Todays news(17.10.19)

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Oct 17, 2019.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    போலி ரசீதுகள், ஆவணங்களை காட்டி ரூ.450 கோடி ஜிஎஸ்டி வரிமோசடி செய்த ஈரோடு தொழிலதிபர் கைது!

    ஈரோடு: ரூ.450 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி செய்த ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபர் அசோக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி தொடர்பாக ஈரோட்டை சேர்ந்த அன்னை இன்பிரா என்ற நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு ஒப்பந்தப்பணிகளை முடியாமலேயே செய்து முடித்ததாக போலி ரசீதுகளை ஈரோட்டை சேர்ந்த நிறுவனம் அளித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பெருந்துறை சிப்காட் பகுதியில் பைப் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இதுதவிர மேலும் சில தொழிற்சாலைகளை அவர் நடத்தி வருகிறார். பைப்புகளை விற்பனை செய்ததில் போலி ரசீது மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டதாக இவர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக ஜி.எஸ்.டி.,- யின் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் இவருக்கு சொந்தமான இடங்களில் மேற்கொண்ட சோதனையில் போலி ரசீதுகளை கைப்பற்றியுள்ளனர். அதில் மொத்தம் 450 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தொழிலதிபர் அசோக்குமாரை ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். விசாகப்பட்டினத்தில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வருகிற 30ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொழிலதிபர் அசோக்குமார் ஈரோட்டை மையமாக வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த ஒரு வருடத்தில் ( 2018 முதல் ஆகஸ்ட் 2019ம் ஆண்டு வரை) மட்டும் சுமார் 450 கோடி ரூபாய் மோசடி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரியில் மோசடி நடத்தி வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    அம்மா என்ற பெயர், ஜெயலலிதா படத்தை அமமுக பயன்படுத்த தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை

    சென்னை: அம்மா என்ற பெயர், ஜெயலலிதா படத்தை அமமுக பயன்படுத்த தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் அம்மா என்ற பெயர், ஜெயலலிதா படத்தை அமமுக பயன்படுத்த அதிமுக எதிர்ப்பு தெரிவித்ததால் கோரிக்கை விடுக்க்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ரூ.450 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடி செய்ததாக ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் கைது

    ஈரோடு: ரூ.450 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடி செய்ததாக ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட தொழிலதிபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசு ஒப்பந்தப்பணிகளை முடிக்காமலேயே செய்து முடித்ததாக போலி ஈரோட்டைச் சேர்ந்த நிறுவனம் வழங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கனமழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே நாளை முதல் 3 நாட்களுக்கு மலை ரயில் ரத்து


    குன்னூர்: கனமழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே நாளை முதல் 3 நாட்களுக்கு மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. குன்னூர் - ஊட்டி மலை ரயில் சேவை வழக்கம் போல் தொடரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    இலங்கை யாழ்ப்பணம் சிறையில் இருந்த 11 தமிழக மீனவர்கள் நல்லிணக்க அடிப்படையில் விடுதலை

    இலங்கை: இலங்கை யாழ்ப்பணம் சிறையில் இருந்த 11 தமிழக மீனவர்கள் நல்லிணக்க அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட நாகை, தஞ்சையை சேர்ந்த 11 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழு

    திருப்பூர்: பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிவாசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்துக்கான குழுவிலும் மணிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சேலம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு

    சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்துள்ளர். பாலகிருஷ்ணன் என்பவரது மனைவி யோகேஸ்வரி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி... டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

    டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் தொடர்பு முழுமையாக இருக்கிறது எனவே அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருப்பதால் அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. ஆனால் 15 நாட்கள் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, அவரிடம் 7 நாட்கள் மட்டுமே விசாரிக்க அனுமதி வழங்கப்படும் என்று உத்தரவிட்டனர்.

    மேலும் வரும் 14-ம் தேதி மீண்டும் சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டியிருந்தார். இந்த வழக்கை பொறுத்தவரையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த ஆக.21-ம் தேதி சிபிஐ கைது செய்தது. அதனை தொடர்ந்து செப்.5-ம் தேதியிலிருந்து நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று நேற்று அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது. ஏற்கனவே இந்த வழக்கை பொறுத்தவரையில் 9 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். இந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு எதிராக எங்களிடம் வலுவான ஆதாரம் உள்ளது.

    செப்.5-ம் தேதி அமலாக்கத்துறை முன்பு சரணடைய தயாராக இருப்பதாக அவர் கூறிய போது அப்போது அவரை நாங்கள் கைது செய்ய அவசியம் ஏற்படவில்லை. எனவே தான் அப்போவது அவரை நாங்கள் கைது செய்யவில்லை. ஆனால் 9 பேரிடம் நாங்கள் விசாரணை மேற்கொண்டுள்ளோம். தற்போது எங்களிடம் ப.சிதம்பரத்துக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருக்கிறது. எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும். அவரை காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே பல உண்மைகள் வெளிவரும். எனவே 15 நாட்கள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் ஆஜராயிருந்த வழக்கறிஞர் கூறினார்.

    ஏற்கனவே கடந்த செப்.5-ம் தேதி சிதம்பரம் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக தயாராக இருந்த போது வேண்டாம் என்று கூறிய அமலாக்கத்துறை இப்போது அவரை சிபிஐ கைது செய்து 60 நாட்கள் ஆயிருக்கும் நிலையில் ஜாமீனில் வெளியே வந்துவிடுவார் என்ற எண்ணத்தில் அவரை அமலாக்கத்துறை கைது செய்து விசாரிக்க துடிக்கிறது. இது உள்நோக்கம் கொண்ட ஒரு செயல். சிதம்பரம் மீது எந்த ஆதாரமும் இந்த வழக்கில் இல்லாத போது அவரை கஷ்டப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சிபிஐயும், அமலாக்கத்துறையும் குறியாக இருக்கிறது என்று ப.சிதம்பரம் சார்பில் ஆஜராயிருந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிவில் வாதிட்டார்.

    மேலும் இது மட்டுமல்லாமல் 2 ஆண்டுகள் இல்லாத ஆதாரம் இப்போது 15 நாட்களில் ஆதாரம் அமலாக்கத்துறைக்கு எங்கிருந்து கிடைத்தது என்று கேள்வி எழுப்பிய கபில் சிவில் அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் அமலாக்கத்துறை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய கோரிக்கையை நிராகரித்து 7 நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
     
  9. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

    டெல்லி: ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ப.சிதம்பரத்தை 15 நாள் விசாரிக்க அனுமதி கோரியிருந்த நிலையில் 7 நாள் விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
     
  10. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருப்பது ராம ஜென்மபூமி தான் இதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை: கர்நாடக அமைச்சர் சி.டி.ரவி திட்டவட்டம்

    பெங்களூரு: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் ராம ஜென்மபூமி தான் என்பதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை என பாஜகவைச் சேர்ந்த கர்நாடக மாநில அமைச்சர் சி.டி.ரவி கூறியுள்ளார். அயோத்தி ராம ஜென்ம பூமி பாபர் மசூதி நிலத் தகராறு வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா விரஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
     

Share This Page