world news(08.09.2019)

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Sep 8, 2019.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,930
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட சந்திராயன்-2 விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

    ஸ்ரீ ஹரிகோட்டா: தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட சந்திராயன்-2 விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது என இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார். விக்ரம் லேண்டரை நிலவைச் சுற்றி வரும் ஆர்பிட்டர் படம் பிடித்துள்ளது. விரைவில் விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பை பெற முயற்சித்து வருகிறோம் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,930
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    நாட்டின் பேச்சுரிமையை பறிக்க தேசத் துரோக தடுப்பு சட்டம் பயன்படுத்தப்படுகிறது: நீதிபதி தீபக் குப்தா அதிருப்தி

    அஹ்மதாபாத்: அண்மை காலங்களில் நாட்டின் பேச்சுரிமையை பறிப்பதற்கு தேசத் துரோக தடுப்பு சட்டத்தை பயன்படுத்துவது அதிகரித்து வருவதாக உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா அதிருப்தி தெரிவித்துள்ளார். குஜராத்தின் அஹ்மதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தேசத் துரோக தடுப்பு சட்டம் மற்றும் பேச்சுரிமை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா உரையாற்றினார். அப்போது பேசிய அவர் ' அதிக இடங்களில் வெற்றி பெறுபவர் ஆட்சி அமைக்கும் முறையின் கீழ் பெரும்பான்மையின் கருத்து சட்டம் ஆகிவிட முடியாது என்றும் சிறுபான்மைக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை இருக்கிறது என்று அவர் கூறினார்.

    மாற்று கருத்து தெரிவிப்போரை தேச விரோதிகள் என்றும் குறிப்பிடும் போக்கு அதிகரித்து வருவதாக நீதிபதி கவலை தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் மாற்று கருத்து தெரிவிப்போர்களை கேலி செய்து வரும் போக்கு அதிகரித்து வருவதால் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க அச்சப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மாற்று கருத்து தெரிவிக்கும் உரிமை அரசியல் அமைப்பு சட்டத்தில் இடம் பெற்றுள்ள மிக முக்கிய உரிமை என்று குறிப்பிட்ட நீதிபதி, ஒருநபர் சட்டத்தை மீறாமல் வன்முறையை தூண்டாமல் மாற்று கருத்து தெரிவிக்கவும் அதை பரப்பவும் அனைத்து உரிமையும் இருப்பதாக அவர் கூறினார். தேச துரோக சட்டங்கள் வெளிநாட்டினர் ஆட்சியின்போது அறிமுகப்படுத்த பட்டத்தை நினைவு கூர்ந்த குப்தா, அந்த ஆட்சியாளர்கள் கருத்து சுதந்தரத்தை பறிப்பதற்காகவே இந்த சட்டங்களை கொண்டு வந்ததாக அவர் கூறினார்.

    அரசியல் தலைவர்களை விமர்ச்சிப்பது அவதூறு ஆகுமே தவிர தேச துரோகம் ஆகாது என்று அவர் கூறினார். நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க போதிய காவலர்கள் இல்லை என்று குறை கூறும் காவல்த்துறையினருக்கு தேச துரோக வழக்குகளை பதிவு செய்ததற்கு போதிய ஆட்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார். நீதித்துறையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது இல்லை என்று கூறிய நீதிபதி, விமர்சனங்கள் நீதித்துறை மீதும் சிறப்பாக செயல்பட உதவும் என்றும் அவர் கூறினார்.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,930
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    வால்மீகி அமைப்பினரின் போராட்டம் எதிரொலி: சர்ச்சைக்குரிய டிவி தொடர்களுக்கு தடை விதித்தது பஞ்சாப் அரசு

    சண்டிகர்: பஞ்சாப்பில் வால்மீகி அமைப்பினரின் போராட்டம் காரணமாக வன்முறை சம்பவங்களை தடுக்க சர்ச்சைக்குரிய டிவி தொடரை தடை செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப்பில் டிவி சேனல் ஒன்றில் 'ராம் சியா கி லக் குஷ்' என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல், தவறான கருத்துக்களை கூறுவதாகவும், வரலாற்று உண்மைகளை சிதைப்பதாகவும், தங்களின் மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் உள்ளதாகவும் வால்மீகி அமைப்பினர் குற்றம்சாட்டினர். இந்த சீரியலுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி, ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த போராட்டத்தின் போது சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

