Todays news in tamilnadu 23.3.2020

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Mar 23, 2020.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    தமிழகத்தில் 144 தடை – தமிழக அரசு அதிரடி உத்தரவு


    கொரோனா வைரஸ் தாக்குதலால் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.



    நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரொனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசுகள் பல 144 தடை உத்தரவு விதித்திருந்த நிலையில் தமிழகத்திலும் நாளை மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

    இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுகின்றன. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் மளிகை கடை, மருந்து கடை உள்ளிட்டவற்றை தவிர்த்து அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் பொது இடங்களில் கூடவும், ஐந்து பேருக்கு மேல் சேர்ந்து நடமாடவும் தடை விதிக்கப்படும்.

    நாளை மாலை அதிகாரப்பூர்வமாக வரும் இந்த உத்தரவு மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    வெளிய சுத்துனா பாஸ்போர்ட் BLOCK: கறார் காட்டும் தமிழக அரசு!


    வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


    உலகமெங்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா நான்கு கட்டங்களாக பரவும் என கூறப்பட்டு வரும் நிலை தமிழகத்தில் கொரோனா இரண்டாம் கட்டத்தில் உள்ளதாக தெரிகிறது.

    உள்நாட்டு பரவல் பரவல் என்பது தான் கொரோனா பரவலின் இரண்டாம் கட்டம். இந்த கட்டத்தில், வெளி நாடுகளில் இருந்து வந்த நபர்களின் மூலமாக உள்நாட்டில் நோய் பரவும். எனவே, இதை தடுக்க கடந்த ஒரு மாதத்திற்குள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இதனையும் மீறி வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கொரோனா தடுப்பு ரூ. 500 கோடி ஒதுக்கீடு - தமிழக முதல்வர் !


    நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 350 ஐ நெருங்குகிறது. இதில் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக இருந்த நிலையில் இப்போது மேலும் இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ‘இதில் முதல் நபர் கலிபோர்னியாவிலிருந்து வந்த 64 வயது பெண்மணி ஆவார். தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொருவர் துபாயிலிருந்து திரும்பிய 43 வயது நபர் ஆவார். இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் இரண்டு பேரின் உடல்நிலையும் சீராக இருக்கிறது’ என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸை மத்திய அரசு தேசியப் பேரிடராக அறிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா

    வைரஸ் பரவல் பாதிக்கப்பட்டுள்ள நகர்ப்புற மற்றும் கிராமம்புற மக்களுக்கு அடிப்படை சேவைகள் வழங்குகின்ற உள்ளாட்சி அமைப்புகள், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நகர பகுதிகளுக்கு ரூ. 1629 கோடியும், ஊரகப் பகுதிகளுக்கு ரூ.940 கோடியும், ஒதுக்கப்பட்டுள்ளது.
    இதுதவிர மாநிலங்கள் வாரியாகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்திற்கு ரூ.987.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


    இந்நிலையில், கொரோனா தடுப்பு நவடிக்கைகளுக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

    சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசின் அறிவுரைகளை அரௌ மற்றும் தனியார் துறையினர் கடைப்பிடிக்க வேண்டும் என கூறினார்.

    மேலும், கொரோனாவால் ஒரு உயிர் போக அனுமதிக்க மாட்டோம், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.
    அப்போது, கொரோனாவை தடுக்க ஏற்கனவே ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். இந்த சட்டசபைக் கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சட்டசபையை மொத்தமாக நாளைக்கே முடிச்சிக்கலாம்.. – ஓபிஎஸ் அறிவிப்பால் எதிர்க்கட்சிகள் ஹேப்பி!

    கொரோனா முன்னெச்சரிக்கையாக சட்டசபை கூட்டத்தொடரை முன்னதாகவே முடிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்டு வந்த நிலையில் ஓபிஎஸ் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


    தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருவதால் சட்டசபை கூட்டத்தை ஒத்தி வைக்கும்படி எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் இதை வலியுறுத்திய எதிர்க்கட்சிகள் தொடரும் நாட்களில் நடைபெறும் சட்டமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள போவதில்லை என்று கடிதம் எழுதி சபாநாயகரிடம் சமர்ப்பித்தனர்.

    இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனைத்து பட்ஜெட் அறிவிப்புகளையும் நாளைய சட்டசபையில் முடித்துக் கொண்டு நாளையுடன் சட்டசபையை முடித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

    எதிர்கட்சிகள் தொடர்ந்து சட்டசபை கூட்டத்தை முடித்துக் கொள்ள கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    அதிக விலைக்கு மாஸ்க் விற்பனை: அப்போலோவுக்கு சீல்!

    முகக்கவசத்தை அதிக விலைக்கு விற்பனை செய்த அப்போலோ மருந்தகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


    இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக், திரையரங்குகள் உள்ளிட்டவற்றை மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், கொரோனா பாதுகாப்பு எச்சரிக்கையாக மக்கள் சானிட்டைசர், முக கவசங்கள் போன்ற மருத்துவ பொருட்களை வாங்க கடைகளில் அலை மோதுகின்றனர். இதை சாதகமாக கொண்டு பல கடைகள் அதிக விலைக்கு இதனை விற்பதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

    இந்நிலையில், முகக்கவசத்தை அதிக விலைக்கு விற்பனை செய்த அப்போலோ மருந்தகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆம், திருப்பத்தூரில் செயல்படும் அப்போலோ மருந்தகம் ரூ.5 மாஸ்கை ரூ.30-க்கும், ரூ.30 ரூபாய் மாஸ்கை ரூ.70-க்கும், ரூ.50 மாஸ்கை ரூ.100-க்கும் விற்பனை செய்ததால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பொதுத்தேர்வுகளை அரசு ஒத்தி வைக்க வேண்டும் ‘- ராமதாஸ் டுவீட் !!!

    பொதுத்தேர்வுகளை அரசு ஒத்தி வைக்க வேண்டும் ‘- ராமதாஸ் டுவீட் !!!
    நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 350 ஐ நெருங்குகிறது. இதில் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக இருந்த நிலையில் இப்போது மேலும் இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ‘இதில் முதல் நபர் கலிபோர்னியாவிலிருந்து வந்த 64 வயது பெண்மணி ஆவார். தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொருவர் துபாயிலிருந்து திரும்பிய 43 வயது நபர் ஆவார். இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் இரண்டு பேரின் உடல்நிலையும் சீராக இருக்கிறது’ என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :


    தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளையுடன் முடிக்கப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பிற அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் பணிக்கு வரத்தேவையில்லை என்றும் அறிவிக்க வேண்டும்! என தெரிவித்துள்ளார்.

    மேலும், கொரோனா வைரஸ் அச்சம் உச்சத்தை அடைந்த பிறகும் 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதில் அரசு தேர்வுத்துறை பிடிவாதம் காட்டுவது முறையல்ல. ஓரிரு தேர்வுகள் மட்டுமே மீதம் இருந்தாலும் கூட, அத்தேர்வுகளை அரசு ஒத்தி வைக்க வேண்டும்! #CoronaVirus #LockDownTNnow என தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசுடன் பாமக கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    அரைகுறையா செய்யாதீங்க! முழுசா மூடுங்க! – அன்புமணி கோரிக்கை

    நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு அமல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் அதை அமல்படுத்த அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


    கொரோனா பரவலை தடுக்க எச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் நேற்று ஊரடங்கு செயல்படுத்தப்பட்டது. நேற்று இரவு 9 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கை காலை 5 மணி வரை நீடித்தது. டெல்லி, மேற்கு வங்கம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் மார்ச் 31 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளன.

