதேபோல ரூ.26 கோடியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நிதி கடந்த நிதி ஆண்டில் ரூ.146 கோடியாக உயர்ந்திருப்பதும் கவனிக்க பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சசிகலா ’ஜெயிலில்’...தினகரன் கட்சி ’வாஸ் அவுட் ’.. அடுத்த டார்கெட் ரஜினி - கமல் - அதிமுகவின் வியூகம் !

    வடமாநிலத்தவர்கள் தமிழக அரசியலையும், அரசியல்வாதிகளையும் புறம்தள்ளினாலும், அறிவாலும் , ஆற்றலாலும், தலைநகர் டெல்லி வரை வெற்றிக்கொடி காட்டி உலகையே வியக்க வைத்தவர்கள் தமிழர்கள்.

    திருவள்ளுவர் முதற்கொண்டு பல்வேறு அறிஞர்கள் பிறந்து தமிழை மட்டுமல்ல அரசியலிலும், சமுதாய நாகரிகத்தையும் சங்ககாலத்தில் வழங்கி, மற்ற உலகநாடுகள் கண்முளிக்கும் முன்பே கடல் வணிகம் முதற்கொண்டு அனைத்திலும் தமிழர்கள் சிறந்து விளங்கிவருகின்றனர்.

    அந்த வகையில், இன்று இந்திய அரசியலில் பாஜக எத்தனை பெரிய அசுர வெற்றி பெற்றாலும் கூட தமிழகத்தில் அவர்களால் காலூன்ற முடியவில்லை. அந்தளவு நாம் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் தமிழக மக்கள் தெளிவாக உள்ளனர்.

    அதிமுக கட்சியை ஒரு இக்கட்டான நிலையில்தான் எம்.ஜி.ஆர் தோற்றுவித்தார். அன்றைய நாள் முதல் இன்று வரை அவரை மக்கள் தெய்வமாக வழிபடுகிறவர்களும் உள்ளனர்.

    அத்தைய மக்களின் ஆதரவில் கருணாநிதி என்ற மாபெரும் அரசியல் சாணக்கியரை சாய்ந்து தான் இருக்கும் வரை திமுகவை மீண்டு எழ முடியாதபடி தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பைத் தன் கையில் வைத்து ஆண்டார். மக்களுக்கும் சேவை செய்தார்.

    அதே கட்சியின் மக்கள் செல்வாக்கோடு போராடி ஜெயலலிதாஅக்கட்சியின் பொதுச்செயலாலர் ஆனார் . அவரும் ஆறுமுறை முதல்வர் பதவி வகித்து மறைந்தார்.

    இப்போது, அதிமுக இ.பி. எஸ் - ஒ.பி.எஸ், என்ற இருவரின் கையில் உள்ளது.இருவரும் தமிழகத்தில் முதல்வர் மற்றும் முதல்வராக ஆட்சி புரிந்து வருகின்றனர்.

    இந்த சூழ்நிலையில் இவர்களுக்கு அரசியல் ரீதியாக எதிர்கட்சித் திமுக தலைவர் ஸ்டாலின் குடைச்சல் கொடுத்து வருகிறார். ஆனால் இப்போது, அதைவிட, இருபெரும் தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார்களின் அரசியல் படையெடுப்பால் அதிமுக தலைமைகள் சிறிது கலக்கம் அடைந்துள்ளனர்.
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    அதை ஏன் எங்கிட்ட கேக்கறீங்க? ஆவேசமான அழகிரி!

    பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் மகள் திருமணம் நாளை மறுநாள் காரைக்குடியில் நடைபெற இருக்கிறது. இதற்காக பல அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மு.க.அழகிரிக்கும் அழைப்பிதழ் அனுப்பியுள்ளார் எச்.ராஜா.

    இந்நிலையில் இன்று காரைக்குடி சென்று எச்.ராஜாவை சந்தித்தார் மு.க.அழகிரி. இருவரும் சந்தித்து பேசிய பின்னர் அழகிரி விடைபெற்றுள்ளார். அப்போது அவரிடம் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர் ஒருவர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணியில் பதவி கொடுத்தது பற்றி கேட்டுள்ளார்.

    அதற்கு அழகிரி கோபமாக “நான் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட இல்லை. என்னிடம் ஏன் இந்த கேள்வியை கேட்கிறீர்கள்” என கூறிவிட்டு வேகமாக சென்றிருக்கிறார்.
     
  9. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சிறுவனின் மூக்கில் இருந்த மீன் – டாக்டர்கள் அதிர்ச்சி !

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுவனின் மூக்கினுள் சின்னஞ்சிறிய மீன் இருந்தது மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


    புதுக்கோட்டை மாவட்டம் மண்ணவேளம்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வரும் செல்வம் என்பவரின் அருள்குமார். இவர் கடுமையான மூக்குவலியால் அவதிப்பட இவனை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவனது மூக்கை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது சிறிய மீன் ஒன்று இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதையடுத்து மீனை சிறுவனின் மூக்கில் இருந்து அப்புறப்படுத்தினர். சம்பவ தினத்தன்று அருள் குமார் கிணற்றில் குளிக்கும்போது இந்த மீன் சிறுவனின் மூக்கினுள் சென்றிருக்கலாம் என தெரிகிறது.
     
  10. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    வைரஸ் காய்ச்சலால் நேர்ந்த பரிதாபம்; பலியான 7 வயது சிறுமி

    வைரஸ் காய்ச்சலால் 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


    கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் ஆங்காங்கே பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வைரஸ் காய்ச்சலால் பல சிறுவர் சிறுமிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த செந்தில்-ராஜமீனா தம்பதியரின் ஏழு வயது மகளான தியாஷினி, கடந்த 3 நாட்களாக வைரஸ் காய்ச்சலால் அவதிபட்டு வந்தார். தியாஷினியை அவரது பெற்றோர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    ஆனால் நேற்று நள்ளிரவு தியாஷினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெறும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
     

Share This Page