todays news(16.9.19)

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Sep 16, 2019.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,930
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பைக்கில் முந்தி செல்ல முயன்று நொடியில்’... ‘அரசுப் பேருந்து மீது மோதி’... ‘இளைஞர்களுக்கு நேர்ந்த கொடூரம்’!


    கிருஷ்ணகிரி அருகே அரசு பேருந்தின் மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    [​IMG]
    மல்லபாடி கிராமத்தை சேர்ந்தவர் சோமேஷ்வரன் என்கின்ற இளைஞர். இவர் தனது நண்பர்கள் இருவருடன், இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். பர்கூர் அடுத்த தபால்மேடு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னே சென்ற வாகனத்தை முந்தி செல்வதற்காக, இருசக்கர வாகனத்தை, சோமேஷ்வரன் அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அந்த சமயத்தில், எதிர்திசையில் கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூரை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனைக் கவனியாமல், சோமேஷ்வரன் சென்றபோது, நேருக்கு நேராக அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
    இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சோமேஷ்வரனும், அவரது 2 நண்பர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், மூவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் விசாரணையில், ஒரே இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணித்ததும், ஹெல்மெட் அணியாமலும், அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,930
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஃபைன் மட்டும் போட்டீங்கன்னா இங்கேயே’.. ‘இளம்பெண்ணின் செயலால் உறைந்து நின்ற போலீஸார்’.. ‘பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்’..

    அபராதம் விதித்தால் தற்கொலை செய்துகொள்வேன் என இளம் பெண் ஒருவர் போக்குவரத்து போலீஸாரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    [​IMG]
    தலைநகர் டெல்லியிலுள்ள காஷ்மீர் கேட் பகுதியில் உரிய பதிவு எண் பலகை இல்லாமல் வந்த இளம்பெண் ஒருவரை நிறுத்திய போலீஸார் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர். ஆனால் அபராதம் செலுத்த சம்மதிக்காத அந்தப் பெண் முதலில் தனது தாய்க்கு ஃபோன் செய்து பேசியுள்ளார். பின்னர் தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறியுள்ளார்.
    போலீஸார் அதை ஏற்க மறுத்ததால் அந்தப் பெண், “நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். நான் தற்கொலை செய்துகொண்டால் என்ன செய்வீர்கள்” என சத்தம் போட்டுள்ளார். சுமார் 20 நிமிடமாக அந்தப் பெண்ணிடம் பேசியும் அவர் தொடர்ந்து வாக்குவாதம் செய்துகொண்டே இருந்ததால் வேறு வழியின்றி போலீஸார் அவருக்கு அபராதம் விதிக்காமல் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,930
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பேனர் கடைக்கு எதுக்கு சீல்’.. ‘கொல செஞ்சவன விட்டுட்டு கத்தி செஞ்சவன’.. தலையில் அடித்துக்கொண்ட சீமான்.. வீடியோ!

    சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசியவை:
    [​IMG]
    திமுக, அதிமுக ஆகிய 2 பெரும் திராவிட கட்சிகள்தான் பேனர் முறையை கொண்டுவந்தனர். அந்த சரிந்ததால் தடுமாறி தங்கை சுபஸ்ரீ கீழே விழுந்தார். அதனால் அவருக்கு முன்னால் வந்துகொண்டிருந்த வாகன ஓட்டியினால் உடனடியாக எதுவும் செய்ய முடியவில்லை. இல்லையென்றால் அவர் சற்றே கவனத்துடன் இருந்திருப்பார்.
    இதைவிட பொறுப்பற்ற பதிலாக, 1000 பேனர் வைத்தால், ஒரு பேனர் விழத்தான் செய்யும் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியதை நான் பார்க்கிறேன். இதேபோல் கொலை செய்தவரை விட்டுவிட்டு கத்தி அடித்தவரை கைது செய்வதுபோல் பேனர் தயார் செய்யும் இடத்தில் சீல் வைத்தது வேடிக்கையாக இருக்கிறது. இனி அனைத்து கட்சிகளும் இந்த கலாச்சாரத்தை குறைக்க வேண்டும்.
    இதற்குக் காரணமானவர்களிடம் அதிகாரம் இருந்தால் அவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள். இதேபோல் கல்வியை பொறுத்தவரை மாணவர்கள் சிறு வயதிலேயே வைக்கப்படும் பொதுதேர்வினால் மிகவும் சிரமப்படுகிறார்கள். முதலில் இங்கிருக்கும் அமைச்சர்கள் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி பாஸ் ஆகட்டும்? அவர்கள் பாஸ் ஆனால் குழந்தைகளை படிக்க வைக்கலாம்.
    பார்த்து படிக்கும்போதே லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட பெயர்களை பார்த்து படிக்கவே முடியாதவர்கள்தான் இங்கு அமைச்சர்களாய் உள்ளார்கள், இதெல்லாம் கேவளம். இன்னும் இந்த ஆட்சி முடிய ஒரு வருஷம்தானே இருக்கு என்று நினைக்க முடியவில்லை. இன்னும் ஒரு வருஷம் இருக்கா... என்றுதான் நினைக்க தோன்றுகிறது.ஒரு வருடம் அரசின் செலவில் எல்லா இடங்களிலும் சுற்றிப் பார்த்துவிட்டு வரட்டும்.
    தேசிய இனங்களின் மொழிடை அழிப்பது வன்முறை; பல மொழிகள் என்றிருந்தால் இந்த நாடு இருக்கும், ஒரே மொழிதான் என்றால் பல நாடுகள் பிறக்கும். அது தேசிய மொழி என்றால், உலக மொழியாகவும், மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாகவும் இருக்கும் தமிழே அந்த ஒரு மொழியாக இருக்கட்டுமே? அதற்கு ஒப்புக்கொள்வீர்களா? எல்லாரும் ஆங்கிலத்தில் படிக்கும்போதே எதற்கு இந்தி? இந்தி நேஷனல் லாங்சேஜ்? நாங்க ரீஜனல் லாங்வேஜா? இதை எப்படி நாங்கள் சகித்துக் கொள்வது? எப்படி ஏற்றுக்கொள்வது?
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,930
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ‘தன்னுடன் துள்ளிக் குதித்த 4 வயது தம்பி’... ‘இப்போ ஒட்டு மொத்தத்தையும்’... 'சோகத்திலும் இளம் தாயின் நெஞ்சார்ந்த பதிவு'!


    அமெரிக்காவில் தன்னுடன் நன்றாக ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்த, தனது 4 வயது சகோதரன் கேன்சரால் பாதிக்கப்பட்டதும், 5 வயது சசோதரியின் மனநிலை குறித்து வெளியான பதிவு ஒன்று நெஞ்சை உலுக்கியுள்ளது.
    [​IMG]
    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இளம்தம்பதியான மத்தேயு மற்றும் கைட்லின் பர்க். இவர்களுக்கு 3 குழந்தைகள். இவர்களது வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருந்த நிலையில் தான், அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. இவர்களின் நடுக் குழந்தையான, 4 வயது பெக்கெட் பர்க் என்கிற சிறுவன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், லுகேமியா (leukemia) என்ற எலும்பு மற்றும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான் என்று மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் இளம் தம்பதிகள் செய்வதறியாது சோகத்தில் ஆழ்ந்தனர்.
    ஆனால் சிறுனின் சகோதரி ஆப்ரி, தனது தம்பிக்கு செய்யும் விஷயங்கள்தான், தற்போது மனதை கலங்க வைக்கிறது. இதுகுறித்து பெக்கெட்டின் ஃபேஸ்புக் பதிவில் தாய் பதிந்துள்ளவை, ‘குழந்தைகளுக்கான கேன்சர் மொத்தக் குடும்பத்தையும் பாதிக்கும் என யாரும் கூறியிருக்கமாட்டார்கள். கேன்சரால் பொருளாதார பாதிப்பு, உடல் ரீதியிலான பாதிப்பு போன்றவற்றை மட்டும்தான் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் கேன்சர் உள்ள ஒரு குழந்தையை, அதே வீட்டில் உள்ள மற்ற குழந்தைகள் எப்படி எதிர்கொள்ளும். அந்தப் போராட்டம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
    இந்தப் பதிவை பார்ப்பதற்கும், படிப்பதற்கும் சிலருக்குக் கடினமாக இருக்கலாம். 15 மாத இடைவெளியில் பிறந்த என் இரு குழந்தைகளும், சேர்ந்தே விளையாடுவார்கள், சேர்ந்தே பள்ளிக்குச் செல்வார்கள். தற்போது இருவரும் இணைந்தே குளிரான மருத்துவமனையின் அறையில் அமர்ந்துள்ளனர். தன் 4 வயது தம்பி, ஆம்புலன்ஸ் மூலம் ஐசியூ-க்கு அழைத்துச் செல்வதை, என் 5 வயது மகள் ஆப்ரி நேரில் பார்த்தாள். ஐ.சி.யூ-வில் சேர்க்கப்பட்ட அவனுக்கு, ஒரு டஜன் மருத்துவர்கள், தொடர்ந்து ஊசி செலுத்துவதையும், பல மருந்து, மாத்திரைகளை, அவன் உட்கொள்வதையும் பார்த்து செயலற்று நின்றாள். அங்கு என்ன நடக்கிறது என அவளுக்குத் தெரியவில்லை.

