Todays updates

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Jun 19, 2019.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    நடிகர் சங்க தேர்தல் வேறு இடத்திற்கு மாற்றப்படுமா? நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு!


    தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதால் தேர்தலை வேறு இடத்தில் நடத்த நடிகர் சங்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது

    நடிகர் சங்கத்திற்கு ஜூன் 23 ஆம் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் – ஜானகி கல்லூரியில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறை ஆணையருக்கு உத்தரவிடுமாறு, நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது

    இன்றைய விசாரணையின்போது 'பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டிய அரசுத்தரப்பு வழக்கறிஞர், தேர்தலை வேறு இடத்திற்கு மாற்றினால் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது என்றும், வேண்டுமென்றால் ஈ.சி.ஆர் அல்லது ஓ.எம்.ஆர் பகுதிகளில் தேர்தல் நடத்தலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

    சென்னைக்கு வெளியில் வெகு தொலைவில் தேர்தலை நடத்தினால் வாக்களிக்க பெரும்பாலான வாக்காளர்கள் வர மாட்டார்கள் என தெரிவித்த நடிகர் சங்க வழக்கறிஞரிடம் நீதிபதி, ”வேண்டுமென்றால் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகம், கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி போன்ற மாற்று இடங்களை” தேர்வு செய்யுமாறு நடிகர் சங்கத்திற்கு அறிவுறுத்தினர். இதனையடுத்து மாற்று இடத்தில் தேர்தல் நடத்துவது குறித்து நடிகர் சங்கம் பரிசீலித்து அதை நீதிமன்றத்தில் நாளை தெரிவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    இந்தியில் வேண்டாம்! தமிழில் சாகித்ய அகாடமி விருது கொடுங்கள்: பிரபல எழுத்தாளர் கோரிக்கை

    தனக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதில் உள்ள இந்தி எழுத்துக்களை மாற்றி தமிழில் வழங்குமாறு, சாகித்ய அகாடமிக்கு குமரியை சேர்ந்த எழுத்தாளர் குளச்சல் மு.யூசுப் கோரிக்கை விடுத்துள்ளார். இவரது கோரிக்கையை பரிசீலிப்பதாக சாகித்ய அகாடமி கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

    2018-ஆம் ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருதை பிரபல எழுத்தாளர் குளச்சல்.மு.யூசுப் அவர்களுக்கு கிடைத்தது. இந்த விருது அவருக்கு சமீபத்தில் கொடுக்கப்பட்ட நிலையில் தனக்கு வழங்கப்பட்ட விருதில் இந்தியில் எழுதியிருப்பதை மேடையிலேயே சுட்டிக்காட்டி, விருது வாசகங்கள் தமிழில் வேண்டும் என குரல் எழுப்பியுள்ளார் எழுத்தாளர் குளச்சல்.மு.யூசுப்

    இவரது குரலுக்கு மதிப்பு அளித்துள்ள சாகித்ய அகாடமி விருது குழுவினர் விருதில் உள்ள இந்தி எழுத்துகளுக்கு பதிலாக தமிழ் எழுத்துக்களை இணைப்பது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர். இவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டால் தமிழக எழுத்தாளர்களுக்கும் தமிழுக்கும் மிகப்பெரிய பெருமை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    இளைஞர் ஒருவர் கல்லால் தாக்கி படுகொலை : பதறவைக்கும் சம்பவம்

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே கொடுக்கான்பட்டி கிராமத்தில் உள்ள முத்துப்பிடாரி அம்மன் கோவிலில் சில தினங்களாக திருவிழா நடைபெற்றது. இக்கோவில்திருவிழாவை ஒட்டி நேற்று முன்தினம் இரவு நாடகம் நடைபெற்றது.இந்த நாடகத்தை ஊர் மக்கள் அனைவரும் கண்டுகளித்தனர்.

    இந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக அண்டை ஊரான கோவில்பட்டியில் வசிக்கும் சுப்பிரமணியன் மகன் ராம்பு (வயது 23), என்பவரும் அவரது நண்பர்கள் தங்கையா (30), சுபாஷ் (19), திவாகர் (25) ஆகியோர் சென்றுள்ளனர்.

    இந்த நாடமெல்லாம் முடிந்தது மூவரும் ஊருக்கு திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். ஆனால் வழியில் மற்றொரு சமுதாயத்தினர் வசிக்கின்ற இடத்திற்கு அவர்கள் வந்தபோது அப்பகுதியில் வசிக்கும் சிலர் அவர்களை வழிமறித்தது. இந்த நேரத்தில் எங்கள் பகுதியில் எதற்காக வந்தீர்கள் என்று கேட்டு தகராறு செய்தனர்.

