TODAYS NEWS 22.1.2020

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Jan 22, 2020.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    'உண்மையை தான் பேசினேன்; மன்னிப்பு கேட்க முடியாது' : ரஜினி திட்டவட்டம்


    சென்னை:''நான் இல்லாதது எதையும் சொல்லவில்லை. பத்திரிகையில் வந்த செய்தியை தான் சொன்னேன். நான் பேசியதற்காக, மன்னிப்பு கேட்க முடியாது. இது, மறுக்க வேண்டிய சம்பவமில்லை; மறக்க வேண்டிய சம்பவம்,'' என, நடிகர் ரஜினி கூறினார்.

    சென்னையில் நடந்த, 'துக்ளக்' வார இதழ் விழாவில், ஈ.வெ.ரா., குறித்து, ரஜினி பேசிய பேச்சுக்கு, திராவிட கழகத்தினர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக, ரஜினி மீது, போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஈ.வெ.ரா., குறித்த பேச்சுக்கு, ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என, சிலர் போர்க்கொடி துாக்கியுள்ளனர். சில அமைப்பினர், நேற்று சென்னை, போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டை முற்றுகையிட முயன்றனர்.

    இது தொடர்பாக, ரஜினி தன் வீட்டில், நேற்று அளித்த பேட்டி:பத்திரிகை விழாவில், நான் பேசிய பேச்சு, சர்ச்சையாகி உள்ளது. நான் சொன்ன மாதிரி, ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்கின்றனர். 'அவுட்லுக்' ஆங்கில இதழ் உள்ளிட்ட பத்திரிகைகளில் வந்த செய்தியை தான், நான் பேசினேன். சேலத்தில், 1971ல், ஈ.வெ.ரா., நடத்திய பேரணி யில், கடவுள் உருவ பொம்மைகளுக்கு உடையில்லாமல், செருப்பு மாலை அணிவித்து, ஊர்வலமாக எடுத்து வந்ததாக, அந்த செய்தியில் கூறியுள்ளனர்.
    கற்பனையாக, நான் எதையும் பேசவில்லை; இல்லாததையும் சொல்லவில்லை. நாளிதழ்களில் வந்ததை தான் கூறினேன். நான் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்பதை, தாழ்மையுடன் கூறிக் கொள்கிறேன். என் பேச்சை, நான் இப்போது தெளிவுப்படுத்தி இருக்கிறேன். நான் பார்த்ததை தான் பேசுகிறேன். அவரவர் பார்த்ததை, அவர்கள் பேசுகின்றனர். இது, மறுக்கக்கூடிய சம்பவம்இல்லை; ஆனால், மறக்க வேண்டிய சம்பவம்.இவ்வாறு, ரஜினி கூறினார்.


    'ரஜினி கொஞ்சம் யோசித்து பேசணும்' வேண்டும்: ஸ்டாலின்


    ''ஈ.வெ.ராமசாமியை பற்றி, நடிகர் ரஜினி பேசும் போது, கொஞ்சம் யோசித்து, சிந்தித்து பேச வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறினார். சென்னை அறிவாலயத்தில், அவர் அளித்த பேட்டி:தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டிக்கும் வகையில், அடுத்த கட்டமாக, என்ன செய்யலாம் என்பதற்காக, வரும், 24ம் தேதி, தி.மு.க., தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, முடிவு எடுக்க உள்ளோம்.

    'ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு, மக்களின் கருத்துகளை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என, பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம்' என, ஏற்கனவே, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் கூறியுள்ளார்.தற்போது, திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமருக்கு முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதியிருக்கிறார். ஒரு நாடகம் நடந்து கொண்டுஇருக்கிறதே தவிர, உள்ளப்படியே தைரியத்துடன் கேட்கக் கூடிய தெம்பு, இந்த அரசுக்கு இல்லை.

    ரஜினி அரசியல்வாதி அல்ல; அவர் ஒரு நடிகர். தமிழ் இனத்திற்காகவே, 95 ஆண்டு காலம் வாழ்ந்து போராடி, சமுதாயத்திற்காக வாழ்ந்து காட்டிய, ஈ.வெ.ராமசாமியை பற்றி பேசும் போது, கொஞ்சம் யோசித்து, சிந்தித்து பேச வேண்டும். இது, ரஜினிக்கு என் அன்பான வேண்டுகோள்.
    இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.



