TODAYS NEWS(17.12.2018)

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Dec 17, 2018.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,805
    Likes Received:
    489
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பவானி அருகே வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு

    ஈரோடு: பவானி அடுத்த அம்மாபேட்டை பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வெல்லத்தில் ரசாயனம் கலக்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,805
    Likes Received:
    489
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஆன்லைன் மருந்து விற்பனையை மத்திய அரசு அனுமதித்தால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்: மருந்து வணிகர்கள் சங்கம்

    சேலம்: ஆன்லைன் மருந்து விற்பனையை மத்திய அரசு அனுமதித்தால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என மருந்து வணிகர்கள் சங்க மாநில பொது செயலாளர் செல்வம் கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். முன்னதாக ஆன்லைன் மருந்து விற்பனைக்கு புதிய விதிகளை வகுக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,805
    Likes Received:
    489
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கஜா புயல் தொடர்பாக தமிழக அரசு அளித்த விவரங்கள் போதுமானதாக இல்லை: மத்திய அரசு வழக்கறிஞர்

    மதுரை: கஜா புயல் தொடர்பாக தமிழக அரசு அளித்த விவரங்கள் போதுமானதாக உள்ளதா? என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பிய நிலையில், அரசு அளித்த விவரங்கள் போதுமானதாக இல்லை என மத்திய அரசு வழக்கறிஞர் விளக்கமளித்துள்ளார். மேலும் கஜா பாதிப்பு தொடர்பாக மீண்டும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், விளக்கம் திருப்த்யளிக்கும்படி இருந்தால் 2 நாட்களில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் மத்திய அரசு கேட்ட விளக்கம் நேற்றே அளிக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,805
    Likes Received:
    489
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஸடெர்லைட்டை மீண்டும் திறப்பதில்லை என்ற முடிவில் அரசு உறுதி...யாரும் போராட வேண்டாம் : தூத்துக்குடி கலெக்டர்

    தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பதை எதிர்த்து தூத்துக்குடியில் பொதுமக்கள் யாரும் போராட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதனால் தூத்துக்குடியில் யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். ஸ்டெர்லைட் ஆலை உடடினயாக திறக்கப்படாது என்பதால் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபட்டுள்ளனர் என்றார். ஸ்டெர்லைட் தீர்ப்பு தொடர்பாக, ஓரிரு வாரங்களில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என கூறினார்.

    முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என வலியுறுத்தி தூத்துக்குடி ஆட்சியரைச் சந்தித்து பொதுமக்கள் மனு அளிக்கவுள்ளதாக வந்த தகவலை அடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். லவர தடுப்பு வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக நிறுத்தி வைக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சியினர், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்ட பசுமை தீர்ப்பாயத்திற்க எதிராக முழக்கங்களை எழுப்பினர். பெண்கள் திரண்டு ஒப்பாரி வைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். போராட்டத்திற்கு இடையே, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு, சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,805
    Likes Received:
    489
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    முதுமலை சாலையில் ஆக்ரோஷமாக மோதிக் கொண்ட யானைகள் : அச்சத்துடன் பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள்

    நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை காண வருகை தருகின்றனர். இந்நிலையில் வனப்பகுதியின் சாலையோரத்தில் இரண்டு காட்டு யானைகள் மோதலில் ஈடுபட்டதால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரண்டு ஆண் யானைகள் திடீரென ஒன்றுக்கு ஒன்று ஆக்ரோஷமாக தாக்கிக் கொண்டன. இரு யானைகளும் இடையிடையே சாலை நடுவே வந்தும் மோதிக் கொண்டன.

    இதனை கண்டு அச்சம் அடைந்த சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் தங்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தின. அப்போது பயணிகள் உடனடியாக புறப்படுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தினர். சிலர் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து கொண்டு இருந்ததால் அவர்களையும் வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். யானைகள் மோதல் காரணமாக தமிழக - கர்நாடக மாநிலங்கள் இடையேயான வழித்தடத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின் யானைகளின் சண்டை முடிவுக்கு வந்த பிறகு, போக்குவரத்து சீரானது. யானைகள் சண்டையிட்டு கொண்டதை சுற்றுலா பயணிகள் நீண்ட தூரத்தில் இருந்தவாறு அச்சத்துடன் பார்த்து ரசித்தனர்.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,805
    Likes Received:
    489
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கோட்டூர் அருகே கஜா புயலால் வீட்டை இழந்த தாயில்லா மாணவிகளுக்கு புதிய வீடு : முகநூல் நண்பர்களால் கிடைத்தது

    மன்னார்குடி: கோட்டூர் அருகே கஜா புயலால் வீட்டை இழந்த தாயில்லா மாணவிகளுக்கு புதிய வீடு முகநூல் நண்பர்களால் கிடைத்தது. திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மேல கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (40). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (32). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு விசோனியா (12), வினிதா (11) ஆகிய 2 பெண் குழந்தைகள். இவர்கள் அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வந்தனர். ராஜீவ்காந்தி சிறு வயதிலேயே தாயை இழந்த 2 பெண் குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 15 ம் தேதி வீசிய கஜா புயலின் கோரப்பிடியில் சிக்கி மாணவிகளின் சிறிய குடிசை வீடு முற்றிலும் சேதமடைந்தது.