    இது கைகலப்பாக மாறியது. பின்னர் இரு தரப்பினரும் பலமாக தாக்கிக்கொண்டனர். இதில் அந்த ஊரைச் சேர்ந்த சுமார் 10க்கும் மேற்பட்டவர்கள் ராம்பு உள்ளிட்ட 4 பேரையும் பலமாக அடித்தனர்.
    இதில் படுகாயத்துடன் ராம்பு கீழே விழுந்தபோது சிலர் கல்லை தூக்கி ராம்பு மீது போட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். பின்னர் அருகில் உள்ளவர்கள் ராம்புவை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ததனர்.

    ஆனால் பலத்த காயமடைந்த ராம்பு நேற்று சிகிச்சை பலனின்றி ராம்பு உயிரிழந்தார். மற்ற 3 பேரும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற வருகின்றனர்.

    இந்த சம்பவம் பற்றி கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்தத் தாக்குதல் நடத்தியதாக கொடுக்காம்பட்டி காலனியைச் சேர்ந்த 14 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றதாகத் தகவல் வெளியாகிறது.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    காதலை விட்டு விடு ! காதலி விஷம் குடித்தார்...காதலன் ரயில் முன் பாய்ந்தார் : திடுக் சம்பவம்

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள செருகுடி என்ற கிராமத்தில் வசிப்பவர் சுப்பிரமணியன். இவரது மனைவி விஜயா. இந்த தம்பதியினரின் மகன் நவீன்ராஜா(23). பாலிடெக்னிக் படித்துவிட்டு வேலை தேடிவந்துள்ளார்.

    நவீன்ராஜும், தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள முனியூர் கிராமத்தை சேர்ந்த தமிழ்பிரிவியாவும் (21) கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்துவந்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் நவீனின் தந்தை சுப்பிரமணியன் உயிரிழந்தார். இதனால் குடும்பத்தின் சூழநிலை கருதி தாய் விஜயா காதல் வேண்டாம் என்று நவீனிடம் கூறியுள்ளார்.

    இதை நவீன் தன் காதலி தமிழ்பிரியாவிடம் நீ வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்ளும்படி கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த தமிழ்பிரியா சில தினங்களுக்கு முன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். வீட்டார் அவரை மருத்துவனையில் சேர்த்துள்ளனர்.

    ஏற்கனவே தந்தையை இழந்துள்ள நவீன் தற்போது காதலியும் விஷம் குடித்ததால் பெரும் கவலைஅடைந்து நேற்றுக்கு முந்தினம் நன்னிலம் அருகே ரயில்வே நிலையத்திற் வந்து பிளாட்பாரம் இருக்கையில் அமர்ந்ததாகத் தெரிகிறது.பின்னர் சிறிது நேரம் அழுதுவிட்டு அங்கே வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பெரியார் மண்ணில் பெரியார் சிலைக்கு அவமரியாதையா ? செந்தில் பாலாஜி ஊருக்கு அருகேயே பரபரப்பு

    கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் தமிழகத்தின் சட்டசபை இடைத்தேர்தல்களிலும் இடைத்தேர்தல் நடைபெற்றதையடுத்து தேர்தல் ஆணையத்தின் சார்பில் அனைத்து கட்சி தலைவர்களின் சிலைகளை மூட உத்திரவிட்டதையடுத்து, ஆங்காங்கே அனைத்து கட்சித்தலைவர்களின் சிலை மூடப்பட்டிருந்தன.


    கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரேயே, அதுவும் காஷ்மீர் டூ கன்னியாகுமாரி தேசிய நெடுஞ்சாலையின் அருகே மண்மங்கலம் சமத்துவபுரத்தில் அரசின் சார்பில், தந்தை பெரியார் சிலை தி.மு.க ஆட்சியின் போது நிறுவப்பட்டிருந்தது.

    இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையிலும் சுமார் 20 நாட்களுக்கும் மேலாக சாக்குப்பைகளினால் மூடப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் மட்டுமல்லாமல் தமிழக அளவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஊருக்கு அருகே, தான் இந்த அவலநிலை என்பதும், தற்போது அவர் தான் கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், அரவக்குறிச்சி தி.மு.க எம்.எல்.ஏ வும் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


    திராவிட கட்சிகள், ஆங்காங்கே பெரியார் மண், பெரியார் மண் என்று கூறி வரும் நிலையில், தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜியின் ஊருக்கே அருகேயே பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் சிலை மூடப்பட்டிருப்பது தான் இந்த மாவட்டத்தில் கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
     

Share This Page