    ஆனால் தன் தம்பி, சிறந்த நண்பனுக்கு ஏதோ தவறாக நடக்கிறது என்பதை மட்டும் அவள் உணர்ந்திருந்தாள். ஒருமாத தொடர் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து, வீடு திரும்பிய தனது தம்பியால், முன்பு போல் எழுந்து நிற்க முடியவில்லை, விளையாடமுடியவில்லை என்பதை ஆப்ரி பார்த்தாள். ஒரு மாதத்துக்கு முன்னர் வரை துள்ளிக் குதித்து விளையாடிக்கொண்டிருந்த அவளின் தம்பி, தற்போது நோய்வாய்ப்பட்டுள்ளான். தாங்கள் இருவரும் ஒன்றாக விளையாடச் சென்ற பூங்காவுக்குத் தற்போது ஏன் செல்லவில்லை. தம்பி ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை. அவனுக்கு என்ன ஆனது போன்ற எந்தக் கேள்விகளையும் அவள் கேட்கவில்லை.
    ஒன்று மட்டும் செய்தாள், அவனுக்குத் துணை நின்றாள். தன் தம்பிக்கு நடக்கும் அனைத்தையும், அவள் தெரிந்துகொள்ள வேண்டும். நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவும் ஒற்றுமையும் தேவை. அவர்களைப் பிற குழந்தைகளிடமிருந்து தொலைவில் வைக்கக் கூடாது. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், அவர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறார்கள். என் குழந்தைகளும் அப்படிதான், பெக்கெட் ஒவ்வொரு முறை வாந்தி எடுக்கும்போது, ஆப்ரி அவனுக்குப் பின்னால் துணை நிற்பாள்.
    ஆப்ரி, மொத்த அன்பையும் தன் தம்பிக்குக் கொடுத்தாள். அவனை ஆதரித்தாள். நேரம், காலம் பார்க்காமல் அவனைக் கவனித்துக்கொள்கிறாள். இப்போது அவர்கள் முன்பைவிட நெருக்கமாக உள்ளனர். விளையாட்டுக்கு நடுவில் அவன் வாந்தி எடுக்கும் போது முதுகில் தேய்த்து விடுவது, தூங்கி எழுந்ததும் அவன் அருகில் இருப்பது. இதுதான் குழந்தைகள் கேன்சரின் உண்மையான நிலை. தம்பிக்காக தன் வாழ்வில் நிறைய நேரத்தைத் தியாகம் செய்துள்ளார் ஆப்ரி. குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க விடுங்கள். அதுவே இருவருக்கும் சிறந்தது’ என கைட்லின் கூறியுள்ளார்.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,930
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    'இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!!'.. 'மாட்டு வண்டி மீது'.. 'பாய்ந்த மோட்டார் வாகனச் சட்டம்?!'


    புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி, விதிகளை மீறுபவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் நடவடிக்கைகள் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதலே அமலுக்கு வந்தன.
    [​IMG]
    இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் உள்ள சார்பா கிராமத்தைச் சேர்ந்த ரியாஸ் ஹாசன் என்பவர் ஓட்டி வந்த மாட்டுவண்டிக்கு காவல் துறையினர் அபராத விதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடந்த சனிக்கிழமை அன்று தனது வயலோரமாக உள்ள சாலை ஓரத்தில், தன் மாட்டுவண்டியை நிறுத்தி வைத்திருந்த ரியாஸ் ஹாசனிடம், அங்கு ரோந்துக்கு வந்த சாஹஸ்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பங்கஜ் குமார், ரியாஸ் ஹாசனின் வீட்டுக்கு மாட்டு வண்டியை ஓட்டிச் சென்று விடச் சொல்லி, 1000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர். அதற்கான ரசீதையும் ஒப்படைத்துள்ளனர்.
    ஆனால் குழம்பிப் போன ரியாஸ் மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் போய் விசாரித்தபோதுதான், ரசீதை திரும்பப் பெற்றுக்கொண்டனர். இதுபற்றி பேசிய காவலர்கள், சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக செய்தி வந்ததை அடுத்து சோதனை செய்ததாகவும், அதன் அடிப்படையிலேயே அபராதம் விதிக்க முயற்சித்ததாகவும், ஆனால் இரவு வேளை என்பதால் வாகன விதிமுறைக்கான பில் புக் தவறுதலாக பயன்படுத்தப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,930
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ‘அதிவேகத்தில் வந்த எம்.எல்.ஏ-வின் காரால்’.. ‘நொடியில் நடந்த பயங்கரம்’.. ‘அடுத்து அவர் செய்த அதிரவைக்கும் காரியம்’..


    தெலுங்கானாவில் எம்.எல்.ஏ ஒருவரின் கார் மோதி சாலையோரம் சென்றுகொண்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
    [​IMG]
    தெலுங்கானா மாநிலத்தின் ஆளும் ராஷ்டிரிய சமிதி கட்சியின் கல்வகுர்தி தொகுதி எம்.எல்.ஏ ஆக இருப்பவர் ஜெய்பால் யாதவ். இவர் தன்னுடைய இன்னோவா காரில் நேற்று இரவு ஹைதராபாத்திலிருந்து கல்வகுர்தியை நோக்கி சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அவருடைய கார் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த ஜகநாத் (40) என்பவர் மீது மோதியுள்ளது.
    இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜகநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தின்போது காருக்குள் இருந்த ஜெய்பால் யாதவ் காயம் எதுவும் இன்றி உயிர் தப்பியுள்ளார். நேற்று இரவு 8 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தின்போது விபத்து நடந்ததும், காயமடைந்தவருக்கு உதவாமல் ஜெய்பால் யாதவ் மற்றொரு காரில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் கார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். கார் அதிவேகத்தில் சென்றதே விபத்துக்குக் காரணம் எனக் கூறியுள்ள அப்பகுதி மக்கள் இதற்கு உரிய நீதி கிடைக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,930
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    உங்க 'பையனோட' ஏன் சாப்ட்டீங்க?.. பெண்ணிற்கு 'பில்' அனுப்பிய கல்யாண வீட்டார்!