    இதில் ஜலந்தரில் நடந்த கலவர சம்பவத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து சீரியலை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. நாடு முழுவதும் இந்த சீரியல் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும் எனவும், சீரியர் டைரக்டரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வால்மீகி அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து இந்த சீரியலை உடனடியாக தடை செய்ய முதல்வர் அம்ரிந்தர் சிங் உத்தரவு பிறப்பித்தார். மேலும், அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், மதரீதியான பிரிவினை அல்லது மோதல்களை தூண்டும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,930
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சென்னைவாசிகளுக்கு கிராம சந்தை அனுபவம் தரும் இயற்கை விவசாய பெண்கள்

    தமிழகம் முழுவதும் சுயஉதவிக் குழுக்களிலுள்ள பெண் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்காக மாதம் ஒருமுறை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் சந்தை வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்துவைத்துள்ளது.


    குறைந்தபட்சம் ஐந்து லட்சத்திலிருந்து பத்து லட்சம் வரை பொருட்கள் விற்பனையாகும் சந்தையாக வளர்ச்சி பெற்றுள்ளது இந்த மாதசந்தை.


    பெரும்பாலும் பாரம்பரிய உணவு மற்றும் நுகர்வோர் பொருட்களை விற்கும் எல்லா வியாபாரிகளும் பெண்களாக உள்ளதே இதன் சிறப்பம்சம்.

    கிராமங்களில் சந்தையில் பொருட்கள் விற்கும் வியாபாரிகள், வாங்கவருவோரிடம் நலம் விசாரித்து, முன்னர் வாங்கிய பொருட்களின் தரம் குறித்துப் பேசி திறனாய்வு பெறுகின்ற வழிமுறையில் இந்த மாதச்சந்தை செயல்படுகிறது.


    கொடைக்கானலில் இருந்து வரும் விவசாயி ராணியின் வாடிக்கையாளர்கள் பலர் முன்னரே சொல்லிவைப்பதால், அவர்களுக்காக தனி பைகளை அவர் எடுத்துவைத்துவிடுகிறார். மூன்று வகை அவகடோ பழங்கள், நாட்டு ரக அவரைக்காய், கேரட், ஜாம் தயாரிக்க வகைவகையான பழங்கள் என பலவற்றை அடுக்கிவைக்கிறார் ராணி.


    ஒவ்வொரு மாதமும், முதல் வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தை நடைபெறும் என்பதை தெரிந்துகொண்ட வாடிக்கையாளர்கள் பலர், ஒரு மாதத்திற்கு தேவைப்படும் சமையல் எண்ணெய், சிறுதானிய மாவு பொருட்களை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து வாங்கிக்கொள்கிறார்கள்.


    ''முகவர் யாரும்இல்லாமல் நாங்கள் தயாரிக்கும் பொருட்களை நாங்களே விற்பதால், வாடிக்கையாளர்கள் எதை விரும்புகிறார்கள் என தெளிவாக அவர்களுக்கு தெரிகிறது. யாருக்கும் தரகு தொகை கொடுக்காமல் எங்கள் உழைப்புக்கு ஏற்ப எங்களுக்கு வருமானம் கிடைக்கிறது. நெல்லிக்கனியில் இருந்து தயாரிக்கும் பழச்சாறு, வற்றல், மிளகாய்பொடி, சூரணம் என பத்துவிதமான பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது,''என்கிறார் தஞ்சாவூரில் இருந்து வந்துள்ள விவசாயி கவிதா.



    நாட்டு ரக சோளம், பீர்க்கங்காய், சுரக்காய், கிழங்கு வகைகள், தேங்காய், கீரை வகைகள் விரைவாக விற்பனையாகிவிடுகின்றன. சந்தை நேரத்தில் பாரம்பரிய உணவு சமையல் நிகழ்ச்சி, இயற்கை மருத்துவரோடு உரையாடல் போன்ற நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன.


    பெருங்குடியைச் சேர்ந்த கயல்விழி கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து சந்தைக்கு வந்து அரிசியையும், சிறுதானியங்களையும் வாங்கிக்கொள்கிறார். ''ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை சந்தையில் வாங்கிக்கொள்கிறேன். சூப்பர்மார்க்கெட் செல்லும் பழக்கம் குறைந்துவிட்டது. நேரடியாக விவசாயிகளை பார்க்கும் அனுபவம் எனக்கு கிடைக்கிறது. என் மகளுக்கும் சந்தைக்கு போகும் அனுபவம் கிடைப்பதால் மகிழ்ச்சி,'' என்கிறார் கயல்விழி.