    ஏற்கனவே வறுமையில் வாழ்ந்து வந்த மாணவிகள் தங்க இடமின்றி இடிந்த கூரை வீட்டின் ஓரத்திலேயே வசித்து வந்தனர். குடும்பத்தை கவனிக்க வேண்டிய மாணவிகளின் தந்தையோ தினமும் மது அருந்தி விட்டு தனது குழந்தைகளை கவனிக்காமல் சுற்றித்திரிந்தார். இவர்களின் சோகத்தை எந்த ஒரு அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. ஏழ்மை நிலையில் இருந்தாலும் மாணவிகள் இருவரும் படிப்பில் படுசுட்டியாக இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவர்களின் பள்ளி இயங்க துவங்கியது. கவலைகள் ஒருபுறம் இருந்தாலும் பள்ளிக்கு சென்றால் ஒரு வேளை மத்திய உணவாவது கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் வழக்கமாக பள்ளிக்கு சென்றனர்.


    மாணவிகள் இருவரின் முகங்களும் சோகமாக இருப்பதை கண்ட அப்பள்ளி யின் ஆசிரியர் மணி கணேசன் அதுகுறித்த மாணவிகளிடம் விசாரித்துள்ளார். அப்போது இரு மாணவிகளும் தங்களின் வேதனையை கண்ணீருடன் கூறினர். இதனை கேட்டு கண்கலங்கிய ஆசிரியர் மணிகணேசன் உடனடியாக தனது முகநூல் பக்கத்தில் மாணவிகளின் நிலைமையை பதிவாக்கினார். அதனை முகநூலில் பார்த்த பலரும் வார்த்தைகளால் மட்டுமே மாணவிகளுக்கு ஆறுதல் கூறியிருந்தனர்.

    இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு பிரபலமான மோட்டார் கம்பெனியில் வேலை பார்க்கும் 6 நண்பர்கள் இணைந்து பகிர்ந்துண்ணும் காக்கைகள் நண்பர்கள் குழு என்ற பெயரில் முகநூலில் குழுவாக இயங்கி வந்த அவர்களிடம் மாணவிகள் குறித்தான ஆசிரியர் மணி கணேசனின் முகநூல் பதிவு சென்றடைந்தது. பின்னர் ஆசிரியர் மணி கணேசனை தொடர்பு கொண்ட அவர்கள் மேல கண்டமங்கலம் கிராமத்திற்கு உடனடியாக நேரில் வந்து மாணவிகளின் இடிந்த கூரை வீட்டை பார்வை யிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறியதனுடன் ரூ.50 ஆயிரம் மதிப்பில் 10 நாட்களுக்குள் எளிமையான வீடு ஒன்றை மாணவிகளுக்கு கட்டிக்
    கொடுத்தனர்.
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,805
    Likes Received:
    489
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கடத்தூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் பொதுமக்கள்

    கடத்தூர்: கடத்தூர் அருகே, குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வரும் பொதுமக்கள், சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, கடத்தூர் அருகே குருபரஅள்ளியில் 800க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் 5 சின்டெக்ஸ் டேங்க் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கிணற்றில் இருந்து மேல்நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி விநியோகம் செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இங்குள்ள சின்டெக்ஸ் டேங்குகளும் குடிநீர் ஏற்றாததால் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால், அத்தியாவசிய தேவைகளுக்கு கூட போதிய குடிநீரின்றி இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். வயல்வெளியில் வெகுதூரம் சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டி உள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சரி செய்யும்படி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இனியும் தாமதம் செய்யாமல் நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்,’ என்றனர்.
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,805
    Likes Received:
    489
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஈரோட்டில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

    ஈரோடு : ஈரோட்டில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. மிட்டாய்காரர் தெருவில் உள்ள ஞானசேகரன் என்பவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் குடோன் இயங்கி வருகிறது. இங்கு பழைய பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி தரம் பிரித்து மறு சுழற்சி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தீ விபத்து நடந்துள்ளது. பணி முடிந்து ஞானசேகரன் குடோனைப் பூட்டிச் சென்றபோது நள்ளிரவில் தீ பற்றி எரிந்துள்ளது. பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்தனர். பிளாஸ்டிக் குடோன் என்பதால் தீ கட்டுக்கடங்காமல் மளமளவென்று கொழுந்து விட்டு எரிந்தது. இதையடுத்து மேலும் 3 தண்ணீர் லாரிகள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு தீயை சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.இந்த தீ விபத்தில் சுமார் 6 லட்சம் மதிப்பிலான பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பேப்பர்கள் எரிந்து நாசமாகின. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
     
  9. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,805
    Likes Received:
    489
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கடலூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழப்பு

    கடலூர்: கடலூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி ஏழுமலை அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். டிச.15ல் ஆரோவில் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஏழுமலை கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
     
  10. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,805
    Likes Received:
    489
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    இந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு ஜாமீன்

    கும்பகோணம் : இந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு ஜாமீன் வழங்கியது கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றம். திருமகள் தினமும் திருச்சி சிலை கடத்தல் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். முன்னதாக சென்னை சிலை கடத்தல் பிரிவு போலீசார் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளை நேற்று கைது செய்தனர். மயிலாப்பூர் மயில் சிலை வழக்கில் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
     

Share This Page