    ரஜினி கருத்துக்கு தேவநாதன் ஆதரவு


    'மன்னிப்பு கேட்க வேண்டியது, தி.க.,வினர் தான்; ரஜினி அல்ல' என, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:'கடந்த, 1971ல், சேலத்தில், ஈ.வெ.ராமசாமி நடத்திய ஊர்வலத்தில், ராமர், சீதை சிலைகளை, உடை இல்லாமல் எடுத்துச் சென்றனர்' என, 'துக்ளக்' விழாவில், ரஜினி தெரிவித்திருந்தார். இதை கண்டித்து, திராவிட கழகத்தினர், ரஜினியை கைது செய்ய வலியுறுத்தினர்.

    இந்நிலையில், ரஜினி, தான் பேசியதற்காக வருத்தப்படவோ, மன்னிப்பு கேட்கவோ முடியாது என, ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். தமிழகமெங்கும், அவருக்கு பல கோடி ஆதரவு கரங்கள் கைத்தட்டி வரவேற்கின்றன; நாமும் வரவேற்போம். ஹிந்துக்களின் மனம் புண்படும்படி, கோவில் வாசல்களில், கடவுள் இல்லை என்றும், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்றும், அரசு அதிகாரத்தை பயன்படுத்தி, கடவுள் நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்ட காலம் கடந்து விட்டது.

    சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் ஏவுகணையை அனுப்புகிற அறிவியல் நிபுணர்கள், திருப்பதியில் பெருமாளை வேண்டி, அனுப்பி வருவதை பார்க்கிறோம். இனிமேலும், கருப்பு சட்டையும், கசப்பை விதைக்கும் கருத்துகளும் எடுபடாது என, தெளிவாக தெரிந்து, மன்னிப்பு கேட்க மறுத்த ரஜினியை, மனமார பாராட்டுகிறேன். பல கோடி ஹிந்துக்கள் மனங்களை புண்படுத்தியதற்காக, மன்னிப்பு கேட்க வேண்டியது, திராவிட கழகத்தினர் தான்; ரஜினி அல்ல.இவ்வாறு, தேவநாதன் கூறியுள்ளார்.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சயீப் அலி கானிடம் பா.ஜ., - எம்.பி., மீனாக் ஷி லேகி கேள்வி

    புதுடில்லி: 'வரலாறை நம்ப மாட்டேன் எனக் கூறிய நடிகர் சயீப் அலி கான், தன் மகனுக்கு, தைமூர் என பெயர் வைத்தது ஏன்?'' என, பா.ஜ., - எம்.பி., மீனாக் ஷி லேகி கேள்வி எழுப்பியுள்ளார்.



    எதிர்ப்பு:

    பாலிவுட் நடிகர் சயீப் அலி கான், தன்ஹாஜி என்ற வரலாற்று படத்தில் நடித்துள்ளார். மஹாராஷ்டிராவில் வசித்த, 17ம் நுாற்றாண்டை சேர்ந்த போர் வீரனை பற்றிய கதை இது. இந்த படம், சமீபத்தில் வெளியானது. இது குறித்த விளம்பர நிகழ்ச்சியில் பேசிய சயீப் அலி கான், 'தன்ஹாஜி பற்றிய விஷயத்தை வரலாறாக நான் கருதவில்லை. 'இந்தியா என்ற கருத்தாக்கமே, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வந்ததற்கு பின் தோன்றியது தான்' என கூறியிருந்தார். இதற்கு, பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


    [​IMG]



    இந்நிலையில், பா.ஜ., வைச் சேர்ந்தவரும், எம்.பி.,யுமான மீனாக் ஷி லேகி, இது குறித்து கூறியதாவது: துருக்கியை சேர்ந்தவர்கள் கூட, தைமூரை, கொடுங்கோல் அரசன் என்கின்றனர். ஆனால், வரலாறை நம்பாதவர்கள், தன் மகனுக்கு தைமூர் என பெயர் சூட்டியது ஆச்சரியம் அளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.