    சென்னை வாடிக்கையாளர்களின் வரவேற்பை தொடர்ந்து, வெறும் இரண்டு நாட்கள் மட்டும் நடைபெற்ற சந்தை மூன்று நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. அடுத்து நான்கு வாரமும் நடக்கும் வாரசந்தையாக மாறும் வாய்ப்பும் உள்ளது என்கிறார்கள் இந்த சந்தையை நடத்தும் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள்.



    ''பல ஊர்களில் இருந்துவந்து பெண்கள் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். இந்த சந்தை பெண் வியாபாரிகளுக்கு ஊக்கம் தருவதாக அமைகிறது. வாடிக்கையார்கள் நேரடியாக பொருட்களை வாங்கிக்கொள்வதால், மனநிறைவோடு செலவிடுகிறார்கள். கிராமங்களில் சந்தையைப் பார்த்த அனுபவம் நகர மக்களுக்கு கிடைக்கும் வகையில் கடைகளை நடத்துகிறோம்,'' என்கிறார் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் செயலர் செந்தில்குமார்.

    ''நகரத்தில் வசிப்போர் பலருக்கு இயற்கை முறையில் விளைந்த பொருட்களை வாங்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், உண்மையில் வெளிச்சந்தையில் கிடைக்கும் பொருள் ரசாயன உரமில்லாமல் தயாரிக்கப்பட்டது தானா என்ற சந்தேகம் இருக்கும். எங்கள் சந்தைக்கு வரும் விவசாயிகளின் தோட்டத்திற்கு நேரடியாக சென்று எங்கள் அதிகாரிகள் பார்வையிட்டு சான்றளிக்கும் இயற்கை விவசாய பொருட்களை மட்டும் இங்கு விற்பனை செய்வதால், வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது,''என்கிறார் செந்தில் குமார்.




    வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் இடைவெளியை குறைக்க சென்னையில் உள்ள கல்லூரி மாணவிகளை பொறுப்பாளர்களாக இணைத்துள்ளதாக கூறுகிறார் செந்தில் குமார். ''வாடிக்கையாளர்களின் கருத்துக்களை மாணவிகள் பெறுகிறார்கள். விவசாயிகளிடம் அவர்களின் பொருட்களை எப்படி விற்கலாம் என விளக்குகிறார்கள். வடிக்கையார்களுக்கு சந்தையில் உள்ள பொருட்களை பற்றி சொல்கிறார்கள். இவ்வாறு தொழில் முனைவோருக்கு மாணவிகளும் உதவுகிறார்கள்,''என்கிறார் அவர்.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,930
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கூவுவதற்கான உரிமையை சட்டப்போராட்டம் நடத்தி வென்ற சேவல்

    சேவல் ஒன்று காலையில் கூவுவதற்கான அனுமதியை பிரான்ஸ் நீதிமன்றம் வழங்கியுள்ளது.


    கிராமத்தில் வசிப்பவர்களுக்கும், நகரத்தில் வசிப்பவர்களுக்கும் இடையே ஏற்படும் சண்டையின் அடையாளமாக நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், மோரிஸ் என்ற இந்த சேவல் தனது காலை வழக்கத்தை தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    சேவல் வைத்திருக்கும் வீட்டின் அருகில் வசிக்கும் பிரொன், சேவலின் சத்தம் தங்களுக்கு தொந்தரவாக உள்ளது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    பிரான்ஸின் அட்லாண்டின் கடற்கரை பகுதியில் உள்ள ஒலெரான் எனும் தீவில் உள்ள ஒரு வீட்டில்தான் இந்த சேவல் உள்ளது.


    அந்த ஒலெரான் தீவு, பிரான்ஸில் உள்ள நகரவாசிகள் தங்கள் விடுமுறைக்காக வந்து தங்கும் இடமாக மாறியுள்ளது.


    மோரிஸ் தினமும் விடியற்காலையில் கூவுவது, தனக்கு தொந்தரவாக உள்ளது என சேவலின் உரிமையாளர்களிடம் ஜீன் லூயிஸ் பிரொன் தெரிவித்தார்.


