TODAYS NEWS 13.3.19 (INDIA)

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Mar 13, 2019.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    4,430
    Likes Received:
    469
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    தன் மகன் வருண்காந்திக்காக பிலிபட் தொகுதியை விட்டு கொடுக்கும் மத்திய மந்திரி மேனகா காந்தி

    டெல்லி: மத்திய மந்திரி மேனகா காந்தி உத்தரபிரதேச மாநிலம் பிலிபட் தொகுதி எம்.பி.யாக உள்ளார். அவர் 1996, 1998, 1999, 2004, 2014 தேர்தல்களில் அந்த தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மேனகா காந்தி தொகுதி மாறுகிறார். அவர் தனது மகனுக்கு பிலிபட் தொகுதியை விட்டுக் கொடுக்கிறார். வருண்காந்தி கடந்த தேர்தலில உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியை ஒட்டி சுல்தான்பூர் இருக்கிறது. அங்கு வலுவான காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் வருண்காந்தி தோல்வியை சந்திக்க நேரிடும் என்று மேனகா காந்தி அச்சப்படுகிறார். இதன் காரணமாகவே மேனகா காந்தி தான் பலமுறை வெற்றி பெற்ற பிலிபட் தொகுதியை வருணுக்கு விட்டு கொடுக்கிறார்.

    மேனகா காந்தியின் இந்த வேண்டுகோளை பா.ஜனதா மேலிடம் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. வருண் காந்தி ஏற்கனவே 2009 தேர்தலில் பிலிபட் தொகுதியில் போட்டியிட்டு 50.09 சதவீத வாக்குகள் பெற்று இருக்கிறார். இதனால் அவருக்கு கட்சி மேலிடம் அந்த தொகுதியை ஒதுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மேனகா காந்தி அரியானா மாநிலம் கர்ணல் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். 2014 தேர்தலில் இந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் அஸ்வினி குமார் சோப்ரா வெற்றி பெற்று இருக்கிறார்.
     

Share This Page