    கொடுங்கோல் ஆட்சி:

    துருக்கியை சேர்ந்த தைமூர் என்ற அரசன், 17ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவன். இந்தியா மீது படையெடுத்து, டில்லியை கைப்பற்றினான். அப்போது, பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் வசித்த ஆயிரக்கணக்கான மக்களின் தலைகளை வெட்டி வீழ்த்தி, கொடுங்கோல் ஆட்சி புரிந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த விவகாரத்தைத் தான், மீனாக் ஷி லேகி, மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார்.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஜூன் 1 முதல்! ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு முறை அமல்..

    புதுடில்லி:-''மத்திய அரசின், 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம், ஜூன் 1 முதல், நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், ரேஷன் அட்டை வைத்துள்ள, 81 கோடி மக்கள், நாட்டின் எந்த மூலையில் உள்ள ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்கி பயன்பெறலாம்,'' என, மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, 2016 முதல், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை, குறைந்தபட்ச விலையாக, கிலோ, 13 ரூபாய்க்கு, ரேஷன் கடைகள் மூலம், மாதம்தோறும் வழங்கி வருகிறது.

    இந்நிலையில், பணிசூழல் காரணமாக,பல்வேறு மாநிலங்களுக்கு குடிபெயரும் தொழிலாளிகள், நாட்டின் எந்த மூலையில் உள்ள ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கும் வகையில், 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது. நாடு முழுமைக்கும் பொருந்தும் வகையிலான பொதுவான வடிவமைப்பில், ரேஷன் அட்டைகளை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.

    இதற்கு பல மாநிலங்கள் சம்மதம் தெரிவித்தாலும், அங்குள்ள சலுகைகள் பாதிக்கப்படும் என சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில், இலவச அரிசி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. ஆனால், வெளி மாநிலங்களுக்கு சென்று வாங்கினால், இந்த சலுகை கிடைக்காது எனவும், மற்ற மாநிலத்தவர்கள் தமிழகத்தில் பொருள் வாங்கினால் இருப்பு பாதிக்கும் எனவும் சில கட்சிகள் கூறி வருகின்றன.

    ஆளும் அ.தி.மு.க., அரசு, இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துஉள்ளது.இந்நிலையில் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம், 2020, ஜூன் 30க்குள், நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என, மத்திய அரசு, கடந்த மாதம் அறிவித்தது. இதன் முதல் கட்டமாக, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட, 12 மாநிலங்களில், இத்திட்டம், ஏற்கனவே அமல்படுத்தப்பட்டது.

    மத்திய உணவு மற்றும் பொது வினியோகதுறை அமைச்சரும், லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம், வரும், ஜூன், 1 முதல், நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இதன் மூலம், நாட்டின் எந்த மூலையில் உள்ள ரேஷன் கடைகளிலும், மக்கள் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். மொத்தம், 81 கோடி பேர், இத்திட்டம் மூலம் பயன் அடைவர்.இவ்வாறு, அவர் கூறினார்.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெற முடியாது 'மூச்!': மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி


    லக்னோ :''குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, மக்களை தவறாக வழிநடத்துவதை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தவிர்க்க வேண்டும். எவ்வளவு போராட்டம் நடத்தினாலும், இந்த சட்டம் வாபஸ் பெறப்படாது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திட்டவட்டமாக கூறினார்.

    பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக வசித்து, பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, நம் நாட்டுக்கு அகதிகளாக வந்த ஹிந்து, சீக்கியர் உள்ளிட்ட மதத்தினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

    இந்த சட்டத்துக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மக்களுக்கு விளக்கும் வகையில், பா.ஜ., சார்பில், நாடு முழுதும் விளக்க கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் நடந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா பேசியதாவது:குடியுரிமை திருத்த சட்டம் என்பது, அகதிகளாக நம் நாட்டுக்கு வந்த வர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக அமல் படுத்தப் பட்டுள்ளது; யாருடைய குடியுரிமையும் பறிப்பதற்காக அமல் படுத்தப்பட்ட சட்டம் அல்ல.