    பொதுவா கல்யாண வீட்ல சாப்பிட்டு முடிச்சிட்டு நம்மளால முடிஞ்ச அன்பளிப்பையோ,பணத்தையோ மணமக்களுக்கு பரிசா கொடுத்து வாழ்த்திட்டு வருவோம். ஆனா வெளிநாட்ல நடந்த ஒரு கல்யாணத்துல சாப்பிட்டதுக்கு பொண்ணோட வீட்ல இருந்து சம்பந்தப்பட்டவங்களுக்கு பில் அனுப்பி இருக்காங்க.
    [​IMG]
    இதுபத்தி ரெட்டிட் அப்படின்ற சமூக வலைதளத்துல பெண் ஒருத்தர் பகிர்ந்து கொண்ட தகவல் இப்போ வைரலாகிட்டு இருக்கு.
    இதுபத்தி அந்த பெண்,''நானும் என்னோட 16 வயது மகனும் ஒரு கல்யாணத்துக்கு போய் இருந்தோம். கல்யாணம் முடிஞ்சதும் எல்லோரையும் சாப்பிட கூப்பிட்டாங்க. சாப்பிடுற இடத்துக்கு போனப்போ அங்க குழந்தைகளுக்கு, பெரியவங்களுக்கு அப்படின்னு தனித்தனியா சாப்பாடு இருந்தது.என் பையனுக்கு 16 வயசு அப்டிங்கிறதால அவனும் என்கூட உட்கார்ந்து சாப்பிட்டான்.உணவு நல்லா இருந்தது.சாப்பிட்டு வீட்டுக்கு வந்தோம்.
    இரன்டு நாள் கழிச்சு பொண்ணு வீட்டுல இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்துச்சு.அதுல ஒரு பில் சேர்த்து அனுப்பி இருந்தாங்க.அதோட ஒரு குறிப்பும் இருந்துச்சு.அந்த கடிதத்துல,''நீங்க உங்க மகனோட கல்யாணத்துக்கு வந்ததுல ரொம்ப சந்தோஷம். நாங்க குழந்தைகளுக்கு தனியா உணவு ஏற்பாடு செஞ்சு இருந்தோம். ஆனா உங்க பையன் பெரியவங்க சாப்பாட்டை சாப்பிட்டாரு.
    இதனால கேட்டரிங் பண்றவங்க எங்ககிட்ட அதுக்கு பணம் வாங்கிட்டாங்க. அதனால நீங்க அந்த பில்ல எங்களுக்கு அனுப்பி வைங்கன்னு அப்படின்னு சொல்லி இருந்தாங்க. இதைப் பார்த்ததும் எனக்கு ஷாக் ஆகிடுச்சு. வயசு பத்தி அங்க எதுவும் சொல்லல. அதோட என் பையனுக்கு 16 வயசு ஆச்சு.அதனால தான் அவனை என்னோட சாப்பிட வச்சேன். கடைசில இப்படி பண்ணிட்டாங்கன்னு,''சொல்லி வருத்தப்பட்டு இருக்கார்.
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,930
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    'எல்லாமே அவன் தான்'...'மொத்த குடும்பத்தையே பலி வாங்கிய 'கோர விபத்து'... கொடூர சம்பவம்!


    ஓமனில் நடந்த கார் விபத்தில் ஐதராபாத்தை சேர்ந்த தம்பதி உட்பட மொத்த குடும்பமும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    [​IMG]
    ஐதராபாத்தை சேர்ந்தவர் கவுசல்லா அஸ்மத்துல்லா கான். துபாயில் பொறியாளராக வேலை செய்து வரும் இவருக்கு ஆயிஷா என்ற மனைவியும், 3 வயதில் ஹனியா என்ற மகளும் 8 மாத ஹம்சா கான் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் நால்வரும் குடும்பத்துடன் ஓமன் சென்று கொண்டு துபாய்க்கு திரும்பி கொண்டிருந்தார்கள். அப்போது சலாலா என்ற இடத்தின் அருகே கார் வந்தபோது, எதிரே வந்த கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. மோதிய வேகத்தில் அஸ்மத்துல்லா சென்ற கார் கவிழ்ந்து உருண்டது.
    கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்தில் அஸ்மத்துல்லா, அவருடைய மனைவி ஆயிஷா, மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த 3 வயது ஹனியா மருத்துவமனையில் சிகிசைக்காகச் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். சாலை விபத்தில் மொத்த குடும்பமும் உயிரிழந்த சம்பவம் அங்குள்ள இந்தியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    இதனிடையே ஐதராபாத்தில் உள்ள அஸ்மத்துல்லா'வின் இளைய சகோதரர் கூறும் போது ''அஸ்மத்துல்லா தான் எங்கள் குடும்பத்தின் ஆணி வேராக இருந்தார். அவரது குடும்பத்திற்கு இப்படி ஒரு சோகம் நடக்கும் என கனவிலும் நினைக்கவில்லை. தனது கடின உழைப்பால் முன்னேறி துபாயில் வேலைக்கு சென்றவருக்கு இப்படி ஒரு முடிவா'' என கண்ணீர் மல்க கூறினார்.
     

Share This Page