TODAYS NEWS(16.11.2018)

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Nov 16, 2018.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    நாகையில் புயலால் விழுந்த மரங்கள் அகற்றப்படுகின்றன


    நாகை : நாகை, வேதாரண்யத்தில்புயல் காற்று வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. நாகையில் சாலையில் விழுந்துள்ள மரங்கள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கஜா புயலின் கண் பகுதி முழுமையாக கரையை கடந்தது : வானிலை மையம்

    சென்னை : கஜா புயலின் கண் பகுதி முழுமையாக கரையை கடந்தது என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி அளித்தார். அடுத்த 2 மணி நேரத்திற்கு எதிர்த்திசையில் பலத்தகாற்று வீசக்கூடும் என்று தெரிவித்தார்.மேலும் புயலின் பின்பகுதி கரையை கடக்க தொடங்கியுள்ளதால் பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ராமேஸ்வரம் பாம்பன் பாலம் மூடப்பட்டது

    ராமேஸ்வரம் : காற்று மற்றும் கனமழை காரணமாக ராமேஸ்வரம் பாம்பன் சாலை பாலம் மூடப்பட்டது. தடுப்பு வேலிகள் மூலம் பாம்பன் சாலை பாலத்தை போலீசார் அடைத்தனர்.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ராமேஸ்வரம், பாம்பனில் படிப்படியாக காற்றின் வேகம் அதிகரிப்பு

    ராமேஸ்வரம் : ராமநாதபுரம், பாம்பன் கடலோரப் பகுதிகளில் இடி, காற்றுடன் கூடிய மழை படிப்படியாக வேகம் பெறுகிறது. மேலும் கடலூர், சிதம்பரம், நாகையில் பலத்த காற்றுடன் கனமழையும், திருவாரூர், ராமேஸ்வரத்தில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    டாக்டர் கிருஷ்ணசாமி ஜாதி சான்றிதழை ரத்து செய்ய வழக்கு


    மதுரை: நெல்லை, பாளையங்கோட்டையை சேர்ந்த சிவஜெயப்ரகாஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. அரசியல் செல்வாக்ைக பயன்படுத்தி அவரது ஜாதியை மறைத்து, தேவேந்திரகுல வேளாளர் என ஜாதிச் சான்று வாங்கியுள்ளார். இதன்மூலம் சமூக மக்களையும் ஏமாற்றியுள்ளார். எனவே, கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாதி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்,’’ என கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    அடித்து, உதைத்ததில் பற்கள் உடைந்தன இலங்கை கடற்படை கொடூர தாக்குதல்: விடுதலையாகி திரும்பிய தமிழக மீனவர்கள் கண்ணீர்

    அவனியாபுரம்: இலங்கை கடற்படையினர் எங்களை கொடூரமாக தாக்கினர் என விடுதலையான தமிழக மீனவர்கள் மதுரை விமானநிலையத்தில் தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அலங்காரம், அருள், கோபால் உள்ளிட்ட 15 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த ராஜாராமன், ராஜா, உட்பட 11 பேர், இலங்கை கடற்படையினரால் சில மாதங்களுக்கு முன்பு சிறை பிடிக்கப்பட்டனர்.
    இவர்கள் 26 பேரையும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை அரசு விடுதலை செய்தது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன் வளத்துறை உதவி இயக்குனர் கோபிநாத், 26 பேரையும் இலங்கையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு நேற்று அழைத்து வந்தார்.

    பின்னர் மதுரை விமானநிலையத்திலிருந்து வேன் மூலம் ராமநாதபுரம், ராமேஸ்வரம் உட்பட அவர்களது சொந்த ஊர்களுக்கு கிளம்பி சென்றனர்.
    புதுக்கோட்டை மீனவர் செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘எங்கள் படகு தொழில்நுட்பக்கோளாறு காரணமாக கடலில் தத்தளித்தது. காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்தது. அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எங்களை கைது செய்ததுடன், எங்களை அடித்து, உதைத்து கொடூரமாகத் தாக்கினர். இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் சக மீனவரின் பற்கள் உடைந்தன. மேலும் மீன் பிடிக்க பயன்படுத்திய வலைகளை அறுத்து கடலில் எறிந்தனர். எங்களது படகுகளை சேதப்படுத்தினர்,’’ என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    மீனவர் சங்க தலைவர் செல்லத்துரை கூறுகையில், ‘‘தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மீனவர்களை மட்டும் விடுதலை செய்தால் போதாது. அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும். ஒரு படகின் விலை ரூ.20 லட்சம். மீனவர்கள் கடன் வாங்கி படகுகளை வாங்கியுள்ளனர். கடனை திருப்பி செலுத்த முடியாததால், பல மீனவர்கள் தற்கொலை செய்யும் நிலையில் உள்ளனர்’’ என்றார்.
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    18 வயது மகள் இழப்பீடு கோரிய வழக்கில் கோமாவில் உள்ள பெண்ணின் உடல்நிலை அறிக்கை வேண்டும்: நுகர்வோர் ஆணையம் உத்தரவு