    தேசிய விவாதம்



    "இந்த சேவல் அதிகாலை 4.30 மணிக்கு கூவத் தொடங்குகிறது. மேலும் அது காலை முழுவதும், மதிய வேளைகளிலும் கூவிக் கொண்டிருக்கிறது," என பிரொன் தனது பக்கத்து வீட்டுக்காரரான ஃபெசெளவுக்கு 2017ஆம் ஆண்டு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


    பிரான்ஸின் கிராம மற்றும் நகரவாசிகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட இந்த சேவல் காரணமாகியது.


    மோரிஸ், பிரான்ஸின் கிராம மற்றும் நகரவாசிகளுக்கு இடையே ஒரு பதற்றமான சூழலை உருவாக்கிவிட்டது.



    சேவலின் உரிமையாளர்கள் தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக, பிரொன் இந்த வழக்கை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றார்.

    இந்த வழக்கு விரைவில் தேசிய அளவில் விவாதிக்கப்பட்டது. பிரான்ஸில் நகரமயமாதல் அதிகரித்து வருவதால், கிராமங்களில் அதிகரித்திருக்கும் நகர்புறவாசிகளால் வாழ்வியல் தொடர்பாக பல பிரச்சனைகள் எழுகின்றன என்று கூறப்பட்டது.




    "கிராமங்கள் இவ்வாறுதான் இருக்கும். அவர்கள் ஏதும் சொல்லக்கூடாது," என சேவலின் உரிமையாளர் ஃபெசெள தெரிவித்துள்ளார்.

    "பிரான்ஸ் நாட்டு மக்களின் சார்பாக மோரிஸ் வெற்றிப்பெற்றுள்ளது," என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.



    இந்த வழக்கின் மூலம் மோரிஸ் நாட்டில் பெரும் ஆதரவை பெற்றது. அதனை காப்பாற்ற வேண்டும் என இணையத்தில் 1,40,000 பேர் கையெழுத்திட்ட மனு ஒன்று உருவானது. மேலும் பலர் அதன் முகம் பதித்த டீ- ஷர்ட்டுகளையும் அணியத் தொடங்கினர்.






    சேவலுக்கு ஆதரவு என்று எழுதப்பட்ட டி-ஷர்டுகளை பிரிண்ட் செய்ததோடு, ஒரு லட்சத்து 40

    "இது மோரிஸுக்கு ஆதரவு தரும் வகையில் செய்யப்பட்டதுதான். எனினும், சேவல் ஒன்றை நீதிமன்றத்தில் பயன்படுத்துவதற்கு எதிரானதும்கூட" என டி ஷர்ட்டுகளை விற்கும் உள்ளூர் வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



    "மேலும், அவர்கள் அடுத்து என்ன செய்ய போகிறார்கள்? புறா, சீகல் போன்ற பறவைகளும் ஒலி எழுப்பக்கூடாது என வழக்கு போடுவார்களா?" என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.





    சேவலின் உரிமையாளர் ஃபெசெள, தனக்கு அதிகடிப்படியான இழப்பீடு தரவேண்டும் என பிரொனின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் நீதிமன்றம் மோரிஸுக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததோடு, சேவலின் உரிமையாளருக்கு ஏற்படுத்திய துயருத்துக்கு பிரொன் 1,100 அமெரிக்க டாலர்கள் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.



    ''தற்போது மேலும் மேலும் அதிக அளவில் மக்கள் கிராமப்புறங்களுக்கு செல்கின்றனர். அவர்கள் அங்கு போவது விவசாயம் செய்ய அல்ல, அங்கேயே வாழ்வதற்காக'' என்று பொய்டேர்ஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஜீன்-லூயிஸ் என்ற புவியியலாளார் கூறுகிறார்.



    ''மக்கள் அனைவரும் தங்கள் பகுதியை தற்காத்து கொள்ள முயற்சிக்கின்றனர்'' என்று மேலும் அவர் தெரிவித்தார். ஃபெசெள வாழ்ந்துவரும் செயின்ட்-பியர் டி' ஒலெரான் கிராமத்தில் சில முக்கியமான உள்ளூர் மக்களுக்கு, பிரச்சனை மேலும் அதிகமாக உள்ளது.



    ''உள்ளூர் சம்பிரதாயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். சகிப்புத் தன்மை இன்மையின் உச்சகட்டம் இது'' என்று செயின்ட்-பியர் டி' ஒலெரானின் மேயரான கிறிஸ்டோபி சுயர் கூறுகிறார்.
     

Share This Page