    இந்நிலையில் வெறும் ஒருநாள் மட்டும் ஊரடங்கு பிறப்பிப்பதால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று பலர் தமிழகத்திலும் மார்ச் 31 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுப்பி வருகின்றனர். அதே கருத்தை வலியுறுத்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள எம்.பி அன்புமணி ராமதாஸ் ” நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இப்போது எடுக்காவிட்டால், அதன்பின்னர் என்ன செய்தாலும் பேரழிவை தடுக்க முடியாது என்பதை அரசு உணர வேண்டும். கொரோனாவை தடுக்க இன்றைய தேவை ஊரடங்கு தான்.” என்று தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே ரயில் மற்றும் பேருந்து சேவைகள் பல இடங்களிலும் நிறுத்தப்பட்டுவிட்டன. இந்நிலையில் ஊரடங்கு அறிவிப்பதே வைரஸை கட்டுப்படுத்த சிறந்த வழி என மருத்துவ நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கொரோனா பாதிப்பு : தமிழகத்திற்கு ரூ. 987 கோடி ஒதுக்கீடு !

    கொரோனா பாதிப்பு : தமிழகத்திற்கு ரூ. 987 கோடி ஒதுக்கீடு !
    நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 350 ஐ நெருங்குகிறது. இதில் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக இருந்த நிலையில் இப்போது மேலும் இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பிற்காக தமிழகத்திற்கு ரூ. 987 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ‘இதில் முதல் நபர் கலிபோர்னியாவிலிருந்து வந்த 64 வயது பெண்மணி ஆவார். தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொருவர் துபாயிலிருந்து திரும்பிய 43 வயது நபர் ஆவார். இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் இரண்டு பேரின் உடல்நிலையும் சீராக இருக்கிறது’ என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸை மத்திய அரசு தேசியப் பேரிடராக அறிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா

    வைரஸ் பரவல் பாதிக்கப்பட்டுள்ள நகர்ப்புற மற்றும் கிராமம்புற மக்களுக்கு அடிப்படை சேவைகள் வழங்குகின்ற உள்ளாட்சி அமைப்புகள், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நகர பகுதிகளுக்கு ரூ. 1629 கோடியும், ஊரகப் பகுதிகளுக்கு ரூ.940 கோடியும், ஒதுக்கப்பட்டுள்ளது.
    இதுதவிர மாநிலங்கள் வாரியாகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்திற்கு ரூ.987.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
     
  9. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    முற்றிலுமாக முடங்குகிறதா தமிழகம்?

    சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை முற்றிலுமாக முடக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ள நிலையில், மக்கள் வீட்டிலேயே இருந்தால் தமிழகம் முற்றிலுமாக முடங்கும் என தெரிகிறது.



    உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிகப்பட்டுள்ளனர். பல்வேறு நாடுகளும் இந்த வைரஸை குணப்படுத்த மருந்து தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைய தொடங்கியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுக்குள் வைக்க பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தை பொருத்தவரை பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், மால்கள் உள்பட பல முக்கியமான மக்கள் கூடும் இடங்கள் மார்ச் 31 வரை மூடப்பட்டுள்ளது.

    மெட்ரோ, ரயில் சேவை, வங்கி சேவை, நகைக்கடைகள் ஆகியவையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனைத்தொடர்ந்து தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் மார்ச் 31 வரை இயக்கப்படாது என ஆம்னி பேருந்துகள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    அதொடு, தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை குறைந்த அளவு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை முற்றிலுமாக முடக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ள நிலையில், மக்கள் வீட்டிலேயே இருந்தால் தமிழகம் முற்றிலுமாக முடங்கும் என தெரிகிறது.
     
  10. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு


    கொரோனா வைரஸ் காரணமாக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் 11,12ஆம் வகுப்பு

    பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
    இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேர்வு நேரத்தை அரை மணி நேரம் தாமதமாக துவங்க நீதிபதிகள் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.

    அதுமட்டுமின்றி சென்னை, ஈரோடு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தேர்வு எழுத வரும் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பேருந்து வசதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்

    இதனை தமிழக அரசு ஏற்றுக் கொண்டதையடுத்து 11,12ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
     

Share This Page