    மதுரை: குமரி மாவட்டம், பொன்மனை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு மனைவி ஷோபா. 2000ம் ஆண்டு பிரசவத்திற்காக குலசேகரம் கூட்டுறவு சங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 3.3.2000ல் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. பிரசவ பாதிப்பால் அவர் கோமா நிலைக்கு சென்றார். இதனால் இழப்பீடு கோரி ரமேஷ்பாபு மதுரையிலுள்ள மாநில நுகர்வோர் ஆணையத்தில் ஏற்கனவே மனு செய்திருந்தார்.
    இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து கொள்ள வேண்டுமென ஷோபாவின் மகள் ஆதர்ஷாவும் ஒரு மனு செய்திருந்தார்.

    அதில், ‘‘என் தாய் தொடர்ந்து கோமாவில் இருப்பதால் தந்தை ரமேஷ்பாபு, பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார். எனக்கு தற்போது 18 வயதாகிறது. தக்கலையில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறேன். எனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடந்த 18 வருடங்களாக செலவு செய்த தொகையை காப்பீடாக வழங்கவும், மனஉளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்,’’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனு ஆணைய நீதித்துறை உறுப்பினர் ராஜசேகரன், உறுப்பினர் முருகேசன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘மனுவை விசாரணைக்கு ஏற்றால் வழக்கு மேலும் தாமதமாகும். எனவே, கோமாவில் உள்ள ேஷாபாவின் தற்போதைய உடல்நிலை நிலவரம் குறித்து அரசு டாக்டரின் அறிக்கையை சட்டப்பணிகள் ஆணைய வக்கீல் மூலம் தாக்கல் செய்ய வேண்டும்,’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    அரிசி ஆலைகள் உரிமையாளர் வீட்டில் 22 மணி நேரம் நடந்த வருமான வரித்துறை சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியது

    ஆரணி: ஆரணி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான அரிசி ஆலைகள் மற்றும் வீட்டில் வருமான வரித்துறையினர் சுமார் 22 மணி நேரம் நடத்திய சோதனையில், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தில் ஏராளமான அரிசி ஆலைகள் இயங்கி வருகிறன. இந்த ஆலைகளில் இருந்து தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அரிசி வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், இங்குள்ள சில அரிசி ஆலைகளில் வருமான கணக்குகளை முறையாக பராமரிப்பதில்லை, வரி ஏய்ப்பு செய்து வருவதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் மதியம், ராட்டினமங்கலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ரமேஷ்பாபு, சுரேஷ்பாபு, மகேஷ்பாபு மற்றும் ரமேஷ்பாபுவின் மகன் ஜெயராஜ்பாபு ஆகியோருக்கு சொந்தமான 4 அரிசி ஆலைகள் மற்றும் ரமேஷ்பாபுவின் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில், 24 பேர் கொண்ட அதிகாரிகள், நேற்று முன்தினம் மதியம் 12.30 மணி முதல், நேற்று காலை 9.30 மணி வரை விடியவிடிய சுமார் 22 மணிநேரம் சோதனை நடத்தினர்.

    இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், அவை சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு நடத்தப்படும், வரிஏய்ப்பு செய்தது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
     
  9. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கு தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை: ஜனாதிபதி, பிரதமருக்கு முருகன் மனைவி கடிதம்

    விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை, பாலியலுக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைதாகி மதுரை சிறையில் உள்ளனர். சிறையில் உள்ள பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, கவர்னர் பன்வாரிலால் புரோகித், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: இந்த விவகாரத்தில் என் கணவரின் மீது வீண்பழி சுமத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

    சிபிசிஐடி விசாரணை அதிகாரிகள் ஒரு வாக்குமூலத்தை உருவாக்கி என் கணவரை அச்சுறுத்தி அதில் கையொப்பம் வாங்கியுள்ளனர். நிர்மலாதேவி பேசிய ஆடியோவில் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் என்று குறிப்பிட்டுள்ளது என் கணவருக்கு பொருந்தாது. ஒருமுறை கூட அவர் நிர்மலாதேவியை தனிப்பட்ட முறையில் சந்தித்தது கிடையாது. நிர்மலாதேவிக்கு அவர் போன் செய்து பேசியது இல்லை. அவர்தான் எனது கணவருக்கு போன் செய்து, அலுவல்ரீதியாக ஓரிரு வார்த்தை மட்டும் பேசியுள்ளார். கணவரின் செல்போனில் (கால் ரிஜிஸ்டரில்) நிர்மலாதேவி பேசியபோது பதிவாகியுள்ள கால அளவுகளை பார்த்தாலே இது தெளிவாக தெரியும்.

