Todays news(17.10.19)

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Oct 17, 2019.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    நாமக்கல் அருகே வீட்டில் தோஷம் கழிப்பதாக கூறி பரிகார பூஜை செய்வது போல் நடித்து 15 சவரன் நகை கொள்ளை


    நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பதிநகரில் வீட்டில் தோஷம் கழிப்பதாக கூறி பரிகார பூஜை செய்வது போல் நடித்து 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பூஜையில் வைத்திருந்த 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பூஜையில் வைத்திருந்த நகைகளை திருடி சென்ற முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்க தடை

    தென்காசி: தொடர்மழை காரணமாக நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    தமிழகத்தில் புதிதாக 5,125 பெட்ரோல் பங்க்குகள் தொடங்க தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை

    மதுரை: தமிழகத்தில் புதிதாக 5125 பெட்ரோல் பங்க்குகள் தொடங்க தடை விதிக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல் பங்க் அமைக்க ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையையும் உயர்நீதிமன்ற கிளை நீக்கியது. மேலும் இதனை பொதுநல வழக்காக கருத முடியாது என்றும் கூறியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்த வெங்கிடுசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் தமிழகத்தில் புதிதாக 5,125 பெட்ரோல் பங்குகள் அமைப்பது தொடர்பான டெண்டர் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஏற்கனவே, டெண்டர் அறிவிப்புக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மனு மீதான விசாரணை நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு கடந்த மார்ச் மாதம் மீண்டும் நடந்தது.

    அப்போது மனுதாரர் தரப்பில், “பெட்ரோல் நிலையங்களை அதிகரித்திருப்பதற்கான டெண்டரில் பல்வேறு விதிகள் மீறப்பட்டிருப்பதாகவும், உடனடியாக பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனங்கள் தரப்பில், “முறையாகவே டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை நீக்க வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், நியாயமான காரணம் எதுவும் காணவில்லை எனக்கூறி, இடைக்கால தடையை நீக்க மறுப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்போது, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு சாதகமாக விற்பனை செய்பவர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே, இதனை பொதுநல மனுவாக கருத முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை எப்போது?: உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் தகவல்

    மதுரை: ஸ்டெர்லைட் வழக்குகளை டிசம்பர் முதல் வாரத்தில் விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் தகவல் தெரிவித்தார். ஸ்டெர்லைட் வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையிட்டனர்.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    புதிதாக பெட்ரோல் பங்க்குகள் தொடங்க தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்ற மதுரை கிளை

    மதுரை: புதிதாக பெட்ரோல் பங்க்குகள் தொடங்க தடை விதிக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல் பங்க் அமைக்க ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையையும் உயர்நீதிமன்ற கிளை நீக்கியது.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    விக்கிரவாண்டி தொகுதிக்கு முதல்வர் எடப்பாடி வர உள்ளதை ஒட்டி போக்குவரத்து நிறுத்தம்: வாகன ஓட்டிகள் தவிப்பு

    விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதிக்கு முதல்வர் எடப்பாடி வர உள்ளதை ஒட்டி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். விழுப்புரத்தில் இருந்து 25.கி.மீ. தொலைவிலேயே வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கனமழை

    தஞ்சை : தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கரந்தை, புதிய பேருந்துநிலையம், நாஞ்சிக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2500 கன அடியாக குறைப்பு

    சேலம்: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மாலை 3 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.03 அடியாகவும், நீர் இருப்பு 82.87 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
     
  9. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி குருபூஜை அன்று பேனர் வைக்க தடை: மாவட்ட ஆட்சியர்

    ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி குருபூஜை அன்று பேனர் வைக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் குருபூஜையை யொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என தெரிவித்தார்.
     
  10. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    வருசநாடு, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை: வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளம்.. மக்கள் அச்சம்

    தேனி: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டாவது நாளாக மழை பெய்துவருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக மூல வைகை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளான வெள்ளிமலை, உடங்கல், ஓயம்பாறை, வருசநாடு, உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை, விடிய விடிய கொட்டியது. இதனால் வைகையின் பிறப்பிடமாகவும், வைகை அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாகவும் விளங்கும் மூல வைகை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இருபுற கரைகளையும் மூழ்கி செல்லும் தண்ணீர், வேகமாக வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைகுண்டு பகுதிகளை கடந்த நிலையில், இன்று இரவுக்குள் வைகை அணையை சென்றடையும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த வெள்ளப்பெருக்கால் மலைகிராமங்களில் வசிக்கும் மக்கள் ஆற்றை கடந்து செல்லமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 60 புள்ளி ஆறு பூஜ்ஜியம் அடியாக இருக்கிறது. வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயத்திற்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 90 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
     

Share This Page