TODAYS NEWS(29.11.2018)

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Nov 29, 2018.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சோனியா காந்தி சென்னை வரும் தேதி அறிவிப்பு


    முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்க ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் இந்த சிலை திறப்பு விழாவிற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருவார் என்று கூறப்பட்டது. இருப்பினும் சிலை திறப்பு தேதி முடிவு செய்யமால் இருந்தது

    இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தி சென்னை வரவுள்ளார் என்ற உறுதி செய்யப்பட்ட செய்தி சற்றுமுன்திமுக தரப்பில் இருந்து வெளிவந்துள்ளது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16ம் தேதி நடைபெறும் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளதாகவும், சோனியா மட்டுமின்றி இன்னும் சில அகில இந்திய தலைவர்களும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்றும் திமுக தரப்பினர் தெரிவித்தனர். சோனியாவின் வருகை திமுக-காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்யும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன

    [​IMG]
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    தமிழகத்தில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு...மக்கள் பீதி

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததில் பரவலாக சில இடங்களில் மழை கொட்டி தீர்த்துள்ளது., நவம்பர் 23 ஆம் தேதி தொடங்கிய இப்பருவமழை ராமேஸ்வரத்தில் 22. 5. செமீ மழை பதிவானதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் பகுதியில் சூறாவளி காற்றூ வீசுவதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

    வங்கக் கடல் , பாக்ஜலசந்தி காலில் புயல் எச்சரிக்கை எதுவும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுக்காததால் இன்று வழக்கம் போல மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    விஷால் மீது மீடூ புகார் கூறிய பெண் மீது வழக்குப்பதிவு

    சென்னை கோபாலபுரத்தில் ஒரு அபார்ட்மெண்ட் வீட்டிற்கு நள்ளிரவு 2 மணிக்கு வந்த விஷால் அதன்பின்னர் அதிகாலை 4 மணிக்கு சுவர் ஏறி குதித்து ஓடியதாக விஸ்வதர்ஷினி என்ற பெண் தனது முகநூல் பக்கத்தில் மீடூ குற்றச்சாட்டு ஒன்றை பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்த நிலையில் விஷால் மீது திடுக்கிடும் பாலியல் மீடூ குற்றச்சாட்டு சுமத்திய விஸ்வதர்ஷினி மீது போக்சோ சட்டத்தில் ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விஸ்வதர்ஷினி தனது பக்கத்து வீட்டு சிறுமி குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக தேசிய குழந்தைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    இவ்வளவு மழையிலும் நனையாத சென்னை: வெதர் ரிபோர்ட்!

    கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் கடும் மழை பெய்தது. ஆனால், சென்னையில் மழை எட்டிக்கூட பார்க்கவில்லை. தற்போது சென்னையின் மழை அளவை குறித்து ரிபோர்ட் வெளியாகியுள்ளது.


    அதாவது, அக்டோபர் 1 முதல் நவம்பர் 28 ஆம் தேதி வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கமாக 344 மிமீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை 303 மிமீ மழைதான் பெய்துள்ளது.

    குறிப்பாக சென்னையை பொருத்த வரை 619 மிமீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை 321 மிமீ மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பை விட 48% குறைவு.

    இந்நிலையில் அடுத்து தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. மாலத்தீவு பகுதியிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதனால், தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

    சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஆனால், மழையை எதிர் பார்க்க முடியாது என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிடப்பட்டுள்ளது.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    போராட்டத்தை தூண்டுவதே திமுக தான் : பிரேமலதா

    சென்னை விமான நிலையத்திற்கு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததாவது:

    சில நாட்களூக்கு முன் தமிழகத்தின் டெல்டா பகுதிகளை சூறையாடிவிட்டு போன கஜா புயலால் எண்ணற்ற மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேரடியாக சந்தித்து தேமுதிக அறிவித்த ஒரு கோடி நிவாரண பொருட்களை வழங்கியுள்ளோம்.
    இம்மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மதுக்கடை மூடப்பட்டிருந்தாலும் திருட்டுத்தனமாக வியாபாரம் நடக்கிறது. அதை தடை செய்ய வேண்டும்.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை செய்யக்கோரி தமிழகத்தில் அனைவரும் வேண்டுகோள் விடுக்கிறார்கள். இதிலும் அரசியல் உள்ளது. இவ்வழக்கில் 25 வருடங்களாக தண்டனை பெற்றுவருகிறாரகள். அதை கருத்தில் 7 பேரையும் விடுவிக்கவேண்டும்

    ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்திலும் அரசியல் உள்ளது.

    டெல்டா பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை போராட்டத்திற்கு தூண்டுவதே திமுகதான். திமுக சார்பில் மக்கள் பிரச்சனைக்கு அனைத்து கட்சி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டால் அதில் தேமுதிக நிச்சயமாக பங்கேற்கும். ஆனால் அப்பொதுக்கூட்டத்தை அறிவாலயத்தில் நடத்தக் கூடாது. மாறாக ஒரு பொது இடத்தில்தான் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கஜாவின் கோர தாண்டவம்: சாப்பாட்டிற்காக சிறுவன் செய்த வேலை; கதிகலங்கவைக்கும் காட்சிகள்

    கஜா புயல் பாதிப்பால் சாப்பாடு இன்றி தவித்த சிறுவன் சாப்பாட்டை பார்த்ததும் செய்த வேலை பலரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.


    கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சீரழிந்து போயுள்ளன. அந்த மாவட்ட விவசாயிகள் கிட்டதட்ட 10 வருடங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளனர். தங்கள் வாழ்வாதாரங்களான தென்னை, பனை, வாழை, சவுக்கு, மா, பலா மரங்களை பறிகொடுத்து வாழ வழியின்றி நிற்கதியாய் தவிக்கின்றனர். பல்வேறு இடங்களுக்கு மக்கள் நிவாரணப் பொருட்களை வழங்கினாலும் சில இடங்களில் உள்ள மக்களுக்கு இன்னும் உதவிகள் போய் சேராமல் உள்ளது.

    இந்நிலையில் திருத்துறைப்பூண்டியில் உள்ள கிராமத்தில், நபர் ஒருவர் எடுத்து சென்ற உணவை பெறுவதற்காக சிறுவன் கரையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வந்து சாப்பாட்டு தட்டை வாங்கி சாப்பிட்ட காட்சி கண்கலங்க வைத்தது. இவர்களின் இந்த நரக வாழ்க்கை விரைவில் சீரமைய வேண்டும்.
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ரஜினி படத்துக்கு மட்டும் தான் இப்படி! 2.o படம் பார்க்க விடுமுறை அறிவித்த பிரபல நிறுவனம்

    சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் வருகிறது என்றால் தியேட்டர்களில் கோலாகல கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.


    ரசிகர்கள் திருவிழா போல ரஜினி படத்தை வரவேற்பார்கள். அந்த வகையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் ரஜினி கைகோர்த்துள்ள 2.o படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தை இன்று எப்படியும் பார்த்து விட வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள் . இதற்காக வேலைக்கு இன்று மட்டம் போடுவதும் நடக்கும்.
    [​IMG]

    இந்நிலையில் இன்று வேலை நாள் என்பதால் 2.0 பார்க்க பணியாளர்களுக்கு விடுமுறை அறிவித்து ஒரு பிரபல நிறுவனம் ஆச்சர்யம் அளித்துள்ளது.

    கோயம்பத்தூரில் உள்ள ஒரு கம்பெனி தான் இப்படி செய்துள்ளது .
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    அனைத்து கட்சி கூட்டமா? திமுக தோழமை கட்சி கூட்டமா?

    மேகதாது அணை கட்டும் ஆய்வுக்கு இன்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து இந்த அனுமதிக்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜக தமிழகத்திற்கு வஞ்சம் செய்வதாக எதிர்க்கட்சிகளும், மேகதாது அணை குறித்த ஆய்வுக்கு மட்டுமே அனுமதி, அணை கட்ட அனுமதி இருக்காது என்றும் பாஜகவும் கூறி வருகின்றன.

    இந்த நிலையில் மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் என திமுக இன்று காலை அறிவிப்பு செய்தது. ஆனால் பெயருக்குத்தான் அனைத்து கட்சி கூட்டம், அதிமுக, அமமுக, பாமக, பாஜக, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளுக்கு அழைப்பே இல்லை என கூறப்படுகிறது. ஆக இந்த கூட்டத்தில் திமுக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திமுகவின் தோழமை கட்சிகளை மட்டும் கூட்டுவதற்கு பெயர் அனைத்து கட்சி கூட்டமா? என அரசியல் நோக்கர்கள் இந்த கூட்டத்தை விமர்சனம் செய்து வருகின்றனர்.
     
  9. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ரோட்டோர டீக்கடையில் டீ குடித்த முதல்வர்-துணை முதல்வர்


    அண்டை மாநிலமான கேரளாவில் முதல்வர் டீ குடிப்பது, பேருந்தில் செல்வது ஆகியவை சர்வசாதாரணமாக நடந்து வரும் நிகழ்வுகள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தமிழகத்தில் முதல்வரை அருகில் இருந்து பார்ப்பதே அரிதான காரியமாக இதுவரை இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று கஜா புயல் பாதிப்பை பார்வையிட நாகை மாவட்டத்திற்கு சென்ற முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல் ஓபிஎஸ் ஆகியோர் ரோட்டோர கடையில் டீ குடித்ததை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    இன்று சென்னையில் இருந்து ரயிலில் டெல்டா மாவட்டங்களுக்கு சென்ற முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் சென்று பார்த்து மக்களுக்கு தேவையான நிவாரண உதவியை செய்தனர். மேலும் மக்களோடு மக்களாக இருவரும் பழகியது ஆச்சரியப்பட வைத்தது

    இந்த நிலையில் புயல் நிவாரண பணியை பார்வையிட்டு திரும்பும்போது திருத்துறைப்பூண்டி டவுன் பகுதியில் உள்ள ரமேஷ் என்பவரது டீக்கடைக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அங்கு டீ குடித்தனர். பின்னர் டீ நன்றாக இருந்ததாக டீக்கடைக்காரரை பாராட்டிவிட்டு குடித்த டீக்கு பணம் கொடுத்து சென்றனர். கேரளாவை போல் தமிழகத்திலும் எளிமையான முதல்வரை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
     

Share This Page