    எந்த குற்றமும் செய்யாத எனது கணவரை சிறையில் அடைத்தது மட்டுமல்லாமல் ஜாமீன் தரவும் மறுக்கின்றனர்.விசாரணை அதிகாரி சந்தானம் கமிஷன் அறிக்கை வெளிவந்தால் உண்மையான குற்றவாளி பற்றிய தகவல் வெளிச்சத்திற்கு வந்துவிடும். உண்ைம வெளிவரக்கூடாது என்று தவறான நோக்கத்தில், சிபிசிஐடி அதிகாரிகள் தடையாணை பெற்றுள்ளனர். அதிகாரிகள் விருப்பம்போல் என் கணவர் மீது பல பொய் புகார்களை அடுக்குவதற்கும், வீண்பழி போட்டு அவமானப்படுத்துவதற்கும் நாங்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதே காரணம்.

    தனிமனித உரிமை மீறும் செயலால் என் கணவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதேபோன்ற சூழ்நிலை நீடிக்கும் நிலையில் எனது குடும்பமே தற்கொலை செய்து கொள்வது தவிர வேறு வழியில்லை. எனவே எனது கணவருக்கு உடனே ஜாமீன் கிடைக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    நவ.20க்கு ஒத்திவைப்பு
    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் ைகதான பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் நேற்று திருவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி லியாகத் அலி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அரசு தரப்பு வழக்கறிஞர், ‘‘விசாரணையை உடனடியாக தொடங்க வேண்டும்,’’ என்றார். இதற்கு முருகன் தரப்பு வழக்கறிஞர், ‘‘காரணங்கள் பொய்யாக புனையப்பட்டவை என்பதால் இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்,’’ என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே கருப்பசாமி தரப்பு வழக்கறிஞர், ‘‘சுப்ரீம் கோர்ட்டில் ெதாடரப்பட்ட வழக்கிற்கான தீர்ப்பு வந்த பிறகு, விசாரணையை துவங்க வேண்டும்,’’ என்றார். இதையடுத்து நீதிபதி லியாகத் அலி, வழக்கை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    ஆடியோவில் பேசியது யார்?
    நிர்மலாதேவியின் வக்கீல் மகாலிங்கம் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நிர்மலாதேவியின் வாக்குமூலத்தை சிபிசிஐடி திரித்து வெளியிட்டுள்ளது. இதை பார்த்து நிர்மலாதேவி அதிர்ச்சி அடைந்தார். அவர் பேசியதாக வெளிவந்த ஆடியோவில், அவர்தான் பேசினார் என இன்னும் நிரூபணம் ஆகவில்லை,’’ என்றார். நிர்மலாதேவி பேசியதாக கூறப்படும் ஆடியோவில் வரும், ‘‘கவர்னர் ஒன்றும் தாத்தா இல்லை என்ற வரி நிர்மலாதேவி பேசியதுதானே,’’ என்று நிருபர் ஒருவர் கேட்டார். அதற்கு, ‘‘அந்த ஆடியோ நிர்மலாதேவி பேசியது அல்ல. அதற்கான ஆதாரங்கள் நிரூபணமாகவில்லை. இதனால் அந்த ஆடியோவும் பொய்தான்,’’ என்று வக்கீல் கூறினார்.
     
  10. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    திருவண்ணாமலை தீபத்திருவிழா: சிறப்பு கட்டண தரிசன டிக்கெட் 21ம் தேதி ஆன்லைனில் பெறலாம்

    திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 14ம் தேதி முதல் விமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் நிறைவாக, வரும் 23ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகாதீபமும் ஏற்றப்படும். அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம், மகா தீபம் தரிசனம் செய்ய, இந்த ஆண்டும் சிறப்பு கட்டண தரிசன டிக்கெட் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, அதிகாலை நடைபெறும் பரணி தீப தரிசனத்துக்கு 500 கட்டணத்தில் 500 டிக்கெட்கள் மட்டுமே வழங்கப்படும்.

    மேலும், மாலையில் நடைபெறும் மகா தீப தரிசனத்துக்கு 500 கட்டணத்தில் ஆயிரம் டிக்கெட்களும், 600 கட்டணத்தில் 100 டிக்கெட்களும் வழங்கப்படும். சிறப்பு கட்டண தரிசன டிக்கெட்டுகள் பெற விரும்புவோர், www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையதளத்தில் வரும் 21ம் தேதி காலை 11 மணி முதல் பெற்றுக்கொள்ளலாம். அதன்படி, ஆன்லைனில் தரிசன டிக்கெட் பெற ஆதார் எண், செல்போன் எண், இமெயில் முகவரி அவசியம் தேவை. ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு டிக்கெட் மட்டுமே பெற முடியும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
     

Share This Page