TODAYS NEWS(28.1.2019)

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Jan 29, 2019.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    4,877
    Likes Received:
    477
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஜாக்டோ ஜியோ அமைப்பினரை தர தரவென இழுத்து சென்ற போலீஸ்


    தருமபுரி : தருமபுரி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினரை போலீசார் தர தரவென்று இழுத்து சென்றனர். 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    4,877
    Likes Received:
    477
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    புதுச்சேரி அரசு சார்பு கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம் வாபஸ்

    புதுவை : புதுச்சேரி அரசு சார்பு கல்லூரி பேராசிரியர்கள் நடத்தி வந்த தொடர் போராட்டம் வாபஸ்பெறப்பட்டது. புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பேராசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். 7-வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பேராசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    4,877
    Likes Received:
    477
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஆலங்குடியில் கலப்பட பாமாயில் விற்பனை செய்த கடையை உடனடியாக மூட உத்தரவு


    ஆலங்குடியில் கலப்பட பாமாயில் விற்பனை செய்த கடையை உடனடியாக மூட உத்தரவு.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    4,877
    Likes Received:
    477
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் : சரத்குமார்

    சென்னை : மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    4,877
    Likes Received:
    477
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப நாளை காலை 9 மணி வரை அவகாசம் : பள்ளிக்கல்வித்துறை


    சென்னை : போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப நாளை காலை 9 மணி வரை அவகாசம் வழங்கி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் காலை 9 மணிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் அப்பணியிடங்கள் காலிப்பணியிடமாக அறிவிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    4,877
    Likes Received:
    477
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் வேதாந்தா நிறுவன மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு



    சென்னை: முறையான நடைமுறைகளை பின்பற்றாத வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு தரப்பில் என்று உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தியது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என கடந்த 8ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் கடந்த 22ம் தேதி இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,” மேற்கண்ட விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கிய பிறகும் ஆலையை திறக்க தமிழக அரசு ஏன் அனுமதிக்கவில்லை?. மேலும் ஆலைக்கு மின்சாரம் வழங்காமைக்கு காரணம் என்ன?.

    இதுபோன்ற நடவடிக்கையால் நாங்களே ஆலை திறக்க உத்தரவிட நேரிடும் என சரமாரி கேள்வியெழுப்பி ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளும் முடித்து வைக்கப்படும் என கடந்த 24ம் தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தது. அதில்,”ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தை நீட்டித்து தரக்கோரி வேதாந்தா நிறுவனத்தின் சார்பாக தமிழக அரசுக்கு கடந்த 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


    இதில் உரிமம் தொடர்பாக ஆன்லைன் மூலமாகத்தான் தான் பதிவு செய்ய வேண்டும். அதனால் இந்த விவகாரத்தில் முறையான எந்தவித நடைமுறைகளை பின்பற்றாமல் தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. அதனால் அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இதையடுத்து மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் இன்றைய விசாரணையின்போது அதுகுறித்து பரீசீலனை செய்வார்.
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    4,877
    Likes Received:
    477
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பிளஸ் 1, 2 கேள்வித்தாள் எப்படி இருக்கும்? இணையத்தில் வெளியிட்டது கல்வித்துறை

    சென்னை: பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுக்கான கேள்வித்தாள் வடிவமைப்பு தேர்வுத்துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுக்கான மொழிப்பாடங்கள், பொதுப்பாடங்கள், தொழிற்கல்வி பாடங்கள்( செய்முறை தேர்வு உள்ள பாடங்கள், செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்கள்) ஆகிய பாடங்களுக்கு கேள்வித்தாள் வடிவமைப்பு விவரம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


    அது குறித்த தகவல்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த கேள்வித்தாள் வடிவமைப்பு தொடர்பான விவரத்தை மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் www.dge,tn.gov.in என்ற இணைய தள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    4,877
    Likes Received:
    477
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணியில் சேர விரும்பினால் எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பலாம்

    சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் மீண்டும் பணியில் சேர விரும்பினால் முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் எஸ்எம்எஸ், வாட்ஸ் ஆப் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு பணியில் சேரலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வரமுருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவர்களுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சார்பில் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். அவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக நீதிமன்ற உத்தரவுகள் ஏதும் பெறாத நிலையிலும், பெரும்பான்மையான ஆசிரியர்கள் பணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ள நிலையிலும்,


    நாளை(இன்று)9 மணிக்குள் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களிடமும், உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமும் நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ, எஸ்எம்எஸ், வாட்ஸ் ஆப் மூலமாகவோ தகவல் தெரிவித்துவிட்டு பணியில் சேர, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அப்படி குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் ஆசிரியர்கள் பணியில் சேராவிட்டால், அப்பணியிடங்கள், காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு, அந்த இடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     
  9. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    4,877
    Likes Received:
    477
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    இணைப்பு கட்டணம் செலுத்தாத 227 பி.எட் கல்லூரிகளுக்கு பல்லைக்கழகம் நோட்டீஸ்

    சென்னை: பல்கலைக் கழக இணைப்புக் கட்டணம் செலுத்தாத 227 பி.எட் கல்லூரிகளுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் கீழ் இணைப்பு பெற்று தனியார் பி.எட் கல்லூரிகள் 227 தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகள் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்திடம் 3 ஆண்டு காலத்துக்கு இணைப்பு கட்டணம் செலுத்தி கல்லூரிகளை நடத்த வேண்டும் என்ற விதியுள்ளது.

    இதற்காக பல்கலைக் கழகம் 3 ஆண்டுக்கு ஒரு முறை ₹75 ஆயிரம் கட்டணம் வசூலித்து வருகிறது. பி.எட் கல்லூரிகள் 3ஆண்டுக்கு பிறகு இந்த கட்டணத்தை செலுத்தி தங்கள் கல்லூரியின் இணைப்பை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அந்த கல்லூரிகளுக்கு ₹50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் வரை 227 கல்லூரிகள் தங்கள் இணைப்பு கட்டணத்தை செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் மேற்கண்ட கல்லூரிகள் இதுவரை இணைப்புக் கட்டணத்தை செலுத்தாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, மேற்கண்ட 227 கல்லூரி முதல்வர்களுக்கு தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழக பதிவாளர் ரவீந்திரநாத், நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
     
  10. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    4,877
    Likes Received:
    477
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தலை உடனே நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு

    சென்னை: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மறைவை தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. மேலும் தேர்தலுக்கு மனு தாக்கலும் செய்யப்பட்டு வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடத்தொடங்கினர். இதையடுத்து கஜா புயல் பாதிப்பு காரணத்தினால் தற்போது தேர்தல் நடத்தும் சூழல் மேற்கண்ட தொகுதியில் கிடையாது எனவும், அதனால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதேப்போல் தலைமை தேர்தல் ஆணையத்திலும் அவர் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து திருவாரூர் இடைத்தேர்தல் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. அதேப்போல் இந்த வழக்கு விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் அதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்துவைத்து உத்தரவிட்டது.

    இந்த நிலையில் கேகே.ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,”தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய இரண்டு தொகுதியின் இடைத்தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். இதற்கு தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     

Share This Page