    ஆச்சரியம்


    குடியுரிமையை பறிப்பது தொடர்பான எந்த விதிகளும், அந்த சட்டத்தில் இல்லை. காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், இது தொடர்பாக பொய்யான தகவல்களை தொடர்ந்து பரப்பி, மக்களை தவறாக வழி நடத்துகின்றனர்.
    பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக வரும், சிறுபான்மை ஹிந்துக்களுக்கு குடியுரிமை அளிக்க வேண்டும் என்பது, காங்கிரஸ் தலைவர்கள் பலர், ஏற்கனவே கூறிய விஷயம் தான். ஆனால், இப்போது குடியுரிமை திருத்த சட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பது ஆச்சரியம் அளிக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், வங்கத்தை சேர்ந்த தலித் சமூகதத்தினருக்கு குடியுரிமை அளிப்பதை எதிர்க்கிறார்.

    குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக எவ்வளவு போராட்டங்களை நடத்தினாலும், அந்த சட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை. இந்த சட்டம் தொடர்பாக, ஏதாவது ஒரு பொது இடத்தில், என்னுடன் விவாதம் நடத்த எதிர்க்கட்சியினர் தயாரா...காங்கிரசின் ராகுல், சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, திரிணமுல் தலைவர் மம்தா ஆகியோருக்கு சவால் விடுக்கிறேன்.

    குடியுரிமை திருத்த சட்டத்தில், முஸ்லிம் உட்பட, எந்த சமூகத்தினரின் குடியுரிமையையாவது பறிப்பது தொடர்பாக ஏதாவது ஒரு அம்சம் இருக்கிறதா என்பதை அவர்கள் காட்ட தயாரா?ஓட்டு வங்கி அரசியலுக்காக, காங்கிரஸ் கட்சியினர் மக்களை தவறாக வழி நடத்துகின்றனர். மதத்தின் அடிப்படையில், காங்., கட்சியை சேர்ந்தவர்கள் நாட்டை பிரித்தனர்.



    புதிய வரலாறு


    அப்போது, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ஹிந்து, சீக்கியர் உள்ளிட்ட மதத்தினர் அதிகம் இருந்தனர். ஆனால், அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து விட்டது. அவர்கள் எல்லாம் எங்கு சென்றனர்? அவர்கள் கொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது மதம் மாற்றப்பட்டிருக்க வேண்டும் அல்லது இந்தியாவுக்கு அகதிகளாக வந்திருக்க வேண்டும். கோடிக்கணக்கான மக்களுக்கு நடந்த இந்த கொடுமைகள் எல்லாம், ராகுலின் கண்களுக்கு தெரியவில்லையா?

    காஷ்மீரை பூர்வீகமாக உடைய பண்டிட் சமுதாயத்தை சேர்ந்த, ஐந்து லட்சம் பேர், இப்போது அகதிகளாக விட்டனர். இதைப் பற்றி எதிர்க்கட்சியினர் வாய் திறக்க மறுப்பது ஏன்?தற்போது, பிரதமர் நரேந்திர மோடியால், புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டு உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் என்ன கூறுகிறாரோ, அதைத் தான், இங்குள்ள எதிர்க்கட்சி தலைவர்களும் பேசுகின்றனர். இவர்களுக்கும், இம்ரான் கானுக்கும் என்ன தொடர்பு என, எனக்கு தெரியவில்லை.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ராமர் கோவில் கட்டும் பணி, மூன்று மாதங்களுக்குள் துவங்கும். விரைவில் கட்டப்படவுள்ள ராமர் கோவில், விண்ணை முட்டும் அளவுக்கு அமையும். இவ்வாறு, அவர் பேசினார். இந்த கூட்டத்தில், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

    தேசிய மக்கள் தொகை பதிவேடு நடவடிக்கை, அரசியலமைப்பு கடமைகளில் ஒன்று. மத்தியில், காங்., ஆட்சியில் இருக்கும் போது தான், இந்த நடைமுறை துவக்கப்பட்டது. சில மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குடியுரிமை பதிவேடு தொடர்பான தகவல்களை தெரிவிப்பது கட்டாயமல்ல; ஆனால், தாங்களாக முன் வந்து, பொதுமக்கள் தகவல்களை அளிக்கலாம்.

    கிஷன் ரெட்டி
    மத்திய உள்துறை இணை அமைச்சர், பா.ஜ.,
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    'நீட்' பயிற்சியை கைவிட அரசு தீவிர ஆலோசனை


    சென்னை: 'நீட்' தேர்வை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு உள்ளதால் இந்த தேர்வுக்கான பயிற்சியை கைவிடுவது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேர பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மற்றும் அறிவியல் பிரிவில் இளநிலை படிப்பு முடித்தவர்கள் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களுடன் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். அதனால் அவர்களால் தரவரிசை பட்டியலில் முன்னிலைக்கு
    வந்து மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை.

    இந்நிலையை போக்கும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நீட் பயிற்சி அளிக்கும் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. தனியார் மையங்கள் வாயிலாக இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. நடப்பு கல்வி ஆண்டில் பயிற்சி அளிக்கும் தேர்வு மையத்தை முடிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

    இதையடுத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நீட் தேர்வுக்கான கற்பித்தல் பயிற்சி அளிக்கப் பட்டது. அவர்கள் வழியாக நீட் சிறப்பு பயிற்சியை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது.இந்நிலையில் இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவ கவுன்சிலின் சார்பில் நீட் தேர்வை கட்டாயமாக்கி சட்ட திருத்தம் செய்யப்பட்டது.

    இதையும் நீட் தேர்வையும் எதிர்த்து இரண்டு வாரங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளது.தற்போது நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து இருப்பதால் அரசின் சார்பில் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டால் அது கொள்கை முரண்பாடாக இருக்கும் என பள்ளி கல்வித்துறைக்கு சட்ட வல்லுனர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து நீட் பயிற்சியை நடத்தாமல் கைவிடுவது தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ரூ.1,000 லஞ்சம் கொடுக்காததால் குழந்தைகளின் வயது 102, 104


    பரேலி : உத்தர பிரதேசத்தில், 1000 ரூபாய் லஞ்சம் கொடுக்காததால், ஆத்திரம்அடைந்த, வி.ஏ.ஓ., வழங்கிய பிறப்பு சான்றிதழ்களில், இரண்டு குழந்தை களின் தற்போதைய வயது, 102 மற்றும் 104 ஆக குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கண்டு, பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


    [​IMG]



    உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கே, பரேலி மாவட்டம் பேலா கிராமத்தை சேர்ந்த பவன் குமார், தன் மகன்கள், சுப், 4,சங்கெட், 2, இருவருக்கும் பிறப்பு சான்றிதழ் கேட்டு, இரு மாதங்களுக்கு முன், இணையத்தில் விண்ணப்பித்தார். இருவருக்கும் பிறப்பு சான்றிதழ் வழங்க, வி.ஏ.ஓ., சுஷில் சந்த் அக்னிஹோத்ரி, கிராமத் தலைவர் பிரவீன் மிஸ்ரா ஆகியோர், பவன்குமாரிடம், 1000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். லஞ்சம் கொடுக்க பவன்குமார் மறுத்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த, வி.ஏ.ஓ.,வும் கிராம தலைவரும், குழந்தைகளின் பிறந்த வருடத்தை, தங்கள் விருப்பத்திற்கு மாற்றம் செய்து, பிறப்பு சான்றிதழ் அளித்து உள்ளனர்.

    [​IMG]



    அவர்கள் அளித்துள்ள சான்றிதழில், ஜூன், 13, 2016 என்ற, சுப்பின் பிறந்த தேதி, ஜன., 6, 1918 என்றும், ஜன., 6, 2018 என்ற, சங்கெட்டின் பிறந்த தேதி, ஜூன், 13, 1916 என்றும் குறிப்பிடப்பட்டுஉள்ளது. அவர்கள் வழங்கிய பிறப்பு சான்றிதழ்களின் அடிப்படையில், குழந்தைகளின் தற்போதைய வயது, 104 மற்றும் 102 ஆகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பவன் குமார்,நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். முடிவில், கோர்ட் உத்தரவின் கீழ், வி.ஏ.ஓ., மற்றும் கிராம தலைவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
     

Share This Page